தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 03, 2014

துருவே 1984


நினைவிருக்கிறதா ? 1984 டிஸம்பர் 3-ம் தேதி.
போபால் ரயில்வே ஸ்டேனில் துருவே என்ற ஸ்டேன் மாஸ்டருக்கு இரவு நேரப்பணி, போபால் ஸ்டேன் வழியாக லக்னோவிலிருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்து விட்டு வெளியே வந்தார், அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது, அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார் எப்படியோ லக்னோ – மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம் ஆனால் அந்த ரயில் ஏற்கனவே கிளம்பி விட்டது, துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை லக்னோ – மும்பை ரயில் வந்தது அதிலிருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விவாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள் ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில், போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன...

அந்தக் காட்சி துருவேயை நிலைகுலைய வைத்தது, பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார் அங்கு அவருக்குக்கீழ் பணிபுரியும் சிக்னல்மேன் வாயில் ரத்தம் வழியச் செத்துக்கிடந்தார் அவரை ஓரமாக நகர்த்திப் போட்டு விட்டு எந்த ரயிலும் போபால் வழியே வந்து விடவேண்டாம் என்று தகவல் அனுப்பத் தொடங்கினார், அதையும் மீறிவரும் ரயில்கள் ஜன்னலை மூடிக்கொண்டு போபால் ஸ்டேனில் நிற்காமல் வேகமாக போய் விடுமாறு அறிவுறுத்தினார்.

மூக்கிலும், வாயிலும் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டு இரவு முழுவதும் விழுந்திருந்து வேலை பார்த்தார், அந்தஇரவு விடிந்தது அடுத்தநாள் சிக்னல் அறையை திறந்தபோது ஸ்டேன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையில் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.

துருவே மட்டும் இல்லை எனில் போபால் விவாயுக்கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும் ஆனால் போபால் நகரத்தில் விவாயு கசிந்த அந்த இரவில் அன்றைய மாநில முதல்வர் அர்ஜூன் சிங் நகரிலிருந்து 14 KM ஓடோடிச் சென்று தப்பித்தார்.

துருவே போன்றவர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப்படுவதும் இல்லை ஞாபகம் இருப்பதும் இல்லை.

நன்றி கெட்ட மானிடா, உனது பிறந்தநாள் கூட ஞாபகமில்லாத நீ மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திரைபட நடிகர்களின் பிறந்தாளை ஞாபகம் வைத்து கொண்டாடுகிறாய் இறந்துபோன 191 மனிதர்களின் நினைவு நாளை நினைக்க வேண்டாம் ஆயிரமாயிரம் மரணங்களை தடுத்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அந்த மாமனிதனுக்கு மனதிற்குள்ளாவது, அஞ்சலி செலுத்து காப்பாற்றப்பட்டவர்களில் உனது சகோதரன் கூட இருக்கலாம்.

இன்று 30 –ம் ஆண்டு கருப்புதின நினைவஞ்சலி.


62 கருத்துகள்:

  1. மனித நேயத்துடன் இன்றைய பதிவு!..

    தன்னுயிர் ஈந்து - பல்லுயிர் காத்த மாவீரன் துருவே அவர்களுக்கு தலை வணங்கி அஞ்சலி செய்கின்றேன்.

    குப்பைகள் மேலோடிக் கிடந்து ஆரவாரக் காற்றில் அங்குமிங்கும் அலைந்து திரிந்திடும் - இந்நாட்டில்
    மாணிக்கங்கள் எல்லாம் மண்ணுக்குள் தான் கிடக்கின்றன!..
    மண்ணுக்குள் மங்கலாகக் கிடந்தாலும் மக்கி விடாமல்
    புகழ் மண்டிக் கிடக்கின்றன - தங்களைப் போன்ற நல்லோரால்!..

    துருவே அவர்களை நினைவு கூர்ந்த தங்களுக்கு அன்பின் வணக்கம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அஞ்சலியை திரு.துருவே அவர்கள் குடும்பத்தின் ஒருவனாக நினைத்து ஏற்று வணங்குகிறேன் நண்பரே...

      நீக்கு
  2. கையை கொடுங்கள் நண்பரே. இந்த தினத்தை ஞாபாகம் வைத்து,அதிலும் குறிப்பாக துருவே அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, திரைப்பட நடிகர்களின் பின்னால் திரியும் மானங்கெட்ட மனிதர்களை சாட்டையடி அடித்தமைக்காக உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.
    தங்களின் இந்த பதிவு மூலம் தான் எனக்கு துருவே அவர்களின் தியாகம் தெரிய வந்தது.
    இப்படிப்பட்ட ஒரு பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தை ஏற்க்கும் நிலையில் நான் இல்லை நண்பரே... இந்த நன்றி கெட்ட மனிதர்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே....

