வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை
பார்த்தீர்களா ? இவர்களைத்தான் நாட்டை ஆள வா தலைவா என்று கூவுகின்றனர் தமிழகத்து கூதரைகள்...
உங்களுக்கு எல்லாம் சிந்திக்கும் திறன் இருக்கிறதா ? இல்லையா ? மக்களே... தமிழ்நாட்டில் எவ்வளவு கோடிகளை பெற்றார்கள் இவர்கள். ஏன் இந்த மோசடி ?
ஒருவேளை மேலிடத்தில் மோடி இருப்பதால் நமது செல்வாக்கை
பயன்படுத்தி இன்னும் பணம் சேரக்கலாம் என்ற எண்ணமோ... மேலும் கொரோனா காலத்தில்
தங்களது திருமண மண்டபத்திற்கு வருமானம் இல்லாத காரணத்தால வரி கட்ட பணமில்லை என்று
ரஜினிகாந்த போட்ட மனுவை நீதிமன்றம் நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என்று எச்சரித்து
அனுப்பியது வெட்கமாக இல்லையா ?
தமிழ்நாட்டில்
எவ்வளவு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து
வாழவைத்துக் கொண்டு இருந்தது தெரியாதா ? இந்த
கூதரைகளுக்கு... சாதாரண நடிகர் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது உழைப்பில் பெரும்
பங்கை ஏழை குழந்தைகளுக்கு செலவு செய்கின்றார். இவரது திரைப்படங்களை வெற்றி
பெறச்செய்வீர் மக்களே... இவனுகளை எல்லாம் தமிழகத்தில் இவ்வளவு உயர்வான வாழ்க்கையை
கொடுத்தது யார் ? இறைவன் என்று சொல்லாதீர்கள்.
பல
கோடிகள் கொடுத்து வெளிநாட்டு லாம்போர்கினி கார் வாங்குவதற்கு பணம் இருக்கிறது. ஆனால்
வரி கட்டுவதற்கு பணமில்லை. இவர்கள் எல்லாம் தமிழகத்தில் முக்கியமான மனிதர்களா ? பாமரத்தனமான ரசிகர்களே... கொஞ்சம் சிந்தியுங்கள் நீங்கள்
ஏமாற்றப்படுகின்றீர்கள்தானே ? உனது
சுயசிந்தனை எங்கே போயிற்று உன் மூதாதையினரின் வித்து எங்கே ? அவர் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று மூடத்தனமாக
சொல்லி விடாதே... இருப்பவர் கொடுப்பதே நிறைவான வாழ்வு.
இதைப்
போலவே நடிகர் விஜய்யும் வெளிநாட்டு காரை இறக்குமதி செய்து விட்டு வரி கட்ட
முடியாது என்று பல காலமாக காரை வெளியில் எடுத்து ஓட்டாமல் வைத்திருந்த
நிகழ்வுகளும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆளத் துடிக்கின்றார்கள். //நான்
ரெடிதான் வரவா அண்ணன் நான் ரெடிதான் வரவா// இவர் யாருக்கு அண்ணன் ? தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்குமா ? திரைப்படங்களில் நல்லவனாக வாழ்ந்து காண்பிப்பவர்கள்
அனைவருமே நிஜவாழ்வில் வில்லன்களாகத்தான் இருக்கின்றார்கள். சற்றே யோசி நண்பா உனக்கும்
விளங்கும் காரணம் நீ பட்டதாரி.
சமீபத்தில்
வலையொலி ஒன்றில் பார்த்தேன் தனது அபிமான நடிகருக்கு ஒருலட்ச ரூபாய் செலவு செய்து
பதாகை வைத்தானாம். இதைப்போல் தைரியம் யாருக்காவது இருக்கா ? என்று கேட்கிறார். இன்றொருவன் சொல்கிறான் எனக்கு
அம்மா-அப்பா முக்கியம் இல்லை எங்க அண்ணன் விஜய் முதல்வராக வரணும், இதுக்காக நான்
உயிரையும் கொடுப்பேன் என்கிறான். ரசிகர்களே... சற்றே உணருங்கள் உங்களுக்கு எதிர்காலம்
என்று ஒன்று இருக்கிறது. அதை அனுபவித்து வாழுங்கள்.
அந்த
அண்ணன் தனது தாய்-தந்தையை கழட்டி விட்டதால் நீயும் அவ்வழியே செல்கிறாயா ? நாளை நீயும் மனைவி, குழந்தைகளை விலகி வாழ்வாயா ? மேடைப்பேச்சாளர் திரு.நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது போல
உங்களை எல்லாம் உங்களது மனைவிகள் கழட்டி விடவேண்டும். அப்பொழுதுதான் வாழ்வின்
அர்த்தம் புரியும். நடிகன் என்பவன் வானத்திலிருந்து இறங்கிய தூதுவன் இல்லை
உன்னைப்போல் ஒருவனே முயன்றால் நீயும் அவனைப்போல் வரலாம். அதற்கு சற்றே திறமையும்,
இறைவனின் அதிர்ஷ்டமும் வேண்டும்.
கில்லர்ஜி அபுதாபி
சிவாதாமஸ்அலி-
அதற்கு வாய்ப்பு இல்லை ராசா...
அதற்கு வாய்ப்பு இல்லை ராசா...
எனக்கு தெரிந்த வரையில் திரைப்படங்களினால் இது போன்று சீரழியும் மாநிலம் தமிழகம் தான் என்று நினைக்கிறேன். அப்புறம் என்ன நண்பரே, இன்று ஒரு மாற்றத்திற்காக காலை 9 மணியளவில் பதிவை வெளியிடுகிறீர்கள். :)
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குநான் இந்திய நேரம் காலை 6:00 மணிக்குதானே வெளியிட்டு இருக்கிறேன் ?
தமிழர்களுக்கே உரிய குணத்தைக் குறை சொல்றீங்களே.... அவங்களுக்கு முதல்வர், திரைத்துறையிலிருந்துதான் வரணும். அப்புறம் டாஸ்மாக் தொழிற்சாலைகள் பெருகணும். ரேஷன் கார்டில் (பொன்முடி வார்த்தையில் ஓஷி) உணவுப்பொருட்கள் வேணும். பொங்கலுக்கும் அரசு 110 ரூபாய்க்கு ஓசிக்கு கரும்பு, அரிசி, ஜீனி-வெல்லம் கிடையாதாம், கொடுக்கணும்.
பதிலளிநீக்குவருக தமிழரே இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஓ(ச்)சி ?
நீக்குநீங்கள் சொல்வதை சொல்லுங்கள். கேட்பவர்கள் கேட்கட்டும் சகோ.
பதிலளிநீக்குஇது போன்ற தீவிர ரசிகர்கள் இருப்பதால்தான் அவர்கள் கோடிகளை சம்பாதிக்க முடிகிறது.
இயற்கை இடர்பாடு சமயம் உதவி செய்த குறைந்த சம்பளம் பெறும் சினிமா நடிகர்களை பாராட்ட வேண்டும்.
வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குஆம் பாலாவின் செயல் போற்றத்தக்கது.
ராகவாலாரன்ஸ் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அது போல குறைவாக ஈட்டும் நடிகர் பாலாவையும் ரொம்ப பாராட்ட வேண்டும் கில்லர்ஜி.
பதிலளிநீக்குநம்ம மக்கள் குறிப்பாக மத்தியதரக் குடும்பத்திற்கும் கீழாக இருக்கும் இளைஞர்கள் திரையுலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் உழைக்க கஷ்டப்படுறாங்களோன்னும் தோன்றுகிறது. பாருங்க படிப்பு குறைவாக இருக்கும் வட இந்திய இளைஞர்கள் உழைக்க அஞ்சுவதில்லை இங்கு வரை பரவியிருக்காங்க
நீங்க பாத்திங்கனா எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் பெரிய புள்ளிகள் உதவ வருவதில்லை. மத்தவங்கதான் அதுவும் இந்த முறை சின்னத்திரையில் பிரபலமாக இருக்கறவங்க உதவினாங்க.
கீதா
வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குபாலா பெரிய அளவில் உதவி செய்கிறார் வாழ்த்துவோம்.
ராகவா லாரன்ஸை விட பல மடங்கு அதிகமாக பாராட்டப்பட வேண்டியவர் நடிகர் பாலா. அவரைப் பற்றி படித்திருக்கிறீர்கள்தானே... அப்புறம் ஒரு சந்தேகம்... கூதரை என்றால் என்ன?
பதிலளிநீக்குஆமாம் ஜி ராகவா தொடக்கம் முதலே உதவி செய்து வருகிறார்.
நீக்குகூதரை என்பது கூமுட்டை வகையறாக்கள் ஜி.
சிறப்பான கருத்து தோழர். மாற்றம் வரும் என நம்புவோம்.
பதிலளிநீக்குவருக தோழர் நன்றி.
நீக்குதிண்டுக்கல் தனபாலன் போல நீங்களும் வலைத்தளத்தின் ஒரு முக்கிய புள்ளிதான். மீண்டும் வந்துவிட்டேன். ஆசீர்வதிக்கவும். சினிமா நடிகர்களை மையப்படுத்திய கலாசாரம் ஒழியும் வரை எதையும் மாற்ற முடியாது.
பதிலளிநீக்குஎனது பதிவு: https://newsigaram.blogspot.com/2024/01/02.html
வருக நண்பரே தங்களது தளம் வந்தேன், தொடர்ந்து வருவேன்...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்லதொரு பதிவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். ஒவ்வொரு மக்களும் சுய அறிவோடு உணர்ந்தாலன்றி, யாரையும் யாராலும் திருத்த முடியாது. பதிவில் தங்களது ஆதங்கம் புரிகிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசினிமா மோகத்தில் சீரளியும் மக்கள்.
பதிலளிநீக்குஉதவும் நடிகர்களை வாழ்த்துவோம்.
வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்கு