டிரிங்.. டிரிங்..
ஹலோ இங்கிட்டு கில்லர்ஜி
அங்கிட்டு யாரோ ?
வணக்கம் கில்லர்ஜி நாங்க
தில்லை அகத்திலிருந்து... துளசிதரனும், தோழி கீதாவும் பேசுறோம் நலமா... அபுதாபி எல்லாம் எப்படியிருக்கு ?
ஆஹா நீங்களா ? நலம் நலமே விளைவு, என்ன திடீரென அழைப்பு ?
அழகா நண்பர் யாழ்பாவாணன்
மாதிரியே பேசுறீங்களே... ஏன் நாங்க, அழைக்ககூடாதா கில்லர்ஜி ?
அப்படிச் சொல்லவில்லை
தில்லை அகத்திலிருந்து அழைப்பு வந்தது கொள்ளை மகிழ்ச்சியே...
நல்லது கில்லர்ஜி ஒரு உதவி
அதான் கேட்கலாமென்று...
சொல்லுங்கள் என்னால் செய்ய முடிந்ததை கண்டிப்பாக செய்வேன்.
வேறு ஒன்றுமில்லை புதிதாக
குறும்படம் ஒன்று எடுப்பதாக திட்டம் அதில் குறும்பான கேரட் ஒன்று SORRY குறும்பான
கேரக்டர் ஒன்று அதில் நீங்கள் நடித்தால்... பொருத்தமாக இருக்கும்னு
நண்பர் கரந்தை ஜெயக்குமாரும், நண்பர் இ.பு.ஞானபிரகாசனும் சொன்னாங்க..., அதனால்
படமும் சிறப்பாக ஓடுமென்று கருதுகிறோம்.
(எனக்கு தூக்கி வாரிப்போட்டது நமக்கு
குறும்பட சினிமா வாய்ப்பா ? ஆ...ஆ... உயிரெழுத்தில் நான்காவது இரண்டு வாய்க்குள் புகுந்து மேற்கூரையை
உரச.. ப்தூ.... ப்தூ...)
கில்லர்ஜி என்னாச்சு துப்புறீங்க... ?
ஒன்றுமில்லை ஈ அதான்...
ஈ படம் பார்க்கிறீங்களா ?
இல்லை அது... வந்து,
காஃபியில ஈ...
ஐயய்யோ, காஃபியில ஈ போட்டு
குடிக்காதீங்க... (கலாய்க்கிறாங்களாம்)
இல்லேங்க இது வேற...
சரி, கில்லர்ஜி
குறும்படத்துல.....
(ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டு) என்ன... திடீர்னு இப்படிச் சொன்னால் ? நேற்றுதான் டைரக்டர் சங்கர் கால் பண்ணியிருந்தார், கால்ஷீட் கேட்டு காலையில்
மெயிலை திறந்தால் ? தங்கர் பச்சான் வேற நொச்சு நொச்சுனு
நச்சரிச்சுக்கிட்டே இருக்கார் அவரோட படத்துல ஹீரோவா நடிக்கணும்னு நானே இங்கே
ரொம்பவே பிஸியா இருக்கேன் பெரும்பாலும் நான் குறும்படத்துல நடிக்கிறது இல்லை சரி
கேட்டுட்டீங்க.. உங்களுக்காக நான் செக்ரட்டரிகிட்டே கேட்டு சொல்றேனே... எதுக்கும்
நாளைக்கு ஈவ்னிங் கால் பண்ணுறீங்களா ?
நல்லது கண்டிப்பாக நீங்க
நடிச்சு தருவீங்கனு நம்புறோம்.
பார்க்கலாம், சரி
ஸூட்டிங் எங்கே ? ஸ்விஸ்லதானே... நம்மலோட கேரக்டர் என்ன ஓபெனிங் சீன் எப்படி ?
ஸூட்டிங் ஸ்பாட்டெல்லாம்
தயார் செய்துட்டோம் உங்க ஊர் தேவகோட்டை பக்கத்துல முள்ளிக்குண்டு, சங்கரபதிகோட்டை
அதாவது கேமராவுல வீல் சுற்றிக்கொண்டே வருகிறது அப்படியே கேமராமேன் ஸ்ரீராம் (வலைப்பதிவர் ஸ்ரீராம் அல்ல) கொஞ்சம் கொஞ்சமா மேலே தூக்கிகிட்டு வர்றார் பளிச் என்று
கில்லர்ஜியின் அழகான முகம் நீங்க அந்த தட்டு வண்டியை தள்ளிகிட்டு கேரட்டு,
பீட்ரூட்டு, முட்டைகோஸூ இப்படி கூவிக்கிட்டு வர்றீங்க..
நில்லுங்க, நில்லுங்க,
நில்லுகங்க என்ன பேசுறீங்க.. தட்டு வண்டியை நான்
தள்ளிக்கிட்டு வரணுமா ? அதுவும் எனது தேவகோட்டையிலே... இதெல்லாம் தள்ளிக்கிட்டு வந்தால் என்னோட ப்ரெஸ்டிஸ் என்னாகுறது ?