      நீக்கு
  3. அப்போது எனக்கு 9 வயது! தினமணி செய்தித் தாளில் இந்த கசிவு பற்றி செய்திகள் படித்தேன்! அதே ஆண்டில் எங்கள் ஊர் பக்கமும் ஓர் கம்பெனியில் இதே போல விஷவாயு தாக்கி சிலர் இறந்தனர். அந்த நினைவுகள் மீண்டும் வருகிறது. துருவே போன்றவர்களின் தியாகம் நமது தேசத்தில் மறக்கடிக்கப்படுவது துரோகமாகும். நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகிகளை மறைத்து துரோகிகளை வாழ்த்துகிறதே... சமூகம்.

      நீக்கு
  4. அந்த நாளைய பாதிப்பு இன்றும் தொடர்கிறது. நீராதாரங்கள் எல்லாம் சேதமடைந்து இன்றும் கேடு விளைவித்துக் கொண்டு இருக்கிறது கழிவுகளை அகற்றுவதிலின்னும் இழுபறி. நல்ல நினைவூட்டல் பதிவு. எந்தத் தவறும் செய்யாமல் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி. செய்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா கண்டிப்பாக அஞ்சலி செலுத்துவோம்.

      நீக்கு
  5. அம்மாவீரனுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றிகள் பல நவில்கிறேன். என்ன ஒரு மனிதாபிமானம்.

    பதிலளிநீக்கு
  6. அமரிக்கா காரனுக்கு விபரீதமான ஆசையெல்லாம் வரும். ஒரு நகரத்துக்குள்ள அணுகுண்டு போட்டா அது எப்படி இருக்கும்னு பார்க்கனும்னு ஒரு குரூர புத்தி. போட்டானுங்க ஜப்பான்ல. ஒரு நகரத்துக்குள்ள விஷவாயுவை ஓபன் பண்ணிவிட்டா என்னாகும்? அதுக்கு நாம கிடைச்சோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனை நுளைய விட்டதும் ஒரு இந்தியன்தானே நண்பா...

      நீக்கு
  7. மாவீரம் துருவே அவர்களுக்ககு வீர வணக்கம்
    தம 4

    பதிலளிநீக்கு
  8. துருவே பற்றிப் படிக்கும்போது சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலிர்ப்பதால்தானே... நாம் மனித நேயமுள்ளவர்கள்.

      நீக்கு
  9. அப்போது எனக்கு 9 வயது. விடுமுறையில் பாட்டி வீட்டில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தேன்! தினமணி நாளிதழ் எங்கள் வீட்டில் வாங்குவார்கள்! அதில் பரபரப்பாக இந்த செய்திகளை படித்து என் அப்பாவும் அவரது நண்பர்களும் விவாதித்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவாக புரியவில்லை! அதே ஆண்டில் எங்கள் ஊர் அருகிலும் ஒரு ஆலையில் இப்படி விஷவாயு வெளிப்பட்டு சிலர் இறந்தார்கள். இந்த நினைவுகள் இன்று உங்கள் பதிவை படித்ததும் எழுந்தது. துருவேவின் தியாகம் மகத்தானது. இப்படிப்பட்ட தியாகிகளை மறந்து போவதுதான் இந்தியாவின் சாதனையான வேதனை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, தியாகிகளை மறைத்து துரோகிகளை வாழ்த்துகிறதே... சமூகம்.

      நீக்கு
  10. இந்த கருப்பதின நாளில்...கொலைகாரர்களின் கொடூரத்தனமும் அவர்களை தண்டிக்க முடியாத கையாலகத்தனமும்தான் எனக்கு நிணைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நினைவு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் வரவில்லையே... நண்பா.

      நீக்கு
  11. போற்றப் பட வேண்டியதே துருவேயின் தியாகம் ,சரி ,தப்பித்த முதல்வராவது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வாங்கிக் கொடுத்தாரா ?யூனியன் கார்பைட் நிறுவனம் இந்திய மக்களின் உயிரை கிள்ளுக் கீரையாக மதித்து சொற்பத் தொகையைக் கொடுத்து தப்பித்துவிட்டது !
    த ம 5

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள நண்பருக்கு,

    கருப்பு நாளை... போபாலில் விஷ வாயு தாக்கி மக்கள் இறந்தபொழுது... 1984 டிசம்பர் 3 ஆம் தேதி அன்று அதே நாளில் நடைந்தது இன்றைய அதே தினத்தில் நினைவஞ்சலி செலுத்த நினைத்தது உண்மையில் நெஞ்சம் கனத்தது. அந்த வேளையில் வேலையில் இருந்த திருமிகு. துருவே ஸ்டேசன் மாஸ்டர் தன்உயிரைக் ஒரு பொருட்டாக கருதாது மற்ற மனிதர்களைக் காக்கப் போராடியது எண்ணி அவருக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமை

    நன்றி..

    பதிலளிநீக்கு
  13. இரத்தம் கசிய, கசிய தன்னுயிர் மதிக்காது சேவை புரிந்த திரு. துருவே அவர்களின் தியாகம் மனதை நெகிழ வைத்தது.
    அவரது மறைவை இன்று நினைவு கூர்ந்த தங்கள் செயல் பெரிதும் பாராட்டிற்குரியது கில்லர்ஜி.

    (அவரது புகைப்படம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன், சரியா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... ஆம் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை அவரென்ன ? சினிமா நடிகரா ? யதார்த்தமான ஹீரோ,

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே!

    மனித நேயம் மிகுந்த மாவீரரை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரை இன்று நினைவு படுத்தி அவரின் பெருந்தன்மையை பதிவாக்கிய தங்களின் சிறந்த மனப்பான்மைக்கும் என் வணக்கத்துடன் ௬டிய நன்றிகள்.

    இன்றைய என் பதிவை கண்டு வாழ்த்த வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அசாத்தியமான மனிதர்...
    உன்னதம் செயல்
    இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறேன்
    தங்கள் அனுமதி தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே நாளையே தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன் போதுமா ? அனுமதி.

      நீக்கு
  16. அம்மாவீரனுக்கு வீர வணக்கம்/

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி ! நல்ல பதிவு நினைவுகூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் நிச்சயமாக அஞ்சலி செலுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  18. துருவே அவர்கள் என்றும் போற்றப்பட வேண்டும்... என்னவொரு தியாகம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தியாகம் அங்கீகரிக்கப்படாதபோது அவர்களின் குடும்ப அங்கத்தினராய் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள் நண்பரே,,, எவ்வளவு வேதனை.

      நீக்கு
  19. இறந்தவர்கள், பலர் உயிரைக் கொள்ளை கொண்ட நிறுவனம், 30 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களின் பாதிப்பு, பெயருக்காக ஒவ்வோராண்டும் அஞ்சலி என அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்க பல இன்னுயிர்களைக் காப்பாற்றத் துணிந்த ஒரு பெரிய மனது கொண்ட மாமனிதனைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி. அவரைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக போற்றுவோம் முனைவர் அவர்களே...

      நீக்கு
  20. துருவே இறந்தும் வாழ்கிறார் , கடைசி மூச்சிருக்கும் வரை போராடிய கடமை வீரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்க்காக இவரது குடும்பத்துக்கு அரசு செய்த மரியாதை என்ன ?

      நீக்கு
  21. நண்பரே நேற்று உங்களின் இந்த பதிவைப் படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. இன்றுதான் படித்தேன். மனதுக்குள்
    என்னவோ போல் இருந்தது.

    துருவே போன்றவர்களின் தியாகத்தை, இந்த அரசியல்வாதிகள் மறந்தாலும், தன்னைச் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் இவரது நினைவைப் போற்றும் வகையில், என்ன செய்கிறார்கள் என்பதே எனது கேள்வி. உங்களது துருவே நினைவஞ்சலியில் நானும் சேர்ந்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மாவும், அவரோடு இறந்த ஆயிரக் கணக்கானவர்களின் ஆன்மாக்களும் சாந்தியடையட்டும்.
    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஆதங்கமும் நியாயமானதே நண்பரே... எல்லாம் விளம்பரயுகம் தெருக்கூட்டுவதுபோல் மீடியாக்களுக்கு போல் கொடுக்கிறார்களே.. அவர்கள் திரு.துருவே அவர்களின் குடும்த்துக்காகவாது இந்த நாளில் ஏதேனும் உதவிகள் செய்யலாமே,,, எங்கே ?மனிதநேயம் என்பதே எமது கேள்வி.

      நீக்கு
  22. வணக்கம் சகோ..ச்சச இத்தனை நாளாய் போபால் விச வாயு கசிவு பற்றி படித்திருக்கிறேன். ஆனால் துருவே என்ற உண்மை வீரனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. கடைசி வரிகளைப் படிக்கும்போது ஏதோ மனவருத்தம் என்னுள் அந்த வீரனை இதுவரைத் தெரியாமலிருந்ததை எண்ணி.. சமூகத்திற்கு சாட்டையடி...(நானும் அதில் ஒருத்தி என்பதால் அந்த அடியை நன்றாய் உணர்ந்தேன்).. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரேவதி அந்த அடியை உணரும்போதே... தாங்களும் மனிதநேயமிக்கவர்களின் வரிசையில் வந்து விட்டீர்களே...

      நீக்கு
  23. அணைத்துளையை விரலால் அடைத்த சிறுவனின் தொண்டினைப் பாடத்தில் படித்துள்ளேன். அவ்வுள்ளத்தை துருவின் வழி நேரில் உணர்ந்தேன் உங்கள் பதிவின் வழி. உங்கள் அஞ்சலியில் நானும் இணைகிறேன் நண்பா.

    பதிலளிநீக்கு
  24. இது போன்றவர்களை மறந்து விடுவதே அவர்களுக்கு செய்யும் தொண்டு என அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் போலும்.... :(

    அம்மாவீரனுக்கு எனது அஞ்சலிகளும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தாங்கள் சொல்வதுபோல் இருக்குமோ....

      நீக்கு
  25. ஆண்டர்சன் இறந்துவிட்டான். அவன் செய்த கொடுமைகள் விடாமல் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதானே நண்பா பாவத்தின் சாபக்கேடு.

      நீக்கு
  26. மாவீரனுக்கு எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன். எத்தனை மானங்கெட்ட மனிதர்கள் நாம் என்பதை உணர முடிகிறது. இம்மாவீர செயல்களை வளரும் தலைமுறைகளுக்கு நாம் தான்சொல்லிச் சொல்லி புரியவைக்க வேண்டும். அரசியல் செய்யும் தலைவர்கள் செய்வார்கள் என்று ஒதுங்கியிருப்பதை விடுத்து ஒவ்வொரு இல்லத்தில் இருந்தும் தொடங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வதும் உண்மையே அதேநேரம் வீட்டில் பெரியவர்களிடம் (தாத்தா-பாட்டி) அண்டவிடாமல்தானே நிறையபேர் தனது குழந்தைகளை வளர்க்கிறார்கள் அப்படிச்சூழலை நாம் புகுத்தும் பொழுது இது எப்படி சாத்தியமாகும் கூட்டுக்குடும்பமே அன்பை அதிகரிக்கச் செய்யும் என்பதே எமது கருத்து அந்த அன்பின் மூலமே நல்ல பண்புகளும், இரக்க உணர்வுகளும் பிறக்கும் தங்களுக்காகவே விரைவில் ‘’உண்மைகள் உறங்வதில்லை’’ என்ற பதிவை இடுகிறேன்.
      எமது பதிவுகள் உடனுக்குடன் தெரிய கீழேயுள்ள Join this site அதில் இணைத்துக்கொள்ளவும் தங்களது டேஷ்போர்டில் உடனுக்குடன் கிடைத்து விடும் வருகைக்கும், அஞ்சலியில் கலந்து கொண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  27. தாங்கள் பதிவிடுவது எனக்கு தெரிவதில்லை சகோ. என்ன காரணமாக இருக்கும் ?
    மன்னிக்கவும் தாமத வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  28. மதிப்பு மிக்க துருவே அவர்களின் தியாகம் வணக்கத்திற்கு உரியது,இந்த வாய்ப்பு
    தங்களால் கிடைத்தது இன்னும் எத்தனை துருவேக்கள் இருக்கின்றனறோ
    நம்கண்ணுக்குத்தெறியாமல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே சகோதரி நூல்கள் படிக்கும்போதுதான் நமது கண்களுக்கு தென்படுகின்றன...

      நீக்கு
  29. விழிப்புணர்வைத் தூண்டிவிடும் சிறந்த பதிவு.
    மறக்கப்பட முடியாதவர்களே மாவீரர்கள்!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  30. ஆஹா! என்ன ஒரு அருமையான பதிவு நண்பரே! துருவே பற்றிய பதிவு! உங்களுக்கு முதலில் ஒரு சல்யூட் அதுவும் ராயல் சல்யூட்! அம்மாமனிதருக்கு தலைவணங்குகின்றோம்! அவருக்கு புஷ்பாஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ராயல் சல்யூட்டை அந்த மாமனிதர் திரு. துருவே அவர்களுக்கு செலுத்துங்கள் நண்பரே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  31. வணக்கம்
    பதிவை பார்த்தவுடன் நெஞ்சு கனத்து விட்டது ..... நாளை நினைவு படுத்தி பதிவாக வெளியிட்டமைக்கு நன்றிகள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சலியில் கலந்து கொண்டமைக்கு நன்றி ரூபன்.

      நீக்கு