தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 19, 2016

என் நூல் அகம் 5


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே ! இவ்வளவு காலம் கடந்த பிறகா விமர்சனம் எழுதுகின்றாய் என்று யாரும் கோபித்தல் கூடாது காரணம் புறப்படும் பொழுது சென்னையில் புத்தக மூடை கை மாறி விட்டது  மீண்டும் என் கையில் கிடைக்க நம்பிக்கையான கை வேண்டுமே ஆகவே தாமதம் இதை Too late என்று சொல்வதைவிட Too too too late என்றே சொல்லலாம் அதுவொரு பெரிய கதை அதை விலாவாரியாக எழுதினால் விலா எலும்பு புட்டுக்கிட்டு அதுவே 4 பதிவாகி விடும் ஆகவே வேண்டாமே..

 

இந்நூல் ஆசிரியர் எதிர்கால மாணவச் செல்வங்களின் படிப்பறிவை உயர்த்திச் சொசெல்லும் வகைகளில் 18 பொருளடக்கங்களாக பிரித்து வைத்துள்ளார் ஒவ்வொரு படியும் வாழ்வின் உயர் நிலையை தொடுவதற்கான படிகள் போலவே தோன்றுகிறது (பதினெட்டாம்படி என்று சொன்னதாக நினைவில் கொண்டால் இதற்கு நான் பொறுப்பல்ல) நிச்சயமாக இதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும் இன்றைய அரசு மட்டுமல்ல என்றைய அரசும் மக்களின் நலத்தைவிட தன் மக்களின் நலத்தையே சுவனத்தில் வைத்து கொள்கின்றது இந்நூலின் ஆசிரியர் ஒரு பாராவில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே ! என்கிறார் தலைப்பும் இதுவே தலைப்பையே நான் 3 தினங்களாக பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றால் பாருங்களேன் தலைப்பு ஒருவித குழப்பத்தை உண்டு பண்ணவே செய்யும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்றனர் ஆம் தலைப்பை மட்டும் படித்தால் அப்படித்தானே தோன்றும் தலைப்பிற்குள் தலையை விட்டு நுகர்ந்தால் அனைத்தும் விளங்கும் இதில் வரும் ஒவ்வொரு வரிகளும் அனைவரது நடைமுறை வாழ்விலும் ஒன்றிய விடயங்களே ஓரிடத்தில் நூலின் ஆசிரியருக்கும், நண்பருக்கும் உரையாடல் நண்பர் சொல்கின்றார்.

நான் 37 ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ 60,000 ஆயிரத்தை, என் மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்.
ஆஹா இதுவல்லவா மகிழ்ச்சி.
ச்சு அட போங்க சார், வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முந்தியே வாழ்ந்து முடிச்சிடுறாங்கே சார் பெரியபடிப்பு, கைநிறைய சம்பளம் ஆனால் வாழ்க்கைனா என்னன்னே தெரியலை சார்.
உண்மைதானே வாழ்க்கைனா என்னன்னு தெரியவில்லையே சமீபத்திய அபுதாபியில் நிகழ்ந்த நிகழ்வு என்னைவிட 8 மடங்கு படிப்பும், என்னைவிட 5 மடங்கு சம்பளமும் பெரும் 2 மேதாவிகள் சமீபத்திய சர்ச்சையான பீப் பாடலுக்கு ஆதரவாக பேச நான் எதிர்த்துப்பேச அந்த மேதாவிகளுக்கு ஆதரவாக 2 அல்லக்கைகள் அவ்வளவு படித்திருந்தும் அந்த மேதாவிகளால் எனது கேள்விகளுக்கு பதில் தர முடியவில்லை கைகலப்பின்றி முற்றுப் பெற்றது வாதம் இவங்கே என்னத்தை படிச்சு தாலியைப் போட்டு அறுத்தாங்கே ? வாழ்வியல் யதார்த்தம் தெரியவில்லையே இவர்கள்தான் நாளைய மன்னர்களா ? இவர்களுக்கு வாழ்க்கை அறிவைப் புகட்டாத கல்வித்துறைதானே காரணம் கல்வித்துறையை நிர்வகிக்கும் அரசுதானே காரணம், அந்த அரசை தேர்ந்தெடுத்த நாம்தானே காரணம் நூலைக் குறித்து எழுத வந்தவன் அரசியலில் நுழைந்து விட்டேனே ?

