தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 26, 2014

சிறையிலிருந்து, சின்னக்குயில்.


மனிதன், விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான் பிறவற்றை உணர்ந்து பார்க்கும் ஆற்றல் உடையவன் ஆகவே அவனுக்கு ஆறறிவு, என்று சொல்லிவிட்டு போனமனிதன், தனது சுயநலத்திற்காக விலங்குகளை கூண்டில் அடைத்து ரசித்துப்பார்க்கவும் சொல்லிவிட்டு போனானா ? காலம்காலமாய் ரசிக்கும் மானிடா நம்மால் ஒரு ½ மணிநேரத்திற்கு இந்தக்கூண்டுக்குள் இருக்கமுடியுமா ? இறைவன் நம்மைப்போல்தான் விலங்குகளையும், பறவைகளையும் படைத்தான் அவைகளை சிறைவைக்க யார் உமக்கு அதிகாரம் கொடுத்தது ? ஆறறிவு படைத்தமனிதன் சுயசிந்தனை கொண்டு காட்டைவிட்டு வெளியே வந்து நாட்டை உருவாக்கினான், மிருகங்களும் காட்டைவிட்டு வெளியே வந்தால் நமது நிலை ? நமக்கு பேசும்சக்தி உள்ளதால் பேசித்தீர்க்கிறோம், அவைகளும் பேசினால் ? இறைவன் படைத்த பூமியில், நீயும் நானும் சமநிலை என்றுகூட சொல்லலாம் ? யார் வெற்றி பெறுவார் ? என்பது வேறுவிசயம் வீடுகளில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்ப்பவர்களே, அவைகளுக்கு முழுசுதந்திரம் கொடுங்கள் முடிந்தால் விடுதலையே கொடுங்கள் கொடுக்கமனம் வரவில்லையெனில், ஒரு ½ மணிநேரம் கூண்டுக்குள் வேண்டாம் வீட்டு அறைக்குள் இருந்து பாருங்கள், அந்தஅனுபவம் சொல்லித்தரும் ஆயிரம்"வலி"கள்.
Video
(Please ask Audio Voice)


4 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான சிந்தனை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஐயா, நீங்க எப்ப படிக்கிறீர்கள் ? வாழ்த்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அவரவர்களுக்கு வரும்போதுதான் அந்தந்த வலிகள் தெரியும்.

    பதிலளிநீக்கு
  4. பட்டால்தான் தெரியும், பல்வலியும்.

    பதிலளிநீக்கு