தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

அருந்ததி பார்த்தேன்


ஏங்க நம்ம பையனோட ஜாதகத்தை பார்ப்போம் உங்களுக்கு ஏதாவது கிரகம் இருக்கானு...
எனக்கு கிரகம் புடிச்சுதான் பதினேழு வருசம் ஆச்சே அதுக்கு ஏன் சோஸியர்கிட்டே போகணும் ?

என்னங்க சொல்றீக எனக்குத் தெரியாமே யாருட்ட பார்த்தீக ? 
எனக்கும் கொஞ்சம் ஜோஸியம் தெரியும்.

இத்தனை வருஷமா சொல்லவே இல்லே... ?
நீ கேட்கவே இல்லே...

சரி அப்படின்னா ஏதாவது பரிகாரம் செய்யலாமுள்ள ?
செய்யலாம்........ அதுக்கு நீ ஒத்துக்கமாட்டே.

யேன் அப்படி என்ன பரிகாரம் சொல்றீக ?
நாம விவாகரத்து செய்யணும் செய்வோமா ?

நேத்துவரை நல்லாத்தானே இருந்தீக எதுலயாவது மிதிச்சுட்டீகளா ?
ஆமா அம்மி மிதிச்சேன்.

அம்மியா ஏன் ?
ஆமாடீ அம்மி மிதிச்சுதானே அருந்ததி உன்னைப் பார்த்து, ஒங்கழுத்துல தாலி கட்டுனேன்.

ஆமா.....மா, இங்கேயும் ஜிமுஜிமுன்னுதான் வாழுது, ஏற்காட்டுல யேன்மாமன் மகனுக்குகூட கேட்டாக, ஏதோ... யேங்கிரகம் இங்கே வந்து கொட்டணும்னு தலையில எழுதியிருக்கு.
பாத்தீயா கிரகம் எங்கேயிருந்து வந்துருக்குனு, வ்வோவாயாலயே சொல்லிட்டே, யேங்கிரகம்னு அப்ப கிரகத்தை நீ தானே கொண்டு வந்தே.

யேன், மச்சானை கட்டி யருந்தாலும்... என்னை துபாய்க்கு கூட்டிப் போயிருப்பாக,
யாரு அந்த, மூஞ்சுருவாயனா ? ஒன்னைக் கொண்டு போயி துபாய்ல, தூப்பாய் கழுவ விட்ருப்பான், அப்படிப் போயிருந்தாலும் நானாவது நிம்மதியா பாவனாவை கட்டியிருப்பேன்.

அதுசரி இன்னும், அவ நினைப்புலதான் ஓடிக்கிட்டு இருக்கா போக வேண்டியதானே... யாரு இங்கே புடிச்சுக்கிட்டு இருக்காக...... ?
அதுக்குத்தான், விவாகரத்து கேட்டேன்.

எனக்கும், யேன் மவனுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்தா நான் எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன்ல...
இங்கே என்ன இருக்கு சட்டியில இருந்தாதானே கரண்டியில வரும்.

தெரியுதுல அப்ப எதுக்கு ? இன்னொரு சிறுக்கி, காஞ்சிபுரத்துல கஞ்சிக்கு வழியில்லாதவன் குளித்தலை வந்து தலைக்கறிதான் வேணும்னு கேட்டானாம்
என்னடீ... பேச்சு, கொஞ்சம் ஓவராபோகுது... பழமொழிகூட புதுசா இருக்கு.

எல்லாம்.. கில்லர்ஜிகிட்டே, படிச்சதுதான்.
உனக்கும், அவருக்கும், என்னடி சம்பந்தம் ?

யோவ், வாயைக் கழுவுயா.... அவரு, ரைட்டரு... போனவாரம்தான் அவரு, கதையில வந்துச்சு, வலைப்பதிவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அக்காகூட சொல்லியிருக்காங்க,,, ஈரமனிதர்னு... அவரு ரொம்ப நல்லவரு...
ஏண்டி விளங்கா... முடுமை.

அடா... டாடா.... பொழுது விடிஞ்சா ஒரே பஞ்சாயத்துதானா நிம்மதியா கிரிக்கெட் பார்க்க முடியுதா ? இந்த வீட்டுல, நான் போறேன் ப்ரண்டு வீட்டுக்கு.
இவன் ஒருத்தன், தொலைஞ்சு போடா வெளியே.....
இப்ப சந்தோஷமா எம்புள்ளைய விரட்டி விட்டுடீகள்ல.

அடியே... கூறுகெட்ட குக்கரு, எல்லாம் காரணமாத்தான்.... அவனை விரட்டத்தான் அப்படிப் பேசுனேன், நமக்கு ஜாதகத்துல பொம்பளைப்புள்ள பொறந்தாத்தான் யோகமாம்.
இது எந்த கூறுகெட்ட, ஜோஸியரு சொன்னாக ? 

நம்ம, சோலந்தூர், சோஸியர் சோனைமுத்துதான்.
அவன் வாயில மண்ணை அள்ளிப் போட உங்களுக்கு வாக்கப்பட்டா சீமைய ஆளுவேன்னு அவன் சொன்னதை கேட்டுத்தான், எங்க அப்பாரு சீரழிஞ்சாரு இப்ப இது வேறயா இப்ப எந்திரிச்சு வெளியில போகல மூஞ்சியில கழனித் தண்ணிய ஊத்திடுவேன்.

(சட்டென புருஷனை வெளியே தள்ளிதாழ் போட்டுக் கொண்டாள் அருந்ததி)

காணொளி
(Please ask Audio Voice)

73 கருத்துகள்:



  1. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது
    பெண்
    கற்புக்கரசியாக இருப்பதற்காகவா?
    விவாகரத்துச் செய்வதற்காகவா?
    என்னமோ நடக்குது
    எனக்கும் புரியவில்லையே

    நான் சின்னப்பொடியன் என்பதாலா?


    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிதிக்கிற சடங்கெல்லாம நாளை மிதி வாங்கனும்னு தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்.

      நீக்கு
  2. அதென்ன 17 வருஷக் கணக்கு.?கில்லர்ஜி, பொதுவாகத் திருமணங்களில் மணப்பெண் தான் அம்மி மிதிப்பாள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீங்கள் சொல்வது போல்தான் நானும் நினைத்திருந்தேன் 10 வருடத்துக்கு முன்பு ஒரு நண்பர் சொன்னார் இருவருமே மிதிப்போம் என்று அதை மையமாக வைத்துதான் எழுதினேன்.

      நீக்கு
  3. கொரிய மொழிமாற்றம் கில்லர்ஜியின் கை வண்ணமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா அது கொரிய மொழிதான் ஆனால் அர்த்தங்கள் தெரியாது இதற்க்கு மேட்சாக இணைத்தேன் சரியாக இருக்கிறதா ?

      நீக்கு
  4. அம்மி மிதித்தற்கு பதிலாய் சோசியக்காரனை மிதித்து அதை அருந்ததி பார்த்திருந்தால் கதவு திறந்திருக்குமோ?
    அருமை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரத்துக்கு சோசியர் அந்தப்பக்கம் வந்திருந்தால் காரியம் நடப்பதற்காக மிதித்திருப்பான்.

      நீக்கு
  5. நண்பரே முதல் ஓட்டு எனது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... ஆஹா... முதன் முதலாக ஊமைக்குத்து விட்டமைக்கு நன்றி கவிஞரே....

      நீக்கு
  6. சோசியக்காரன் புண்ணியமா!..
    குடும்பத்தில குண்டு ஒன்னும் வைக்கலையே!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவதான் தேடிக்கிட்டு இருக்காளாம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. NSK வசனம் கொரிய மொழியிலா ,ஏனிந்த கொடுமை சரவணா :)
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல(ழ)மொழியும்தான் கேட்போமே பகவான்ஜி.

      நீக்கு
  8. என்ன... மானமுள்ள பொண்ணுனு மதுரையில கேட்டாக அந்த மன்னார்குடியில் கேட்டாக .

    பதிலளிநீக்கு
  9. இயல்பான மொழியில்
    இயல்பாக நடக்கும் ஊடல் சண்டையை
    பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் ரசிப்பிற்க்கும் நன்றி

      நீக்கு
  10. கில்லர்ஜி ரைட்டர் நகைச்சுவையாய் எழுதி இருக்காருப்பா...கொரிய மொழி மாற்றம் சரிதான்...ஆனா நம்ம மொழியிலயும் சேர்த்து போட்டு இருந்தா நாங்க இன்னும் ரசித்து இருப்போமில்ல...தம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வலைச்சர ஆசிரியரே.. வருக, தாங்கள் சொல்வது சரிதான் ஆனால் வசனம் வேற மாதிரியில இருந்தது மேட்சான கொரிய மொழியை தேடினேன் இதுதான் எனது வேலை. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. ஆமா ரைட்டரே என்ன இப்படி பின்னுறீங்க. அம்மி வேற மிதிக்கிறீங்க பழமொழி ம்..ம்..ம் நகைசுவை ததும்ப தந்த சம்பாஷனை சூப்பர் யதார்த்தமாக அமைந்திருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க நல்லாத்தான் ரசிக்கிறீங்க.... நல்லாத்தான் கருத்துரை எழுதுறீங்க... ஆனால் அடுத்து எப்போ வருவீங்களோ.... இதுதான் எனக்கு புரியவில்லை
      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. எப்படிங்ணே சொல்லாடல்ல புகுந்து விளையாடறிங்க ! அந்த வித்தைய எனக்கும் கொஞ்சம் கத்துக்கொடுத்திங்கனா நானும் பொழைச்சுப்பேன் !!
    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம பகவான்(ஜி)தான் காரணம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. ஹா... ஹா... ரசித்தேன் ஜி...

    பகவான்ஜியின் அருள்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையை சொன்னேன்... ஹா....ஹா....ஹா...

      நீக்கு
    2. ஜோக்காளியின் வலை உறவுகள் அனைவருக்கும் என்னருள் உண்டு :)

      நீக்கு
  14. //காஞ்சியிலே கஞ்சிக்கு வழியில்லாதவர்
    குளித்தலையில் தலைக் கறி கேட்டானாம்///
    ஆகா
    அருமை நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகையும், கருத்துரையும், வாக்கும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. குளித்தலை தலைக்கறி மேட்டர் சூப்பர்!! இனி ரைட்டர் அண்ணனின் இந்த பல(ழ)மொழியை நானும் சொல்லுவேன்ல! அப்பயும் சொன்னேன், இப்பயும் சொல்றேன், எப்பவும் சொல்வேன். என் அண்ணா ஈர மனிதர்! ஈர மனிதர், ஈர மனிதர்!! கலக்கிபுட்டீக கலக்கி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட பல(ழ)மொழி 4 பேருக்கு நல்லது செய்தால் தினமும் 8 பழமொழி சொல்வேன் வருகைக்கு நன்றி சகோ....

      நீக்கு
  16. \\சட்டியில் இருந்தாத் தானே கரண்டியில் வரும்\\"சட்டியில் இருந்தாத் தானே அகப்பையில் வரும்" என்று சொல்வார்கள். இதற்கு வாரியார் விளக்கம், இதில் வரும் சட்டி, மண்சட்டி அல்ல, சஷ்டி. "சஷ்டியில் விரதம் இருந்தால் தானே அகம் என்றல் பையில் ஞானம் வரும்?" என்பதே இதன் பொருள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிறு வயதில் நானும் வாரியார் அவர்களின் சொற்பொழிவு கேட்டு இருக்கிறறேன் நாம்தான் எல்லாவற்றுக்குமே.... எதிர்பதம் சொல்லி வளர்த்து விட்டோமே... 1000 பேருக்கு போய் செல்லி விவாஹம் செய் 80,
      நாளடைவில் 1000 பொய் சொல்லி கல்யாணம் செய் என்று மாறவில்லையா ? அதைப்போல்தான் நண்பா இதுவும் மறுவி விட்டது.

      நீக்கு
  17. நண்பா!
    கூறுகெட்ட குக்கரின் விசில் சத்தம் கேட்டுத்தான்
    ஈர மனிதர் வீர மீசையோடு வந்தாரா?
    பஞ்சாயத்து என்னும் பேரில் பஞ்சர் ஒட்டுவதற்கு?
    பார்த்து ஒட்டுங்க!
    இல்லாட்டி ஒரியா மொழியில் ஓட்டி விடப் போகிறார்கள்?

    (ஆஹா! ஹாஸ்யம் நிறைந்த ஜோசியம் !
    பரவட்டும் தேசியம் முழுவதும்)

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மனுஷன் காரியம் ஆகணும்னா எதுவும் சொல்வான் நண்பா, அதுல இதுவும் 1

      நீக்கு
  18. உள்ள(த்)தை உள்ளவாறு சொன்ன ..ஈரமனிதருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்னிடம் (மூளையின் மூலையில்) உள்ளதைத்தான் சொன்னேன் நண்பா...

      நீக்கு
  19. ஹஹஹஹ....ரசித்தோம். நல்ல காலம் அம்மியதான் மிதிச்சீங்க கில்லர்ஜி நண்பரே! அவங்கள மிதிக்கலையே நல்ல காலம்....சோசியர கேட்டேன்னு சொன்னதுக்குப் பதிலா, ரெண்டு வார்த்தை நல்லதா பேசிருந்தா ஒரு பொண்ணு கைல தவழ்ந்திருக்கும்ல....சரி சரி இது எத்தனாவது கல்யாணம்..கோச்சுக்காதீங்க 60 ஆம் கல்யாணம்தானே?!!! ஹஹ சரி சரி மொய் வைச்சாச்சு...பந்தி போட்டாச்சா ஃப்ரீயா சாப்பிடப் போலாமா ஜி!!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 ஆம் கல்யாணமா ? இதென்ன சாந்தி கல்யாணமா ? சாந்திக்கு கல்யாணம் மொய் செய்துட்டு சாப்பிடாமல் போயிடாதீங்க.... சாப்பிடாமல் போயிடாதீங்க.... சாப்பிடாமல் போயிடாதீங்க....

      நீக்கு
  20. //அவனை விரட்டத்தான் அப்படிப் பேசினேன். நமக்குப் பொம்பளப் புள்ள பொறந்தாத்தான் யோகமாம்//

    இத்துடன் கதைக்கு சுபம் போட்டிருக்கலாம். பாவம் அருந்ததி புருஷன்!

    சூப்பர் சஸ்பென்ஸ் கதை கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் மட்டுமா ? பாவம் நாட்டுல நிறையப்பேரு இப்படித்தான் நண்பரே.... வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  21. படத்தில் இடது பக்கம் கீழ் பக்கமாக ஒருத்தர் உருமா கட்டியிருப்பவர் யாருன்னு தெரியலையே...ஒரு வேள அவருதான் அருந்ததி பார்த்தவரோ......

    பதிலளிநீக்கு
  22. நல்ல நகைசுவையாக எழுதியிருக்கிறீங்க. வாசித்து ரசித்து சிரித்தேன். இப்பேச்சு மொழி எந்த ஊரூ. நல்ல பழமொழி. வீடியோ அருமை. ஆனா புரியவில்லை. வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எந்த ஊரு பேச்சு வழக்கும் இல்லை சும்மா எனது கற்பனையில் வித்தியாசமாக இருக்கட்டுமென வந்தீக... போனீக... பார்தீக... கேட்டீக.... என்று எழுதினேன்
      அது உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியாது அது கொரிய மொழி மேட்சாக இணைத்தேன் அவ்வளவுதான் எனது வேலை இதன் தேடல்தான் நீடித்து விட்டது தங்களது பாராட்டு மூலம் தேடுதலின் சுமை பறந்து விட்டது நன்றி.
      தாங்கள் நிறைய பதிவுகளை விட்டு விட்டீர்களே.....

      நீக்கு
  23. ரசிக்க வைத்தது அண்ணா....
    17 வருசத்துக்கு அப்புறம் சோசியன் சொன்னான்னு பொட்டப்புள்ள கேக்குதோ...
    வெரட்டி அடிச்சது சரி...
    வீடியோ அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே.....

      நீக்கு
  24. அட்டகாசம் கில்லர்ஜி.காலையில முதல்ல உங்கள் பக்கத்துக்க்குத்தான் வந்தேன். நல்ல சிரிப்போடு இன்னைக்கு தொடங்கியாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றைய பொழுது ''கலா, கலா'' அப்பிடினு போகட்டும் உங்களுக்கு...

      நீக்கு
  25. வணக்கம்
    ஜி
    நகைச்சுவை கலந்த பணியில் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளீர்கள்... பாராட்டுக்கள ஜி...இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் பாராட்டுக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  26. மனதில் நிற்கும் பழமொழிகள், ரசிக்கத்தகுந்த நகைச்சுவை இவையனைத்திற்கும் மேலாகத் தங்களின் எழுத்துப்பாணி - இவைகளால் எங்களைக் கட்டிப்போட்டுவிடுகின்றீர்கள். நகரமுடியவில்லை. மெருகேறும் தங்களது எழுத்துத்திறனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகையும், வாக்கும், என்னை மெருகேற்றும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி இந்தவகையான கருத்துரைகள் என்னை இன்னும் நல்ல பதிவுகளை எழுத தூண்டுகிறது நன்றி

      நீக்கு
  27. கல்யாண வயதில் பையன் இருக்க ஒரு பெண் குழந்தைஇகு ஆசையா?துடப்பக்கட்டையால் அடிக்காமல் விட்டாளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஓட்டும் போட்டு, சரியான கருத்துரையும் சொன்னீங்க ஐயா நன்றி.

      நீக்கு
  28. என்ன கொடுமை ஜீ இது நகைத்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமையா ? அப்புறம் எப்படி மகிழ்வு ?

      நீக்கு
  29. கூறுகெட்ட மனுசா சரி, அது என்ன கூறுகெட்ட குக்கரு. ஓ பெண் பால் ஓகே ஓகே. அவுங்கள கட்டிக்கிட்டா ஊர ஆலுவ இப்படி தான் எல்லா வுட்டுலேயுமா? சரியாப்போச்சு. காஞ்சியிலே கஞ்சிக்கு வழி இல்லாதவன்,,,,,,,,,,,,,,,,,,,,, மீசை இல்லை என்றாலும் வரைவோம்மில்ல. எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க நல்லாத்தான் இருக்கு கருத்து. நன்றி.

      நீக்கு
  30. மிக மன வருத்தத்தில் இருந்த நிலையில் பதிவுகளாவது படிக்கலாமே என்ற நிலையில் அன்பானவரின் வலைப்பக்கம் வந்தேன்! ஒரு முறை அல்ல இருமுறை படித்து வாய்விட்டு சிரித்தேன். மனதை மீண்டும் மென்மையாகியது!

    கவரும் வகையில் எழுத்து நடையுடன்.... தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது ஒவ்வொரு பதிவும்.... வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னாலும் 4 பேர் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்றால் அதை விட சந்தோஷம் எமக்கு வேறில்லை இவ்வுலகில் தொடருங்கள் நண்பரே தங்களுக்காகவே இனி நகைச்சுவை பதிவுகள் கூடுதல் இடுகிறேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  31. லக்க லக்க... சிச்சீ.... கல கல கலக்கல் பதிவு ....செம அசத்தல் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசத்தலாக கருத்துரை தந்தமைக்கும் நன்றி நண்பா...

      நீக்கு
  32. சூப்பர்ஜி சூப்பர்ஜி
    த ம 18

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாரதர் முதல் வருகை தந்து 18-ம் படி அமைத்தமைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றேன்.

      நீக்கு
  33. பேச்சு ஓவரா இருப்பதற்கும் வயர்லெஸ்சில் ஒவர் என்பதற்கும் அர்த்தம் என்னவோ..???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காகவே ஒரு பதிவுதான் போடனும் நண்பரே காரணம் விசயம் ஓவர்ர்ர்ர்ரு

      நீக்கு
    2. இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
      http://blogintamil.blogspot.com/2015/02/1.html

      நீக்கு
  34. பழமொழியை ரொம்பவும் ரசித்தேன்! :)

    த.ம. 19

    பதிலளிநீக்கு