கல்வித்துறைகளைக் குறித்து எதிர்கால உரத்த சிந்தனையுடன் இவர் எழுப்பியுள்ள கேள்விகணைகள் ஏராளம் பதில் சொல்வார் யாருமில்லை அரசுதான் சொல்ல வேண்டும் சொல்ல மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது இந்தக் கேள்விகளுக்குள் ஒவ்வொரு மனிதரும் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றோம் ஆனால் ? பொறுப்பற்று போகிறோம் இதுதான் நடைமுறையின் யதார்தமான உண்மை.
// எல்லாம் இலவசமாக கிடைக்கும் தமிழருக்கு கல்வியும், மருத்துவமும் மட்டும்தானே எட்டாக்கனியாகி விட்டது //
எத்தனை சவுக்கடியான கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் வலிக்க வேண்டும் எனக்கு வலிக்கின்றது காரணம் நானும் இந்த சமூகத்து அங்கதினர்தானே இந்த அவலத்துக்கு காரணிகளில் நானும் ஒருவனாகி விட்டேனே
// எல்லா இலவசங்களையும் நிறுத்தி விட்டு உயர் கல்வியும், நல்ல மருத்துவமும் இலவசம் என்று செயல்படுமானால் அதுவல்லவா புரட்சிகரமான அரசு //
ஆஹா அற்புதமான விடையும் சொல்லி விட்டாரே... இதை அரசு கேட்குமா ? ஊமையன் சொல்வது செவிடனுக்கு கேட்காதே... ஆனால் ? செவிடான காதை மருத்துவரிடம் சென்று பழுது நீக்கி நாம் மீண்டும் கேட்க வைத்து விடுகின்றோமே அதைப்போல, அந்த மருத்துவரைப்போல நாமும் பழுது நீக்கிப்பார்க்கலாமே அதற்கான சந்தர்ப்பம்கூட இதோ கூடி வருகின்றதே.... அதற்கு பெயர்தான் தேர்தலாமே... பார்ப்போமா ? பழுது ? நூலைக் குறித்து எழுத வந்தவன் சாக்கடைக்குள் நுழைந்து விட்டேனே ?

வேண்டாம் வந்த வேலைக்கு செல்கிறேன் குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் பொதுநலம் மறந்த சுயநல ஆட்சியாளர்களின் பந்தாடல் எவ்வளவு தூரம் விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் இழிநிலையை கையாண்டு இருப்பதை விலாவாரியாக அழகாக விவரித்து இருக்கின்றார் உண்மையிலேயே நான் இந்நூலில்தான் இவ்வளவு விபரங்களை அறிந்திருக்கின்றேன் பள்ளிப்படிப்பை நாற்பதாம் வகுப்போடு SORRY நான்காம் வகுப்போடு நிறுத்திய பிறகு மருந்துக்குகூட பாடநூலை எடுத்து படித்துப் பார்க்கும் அறியாமைவாதியாய் நான் இருந்திருக்கின்றேன் என்பதை நினைத்து இன்று வெட்கப்படுகிறேன் இந்த தவறுக்கு காரணம் என் குழந்தைகள் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதும் தவறே இருப்பினும் காரணம் என் குழந்தைகளே ஆம் அவர்கள் தொடக்கம் முதலே முதல் மதிப்பெண் எடுத்த மகனே/ளே இதன் காரணமாக அவர்களை தட்டிக் கேட்கும் சந்தர்ப்பம் இன்றி தட்டிக் கொடுத்தே காலத்தை கடந்து வந்து விட்டேன்.

