தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 11, 2023

புஹாரி

ணக்கம் நண்பர்களே... காதலின் பொன் வீதியில்’’ என்ற பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
காவலின் என் ஜாதியால்
காதலன் திண்டாடினாய்
உன்னோடு அருகில் வந்தேன்
கண்ணோடு நிறுத்தி சென்றேன்
 
காவலின் உன் ஜாதியில்
நான் அன்று மன்றாடினேன்
என்னோடு அருகில் வந்தாய் மிஷின்
கன்னோடு நிறுத்தி சென்றாய்
 
திருப்பாச்சி அருவாள் மேலிலிட்டு
நான் அமர்ந்திருந்தேன் உன் மேலே
கனி இனிமையில்லை அகல் உறவுமில்லை
நாம் தனித்திருப்போம் கனிவாக
 
ஒரு கண் தளிரில் ஒன்று என் தளிராம்
மான் கொல்ல வந்தேன் தினம் போல
உன் அகத்தினிலே என் கனவுகளே
இதை கிள்ளி தந்தேன் தனக்காக...
காவலின் உன் ஜாதியில்
நான் அன்று மன்றாடினேன்
 
வலி பாரங்களில் பல வாரங்களில்
தரும் காரங்களும் களியாகும்
இந்தக் களிகளிலே உள்ள சுவையறிந்து
அதை தவிர்ப்பதுதான் பிழையாகும்
அந்தப் பிழைகளிலும் சில பழமையுண்டு
அதை விலக்குவதே பெருந்துன்பம்
 
துன்ப வாயிலிலே மறு காதல் தொல்லை
இனி காவலெல்லாம் கடும் துன்பம்
காவலின் என் ஜாதியால்
காதலன் திண்டாடினாய்
என்னோடு அருகில் வந்தாய் மிஷின்
கன்னோடு நிறுத்தி சென்றாய்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1973
படம்: பூக்காரி
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், எஸ்.ஜானகி
 
இதோ பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல் வரிகள்
 
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவு கண்டேன்
 
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
 
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் உறவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
 
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
 
விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்
 
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலமெல்லாம் உன் சொந்தம்
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=Evy7W7yXw6E
நன்றி கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

38 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  மிக மிகப் பிடிக்கும்.  சிலகாலம் என் அலைபேசி காலர் டோனாகவும் வைத்திருந்தேன்.  அந்த ஆரம்ப இசையிலேயே எம் எஸ் வி அசத்தி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

      நீக்கு
  2. MGR இந்தப் பாடலைக் கேட்டதும் எம் எஸ் வி யை அழைத்து இது எனக்கான டியூன் அல்லவா.. இப்படிப் பண்ணிட்டீங்களே' ன்னு கேட்டாதாகக் கோபப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பிடித்த பாடல். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி இரண்டாவது வரி பண்பாடினேன் என்று வர வேண்டுமோ? சொற்கள் கொஞ்சம் பொருளில் மாறுபடுகின்றன ஜி. மற்றபடி உங்கள் திறமையை மெச்சுகிறேன். இனி அதிலும் கவனமா போட்டீங்கனா சூப்பர்.

    ஒரிஜினல் பாடல் மிகவும் பிடித்த பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக "பண்பாடினான்" என்பதே காரணம் அவ்வரிகளை பாடுவது பெண்பால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு பாடல் அருமை. தாங்கள் இயற்றிய மாற்றுப்பாடல் வரிகளை ரசித்தேன். பல இடங்களில் வரிகள் ராகத்தோடு இசைந்து வருகிறது. உங்கள் திறமைக்கும், யோசிப்புக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் கற்பனை திறன் கொண்டு இம்மாதிரி பொருத்தமாக எழுதுவதை தொடருங்கள். வாழ்த்துகள்.

