யானை வளர்த்தால் பல்லக்கு
தூக்கிட வாடகைக்கு விடலாம்.
குதிரை வளர்த்தால் விஷேசங்களுக்கு வாடகைக்கு விடலாம்.
மாடு வளர்த்தால் உழவு தொழிலுக்கு வாடகைக்கு விடலாம்.
கழுதை வளர்த்தால் பொதி சுமந்திட வாடகைக்கு விடலாம்.
ஆடு வளர்த்தால் கரீம் பாயிடம் விற்று லாபம் பார்க்கலாம்.
பசு வளர்த்தால் பால் கறந்து விற்று பணம் சம்பாரிக்கலாம்.
நாய் வளர்த்தால் வீட்டை பாதுகாக்க உதவியாக இருக்கலாம்.
வான்கோழி வளர்த்தால் பிரியாணி கடைக்கு விற்கலாம்.
சேவல் வளர்த்தால் சூட்டான் போடுவதற்கு விற்கலாம்.
காடை வளர்த்தால் உணவக கடைகளில் விற்கலாம்.
கோழி வளர்த்தால் இறைச்சி கடைக்கு விற்கலாம்.
பூனை வளர்த்தால் எலித் தொல்லையை தடுக்கலாம்.
புறா வளர்த்தால் வீட்டில் பொழுதுகளை போக்கலாம்.
கிளி வளர்த்தால் குழந்தைகள் ஜாலியாக இருக்கலாம்.
ஆனால்...
வீரத்துக்கு அடையாளமாக எல்லா சமூகத்தினரும், திருமணம் முதல் கண்ணீர் அஞ்சலி வரையில் பதாகைகளில் தைரியமாக பக்கத்தில் நின்று போஸ் கொடுத்து புகைப்படங்கள் போடுகின்றார்களே... சிங்கம் அதை ஏன் வளர்க்கவில்லை ?
கில்லர்ஜி தேவகோட்டை
சாம்பசிவம்-
இதுல நிறைய சட்டப்பிரச்சனை வரும்போல... வந்தாலும் சட்டையில் வைக்க வேண்டியதை வைத்தால் தீர்ந்து விடும்.
ChavasRegal சிவசம்போ-
இந்த ஆளு கொலைக் கேஸில் மாட்டி விட்ருவாரு போலயே...
குதிரை வளர்த்தால் விஷேசங்களுக்கு வாடகைக்கு விடலாம்.
மாடு வளர்த்தால் உழவு தொழிலுக்கு வாடகைக்கு விடலாம்.
கழுதை வளர்த்தால் பொதி சுமந்திட வாடகைக்கு விடலாம்.
ஆடு வளர்த்தால் கரீம் பாயிடம் விற்று லாபம் பார்க்கலாம்.
பசு வளர்த்தால் பால் கறந்து விற்று பணம் சம்பாரிக்கலாம்.
நாய் வளர்த்தால் வீட்டை பாதுகாக்க உதவியாக இருக்கலாம்.
வான்கோழி வளர்த்தால் பிரியாணி கடைக்கு விற்கலாம்.
சேவல் வளர்த்தால் சூட்டான் போடுவதற்கு விற்கலாம்.
காடை வளர்த்தால் உணவக கடைகளில் விற்கலாம்.
கோழி வளர்த்தால் இறைச்சி கடைக்கு விற்கலாம்.
பூனை வளர்த்தால் எலித் தொல்லையை தடுக்கலாம்.
புறா வளர்த்தால் வீட்டில் பொழுதுகளை போக்கலாம்.
கிளி வளர்த்தால் குழந்தைகள் ஜாலியாக இருக்கலாம்.
ஆனால்...
வீரத்துக்கு அடையாளமாக எல்லா சமூகத்தினரும், திருமணம் முதல் கண்ணீர் அஞ்சலி வரையில் பதாகைகளில் தைரியமாக பக்கத்தில் நின்று போஸ் கொடுத்து புகைப்படங்கள் போடுகின்றார்களே... சிங்கம் அதை ஏன் வளர்க்கவில்லை ?
கில்லர்ஜி தேவகோட்டை
சாம்பசிவம்-
இதுல நிறைய சட்டப்பிரச்சனை வரும்போல... வந்தாலும் சட்டையில் வைக்க வேண்டியதை வைத்தால் தீர்ந்து விடும்.
ChavasRegal சிவசம்போ-
இந்த ஆளு கொலைக் கேஸில் மாட்டி விட்ருவாரு போலயே...
காணொளி
கிளி வளர்த்தால் வனத்துறையினர் பிடுங்கி வானத்தில் பறக்க விட்டு விடுவார்கள். பூனை வளர்க்கக் கூட தடை வந்திருக்கிறது!
பதிலளிநீக்குஆமாம் ஜி இது நல்லதொரு தொடக்கம்.
நீக்குவாழ்க உயிர்கள் அனைத்தும்.
சிங்கம் வளர்த்த சில வெளிநாட்டினரை யூடியூபில் கண்டிருக்கிறேன். பின்னர் அவர்களைக் கண்டதும் அது அவர்கள் மேல் பாய்ந்து கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தும்!
பதிலளிநீக்குஆம் இது பெரும்பாலும் அரேபியர்களே...
நீக்குஆனால் இவர்கள் இருபுறமும் நிறுத்தி புகைப்படங்கள் எடுத்து ஃப்ளெக்ஸ் போர்டில் போடுவது இல்லை.
எதை வளர்த்தாலும் மனிதன் அதை தன் சுயநலத்துக்குத்தான் வளர்க்கிறான். அன்பால், அவைகளை ஆதரிக்க வளர்ப்பதில்லை. காசு... காசு.. காசு...
பதிலளிநீக்குஆம் இதுதான் உண்மை
நீக்குஜீ... "காதல் வளர்த்தேன்.. காதல் வளர்த்தேன்..." என்றொரு பாட்டு கேட்டிருக்கிறேன். அது இந்த லிஸ்ட்டில் வராதா ஜீ?
பதிலளிநீக்குவராது ஜி காரணம் அவன் இறுதியில் கழுவி முடித்தேன் என்று பாடலாம்.
நீக்குகாதல் வளர்த்தால் கூடவே தாடியும் வளர்க்க வேண்டுமே... அதனால்தான் அதனை இங்கு சொல்லாமல் தவிர்த்து விட்டீர்களோ?
நீக்குதாடி மட்டுமா ? கூடவே பகை வளரும்.
நீக்குஹைலி செலாஸி என்று ஒரு மன்னர் எத்தியோப்பியாவை ஆண்டவர். அவர் அரசவையில் சிங்கங்கள் இருக்கும். நாய்கள் போல வளர்த்தார். கூகிள் பண்ணிப் பாருங்கள்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா அப்படியா ? தங்களது தகவலுக்கு நன்றி
நீக்குஜீ... இதுகூடவா தெரியல....
பதிலளிநீக்குசிங்கம் வளர்த்தால் வளர்த்தவர் வாழ்க்கை பங்கம் ஆகிவிடும்.
ஆதாரமே இல்லாமல் மொத்த வாழ்க்கையும் சேதாரம் ஆகிவிடும்....
ஹி... ஹ்ஹி... எல்லாமே தெரிஞ்சு வச்சுகிட்டு எதுவுமே தெரியாததுபோல ஜீ நம்மகிட்ட கேள்வி கேக்கிறாப்ல!!!...
வருக நண்பரே அப்படியா ? எனக்கு சிங்கம் வளர்த்த அனுபவம் இல்லை
நீக்கு//சேவல் வளர்த்தால் "சூட்டான்" போடுவதற்கு விற்கலாம்//....
பதிலளிநீக்குஅது என்ன சூட்டான் ???
அப்புறம்... இன்னும் ஒரு சந்தேகம்....
//கோழி வளர்த்தால் இறைச்சி கடைக்கு விற்கலாம்...//
நான் தெரியாமல்தான் கேட்கிறேன்... கோழி இதுவரையில் "முட்டை" போட்டு நீங்கள் பார்த்ததே இல்லையோ???...
வருக நண்பரே
நீக்குசூட்டான் என்றால் சேவலை முனியய்யா கோயிலில் பலி கொடுத்து மசாலாவில் வறுத்து தின்பது.
கோழி முட்டை போடுவதாக மக்கள் பேசி கேட்டு இருக்கிறேன்.
ஆனால் Liveவில் பார்த்தது இல்லை
ஆடு, மாடு, கோழி எல்லாம் வளர்க்கலாம்...
பதிலளிநீக்குஆனை, குதிரை, காட்டு விலங்குகள், கிளி எல்லாம் வளர்க்க வனத்துறை அனுமதி வேண்டுமே! ஆனை குதிரை வளர்த்தா பணக்காரங்க வளர்க்கலாம் தீனிச் செலவு, பராமரிப்பு கூடுதல் ஜி.
இங்கு ஒருவர் குதிரை லாயம் வைத்து வளர்க்கிறார். ஒரு கால்நடை மருத்துவர்!! படங்கள்ல் எடுத்தேன். பழைய டிஸ்கில் மாட்டிக் கொண்டுவிட்டன.
கீதா
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஇப்ப பூனையும் வளர்க்கக் கூடாது என்று வந்திருப்பதாக நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்தார்.
பதிலளிநீக்குசிங்கம், புலிகள் வளர்க்க அனுமதி கிடையாது. ஆனால் சிங்கம் வளர்த்ததாக பண்டைய அரசர் (நம்ம ஊர் இல்லை) பெயர் டக்கென்று நினைவுக்கு வரலை. எத்தியோப்பியாவில். நம்ம வீட்டவர் அங்கு சில மாதங்கள் இருந்திருக்கிறார் அப்ப தெரிந்து கொண்டது.
கீதா
மேலே ஜெயக்குமார் ஐயாவும் எத்தோப்பியா என்று சொல்லி இருக்கிறார்
நீக்குபார்த்துவிட்டேன், கில்லர்ஜி
நீக்குகீதா
ஆத்தா ஆடு வளத்தேன் கோழி வளத்தேன் - வசனம் நினைவுக்கு வருது!!!
பதிலளிநீக்குகாணொளி க்ண்டேன் ஜி. அழகான பறவை. முதலில் இமயமலை மோனல் பறவை என்று நினைத்துவிட்டேன் அதன் பின் தெரிந்தது ...அது ஆடும் போது தெரிந்தது முன்பக்கம் விரிவதிலிருந்து..... ட்ராகோபான் - Tragopan வகை - இது ஆண் பறவை. Pheasant பறவைகள் வகை. கோழி, மயில் போன்ற......நான், இப்படி வித்தியாசமாக ஆடும் சில பறவைகள் பற்றி பகிர எடுத்து வைத்திருந்தேன் அதில் பார்த்ததும் பெயர் நினைவுக்கு வந்து விட்டது. பகிர நினைத்தும் பகிராமல் இருக்கு . ஒரே ஒரு பறவை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.
இவை ஆடுவதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் இக்காணோலியும் ரசித்துப் பார்த்தேன்.
கீதா
தங்களது விரிவான தகவலுக்கு நன்றி
நீக்குஉங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபறவை காணொளி அருமை.
வருக சகோ
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி
காணொளி அருமை...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குதென்னைய பெத்தா இளநீரு...
பதிலளிநீக்குபிள்ளைய பெத்தா கண்ணீரு...
பெத்தவன் மனமே பித்தம்மா -
பிள்ளை மனமே கல்லம்மா...
பானையிலே சோறிருந்தா -
பூனைகளும் சொந்தமடா...
சோதனையை பங்கு வச்சா -
சொந்தமில்லே... பந்தமில்லே...
நல்ல பாடல் வரிகளை தந்தமைக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇதேதான் (இந்தப்பாடலைத்தான்) நானும் சொல்ல வந்தேன். சகோதரர் தனபாலன் அவர்கள் முந்திக் கொண்டார்.இங்கு இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் வந்ததுதான் ஆச்சரியம்.
அந்தப் பாடல் நல்ல கருத்துள்ள பாடல்.
"என் காலம் வெல்லும்.. வென்ற பின்னே வாங்கடா..! வாங்க..."
என்ன அருமையான தன்னம்பிக்கையான வரிகள்...
வாங்கடா.. வாங்க.. என்ற வரிகளுக்கு கூட அர்த்தம் மாற்றிப் போடலாம். என் நிலைமை மாறி என்னிடம் வசதி வந்த பின் அந்த வசதியை அனுபவிக்க அப்போது" வாங்கடா வாங்கிச் செல்ல" என்பது போல் பொருள் கொள்ளலாம். நன்றி.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குஓ... அப்படியா ? பாடல் வரிகளை விரிவாக விளக்கி எழுதியமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நன்றாக தொகுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். காலையில் உங்கள் பதிவை படித்ததும் மேற்சொன்ன பாடல்தான் நினைவுக்கு வந்தது. உடனே கருத்து தர நேரமில்லை மன்னிக்கவும்.
பொதுவாக வளர்த்தது, வளர்ப்பது எதுவுமே நிலைப்பதிலல்லை. ஒன்றிரண்டு நீங்கள் கூறியபடி பணமாக பயன் தரலாம். மேல்நாட்டில் பலவகையான பிராணிகளை, வளர்ப்பதாக நானும் பல சேனல்களில் பார்த்துள்ளேன். விஷ ஜந்துக்களை வளர்ப்பதில், அதனாலேயே அவர்களுக்கு முடிவு ஏற்படும் என படித்துள்ளேன். புலி, சிங்கமும் சர்க்கஸில் அதனுடன் நெருங்கி பழகுவர்களை சமயத்தில் தாக்கி விடும் அபாயமும் உண்டு என்பதையும் கண்டுள்ளோம். காணொளி பார்த்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் நானும் பல சேனல்களில் பார்த்து இருக்கிறேன்.
நீக்குகாணொளி காணுங்கள் மிக்க நன்றி
இந்த வீடியோவைப் பார்த்திருக்கேன். எதை வளர்த்தாலும் அதனோடு பாடுபட வேண்டும். நன்றாய் உணவு, தண்ணீர் வைத்து உடல் நலக்கேடு வராமல் பாதுகாக்கணும்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குதுபாய் சென்றபோது அங்கே சில ஶேக்குகள் சிங்கம் வளர்ப்பதாகவும், காலையில் பீச்சுக்கு வாக்கிங் கூட்டி வருவார்கள் எனவும் சொல்லப்பட்டது. அதை மனித மாமிச சுவை அரியாமல் வளர்கக்க்ும் கலையை அரியும் ஆர்வம் உள்ளது.
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான் ஆனால் பீச்சுக்கு கூட்டி வருவதற்கு அனுமதி இல்லை.
நீக்குபூட்டிய காரில் அழைத்து போவார்கள். சாலையில் மக்கள் கண்டதுண்டா
குட்டியிலிருந்து வளர்ப்பதால் அசைவ வாசம் அறியாத சைவ சிங்கம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபறவை காணொளி கண்டேன். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீள் வருகை தந்து காணொளி கண்டமைக்கு நன்றி சகோ
நீக்குபுறா வளர்த்தால் பொழுதுபோக்கு மட்டுமல்ல, புறாக் கறியும் சாப்பிடலாம். சற்றே வளர்ந்த குஞ்சுக் கறி வெகு சுவையாக இருக்கும். ஆனால், அதை அப்பா, கழுத்தைத் திருகிக் கொல்லுவதைப் பார்த்து மனம் வேதனைப்படும். நானும் சகோதரிகளும் கடும் எதிர்ப்புக் தெரிவித்ததால் புறா வளர்ப்பதைக் கைவிட்டார் அப்பா.
பதிலளிநீக்குஅப்போது இருந்த இளகிய மனம் அப்புறம் காணாமல்போனது. இன்றுவரை சுத்த 'அசைவம்'தான்.
வளர்த்தால்-வளர்ப்பது(சரி)
நீக்குவருக நண்பரே
நீக்குஇதேபோல் சித்தப்பா புறாக்கள் வளர்த்தார் அவர் வீட்டுக்குள் வந்தால் புறாக்கள் பயப்படும்.
காரணம் இன்று யாருடைய கழுத்து திருகப்படும் என்ற பயம்.
நான் இதுவரையில் சாப்பிட்டது இல்லை.
தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
வளர்ப்பைப் பற்றிய நல்ல விளக்கம். நன்றி ஜி
பதிலளிநீக்குவருக கவிஞரே மிக்க நன்றி
நீக்குசுவாரஸ்யமாக பிராணிகள் வளர்ப்பை சொல்லி சிங்கம் ஏன் வளர்க்க வில்லை என்று உங்கள் பிராண்ட் கேள்வியையை கேட்டு யோசிக்க வைத்துவிட்டீர்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே நலமா ?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி