செவ்வாய், ஜூலை 14, 2020

மொழியின் அழகு


மொழிகளில் பல வகைகள் உண்டு அரபு மொழி எழுத பழகுவது மிகவும் கடினமானது என்று பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் வெகு சுலபமானது அரபு மொழியை தமிழர்கள் எழுத பழகி விடலாம் ஆனால் தமிழ் மொழியை அரேபியர்கள் எழுத பழகுவதுதான் கடினம். நான் ஒரு சில அரபிகளிடம் எழுதச் சொல்லி சவால் விட்டு இருக்கிறேன். அவர்களால் அவ்வளவு சுலபமாக எழுத முடியவில்லை. இதற்கு நான் தமிழில் தேர்ந்தெடுத்த எழுத்து என்ன தெரியுமா ?

வியாழன், ஜூலை 09, 2020

கண்டிக்காத குழந்தை தண்டிக்கப்படும்


    மீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருக்கும் இது பரம்பரை குணம் மட்டுமல்ல தற்கால மக்களின் மாற்றத்தால் தொற்றிக் கொண்ட வியாதி என்றே சொல்லலாம்.

ஞாயிறு, ஜூலை 05, 2020

மின்நூலில் கில்லர்ஜி


வணக்கம் நட்பூக்களே... மின்நூல் சமீப காலமாக பதிவர்களை அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் தீநுண்மி போல ஆகிவிட்டது சும்மா கிடந்த ஊதாங்குழலை எடுத்து புல்லாங்குழலாக்கி விட்டார் நமது திண்டுக்கல் சித்தர்-ஜி.

புதன், ஜூலை 01, 2020

ஆறுதல் மொழிகள் ஆறு   கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடி மரணத்துக்கு அஞ்சாதவர் சிறந்த கவிஞரும்கூட அவரது மனைவியிடம் உணவு வேண்டும் என்பதைக்கூட கவிதை நடையில் சொல்லியே கேட்பார் மனைவி மங்குனியோ எல்லாம் விதி என்று வாழ்வைக் கழித்துக் கொண்டு இருக்கிறாள். இந்தச் சூழலில் அவரது நண்பர் சாபக்கேடு சாவக்கட்டி பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி சின்னா பின்னமாகி மாஞ்சாக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். அவரால் தற்சமயம் பார்க்கவும், கேட்கவும் மட்டுமே இயலும் அவரைக் காணச்சென்ற கொங்குமுடி அரளிப் பூச்செண்டு வாங்கிக் கொண்டு சென்றவர்.

வெள்ளி, ஜூன் 26, 2020

கண்ணூர், கண்ணகி கருப்பாயி


இன்று நடிகை நளினாவுக்கு திருமணம் சென்னையில் பிரபலமான ஹோட்டல் ரோஸிக் பேலஸ் கோலாகலமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது முதல்வர் முகிலன் முன்னிலை வகிப்பதால் முன்னணி நட்சத்திரங்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு, மட்டுமே அழைப்பு ரசிகர்கள் போலீஸாரால் தெருவின் முனையிலேயே தெருநாயை போல் விரட்டி அடிக்கப்பட்டார்கள்

திங்கள், ஜூன் 22, 2020

ஜெர்மனியில் ஜெமினியோடு ஜெயமாலினி


        நான் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள். இதில் பாலங்கள் தோறும் நான் கண்டது அதன் குறுக்கு கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்கின... அதில் தேதிகள் அல்லது காதலர்களின் பெயர்கள் செதுக்கி இருக்கும் அல்லது வண்ணங்களில் எழுதியிருக்கும் இவைகளைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.

வியாழன், ஜூன் 18, 2020

அரசியல்வாதி For 2020


நானொரு அரசியல்வாதி ஆதலால்...

எனது எண்ணங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள்
ரத்தக்காயம் பட்டால்கூட காவிச்சாயம் பூசுகிறார்கள்.

