தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 17, 2024

அந்தமான் அழகு

ணக்கம் நண்பர்களே... அந்தமானைப் பாருங்கள் அழகு’’ என்ற மிகவும் எனக்கு பிடித்தமான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
ந்த வானை தாருங்கள் உலகு
கிழம் பூவை உன்னோடு இரவு
இந்த மண்ணை காலாட்டும் என்நீர்
துன்பத்தாரில் தாவும் கண்ணீர்
 
அந்த தாக ஏந்தல் சிலைகள்
உடல் நாரில் வாடும் பிழைகள்
எந்தன் மேக தாக ஏதும்
அந்த கூழை போடும் பாதம்
இந்த வானை தாருங்கள் உலகு
கிழம் பூவை உன்னோடு இரவு
 
உள்ள நோவும் நானும் மிரண்டு
அகம் எங்கும் இல்லங்கள் உருண்டு
அது தேஜ சோக வர்க்கம்
கனி வீச எதற்கு தயக்கம்
 
அது தாக்கும் நீர்க்கும் இனிமை
கன்ன துன்பமம்மா என் வளமை
அந்த பாவி கேணி கெஞ்சல்
தான் ஓடி பாடும் கொஞ்சல்
 
தங்கள் பைகள் இன்று முறையில்
தரும் கோல மேளங்கள் தரையில்
தான் விழ மீண்டும் வலையில்
இந்த வானைப் போல கிளையில்
இந்த வானை தாருங்கள் உலகு
கிழம் பூவை உன்னோடு இரவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1978
படம்: அந்தமான் காதலி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்
 
இதோ கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்
 
ந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இன்பத் தேரில் தூவும் பன்னீர்
 
இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
 
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்
 
இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்
 
உங்கள் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேண்டும் உலகில்
அந்த மானைப் போல அருகில்
 
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை


Share this post with your FRIENDS…

7 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஹா... பாவம் கண்ணதாசன்.

    பதிலளிநீக்கு
  2. கண்ணதாசன் பாடல் மகிழ்ச்சி, உங்கள் பாடல் சோகம் .
    நன்றாக மாற்றி அமைத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பாட்லுடன் கவிஞரின் பாடல் வரிகளையும் தந்தது நன்று வழக்கம் போல். பாடல் ஆசிரியர் உண்மையிலேயே ஆச்சி(ச)ரிய! ர் தான்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி அந்தப் படம் ? நீங்கள் கொடுத்திருக்கீங்களே ஏதோ காட்டுவாசிகள் போல...படம் நலலருக்கு அது என்ன அந்தமானை அப்படி எழுதியிருக்கீங்களா நகைத்து!!?

    வழக்கம் போல உல்டா! ஜி, உல்டா சோகம். இனி அதையும் ஜாலியா எழுதுங்களேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலில் பகிர்ந்த அந்த மானின் படமும் அழகு. அந்தமானின் காட்டு வாசிகளின் படமும் அருமை. இந்த திரைப்பட பாடலுக்கான தங்களின் மாற்றுப் பாடல் நன்றாக உள்ளது. பாடலுக்கேற்ற வரிகளை ரசித்தேன்.

    இந்த திரைப்படப் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. பாடகர்கள் இருவரின் குரல்களும் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அந்தமானைப் பாருங்கள் அழகு - எனக்கு பிடித்த பாடல். உங்கள் முயற்சியும் நன்று கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  7. 'அந்தமானை" சோகமாக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு