வணக்கம் ஐயாச்சாமி அண்ணே நல்லா இருக்கீங்களா ? பார்த்து ரொம்ப நாளாச்சு....
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனம் நல்லா இருக்கேன்டா... என்ன இந்தப்பக்கம் ?
கொஞ்சம்
ஐடியா கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத் தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
காருல
எங்கிட்டு போனாலும் டோல்கேட்ல பணம் கட்டாமல் போக முடியலைணே ஏதாவது வழி இருக்காணே ?
நீ ரோட்ல போறதை விட்டுட்டு ரயில் தடத்துல போடா எங்கேயுமே டோல்கேட் கிடையாது.
? ? ?
கரண்டு
வயரெல்லாம் ரோட்ல குறுக்கும், நெடுக்குமாக இப்படி போறதாலா அசிங்கமா இருக்கே இதை வைஃபியில
மாற்ற முடியாதாணே ?
அப்படி மாற்றினா கரண்டு உன்னோட உடம்புல பாய்ஞ்சு நீதான் முதல்ல சாவே... பரவாயில்லையா ?
? ? ?
நம்மல்ட்ட
கொஞ்சம் பணம் இருக்குணே இதை வச்சு சீக்கிரத்துல பணக்காரன் ஆகணும் ஏதாவது ஐடியா
சொல்லுங்கண்ணே ?
நம்ம கட்சியிலே சேர்ந்துருடா... தேர்தல்ல நின்னு ஜெயிச்சு சம்பாதிச்சிடலாம்.
? ? ?
அண்ணன் ஐடியா கொடுத்தேன்ல இன்னைக்கு சரக்கு வாங்கி
கொடுடா...
(எல்லா ஐடியாவுமே நம்மளை சாகடிக்கிறது போலயே சொல்றானே)
சரிங்கண்ணே வாங்க போகலாம்
டாஸ்மாக்கில் இரண்டு ஏழரைகள்
வம்பு இழுத்துக் கொண்டு இருந்தது.
டேய் நாங்க
கஞ்சிக்கு நெய் விட்டு சாப்புடுற பரம்பரை எங்ககிட்டேயாவா... ?
டேய் நாங்க மட்டும் என்ன சாம்பார்ல மட்டன் மசாலா போடுறவங்கடா...
அதுக்கு பேரு
தால்ச்சாடா டுபுக்கு.
நாங்க சக்கரைப் பொங்கலுக்கு சால்னா ஊத்தி அடிக்கிறவங்கடா....
கஞ்சிக்கு
நெய் நல்லாவாணே இருக்கும் ?
அடேய் அப்பன், ஆத்தா பலகாரக்கடையில வேலை செய்தவங்க நெய்ய அடுப்புல இருக்கிற சட்டியில விட்டு வேலை செய்யிறவங்க அதுல வர்ற வருமானத்துல சாப்புடுறதுனால கஞ்சிக்கு நெய் விட்டோம்னு சொல்றான்டா...
? ? ?
கில்லர்ஜி தேவகோட்டை
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனம் நல்லா இருக்கேன்டா... என்ன இந்தப்பக்கம் ?
கேளுடாத் தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
நீ ரோட்ல போறதை விட்டுட்டு ரயில் தடத்துல போடா எங்கேயுமே டோல்கேட் கிடையாது.
? ? ?
அப்படி மாற்றினா கரண்டு உன்னோட உடம்புல பாய்ஞ்சு நீதான் முதல்ல சாவே... பரவாயில்லையா ?
? ? ?
நம்ம கட்சியிலே சேர்ந்துருடா... தேர்தல்ல நின்னு ஜெயிச்சு சம்பாதிச்சிடலாம்.
? ? ?
(எல்லா ஐடியாவுமே நம்மளை சாகடிக்கிறது போலயே சொல்றானே)
சரிங்கண்ணே வாங்க போகலாம்
வம்பு இழுத்துக் கொண்டு இருந்தது.
டேய் நாங்க மட்டும் என்ன சாம்பார்ல மட்டன் மசாலா போடுறவங்கடா...
நாங்க சக்கரைப் பொங்கலுக்கு சால்னா ஊத்தி அடிக்கிறவங்கடா....
அடேய் அப்பன், ஆத்தா பலகாரக்கடையில வேலை செய்தவங்க நெய்ய அடுப்புல இருக்கிற சட்டியில விட்டு வேலை செய்யிறவங்க அதுல வர்ற வருமானத்துல சாப்புடுறதுனால கஞ்சிக்கு நெய் விட்டோம்னு சொல்றான்டா...
? ? ?
கரன்ட் - செந்தில் கேக்கறாப்ல இருக்கு!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குபணத்துக்கு நல்ல ஐடியா!!!! சிரித்துவிட்டேன்
கீதா
வருக பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகடைசிதான் புரியலை கில்லர்ஜி...இடைல ஏதோ கேப் வருதே...அங்க வீடியோ ஏதாச்சும் உண்டா? எனக்குத் தெரியலையோ?
பதிலளிநீக்குகீதா
அவர்களது குடும்பம் பலகாரக்கடையில் வேலை செய்கிறது அந்த வருமானத்தில் (கஞ்சி) சாப்பிடுகிறார்கள்.
நீக்குஅந்த இடைவெளி விளம்பர இடைவெளி. எனக்கு அந்த இடைவெளியில் முறுக்கு தட்டை படமெல்லாம் வர, நானும் குழம்பி விட்டேன், இது தேவகோட்டையார் சேர்த்ததா, இல்லை கூகுள் குறும்பா என்று!
நீக்குவாங்க ஜி விளம்பரம்தான் முறுக்கா ? எனக்கு ஒருநாள்கூட வரவில்லையே...
நீக்குஅட முறுக்கு, தட்டை யாவாரம் எல்லாம் தொடங்கியாச்சா... இனி உங்க காட்டுல மழைதான் போங்க...
நீக்குவருக நண்பரே இங்கே வெயில் கொளுத்துகிறது.
நீக்குஇப்ப அந்தகேப் இல்லை...என் கணினியில்தான் பிரச்சனை போல இணையப் பிரச்சனை
பதிலளிநீக்குகீதா
நன்று, நன்றி
நீக்குஹா ஹா... அருமை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்கு'வண்ணமயில்’... பெண் குழந்தைக்கான அழகான தமிழ்ப் பெயர். கில்லர்ஜிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருக நண்பரே மயில் வாகனம் என்ற ஆண் பெயர்தான் இழுவைக்காக வண்ணமயில் என்று நீட்டப்பட்டது
நீக்குமயில்வாகனம் சர்வானந்தா என்று இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஒருவர் இருந்தார், நினைவிருக்கிறதா?
பதிலளிநீக்குஆமாம் ஜி நினைவு வருகிறது
நீக்குநினைவில் வைத்துக்கொள்ள நம்ம ஊரு நித்தியானந்தாவை விட இலங்கை சர்வானந்தா ஒன்றும் பாரறிந்த பெரியவர் இல்லை...
நீக்குஆம் இதுவும் உண்மையே...
நீக்குரஞ்சிதமே நமஹா...
கவுண்ட்டமணி - செந்தில் உரையாடல் போல அமைந்துள்ளது. ரசித்தேன். ஆனால் சரக்கு வாங்கப் போவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
பதிலளிநீக்குஆமாம் ஜி எல்லாம் 90 மில்லி பாக்கெட்டில் வந்த வினைதான்.
நீக்குபதிவை ரசித்தமைக்கு நன்றி ஜி
உரையாடல் நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குயோசனை கேட்டால் இப்படியா சொல்வது?
வருக சகோ
நீக்குஐயாச்சாமி லட்சணம் இதுதான் போல...
உங்கள் பாணியில் அடித்து விளையாடுகின்றீர்கள்..
பதிலளிநீக்குஆகா!..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஐயாசாமியும், வண்ணமயில் வாகனமும் ஐடியாக்கள் குறித்து பேசிக் கொள்வது கவுண்டமணி, செந்தில் நினைவு வருகிறது. வண்ணமயில் வாகனம். பெயர் வித்தியாசமாக நன்றாக உள்ளது.
ஐயாசாமியின் ஐடியாக்கள் ஒன்றுமே வண்ணமயிலுக்கு சாதகமாக இல்லையே..! இருப்பினும் அவர் கேட்டவுடன் இவர் அவர் கேட்டதை வாங்கித்தர உடன்படுகிறார். பெயருக்கேற்றபடி நல்லவர்தான்..! பதிவை ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகேள்வி பதில் சுருக்கா முடிஞ்சிடுச்சே... நிறைய கேள்விகள் கேட்டு ஏழரையைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டுப் போகணுமே....
பதிலளிநீக்குவருக தமிழரே ஒருவேளை ஏழூர் போறதுக்கான ஏழரை பஸ்ஸு வந்த இருக்குமோ.... ?
நீக்குகடைசியிலே அது என்ன? புரியலை. அடுப்புக்கு நெய் ஊத்தி எரிச்சாங்களா? என் மாமியார் வீட்டில் ஒரு விசேஷத்தின் போது வந்த சமையல்காரர் தே.எண்ணெயை மொண்டு மொண்டு ஊற்றி அடுப்பை எரிச்சார். எனக்கெல்லாம் வயிறே எரிஞ்சது அதைப் பார்க்கையில்.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஅவர்களது குடும்பம் பலகாரக்கடையில் அடுப்பில் வேலை செய்கிறது அந்த வருமானத்தில் (கஞ்சி) சாப்பிடுகிறார்கள்.
தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நன்றாகத்தான் யோசிக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஹா...ஹா...ரசனை.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு