தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 13, 2014

ஹிந்தமிழ்


ஹிந்தி மொழியால், தமிழ் அழிந்து விடுமென ஒரு காலத்தில், கதை கட்டி விட்டவர்களை நம்பி ஹிந்தியை எதிர்த்தார்கள் தமிழ்நாட்டில், அன்றைய சூழ்நிலைக்கு ஒருவேளை அது சரியாக இருந்திருக்கலாம்? தமிழர்கள் பிழைப்பு தேடி, அரக்கோணத்தை தாண்டி போனதில்லை காரணம், மொழி ஒரு முக்கிய பிரச்சனை. ஹிந்தி ஒழிப்பை ஆதரித்த மக்கள், தங்களது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை நினைத்துப் பார்க்க ம(றுத்)றந்து விட்டார்கள், ஆனால் ஹிந்தியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள்... 

தங்களது மக்களின் எதிர்காலத்தை கணக்கில் வைத்தே பாடுபட்டார்கள், என்பது அறிவாளிகளின் மூளைக்கே விளங்கும், முட்டாள்களின் மூளைக்கு I THING விளங்காது.

டெல்லி பாராளுமன்றத்தில், இலக்கணப்படி ஹிந்தி பேச, எழுத, படிக்க தெரிந்த ஒரு தமிழன் யார் ? சிந்தித்துப்பார் தமிழா... புரிந்திருக்குமே யாரென்று ? 

(நானும் கூட பெருமை கொள்கிறேன், என் இன தமிழன் ஒருவன் இருப்பதில்) 

ஆனால் இன்று எங்கெல்லாம் மனித ஜீவராசிகள் வாழ்கிறார்களோ ! அங்கெல்லாம் தமிழன் தனது தடம் பதிக்கின்றான். 

அரபு தேசங்களில் வேலை செய்யும் என் இன தமிழர்களே உங்களுக்குத் தெரியும் அரேபியர்கள், மட்டுமல்ல ஈரானியர்கள் கூட நம்மிடம் ஹிந்தியில் பேசும்போது நாம் பதில் பேசமுடியாமல், எவ்வளவு வெட்கப்பட்டு இருக்கிறோம், வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், நாளையும் வெட்கப்படப் போகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்தி பேசத்தெரியாத மனிதர்கள் தமிழர்க(ல்)ள் மட்டுமே... அரபு நாடுகளில் நமது இந்திய தூதரகத்தில் கூட ஹிந்தி பேசத்தெரியாத காரணத்தால் நமது நாட்டுக்காரர்களே புழுவைப்போல ஏளனமாக பார்க்கப்படும் இந்தியர் தமிழர்கள் மட்டுமே... உண்மைதானே...  

நாம் வெளியே போகவேண்டாம் இந்தியாக்குள்ளேயே ரயிலில் டெல்லியை நோக்கிப் போகிறோம், அந்த வகுப்பில் நான்கு நபர்கள் மட்டுமே பயணிக்கிறோம், ஒரு தமிழர், ஒருவர் கன்னடர், அடுத்தவர் மலையாளி, மற்றவர் தெலுங்கர், இதில் தமிழரைத் தவிர மற்ற மூவரும் பொது மொழியான ஹிந்தியில் பேசிக்கொண்டு வருவார்கள், தமிழன் அந்த இடத்தில் ஒதுக்கப்படுகிறான், அவமானமும் படுகிறான், இன்னும் சொல்லப் போனால் மூவரும் பேசி திட்டம் தீட்டி தமிழனை சதிக்கவும் முடியும், ஏனெனில் தமிழனுக்கு ஹிந்தி தெரியாதென்பது பொது மரபு .

(தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' இந்த வசனத்தை இந்த இடத்தில் நினைத்துப்பார்) 

ஏன் இவர்களுக்கு தாய்மொழி கன்னடம் இல்லையா ? மலையாளம் இல்லையா ? தெலுகு இல்லையா ? தமிழனுக்கு மட்டும்தான் தாய்மொழி இருக்கிறதா ? இந்தியாவில் 1,652 மொழிகள் இருக்கின்றபோது...

(இதில் அங்கீகாரம் பெற்றவை 18) 

ஏதாவது ஒரு மொழி பொதுவாக இருந்தே தீரவேண்டும் அப்பொழுதுதான் நாம் மனதால் இணைய முடியும், அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்பதென்பது இயலாதகாரியம், அந்தப் பொதுமொழி ஏன் ஹிந்தியாக இருகக்கூடாது ?

தமிழா, ஹிந்தி என்ன உகாண்டா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொழியா ? அதை நாம் ஒதுக்குவதற்கு அதுவும் இந்திய மொழிதானே.. 

அப்படிப் பார்த்தால் உலகையே அடிமையாக்கி மொழிகளை அழித்து வருகிறதே... ஆங்கிலம் அதையேன் ஏற்றுக்கொண்டாய் ? 

தமிழா.. தமிழ்நாட்டில் எத்தனை வீட்டில் குழந்தைகள் அம்மா-அப்பா என்று அழைக்கிறது ? எல்லாமே MAMMY-DADDY என்றுதான் அழறுகிறது நீயும் அதைத்தானே விரும்புகின்றாய், பாலகுமாரா.... INCLUDING தமிழச்சி.

சாம்பசிவம்-
ஹிந்தியை எதிர்ப்பவர்கள், ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, இதை மட்டும் எழுதுவதற்கு உபயோகப்படுத்துவது ஏன் ?

