தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 27, 2024

நவீன வசதிகளுடன்...


ணக்கம் நண்பர்களே... நமது தமிழகத்தில் எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் பாருங்கள் நகராட்சியோ அல்லது மாநகராட்சியோ இப்படித்தான் கழிவறைகள் கட்டி வைத்து இருக்கின்றது. அதாவது நான்கு அடி உயரத்தில் மட்டுமே தடுப்புச்சுவர்கள். இதன் அருகிலும் போய் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும், நடத்துனரும்கூட போய் நிற்பார்கள். வரிசையாக தலைகள் மட்டும் தெரியும்.
 
இதில் பெண்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே என்ற சங்கடம் இந்த நாட்டில் எவனுக்குமே இல்லையா ? இதை ஒப்பந்தத்திற்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை கூடுதலாக ஒரு இரண்டு அடி உயர்த்திக் கட்டக்கூடாதா ? மாநகராட்சி அதிகாரிகள்தானே இதற்கு பொருப்பு ? இதையும் பல இடங்களில் பத்து ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றார்கள். இதிலும் ஜிஎஸ்டி வேறு அட நாதாரிகளா ?
 
இவைகளை நான் பல நகரங்களில் பார்த்து புகைப்படங்கள் எடுத்து இருக்கிறேன். நரகமாகத்தான் இருக்கிறது. இதில் பிஜேபிகாரர்கள் வாழும் ஊரே எனக்கு முதன்மையாக பட்டது காரணம் மாநகராட்சியாம். மேலும் சேலம், ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம், மானாமதுரை, இன்னும் நிறைய ஊர்கள் எழுத வேண்டாமென்று நினைக்கிறேன். இதிலும் நவீன வசதிகளுடன் என்று எழுதி இருப்பார்கள் பாருங்கள் அதைக்காணும் பொழுதுதான் மிகப்பெரிய கோபமாக வரும். உள்ளே போனால் ஏழூரு நாற்றம் வரும்.
 
யார் இவைகளை கேட்பது ? நமக்கு வாக்கு அளிக்க மட்டுமே தெரியும் பிறகு கறாராக பணத்தை கேட்டு வாங்கத் தெரியும். பிறகு எதுவுமே தெளியாது காரணம் வாங்கிய வேகத்தில் டாஸ்மாக்கில் கட்டி விடுவோம். காரணம் நாம் அனைவரும் செய்வினையால் கட்டுப்பட்டவர்கள். இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இதுதான் தூய்மை இந்தியா, பசுமை இந்தியா, க்ளீன் இந்தியா, க்ரீன் இந்தியா என்று நாமம் சூட்டி நமக்கு நாமம் போடுவதுதான்.
 
என்னமோ போங்க நம்மை இவர்கள் எவ்வளவு காலம் அடிச்சாலும் வாங்கி கொண்டுதான் இருப்போம் காரணம் விதைக்கும் நெல்லில் சுரம் இல்லை ஆகவே சூடு, சொரணை, மானம், வெட்கம் இத்யாதி, இத்யாதிகள் நமது குருதியில் சுரப்பதில்லை. இதன் காரணமாக நாடெங்கிலும் கருத்தரித்தல் மையம் பெறுகி விட்டது..
 
கில்லர்ஜி அபுதாபி
 
Chivas Regal சிவசம்போ-
நமக்கு பிரச்சனை இல்லை போதையில பாதையில கிடந்து கலந்து விட்டுறலாம்.
 
சாம்பசிவம்-
உனக்கு ஏற்ற யோசனை உனக்குத்தான் வரும்.

9 கருத்துகள்:

  1. ஆளும் அரசாங்கங்கள் மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அவ்வளவு ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  நமக்கு பழகி விட்டது.  ஒரு படத்தில் நாகேஷ் ஜோசியம் பார்ப்பார்.
    "இன்னும் ஆறு மாசத்துக்கு உங்களுக்கு ரொம்பக் கஷ்டம்தான்...."

    "அப்புறம்?"

    "அதுவே பழகிடும்!"

    இதுதான் தமிழக மக்கள் நிலையும்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கமாக நான்தான் எழுத்துப்பிழைகள் விடுவேன்.  இன்று உங்கள் பதிவிலும் சில...  

    பதிலளிநீக்கு
  3. // வரிசையாக தலைகள் மட்டும் தெரியும் //


    நல்லவேளை!

    பதிலளிநீக்கு
  4. கொட்டித் தீர்த்தீர்கள். எருமைகள் கண்டு கொள்ளா.

    பதிலளிநீக்கு
  5. வேதனையான உண்மை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்படியான அவலம் உண்டு. தலைநகர் தில்லியில் புது தில்லி பகுதி மட்டும் சரியாக பராமரிக்கிறார்கள். பழைய தில்லி பக்கம் சென்றால் வீச்சம் தாங்க முடியாது.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்கள் மன ஆதங்கம் புரிகிறது. சுத்தம் சுத்தமென பேசும் அரசாங்கம் மக்களின் நலன் கருதி எல்லாவற்றையும் சீர் செய்து தந்தால் நலம். நலமாக வாழ சுத்தம் அவசியம் அல்லவா? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. சமூக அவலத்தை சரியாக சொன்னீர்கள். இந்த மதிலை கொஞ்சம் உயற்றி கட்டலாம்.

    பதிலளிநீக்கு
  8. இது பெரிய விஷயமல்ல. வட இந்தியாவில் யாரேனும் வாகனத்திலிருந்து தலை நீட்டினால் நாம் அலர்ட் ஆகணும். சொப்பென்று கண்ட கண்ட இடத்திலும் பான்பராக் துப்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு