தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 30, 2017

பூர்வீகம் தேவகோட்டைசிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.

01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.

02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.

03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.

04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.

05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.

06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.

07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.

08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,

09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.

10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ? 

Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?

காணொளி

72 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா நீங்க ஒன்றும் ஜப்பான்காரரை விடக் குறைந்திடவில்லை கில்லர்ஜி:).. உங்கள் தேவகோட்டையின் புகழைப் பிடிச்சு நிறுத்தியிருக்கிறீங்க என்பது புலனாகுது.. அத்தோடு உங்கள் தலைமயிரின் ரகசியத்தையும் இதன் மூலம் அறிந்து கொண்டேன்..:).

  அந்த பெண் வீசிய மண் தொட்டிதானே இன்று நீங்கள் தொப்பி போடக் காரணம்?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. அட போங்கப்பா நீங்க ஒரு விசிட்டிங்க கார்ட்டை கொண்டு ஒரு பெண்ணை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிட முடியவில்லை உங்களுக்கு....ஹும் அந்த ஜப்பாங்காரன் எங்க இருக்கான் சொல்லுங்க அவன் மூலம் ஒருத்தரை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிடனும்.. ச்சே ச்சே நான் அதிராவை தள்ளிவிட பளான் பண்ணுறேன்னு தப்பா நினைக்காதீங்க

   நீக்கு
  2. //நீங்க ஒரு விசிட்டிங்க கார்ட்டை கொண்டு ஒரு பெண்ணை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிட முடியவில்லை உங்களுக்கு//

   ஹா.... ஹா... ஹா... அவங்கவங்களுக்கு அவங்கவங்க கவலை! அவங்க சீட்டுக்கட்டை வீசி தேம்ஸையே வற்றச் செய்துவிடுவார்கள்!!

   நீக்கு
  3. To கவிப்புயல்
   கண்டு பிடித்த ஸி.ஐ.டி-க்கு வாழ்த்துகள்.

   நீக்கு
  4. To மதுரைத்தமிழன்
   இல்லை நண்பரே நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்லும்போதுதான் நினைவு வருகிறது.

   நீக்கு
  5. To ஸ்ரீராம்
   ஸூப்பர் ஜி சரியாக சொன்னீர்கள்.

   நீக்கு
  6. மதுரை தள்ளீவிட முடியாது இப்ப அந்தப் பெண்ணை!! அது இப்ப புயலா இருக்குது!! விசிட்டிங்க் கார்டை ஃபூ நு ஊதி உங்க வீட்டுக்குள விழ வைச்சுரும்!!!! ஹா ஹா ஹா ஹா...

   கவிப்புயல் வந்து எனக்கு ஒரு பொக்கே கொடுக்கும் பாருங்க!!!

   கீதா

   நீக்கு
  7. இம்புட்டு தூரம் வந்தாச்சு.... இங்கனயே கமென்டும் போட்டுட்டுப் போயிடறோம்...கீழ வரை போகாம...நம்ம க்ளாஸ் பசங்க எல்லாம் என்னமா பூந்து விளையாடுவாங்க இதுல...

   என்ன கில்லர்ஜி ஏதோ புதுசு புதுசா சாதனை எல்லாம் செய்ய முயற்சி செய்யறீங்க...இதெல்லாம் நம்ம காலத்துக்கும் முந்தியே பசங்க செய்ததுதானே...வகுப்புல பசங்க சின்ன பேப்பரை ராக்கெட் மாதிரி செஞ்சு கரெக்ட்டா டீச்சர் தலைக் கொண்டை மீது டக்குனு செருகி நிக்க வைச்சருக்காங்க...இதெல்லாம் ஜுஜூபி!!!

   அதுவும் லவ் லெட்டரை இங்கிட்டுருந்து ராக்கெட்டா காதலி விட்டு அதுவும் காதலியோட ஜன்னல்ல போய் செருகி நிக்கறாமாதிரி விட்டுருக்காங்க....நீங்க இப்படி வாங்கிக்கட்டிக்கிட்டுருக்கிங்களே!!! அதுவும் கடைசில ஜெயிலுக்குப் போற அளவு...நம்ம பசங்க ஒரு ராக்கெட் விட்ட அதுலருந்து பல ராக்கெட் வெளிய பாஞ்சு வரது போல எல்லாம் விடுவாங்களாக்கும்!!

   நீக்கு
  8. ஸ்ரீராம் வத்த வைச்சா அவங்களுக்குக் குதிக்கறதுக்கு எங்க போவாங்க?!!! அப்புறம் புயல் இங்க நம்ம கூவத்துல வந்து குதிக்கும்...சும்மாருங்க...அப்புரம் கூவம் பொயிங்கிச்சுனா நாம இருக்கறது சென்னைலயாக்கும்....ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  9. ஸ்ரீராம் இல்லைனா தேவகோட்டைல போயி புயலைப் பொயிங்க சொல்லிடுவோம்...டைவேர்ட் பண்ணிருவோம்...

   கீதா

   நீக்கு
  10. வாங்க நம்மால முடிந்ததை செய்வோம்னு செய்தேன் அது கொலைப்பழியில் வந்து நிற்குது.

   நீக்கு
  11. தேவகோட்டையில் நிறைய ஊரணி இருக்கிறது கடலே வந்தாலும் தாங்கும்.

   நீக்கு
  12. சே சே சே ட்றுத் ... உங்களைப் போய்த் தப்பா எல்லாம் நினைக்க முடியுமோ... என் சி ஐ டி லிஸ்ட்ல முதல் பெயரே உங்களோடதுதான்:)..

   கீதாக்காக 4 பவுண்ட்ஸ் குடுத்து:) பொக்கே வாங்கி வந்தேன்ன்ன் ஆனா அதை தேம்ஸ்ல வீசிட்டேன்ன்ன்ன்.... ஒரு சுவீட் 16 கேள் ஐப்போய் பெண் எனச் சொன்னது கண்டு பொயிங்கிட்டேன்ன்ன்ன்:)..

   தேம்ஸை வத்த வைக்கும் ஐடியாச் சொன்ன ஸ்ரீராமையும் என் சி ஐ டி லிஸ்ட்ல பெயர் எழுதிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... இதுக்கு மேலயும் இங்கின நிண்டால்ல்ல்ல் ஆபத்து மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)..

   நீக்கு
 2. இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்.. உங்களைக் கைது பண்ணி உள்ளே வச்சாலும், சோர்ந்து போயிடாதீங்கோ:).. தேவகோட்டையின் புகழை ஜெயிலிலும் நிலை நாட்டுங்கோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஆமா அபுதாபியிலேயே நாட்டியபோது இந்தியாவில் முடியாதா என்ன ?

   நீக்கு
  2. ஹலோ சாம்பசிவம்....ரீகல் எங்கருக்கீங்க இந்தப் புயல் அங்கங்க போறதுனால் மறந்துருச்சு போல ஏற்கனவே தேவைக்கோட்டை புகழ் ஜெயில்ல நிலை நாட்டியாச்சு அதுவும் பதிவுல கூட வந்துச்சுனு...ரீகல் ரொம்பவே ஃப்ளாட் ஆயிட்டாரோ அதான் காணலை!! இல்லைனா வந்து ஒரு பதம் பாத்திருப்பாரே!!

   கீதா

   நீக்கு
  3. ஹலோ கீதா.. ச்றீ சிவசம்போ அங்கிள் வந்திருக்கிறாரே.. ஆனா அசிங்கமாப் பேசுறார் அதனால அவரை நான் கவனிக்கல்ல கர்ர்ர்ர்:)...

   என்னாதூஊஉ ஓல்ரெடி ..... ஜெ... யில்...???... அப்போ பழகிடுச்சா.. இது 2ம் தடவையாஆஅ ஜொல்லவே இல்ல:).. கப்பங் களி ரேஸ்ட் பிடிச்சுப்போச்சுப் போல:)...

   நீக்கு
 3. சாம்பார் வாளி மேட்டரில் மட்டும்தான் கொஞ்சம் தவறு நேர்ந்துடிச்சி அது காலி வாளியா ?
  மற்றபடி நீங்க செஞ்சதெல்லாம் சரிதான் .முயற்சி திரு வினையாக்கும் விடாம ட்ரை பண்ணுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சியை ''ஊக்கு''வித்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. அட்டெண்டன்ஸ்....மொபைலில் இருந்து....அப்புறமா வரோம்....நாடு ராத்திரி பேய் உலவும் நேரத்தில் பதிவு போட்டா....புயல் தான் பர்ஸ்ட்ன்ஓஊனு சொல்லும்..ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்காக கவிப்புயல் அதிராவை இப்படி சொல்வது கொஞ்சம்கூட நல்லாயில்லை

   நீக்கு
  2. அடடா வழமையா தேம்ஸ் கரையிலதான் வட்ட வட்டமாப் புகை வரும்:).. இப்போ கூவக்கரையிலும் புகை விட ஆரம்பிச்சுட்டுதே:)...
   ஆஅங்ங் அப்பூடிச் சொல்லுங்கோ கில்லர்ஜி... இதுக்காகவெ தேம்ஸ் இன் கிழக்குப் பகுதியைக் குத்தகைக்கு விட்டு உங்களை பெயிலில் எடுக்கிறேன்ன்ன்:)...

   நீக்கு
  3. நன்றி அந்தப்பணத்தை இப்பொழுதே அனுப்பி வைங்களேன்.

   நீக்கு
 5. என்னென்னவோ சோதனைகள் செய்து, என்னென்னவோ சாதனைகள் செய்கிறார்கள். சினிமாவில் மெஷின் கன்னுடன் நிற்கும் வில்லனைக் கூட தமிழ்ப்பட ஹீரோக்கள் இப்படி சீட்டெறிந்து வில்லன் தலையைக் கொய்யலாம்!

  காணொளி கண்டு நீங்கள் புரிந்த சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வாயடைத்து நின்றிருக்கிறேன். (கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளவா?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு நல்ல யோசனை கொடுத்தீர்கள் ஜி

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்....இதென்ன சாதனை...கில்லர்ஜிய பேப்பர் ராக்கெட்...அதுவும் கரெக்டா ...சரி வேண்டாம் விடுங்க பாவம் ஏற்கனவே ஜெயில்ல இருக்காரு...ஹிஹிஹி...சாம்பசிவம் இன்னும் வரலியே...ரீகல் வந்துட்டாரு போல..

   கீதா

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர் கீதா... இன்னும் மாமி வீட்டுக்குள் போகல்ல கில்லர்ஜி.... சங்கிலியோடு பொலிஸ் சேஜ்ஜிங்காம்ம்ம்ம்ம்ம்:)... ஹையோ அது கழுத்துச் சங்கிலி அல்ல:)

   நீக்கு
  4. எல்லோரும் சேர்ந்து உள்ளே அனுப்பிடுவீங்க போலயே...

   நீக்கு
 6. ஹாஹா எத்தனை முயற்சி! தொடரட்டும் முயற்சி! :))))

  பதிலளிநீக்கு
 7. உங்களது முயற்சி சற்று பயம் தருவதாகவே அமைந்துவிட்டதே, கடைசியில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே கோடரி சற்று குறி தவறி விட்டது வேறொன்றுமில்லை.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வருக சகோ சிரிச்சுக்கிட்டே இருங்க....

   நீக்கு
 9. நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. "அபுதாபி" மேட்டரை எடுத்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரைவில் அவுத்து விடுவோம்.

   நீக்கு
  2. என்னாதூஊஊஊ அபுதாபி மட்டராஆஆ.. அப்படியும் ஒண்டிருகோஓஒ... ஹா ஹா மீ வெயிட்டிங்...

   நீக்கு
  3. எல்லோரும் இப்படியே எழுதுவதை பார்த்தால் நான் என்னமோ அபுதாபியில் ஜெயிலில் கிடந்ததுபோல ஜொள்ளுறீங்க...

   நீக்கு
  4. நேற்று உங்க பேரை தமிழ்ல எழுதினாலும் எழுதினேன், கொலை, ஜெயில்னு அதிலேயே ஓடுதே..... ஆமாம் இந்தப் பேரை எப்படி வச்சிக்கிட்டீங்க?

   நீக்கு
  5. வாங்க நண்பரே இதென்ன புது கேள்வி ?
   நம்ம பெயரை நாமலா வைக்க முடியும் முந்தைய பதிவு "நான் சொல்வதெல்லாம் உண்மை" அதில்கூட எனது ஐயா சொன்னாரே...

   உனக்கு போயி கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு கில்லர்ஜி كيللرجي Killergee കില്ലർജി அப்படினு பேரு வச்சேனே... என்று.

   நீக்கு
 10. நல்ல காலம் எங்களை எல்லாம் நிக்க வைச்சு எங்க தலைல படாம என் கோடரி போகும் பாருங்கனு டெஸ்ட் பண்ணாம இருந்தீங்களே!!!! ஹ ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கு பதிவர் சந்திப்பில் வைத்துக் கொள்ளலாம்

   நீக்கு
 11. எனக்கு கான மயிலாடபாட்டு நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நல்ல பாட்டுதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அன்பின் ஜி..

  இந்த சாதனைக்கு எல்லாம் பரிசுத் தொகை பண முடிப்பு ஒன்னும் கொடுக்கலையா!..

  கொடுத்தாங்களே!..
  அதெல்லாம் இந்த - புயலடிச்ச நிவாரணம்
  ஜேம்சு ஊரணியில தூர் வாரிய நிவாரணம்
  புண்ணாக்கு வித்து போண்டியாப் போன நிவாரணம்
  கிட்னிய வித்து சட்னி வாங்கி இட்லி தின்ன நிவாரணம்
  இதுக்கெல்லாம் வெச்சுக்குங்க..ன்னு கொடுத்திட்டேன்..

  ஆகா!..

  எங்கள் ஓட்டு தேகோ ஜீக்கே!..
  எங்கள் ஓட்டு கில்லர் ஜீக்கே!..

  எங்கள் சின்னம் கோடாலி!..
  உங்கள் சின்னம் கோடாலி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆஹா ஸூப்பர் இதுபோதும் இதை வைத்தே நான் ஆச்சியை பிடிப்பேன்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா என்ன கில்லர்ஜி பக்கத்து வீட்டு ஆச்சியையா?:)... விமலின் படத்தில அஞ்சலியின் ஆயாவை கையைப் பிடிச்சு சூரியோடு சேர்ந்து இழுத்த கட்டம் நினைவுக்கு வருது:)...

   பாட்டுப்பாடிய குற்றத்துக்காக துரை அண்ணனும் சாட்டிக் கூண்டில் ஏற வேண்டி வரப்போகுதே:)... இதுக்கெல்லாம் என்னால தேம்ஸ் ஐக் குத்தகைக்கு விட்டு செலவு பண்ண முடியாதூஊ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)...

   நீக்கு
  3. துரை ஜி கையெழுத்து போடாமல் கூவத்தை குத்தகைக்கு விட முடிமான்னேன்...

   நீக்கு
 13. அதானே ஜி அவன் யாரு ஜப்பான்காரன் பெரிய பிஸ்தாவா தேவகோட்டை பெருமை தெரியாம வித்தை காமிக்கிறான் ஜி உங்க சாதனைகளை நீங்களும் வீடியோ எடுத்து போட்டு உலகையே திரும்பி பார்க்க வச்சியிருக்கணும் அடுத்தடவை மறக்காம வீடியோ எடுத்திருங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா காணொளி எடுக்க மறந்து விட்டதே... அடுத்த சாதனையை காணொளி எடுப்பேன்.

   நீக்கு
 14. அப்புறம் ஜி பன்ச் டைலாக்கும் சொல்லிடுங்க அப்படியே கடைசியில 'சாதனைக்கே நாங்க வேப்பைன்ஸை யூஸ் பண்ணறவங்க கோபப்பட்டா ஹா ஹா'

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரைட்டு ஏதோ நடக்குது ஜேம்ஸ் ஊரணி அதிபரின் திட்டத்தோடு...

   நீக்கு
 15. பலூன் உடைக்கப் போய்
  போகஸ் லைட்டைப் பதம் பார்க்க
  புறப்பட்ட கல்லைப் பாராட்டலாம்!

  சிறந்த கலை வண்ணம்
  பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 16. தேவகோட்டையிலிருந்து போயி சப்பானில் வாழுகிறவர் அறிவோ..அல்லது அபுதாயிலிருந்து பணி முடித்து தேவகோட்டையில் செட்டில் ஆகி இருக்கிற கில்லரின் திறமையோ எனக்கு சுட்டு போட்டாலும் வராதுங்க.... எனக்கு இருக்கவே இருக்கு..போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மனம் போதும் நண்பரே நாட்டையே ஆளும் நிலை வரும் உங்களுக்கு...

   நீக்கு
 17. வரவர பதிவுலகம் படுகுழி நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நிறைய பதிவர்கள் முகநூலில் மூழ்கி விட்டனர் இதற்கு என்ன செய்ய முடியும் ?

   நீக்கு
 18. மாத்தி யோசிக்கும் உங்கள் திறனை மெச்சுகிறேன். சீட்டு கட்டில் உங்க படத்தை வைத்ததுதான் வைத்தீர்கள் ராஜாவுக்கு பதிலாக வைக்காமல், ராணிக்கு பதிலாக வைத்தது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இப்படியெல்லாம் கவனமாக இருக்கீங்களே... நான் முதலிலேயே Q வை K யாக மாற்றி எல்லா நம்பரையும் எடிட் செய்து இருக்கணும்.

   நீக்கு
 19. உங்க ரூட் வேற என்று எங்களுக்குதானே தெரியும். ஜப்பான் காரனுக்கு தெரியாதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா நீங்களாவது புரிந்து வைத்து இருக்கின்றீர்களே... நன்றி

   நீக்கு
 20. நல்வ நகைச்சுவை முயற்சி.
  வாழ்த்துகள் சகோதரா.
  இரசித்தேன்.
  https://kovaikkothai.wordpress.com/
  tamil manam -16
  well come tomy site..link is here
  Thank you

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மிக்க நன்றி எனது மின்னஞ்சல் முகவரி தந்துள்ளேன்

   நீக்கு