CHIVAS REGAL சிவசம்போ-
சிரிக்கும்போது கூட, ‘’ஹா’’ தானே யூஸ் பண்றீங்கே... எங்கே ? அது வேணாமுன்னு, கா, கா, ன்னு சிரி பாப்போம், காக்கா தான், வந்து நிக்கிம், இதையெல்லாம் கேட்டா,, குடிகாரப்பய ஒளர்ர்ர்ர்ர்ர்ரான்னு சொல்வாங்கே...

காணொளி

72 கருத்துகள்:

 1. இந்தியை எதிர்ப்பவர்கள் ஜ,ஷ,ஜ,ஹ எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்தையும் கூறி ஹாசியத்துடன் முடித்து இருக்கிறீர்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது சரி தான் என்றாலும் நாம் பொதுவான மொழியை கற்றுக் கொள்வதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

  //ஏதாவது ஒருமொழி பொதுவாக இருந்தே தீரவேண்டும் அப்பொழுதுதான் நாம் மனதால் இணையமுடியும், அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்பதென்பது இயலாதகாரியம், அந்தப்பொதுமொழி ஏன் ஹிந்தியாக இருகக்கூடாது //

  நல்ல அருமையான பகிர்வு. நன்றி

  பதிலளிநீக்கு
 3. உடன் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரியாரே...

  பதிலளிநீக்கு
 4. சிறப்பாக அலசி உள்ளீர்கள்.
  தமிழில் இருந்து
  இந்தியக் குடும்ப மொழிகளை
  வெளியேற்ற முன்
  ஆங்கிலத்தைத் தமிழில் இருந்து
  கழட்டி விடுவதே மேல்...
  ஹிந்தி+தமிழ்=ஹிந்தமிழை விட
  தமிழ்+ஆங்கிலம்=தமிங்கிலமே
  தமிழை அழிக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஐயா, எனது பதிவைவிட தங்களது கருத்துரையே பலவிசயங்களை சொல்கிறதே...

   நீக்கு
 5. சரியாகச் சொன்னீர்கள்.. வலிமையான எழுத்துக்கள்..
  இனிய பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொன்னது தங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென தெரியும் ஐயா, காரணம் தாங்களும் என்னைப்போலவே அரபுநாட்டில் மொழியின் காரணமாக அவமானப்பட்டு இருப்பீர்கள், வெளிநாடுகளில் வாழும் பலஆயிரம் தமிழர்களுக்கும் இதுபிடிக்கும் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. நான் சொல்ல வந்த எல்லாம் அருமையாக இங்கே சொல்லியுள்ளீர்கள் மிக்க நன்றி!! முக்கியமாக தம் மக்கள் நலனுக்காக நாட்டு மக்கள் நலனை பலி கொடுத்த மகராசனைப் பற்றி குறிப்பிட்டதும், பாடலும் பொருத்தம்.

  என் பதிவின் மூலம் ஹிந்தி எதிர்ப்பவர்களிடமிருந்து சில எதிர் கருத்துக்களை தெரிந்து கொண்டேன்.

  அவர்கள் சொல்வது:

  ஹிந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

  வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் சொற்பம், அவர்களுக்காக மீதமுள்ள அத்தனை பேரும் எதற்காக ஹிந்தி கற்க வேண்டும்?

  ஒரு மாணவன் ஹிந்தியை கற்பதற்காக நேரத்தையும், சிந்திப்பதையும் வீணடிப்பதற்குப் பதில் கணிதம்,அறிவியல் என்று வழக்கமான பாடத்தில் மேலும் கவனம் செலுத்தலாமே?
  ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலை பார்க்க வேண்டிய போது அங்கே போய் பேசி பழகி எளிதில் மூன்றே மாதத்தில் பேசக் கற்றுக் கொள்ளலாமே?

  ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் பேசப் படுவதில்லை.
  ஹிந்தி பகுதிக்கு போக அம்மொழியை கற்க வேண்டுமானால், மற்ற நாடுகளில் பணி புரிய ஜப்பானீஸ், ரஷ்யன், ஜெர்மன் என்று எல்லா மொழிகளையும் இப்போதே கற்க வேண்டும் என்பீர்களா?

  ஊருபட்ட ஹிந்தி காரன் சென்னையில் கட்டுமான கூலியாகவும், பானிபூரி விர்பபனையாளர்களாகவும் பிழைக்கிறான், அங்கே வேலைவாய்ப்பு இருந்திருந்தால் அவன் ஏன் இங்கே வர வேண்டும்?

  இதையெல்லாம் படித்துவிட்டு, தீர்ப்பை அவரவரே எழுதிக் கொள்ளட்டும் என விட்டுவிட்டேன்.

  நீங்கள் எழுதியதில்,

  மற்ற மூன்று தென் மாநிலத்தவர் ஹிந்தி பயிலும் போது நாம் மட்டும் எதிர்ப்பது ஏன், ஆங்கிலத்தை ஆவுக்கு மீறி ஆராதிப்பது ஏன்?

  என்ற கேள்விகள் நெத்தியடி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் முதற்கண் நன்றி திரு.ஜெயதேவ் பதிவினை ஆழமாக உணர்ந்து படித்திருக்கிறீர்கள், தாங்கள் தொடர்ந்தால் சந்தோசமே...

