கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும்
பொய், தீர விசாரிப்பதே மெய். என்கிறார்களே.... இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா ? இல்லை
என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை
அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை
சேதம் செய்கிறார்கள்.
(ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு
சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால்
உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது
வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும்
சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால்,
இறைவன் அவரது ACCOUNTசை முடித்து
அழைத்துக் கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்கும் பொது மக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள்
இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு
விளைவிப்பது எந்த வகையில் நியாயம் ? எனக்கு
இது விபரம் தெரிந்த நாளிலிருந்து குழப்பமாகவே இருக்கிறது)
சரி, இந்த வகையான பிரச்சனைகளை நீதியரசர்கள்
எந்த வகையில் தீர்த்தார்கள் ? இதுவரை
தீர்த்திருக்கிறார்களா ? அல்லது தீர்க்கத்தான்
முடியுமா ? தன்னை தீர்த்து
விடுவார்கள், என்பது தெரியாதா ? தீர்ப்பெழுதும்
நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை
நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை நடுத்தரவர்க்கம்தான்
செய்ய முடியுமா ? முடியாது, முடியாது,
கௌரவமாக வாழமுடியாது காரணம் என்ன ?
இது மக்களாட்சியாம், அப்படின்னு
அரசியல்வாதிகள் சொல்லக்கேள்வி.
இந்த வழக்குகள் நாளடைவில் கிடப்பில் கிடந்து
இந்திய அரசு வழக்குகளின் PENDING கணக்குகளில்
போய்சேர்ந்து விடுகிறது, இதையெல்லாம் நிரூபிக்க முடியாதாம் காரணம் ஆதாரம்
இல்லையாம். என்னங்கையா இது ?
வயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு
சொன்ன கதையா, இருக்கு.
MEDIA காரங்க எடுக்கிறாங்களே...
சுடச்சுட காணொளி இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க
போறாங்களா ? எந்த சேனலில் போனாலும்
கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும்
மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, என செய்திகளில்
சொல்வது கிடக்கட்டும், அழகாக காணொளி எடுத்து
காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் இதெல்லாம்
ஆதாரம் கிடையாதா ? நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் காணொளி பொய் சொல்லுமா ? காணொளியில் பொய்
இருக்கிறதா ? என்பதைக்கூட கண்டு
பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச் சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு
கேட்க முடியும் நீங்கள் நினைத்தால் ? வழக்குகளை உடனே
முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் வழக்குகளை மூடி வைக்கலாம்,
எல்லாம் Yours Choice
Because you are POWER Full man without me.(Me, Meaning of MAKKAL)
CHIVAS REGAL சிவசம்போ-
சும்மாவே, கோயில் குளம்னு எங்கே பார்த்தாலும்.... குண்டு
வெடிக்குது இதுல இந்த ஆளுவேற இறைவனைப்போயி தாக்கச் சொல்றாரு, கலிகாலமாப் போச்சு,
நம்ம சொன்னா குடிகாரப்பயன்னு சொல்லுவாங்கே..
நண்பரே, இப்போதைக்கு வாக்கு மட்டும்.
பதிலளிநீக்குத ம 2
நல்லது நண்பரே நன்றி வாருங்கள்.
நீக்குதம +1
பதிலளிநீக்குகண்களால் காண்பதும் பொய்..காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்கிறார்களே.. இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா..? இல்லை என்பதே எமது வாதம்...//
அதே அதே...சகோ
மலையாளத்தில் ஆமோதித்த சகோவின் வருகைக்கு நன்றி.
நீக்குவிதி எண் 358/2 கீழ்101 பிரிவின் கீழ்
பதிலளிநீக்குதீர்ப்பு எப்போது கிடைக்கும் நண்பரே!
அரசியலில் இக்கரைக்கு அக்கரை பச்சை
விகிதாச்சாரம்தான் விதிவிலக்கு!
பார்த்து தராசு சாய்ந்து விடப் போகிறது!
த ம: நல்ல தீர்ப்பு சொல்ல நல்லவருக்கு : 4
நட்புடன்,
புதுவை வேலு
பழமொழியோடு கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பா...
நீக்குநானும் இதை பலகாலமாக அனுபவித்து வருகிறேன். இந்த நாதாரிகளுக்கு இதுதான் பிழைப்பு. அரசியல் கட்சிகள் இதை ஊக்குவிக்கின்றன.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா நாதாரிகள் வாழத்தெரியாதவர்கள்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சட்டத்தில் ஓட்டை உள்ளது என்று சொல்வார்கள் அதன் வழி தப்பி போக வாய்ப்பு அதிகம்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி.
நீக்குபணம் ஒன்றே குறிக்கோள் ஜி...
பதிலளிநீக்குமனிதம் செத்து விட்டது ஜி.
நீக்குஅரசியல் கலவரங்களுக்கு ஏது நண்பரே தீர்வு
பதிலளிநீக்குதம +1
இனிவரும் காலங்களில் இல்லை என்றே ஆகிவிடுமோ ? நண்பரே...
நீக்குகாலம் கெட்டு கிடக்கிறது. என்ன செய்ய?
பதிலளிநீக்குகெடுத்தவர்களுக்கு 5 வருடம் கழித்தும் சான்றிதழ் கொடுத்தது நாம்தானே நண்பரே...
நீக்குஹர ஹர சதாசிவம்!.. கோயில் குளத்தைத் தாக்குவதா!... சிவ.. சிவ..
பதிலளிநீக்குஅடுத்தபடியா அக்னிச் சட்டியும் அலகுக் காவடியும் எடுக்க எடம் வேணுமே!..
(அடுப்புக்குள்ள தண்ணிய ஊத்துவோமா!... நாங்கள்..லாம் எவ்வளவு உஷாரு!..)
அக்னிச்சட்டியை இப்படிப் பட்டவர்களின் தலையில் ஊற்றவேண்டும் ஜி.
நீக்குவேறு ஒன்னும் இல்லை நண்பரே..... “நீதி” மான்கள் எல்லாம் “நிதி” மான்களாக போய்விட்டார்கள் ...கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரிதான் நண்பரே...
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் நண்பரே இதையெல்லாம் கேட்க ‘’நாதி’’ இல்லாமல் போச்சே...
நீக்குசிந்திக்க வைக்கிற பதிவு!நன்று!
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎப்பிடியாவது விடயம் கிடைத்துவிடும் இல்ல கில்லாடி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவாங்க வாங்க...
நீக்குவிடயமா இல்லை உலகிலே
விந்தையும் உண்டே அழகிலே
மந்தை கூட்டமும் வலையிலே
மனிதமும் போகும் விலையிலே
மீள்வாரோ இந்த நிலையிலே
மண்ணை இடுவாரே தலையிலே
- கில்லர்ஜி
ஒரு சினிமா பிரபலம் இறந்தபோது நடந்தது கண்முன்னால் நிகழ்வுகளாய். இறைவன் இடத்தை மட்டும் தாக்கலாமா ஜி
பதிலளிநீக்குஒரு நடிகர் மட்டுமா ? ஐயா பலரும் பலமுறை.
நீக்குசில குடிகாரர்கள் இதைத்தானே ஐயா செய்கின்றார்கள்.
காசு பணம் துட்டு மணி மணி தான் முக்கியம் சகோ..
பதிலளிநீக்குஇதையெல்லாம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போட்டதால்தானே நமக்கு இந்த நிலை.
நீக்குசிந்திக்க வைக்கும் பதிவு சகோ.
பதிலளிநீக்குஎனது பக்கம் மாங்காய் சாதத்தை சுவைத்து பார்த்து கருத்து சொல்ல வாருங்கள்.
மாங்காய் இனித்ததே சகோ எமக்கு சொல்லாவிட்டாலும் நமது வருகை என்றும் உறுதி.
நீக்குமிக்க நன்றி சகோ.
நீக்குவாக்கோடுத் தான் வந்தேன். அப்புறம் அந்த கணக்கீடுகளில் ஒன்னும் உள்குத்து இல்லையே,
பதிலளிநீக்குசகோ,காதை நல்லா கூர்மையாக்கி கேளுங்கள், நீ என்னா கத்தினாலும் எங்களுக்கு கேட்காது. காரணம் நாங்கள் செவிடு.மன்னக்கவும் குறையுள்ளவர்கள்.
வலிப்போக்கர் சொன்னது தான், நீதிமான்கள் நிதிமான்கள் ஆனது.
சிந்திக்க வைக்கும் பதிவு.விதி எண் 358/2 கீழ் 101
நன்றி.
காது கேளா....... இந்தச் செவிடன் காதில் ஊ(ஓ)தி விட்டு சென்றமைக்கு நன்றி சகோ..
பதிலளிநீக்குஇதையெல்லாம் கண்டும் காணாம இருந்தால் உங்களுக்கு இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்கும் ,மலையிலே மோதினால் தலைதான் உடையும் !
பதிலளிநீக்குஉண்மைதான் ஜி மோதுறதான் மோதுறோம் மலையோடவே மோதுவோமே.... டிஞ்சர் போட நீங்க வரமாட்டீங்களா ?
நீக்குபழமொழிகள், சட்ட விதிகள், ஆழ்ந்த அலசல். இருந்தாலும் எவரும் திருந்துவது சிரமமே. ஏதோ நம் ஆதங்கங்களை இவ்வாறு பகிர்ந்துகொள்வோம்.
பதிலளிநீக்குவருக முனைவரே உண்மையில் நாம் ஆதங்கத்தைத்தான் தீர்த்துக்கொள்ள முடியும்.
நீக்குஆஹா! இப்படி செதுக்கி, செதுக்கி கருதிடும் பதிவுகள் உங்கள் ஸ்பெஷல் அண்ணா! அந்த end பன்ச் சூப்பர் அண்ணா!
பதிலளிநீக்குவருக சகோ கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅருமையான பதிவு அண்ணா . மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆளப்படும் முடியாட்சி என்பதை எவ்வாறு மறந்தீர்கள் ??? நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் மரணம் உண்டென அவர்களுக்கு தெரியும் .
பதிலளிநீக்குஉங்களின் பதிவுகளை மொபைலில் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் . மடிக்கணினியின் டிஸ்ப்ளே உடைந்து விட்டது . என் பதிவுகளையே நெட் சென்டரில் சென்று எழுதவேண்டியதாகவுள்ளது . அதனால் தான் சமீபகாலமாக கமெண்ட்டும் ஓட்டும் இடமுடியவில்லை . தவறாக நினைக்க வேண்டாம் .
நண்பரின் வருகைக்கும் விரிவான விளக்கவுரைக்கும் நன்றி.
நீக்கு\\ அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். \\
பதிலளிநீக்குஅரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காகமட்டுமல்ல, அவன் அரசியலை விட்டு விலகுவதாக உதார் விட்டாலும் போதும், பேருந்துகளுக்கு மட்டுமல்ல தங்களுக்கே தீ வைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.
அசையும் , அசையா சொத்துக்களின் மதிப்பில் சில பல பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டியிருக்கும், மிகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்!!
\\ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் ?\\ நாங்க தான் கடவுளே இல்லைன்னு சொல்லிட்டோமே!!
\\இந்த வகையான பிரட்சினைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் ?\\ அது குற்றவாளி கொடுக்கும் காசைப் பொறுத்தது!!
\\வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் ?\\ ஒரு லெக்சரர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார், அது வருடக் கணக்காக நடந்தது. பின்னர் அவரே சட்ட அமைச்சர், ஆகவும் மாறினார். ஆனாலும் வழக்கு நடந்தது. தீர்ப்பு வந்தது. அப்போது அவருக்கு ரிடயர்டு ஆகிவிட்ட வயது!! அவர் தான் சுப்ரமண்யம் சுவாமி. அவருக்கே இந்த நிலை என்றால், சுப்பனுக்கும், குப்பனுக்கும் நிலைமை என்னவாகும்??
வாங்க நண்பரே விரிவாக அலசி காயப்போட்டு விட்டீர்கள் சொத்துக்கணக்கில் சில பூஜ்யங்கள் விடுபட்டது எனக்கே நன்றாக தெரியும் நண்பரே காரணம் நான் கணக்குலயும் வீக்.
நீக்குயாரு ? சமீபத்துல கல்யாணம் நடக்கப் பார்த்துச்சே.... அவுரா ?
ஆளுக்கொரு கட்சி
பதிலளிநீக்குஆளுக்கொரு கொடி
இருப்பதை விட
ஒரே கட்சி
ஒரே கொடி
இருந்தால்
வெட்டுக்கொத்துச் சிக்கல்
கோடு, கச்சேரி வரலாம்
வந்தால்
விதி எண் 358/2 கீழ் 101 பிரிவு!
வருக நண்பரே இதுவும் சரிதான்.
நீக்குஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ...!
பதிலளிநீக்குமுதலில் இந்த தொண்டர்களின் தோலை உரிக்கணும் அப்பத்தான் நாடு நல்லா இருக்குதோ இல்லையோ மக்கள் நிம்மதியா இருப்பாங்க !
tm+1
அருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குநிதியா? நீதியா? அருமை. அருமை.
நான் இரு சக்கர வாகனத்தில் இரயில்வே மேம்பாலத்தில் செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டு இடது கை இரண்டு விரல்களும், இடது
கால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை அறிந்து தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.
-மிக்க நன்றி.
வருக மணவையாரே நலம்தானே இப்பொழுது எப்படி ? இருக்கின்றது ஒரு கையில் தட்டச்சு செய்ய வேண்டிய கஷ்டம் எதற்க்கு ? விரைவில் சரியாகி வர அழைக்கின்றேன்.
நீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குஅறசீற்றம்..
நாதாரிகள் தலைவர்கள் ஆனால் இப்படிதான்..
தம +
வருக தோழரே நாதாரிகளை தலைவர்கள் ஆக்கியது நாம்தானே ?
நீக்குஅட போங்க ஜி! இந்தியாவே பணத்துலதானே தூங்குது! சாரி தொங்குது!
பதிலளிநீக்குதொங்க விட்டது நாம்தானே...
நீக்கு