சனி, மே 30, 2015

அந்த நாள்.

 30.05.2001
என்னவளே...
என்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ ? யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் ? சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...
 
என் நெஞ்சமெல்லாம் நீயிருக்க,
உன் நெஞ்சுக்குள்ளும் நானிருப்பேன்
கண்ணுக்குள்ளே வாழ்ந்திருப்போம்
என்றாயே... என்னழகே...

பக்கத்திலே, நீ இருந்தால்
துக்கம் இல்லை துன்பமில்லை
துணையாக தூணாக நீயிருக்க
என்றாயே... எளியவளே...

மீசையென்னை குத்துதென்றே
மீட்டி விடுவாயடி மீசைதன்னை
மீளாத்துயரில் என்னை தள்ளிவிட்ட
மீசையின்று தாடியாகி போனதடி

பசுமையான நினைவுகளை பகிர்ந்து
பேசிக் களித்திருப்போம் கள்ளழகா
குசும்புக்கார குறுகுறுத்த மச்சானே
என குறள் கொடுத்தாய் குரலாளே...

துபாய்க்கு பொருள்தேடி வந்தவனை
தூரமாக போய் விட்டாய் என்றவளே
திரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே
போனதேன்டி பொன்மயிலே...

தூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே
என்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு
தூங்காத நினைவுகளை கண்ணுக்கு
கொடுத்தாயே... கொம்புத்தேனே...

பத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்
பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றாய்
நீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி
என்னை பதற விட்டாய்... பாதகத்தி...

நான் வரும் நேரம் எது நானறியேன்
நன்மகளே கெட்டகாலம் என்றுரைப்பர்
கேடுகெட்ட மானிடரே நல்லகாலமென
நானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.
காணொளி.
அன்பு நெஞ்சங்களே என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள் மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.
கில்லர்ஜி.

புதன், மே 27, 2015

விதி எண் 358/2 கீழ்101 பிரிவு.

 
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். என்கிறார்களே.... இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா ? இல்லை என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். (ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால், இறைவன் அவரது ACCOUNT சைமுடித்து அழைத்துக்கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்க்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் ? எனக்கு இது விபரம் தெரிந்த நாளிலிருந்து குழப்பமாகவே இருக்கிறது)
சரி, இந்த வகையான பிரட்சினைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் ? இதுவரை தீர்த்திருக்கிறார்களா ? அல்லது தீர்க்கத்தான் முடியுமா ? தன்னை தீர்த்து விடுவார்கள், 80 தெரியாதா ? தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா ? முடியாது, முடியாது, கௌரவமாக வாழமுடியாது காரணம் என்ன ?
இது மக்களாட்சியாம், அப்படின்னு அரசியல்வாதிகள் சொல்லக்கேள்வி.
 
இந்த வழக்குகள் நாளடைவில் கிடப்பில் கிடந்து இந்திய அரசு வழக்குகளின் PENDING கணக்குகளில் போய்சேர்ந்து விடுகிறது, இதையெல்லாம் நிரூபிக்க முடியாதாம் காரணம் ஆதாரம் இல்லையாம். என்னங்கையா இது ? வயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு சொன்ன கதையா, இருக்கு MEDIA காரங்க எடுக்கிறாங்களே... சுடச்சுட VIDEO இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க போறாங்களா ? எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, எனசெய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக VIDEO எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் ? இதெல்லாம் ஆதாரம் கிடையாதா ? நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் VIDEO பொய் சொல்லுமா ? VIDEO வில் பொய் இருக்கிறதா ? என்பதைக்கூட கண்டு பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச்சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு கேட்கமுடியும் நீங்கள் நினைத்தால் ? வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் ? வழக்குகளை மூடி வைக்கலாம், எல்லாம் Yours Choice Because you are POWER Full man without me.(Me, Meaning of MAKKAL)
 
CHIVAS REGAL சிவசம்போ-
சும்மாவே, கோயில் குளம்னு எங்கே பார்த்தாலும்.... குண்டு வெடிக்குது இதுல இந்த ஆளுவேற இறைவனைப்போயி தாக்கச்சொல்றாரு, கலிகாலமாப்போச்சு, நம்ம சொன்னா குடிகாரப்பயன்னு சொல்லுவாங்கே..


திங்கள், மே 25, 2015

நகை(you)ங்கள்.


 
மன்னர் ஏன் ? கோபமாக இருக்கிறார் ?
போருக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி தூது அனுப்பிய புறா தனது ஜோடிப்புறாவுடன் ஓடிவிட்டதாம்.

மன்னர் வெளியில் கிளம்பும்போது மாறுவேஷத்தில் செல்கிறாரே... கள்வர்களை பிடிக்கவா ?
அட நீ வேற சின்ன வீட்டுக்கு போகும் போது யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.

மன்னர் ஏன் ? புலவரை சிறையில் அடைத்து விட்டார் ?
மன்னரை புகழ்ந்து கவி எழுதிய புலவர் வெற்றி வீரன் என்பதற்க்கு பதில் வெட்டி வீரன் அப்படினு எழுதிட்டாராம்.

மன்னர் ஏன் ? கவலையில் இருக்கிறார் ?
மன்னருக்கு வெளியில் ஒரு சின்னவீடு இருப்பது தெரிந்த மகாராணியார் தனக்கும் அதுபோல் ஒருவீடு வேண்டுமென்றாராம்.

மன்னர் காவல் வீரனை ஏன் ? தூக்கில் போடச்சொன்னார் ?
மன்னர் வரும்போது ’’மன்னாதி மன்னரே’’ எனச்சொல்லாமல், ’’மண்ணாதி மண்ணரே’’னு அழுத்தி சொல்லிட்டானாம்.

மன்னர் போருக்கு சென்று வெற்றியோடு வரும்போது மகாராணி சந்தோஷமாக வரவேற்க வில்லையே ஏன் ?
மகாராணியார் நினைத்தபடி நடக்க வில்லையாம்.

மன்னர் ஏன் ? வேற்று நாட்டு ஒற்றனின் வாயில் அமிலத்தை ஊற்றச்சொன்னார் ?
’’அறப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லாமல் ’’அக்கப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லிட்டானாம்.

மன்னர் அவைப்புலவரின் நாக்கை வெட்டச் சொல்லி விட்டாராமே ?
கவி பாடும்போது, ’’மண்ணை ஆளும் மன்னா’’னு சொல்லாமல் ’’மண்ணில் வீழும் மன்னா’’னு பாடிட்டாராம்.

மன்னர் ஏன் ? ஓவியரின் கையை வெட்டச் சொன்னார் ?
மகாராணிக்கு வைத்த வரவேற்பு பலகையில் மகாராணி கோமளவள்ளியே வருகனு எழுதாமல் மகாராணி கோமணவள்ளியே வருகனு எழுதிட்டானாம்.

மன்னர் ஏன் ? அந்தப்புரத்தை, ’’அந்த’’ப்புறம்னு சொல்றார் ?
அந்தப்புரம் என்றால் ? அரண்மனைக்கு உள்புறம் ’’அந்த’’ப்புறம் என்றால் ? வெளிப்புறம் அதாவது சின்னவீடு.

சனி, மே 23, 2015

Case & Cash.

 
கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கழுதை, குதிரைனு கத்தரிக்காய்னு சொல்றீங்களே, ஏண்டா ? இப்படி இந்தியாவின் மானத்தை வாங்குறீங்க ? நாளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னடா ? உங்களை வெளக்கமாத்தாளை அடிச்சாத்தான் என்னடா ? ஏண்டா ? பேதியிலே போயிருவியலா ? எத்தனை பெரிய மனுஷசங்கே இருக்கீங்க ? உங்கள்ல ஒருத்தனுக்குகூட இந்தியக் கலாச்சார உணர்வு இல்லையாடா ? ஒரு பக்கம் முத்தம் கொடுக்குறான், இன்னொரு பக்கம் மணமேடைக்கு போகுமுன் குத்தாட்டம், சினிமாக்காரன் சமூகத்தை சீரழிக்கிறான்னு சொல்றியலடா ? இதுக்கு பேரென்னடா ? அமெரிக்க கலாச்சாரத்தை குறை சொல்ல உங்களுக்கு அருகதை இருக்காடா ? எவனாவது ஒருத்தனுக்காவது இதை தடுக்கனும்னு தோணலையாடா ? கைதட்டி ஆரவாரம் செய்யிறியலடா ? உங்க கையிலே கட்டை முளைக்க, வெட்கமே இல்லையாடா ? மிருகங்கள் திறந்தவெளியில் புணைவதற்க்கும் இதற்க்கும் என்னடா ? வித்தியாசம் போங்கடா துணிமணியை அவித்துப் போட்டுப்புட்டு ஆதிகால மனுஷன்போல வாழுங்கடா ? வெட்டிச்செலவு எதுக்குடா ? மனுஷனுக்கு 6 அறிவுனு சொன்ன முட்டாப்பய யாருடா ? கேவலத்துக்கு பொறந்தவங்களா ? எங்கோவத்தை கெளப்பி பாவத்தை சேர்க்காதீங்கடா ? அரசாங்கம்கூட பண்பாட்டுக்கழகம் அப்படினு வச்சு இருக்கீங்களே... இவங்கெளை கலாச்சாரக் குற்றவாளி அப்படினு கேஸ் போட்டு உள்ளே தள்ளக்கூடாதாடா ? இல்லை நீங்களும் கேஷ் வாங்கிட்டீங்களாடா ?
 
நண்பர்களே... இதைப்படிக்கும்போது திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்கள் பாணியில் படிப்பதுபோல படிக்கவும் நேற்று அவர்தான் போண் செய்து இந்தப்பதிவைப் போடுங்க கில்லர்ஜி என்று சொன்னார் 80 குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பு – என் மனதில் என் அறிவுக்கு நியாயமாக பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுவேன், அதேநேரம் தனிப்பட்ட மனிதர்களின் மனதை துளியளவும் காயப்படுத்த மாட்டேன் 80ம் உறுதி இதில் யாருக்கும் பயப்படமாட்டேன் எனது கடைசி மூச்சுவரை.... எனது மன உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து கொண்ட முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் நன்றியை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
காணொளி

Related Posts Plugin for WordPress, Blogger...