   நீக்கு
 7. வணக்கம்
  நல்ல தகவலை அனைவரும் புரியும்படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் முதலில் தாய்மொழி அடுத்தது பொது மொழி... பகிர்வுக்கு நன்றி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. நண்பரே இந்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அது திணிக்கப் படும்பொழுது அதை எதிர்க்கிறார்கள்.ஒரு மொழியினை புறந்தள்ளுவதற்காக, ஒரு மொழியை கட்டாயப் படுத்தி திணிக்கக் கூடாது அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, நான் தமிழ்ப்பற்றாவன் தமிழ் என்வாழ்வில் நிறைய கலந்து இருக்கிறது தமிழுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன், இது ''எனது மகன் தமிழ்வாணன் மீது சத்தியம்'' ஹிந்தியின் அவசியம் தமிழ்நாட்டை விட்டு வெளியே வரும்போதுதான் தெரிகிறது, அதன் அவசியத்தை பதிவில் சொல்லியிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
  2. //ஒரு மொழியினை புறந்தள்ளுவதற்காக ஒரு மொழியை கட்டாயப் படுத்தி திணிக்கக் கூடாது அல்லவா//
   சார் தமிழை புறந்தள்ளி ஹிந்தியை ஏற்றுக்கும் படி இந்திய அரசு ஒரு போதும் சொல்லவேயில்லை. ஆனா சொந்த மொழி தமிழை புறந்தள்ளி ஆங்கிலத்திற்கு பாத பூஜை செய்தவங்க தமிழகம்.

   நீக்கு
  3. உண்மைதான் Mr. வேகநரி, தமிழை மட்டுல்ல, எந்த மாநில மொழியையும் புறந்தள்ள சொல்லவில்லை மத்தியஅரசு நினைவில் கொள்க...

   நீக்கு
 9. அருமையான பதிவு! இதுல பாத்தீங்கனா.....மற்ற தென்னகத்தவர்கள் அவங்க ஹிந்தில பேசினாக் கூட தங்களுடைய தாய் மொழிய விட்டுக் கொடுக்கறதே கிடையாது...ஆனா நாம தமிழர்கள், ஹிந்தியை எதிர்க்கிறோம்....ஆனா அதே சமயம் தமிழையும் கொல்கின்றோம்!....மொழிகள் பல அறிந்திருப்பது மிக மிக அவசியம் உலகம் சுற்றி வெற்றி பெற...ஹிந்தியை எதிர்பதில் இல்லைத் தாய் மொழிப்பற்று! அதையும் கற்று உபயோகப்படுத்தி வெற்றி பெருவதில் இருக்கிறது "தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்க" மிகவும் சரியே தாங்கள் சொன்னது! பிற மொழிகள் கற்பதால் உலகம் சுற்றி எல்லா இடங்களிலும் கால் பதித்து தமிழன் என்று கால் பதிக்க முடியும் தான். அதே சமயம் ஹிந்தி நமது மொழியை டாமினேட் செய்வதையும் அங்கீகரிக்க வேண்டாம் எனபதே எமது தாழ்மையான கருத்து! ஏனென்றால் நாம் கூட ஹிந்தியைக் கற்று விடுவோம்...ஆனால் அவர்கள் நமது மொழியைக் கற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் கூடவே எழுகின்றதே நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தமிழை உணவாகவும், ஹிந்தி மட்டுமல்ல மற்றமொழிகளை அவசியப்படும்போது ஊறுகாய்போல உபயோகப்படுத்தவேண்டும் என்பதுதான் என்வாதமே.. இந்தியாவில் தமிழ்நாட்டைத்தவிர அனைத்து மாநிலத்தவரும் ஹிந்தி பேசுகிறார்கள், அவர்களின் தாய்மொழி தாழ்ந்து விட்டதா ? தாங்களுக்கு தெரியும் மலையாளிகளோடு நெருங்கியவர்கள் மலையாளம் வாழ்க என தமிழர்களைப்போல் ஒருபோதும் கோசம் போட்டதில்லை ஆனால் மலையாலத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் உண்மைதானே...

   நீக்கு
  2. துளசிதரன் ஐயா சொல்வது போல், "ஹிந்தியை எதிர்க்கிறோம்" ஆனால் ஆங்கிலத்தை வரவேற்கிறோம். இப்பொழுதெல்லாம், எனக்கு தமிழ் தெரியாது என்று கூறுவது நகரிகமாகி விட்டது.

   நீக்கு
  3. கில்லர் ஜி நீங்கள் சொல்லுவது மிகச் சரியே! ஊறுகாய் ப் போல் தொட்டுக் கொள்ளலாம்....அதை நாங்களும் வர வேற்கின்றோம்! பல மொழிகள் கற்பது மிகவும் நல்லதே அதுவும் உலக அரங்கிற்கு....

   கேரளாவில் மும்மொழித்திட்டம்தான்...பள்ளிகளில்...ஆங்கிலம், தாய்மொழி மலையாளம், ஹிந்தி மூன்றும் கற வேண்டும்....என்றாலும் அங்கு ஹிந்தி ஆட்சி மொழியாகவோ இல்லை ஆளுமையோ செய்ய வில்லை....தாங்கள் சொல்லுவது சரியே....ஆனால் இங்கு தமிழ் நாட்டில்....

   சொக்கன் சார் சொன்னதையும் நாம் யோசிக்க வேண்டும் அல்லவா? மலையாளிகள், தங்கள் எந்த மொழி கற்றாலும் தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்தான். ஆனால் தமிழர் தமிழ் தெரியாது என்று கூறுவது நாகரிகம் என்று கருதுகின்றார்களே!