    இந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. திருமதி ஜானகியின் குரல் இனிமை இந்தப்பாடலை அடிக்கடி கேட்க வைக்கும். பாடலின் விபரங்கள் பற்றி கருத்துரையில் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  6. உங்கள் பாடல் ஆக்கம் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. தேவகோட்டை கில்லர்ஜி இனிமேல் கவிஞர் கில்லர்ஜி என்று அழைக்கப் படுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  8. வை திஸ் கொல வெறி (கி)ஜி:)....
    பாடலை அதுக்கேற்றவாறு வசனம் அமைத்து மாத்துவதென்பது அவ்வளவு சுலபமில்லை, அழகாக மாற்றிட்டீங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா வஜனமா ? இது பாடல் மாதிரி இல்லையா ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கில்லர்ஜி, நான் உங்களைப் புகழ்ந்தெல்லோ எழுதியிருக்கிறேன்ன்ன்.. அதுகூடப்புரியாமல்...:))..
      ஹையோ தேவகோட்டை நியூயோர்க் ஊரணி அம்மாளே.. இதையெல்லாம் எப்பூடிம்மா பொறுத்துக் கொண்டிருக்கிறீங்க??:))))

      நீக்கு
    3. எனக்கென்னவோ புகழ்வது போல் இல்லையே...

      நீக்கு
    4. சரி விடுங்கோ... :), அடுத்த போஸ்ட்டில் பாருங்கோ எப்பூடிப் புகழ்கிறேன் எண்டு.. ஹையோ எதுக்கு இப்போ கல்லெடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    5. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அதற்கு பதிலாக ஸ்விஸ் அக்கவுண்ட்டில் ப்ராங்க் போட்டு விடவும்.

      நீக்கு
    6. கில்லர்ஜி.. சுவிஸ் எக்கவுண்டில காசு சேரோணும் எனில்.. ஊ ரியூப் சனல் திறக்கோணும் அதிராவைப்போல:)).. பணம் கூரையப் பிரிச்சுக்கொண்டு கொட்டும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    7. //கூரையப் பிரிச்சுக் கொண்டு கொட்டுமா ?//

      எனது வீடு கான்கிரீட் ஆகவே வேண்டாம் யூடியூப் வருமானம்.

      நீக்கு
  9. ஆரம்ப இசையிலேயே
    எம் எஸ் வி அசத்தி இருப்பார்...

    எம்ஜியாருக்கான டியூன் இது!..

    எம் எஸ் வி அவர்களுக்கு எத்தனை நெருக்கடியோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மறுபுறத்தையும் நோக்க வேண்டுமே...

      நீக்கு
  10. எம்ஜியார் மாதிரி வேசம் போட்டு வந்தவர் தானே
    மு க முத்து?..

    பதிலளிநீக்கு
  11. MGR இந்தப் பாடலைக் கேட்டதும்
    எம் எஸ் வி யை அழைத்து இது எனக்கான டியூன் அல்லவா.. இப்படிப் பண்ணிட்டீங்களே' ன்னு கேட்டாதாக.. ////

    எம் எஸ்வி அவர்களுக்கு என்ன நெருக்கடியோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி

      நீக்கு
  12. உங்களைத் தவிர வேறே யாராலும் இப்படி எல்லாம் மாற்ற முடியாது. நல்ல திறமை உங்களுக்கு. மூலப்பாடல் ஒரு காலத்தில் கேட்டு ரசிச்சிருக்கேன். நன்றாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் தாமதம் ஆகிவிட்டது. உங்கள் பாணிக் கவிதையை ரசித்து மகிழ்ந்தேன்.
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. கூமுட்டை அவர்களின் முதல் வருகைக்கு வந்தனம் மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  14. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ! நீங்கள் இயற்றிய பாடலும் மிக அருமை . வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ?
      வெகு காலமாக பதிவுகள் எழுதவில்லையே... ஏன் ? தொடர்ந்து எழுதுங்கள்.

      நீக்கு
  15. உங்கள் பாடல் ரசனை.

    பதிலளிநீக்கு