தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 23, 2015

Case & Cash

கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கழுதை, குதிரைனு கத்தரிக்காய்னு சொல்றீங்களே ஏண்டா இப்படி இந்தியாவின் மானத்தை வாங்குறீங்க ? நாளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னடா ? உங்களை வெளக்கமாத்தாளை அடிச்சாத்தான் என்னடா ? ஏண்டா பேதியிலே போயிருவியலா... எத்தனை பெரிய மனுஷசங்கே இருக்கீங்க... உங்கள்ல ஒருத்தனுக்குகூட இந்தியக் கலாச்சார உணர்வு இல்லையாடா ? 

ஒரு பக்கம் முத்தம் கொடுக்குறான், இன்னொரு பக்கம் மணமேடைக்கு போகுமுன் குத்தாட்டம், சினிமாக்காரன் சமூகத்தை சீரழிக்கிறான்னு சொல்றியலடா... இதுக்கு பேரென்னடா ? அமெரிக்க கலாச்சாரத்தை குறை சொல்ல உங்களுக்கு அருகதை இருக்காடா ? எவனாவது ஒருத்தனுக்காவது இதை தடுக்கனும்னு தோணலையாடா ? கைதட்டி ஆரவாரம் செய்யிறியலடா... உங்க கையிலே கட்டை முளைக்க, வெட்கமே இல்லையாடா ? மிருகங்கள் திறந்த வெளியில் புணைவதற்கும் இதற்கும் என்னடா வித்தியாசம் போங்கடா துணிமணியை அவித்துப் போட்டுப்புட்டு ஆதிகால மனுஷன்போல வாழுங்கடா  வெட்டிச்செலவு எதுக்குடா ?

மனுஷனுக்கு ஆறறிவுனு சொன்ன முட்டாப்பய யாருடா ? கேவலத்துக்கு பொறந்தவங்களா எங்கோவத்தை கெளப்பி பாவத்தை சேர்க்காதீங்கடா ? அரசாங்கம்கூட பண்பாட்டுக்கழகம் அப்படினு வச்சு இருக்கீங்களே... இவங்கெளை கலாச்சாரக் குற்றவாளி அப்படினு கேஸ் போட்டு உள்ளே தள்ளக் கூடாதாடா ? இல்லை நீங்களும் கேஷ் வாங்கிட்டீங்களாடா ?

நண்பர்களே... இதைப் படிக்கும்போது திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்கள் பாணியில் படிப்பதுபோல படிக்கவும் நேற்று அவர்தான் போன் செய்து இந்தப்பதிவைப் போடுங்க கில்லர்ஜி என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு – என் மனதில் என் அறிவுக்கு நியாயமாக பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுவேன், அதேநேரம் தனிப்பட்ட மனிதர்களின் மனதை துளியளவும் காயப்படுத்த மாட்டேன் என்பதும் உறுதி இதில் யாருக்கும் பயப்படமாட்டேன் எனது கடைசி மூச்சுவரை.... எனது மன உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து கொண்ட முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் நன்றியை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

காணொளி

47 கருத்துகள்:

 1. காலக் கொடுமையடா சாமி காலக் கொடுமை....தம +1

  பதிலளிநீக்கு
 2. கலாச்சார சீரழிவு இன்று உச்சத்தில் இருக்கிறது நண்பரே
  வேதனை வேதனை
  மனதிற்கு சரியென்று பட்டதை, துளியும் மறைவின்றி தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள்
  நன்றி
  தம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சீரழிவு எதில் கொண்டுபோய் விடுமோ ? தெரியவில்லையே நண்பரே... நிச்சயமாக எழுதுவேன் காரணம் தங்களைப் போன்றோர்களின் வரவு.

   நீக்கு
 3. நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. சமீபத்தில் மேடையில் அனைவரும் முத்தமிட்டுக்கொண்டு நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் வேலையை தொடங்கிவிட்டார்கள். இதையெல்லாம் சட்டம் போட்டு திருத்தமுடியுமா எனத் தெரியவில்லை.நீங்கள் கோபப்பட்டத்தில் நியாயம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருடுவது தவறென்று சட்டங்களும், வேதங்களும் சொன்னால்தான் தெரியுமா ? நண்பரே...

