தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 18, 2014

மோகனின் மோகம், மோகனாவுடன்

20.10.1986

தொட்டிச்சியம்மன் துணை.
 
     என் மோகப்பசி மோகனாவுக்கு, உன் மோகமுள் மோகன் மோகத்துடன் எழுதுவது, நான் உன் நினைவால் வாடுகிறேன், நீ உன் அம்மா வீட்டுக்கு சென்று, இன்றோடு ஒன்பது மாதங்களாகி விட்டது, இதுவரை ஒரு லட்டர்கூட போடவில்லை, நானும் ஆபீஸில் வேலை கூடிவிட்டதால், போடலாமென இருந்து விட்டேன், அடுத்த அபார்ட்மெண்ட் அபர்ணாதான், எனக்கு சோறு சமைத்து வைக்கிறாள், அடுத்த மாதம் அவளுக்கு பிரசவமாம், மேலும் மூன்று வருடங்களாக லீவு கிடைக்காத அவளுடைய கணவன் மருதகாசிக்கு, லீவு கிடைத்து விட்டதாம் அதனால் அடுத்த மாதம் 18 ம் தேதி துபாயிலிருந்து வருகிறாறாம், ஆகையால் அடுத்த மாதம் முதல் சமைத்துப் போட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று வருத்தப்பட்டு, உனக்கு கடிதம் போட்டு, 19 ம் தேதி உன்னை வரச்சொல்லச் சொன்னாள், காரணம் 20 அல்லது 21 ம் தேதி குழந்தை பிறக்கலாமென, நமது குடும்ப டாக்டர் காமினி சொன்னார், மேலும் அபர்ணாவுக்கும் உன்னை பார்க்க வேண்டுமென ஆவலாக இருக்கிறதாம், பாவம் அவளும் என்ன செய்வாள், அவள் அம்மா அலமேலுவையும், அடுத்ததெரு அழகர்சாமி கூட்டிட்டு ஓடிட்டான், துணைக்கு இருந்த அவள் தங்கச்சி சீமாவும் சீரியல்ல நடிக்கப்போயி சீரழிஞ்சு போயிட்டா, அவள் அப்பாவும் வேலூரிலிருந்து வர இன்னும் ரெண்டு மாசம் இருக்காம், அவளுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா... நம் அன்பு மகன் அன்பரசன், எப்படி இருக்கிறான் ? அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை, அதனால நீ கண்டிப்பா அடுத்த மாதம் 19 ம் தேதி வரவும், என் அன்பு மகனுக்கும், உனக்கும் என் ஆசை முத்தம்.19 ம் தேதி காலை, நான் ரயில்வே ஸ்டேஷனில் உனக்காக காத்திருப்பேன்.
 
                                  இப்படிக்கு
உன் ஆசை, மோகனாவின் மோகன்.
 
சாம்பசிவம்-
துபாய்க்காரன், எதுக்கு வர்றானாம்  புள்ளைக்கு பேர் வைக்கவா ? வச்சுட்டு, அப்படியே அவனை பாதயாத்திரையா, காசிக்கு போகச் சொல்லுஞங்க, அவன் கர்மமெல்லாம் தொலையட்டும், 
இன்ஷியல்ல கூட பிரச்சனை இல்லை போலயே !
 
குறிப்பு- 19 ம் தேதி மோகனா வருவாளா... அல்லது கடிதம் ஏதும் வருமா ? எப்படியும், அடுத்த வாரம் நமக்கு தெரிந்து விடும், நல்லதே நடக்கட்டுமென, நல்ல பெருமாளை பிரார்த்திப்போம்

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வடை போச்சேன்னு சொல்றது மாதிரி இருக்கு, நன்றி.

   நீக்கு
 2. ம்ம்ம் புரிந்துவிட்டது கதையின் முடிவு! எங்கோ செல்கின்றது! அவள் வருவாளா?! கண்டிப்பாக வர மாட்டாள் புத்திசாலியாக இருந்தால்!

  நல்ல அருமையாக எழுதி உள்ளீர்கள்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி ஐயா, அடுத்தவாரம் என்னஆகும் ? கொஞ்சம் யூகித்து வைங்களேன்.

   நீக்கு
 3. அடடடடா ! இப்படியெல்லாம் கூட யோசிச்சி எழுதுவாய்ங்களோ ?!

  அவள் வரவாளா இல்லை இவர் கீழ் அப்பார்ட்மெண்ட் கமலா யாரையாவது சமையலுக்கு " சேர்த்து " கொள்வாரா ?!!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 4. எப்படியும், அடுத்தவாரம் நமக்கு தெரிந்துவிடும், நல்லதே நடக்கட்டுமென நல்லபெருமாளை பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அவள் வரவில்லையென்றால், இன்னும் எத்தனை பேரை "சமையலுக்கு" இவர் சேர்த்துக்கொள்ளப்போகிராரோ???

  கண்டிப்பா வந்துடுவாள் இல்ல!!!!

  பதிலளிநீக்கு
 6. தெரியலையே.... பாஸூ எதுக்கும் அவகிட்டேயே போண் செய்து கேளுங்களேன். இதான் அவநம்பரு - 00971 55 74 666 13

  பதிலளிநீக்கு
 7. சிறந்த இலக்கியக் கடிதம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஸார் தூக்கி விடுறீங்களா ? இல்லை தூக்கி விட்ருவீங்களா ? ஒண்ணுமே புரியலே......

   நீக்கு
 8. என்னங்க நடக்குது இங்கே! அந்தக் கடிதம் உண்மை தானா! பின்பக்கம் மட்டும் வைத்துக் கொண்டு கற்பனையா!! எதுவாகினும் ரசிக்கும்படி இருக்கிறது. மோகனா வருவாள் அவளது ஒண்ணு விட்ட மாமா பையனோடு!! இந்த ஆளுக்கு இப்படி தானே வேணும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு ஏற்கனவே மோகனாவை தெரியுமா ஸார் ?

   நீக்கு
 9. தள வடிவமைப்பு மிக மிக அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸார், எல்லா புகழும் படைத்தவனுக்கே......

   நீக்கு
 10. இப்படி கூட ஒளிவு மறைவில்லாமல் ஒருவர் கடிதம் எழுதினால் மோகனா வருவாள் என அப்படி எதிர்பார்க்க முயும்?

  பதிலளிநீக்கு
 11. சிலபேர் இப்படித்தான் ஐயா, என்னைப்போல பாமரனாக இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 12. //அபர்ணாவுக்கு அடுத்த மாசம் பிரசவம். ’மூனு வருஷம்’ லீவு கிடைக்காத அவள் புருஷன் அடுத்த மாதம் துபாயிலிருந்து வருகிறான்......//

  அடி வயிற்றில் ‘பகீர்!’. நாட்டுல என்னவெல்லாம் நடக்குது!

  பதிவு வெகு சுவாரசியம். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா காமக்கிழத்தன் அவர்களுக்கு பதிவின் ''முக்கியமான விசயத்தை'' சரியாக கணக்கெடுத்து சொன்னீர்கள் அதற்காக 100 நன்றிகள்.

   நீக்கு
 13. உங்களுக்கு சமைக்க தெரியாததால் மோகனா வருவது சந்தேகமே... மோகனா தாய் வீட்டில் சமைப்பதில்லை என்பது மோகனுக்கு தெரியாமல் போனது எப்படி?

  பதிலளிநீக்கு
 14. கொஞ்சம் பொறுங்க நண்பா... எப்படியும் ரெண்டு, மூணு நாளுக்குள்ளே தகவல் வந்துடும்.

  பதிலளிநீக்கு
 15. மோக முள் மோகனுக்கு மோகப் பசி மோகனா எழுதிக் கொண்டது ...
  உங்கள் கடிதாசி கிடைச்சுது .அங்க என்னால வர ஏலாது .காரணம் ,அன்பரசனுக்கு தம்பி பாப்பா பொறக்கப் போவுதுங்கிற சந்தோசத்தில் இருக்கோம் ,பொறக்கப் போற பிள்ளைக்கு நீங்க அப்பனில்லேன்னு தெரிஞ்சா ,நீங்க எப்படி சந்தோசப் படுவீங்கன்னு தெரியலே !
  இப்படிக்கு ,
  மோகனா

  பதிலளிநீக்கு
 16. பகவான்ஜீ ஸார் தங்களுடைய கருத்துரையை படித்துவிட்டு சந்தோசபட்டதை விட ஆச்சர்யம்தான் மேலோங்கி இருக்கிறது, காரணம் என்னவென்று ? அடுத்தபதிவை காணும்போது விளங்கும் தங்களின் பெயரில் ஏதோ ஒரு சூட்சுமம் இருருக்கிறது.....

  பதிலளிநீக்கு