கதைப்படி நீங்க ஒரு
சேல்ஸ்மேன் இப்படித்தான் வரணும் கில்லர்ஜி.
கதை யாரு எழுதுனது ?
தோழி கீதா எழுதுனாங்க...
ஏன்... அவங்களுக்கு நான் கோல்ட், டைமண்ட் பிஸினஸ் செய்து அமெரிக்கா, ஃப்ரான்ஸ்,
ஜெர்மனி போய் ஹோல்சல் சேல்ஸ் பண்ணுற மாதிரி கதை எழுத தெரியாதா ?
இல்லை கதைப்படி நீங்க ஒரு
ஏழை, அதான்...
கதையை மாத்துங்க.. சரியா வராது.
என்ன கில்லர்ஜி இப்படிச் சொல்றீங்க ?
கதையில, நான் ஏழையா
வர்றதை ரசிகர்ங்க விரும்பமாட்டாங்க.
கில்லர்ஜி கொஞ்சம் யோசனை
செய்து பாருங்களேன் எங்களுக்காக...
வேணும்னா, ஒண்ணு செய்றேன்
நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஆஸ்திரேலியாவில் இருந்து லீவுல வர்றாரு.. அவரை வேணும்னா
நடிக்கச் சொல்றேன் காரைக்குடியும் பக்கம்தான் ஸூட்டிங்குக்கு காலைல மூணு மணிக்கு வரச்சொன்னாலும் வருவார்.
இல்லை கில்லர்ஜி நீங்கதான்
நடிக்கணும் அவருக்கு அவ்வளவு சிறப்பாக நடிக்கத் தெரியாது அவருடைய பதிவுல போட்ட
நாடகத்துல நடிக்கும்போதே கவனிச்சேன்.
நான் நடிக்கணும்னா, கதையை
மாத்துங்க.
அப்பசரி, நாங்க மாத்துறோம்.
நல்லது கதையை மாத்திட்டு
கால் பண்ணுங்க.
நாங்க, மாத்துறது கதையை இல்லை
உங்களை.
என்ன இப்படிச் சொல்றீங்க ?
நாங்க போன்ல சொல்றதுனால
இப்படிச் சொன்னோம் நேர்லயா இருந்தால் ?
என்னை
மாத்த மாட்டீங்களோ...
இல்லை அந்த இடத்துலயே உங்களை
மாத்துல விடுவோம்.
என்ன இப்படிப் பேசுறீங்க ? அப்புறம் நான் கம்ப்ளைண்ட் செய்திடுவேன்.
யாருகிட்ட கம்ப்ளைண்ட் செய்யமுடியும் எங்களை ?
அங்கே இருந்தேன்னா... என்னோட சுயரூபனை Sorry சுயரூபத்தை காட்டுவேன்,
நான் ஆளுங்கட்சிக்காரன் தூரத்துல இருக்கிறதால பகவான் கிட்டதான்.
நீங்க பகவான்கிட்ட செய்தாலும்
சரி, பகவான்ஜிகிட்டே செய்தாலும் சரி.
இந்தப்படத்துல யாரு நடிக்கிறானு பார்க்கிறேன் ?
இதே நண்பர் சொக்கனை
நடிக்க வைத்து படத்தை ஓடவைக்கலை...
எது தியேட்டரை விட்டா...
கில்லர்ஜி பேச்சு
ஓவராப்போகுது...
நண்பர் சொக்கனுக்கு நடிக்கத் தெரியாதுனு
சொன்னீங்க ?
அது அவருக்குத் தெரியாதுல ?
இப்ப பேசியது
ரெக்கார்டிங்கல வச்சு இருக்கேன்ல அதை அவருக்கு மெயில் அனுப்புவேன்ல...
இப்படியெல்லாம் வில்லங்கம்
விருமாண்டி வேலை செய்யிற ஆளுனு ஏற்கனவே நண்பர் தமிழ் இளங்கோ ஸாரும், டாக்டர்.
ஜம்புலிங்கம் ஸாரும் சொன்னாங்க அதனாலதான்
மிமிக்ரிகாரனை வைத்து நீங்க நண்பர் சொக்கனை திட்டுறது மாதிரி ரெக்கார்டிங் செய்து
வைத்திருந்தேன் இப்பவே அதை அனுப்புறேன் கீதா உடனே அதை நண்பர் சொக்கனுக்கு சென்ட்
பண்ணுங்க, சீக்கிரம், சீக்கிரம்..
ஹலோ... ஹலோ... இப்படி எல்லாம்
செஞ்சீங்க உங்க வலைப்பதிவுக்கு வந்து, கருத்துரையில..
கருத்துரை போட்டா... கருங்கல்லாலே எறிவோம்
அப்படீனா நான் உங்களுக்கு கால்ஷீட் தரமாட்டேன்.
வந்தேன்னா காலை
ஒடிச்சுப்புருவேன்.
இதுக்குமேலே பேசுனீங்க,
நடக்குறதே வேற...
நடக்குறதுக்கு கால்
இருக்காது.
ஹலோ... ஹலோ...
(டொக். ரெண்டு பேரும் பயந்துக்கிட்டு
டெலிபோனை வச்சுட்டாங்க)
உடனே நண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல்
தனபாலனை தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்கலாம் ஏதாவது டெக்னாலஜி மூலம் அவர்களின்
மின்னஞ்சலை தடுக்க முடியுமா ? என அதற்குள் அவர்
சொன்னார்
இப்பத்தான் எனக்கு மெயில் வந்துச்சு தில்லை அகத்திலிருந்து... ஏன் சொக்கனுக்கும், உங்களுக்கும் பிரச்சனையா. அவரை ஏன் திட்டுறீங்க .?
வலைப்பதிவு நெஞ்சங்களே... போன் வரவும் எனக்கு ஆச்சர்யமாக இருந்து உண்மை இதுவே ஏவியெம்மோ, சத்யா மூவிஸோ இருந்தால்
ஓகே. ஏன்... இப்படி இவர்களை கழட்டி விட்டேன் தெரியுமா ? படத்துல நடிச்சுக் கொடுக்குறதுக்கு முன்னாலேயே
இப்படிப் பேசுறாங்களே... நடிச்சுக் கொடுத்தால் இவங்க
கிட்டேருந்து பணம் வாங்க முடியுமா ? கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள் இவங்க இப்படி ஆளுங்கதானு எனது இனிய நண்பர் ஊமைக்கனவுகள்,
நண்பர் மணவை ஜேம்ஸிடம் மதுரை விழாவுக்கு வரும்போது தனியாக சந்தித்து என்னிடம்
சொல்லச் சொல்லி இருக்கிறார், மணவையார் என்னிடம் சொல்லிய போதும் எமக்கு சிறிது
நம்பிக்கை இல்லாமல் தோழி மு. கீதா அவர்களிடமும், தோழி பிரதிபா கிரேஸ் அவர்களிடமும்
மெதுவாக கேட்டேன் இதை (ஒட்டு) கேட்டுக் கொண்டிருந்த சகோதரி மைதிலி கஸ்தூரி
ரெங்கனும், தோழர் மதுவும் ஆமா, ஆமா அவுங்க மோசமான ஆளுகதான் எனச் சொன்னார்கள், அதனாலதான்
நான் எடக்கு மடக்கா பேசி கழட்டி விட்டுட்டேன் எப்பூடி ? என்னை
பண மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்றிய நண்பர் ஊமைக்கனவுகள் மற்றும் மது & மைதிலி
தம்பதியினருக்கு மனதுக்குள் மௌனமாய் நன்றி சொல்லிக் கொண்டேன்.
பின்குறிப்பு - முனைவர்
ஐயாவும், தமிழ் ஸாரும், இப்படி எல்லாம் போட்டுக் கொடுப்பாங்கனு நான் நினைக்கவே
இல்லை, மதுரையில பார்க்கும்போது நல்லாதானே பேசுனாங்க... ஐயா ஜியெம்பி கூட சொன்னாரே
நல்ல மனிதர்கள் என்று... பதிவுல எனது குரலை பதிவு செய்தது எவ்வளவு தவறாப்போச்சு
குறும்படம் எடுக்கும் கலைஞர்கள் இந்த மாதிரி மற்றவங்களை ஏமாற்றலாமா ? ஒருவேளை நண்பர் திரு, வே.நடனசபாபதி அவர்கள்
சொல்வதுபோல் ஏமாற்றுவதும் ஒரு கலைதானோ ? தில்லை
அகத்தார் செய்த மோசடியை பிரதமர் மோடியிடம் கொண்டு போகலாம்னு நினைச்சேன் அந்தநேரம்
பார்த்து நண்பர் வலிப்போக்கனிடமிருந்து போன் வர... அவரிடம் பேசும்போது மனதின் வலி
குறைந்தது போலிருந்தது... சரி நண்பர் கரந்தையார் சொல்வதுபோல மறப்போம் மன்னிப்போம்
அதை மறந்து மனம் அமைதிபெற குவைத் நண்பர் திரு, துரை சொல்வராஜூ அவர்களின் தெய்வீக பதிவில்
நுளையும்போது... (‘’டிங்டாங்’’) பெல் அடிக்கவும் போய் கதவைத் திறந்தால் ? நண்பர் ‘’மனசு’’ சே.
குமாரும், ‘’வசந்த மண்டபம்’’ கவிஞர்
மகேந்திரனும் நின்றிருந்தார்கள்.
‘’அடடே வாங்க, வாங்க, வாங்க’’
சரி
நாங்க வலைப்பூவைப்பற்றி நிறைய........... பேசனும்... பிறகு பார்க்கலாம் கீழே போய்
கருத்துரையும், மறக்காமல் தமிழ்மண வாக்கும் போட்டு போங்களேன்.
இந்தப் பதிவை வெளியிட
அனுமதியளித்த இனிய நண்பர் திரு. துளசிதரன் தில்லை அகத்து மற்றும் இனிய நண்பி
திருமதி. கீதா அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி & நன்றி.
அன்புடன்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
ஆஹா நல்ல காமெடி...டைம் ...சூப்பர்..இவ்ளோ நகைச்சுவை உணர்வு இந்த வில்லன் சார் வில்லத்தனமான முகம் கொண்ட உங்களிடம் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியாது..ஆமா நாங்க என்ன பண்ணோம் எங்களையும் மாட்டிவிடுறீங்க...மைதிலி கொஞ்சம் கவனிம்மா...சகோவ...
பதிலளிநீக்குவருக, உங்களை நான் மாட்டி விட்டேனா ? சந்தேகம்தானே கேட்டேன் மீண்டும் படிச்சுப்பாருங்க.... இப்பத்தான் நீங்க என்னை மாட்டி விடுறீங்கனு தெரியுது.
நீக்குஇந்த விளையாட்டிலெ எல்லாம் நான் இல்லீங்க. என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவங்களே. அதையேதான் நீங்களும் எழுதி இருக்கீங்க. நல்ல கற்பனை வாழ்த்துக்கள் ஜி/.
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி... நீங்க சொன்னதைத்தான் எழுதியிருக்கிறேன்.
நீக்குகற்பனை உரையாடல் என்றாலும் கனிரசம் பருகின சுவை ! நன்று!
பதிலளிநீக்குபுலவர் ஐயாவின் வரிகள் கண்டு மயங்கினேன் இன்று.
நீக்குஆஹா.....எந்தப்பக்கம் போனாலும் அனைகட்டுராங்களே!!!அவ்வ்வ்வவ்வ்வ்வவ்:(((
பதிலளிநீக்குy கில்லர் அண்ணா y திஸ் கொலைவெறி:)))))))))))))))) செமையா இருக்கு பாஸ்!! படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சதில கைல சுளுக்கு:))))) இந்த ஹோல்சேல் டைமண்ட் பிஸ்னெஸ் கொஞ்சம் ஓவரா இல்ல!!!
இதற்கெல்லாம் காரணம் இரண்டு தினங்கள் முன்பு கூகுல் சாட்ல வந்த தில்லை அகம் தோழி கீதா அவர்கள் என்னை பேசத்தெரியாத அப்பாவினு சொன்னாங்க சரி ஏதோ தெரிஞ்சதை பேசுவா ? அப்படீனு அனுமதி பெற்று பேசுனேன் அது என்னடானா எப்படியோ ? போன அது இப்படியாயிடுச்சு. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ அப்பாடா, சமாளிச்சுட்டேன்)
நீக்குஆஹா.... ரசித்தேன் நண்பரே.....
பதிலளிநீக்குத.ம. +1
ரசித்தால்தானே நண்பரே அது நகைச்சுவை ரசித்து வாக்களித்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குநல்ல நகைச்சுவை! ரசித்தேன்.! வலைப்பதிவில் , முடிந்தவரை இது மாதிரி விளையாட்டுகளை தவிருஙகள். சம்யத்தில் விளையாட்டு வினையாகி விடும்.
பதிலளிநீக்குத.ம. 4
நண்பருக்கு அவர்களின் அனுமதியோடுதான் வெளியிடுகிறேன் தாங்கள் தவறாக நினைப்பின் ஸோரி & வருகைக்கு நன்றி.
நீக்குசரி.. கடைசிவரை நடிக்கவே இல்லையா!?..
பதிலளிநீக்கும்ஹூம் நான்தான் கழட்டி விட்டுட்டேனே.....
நீக்குவசனத்திலேயே உங்கள் நவரச நடிப்பைக் கண்டு ரசித்தேன் :)
பதிலளிநீக்குத ம 4
நவரச நடிப்பா ? அப்படீனா ? வாக்களித்தமைக்கு நன்றி பகவான்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅதிர்ஷ்டம் கதவை தட்டும் போது ஏன் வேண்டாமென்று வீம்புக்காக புறக்கணித்தீர்கள்? என கேட்க நினைத்தேன். அது சரி! உங்களுக்கென்ன தெரியும் ?என்னைத்தேடி பெரிய பெரிய சான்ஸெல்லாம் வரிசையில் நிற்கிறது ! என்று" நீங்கள் முணுமுணுப்பது கேட்டது.! நியாயந்தானே! என்று நான் நினைப்பதற்குள் கதையே மாறி விட்டதே?
என்ன ஒரு வாய் சண்டை.! மன்னிக்கவும். ஃபோன் சண்டை! கடைசியில் நீங்கள் காரணமாகத்தான், சண்டையை வளர்த்து குறும் படத்திற்குள் சென்று மாட்டிக் கொள்ளாமல், தப்பித்துக் கொள்ளத்தான் வழி செய்திருக்கிறீர்கள் என்று புரிந்தது.
நல்ல காமெடி... நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.!
நல்ல கற்பனை.! நகைச் சுவையாக, வலையுலக உறவுகளை வைத்தே நீங்கள் தயாரித்த இந்த குறும்படமும், இல்லை, இல்லை,இன்றைய வலைப்பதிவும் சி(ரி)றப்புடன் நன்றாகத்தான் இருந்தது. வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரியின் வருகைக்கு நன்றி ரசித்தால்தானே அது நகைச்சுவை ரசித்து படித்தமைக்கு நன்றி சகோதரி.
நீக்குஆகா அருமை ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குஉண்மையிலேயே தாங்கள் நடிக்க முயற்சிக்கலாம்
வாழ்த்துக்கள் நண்பரே
பார்ப்போம் நண்பரே... ஒரு ஏவியெம்மோ, ஒரு சத்யா மூவீஸோ அழைக்கட்டுமே... நமக்கு பணம் கறாராக கிடைக்கணும் அதுதான் முக்கியம் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குதம 6
பதிலளிநீக்குமுக்கியமான வாக்கு என்னுது ...
பதிலளிநீக்குத ம ஏழு...
என்சாய்...
பதிவு அருமை...
எத்துனைபேர் கிளம்பப் போறாங்கன்னு தெரியலையே...
இப்பவே கண்ணக் கட்டுதே...
இந்த ஏழைக்கு ஏழு வாக்கு அளித்தமைக்கு நன்றி தோழரே...
நீக்குYou have lot of patience Kileerjee!!
பதிலளிநீக்குஅருமையாக போகிறது உங்கள் கற்பனை. விரைவில் உங்களை வெள்ளித் திரையில் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
பதிலளிநீக்குவாழ்வில் பொறுமை காப்பது மிகவும் முக்கியம் நண்பரே... தவறுக்கு 'மன்னிக்க' என்று சொல்வதால் நாம் குறைந்து விடமாட்டோம்... நான் தவறுதலாக தவறு செய்ததுண்டு காரணம் பக்குவம் இல்லாமை அதை சேகரிக்கின்றேன் தங்களைப்போன்றோர்களிடமிருந்து... நன்றி நண்பரே...
பதிலளிநீக்குராஜலட்சுமி அம்மாவின் வருகைக்கு நன்றி வெள்ளித்திரையில் என்னைக்கண்டால் குழந்தைகள் தியேட்டருக்கு வராதே...
பதிலளிநீக்குநல்ல இரசனையான கறபனை!
பதிலளிநீக்குஇரசித்து மகிழ்ந்தேன்.
அதிலும் நீளமான உரையாடல் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை!
இது மாதிரி நிறைய எதிர்பார்க்கிறோம், கில்லர்ஜி!
நிஜாமின், நிஜமான வார்த்தைகள் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது நிச்சயம் தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் தொடர்ந்து..... வருகைக்கு நன்றி திரு.நிஜாம்
நீக்கு“நாடகமே உலகம்”..கில்லர்ஜி யின் நாடகத்தில் நடிகர் அனைவருமே வந்து விட்டார்கள்...வாழ்த்துகள்!! கில்லர்ஜி.........தாங்கள் இயக்கிய நாடகத்துக்கு..
பதிலளிநீக்குவருகைக்கு இன்னும் சிலரை மறந்து விட்டது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது காரணம் இது கேட்டதற்காக அவசரத்தில் எழுதி வெளியிட்டது.
நீக்குநண்பரே!
பதிலளிநீக்குநான் ஓட்டுப்போட்டு விடுகிறேன்.
மணவையார் பெயர் ரகசியத்தைச் சொன்னார் என்பதற்காக என்னையும், சைடு கேப்பில் போட்டுக் கொடுத்துவிட்டீர்களே!
ஆசானைப் பற்றி அவதூறு பேசுவேனா..? நானா..?
அந்தப் படத்தில் உருவம் தெரியாமல் ஏதாவது அசிரீரி கேரக்டர் இருந்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்யுங்களேன்!
சரி !
ஹீரோயினைப் பற்றிச் சொல்லவே இல்லையே......?!
த ம கூடுதல் 1
வருக கவிஞரே.. உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் தாங்கள் போட்டுக்கொடுத்ததாக சொல்கிறீர்களே... நியாயமா ? ஆமா அசிரீரி குரலா ? தாங்கள்தான் ஊமையாச்சே... எப்படி பேசுவீர்கள் ? டப்பிங்கா ?
நீக்குநாயகி நம்ம, கே.பி.எஸ்தான். வருகைக்கும், வாக்குக்கும் நன்றி கவிஞரே...
சூப்பர்..நல்ல நகைச்சுவை.... மிகவும் ரசித்து சிரித்தேன்...நீங்கள் நல்ல வசனகர்தா...ஆகலாம் போலயே ....நடை நயமா இருக்கு...சைடுல நகைச்சுவை டிராக் கூட எழுதலாம்...ம்...கைவசம் நடிப்பு....பல திறமைகள் இருக்கு...வாழ்த்துக்கள் தம 10
பதிலளிநீக்குஎனக்கு நடிப்பதில் விருப்பமில்லை மேலும் நடிக்கவும் வராது, இந்த மாதிரி வசனமெழுதி கடிக்கவரும் வருகைக்கும், வாக்குக்கும் நன்றி.
நீக்குஇந்தப்பக்கம் இப்படித்தான் சொல்லிக்கிட்டு, என்கிட்ட நடிப்புப் பயிற்சி இல்ல படிச்சுக்கிட்டு இருக்காரு.
நீக்குஅதுக்குத்தானே வாய்ப்பு வாங்கி கொடுத்தோம்.
நீக்குஹா... ஹா... இதையே கொஞ்சம் "நீட்டி" குறும்படம் எடுத்து விடலாம்... ஹிஹி....
பதிலளிநீக்குஎடுத்துருவோம் ஆனால் ? நல்ல டைரக்டராகப் பாருங்கள் நண்பரே... தில்லை அகத்தார் மின்னஞ்சலை நம்பி எனக்கும் சொக்கனுக்கும் பிரட்சினையா ? எனகேட்டு விட்டீர்களே நண்பரே...
நீக்குரசித்தேன்...கூடவே வலைப்பதிவாளர்களும் நினைவில் வந்து போனார்கள்....
பதிலளிநீக்குவந்து ரசித்தமைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குவந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டீர்களே? பரவாயில்லை, காத்திருங்கள். உங்களுக்கு பரிந்துரை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருக முனைவரே... தங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கால்ஷீட்டு கொடுக்கிறேன் ஆனால்? முதலில் துட்டு வரணும்.
நீக்குஇது தான் குருவிற்கு கொடுக்கிற தட்சனையா???
பதிலளிநீக்குஆறு மாசமா நடிப்புப் பயிற்சியை நான் உங்களுக்கு கரஸ்பாண்ட்ன்ஸ் கோர்ஸ் மூலமா சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருக்கேன். நீங்க குரு தட்சணை கொடுக்காட்டியும் பரவாயில்லைன்னு பெருந்தன்மையா நான் இருந்தா, நீங்க என்னடான்னா, என்னைய பத்தி கேவலமா பேசுறீங்க, இது நல்லா இல்லை, ஆமா சொல்லிப்புட்டேன்.
ஹலோ, உங்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தால் ? என்னையவே பேசுறீங்களா நல்லா படிச்சுப்பாருங்க தில்லை அகத்தார்தான் உங்களுக்கு நடிக்கத்தெரியாதுனு சொல்றாங்க,,, இப்ப தெரிஞ்சுபோச்சா ? மின்னஞ்சலில் உள்ளது போலி பேசியது நான் அல்ல ! மிமிக்ரினு குருதட்சிணைக்காகத்தான் வாய்ப்பு தேடிக்கொடுத்தேன் துட்டுல பாதி எனக்கு கமிஷன் அனுப்பனும் சொல்லிப்புட்டேன்.
நீக்குஅய்யா துளசிதரனின் அடுத்த குறும்பட ஒத்திகையோ?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அப்படியும் எடுக்கலாமா ? ஐயா.
நீக்குஎன்னணே இவ்வளவு சின்னதா முடிச்சிட்டிங்க ? ரசிச்சு சிரிச்சு படிச்சேன் . இம்மாதிரியான ஹாஸ்ய பதிவுகள் தொடரட்டும் !!!
பதிலளிநீக்குஎன்ன நண்பா ? உல்டாவா சொல்லுறீங்களோ.... நீங்கள் தொடந்தால்... இப்படியே தொடர்வோம்.
நீக்குநல்ல கற்பனை.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
நீக்குU.A.E இல் இருப்பதால் கேரட் மன்னிக்க கேரக்டர் கொடுத்தார்களா? நல்ல நகைச்சுவை நண்பரே.
பதிலளிநீக்குவிட்டால் அவர்கள் கருவேப்பிள்ளை கொடுக்க கூடியவர்கள்தான் நண்பா.
நீக்குகலக்கிட்டீங்கசகோ, நீங்க இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தத சொல்லவே......................
பதிலளிநீக்குஇல்ல(வைரவியாபாரந்தான்)அருமை சிரித்து ரசித்தேன்
எல்லோருக்குமே வைர வியாபாரத்துலதான் கண் இருக்கு... வந்து ரசித்தமைக்கு நன்றி சகோதரி.
நீக்குவாழ்த்துக்கள்!! நண்பரே!! தமிழ்மணம் மகுடம் சூட்டியதற்கு...........
பதிலளிநீக்குநன்றி நண்பா... மனதின் வலியை போக்கியமைக்கு.
நீக்குரசிக்க வைத்தது அண்ணா...
பதிலளிநீக்குபதிவு போட்டதும் படிச்சாச்சு... மூணு முறை கருத்துப் போட்டும் இணையப் பிரச்சினையால் எங்கோ போயிருச்சு... இது நாலாவது கருத்து... நல்லா வருதான்னு பாப்போம்...
வலைச்சித்தர் முயற்சியில் இன்று நன்றாகத்தான் இருக்கிறது...
அட ஆமா... நானும் மகேந்திரன் அண்ணனும் வந்தாச்சா... அதுசரி...
வருகைக்கு நன்றி நண்பரே... அதனாலதான் எனது பங்கு முடிஞ்சுருச்சு உங்க பங்குக்கு போடச்சொல்லி புகைப்படத்தையும் அனுப்பினேன்.
நீக்குஅட..அட.. எத்தனை திறமை சகோ உங்களிடம்!.. அற்புதம்!
பதிலளிநீக்குஉண்மையிலேயே இதை என் மனக்கண்ணில் திரையில் பார்த்துவிட்டேன்!
அபார நடிப்பு ஐயா! உங்களது நடிப்பு!..
எங்கள் சகோ டி. டி சொன்னதுபோல நிஜமாகவே குறும்படமாக்குங்கள்!
நானும் உங்கள் நகைச்சுவை நடிப்பிற் கரைந்தேன் சகோதரரே!
சிரித்தே விட்டேன்!.. வில்லத்தன விருமாண்டி கெத்தப்பும்
அசல் அச்சாக உங்களுக்குச் சரி வரும்!..:)
சரீஈஈ.. கதாநாயகித் தேர்வும் செய்தாச்சே... படத்தில் பாட்டில்லாமலா..:))
படத்திற்கு பாட்டெழுதும் கவிஞர் யாரோ?..
அதற்குள் கதையை முடித்துவிட்டீர்களே..!..:))
நல்ல கற்பனை! அருமை!! அட்டகாசம்!!!
வாழ்த்துக்கள் சகோ!
வருக, வருக நடிப்பா ? நான் கடிக்கத்தானே... செய்தேன் வில்லத்தன விருமாண்டி அப்படீனா... என்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை ஹீரோயின் ஓகேயா ? பாட்டெழுதும் கவிஞர் தங்களை விட்டால் வேறு யார் ? கவிஞரே...
நீக்குநல்ல கற்பனை. தங்களிடம் பல திறமைகள் இருக்கக்கண்டேன். பதிவுலகில் தற்போது குறும்பட ஆவல் அதிகமாக இருக்கிறது அனைவரிடமும் விரைவில் உங்கள் கதை இயக்கத்தில் குறும்படம் ஒன்றை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நல்ல தயாரிப்பாளர்கள் வேண்டுமே....
நீக்குஅடியாத்தி...
பதிலளிநீக்குநான் கொஞ்சம் ஒதுங்கியிருந்த நேரத்துல இவ்ளோ நடந்திருக்கா....
அதுசரிஜீ... இவ்ளோ அப்புராணியா பேசுற நீங்க டையமண்ட் பிசினஸ் விசயமா போன தடவை பிரான்ஸ் வந்தப்போ எனக்கு வச்சிட்டுபோன பாக்கியிருக்கே... அதை எப்போ செட்டில் பண்ண போறீக ?!!!
நன்றி
சாமானியன்.
saamaaniyan.blogspot.fr
என்ன நண்பா ? ஒருநாள் பிந்தி விட்டீர்களே.... பலமுறை தங்களது தளம் வந்தேன் தங்களை காணவில்லை.. தங்களையும் இணைத்திருந்தேன்... கடைசி தருணத்தில்...
நீக்குஅந்தப்பாக்கியா ? என் கையில துப்பாக்கிதான் இருக்கு.
ந்த துப்பாக்கியை என்கிட்டேயிருந்து வாங்குனதுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை தான் கேக்குறேன் ஜீ !!!
நீக்குசாமானியன்
ஓ.... அந்தப்பாக்கியா ? அதான் அந்து போச்சே.... நண்பா.
நீக்குஎது எப்படியோ! இந்தக் குறும்பட வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அடுத்து உண்மையாகவே இயக்குநர் சங்கரிடம் சொல்லி எந்திரன்:2-வில் ரஜினிக்குப் பதிலாக உங்களைப் 'போடச்' சொல்லியிருப்பேன். வாயைக் கொடுத்துக் கெடுத்துக் கொண்டீர்களே நண்பா?! ;-)
பதிலளிநீக்கு''போடச் '' சொல்லியிருப்பேன் அர்த்தம் இடிக்குதே நண்பா...
நீக்குகேரட்டு பீட்ரூட்டு முட்டைகோசு.... இது கூட நல்லாத்தான இருக்கு...
பதிலளிநீக்குவைரம் வைடூரியமென வாய் கெடுப்பதேனோ....
உரையாடல் நன்று...
எப்பவுமே நமது எண்ணங்கள் உயர்வாகவே இருக்கணும் நண்பரே...
நீக்குஆஹா நீங்க மெதுவாக் கேட்டது எனக்குக் கேட்கவே இல்லையே :)))
பதிலளிநீக்குநல்ல (குறும்படப்) நகைச்சுவை பதிவு, வசனமெல்லாம் களைகட்டுதே :)
வாழ்த்துகள் சகோ
தமிழ் மணத்தில் குத்திட்டேன்
தில்லை அகத்தாரிடம் தப்பிக்க டெக்னிக்கலா பிட்டு போடுறீங்களே.... வருகைக்கும், வாக்குக்கும் நன்றி சகோ.
நீக்குஅன்புள்ள நண்பரே!
பதிலளிநீக்குதில்லை அகத்தாரிடமிருந்து போன் வந்தது என்று பேச ஆரம்பத்ததில் இருந்து படித்துக் கொண்டே வந்தால்.... நன்றாக எல்லோரையும் நடிக்க வைத்து விட்டீர்களே...!. நல்ல கற்பனை அய்யா....! நன்றாக இருந்தது....! பாராட்டும்.... வாழ்த்துகளும்!.
நன்றி.
மணவையாரின் தாமதமான வருகைக்கு சிறிது கோபம்தான் இருப்பினும் பாராட்டால் மனம் குளிர்ந்தது நண்பரே...
நீக்குசிரித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமையான கற்பனை. இதுபோலவே நிறைய எழுதுங்கள் கில்லர் ஜி.
நிச்சயமாக இனியாவது சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி.
நீக்குபதிவு லேட்டானாலும் லேட்டஸ்ஸாக போடுவிங்க.........வருக...! வருக! என எதிர்பார்க்கும்....
பதிலளிநீக்குJust Wait நண்பா...
நீக்குவலை அன்பர்களே! இந்தக்கில்லர்ஜி கழட்டி எல்லாம் விடல....எங்க்ள சும்ம கதை சுத்துராரு...
பதிலளிநீக்குஹலோ கில்லர் நீங்க எங்களைக் கழட்டிவிட்டாலும்....உங்களைத்தான் நாங்க போட்டாச்சே. ஒழுங்க மரியாதையா எல்லார்கிட்டயும் உண்மைய சொல்லிட்டு ஏப்ரல் மாசத்துல வந்தீங்கன்னா நடிச்சுருலாம்...நீங்க உங்க தொப்பியையும், அந்தக் கொடுவா மீசையையும் எடுக்க வேண்டா. அது உங்கள் கர்ண கவசம்னு தெரியும்க்....ஒருவேளை அதை எடுக்கச் சொல்லிடுவாங்களோனுதான் நீங்க எங்களக் கழ்ட்டிவிட்டீங்கன்ற உண்மைய எல்லார்கிட்டயும் சொல்லுங்க.... அதனால அதை வைச்சுக்கிட்டே ஒரு காரெக்டர் வைச்சுர்க்கோம்ல...அப்புறம் ஒரு விஷயம்....நண்பர் சொக்கனும் வர்ரெனு சொல்லியிருக்காரு தெரியும்ல....மணவையும்தான்.....ஸோ ஒழுங்கா மீசைய முறுக்கிக்காம வந்து சேருங்க.....
ஹஹஹ கில்லர் செமயா கொன்னுட்டீங்க போங்க...அதாங்க...காமெடில.....ரொம்பவே ரசிச்சோம்...இப்பத்தான் துளசிக்கு கீதா வாசித்து இதோ நீங்க மறைச்ச உண்மையையும் சொல்லியாச்சு..மக்களுக்கு....ஹஹஹஹ் இது எப்பூடி....
ஏப்ரல் மாதத்துல வந்து.... ? ? ? உண்மையைத்தான் எழுதிட்டேனே... எனது நண்பர் சொக்கன்கூட உங்க படத்துல நடிக்கமாட்டார் நீங்க மிமிக்ரி ஆளுனு தெரிஞ்து போச்சு. மணவையார் நல்ல மனிதர் எனக்காக செய்தி கொண்டு வந்தவர் அவரெல்லாம் எங்க கூட்டம்
நீக்குஹலோ கொஞ்சம் அவங்களுக்கு ஃபோன் எல்லார் முன்னாடியும் போட்டு பேசிச் சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்....அவங்க உங்க கூட்டமா இல்ல எங்க கூட்டமானு.....தனிய எல்லாம் பேசக் கூடாது ஆமாம் சொல்லிப்புட்டோம்...
நீக்குநான் கோடரி பார்ட்டினு நண்பர் சொக்கனுக்கு தெரியும் என்னைப்பகைச்சுக்கிட்டால் தேவகோட்டையில் அணைக்கட்டிருவோம்னு அவருக்கு தெரியும் நீங்களே ஃபோண் செய்து கேட்டாலும் சொல்லி விடுவார் நான் கில்லர்ஜி ஆளுதானு.
நீக்குதங்கள் நகைச்சுவை எண்ணக் கோலங்கள் நன்று.
பதிலளிநீக்குசுவைத்து மகிழவைக்கும் பதிவு.
தொடருங்கள்
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...
நீக்குசெம ரகளை. குறும்புப் (குறும்படப்)பதிவு.
பதிலளிநீக்குஉங்களை விடவா ? நண்பரே...
நீக்கு
பதிலளிநீக்கு‘ஏமாற்றுவதும் ஒரு கலைதான்’ என்று சொன்னதும் தில்லையகத்தார் (நடனசபாபதி) தானே! அதனால் தான் எனது பெயரையும் தில்லையகத்தார் ‘செய்த’ மோசடி பற்றி எழுதும்போது இழுத்துவிட்டீர்களோ? கற்பனையை இரசித்தேன். குறும்படமென்ன முழு திரைப்படம் ஒன்றில் நெனெகள் நடிக்க வாழ்த்துக்கள்!
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகில்லர் ஜீ
நகைச்சுவை உறையாடால்மிக அருமையாக உள்ளது நானும் பல தடவை படித்து சிரித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரைக்கும், கருத்துரைக்கும், நன்றி நண்பரே....
நீக்கு