   நீக்கு
 4. நாகரிகம் வளர்ச்சி அடைந்து செவ்வாய் கிரகம் வரை போயிருக்கு தலைவரே...!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தச் செவ்வாய் தோஷம்தான் நண்பரே இந்த இழிநிலைக்கு காரணம்.

   நீக்கு
 5. ஆஹா! வலையுலகில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வாய்தா வாங்கித் தராமல்
  வாக்கரிசி போட்டு பேக் அப் செய்து லாக் அப்பில் அனுப்ப எங்களுக்கு எல்லாம் உல்லதை சொல்லி வாதாட வசிகர மீசை கொண்ட வசிகர வக்கில் கிடைத்து விட்டார்!
  ரசிகராக சொல்கிறேன்.
  இந்த கேஸ் எந்தக் கோர்ட்டிலும் ஜெயிக்கும்.
  ஜெய்!
  வலையுலக "வசிகர கலைவாணர்" பட்டத்தை தரச் சொல்லி திருரூபன் அவர்களுக்கு நான் பரிந்துரை
  நல்லதை செய்கின்றேன்.
  வலையுலக வசிகர கலைவாணருக்கு நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 6. பார்க்கவே அருவறுப்பான புகைப்படம். உங்கள் பதிவோ நல்ல பாடம். என் பெயரைப் பார்த்ததும் சிறிது யோசித்தேன், நன்றாகவே கூறியுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. தங்களைப் போன்றே எனக்கும் இந்த கோபம் உண்டு. தங்களின் பதிவைப் படிக்கும் போது அடாவடி செய்யும் வில்லன்களை புரட்டிப் போட்டு பந்தாடும் ஹீரோமீது ஏற்படும் மகிழ்ச்சி உணர்வே ஏற்படுகிறது. ஆனாலும் கோவத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் நண்பரே!

  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஹீரோவெல்லாம் இல்லை நண்பரே ஜீரோதான் தங்களின் ஆலோசனைக்கு நன்றி முயல்கின்றேன்.

   நீக்கு
 8. பெயரில்லா5/23/2015 10:35 AM

  அருமையாண பதிவு நண்பரே! சமுதாயம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன் அவர்களின் பாரிசுக்குபோ -விலேயே இது போன்ற அவலங்களைச் சாடி இருப்பார்.செம சாட்டையடி.கீப் இட் அப்
  பிறன்மனை நோக்காதவன்

  .

  பதிலளிநீக்கு
 9. காறித் துப்பி விட்டு - கடக்க வேண்டும்.
  வக்கிரம்.. திட்டமிடப்பட்ட ஈனச்செயல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இது திட்டமிடாமல் நடக்குமா ?

   நீக்கு
 10. கோபம் கட்டுக்கடங்கா????????? எத்தனை டா, தங்கள் பதிவு பலரைச் சிந்திக்கச் செய்யும் எனின், மகிழ்ச்சியே, கூல் டவுன் சகோ, நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே... முயற்சிக்கின்றேன்.

   நீக்கு
  2. சகோ, முனைவரெல்லாம் வேண்டாம், சகோவே போதும்.

   நீக்கு
 11. வணக்கம்
  ஜி
  துணி வேண்டும் இப்படி எழுதுவதற்கு.. முதலில் பாராட்டுகள்.
  உண்மையில் காலம் கலியுகம் என்ன நடக்குது... பார்க்க முடியாது.. ஜி இந்த காலத்தில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபனின் விரிவான பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 12. எங்கோ யாருக்கும் தெரியாமல் நடக்கும் விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர் ஜி. என்ன சொல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கருத்து 10 சதவீதம் ஒத்துக்கொள்கிறேன் இதை நான்தான் உலகுக்கு தெரியப்படுத்தியதைப்போல் சொல்கிறீர்களே... இணையத்தில் பலஊடகங்களில் பரவி பல லட்ச மக்கள் கண்டு ரசித்தது, வெறுத்தது, எனது கண்ணில் படும்பொழுது கோபப்படுகிறேன் அந்தக்கோபம் பதிவாகிறது காரணம் இது பொதுநல பாதிப்புதானே...

   நீக்கு
 13. அடடே!
  நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
  இந்தியாவில் மட்டுமல்ல
  இலங்கையிலும் இப்படித் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்ன ? நண்பரே கெட்டுப்போனதில் நல்லாக் கெட்டுப்போச்சு.

   நீக்கு
 14. எதுவும் எனக்குத் புரியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எனது பதிவின் விளக்கநடை குழப்பமா ? அல்லது....

   நீக்கு
 15. அறையில் நடக்க வேண்டியதை அம்பலத்தில் செய்தவர்கள் ,முதல் இரவையும் முழு 'நீல' காணொளியாய் எடுக்கச் சொல்லி இருப்பார்களா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இவர்கள் அப்படிப் பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

   நீக்கு
 16. பெயரில்லா5/23/2015 10:08 PM

  BT கத்திரிக்காய் பற்றி கட்டுரை எழுத கூகுளில் தேடிய போது உங்கள் தளமும் பட்டியலில் வந்தது. வித்தியாசமான பெயர் என்பதால் தளம் புகுந்தேன் எங்க புடிச்சீங்க இப்படி ஒரு பேர் கில்லர்ஜி என்று.. கட்டுரை செம காராம்.....என்ன ஒரு கோபம் ஆனால் நியாயமான கோபம்.

  ராமபூபதி

  பதிலளிநீக்கு
 17. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"

  நன்னூலில் இப்படி ஒரு சூத்திரம் இருக்கிறது. இத்தகைய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான வேண்டும். அவைகள் நிச்சயமாகத் தொடரும். இன்னும் கேவலமாகக் கூடப் போகலாம். அவைகளைத் தடுத்து நிறுத்த முடியாது.

  கலாச்சாரச் சீரழிவு என்று சொல்லிக்கொண்டு வருந்துவதில் பயனில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா மிகவும் தெளிவாக இன்றைய சூழலை சொன்னீர்கள் வேறு வழிதான் இல்லை.

   நீக்கு
 18. அண்ணா! ஏன் இம்புட்டு டென்சன்!!! விட்டுத்தள்ளுங்க அவங்களுக்கு தெரிஞ்சது அம்புட்டுதானே:)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி... எனது குடும்பத்தை கௌரவமாக கொண்டுபோகும் எண்ணமும், தைரியமும், அதிகாரமும் எனக்கு உண்டு அதேநேரம் இதைக்காணும் எனது சந்ததிகள் மனம் சஞ்சலப்பட வாய்ப்பு இருக்கிறதே... அவர்களைக் காணக்கூடாது என்று சொல்லும் சூழலா ? இன்று இது எனக்கு பாதிக்கிறது அந்தக்கோபத்தை நான் வெளிப்படுத்துகிறேன் இது பொதுநலம் மற்றபடி எனக்கு யார் மீதும் காழ்ப்புணச்சி இல்லை.