   தங்களது பதிவு நிஜமாகவே நல்ல பதிவு கில்லர் ஜி...நிறைய விஷயங்களை யோசிக்க வைக்கின்றது!

   நீக்கு
 10. பெயரில்லா7/12/2014 11:03 AM

  நீர் சொல்லுவது போல் யாரும் ஹிந்தியை எதிர்க்கவில்லை கட்டாயம் செய்யாதே என்பதுவே புரிகிறதா? அவ்வ்! சாம்சன்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உமது பெயர் சாம்சனோ ? நண்பரே இவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறேன், பிறகும் இப்படி கேட்கிறீர்களே ? தமிழன் முதன் முதலாக அரபு நாடென்றே வைத்துக்கொள்வோம் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறான் பாஸ்போர்ட் அதிகாரி அரபியர்கள் நமது தமிழனிடம் கேட்பார் ''தும் கிதர்ஸே ஆத்தாஹே ? '' தமிழன் தெம்மே,, தெம்மே எனமுழிப்பான் (நானும்கூடத்தான் ஒருகாலத்தில்) பக்கத்தில் நிற்கும் மலையாளியோ, தெலுங்கரோ நமக்காக அரபியிடம் பதில் சொல்வான் சென்னையிலிருந்து "வந்திருக்கிறான்" என, ஏன் ? அவன் இந்தியன்தானே, இவண் அரபிதானே அவர்கள் பேசும்போது நாமும் பேசினால் என்ன நண்பா ? சரி தங்களுக்காகவே மொழிகளை குறித்து நிறைய பதிவிடப்போகிறேன் கருத்துரையில் எல்லாமே சொல்லமுடியாது தொடந்து படியுங்கள்..

   நீக்கு
  2. பெயரில்லா7/12/2014 3:22 PM

   உம்முடைய அணுகுமுறை வெகு அருமை இதுபோல் அனைவரும் இருந்தால் அனைவரும் நண்பரே ... நன்றி! சாம்சன்.

   நீக்கு
  3. நண்பர் சாம்சனுக்கு தாங்கள் என்னை திட்டியிருந்தாலும் தங்களது கருத்தை வெளியிடுவேன், கருத்து சுதந்திரம் உள்ள நாடு நமதுநாடு தங்களது கருத்தை சொல்ல தங்களுக்கும் உரிமையுண்டு புரிந்துகொண்டு நண்பனாகி விட்டீர்கள் நன்றி தொடரட்டும் நட்பூ....

   நீக்கு
 11. அருமையான சமூக சிந்தனை. நாடுகள் பிரிக்கப்பட்ட போதுதான் பிரிவினையே தோன்றியது. ஆதி மனிதன் இன மத மொழிகளற்ற கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தான். அப்போது பிரிவினையும் இல்லை. வேறுபாடுகளும் இல்லை. இப்போதுதான் நான் எனது என்று ஏதோ ஆண்டுகள் தாண்டி வாழப்போவதாக நினைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். என் செய்வது இப்படியாவது அடி மேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவது போல் நகர்த்தினால் அன்றி திருத்த முடியாது. யதார்த்தம் பேசும் பதிவு. தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி சகோதரியே... தங்களது கருத்து மிகச்சரியே மொழிகளுக்காகவே பலபதிவுகள் எழுதலாமென தீர்மானித்து விட்டேன் தொடருங்கள் சகோதரி...

   நீக்கு
 12. ரயில் பயணம் - நல்ல உதாரணம்! அதுவே வாழ்க்கைப்பயணத்திற்கும் பொருந்தக்கூடியதுதான்! யதார்த்தமான செய்திகளை சொல்லியதற்கு நன்றி மகிழ்ச்சி! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 13. இந்தியும் ஒரு மொழி! பல்வகை மொழிகளை கற்கும்போது இந்தியை மட்டும் எதிர்ப்பது புரியவில்லை! இந்தியை எதிர்த்த அரசியல்வாதிகள் இன்று வளர்ந்துவிட்டார்கள்! அவர்களோடு கோஷம் போட்டு படிக்காமல் விட்ட தொண்டர்கள் இன்னும் தொண்டர்களே! விருப்பம் உள்ளவர்கள் இந்தி மட்டுமல்ல இன்னும் பல மொழிகளை கற்கலாம் என்பதே என்னுடைய கருத்தும். நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தும் சரியே சுரேஸ் இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதனுக்கு சமம் என்பது மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழி.

   நீக்கு
 14. சிறந்த கருத்தை தெரிவித்துள்ளீர்கள்.
  மிக பெரும்பான்மை மக்கள் பேசும் இந்திய மொழியான ஹிந்தியை தமிழர்கள் கற்று கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வேகநரி, தங்களது கருத்துரைக்கு நன்றி, தொடரவும்.

   நீக்கு
 15. நண்பர் ஜெயதேவ் தாஸ்
  //ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் பேசப் படுவதில்லை.ஹிந்தி பகுதிக்கு போக அம்மொழியை கற்க வேண்டுமானால் மற்ற நாடுகளில் பணி புரிய ஜப்பானீஸ் ரஷ்யன் ஜெர்மன் என்று எல்லா மொழிகளையும் இப்போதே கற்க வேண்டும் என்பீர்களா?//

  இந்திய மக்கள் மிக பெரும்பான்மையினர் பேசும் இந்திய மொழி ஹிந்தியை தமிழங்க கற்று கொள்வதே நன்மையாது தேவையானது என்கிறபோ, பிற தேச மொழிகள் ஜப்பானீஸ் , ரஷ்யன், ஜெர்மன் இப்போதே கற்க வேண்டுமா என்று கேட்பவங்களை பற்றி ஒன்றுமே புரியல்ல!!!!!!

  //ஒரு மாணவன் ஹிந்தியை கற்பதற்காக நேரத்தையும்இ சிந்திப்பதையும் வீணடிப்பதற்குப் பதில் கணிதம் அறிவியல் என்று வழக்கமான பாடத்தில் மேலும் கவனம் செலுத்தலாமே?//
  ஒரு தமிழக மாணவன் ஆங்கிலம் தனக்கு தெரியும் என்பதை உயர் மதிப்புக்குரிய தகுதியா நம்பி மற்றவங்களுக்கு சினிமா வேடம் காட்டுவதற்கான முயற்சியில் நேரத்தையும் சிந்திப்பதையும் வீணடிப்பதற்குப் பதில் கணிதம்,அறிவியல் என்று வழக்கமான பாடத்தில் மேலும் கவனம் செலுத்துவதோடு இந்திய மொழி ஹிந்தியை கற்க முடியும்.

  பதிலளிநீக்கு
 16. நன்றாக அலசியிருக்கிறீர்கள். மற்ற நன்ற்பார்கள் சொல்வது போல், ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை,ஆனால் அது திணிக்கப்டும்போது மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்.
  அப்படியென்றால், இப்போது தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.
  கட்டாயம் ஆங்கிலம்,ஹிந்தி போன்ற மொழிகள் கற்க வேண்டும், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் தமிழை மிதித்துத் தான் கற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சொக்கன் அவர்களுக்கு, தங்களின் கடைசி வாக்கியத்தை நான் ஆமோதிக்கிறேன்.

   நீக்கு
  2. மிகச் சரியே கில்லர் ஜி. இந்தக் கருத்து...உங்கள் இருவரின் கருத்தையும் ஆமொதிக்கின்றோம்! சூப்பர் ஜி!

   நீக்கு
 17. காலையில் நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சுன்னு தெரியலை ,ஒரு நபர் கமிஷன் விசாரித்தால் தேவலே !
  சரி ,கமெண்டுக்கு வருகிறேன் ...
  ஆடு கூட MAY ன்னு கத்துது ,அதனாலே லண்டனில் அது இருக்க வேண்டுமா ?இல்லை,அதை வளர்க்கும் குப்பனும் சுப்பனும் வெள்ளைக்காரர்களா ?
  பத்து மொழிகள் தேசிய மொழிகள் என்ற பின் ஹிந்தி மட்டும் திணிப்பதேன்?செம்மொழி தமிழ் என்று அறிவித்து விட்டு தமிழுக்கு என்ன மரியாதை தந்தது மத்திய அரசு ?ஒரு மொழியை மட்டும் வளர்க்க நினைப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுமே ஹிந்தியை ஏற்றுக்கொண்டது அந்த மாநிலங்களில் ஒருமைப்பாடு குழைந்து விட்டதா ? இல்லையே பகவான்ஜி தாங்கள்கூட சமீபத்தில் டெல்லி டூர் போனீர்கள் நம்நாட்டு ஹிந்தி தெரியாமல் ஆங்கிலத்தில்தானே பேசினீர்கள் ஒருவேளை ஹிந்தியின் இடத்தில் தமிழ் இருந்திருந்தால் தமிழை ஒழிக்கவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டிய திருந்திருக்குமோ ? தற்காலத்தில் தமிழ் படிக்கத்தெரியாத குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள், முதலில் அதற்க்கு வழிமுறை தேடுவோம்.

   நீக்கு
 18. இப்படி ஒரு பதிவை நான், மோடி அரசு அறிவித்த? உடனே எழுத நினைத்தேன். என் எண்ணம் போலவே நீங்கள் மிக அழகாக எழுதிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரரே...அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 19. இப்படி ஒரு பதிவை மோடி அரசு அறிவிப்பின் ? போதே யோசித்தேன்.
  என் எண்ணம் போலவே மிக அழகாக எழுதிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோ.
  தமிழை வைத்துக்கொண்டு இங்கு மட்டும் தான் வாழ முடியும் அடுத்த மாநில எல்லைக்குள் மிக சிரமம் என்பதை அருமையாக உணர்த்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா....

   நீக்கு
 20. காற்றின் மொழி ஒலியா...? இசையா...?
  பூவின் மொழி நிறமா...? மணமா...?
  கடலின் மொழி அலையா...? நுரையா....?
  காதல் மொழி விழியா...? இதழா...?

  இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்...
  மனிதரின் மொழிகள் தேவையில்லை...
  இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்...
  மனிதருக்கு மொழியே தேவையில்லை...!

  பதிலளிநீக்கு
 21. கவிதை போலவே,,, கருத்துரையை அழகாக இருக்கிறது மனிதன் மொழிகளை வகுக்காவிடில் மௌனமொழியே அழகு.
  ஊமையாய் வாழ்ந்தால் ஊரில் ஏது யுத்தம் ?
  நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 22. எந்த மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பு அடிப்படையாக அமைகிறது.தேவைப்படின் கற்றுக் கொள்வது சிறந்தது. அதன் அடிப்படையில்தான் ஆங்கிலம் முன்னுரிமை பெற்று விட்டது.
  இங்கு பல்லாயிரம் பேர் ஹிந்தி கற்றுக்கொண்டு தேர்வு எழுதுகிறார்கள்.தேர்ச்சியும் பெறுகிறார்கள் ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு சரளமாக பேச தெரிவதில்லை. பல ஆண்டுகள் படித்து தெரிந்துகொள்வதை விட மூன்று மாத டெல்லி வாசம் ஹிந்தி கற்றுக் கொடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் ஐயா, மூன்று மாதத்தில் படித்து விடலாம் என்பதெல்லாம் நடக்காத காரியம் வருடங்கள் உருண்டோடியும் இன்னும் தமிழர்களில் 80 % பேருக்கு கிராமராக ஹிந்தி பேசவரவில்லை என்னையும் சேர்த்துதான் குழந்தை முதல் தொடங்கும் கல்வியே முறையானது நிரந்தரமானதும்கூட....
   குறிப்பு - எனக்கு ஹிந்தி, எழுத 10 % மும், தட்டச்சு செய்ய 50 % மும் தெரியும், இதற்க்கு உதவி நானும், எனது கணனியும் மட்டுமே... மேலே புகைப்படத்தில் டைப் செய்ததும் நானே, பொருள் - வந்தே மாதரம்.

   நீக்கு
 23. கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம்!
  இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி இந்தி அல்ல! தெலுங்கு!
  எனவே அதிகம் பேரால் பேசப்படும் மொழியை தேசிய மொழி ஆக்க வேண்டுமானால் தெலுங்கைத் தான் தேசிய மொழியாக ஆக்க வேண்டிவரும்!
  அதிகம் பேரால் பின்பற்றப் படுகின்றமைக்காகப் பின் இந்து மதத்தையும் தேசிய மதமாக்கி விடலாம்!
  இந்தி தெரியாமல் இந்தியனா எனக் கேட்கப்பட்ட அவமானத்தை நானும் அனுபவித்திருக்கிறேன. அதன் வலிகளை அறிவேன்!
  ஒரு குழந்தை தன் வளரிளம் பருவம் வரை தாய்மொழி வாயிலாகக் கற்பதையே உளவியல் வரவேற்கிறது. படைப்பாற்றலும் சிந்தனையும் சீர்படும் என அது காரணம் சொல்கிறது. இந்தி அல்ல! எந்த இந்திய மொழிகளையும் ஏன் உலக மொழிகளையும் ஒருவர் கற்கலாம்!
  ஒருவரின் விருப்பத்திற்குத் தடைசொல்ல யாருக்கும் உரிமையில்லை!
  ஆனால் சட்டமிட்டு நம்மை நிர்பந்திக்கும் போதுதான் ஏன் எனக் கேட்க வேண்டி இருக்கிறது.
  ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழிகள் ( கவனிக்க இவை இன்றளவும் நம் அரசியல் சட்டப்டி ஆட்சி மொழிகள் அல்ல) என்ற செல்வாக்கில் பல மொழிகள் அழியக் காரணமானவை! இது வரலாற்று உண்மை!
  ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் அடிப்படைத் தாய்மொழிகற்றுப் பின் எந்த மொழியைக் கூடுதலாகக் கற்ற விரும்புகிறானோ அம் மொழியைக் கற்றுக்கொள்ளட்டும். நாம் அதை வரவேற்போம்!
  சட்டங்களால் நம் மீது திணிக்கப்படுகின்ற அனைத்தையும் ஏற்போமானால்
  பின் இறந்த இனம் குறித்த வரலாற்றில் தமிழும் இடம் பெறும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது . பிற மாநிலக் காரர்கள் இந்தியைக் கற்க வில்லையா ? அவர்கள் மொழி என்ன அழிந்தாவிட்டது என நீங்கள் கேட்கலாம். ?
  அழிந்த மொழிகளும் உள்ளன!
  நாம் எந்த மொழிக்கும் பகைவர்கள் அல்லர்!
  கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆதரிப்பவரகளும் அல்லர்!
  சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
  நன்றின்பால் உய்க்கும் அறிவைப் பெற்றவர்கள்!
  ஆயிரம் மொழியை விரும்பிக் கற்போம்!
  அன்னை மொழியை அணைத்துக் காப்போம்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ஊமை அவர்களுக்கு வருகைக்கும், கருத்துரைக்கும் முதற்கண் நன்றி, தெலு(ங்)கை தேசியமொழி ஆக்கவேண்டியிருக்கும் என்ற தங்களின் கருத்து ஒருவகையில் சரியே... ஹிந்தி தேசியமொழியாய் ஆனதற்க்கு டெல்லி ஹிந்தியை தாய்மொழியாய் கொண்டதே காரணம், ஒருவேளை இந்தியாவின் தலைநகரம் சென்னையாகியிருந்தால் ? தமிழ்தான் தேசியமொழி ஆகியிருக்கும் என்பது மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருமே நமது இனியதமிழ் படித்திருப்பார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து, மதத்தைற்றி.... வேண்டாம் என்று நினைக்கிறேன் மேலும் தங்களுக்காகவே அதனைப்பற்றி பதிவே இடலாம் எனநினைக்கிறேன்... தங்களின் கடைசி வாக்கியத்திற்க்கு எமது உளமார்ந்த 1000 நன்றிகள்.

