தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

சிறை வைக்க முடியாது


முன்னறிவிப்பு - புகைப்படம், தலைப்பிற்கும் ஏன் ? பதிவுக்கும்கூட சம்பந்தமில்லை காரணம் எனக்கு அரசியல் தெரியாது நான் பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது உறங்கி விட்டேன் யாரோ எனக்கு வேண்டாதவர்கள் இதை சொருகி விட்டு போய் விட்டார்கள் இது வெளிநாட்டு சதி என்பதை சபையோருக்கு அறியத் தருகிறேன் - கில்லர்ஜி

01. ஆணால் உணர முடியாது ஆனால் ? பெண்ணால் உணர முடியும் அதுவே பிரசவ வலி
02. சில நேரம் உன்னால் முடியாது ஆனால் ? என்னால் சொல்லிக் காட்ட முடியும் அதுவே கைகாட்டி சொல்லும் வழி
03. நான் நினைச்சா உன்னை கடிப்பேன் என்னை நீ கடிக்க முடியாது நான்தான்டா கொசு
04. நீ கிழிந்த நோட்டைக் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன் பகரமாக நான் கிழித்துக் கொடுப்பேன் நீ வாங்கயே தீரணும் அதுவே பயணச்சீட்டு
05. உன்னை ஒருநாள் நான் தின்பேன் என்னை என்றும் நீ தின்ன முடியாது நான்தான் மண்
06. குத்துச்சண்டை வீரனே உன்னால் என்னைக் குத்த முடியுமா ? பயந்த கோழையே நான்தான்டா முள்
07. சம்சாரத்தை தொட மட்டும் ஆசைப்படும் மனிதா என்னைத்தொடு பார்ப்போம் நான்தான் மின்சாரம்
08. திரைப்படத்தில்100 நபரை வீழ்த்தும் நடிகனே வரும் புரட்டாசி 8 என்னை வீழ்த்து பார்க்கலாம் நான்தான்டா எமன்
09. ஊருக்கெல்லாம் ஜாதகம் சொல்லும் சோலந்தூராரே உனது ஜாதகம் சொல் பார்ப்போம் நான்தான் கேது
10. எத்தனை பேர் வாயில மண்ணை அள்ளிப் போட்டே இன்னைக்கு நான் உன் வாயில போடுறேன் பார்த்தியா ? நான்தான்யா சண்டாளன்
11. நான் உங்களோட ஜீன்ஸ் பேண்ட் போடமுடியும் நீங்க என்னோட சுடிதாரை போட முடியுமா ? மனைவி
12. நீ எவ்வளவுதான் முயன்றாலும் என்னை சிறை வைக்க முடியாது நான் கொல்லைவாசல் வழியாக தப்பிச்சுடுவேன் நான்தான்யா சோறு

நட்பூக்களே... ஒரு ஆட்சி எப்படி நடந்து முடிந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது குறைய நண்பர்கள் மட்டுமே படித்த இந்த எனது பழைய பதிவை சொடுக்கி படித்து அறிக இதோ - காமராஜர்

திங்கள், ஏப்ரல் 18, 2016

ஆசை100 வகை


ஆசை இது யாருக்குத்தான் இல்லை ? எல்லோரும் ஆசைப்படுகிறார்கள், எல்லாமே நடந்து விடுகிறதா ? நாமும் ஆசைப்படுவோமே என்று ஆசைப்பட்டேன்.

01. நாமும் டாக்டர் ஆகவேண்டுமென ஆசைப்பட்டேன் அதற்கு M.B.B.S. (Bachelor of Medicine and Bachelor of Surgery) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.

02. சரி போகட்டும், வழக்கறிஞர் ஆவோம் நீதி மன்றத்தில் வண்டு முருகன் போல் வாதாடலாமென ஆசைப்பட்டேன் அதற்கு M.A.B.L. (Marine Atmospheric Boundary Layer) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.

03. சரி போகட்டும் போலீஸ் அதிகாரி ஆவோம், ரவுடிகளை எல்லாம் தூக்கி ஜெயிலில் போடலாமென ஆசைப்பட்டேன் அதற்கு I.P.S (Indian Police Service) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.

04. சரி போகட்டும் பேசாம நம்ம தேவகோட்டை மாவட்டத்துக்கு கலெக்ட்டரா வந்து விடுவோமென ஆசைப்பட்டேன், அதற்கு I.A.S. (Indian Administrative Service) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.

05. சரி போகட்டும் பேங்க் மேனேஜராவோம் என்று ஆசைப்பட்டேன் அதற்கு M.B.A. (Master of Business Administration) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்

06. சரி நம்மலோட படிப்புக்கு இதெல்லாம் சரியாக வராது பேசாம முதல்வர் ஆயிடுவோம் இவ்வளவு படிச்சுருக்காங்களே ! இவங்கே பூராம் நமக்கு சல்யூட் அடிப்பாங்கே இந்த வேலைக்குத்தான் படிப்பு தேவையில்லையே...

அப்ப முதல் வேலையாக என்ன செய்யிறது ? கட்சி ஆரம்பிக்கனும் மக்களுக்கு நம்மளை அடையாளம் தெரியனும் அந்த நேரம் பார்த்து நமக்கு நல்ல நேரம் போல நம்ம தொகுதி M.L.A. ஏகாம்பரம் AIDS வந்து செத்துப் போயிட்டாரு, இடைத்தேர்தல் வந்துச்சு வீடு, வாசல், தோட்டம், தொறவுன்னு எல்லாத்தையும் வித்து செலவு செஞ்சு தேர்தல்ல சுயேட்சை வேட்பாளராக கடப்பாரை சின்னத்தில நின்னேன் அமர்க்களமா தேர்தல் நடந்து முடிந்தது மறுநாள் வாக்கு எண்ணிக்கை அறிவித்தார்கள் கேட்டதும் எனக்கு நெஞ்சுவலி (Heart attack) வந்து விட்டது காரணம் எனக்கு ஒரு ஓட்டுக்கூட விழவில்லை இது எப்படி ? எவ்வளவு பேருக்கு பணம் கொடுத்தோம் ஏன் ஒரு ஓட்டுகூட விழவில்லை ? எம் பொண்டாட்டி கூட போடலையா ? சரி நம்ம ஓட்டு எங்கே ? மறுபடியும் எண்ணச் சொன்னால் கேட்பாங்களா ? கோபத்துடன் வீட்டுக்குப் போனேன்.

ஏண்டி நீ கூட எனக்கு ஓட்டுப் போடலை''ல, கொளுத்திப்புடுவேன் உன்னை  நீ இந்த வீட்ல இருக்க கூடாது இப்பவே உன் ஆத்தா வீட்டுக்கு கிளம்பு.
தயாராக இருந்தவள் போல் உடனே
பஸ்ஸூக்கு பணம் கொடுங்க ?

என்றாள் நானும் தொலையட்டுமென சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்தால் ? கூடவே எனது ஓட்டுச்சீட்டு ''கடப்பாரை'' ச்சே ஓட்டுப் போட்ட கையோட மறந்து கொண்டு வந்துட்டேன் எனக்கு நானே கடப்பாரையாலே ஆப்பு அப்பத்தான் எனக்கு புதுசா ஒரு ஆசை வந்துச்சு அது ஆசையே படக்கூடாது அப்படின்னு ஒரு ஆசை.

சாம்பசிவம்-
சீ... இந்தப்பழம் புளிக்கும்.
CHIVAS REGAL சிவசம்போ-
உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா ?

 காணொளி

சனி, ஏப்ரல் 16, 2016

பஞ்சமில்லை...