   நீக்கு
 19. பெயரில்லா5/24/2015 11:44 AM

  அண்ணாச்சி, எதுவும் பார்கிறவங்க கண்ணில் தான் இருக்கிறது. கல்யாண வீடியோக்கள் பார்த்ததே இல்லையா ? மாப்பிள்ளை பெண்ணுக்கு ஊட்டுறதும் பெண் மாப்பிக்கு ஊட்டுறது இல்லையா ? கணவர் உண்ட இலையில் சாப்பிடுவதும் பழங்காலத்து வழக்கம் தானே ? இதில எல்லாம் இல்லீங்களா ஆபாசம். சந்தோஷமான நிகழ்வை சந்தோஷமா பார்க்கனும் . இது அவர்களின் தனிப்பட்ட புகைப்படம் அதை விமர்சிக்க நாம் யார் ? நெஞ்சை நிமிர்த்திக் கேட்கிறேன் நாம் யார். ?????(மறைக்காமல் வெளியிடனும்)
  தருமி தங்கப்பன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறைக்காமல் வெளியிடனும் என்பதால் வெளியிட்டேன் சமூக சிந்தனை உங்களுக்கு நிறையவே இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டேன் இப்படி முகவரி இல்லாமல் வரும் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நெஞ்சை நிமிர்த்தி கேட்கலாம் தாங்கள் விலங்கியல் படித்து ரிடையர்ட் ஆனவர் தங்களது மகள் மருமகன் அபுதாபியில் இருப்பதாகவும் தாங்கள் தற்போது அபுதாபி விருந்தாளி என்றும் சொன்னீர்கள் தங்களுக்கு எனது நம்பர் கொடுத்தேன் அழைக்கச் சொல்லி உடன் அழைத்து விட்டீர்கள் போல....

   பெயரில்லா’’தவர்களுக்கு அனுமதி கொடுத்ததனால் சில நண்பர்களின் மனச்சங்கட்டதுக்கு ஆளாகி விட்டேன் ஆகவே தாங்கள் இனி முகவரியுடன் வந்து எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கலாம்
   மேலே சகோதரி மைதிலி அவர்களுக்கு விளக்கம் கொடுத்ததைக்கூட தங்களுக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.

   கணவன் உண்ட இலையில் மனைவி உண்ணுவதும் பொது இடத்தில் உதட்டில் முத்தம் கொடுப்பதும் ஒன்று என்று சொன்ன தாங்கள் விலங்கியல் படித்தவர் என்பது உண்மையாகி விட்டது நண்பரே இனி அவசியமின்றி கருத்துரை இடவேண்டாம் முகவரியோடு வாருங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்.

   நண்பரே... இதை அபுதாபியில் இருக்கும் தங்களது மகளும், மருமகனும் படிக்கின்றார்கள் என்பது தங்கள் நினைவில் இருக்கட்டும்.

   குட்பை.

   நீக்கு
 20. பெயரில்லாவுக்கு கொடுத்த பதிலடி சூப்பர். காணொளி நானே பலமுறை ரசித்தது. உண்மையில் இது இரண்டு காணொளிகள். பையன் வரும் சீன பிரமாதமாக இருக்கும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே நான் எல்லோருக்கும் கொடுக்கும் யதார்த்தமான பதில்தான் ''பெயரில்லா'' தவர்களுக்கு அனுமதி கொடுத்ததால் சில நண்பர்கள் என்னிடம் கடிந்து கொண்டார்கள் ஆகவேதான் வேண்டாம் என்றேன்.

   நீக்கு
 21. ஆகா..தருமி தங்கப்பன் வந்து..நச்சுன்னு ..ஆப்பு வச்சிட்டிங்களே..நண்பரே....

  பதிலளிநீக்கு
 22. இந்த செய்திதான் ஊரே நாறிச்சே......சரிதான் நண்பரே! இதை எல்லாம் யாரும் தடுக்க முடியாது...இன்னும் சீரழியலாம் ஜி! அதைக் கண்டுக்காம நாம நம்ம வீட்டுல மட்டும் நல்லதைச் செய்வோம்....ஏனென்றால் ஊரைத் திருத்த முடியாது. இது காந்தி காலமோ, காமராசர் காலமோ, பெரியார் காலமோ அல்ல...

  ஒரு சிறிய வேண்டு கோள்...பதிவு நல்ல பதிவு...உங்கள் கோபம் நியாயமானதே! ஆனால் அதை இன்னும் சற்று மெருகூட்டி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கலிகாலம் சரிதான் கோடரியாலே போட்டும்கூட திருந்த மாட்டாங்கே போலயே.... இதுல ஊசியை வச்சு...

   நீக்கு