ஒரு இடத்தில் அரிச்சந்திரன் கதையையும் இழுத்து இருக்கின்றார் வாய்மையை காப்பாற்றுவதற்காக விஸ்வாமித்ரருடன் வழக்காகி நாட்டையும், மனைவி, மக்களையும் இழந்தது தவறென்றே தோன்றுகிறது விசு என்ன சாதாரணப்பட்ட ஆளா ? அகம்பாவம் உள்ள மனிதர் என்றே என் சிற்றறிவுக்கு 8கிறது ஆம் இவர்களில் யார் வெற்றி பெறுவது என்பதற்காக நாட்டு மக்கள் துயரப்பட வேண்டுமா ? இந்த இடத்தில் நான் காந்திஜியை நினைவு கூர்கின்றேன் //ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லலாம்// என்ற காந்திஜி உயர்ந்து விட்டாரே... அப்படியானால் நாட்டு மக்களை எல்லாம் காப்பாற்ற வாய்மை மீறுவதில் தவறென்ன ? ஒருவேளை காந்திஜி சொன்னது அரிச்சந்திரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை சரி இந்த கதைகள் எல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள்தானே நமது ஆட்சியாளர்கள் இவர்கள் ஏன் ? வாய்மை மீறிக்கொண்டே........... வாழ்கின்றார்கள் 

இந்த மாதிரி பொறுப்பற்ற மானி(ட்)டர்களை தேர்ந்தெடுத்தது மக்களின் குற்றமே புராணக்கதை என்பதால் அதனுள் ஊடுறுவி தவறைக்கண்டு பிடிப்பது தவறா ? இதேபோல்தான் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பிள்ளையாரை பெரியப்பா என்று சொல்ல வேண்டும் என்று குருந்தன் வாத்தியார் சொல்ல, அப்படியானால் ? முருகன் சித்தப்பாவா ? என்று கேட்டதுக்கு ‘’சட்டீர்’’ என்று விட்டாரே அது தவறில்லையா ? இந்த தடவை வெக்கேஷன் போய் வச்சுக்கிறேன் இந்த மா3யான கதைகளை கேட்டு, கேட்டு எதிர் சிந்தனையில்லாமல் அதன் வம்சா வழியில் வந்த நாமும் இன்றுவரை அவ்வகையான ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்கின்றோம் நூலைக் குறித்து எழுத வந்தவன் வாய்ச்சொல் வீரர்களைப்பற்றி எழுதி விட்டேனே ?  

 கவிஞர் சொல்வது போல தனது சொந்தப் பிரச்சினைக்காக கண்ணகி மதுரையை எரித்தது முறையா ? இதில் எவ்வளவு மக்கள் வீடு வாசலை இழந்திருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் இதில் எனது மூதாதையர்கள்கூட பாதிக்கப்பட்டு இருக்கலாமே இதற்கான நஷ்ட ஈட்டை அவர்களின் சந்ததியினரான எனக்கு இந்த மோடி அரசால் தரமுடியுமா ? வாழையடி வாழையாக பத்தினியாக கண்ணகியை மட்டுமே சொல்கின்றார்களே என்றும் ஆதங்கப்படுகின்றார் இதில் எனக்கும் ஐயம் உண்டு அதற்கு பிறகு இப்பூமியில் யாருமே இல்லையா ? என்பதே அது என்னைக் கேட்டால் நான் காணாத கண்ணகியைவிட கண்டு கண்காணித்துக் கொண்டே ஆத்மார்த்தமாய், ஆதாரமாய் வாழ்ந்திருந்து 2001-ல் மறைந்த என்னவளைச் சொல்வேன் இதற்கு என் மனசாட்சி ஆதாரம் மேலும் என் குடும்பத்து பெண்களையும் சொல்வேனே... அதற்காக கண்ணகி பத்தினி என்பதில் உடன்பாடு இல்லாதவன் என்றும் அர்த்தமல்ல !

இதைப்போல ஒவ்வொரு மனிதருக்கும் நபர்கள் வேறு படலாம் சிலர் காங்கிரஸ் தியாகி திருமதி. குஷ்புவை சொல்லலாம் நாளை திருநெல்வேலியில் கோயில் கட்ட இருக்கும் செல்வி. நமீதாவை சொல்லலாம் காரணம் கண்ணகிக்கு கோயில் கட்டியதைப் போலத்தானே குஷ்புவுக்கும், நமீதாவுக்கும் கட்டினார்கள் கோயில் கட்டிய மாவீரர்கள் இப்படிச் சொல்வதுதானே மரபு நூலைக் குறித்து எழுத வந்தவன் கூத்தாடி சிறுக்கிகளைப்பற்றி எழுதி விட்டேனே ?

ஒரு பாராவில் ‘’மனப்பாடப்பகுதியின் 8 வரியைச் சொல்ல முடியாமல் பல நாள் தடுமாறிய மாணவன் ஒருவன், பள்ளி ஆண்டு விழாப் பாட்டுப் போட்டியில் 80 வரிகளைக் கொண்ட யுத்தம் இல்லா உலகம் கேட்டேன் எனும் திரைப்பாடலை முழுமையாகப் பாடிப் பரிசு பெறும் நிகழ்வுகள் ஏராளம்’’ என்றும் பொதுநலக் கவலை கொள்கின்றார் கடைசி சில பகுதிகளில் தனது மாணவர்களை அவர்களது வீட்டில் சந்தித்த விபரங்களை சொல்லி இருக்கின்றார் நிறைவில் தமிழ் வளர்ச்சிக்கான நிறைய விடயங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் அழகாக விளக்கி இருக்கின்றார் இந்நூல் ஒரு சமூக தொலைநோக்குப் பார்வையுடன் செதுக்கப்பட்டு இருக்கின்றது என்றே சொல்வேன் சராசரி பெற்றோர்களைவிட தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமான்களும் கல்வித்துறை சம்மந்தப்பட்ட அறிஞர்களும் அவசியம் படிக்க வேண்டும் என்பது எனது கருத்து 

என் அன்புச் செல்வங்களுக்கு இதுவரை நான் எந்த நூலும் படிக்கச் சொல்லி கொடுத்ததில்லை காரணம் அவர்களுக்கு முன் நான் படிக்காதவன் என்ற தாழ்வு மனப்பான்மை படிப்பை முடித்து விட்ட என் மகனுக்கும், படிப்பை முடிக்கப் போகும் என் மகளுக்கும் இதை படிக்கச்சொல்வது எனது கடமை என்றே கருதுகின்றேன் காரணம் நாளைய சந்ததிகளை உருவாக்கப் போகும் கூட்டத்தில் என் அன்புச் செல்வங்களும் உண்டுதானே.

இதற்கு மேலும் எழுதினால் தனது நூலை முழுவதும் Copy to Paste செய்து எனது தளத்தில் போட்டு விட்டேன் என்று கவிஞர் சண்டைக்கு வந்தாலும் வருவாரோ என்று அஞ்சி இத்துடன் முடித்துக் கொண்டு நான் போறேன் அடுத்த நூலைப் படிக்க..

 
எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...


தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

58 கருத்துகள்:

  1. நிறைந்த விவரங்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் விமரிசனம் கண்டபின் புத்தகத்தை படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு தமிழனின் ஆதங்கத்தை விவரித்திருக்கின்றீர்கள்! மா(ற்)ற வேண்டும்... பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

      நீக்கு
  3. உங்கள் பாணியிலான நூல்அறிமுகத்தை ரசித்தேன் நண்பரே! இந்தநூல் இதுவரை சென்னை, கம்பம், ஈரோடு என மூன்று முதல்பரிசுகளைப் பெற்றுவிட்டது. எனது இன்னொரு நூலான “கம்பன் தமிழும் கணினித் தமிழும்” திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றிருக்கும் செய்தி வந்த சிலநாளில் உங்களின் இந்த மதிப்புரைவிருதும் கிடைத்தது குறித்து நெகிழ்ந்து, மகிழ்ந்தேன். தங்கள் பிள்ளைகளின் முகவரியை (தனிமின்னஞ்சலில்) தெரிவியுங்கள், நான் இங்கிருந்தே அனுப்புவது எளிது. உங்களிடமிருக்கும் நூலை அங்கிருக்கும் நண்பர்களிடம் கொடுங்கள் (எப்படி பண்டமாற்று?)நன்றி. த.ம.கூடுதல்1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கு நன்றி நல்லது கண்டிப்பாக அனுப்புகிறேன் ''கம்பன் தமிழும் கணினித் தமிழும்'' படித்துக்கொண்டு இருக்கிறேன்

      நீக்கு
  4. அருமை நண்பரே, தெளிவான விமர்சனம். எனக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகம் உண்டு. அதைவிட்டு கல்வியை கல்விக் கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, கொள்ளையர்கள் கையில் இருக்க வேண்டிய மதுவை அரசு எடுத்துக் கொண்டது. எல்லாம் கலிகாலம். அருமையான நூலை எழுதிய கவிஞர் அய்யாவுக்கும் அதனை அழகாக விமர்சனம் செய்த தங்களுக்கும் நன்றி நண்பரே!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆதங்கமும் நியாயமானதே, வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. நல்ல நூலைப் பற்றிய விமர்சனம் கில்லர்ஜி! அருமை!

    நமது தமிழ்த்திருநாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் கல்வி முறையில் மாற்றம் இருக்கப் போவதில்லை. ஏற்கனவே பல பினாமிகள் பழம் தின்றுக் கொட்டையும் போட்டுவிட்டார்கள். அதை வேரோடு அறுக்க பல வருடங்கள் எடுக்கலாம். இல்லை என்றால் புரட்சி வர வேண்டும். அப்படிப்பட்ட மக்களோ, ஆட்சியாளர்களோ இப்போதைக்குக் கண்களில் படவில்லை. கல்வியிலும், மருத்துவத்திலும் முத்துநிலவன் ஐயா/அண்ணா சொல்லியிருப்பது போல் அரசு பொதுநலம் கருதி தன் கீழ்க் கொண்டுவந்து இலவசமாக அதுவும் தரமாக வழங்கினால் மட்டுமே நம் நாடு உருப்படும். இல்லையேல் தனியார்களுக்குக் கொண்டாட்டம்தான். பிரிட்டனில் மருத்துவம் இலவசம். கனடாவிலும் அரசின் கீழ். பிரிட்டனில் வீட்டிற்கு வந்து விடும் நமது அடுத்த பரிசோதனைகள் பற்றி எல்லாம்...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்

    நூல் அருமை. வாசிக்க வேண்டும் என்ற பட்டியலில் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அரசு ஒருக்காலும் பொதுநலம் கருதாது மக்களின் மனதில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை வாழ்வில் ஏற்றமில்லை.

      நீக்கு
  6. அன்புள்ள ஜி,

    அய்யா அவர்களின் ’முதல் மதிப்பு எடுக்கவேண்டாம் மகளே...!’

    நூல் பற்றிய விமர்சனம் நன்று.

    நன்றி.

    த.ம.7

    பதிலளிநீக்கு
  7. நூலை அருமையாய் விமர்சித்து இருக்கிறீர்கள். மருத்துவமும், கல்வியும் அவசியம் இலவசமாக் கிடைக்க வேண்டும் தான். அது தான் முக்கியமான ஒன்று. த்ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  8. நல்ல விமர்சனம் தோழர்
    தம+

    பதிலளிநீக்கு
  9. தகவலுக்கும் பகிர்வுக்கும்..நல் விமர்சனத்துக்கும் ...தங்கள் மூலம் நூலை வாங்காமல் நானும் படித்துவிட்டேன் நன்றி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  10. கவிஞர் ஐயா அவர்கள் நூலினை வழங்க,
    தாங்கள் பெற்றுக் கொண்ட காட்சி கண் முன்னே நிற்கிறது நண்பரே
    விமர்சனம் அருமை
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. சிறப்பானதோர் வாசிப்பனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. அருமை கில்லர்ஜி...உங்கள் கைவண்ணம் மணக்கும் பதிவு கட்டிப்போடுகிறது இதயத்தை..நேரே படித்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் அவலங்களை எந்த தொலைதூரக்கல்வி உங்களுக்கு கற்றுத்தருகிறது? பற்களுக்கும் சுளுக்கெடுக்கும் நகைச்சுவை
    சொற்களுக்கும் புதுத்தையல் போட்ட ஆடைகள்...


    தேவகோட்டையே.,உங்கள் எழுத்துகளின் தேரினை இன்னும் செலுத்துங்கள்...காத்திருக்கிறது...ராஜபாட்டையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கருத்துரையே கவிதை போன்று இருக்கின்றதே...

      நீக்கு
  13. நல்ல வேளை,நம் காலத்தில் கண்ணகி இல்லாமல் போனது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. நன்றாக இருக்கிறது நண்பரே! ஐயா அவர்களின் இந்த நூலைப் பற்றி மீண்டும் மீண்டும் பலரும் பரிந்துரைக்கப் பார்க்கிறேன். மிகச் சிறப்பான நூலாக இருக்கும் போல. வாய்ப்புக் கிடைக்கும்பொழுது நானும் வாங்கிப் படிக்கிறேன்.

    கடைசியில், பிள்ளைகளுக்கு இந்த நூலைப் படிக்கச் சொல்லிக் கொடுத்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தது கண்டு மகிழ்ந்தேன். அடுத்த தலைமுறைக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தத்தானே தலையால் தண்ணீர் குடிக்கிறோம்! அதற்கான உங்கள் முயற்சி வெல்லட்டும்! இந்த ஒரு நூலைப் படித்துவிட்டு மென்மேலும் நூல்கள் படிக்க அவர்களுக்கு ஆர்வம் ஊறட்டும்! தம்பிக்கும் தங்கைக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நமது எழுத்துகளும் நாளைய சந்ததிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. கவிஞரின் நூலை தங்கள் பாணியில் அருமையாக திறனாய்வு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி

      நீக்கு
  16. பொறுமையாக, நிதானமாகப்படித்துள்ளீர்கள் என்பதை தங்களது விமர்சனம் நிரூபிக்கிறது. எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  17. அருமையான நூல் அறிமுகம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. அருமையான நூல் . கவிஞர் அவர்களுடன் நட்பு கிடைத்ததற்கும் இந்த நூல் ஒரு காரணம். இதை முதன் முதலில் இணையத்தில் படித்தபோது படிமண்ட்ரப் பேச்சாளராக மட்டும் அறிந்திருந்த அவரது பிரம்மாண்டமான மாற்றுப் பரிமாணங்களை அறிய முடிந்தது. நூல் வடிவிலும் படித்து விட்டேன்.பெற்றோராய் ஆசிரியராய் தேர்ந்த கல்வியாளராய் சமூக அக்கறையுடன் அவர் முன்வைத்த கருத்துக்கள் பாடத்திட்ட வடிவமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவை
    நூலைப் பற்றி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற விடயத்தை எழுத கொஞ்சம் யோசித்தேன் பிறகு நிறுத்தி விட்டேன் உண்மையே பாடப் புத்தகத்துக்கான நிறைய விடயங்கள் உள்ளது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. நல்ல விமர்சனம் - அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  20. உங்க நூல் விமர்சனம் மேம்போக்காக படிக்கும் ஆள் இல்லை என்பதை காட்டியிருக்கு. அப்படி அலசி ஆராய்ந்திருக்கிறீங்க.நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மையும் மதித்து பரிசு கொடுத்தவர்களுக்கு நாம் கைமாறு செய்வதுதானே மரபு வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  21. அனைவருக்கும் கல்வி கிடைத்துவிட்டால் முதலுக்கே மோசம் ஆகிவிடுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு நண்பா அரசியல்வாதிகளுக்கா ?

      நீக்கு
  22. இந்தப்பதிவு இத்தனை பின்னூட்டங்கள் தாண்டியும் கவனிக்காமல் இருந்திருக்கின்றேனே?

    மனமார மன்னித்து விடுங்கள் சார்.

    தலைப்பு யோசிக்க வைத்தால் உள்ளிருக்கும் விபரங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றதே!

    நிஜம் தான் இக்காலகல்வி முறையில் இளைஞர்களுக்க்கு வாழ்க்கையெனும் அனுபவம் கிடைக்கும் முன் பணத்தினை அள்ளிக்கொட்டுவதால் வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் அறிய முடியாமல் போவது துரதீஷ்டம். உலக அறிவினையும் , வாழ்க்கைப்பாடத்தினையும் தேடி கற்ற காலம் போய் உலகில் என்ன நடக்கின்றது என அறியாமலே தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அதனுள் தான் எனும் சுழலில் சிக்கி கிடக்கும் கூட்டமாய் இக்கால இளைஞர்கள்.

    இலவசங்களை நிறுத்தி மருத்துவமும்,கல்வியும் இலவசமாக்கினால் நிஜமாகவே நாட்டுக்கும் நம் வீட்டுக்கும் நல்லது தான். யார் கேட்பது?

    மதுரையை எரித்த கண்ணகி? அட இப்படி கூட இருக்கின்றதே! யாருமே இப்படி கேள்வி எழுப்பவில்லையே...!

    பொய்மையும் வாய்மை.... சரிதான். நல்லது நடக்குமெனில் சரியே தான்.

    விமர்சனமே புத்தகத்தின் அருமை பெருமைகளை அள்ளித்தெளிப்பதால் அப்புத்தகத்தினை வாங்கி படி படி என சொல்ல வைக்கின்றது. இந்தியா வரும் போது எனக்கும் ஒரு பிரதி வாங்கி அனுப்பி விடுங்கள்.

    வித்தியாசமான சிந்தனைகளோடு காலத்துக்கு ஏற்ப மாற சொல்லும் நல்லதொரு புத்தக அறிமுகத்துக்காகவும் நன்றி. முழுமையாக படித்து கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் அதற்கு பாராட்டுகள்.

    நேற்று நான் ஒன்று சொல்வேன் தளத்திலும் ஒரு விமர்சனம் படித்தேன் . அசத்தல் தான்.
    முத்து நிலவன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பிரமாண்டமான அலசல் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி

      நீக்கு
  23. வணக்கம்
    ஜி
    தங்களின் பார்வையில் நூல் பற்றிய விமர்சனம் சிறப்பு வாழ்த்துக்கள் ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜி !
    காலதாமதத்திற்கு வருந்துகிறேன் !

    ஒருநூலின் விமர்சனம் எழுதுவதற்கு அந்தநூலை எவ்வளவுக்கு அறிந்துகொள்ளணுமோ அதைவிட அதிகம் அறிந்தவனால்தான் இவ்வாறு எழுத எழுத முடியும் ஆதலால் அந்த நூலின் தாக்கம் உங்களில் இவ்வளவு ஆணித்தரமாக எழுகிறது !

    தொடர வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. ஏற்கனவே இந்த நூலினைப் படித்து இருக்கிறேன். மற்றும் எனது வலைத்தளத்தில் விமர்சனக் கட்டுரையும் எழுதியுள்ளேன். உங்களது இந்தப் பதிவு, (குறிப்பாக இந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள்கள்,) மீண்டும் இந்த நூலை படிக்கத் தூண்டும் வண்ணம் உள்ளது. மீண்டும் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது விமர்சனம் தங்களை மீண்டும் நூலைப் படிக்கும் ஆர்வத்தை கொடுத்து அறிந்து மகிழ்கிறேன் நன்றி

      நீக்கு