   நீக்கு
  2. ஊமைக்கனவுகள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

   நீக்கு
 24. தங்களின் ஆதங்கத்தை மிகவும் அழகாகப் பதிந்துள்ளீர்கள். மொழி என்பது தற்காலத்தில் வணிகமயம், அரசியல்மயம் என்ற நிலையில் தள்ளப்பட்டுவிட்டது என்பதே உண்மை. ஒரு மொழியை அறிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்போதுதான் சிக்கல்களே ஆரம்பிக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா, மன்னிக்கவும் திணிக்கப்படுகிறது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா, நம்மை மீறி எதுவும் நுளைந்து விடமுடியாது நண்பர் பிரான்ஸ் சாமானியன் அவர்கள் சொல்வதைப்போல சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம் நாம் தமிழன் என்ற உணர்வில் தமிழில் பேசினாலே போதுமானது, அபுதாபியில் ஒருதமிழ் குடும்பம் என்னை அவர்களது குழந்தைக்கு அரபுமொழி எழுத, படிக்க கற்றுகொடுக்க சொன்னார்கள், (நானே அபுதாபில் தாங்கள் சொன்னதைப்போல வேலையின் காரணமாய் சூழ்நிலையால் படித்தவன் நானும் அரைகுறைதான் என்பது வேறுவிசயம்) வேண்டுமானால் தமிழ் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொன்னேன் அவர்கள் வேண்டாமென சொல்லி விட்டார்கள் இதன் மனக்கசப்பு இன்றுவரை தொடர்கிறது இதற்க்கு தாங்கள் என்ன, சொல்லமுடியும் ?

   நீக்கு
 25. ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று கொடுக்கப்பட்டாலும், இன்றளவும் ஆங்கிலத்தில் தெளிவுற பேசுவதில் நம் மக்கள் சிறப்படையவில்லை, ஹிந்திக்கும் அதே நிலை ஏற்படலாம்..
  மொழிகளை அறிந்து கொள்வதில் தவறில்லை ஆனால் ஒரு மொழியோடு இன்னொரு மொழி கலவி செய்யாமல் பார்த்துக்கொண்டால் இனிது...

  பதிலளிநீக்கு
 26. ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று கொடுக்கப்பட்டாலும், இன்றளவும் ஆங்கிலத்தில் தெளிவுற பேசுவதில் நம் மக்கள் சிறப்படையவில்லை, ஹிந்திக்கும் அதே நிலை ஏற்படலாம்..
  மொழிகளை அறிந்து கொள்வதில் தவறில்லை ஆனால் ஒரு மொழியோடு இன்னொரு மொழி கலவி செய்யாமல் பார்த்துக்கொண்டால் இனிது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெ. பாண்டியரே.. மரணம்வரை நமக்கு தமிழே சொந்தகுழந்தை பிறமொழிகள் மாற்றான்தாய் குழந்தைகளே...

   நீக்கு
 27. அருமை! தமிழைத்தவிர வேறு மொழி தெரியாதவர்கள் படும் பாட்டினை இங்கு அரபு நாட்டில் மட்டுமல்ல, நம் இந்தியாவிலேயே வேறு மாநிலங்கள் சென்றாலே உணர்ந்து கொள்ளலாம். அரபு நாட்டில் 40 வருடங்க‌ளாக வசித்து வருவதால் நீங்கள் குறிப்பிட்டுள்ள கஷ்டங்களை நேரடியாகப் பார்த்து வருபவள் நான். ஒரு அரேபியரால் நம்மிடம் ஹிந்தி பேச முடிகிறது. ஆனால் இந்தியரான நாம் நம் நாட்டின் தேசீய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இந்த நாட்டின் அரேபிய மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் திணருவதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி... அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

   நீக்கு
 28. அரபு நாட்டிற்கு ஏன் போக வேண்டும்? இங்கே பெங்களூருவில் அலுவலகத்தில் எல்லோரும் சாதாரணமாக ஹிந்தி பேசும்பொழுது நொந்த தருணங்கள் உண்டு..ஏதோ பள்ளியில் இல்லாமல் வெளியில் ஹிந்தி படித்திருந்ததால் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதில் சொல்வேன்..பேச வராது..புரிந்துகொள்வதும் 70% தான். அதுபோலவே அமெரிக்காவிலும் இந்தியர் சேர்ந்தால் ஹிந்தியில் பேசுவார்கள்..தமிழர் மட்டும் ஞே ஞே :(
  இங்கு பெங்களூருவில், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் மூன்றும் படிக்க வேண்டும். அப்படி தமிழ்நாட்டில் ஹிந்தி, தமிழ்,ஆங்கிலம் மூன்றும் படிக்க வேண்டும்..ஏன் இன்னும் பல மொழிகள் கற்றுகொள்ளலாம்,இன்றைய உலகிற்குச் சரியாய் இருக்கும். ஆனால் சிலர் தமிழ் வேண்டாம் என்று சொல்வதை எதிர்க்கிறேன். நல்ல பதிவு சகோதரரே.

  பதிலளிநீக்கு
 29. வருகைக்கு நன்றி சகோதரி தமிழ்நாட்டை விட்டுவெளியே போகாதவர்கள் ஹிந்தியை எதிர்த்தால் பரவாயில்லை ஆனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர் ஒருவர் GOOGLE + ஸில் கமெண்ட் கொடுத்துள்ளார் ''இந்தபதிவு ஒரு பேத்தல்'' என, நானும் பதில் கொடுத்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 30. கில்லர்ஜீ !

  மிக சரியான காலகட்டத்தை உதாரணம் காட்டி பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் ! அன்று ‍ஹிந்தியை தார் கொண்டு அழித்துவிட்டு தங்களின் பிள்ளைகளை ‍ஹிந்தியும் ஆங்கிலமும் கற்க அனுப்பினார்கள் அவர்கள் !!!

  தமிழை ‍ஹிந்தி அழிப்பதற்கு முன்னால் தமிழர்கள் ஆங்கில அழிப்பானை வைத்து தமிழை அழித்துவிடுவார்கள் ! ஆனால் ‍ஹிந்தியினால் ஏற்படும் ஆபத்து வேறுவகை என்பது என் கருத்து !

  ‍ஹிந்தியை ஒரு மொழியாய் கற்பதிலோ அல்லது ‍ஹிந்தி அறிந்தவர்களிடம் ‍ஹிந்தியில் பேசுவதோ தவறில்லை. நம் இத்தனை வாதங்களுக்கும் காரணம் ‍ஹிந்தி மொழியல்ல ! அந்த மொழியின் பெயரால் நடத்தப்படும் அரசியல். தேசத்தின் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கூடியிருக்கும் தேசத்தின் முதன்மை சபையில் சில குறிப்பிட்ட பிராந்தியங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ‍‍‍ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதுதான் பிரச்சனை !

  என்பதுகளில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது உருவான நவோதயா கல்வி திட்டம் நினைவில் இருந்தால் நான் குறிப்பிடுவது புரியும். அந்த திட்டத்தின் பின்னாலிருந்த ‍" ஹிந்தி பரப்பு " கொள்கையை விளக்க தனி பதிவு எழுத வேண்டும் !

  எனக்கும் ‍ஹிந்தி கற்க வேண்டும் என நீண்ட காலமாக ஆசையுண்டு ! உலகின் அனைத்து மொழிகளையும் கற்று பண்டிதம் பெறலாம் ! அது நம் உரிமை ! அதுவே நம் மீது திணிக்கப்படும்பொது, கட்டாயப்படுத்தப்படும்போது யோசிக்க வேண்டும் ! மொழியே ஒரு கலாச்சாரத்தின் உயிரும் முதுகெலும்பும் ! அதனை சார்ந்தே கலைகள், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் ! ஒரு மொழி அழிக்கப்படும்போது இவை அனைத்தும் அழியும் ! அந்த வலி தமிழ்நாட்டு தமிழர்களான நம்மை விட புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 31. தாங்களுக்கு வேண்டிய பதில் Dr. B. Jamdulingam அவர்களுக்கு மேலே நான் அனுப்பிய பின்னூட்டத்தில் பார்க்கவும், வருகைக்கும் தங்களது நீண்ட கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 32. மிகக் கனமான விஷயம்
  எளிமையாக அருமையாகச் சொல்லிப்போனவிதம்
  அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி கவிஞரே...

   நீக்கு
 33. நான் ஹிந்தி பிரசாரம் செய்ய ஆரம்பித்தது ஹிந்தி போராட்ட காலத்தில்.எனது தயார் கோமதி அவர்களும் நானும் பழனியில் ௧௯௬௬-௬௮ இல் தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். அப்பொழுது எங்களை ஏளனமாக கிண்டல் செய்த ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என் நண்பர்கள் இன்று எங்களை சந்திக்கும் போது ஹிந்தி படிக்காத வருத்தம் தெரிவிக்கின்றனர்.கண்ணதாசன் கவியர் வாக்கு பொய்யாகாது. நாத்திகம் ஆத்திகம் என்று மாறி ஹிந்தி மயிலே ஆடுக ,தாயகம் உன்னைத்தாங்கும் என்றார். இன்று ராமேஸ்வரம் ,கன்னியாகுமரி சங்குவியாபரிகள் ஹிந்தியின் அவசியம் பற்றி கூறுகின்றனர். ஹிந்தி ஆசிரியர் என்றால் அந்த காலத்தில் வெறுப்பு துரோகி என்பர் அப்போதும நான் கையில் ஹிந்தி புத்தகமோ ஹிந்தி படிக்கும் அவசியம் பற்றி கூறுவேன் . செவி மடுக்காத காலம். இன்று அவர்களாகவே படிக்கின்றனர்.பழனியில் முதலில் இரண்டு பேர் நானும் அம்மாவும் பிரச்சாரகர்கள். முற்றிலும் இலவச வகுப்பு . இன்று பதினைத்துக்குமேல். நான் முகநூலில் anandakrishnansethuraman என்ற பெயரில் ஹிந்தி பாடம் எழுதுகிறேன். anandgomu.blogspot.com tamil-hindi sampark ஹிந்தி பாடங்கள் எழுதிள்ளேன். அடிவாங்கி ஹிந்தி பிரசாரம் ஆரம்பித்து முதுகலை ஹிந்தி ஆசிரியராக தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றேன்.நன்றி ஹிந்தமிழ் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் ஹிந்தமிழுக்கு மகுடம் சூடவந்த மாமணியே எனது வலைச்சர வேலைகள் முடிந்ததும் தங்களைத் தொடர்கிறேன் நன்றி

   நீக்கு

 34. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  http://youtu.be/KBsMu1m2xaE

  பதிலளிநீக்கு
 35. வருகை தந்து அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா...

  பதிலளிநீக்கு
 36. அருமையான பதிவு கில்லர்ஜி! அதே சமயம் தனித் தமிழர்கள் "ஸ" "ஷ" "ஹ" பயன்படுத்துவது இல்லை. எல்லாவற்றிற்கும் "ச" தான்! சிரிப்புக் கூட இஃகி, இஃகி தான்! :)

  பதிலளிநீக்கு
 37. உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு