தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 29, 2024

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

 

புகைப்படம் தந்த திரு.சுப்பு தாத்தா அவர்களுக்கு நன்றி.
 
ணக்கம் நட்பூக்களே... முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும், நகரங்களில்கூட கண்மாய், ஊரணி, குளம், குட்டை, அருவி, ஆறு, ஓடை, பொதுகிணறு என்று இருந்தது அதில் மக்கள் குளிப்பார்கள் அவைகள் இப்பொழுது தொண்ணூறு சதவீதம் ஒழிந்து விட்டது. இப்பொழுது வீட்டினுள் சிறிய அறைக்குள் குளிக்கின்றார்கள்.
 
சரி இதில் வீடில்லாமல் தெருவோரங்களில் உறங்கி வாழ்பவர்களின் வாழ்வில் மாற்றம் வந்து இருக்கிறதா ? இல்லையே... அவர்கள் இன்றும் அதே வாழ்வு முறையில்தான் இருக்கின்றார்கள். நான் சாலையில் செல்லும் பொழுது இவர்களை கண்டால்... இவர்கள் இப்பொழுது எங்கு குளிக்கின்றார்கள் ? என்று அடிக்கடி நினைப்பேன். கடலில் குளிக்கலாம் அதேநேரம் எல்லா ஊர்களிலும் கடல் இல்லையே... அப்படியே குளித்தாலும் நல்ல நீரிலும் குளிக்க வேண்டுமே...
 
எனக்கு ஆட்சியாளும் அதிகாரம் கிடைத்தால். முதலில் இவர்கள், மேலும் கோயில் வாசல்களிலும், சமிக்ஞை திடல்களிலும், பேருந்து நிலையங்களிலும் தர்மம் கேட்பவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்வதே தலையாய கடமையாக நினைப்பேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பழஞ்சொல் இருக்கிறதே இதன் பொருளில் இருள் சூழ்ந்து உள்ளதே...
 
சமூகத்தில் கௌரவமாக தெளிந்த சிந்தனையுடன் வேலை செய்து சம்பளம் பெற்று நல்ல வாழ்க்கை வாழும் மக்களையே இந்த அரசியல்வாதிகள் காலம் முழுவதும் வாக்குறுதி கொடுத்து வாக்குகளை வாங்கிட்டு விட்டு அவர்களின் வாயில் வாக்கரிசி போடும்போது இந்த அடித்தட்டின் கீழே வாழ்பவர்களைப் பற்றியா நினைக்கப் போகின்றார்கள்.
 
சமீபத்தில் மதுரையில் ஒரு குறிப்பிட்ட தேநீர்க்கடையில் ஒரு முதியவர் தினம்தோறும் அதே இடத்தில் கையில் ஒரு துணிப்பையுடன் அமர்ந்து இருப்பார் ஆனால் யாரிடமும் பணம் கேட்க மாட்டார் குனிந்து தலையை சொறிந்து கொண்டே இருப்பார். உடலும், உடையும் அவ்வளவு அழுக்கு. எனக்கு பாவமாக இருக்கும். இந்த தருணங்களில் எல்லாம் எனக்கு இறைவன் மேல் நம்பிக்கை வந்து விடும். 
என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு இறைவனுக்கு மனதுள் நன்றி சொல்லிக் கொள்வேன். அவருக்கு சில நேரங்களில் சாப்பாடு பொட்டணம் வாங்கி வந்து கொடுப்பேன் நன்றி என்று சொல்வார். என்னை இந்நிலைக்கு வைத்திருந்தமைக்கு இறைவனுக்கு மனதுள் நன்றி சொல்லிக் கொள்வேன். உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் என்று பாடுவது பொய்தானோ...
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
அவரவர் விதிப்படியே... போக வேண்டியதுதான்...

27 கருத்துகள்:

  1. தேர்தல் திருவிழாவின்போதுதான் அரசியல்வாதிகளுக்கு இவங்க நினைவு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      உண்மை ஆனால் அந்த நேரம்தான் மக்களுக்கு மறதி வரும்.

      நீக்கு
  2. இவங்கதான் இப்படீன்னு பார்த்தா, இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்து கிடைத்ததையெல்லாம் சுருட்டிட்டுப் போனவங்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே திருடங்கதான்... சொல்லப்போனா குருடங்கதான்...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் படம் கண்களுக்கு நிறைவாய் உள்ளது. இரண்டாவது படம் மனம் கலங்கி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அவரின் நிலை கண்டதும், தங்களின் பரோபகார செயல்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். நம்மால் இயன்ற வரை இவர்களுக்கு உதவி செய்வோம். உண்மையிலேயே இவர்களைப் போல நம்மை வாழ வைக்காமல் ஒரளவு நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு தினமும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. கிணறு படம் - ஆஹா… இப்பவும் சில இடங்களில் கிணறு உண்டு. எங்கள் பெற்றோரின் அடுக்கு மாடு குடியிருப்பில் இப்போதும் கிணறு பயன்பாட்டில் இருக்கிறது கில்லர்ஜி.

    வீடில்லாதவர்கள் பாடு கடினம் தான். தில்லி போன்ற வாடா இந்திய நகரங்களில் - குறிப்பாக குளிர்காலங்களில் வீடில்லாதவர்கள் நிலை மிகவும் மோசம். அரசு இரவு நேரங்களில் மட்டும் தங்கிக் கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தித் தருவார்கள் - ஆனால் அந்த வசதி மிகவும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது. வேதனையான நிலை தான்.

