முரளி, மாஞ்சூர்
நிறுவனத்தில் வேலை செய்கிறார், வீட்டுக்கு வந்தால் இவர் எந்த நேரமும் T.V யில் நாடகம்
பார்த்துக் கொண்டே........ இருப்பார், பெரும்பாலும் கட்டிலில் உட்கார்ந்து தான்பார்ப்பார்,
இப்படியே....... உட்கார்ந்து, உட்கார்ந்து, முதுகு வளைந்து கேள்விக்குறி போல்
ஆகிவிட்டது நடக்கும்போது குனிந்தே நடக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.
இவரது நண்பர்கள்
கருப்புராஜா, ராஜ்குமார், முருகேசன், குருசாமி, அங்குச்சாமி ஆகியோர் T.V பார்க்க வேண்டாமென
எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டார்.
திடீரென முதுகுவலி வந்து விட்டது, டாக்டரிடம்
போய் கேட்டார் அவரும் எல்லா விசயத்தையும் கேட்டு விட்டு இனிமேல் T.V யே, பார்க்க கூடாது என்று
சொல்லி விட்டார், வீட்டுக்கு வந்து T.V யை, விற்று விட்டு ஒரு COMPUTER வாங்கி வந்தார், உடன் NET இழுத்து நாடகம் பார்க்க
ஆரம்பித்தார்....... பிறகும் முதுகுவலி போகவில்லை என்ன செய்யலாம் ? என யோசித்துக் கொண்டு
இருக்கும் போது COMPUTER ரில் T.M. சௌந்தரராஜன் வந்து ஒரு
பாட்டுப்பாடினார்.
கேள்விக்குறி போல் முதுகு
வளைந்தது தோழா... எதற்காக ?
அன்றுதான், அவருக்கு
எல்லாமே புரிந்தது. மறுநிமிடமே COMPUTER ரை விற்றதோடு இல்லாமல்,
கையிலிருந்த SUMSUNG DUOS MOBILE லையும் விற்று விட்டார்,
இப்பொழுது TELEPHONE னில், மட்டுமே
பேசுகிறார், எது எப்படியோ இதற்கெல்லாம் காரணமான...
ஐயா T.M. சௌந்தரராஜன்
அவர்களுக்கு நானும்
மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.
காணொளி
நானும் சொல்லி விடுகிறேன்...
பதிலளிநீக்குநன்றி...
நன்றிக்கு, நன்றி
பதிலளிநீக்குi like this one very very nice
பதிலளிநீக்குसुक्रिया (Thanks)
பதிலளிநீக்குNice to read
பதிலளிநீக்குHeading is rhyming good
பதிலளிநீக்குநன்றி, நண்பா் சாகுல் ஹமீது.
பதிலளிநீக்குநண்பர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காத நண்பர்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே....
பதிலளிநீக்கு