எங்கள் நாட்டில், கட்சிகளுக்கு பஞ்சமில்லை...
பட்டினிச்சாவின் காட்சிகளுக்கும், பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை...
இலவச அரிசியை, நம்பி வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், கோடிகளுக்கு பஞ்சமில்லை...
தெருக்கோடியிலேயே, வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கொடிகளுக்கு பஞ்சமில்லை...
அதை கட்டும்போது, அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், தேர்தல்களுக்கு பஞ்சமில்லை...
கோயில்களில், தேர் தள்ளுபவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், நடிகர்களுக்கு பஞ்சமில்லை...
நாடிசோதிடரை, நம்புவோருக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், அறப்பால், வெண்பால்களுக்கு பஞ்சமில்லை...
கட்டவுட்டிற்கு, பால்அபிஷேகம் செய்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கோயில்களுக்கு பஞ்சமில்லை...
நடிகைகளுக்கு, கோயில் கட்டுவோருக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், SWISS வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமில்லை...
வேடிக்கை காட்டியே, வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கள்ள நோட்டுகளுக்கு பஞ்சமில்லை...
கள்ள ஓட்டு, வாங்கியே ஜெயித்தவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், திறமையான கலைகளுக்கு பஞ்சமில்லை...
நடு ரோட்டில், தலைவர் சிலைகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், குடிகாரர்களுக்கு பஞ்சமில்லை...
அடுத்தவன் குடியை, கெடுப்பவனுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், வர-தட்சிணைகளுக்கு பஞ்சமில்லை...
வரன்-களுக்காக, காத்திருப்போருக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், T.V. களுக்கு பஞ்சமில்லை...
வீட்டில், கரண்டே இல்லாதவர்களுக்கும், பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், காதலுக்கு பஞ்சமில்லை...
அதனால், மோதல்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், திருமணங்களுக்கு பஞ்சமில்லை...
நாள்தோறும், விவாகரத்துகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், நோயாளிகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், மருத்துவக் கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், சண்டைகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், சட்டக் கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், பிச்சைக்காரர்களுக்கு பஞ்சமில்லை...
அவர்களுக்கு, பிச்சை போடுபவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், அனாதை குழந்தைகளுக்கு பஞ்சமில்லை...
அவர்களை, ஆதரிப்பவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், தொலைபேசிகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், விலைவாசி ஏற்றத்திற்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், போலி ஆவணங்களுக்கு பஞ்சமில்லை...
அதனால், போலி மனிதர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், மக்களுக்கு பஞ்சமில்லை...
அதில், மக்குகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், பஞ்சமில்லை, பஞ்சமில்லை
பஞ்சமென்பதில்லையே.....

குறிப்பு – இன்னும் எழுத என்னுள் வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை, இருப்பினும் நான் ஆஃபீஸுக்கு போகணும் அப்புறமாக வர்றேன் வெட்கப்பட்ட குற்ற உணர்வுடன் - கில்லர்ஜி

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

வாக்காளப் பெருங்'குடி' மக்களே...


வாக்காளப் பெருங்குடி மக்களே... எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது ஆம் வயிற்றெரிச்சலாகத்தான் இருக்கின்றது அது என்னவென்று முடிவில் சொல்கின்றேன் எல்லா கட்சித் தலைவர்களுமே அடுத்த தலைமையை இழிவாக பேசி ‘’நான்தான் முதல்வர்’’ என்று சூழுரைக்கின்றார்கள் இவர்கள் என்னமோ யோக்கிய சிகாமணிகள் மாதிரி எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை மறந்து விடுவகின்றார்கள் இவர்கள் எல்லாம் தங்களது பலத்தை காண்பிக்க தகுதி இருந்தால் ? ? ? கட்சித்தலைவர்கள் அனைவருமே ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா ? அப்பொழுதுதான் யாருக்கு மக்களிடத்தில் மதிப்பு இருக்கின்றது என்பதை துல்லியமாக கணிக்க முடியும் எல்லா இடங்களிலுமே தலைமைகள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகின்றார்கள் இதுதான் நமது தமிழ்நாட்டின் சாபக்கேடு இதற்கு காரணமென்ன ? நன்றாகவே தெரிகின்றது இது ஊழல் பெருச்சாளி என்று இதுதான் சந்தர்ப்பம் என்று அனைவருமே தலைவர்களை மொத்தமாக சேர்ந்து ஆப்பு அடிக்க வேண்டும் இந்தக்கருத்து எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இருக்கின்றது இதனைக்குறித்து நண்பர்கள் பலரிடமும் இதையே பேசியிருக்கின்றேன் மேலும் ’’எமக்கு யாமே’’ என்று தனியாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றேன் (சமீபத்து பதிவொன்றில் கவிஞர் ஐயா திரு. ரமணி. S அவர்களும் இதனை வலியுறுத்தி இருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றேன்) இதை நமது வாக்காளர்கள் விளங்கி கொள்வதில்லை இந்த தலைவர்கள் எல்லோருமே ‘’நான்தான் முதல்வர்’’ ‘’நான்தான் முதல்வர்’’ என்று கூப்பாடு போடுவதை கேட்கும் பொழுது எனக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்பு நான் ராணி வாரஇதழில் படித்த ஒரு துணுக்கு எனது நினைவோட்டங்களில் நுழைந்து செல்கின்றது எல்லோரும் இந்நாட்டு மன்னர் இதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். இதோ இதுதான்.

பாபு-
ஹாஹாஹா நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்.
கோபு-
ஹாஹாஹா நான் விற்றால்தானே... ?

குறிப்பு - இந்த இடம் மனநல மருத்துவமனை என்பதும், இவர்கள் இருவருமே இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளாக இருக்கும் நேபாளிக்காரர்கள் என்பதையும் நான் நினைவு படுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றேன் - கில்லர்ஜி

அரசியலில் தனது வாழ்க்கையை நுழைத்து பல ஆண்டுகளாக இதே தொழிலில் (தொழில்தானே) காலத்தை கடத்தும் அதேநேரம் எல்லா நெளிவு சுழிவும் தெரிந்தவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது இப்படிப்பட்டவரை சாதாரண நடிகன் தேர்தலில் வெல்ல முடிகின்றது அதற்காக நடிகனாக இருப்பவனுக்கு உலக அனுபவம் தெரியாது என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல ! இவ்வளவு ஓட்டும் விழுந்ததற்கு அடிப்படை காரணம் என்ன ? இதுதான் எமது கேள்வி ஒரு ஈர்ப்பு சக்தி அதாவது திரையில் பல நன்மைகளை செய்தவர் நிஜத்திலும் செய்வார் என்ற அறியாமையே அன்றி வேறில்லை திரைப்படத்தில் வெறும் காலால் 50 பேர்களை எத்தியே வீழ்த்தியவர் கடந்த சென்னை வெள்ளத்தில் மூழ்கப் போனவரை இந்திய ராணுவவீரர்கள் கயிற்றை இறக்கி தூக்கினார்கள் என்பதை தமிழ்நாட்டு எந்த ராசாவும் மனசிலிருந்து மறந்து விடக்கூடாது என்பதையும் நான் தெளிவு படுத்தக்கடமைப்பட்டு இருக்கின்றேன் இருப்பினும் மறக்கின்றார்கள் இது தமிழ்நாட்டில் மட்டும் அதிக சதவீதமாக இருப்பதுதான் மேலும் வீழ்ச்சிக்கு காரணம்.

ஒவ்வொரு தலைவர்களும் பழையதை மறந்து விட்டு எவ்வளவு பகிரங்கமாக பொய் பேசுகின்றார்கள் காரணம் என்ன ? மக்களும் மறந்து விடுகின்றார்கள் என்பது அவர்களின் திண்ணமான எண்ணம் உண்மையும் அதுதானே... தமிழா முகத்தால் மட்டும் விழித்தால் போதாது இனியெனும் அகத்தால் விழி இல்லையேல் வீழ்ந்திடுவாய் குழியில்.

நட்பூக்களே... எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது என்று சொன்னேனே காரணம் தெரியுமா ? நான்தான் முதல்வர் என்று சொல்கின்ற அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஒன்றை மறந்து விட்டார்கள் அதை நான் இங்கு நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன் ஆம் இவர்கள் அனைவருமே ’’அபுதாபியில் ஒருவன் இருக்கின்றானே’’ என்பதை மறந்து விட்டார்கள் என்பதே ஆம் இதை மறந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது நட்பூக்களே...


முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நான் ஏற்கனவே சொல்லி இருந்த இரும்புக்குதிரை பதிவில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அல்ல அக்கப்போரானது என்று ஆகவே என்னை குறை சொல்ல மாட்டீர்கள் என்பதை இங்கு நினைவுறுத்த கடமைப்பட்டு இருக்கின்றேன் கில்லர்ஜி

வியாழன், ஏப்ரல் 14, 2016

Visa Renewal - تــــــجديد إقـــامــــــة

நட்பூக்களுக்கு... சித்திரை தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துகள்
கில்லர்ஜி
I need my visa renewal because I’m going to Immigration Office. I submit my Medical report with my photo after two days Rejected my application form again I’m going to Immigration Office I asked the Officer why they return my application ? Officer told me your photo is the problem. I shout at him officer what’s the problem with my photo?

He told me…

10

9

8

7

6

5

4

3

2

1

ஒம் மூஞ்சி சரியில்லை.

ச்சே ஸ்டூடியோக்காரன் செய்த வேலை அவமானமாப் போச்சே

சாம்பசிவம்-

அடடே பரவாயில்லையே, ங்கொய்யாலே உன்னைப்புடிச்சு ஸுருத்தாக் (Police) கிட்டே கொடுக்காம போனானே...