    பதிலளிநீக்கு
  5. கிணறு படம் நன்றாக இருக்கிறது, எந்த ஊர் கிணறு?
    நேற்று கூட வீடில்லாதவர்கள், நினைவாற்றல் இல்லாதவர்களை பற்றி பேசி கொண்டு இருந்தோம். ("60 வயது மாநிறம் " என்ற படம் பார்த்த பாதிப்பு) இந்த படத்தில் கல்லூரியில் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மறதி நோய் வந்து விடுகிறது, மனைவி இறந்து, குழந்தை வெளியூரில் வேலை . பார்த்து கொள்ள ஆள் இல்லாமல் அவர் படு அவதி படம் பார்த்தவுடன் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

    உயர்வு தாழ்வு இல்லா நிலை என்று வரும்!

    அவர் அவர் வேலையை அவர் செய்து கொண்டு நலமாக இருக்க இறைவனிடம் வேண்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கிணறு திரு. சுப்பு தாத்தா அவர்களிடமிருந்து 99 வருடங்களுக்கு வாடகைக்கு வாங்கி இருக்கிறேன்.

      நீக்கு
  6. "பசியில்லா தமிழகம்" என்ற அமைப்பு தமிழகம் முழுவதும் ஆதரவற்ற மன நிலை சரியில்லாமல் வீதிகளில் சுற்றிக் கொண்டு இருந்தால் 14567, நம்பர், அல்லது 14416 நம்பரில் அல்லது 8883340888 அழைத்தால் தன் ஆர்வலர்கள், மற்றும் அரசாங்காத்தின் மூலமாக உரிய அதிகாரிகள் வந்து அழைத்து சென்று காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள் . என்று இன்று வந்த வாட்ஸ் அப் செய்தி சொல்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மையானது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. அவர் பசியை போக்கியிருக்கிறீகளே இடையிடையே, அதுவே புண்ணியம். அதுதான் இறைவனுக்குப் பிடித்த செயல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி எனக்கு இப்படியானவர்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். இவர்களில் ரொம்ப முதியவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், மறதி நோய் உள்ளவர்கள் இவர்களைத் தவிர, இவர்கள்தான் என் மனதை மிகவும் பாதித்தவர்கள்.

    மற்றவர்கள் உழைக்கலாம் என்று தோன்றும். நன்றாக இருப்பவர்களில் பலருக்கும் இப்படி கையேந்திப் பழகிவிட்டதால் அவர்களிடம் சாப்பாடு தருகிறேன் ஆனால் சிறிய வேலை செய்து தர வேண்டும் என்று சொன்னால் - அவர்கள் சாப்பாடு கூட வேண்டாம் என்று நகர்ந்து விடுவார்கள். அதாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்தை இப்படிச் சொல்லலாமே என்று நினைத்ததுண்டு. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே, ஏதாச்சும் வேலை கொடு செய்யறேன், சாப்பாடு இல்லைனா பைசா கேப்பாங்க. இது பரவாயில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உழைக்காமல் வாழ ஆசைப்படுபவர்கள் நிறையபேர் உண்டு.

      நீக்கு
  9. இப்படியானவர்களை அரசு கவனித்தால் நல்லதுதான். உழைக்க முடிந்தவர்களுக்கு வேலையும் மற்றவ்ரர்களுக்குப் பாதுகாப்பும். ஆனால் செய்யும்னு நினைக்கறீங்க!!!?? அது சரி இவங்களுக்கு ஓட்டு உண்டா?!!! இல்லை தேர்தல் சமயத்துலயாவது கவனிப்பாங்களோன்னு .

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞர் கருணாநிதியின் முதல் ஐந்தாண்டில் பிச்சைக்காரர்களுக்கென்றே தனியாக வசூல் செய்தார், அதற்காக லாட்டரி டிக்கட்டும் வெளியிட்டு நிதியும் திரட்டினார். அவர்களுக்காக மறுவாழ்வு இல்லங்கள் திறக்கப்பட்டன. ஆனால் அங்கு வலுக்கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்ட பிச்சைக்காரர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள்!

      நீக்கு
    2. நண்பர் திரு. ராய செல்லப்பா அவர்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. நீங்கள் அந்தப் பெரியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தது மிகச் சிறந்த செயல் கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தினமும் கொடுக்கும் நிலை எனக்கு வேண்டும்.

      திரு.விஜய்காந்த் அவர்களைப் போல...

      நீக்கு
  11. மீண்டும் சமூக அக்கறையுடன் ஒரு பதிவு. பாராட்டுக்கள் நண்பரே. உலகம் சமநிலை பெற வேண்டும் என்பது பொய் அல்ல, அது ஆசை என்றே எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  12. கடவுளுக்கு நாம் பல விதங்களில் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. அன்று குவைத்தில் சம்பாதித்த போது அங்கு பிச்சை எடுப்பவர்களுக்கு தாராளமாக உதவியிருக்கின்றேன்..

    இங்கே இப்போது சம்பாத்தியம் இல்லை..

    மனம் தடுமாறுகின்றது..

    எல்லாம் விதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இருக்கும்போது கொடுத்து இருக்கிறீர்களே.... அதுதான் வேண்டும்.

      நீக்கு