தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 08, 2026

குறும்புக்கவிகள்


துரோகம்

நண்பரை நண்பரிடம் தூது 

விட்டான், அந்த நண்பர் ‘

’தூ’’வை மறந்து விட்டு 

‘’சூ’’வை வைத்து விட்டார்.


போர்

பெட்டிகட்டி நாடு செல்ல

திட்டமிட்டான் திலகன்

ஆனால் பெட்டியில் கட்டி

அனுப்பி விட்டான் இறைவன்.


பசி

பசிப்பவனுக்கு உணவு

கொடுக்க மறுத்த இறைவன்

உணவு கிடைத்தவனுக்கு

பசி கொடுக்க மறுக்கின்றான்


இறப்பு

போர் தொடுக்கத் துடிப்பவன்

பாதுகாப்பாய் இருக்கிறான்,

போரை மறுக்கும் மனிதர்கள்

நாராய் நசுங்கி இறக்கின்றர்.


ஆளுமை

நாட்டைக் காப்பதுபோல்

நடித்தவன் நாட்டை ஆள்கின்றான்,

நாட்டைக் காத்து நின்றவர் வீட்டு

கேட் வாசலில் நின்கின்றர்.


மாலை

உயிரோடு இருக்கும்போது

ஒருவாய் சோறு தராதவன்

உயிர் மடிந்தபோது வருகின்றான்

இருநூறு ரூபாய் மாலையோடு…


கூத்தாடன்

தனது வாழ்வை, தன்னை

பெற்றவர்களுக்கு தராத 

தறுதலைகள் கூத்தாடன்களுக்காக

தனது உயிரையே தருகிறது.


பற்றாளன்

பற்றோடு வாழ்ந்தவனை 

பற்று அற்று ஒதுக்கியதால், 

பற்றற்று வாழத் தொடங்கினான்

சுற்றார்களோடு இறுதி நாளில்…


விருப்பம்

விரும்பியது கிடைக்காததால் 

கிடைத்ததை  விரும்பினான்

கிடைத்ததும் விரும்பாததால்

மனம் வெதும்பினான்.


நாக்கு

அண்ணியை ஐட்டம் என்பர்

ஐட்டத்தை அண்ணி என்பர்

ஐயமில்லை எமக்கு நாளை

ஐட்டத்தை அம்மா என்பர்.


தேவகோட்டை கில்லர்ஜி துபாய்

21 கருத்துகள்:

  1. சில நண்பர்கள் இப்படிதான்!  திலகன் பாவம். இல்லை, இல்லை, அவன் உறவுகள்தான் பாவம்!  

    இறைவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதுதான் வைத்திருப்பதாகச் சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. போர்க்கவிதை நிதர்சனம்.  புகை பிடிப்பவனைவிட அருகிலிருந்து அதை சுவாசிக்கும் நபர்களைப்போல!

    அதுயார் கேட் வாசலில் நிற்பது!  கடைசி வார்த்தை திருத்தம் எதிர்பார்த்து நிற்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் காவலாளியாகத்தான் நிற்கின்றனர்.
      இதைக் காணும்போது கோபம்தான் வருகிறது.

      நீக்கு
    2. நின்கின்றனர் = நிற்கின்றனர்!

      நீக்கு
  3. ஒரு வாய் சோறு போடாதவன் ஒரு பிடி அரிசியோடும் வருவான் - வாய்க்கரிசி போட!

    பெற்றோருக்குத் தராத மரியாதை - முற்றிலும் உண்மை.  கசக்கும் நிஜம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி ஊர் வாயை மூடுவதற்காக வரும் மூடர்கள்.

      நீக்கு
    2. எனக்கும் இந்த எண்ணம்தான் ஸ்ரீராம்.... ரோட்டில் பிணத்துக்கு மாலைகள், பூவை வெளியில் எறிவது, வேட்டுப்போடுவது என்றெல்லாம் பார்க்கும்போது, எழுப்பி அந்தப் பிணத்திடம் (மனிதரிடம்), கடைசி காலத்தில் நல்லா பாத்துக்கிட்டாங்களான்னு கேட்கத் தோணும்.

      நீக்கு
    3. இந்த சம்பிரதாயத்தில் எனக்கு மனம் ஒப்பவில்லை தமிழரே...

      நீக்கு
  4. அனைவரும் சூழ்ந்து இருந்தாலும் தனியாகவே இருக்கிறான் போலும்.

    விருப்பமில்லாத திருப்பங்களாகி விடுகிறது சிலருக்கு வாழ்க்கை!

    பதிலளிநீக்கு
  5. கொடுமையாயிருக்கிறது கடைசி கவிதை!

    ஆமாம், எங்கே சிவதாமஸ் அலி, சாம்பு மாமா எல்லாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர் பதற்றத்தால் நாட்டுக்கு போயிருப்பார்கள்.
      விரைவில் வருவார்கள் ஜி

      நீக்கு
  6. ​இருக்கிறேன் என்கிறார்
    கில்லெர்ஜீ
    ​இருப்பது எங்கே என்பது தான்
    கேள்வி.
    இந்தியாவிலா? துபையிலா?

    குறுங்கவிதைகள் அபாரம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் துபாயில் என்பது கவிதைகளின் வாயிலாக சொல்லி இருக்கிறேனே....

      தங்களது பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
  7. துரோகம், போர் (தலையெழுத்து..என்ன பண்ண?), பசி - குறுங்கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு.

    இறப்பு - தற்போதைய நிலையை நல்லா விளக்கும் குறுங்கவிதை.... எந்தத் தலைவர் போரைத் தொடுக்கிறாரோ, அவருடைய உறவினர்கள் அனைவரும் போர் முனைக்கு போர் புரியச் செல்லணும் என்பது இண்டர்நேஷனல் சட்டமாக ஆகணும். இல்லைனா அவனவன் ஏசி ரூம்ல இருந்துக்கிட்டு அடுத்த நாடு மேல போர் புரிவான்.

    ஆளுமை - உண்மை நிலை. நாட்டைக் காப்பாத்துபவனுக்கு மரியாதை தருவதில்லை. ஆனால் போர் வீரன் மாதிரி படத்துல நடிச்சவனுக்கு மரியாதை.

    மாலை - நிதர்சனம்....செத்த பிறகு விழாக் கொண்டாடுவது, பிணத்தைச் சுற்றி மாலை போடுவது போன்ற சம்ப்ரதாயம் சிரிப்பை வரவழைக்குது.

    மற்ற கவிதைகளும் அருமை. நாக்கு கவிதை மாத்திரம் நல்லா இல்லைனு தோணுது. திரிஷாவை நினைச்சு எழுதினீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      கவிதைகளை ரசித்தமைக்கு நன்றி.

      நாக்கு கவிதையில் முதல் இரண்டு வரிகள் நிகழ்ந்து விட்டது.

      அடுத்த இரண்டு வரிகள் எனக்கு ஐயம் என்றேன். இருப்பினும் இதுவும் ஏற்கனவே நிகழ்ந்து விட்ட உண்மைதானே ?

      நீக்கு
  8. சில அனுபவங்கள், சில பார்வைகளில் இருந்து பிறந்த கவிதைகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மாலை - ரொம்ப உண்மை ஜி. போலிகள் தான் நிறைய! இதோடு கூட இன்னொன்னும் சொல்லலாம்....பசங்களே கூட சோறு போடாம, அதுக்கு அப்புறம் செத்தப்புறம் கடைசில் வாயில அரிசி போடுவாங்களே! எனக்கு இதைப் பார்த்த போது சிரிப்பு வந்துவிட்டது மனதிற்குள்! அப்புறம் அப்படியே என்னவோ காரியங்கள் பண்ணலைனா பாவம் அது இதுன்னுட்டு கர்ம சிரத்தையோட செய்வாங்களே !!! அதுவும் தான். போலித்தனமான விஷயங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆளுமையும் நல்லாருக்கு.

    கூத்தாடன் - இப்ப பார்த்துக் கொண்டிருக்கிறோமே!!

    பற்றாளன் கொஞ்சம் உங்களையே சொல்லிக் கொள்வது போலத் தோன்றியது கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கவிதை உண்மைகளை சொல்கிறது.

    உலக நடப்பு, நாட்டு நடப்பு, உறவுகள் பற்றி நன்றாக கவிதை எழுதி இருக்கிறீர்கள்.

    நீங்கள் நலமா? உங்கள் ஊர் நிலவரம் என்ன?
    போரால் மக்கள் மிகவும் அவதி படுவது உண்மை.
    விரைவில் போர் நிறுத்தம் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு