தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 30, 2017

பூர்வீகம் தேவகோட்டை



சிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.

01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.

02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.

03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.

04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.

05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.

06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.

07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.

08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,

09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.

10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ? 

Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?

காணொளி

திங்கள், நவம்பர் 27, 2017

நான் சொல்வதெல்லாம் உண்மை


அந்தக் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் குதூகலம் காரணம் ஆண் குழந்தை அதன் அழகைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினர் அவனது தாத்தா பேரனின் காலை தரையில் படாமல் காலின் தடம் பதிக்கும் இடத்தில் எல்லாம் டிஸ்யூ பேப்பர் போட்டு கொண்டே சென்று பார்த்து, பார்த்து வளர்த்தார். அவரே அழகான பெயரும் வைத்தார். இருப்பினும் கண்ணே, மணியே, பொன்னே, முத்தே, ராசா, தங்கம் என்றே அழைத்து வந்தனர். ஒன்றரை வயது நிறைவடைந்ததும் நல்லதொரு திருவோண நட்சத்திர தினத்தில் எல்.கே.ஜி.யில் சேர்த்தார்கள். 

வெள்ளி, நவம்பர் 24, 2017

மனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்


1998 நான் அபுதாபி மனநல மருத்துவமனையில் வேலை செய்த காலகட்டம் வேலை நேரம் காலை 06:30 மணி ஆனால் அதிகாலை 05:00 மணிக்கே எனது நிறுவனம் குப்பை அள்ளும் சிறிய லாரி போலிருக்கும் வண்டியில் பணியாட்களை கொண்டு வந்து கொட்டிச் செல்லும் அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரி பேருந்துகள் கிடையாது கடுங்குளிரிலும் ஊரைவிட்டு வெளியே பாலைவனத்தில் அறுபது கி.மீ தூரமிருக்கும் விடுதியிலிருந்து நகரத்துக்குள் வரணும்.

புதன், நவம்பர் 22, 2017

விஸ்வநாத் & ரூபன்


ரூபன் எப்படி இருக்கே ?
வா... விஸ்வா நல்லாயிருக்கேன் விஸ்வரூபம் வருமா ?
கமல் ஸார் நல்லாத்தானே படம் எடுத்துக்கிட்டு வந்தாரு தீடீர்னு ஏன் இப்படி ?
ஆமா அவுங்க ஆளுகளே... அவருக்கு பிரச்சனை கொடுக்கிறாங்க...
என்னையா சொல்றே அவுங்க ஆளுக யாரு ?
முஸ்லீம்
முஸ்லீம் அவுங்க ஆளா ? என்னையா குழப்புறே... அவரு ஐயங்கார் இது எல்லோருக்கும் தெரியுமே...
அவரு பேரென்ன ?
கமல் ஹாசன்.
அவரு பேரு கமல் ஹாசன் இல்லே கமால் ஹசன்
யாருய்யா சொன்னா உனக்கு... துணை எழுத்த தூக்கி வேற இடத்துல போட்டு புதுசா குழப்புறே ?
நீ அவரு பேரை இங்கிலீஷ்ல எழுது.
KAMAL HASSAN இந்தா படி
பார்த்தியா ? கமால் ஹசன்
உன்னைச் சொல்லி குற்றமில்லை பிறந்ததிலேருந்து உனக்கு தமிழை ஊட்டி வளர்க்காம உங்க அப்பா உன்னை ஊட்டி இங்கிலீஷ் காண்வெண்ட் ஸ்கூல்ல. படிக்க வச்சாருல அதான் இப்படி தமிழே தெரியாம வளர்ந்துட்டே அது மட்டுமில்லை ஆரம்பத்திலே கமலஹாசன்’’னு இருந்ததை கமல் ஹாசன் னு’’ மாத்துனாருல அதான் இனிமே நீ தமிழ் நாட்டு விசயங்களை படிக்காதே நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிடுவே பிறகு வெட்டும், குத்தும் நடக்கும்.


விஸ்வரூபம் வெளியான நேரத்தில் வெளியிட்டு நான் மட்டுமே படித்த பதிவு காரணம் அன்று அப்பாவி கில்லர்ஜியை யாருக்கும் தெரியாது. மூலப்பதிவை நீக்கி இதோ தங்களின் பார்வைக்கு...

காணொளி

திங்கள், நவம்பர் 20, 2017

மனிதாபிமானம்


இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும், மனிதன் விஞ்ஞான பாதையில் முன்னோக்கி ஓட முயற்சித்து அதன் விளைவாய் இறைவனிடமும் முந்திக் கொண்டு போய் விடுகிறான், இது இறைவனுக்கு முன் கூட்டியே தெரியாதா ? தெரிந்திருக்கும் என்பதே எமது கருத்து. புதிய முயற்சியென விண்கலம் உருவாக்குகிறான் தவறுதலாக எங்கோ போய் விழுந்து மனிதர்களை அழிக்கிறது, புதிய முயற்சியென விஷவாயுவை கண்டு பிடிக்கிறான் சோதனை ஓட்டமாக அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறான், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?


ஸ்பெயின் நாட்டில் காளையை மைதானத்தில் விட்டு நான்கு வீரர்கள் சிவப்புத் துணியை காளையிடம் காண்பித்து மிரட்சியடைய வைக்கிறார்கள், காளை முட்ட வரும் பொழுது பாதுகாப்பான மரப்பெட்டிகளில்... மரப்பட்டியைப் போல் ஏறிக்கொள்கிறார்கள், அப்பொழுது ஒரு வீரன் குதிரையில் சுற்றி வருகிறான் கையில் மீன் தூண்டில் போலுள்ள மூன்று ஈட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக காளையின் முதுகில் பாய்ச்சுகிறான், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காளை தாங்குகிறது, பிறகு குருதி மொத்தம் வடிந்து வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்து போகிறது, உடன் தோற்று விட்டதென... அறிவித்து இரண்டு குதிரைகளில் கட்டி இறைச்சிக்காக இழுத்துப் போகிறார்கள், உடன் கூடியிருந்த மனிதர்கள். கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள்..


ரஸ்லிங் என்ற பெயரில் இரும்புக் கூண்டுக்குள் மனிதனை மனிதன் மிருகங்களைப்போல் ஆயுதங்கள் எடுத்து அடித்தே கொல்கிறான், இதை ஆயிரக்கணக்காண மனிதர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள் எந்த பாவமும் செய்ய பக்குவப்படாத நான்கு வயதுக்குழந்தை ஸர்ப்பம் தீண்டி துடிதுடித்து இறந்து போகிறது, இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

விபத்தில் அடிபட்டு துடிதுடிக்கிறான், உடனடியாக மருத்துவரிடம் தூக்கி கொண்டு போனால் காப்பாற்ற முடியும், சட்டத்தின் காரணமாய் எல்லோருமே ஒதுங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

மனிதனிடம் கேட்டால் விதி என்றும் முன் ஜென்மப்பாவம் என்றும் சொல்கிறான். மனிதாபிமானம் இது மனிதனிடம் இல்லை, இது இறைவனிடம் இல்லை, சட்டத்திடமுமா இல்லை ? அது எப்படி இருக்கும் ? சட்டத்தை அமைத்ததே மனிதன்தானே... ஆகமொத்தம் இதன் விடையென்ன ? இறைவன் தனது பொழுது போக்கிற்காக உலகமெனும் நாடக மேடையை அமைத்து மனிதன் என்ற பூச்சிகளை நடிகனாக உலாவ விடுகிறான், இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும் என்பதே எமது கருத்து. தங்களின் கருத்தென்ன நட்பூக்களே...

காணொளி