மேடையில் பேசினால் கட்சியினர் சாமரம் வீசுகிறார்கள்
மறந்து, மறுத்துப் பேசினால் கற்களை வீசுகிறார்கள்

ஞாயிறு, ஜூன் 14, 2020

அழுக்கான ஓவியா


வணக்கம் நட்பூக்களே... ஊருக்கு உழைப்பவன் (1976) திரைப்படப் பாடலான //அழகெனும் ஓவியம் இங்கே// என்ற பாடலை நான் உல்டாவாக அதாவது அங்கு காதலன் கொஞ்சுகின்றான் எனது பாட்டில் பாடுபவன் ஒரு திருடனும் அவனது மனைவியும். மேற்கண்ட பாட்டை எழுதிய தமிழன் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடலுக்கு இசையமைத்தது மலையாளி எம்.எஸ்.விஸ்வநாதன், பாடியது தெலுங்கு பி.சுசீலா மற்றும் மலையாளி கே.ஜே.யேசுதாஸ் படத்தில் வாயசைத்தது மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரன் திரைப்படத்தை இயக்கியவர் மலையாளி எம்.கிருஷ்ணன் நாயர் படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றி பெற வைத்தது தமிழகத்து பாமரத்தமிழர்கள்.

வியாழன், ஜூன் 11, 2020

காலம் மறக்காத கலாம்ணக்கம் நட்பூக்களே நான் மிகவும் மதித்த மாமனிதர்களில் ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அவருடைய கனவு இறுதிவரை இந்தியாவைப் பற்றியதாகவே இருந்தது. மதம் மறந்து இவரை இந்திய மக்கள் அனைவருமே நேசித்தது மறுக்க இயலாத உண்மை.

ஞாயிறு, ஜூன் 07, 2020

தங்கரதம் வெள்ளோட்டம்


ணக்கம் நண்பர்களே மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? அதாவது இவர் தமிழ்க்கடவுள் முருகன் இவரது கோவிலின் புதிய தங்கரதத்தின் வெள்ளோட்ட விழா நடத்துவதற்கு தமிழகத்தை ஆளும் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார் இது ஆட்சி செய்பவர்களுக்கான பதவியின் அதிகாரம் இது தவறேயில்லை. ஆனால் இந்த தங்கரதம் வெள்ளோட்டமிடும் விழாவுக்கு ஆசி வழங்கியது யார் ?

புதன், ஜூன் 03, 2020

தள்ள வேண்டியதை தள்ளு


ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா ? டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள் அடிக்கடி சொல்வார் தள்ள வேண்டியதை தள்ளினால் தட்டு வண்டிக்கும் மின்சாரம் கொடுப்பாங்கே என்று நமது நாட்டின் அவலநிலை இதுதான்.

சனி, மே 30, 2020

புதன், மே 20, 2020

கவரிமாவரிமான் தற்கொலை செய்யுமா ? ஆச்சர்ய மூட்டும் தகவல்கள் கவரிமான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ?

சனி, மே 16, 2020

வடக்கே பயணம்...தெற்கத்தி கள்வனை காதல் கொண்டவளே
கிழக்குச் சீமையில் இருந்து வந்தவளே
மேற்குத் தொடரில் வாழ்வோம் என்றவளே
வடக்கு நோக்கி பயணித்தாயே பாதகத்தி.

திங்கள், மே 11, 2020

மாடசாமியும், மடச்சாமியும்
ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும்.
வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஒரு இடத்துக்கு புறப்படும்போது பூனை குறுக்கே போனால் போனகாரியம் விளங்காதாண்ணே ?
ஆமாடா தம்பி பெரியவர்கள் எல்லாவற்றையும் அனுபவப்பட்டுதான் சொல்லி வச்சு இருங்காங்க....

புதன், மே 06, 2020

கீர்த்தனாவுக்கு பிரார்த்தனைகள்ந்த திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்து முடிந்தது மதிய உணவு முடிந்து மண்டபத்தின் திறந்த வெளியில் இருந்த வேப்ப மரத்தடியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து இருந்தன் தனது கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தபோது...

ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டுணக்கம் வலையுலக உறவுகளே... நான் வலைத்தளம் உருவாக்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றோடு 816 பதிவுகள் எழுதி வெளியிட்டு விட்டேன்.

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

என் மொழிகள்01. சம்பாரித்தவன் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை
வாழ்ந்தவர்கள் எல்லோரும் சம்பாரித்தவர்களும் இல்லை
இந்த இடியாப்ப சிக்கலுக்கு விடை சொல்வது யார் ?
உலக மேலாளன்.

வியாழன், ஏப்ரல் 16, 2020

குரும்பூர், குட்டிக்கதை குருசாமி01. மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் அரசியல்வாதி அரியநாயகம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்த அருட்கொடை இது எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை என்று சொன்னதைக் கேட்டு மக்கள் பலமாக கை தட்டினார்கள் கூடவே மேடையில் வீற்றிருந்த அரியநாயகத்தின் இரண்டாவது மனைவி மாதவியும் கை தட்டினாள்.

சனி, ஏப்ரல் 11, 2020

நான் தகுதியை மீறியவன்முன்குறிப்புயார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதியதல்ல நடந்த, நடக்கும் யதார்த்தமான உண்மைகளை சாதாரணமாக சொல்லிப் போக நினைக்கும் வழிப்போக்கன் நான் - கில்லர்ஜி

திங்கள், ஏப்ரல் 06, 2020

தமிழர்கள் அறிவாற்றலான பரம்பரையா ?ண்ணே வணக்கம்ணே நல்லா இருக்கீங்களாண்ணே.. ?
வாடாத்தம்பி நல்லா இருக்கேன்டா... நீ எப்படிடா இருக்கே... ?

நல்லா இருக்கேண்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்ணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஏண்ணே தமிழர்கள் நாமெல்லாம் அறிவாற்றலான பரம்பரையாண்ணே ?
ஆமாடா இதிலே உனக்கென்ன சந்தேகம் ?

புதன், ஏப்ரல் 01, 2020

அமேசனில் தேடுங்கள்...


ங்கள் மனம் கவர்ந்த எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் அவர்கள் எழுதிக் கொட்டிய கோப்பு மலைகளிலிருந்து...

கொங்காபுரி தேசத்தின் போர் வீரன் கொங்குமுடியின் வீரதீரச்செயல்கள் வெளிவராத உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அழும் விழிகளும், விழும் துளிகளும்

வெள்ளி, மார்ச் 27, 2020

மொழியில், கலந்திரு(ற)ப்பேன்


புதாபியில் நான் அரசாங்க வேலை வாங்குவதற்கு முன்பு சாதாரண நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் நானும் ஒருவன் இதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடு இருந்ததே இல்லை தனித்து காணப்படும் மனிதனாக இருக்கவேண்டும் என்ற சிந்தை எனது அப்பா வயிற்றில் இருக்கும் பொழுதே தோன்றிய நீண்டகால எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

ஞாயிறு, மார்ச் 22, 2020

ஒளியும், ஒலியும் (1)


பட்டொளி வீசி பறக்கட்டும் பாரினில்...

எதையும் பிளான் போட்டுதான் செய்யணும்

குளித்தான்... குளித்தான்... குளிர் காயும்வரை...

ஒளியில் ஆறறிவு, ஒலியில் ஐந்தறிவு

திங்கள், மார்ச் 16, 2020

பேயிடம் பேசிய பேரம்புதாபி நகரின் மையப்பகுதியில் இருக்கும் நான்கு கி.மீ. இந்த அண்டர்க் ரௌண்டில் நள்ளிரவு 01.00 மணிக்கு நான் எனது காரில் வரணும் காணொளியும் எடுத்துக் கொண்டு (ஆதாரமாம்) வந்து மறுமுனையில் எனக்காக காத்திருக்கும் அதாவது இவர்கள் எனது தலைக்கு மேலே வந்து கொண்டு இருப்பார்கள் நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும் இது பந்தயம்.

புதன், மார்ச் 11, 2020

செய்யாலூர், செய்வினை செய்யதுமேலே படித்தீர்களா ? குறிமேடையாம் எங்கும் தீர்க்க முடியாத செய்வினை, ஏவல், பில்லி. சூனிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுகிறது. மேலும் பேய் கோளாறுகள் ஒரே நாளில் முற்றிலும் சரி செய்யப்படுகிறது. அதாவது இறைவனுக்கு நிகரானவர்கள் என்றே சொல்லலாம் போல... இவைகள் உண்மையோ பொய்யோ சரி இவைகளெல்லாம் காலங்காலமாய் நம்பி வரும், நம்பப்படும் ஆச்சார விதிமுறைகள் கடன்கள் என்றே சொல்லிக் கொள்வோம்.

வியாழன், மார்ச் 05, 2020

தமிழனின் நிலை


மிழன் தமிழ் நாட்டில் உழைத்து பிழைப்பதற்கு இப்படி வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவனின் படங்களை தனது செலவில் போட்டு வைத்து பிழைக்க வேண்டியது இருக்கிறது இது தமிழனுக்கு அவமானில்லையா ? இவன் மட்டுமில்லை பல கூத்தாடிகளின் புகைப்படமும் இருக்கிறது. இதே தமிழனின் புகைப்படத்தை வெளி மாநிலங்களில் போட இயலுமா ? இதை தமிழன் சிந்திக்க மறுக்கிறான். தமிழ் நாட்டில் வந்தவனை எல்லாம் வளர்த்து விடுவதில் மதுரைக்காரர்கள்தான் முன்னிலையானவர்கள்.

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

கோனாபட்டு, கோபக்காரன் கோதண்டம்


மொடிச்சியப்பனும், கலிவரதனும் அபுதாபி விமான நிலையத்துக்கு காரில் போய்க் கொண்டு இருந்தார்கள்.
டேய் கலிவரதா அந்தா... சிக்னல்ல நொங்கு வித்துக்கிட்டு நிக்கிறானே கோதண்டம் பெருங்கோவக்காரன்.
அவனா,,, கோனாபட்டுக்காரன்ல... அப்புடியென்ன... கோவப்பட்டான் ?

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

கலாச்சாரக் கொலையாளிகள்ந்த கூத்துகளை படிச்சேளா ? கூத்தாடிகிட்டே ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டே போவான்னு ஒரு தலைவர் சொன்னது நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு நிரூபணம் ஆச்சு ? அதனுடைய பிரிவுகளில் இதுவும் ஒன்று. நடிகர்-நடிகைகளை பார்த்து முடி வெட்டிய, தோடு போட்டுக் கொண்ட. தாடி வளர்த்துக் கொண்ட, உடையணிந்து கொண்ட, தலையில் வண்ணம் அடித்துக் கொண்ட, சால் போடாமல், கை இல்லாத ஜாக்கெட் போட வாழப்பழகிய இன்றைய இளைய சமூகம் நாளை இதையும் கடைப்பிடிக்காது என்பது என்ன நிச்சயம் ?

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலர்


ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் நபர்களை பார்த்தீர்களா ? இவர்கள் தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் எவ்வளவு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து இருப்பீர்கள். இவளது கணவன் போகக்கூடாத இடத்துக்கு செல்கிறார் மனைவி தடுத்தும் கேட்காமல் செல்கிறார் உடன் மனைவி தனது தந்தையிடம் வந்து அழுது கொண்டே முறையிடுகிறாள் அவரும் மருமகனை போகவிடாமல் தடுக்க சொல்கிறார்.

வியாழன், பிப்ரவரி 13, 2020

ஆரவல்லி என்ற சூரவல்லிரவல்லி நாம இரண்டு பேரும் இப்படி ஆடு மேய்க்கும்போது பேசிப்பழகுறது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் ?
விளக்கமாரு நஞ்சுரும். உங்க அப்பா பார்த்தால் என்ன ஆகும் ?
பழைய செருப்பு பிஞ்சுரும்
அப்படினா நாம என்னதான் செய்யிறது செங்கோடா ?

சனி, பிப்ரவரி 08, 2020

நன்நாள் வாழ்த்துகள்இன்று 08.02.2020 முதல் வருட திருமணநாளை தங்களது செல்வமகள் T.Krishanya-வுடன் கொண்டாடும் எங்கள் வீட்டு செல்வங்கள் தமிழ்வாணன்-பிரியங்கா சீரும், சிறப்புமாய் வாழ இணைய உறவுகள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டி...

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

தமிழுக்கு அஞ்சலி


திருச்சி என்றால் வலைப்பதிவர்களுக்கு நினைவில் வருவது புகைப்படச்சித்தர் திருமிகு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்தான் இன்று (02.02.2020) அவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்.

வியாழன், ஜனவரி 30, 2020

மகா நடி’’கண்


ட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் இந்த நடிகனின் நடிப்பாற்றல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து இருக்கிறது அதாவது இவருக்கு வசனம் கொடுக்கப்படவில்லை. கொடுத்தால் சிறப்பாகவே செய்திருப்பார்.

வெள்ளி, ஜனவரி 24, 2020

செங்கல்பட்டு, செங்கல்சூளை செங்கல்வராயன்வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு ? எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை. கல்யாணத்திற்குப் போனால் திரும்பும்போது செருப்பு இருக்காது. இதனாலேயே எனக்கும், மனைவி செங்கமலத்துக்கும் தினம் சண்டை வரும். ஆத்திரமாய் வந்தது. இந்தச் செருப்பாலே என்னோட சொத்தில் பாதி அழிந்திருக்கும். நான் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறேன். நானும் மனைவியும்தான் பார்த்துக் கொள்கிறோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. செங்கமலமும் சரி என்றாள்.

சனி, ஜனவரி 18, 2020

மலேஷியாவில், மகிழ்ச்சியாய்...


2013 - Emirates Etihad Airways-ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்... என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே... ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...
Related Posts Plugin for WordPress, Blogger...