தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 15, 2014

சிவப்பு மனசு.

أنا قـلــبـي أبــيـض
 
சிலபேர், பேசும்போது கேட்டிருப்பீர்கள், ''எனக்கு வெள்ளை மனசு'' என்று சொல்வார்கள், மனசு என்றால் இதயம். அது எப்படி வெள்ளையாக இருக்கமுடியும் ? என்னிடம் The GREAT இந்தியர்கள், பாக்கிஸ்தானியர்கள், மட்டுமல்ல, அரேபியர்கள், எஜிப்தியர்கள், பாலஸ்தீனியர்கள், சூடானியர்கள், ஜோர்டானியர்கள், ஈராணியர்கள், ஒமானியர்கள், எமனியர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள், அனா கஃல்பி அபியத் என்று, நான் பலமுறை வாதாடியிருக்கிறேன், அது எப்படி வெள்ளையாக இருக்கமுடியும் ? ஒன்று கருப்பாக இருக்கவேண்டும் அல்லது சிவப்பாக இருக்கவேண்டும், அதற்க்கு அவர்கள் சொன்னது, ''உன்னைப்போல் உள்ளவர்களுக்கு கருப்பாகத்தான் இருக்கும்'' என, நான் ஒத்துக்கொள்கிறேன் எனது இதயம் உள்ளே கறுப்பு, வெளியே சிவப்பு. அது எப்படி சிவப்பாக இருக்கும் ? எனது இதயத்தை உள்ளே பார்த்தால் இருட்டில் கருப்பாக இருக்கும், அதே இதயத்தை அறுத்து வெளியே எடுத்துப்பார்த்தால் ரத்தச்சகதியாக சிவப்பாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, ''மச்சான் மச்சக்காளை''க்கு மட்டுமல்ல, ''அத்தான் சங்கிலி''க்கு மட்டுல்ல, ''கொளுந்தியாள் கோகிலா''வுக்கு மட்டுல்ல, ''மைத்துனி மைதிலி''க்கு மட்டுமல்ல, ''மைத்துனர் மைனர் குஞ்சு''க்கு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மதமானிடனுக்கும் மட்டுமல்ல, மதப்பிரிவினை இல்லாத, (மதத்திற்க்குள் கட்டுப்பட்ட) காட்டுவாசி மானிடனுக்கும் கூட இதே நிலைதான்.
 
சாம்பசிவம்-
ஆனா, ''ல்பு '' இருட்டுக்குள்ளே பார்க்கும்போது ''அபியத்''தா, தெரியுதே..
 CHIVAS REGAL சிவசம்போ-
இதையே நாம சொன்னா, கிருதுகாலம் புடிச்சவன்னு சொல்வாங்கே.... குவாட்டருக்கு ஒருரேட்டு, ஃபுல்லுக்கு ஒருரேட்டுன்னுங்கிறது மாதிரி ஜாதிக்கொரு நீதி.


27 கருத்துகள்:

 1. இருதயத்துக்கும் ஒரு ரேட் வைப்பாய்ங்க...... அந்த இருதயம் ஜாதி வெறி யை எதிர்த்து நல்ல இருதயத்திடம் கொடுத்தால்.... அந்த இருதயத்தை தீயில வேக வச்சு தானா வெந்து போச்சுன்னும் சொல்லுவாய்ஙக... ஜாதிக்கொரு இருதயம் உள்ளவய்ஙக....ஜீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற போக்குல அப்படியே நினைச்சதை சொல்லிப்புட்டீங்களே அய்யா... !

   நீக்கு
 2. ஆஹா..தேவகோட்டைக்குப் போயும்...தங்களின்...பதிவு தொடர்கிறதா...தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 3. பொண்ணு சிவப்பா இருக்கு! பையன் மாநிறம்! இப்படி சொல்ற மாதிரி மனசையும் வெள்ளைன்னு சொல்றாங்க! மனசும் இதயமும் ஒண்ணுங்கிறதை ஏத்துக்க முடியாது! இதயம் ஓர் உறுப்பு! மனசு என்பது எண்ணம் சார்ந்தது என்று தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியே ஆராய்ச்சி செய்துட்டே போனா.. மனசு என்பது எண்ணம் சார்ந்தது என்றால் அந்த எண்ணம் எங்கே உதிக்கிறதுன்னு கேள்வி வரும்.. மூளையிலிருந்து என்று பதில் வந்தால்.. அப்போது மனசு என்பது மூளையா? என்ற பதில் கிடைக்கும்...இதை ஆராயமலே விட்டுவிட்டால் நல்லது....ஹி..ஹி...

   நீக்கு
 4. இதயம் என்னமோ சிவப்பு அல்லது கறுப்பாத்தான் இருக்கும், ஆனா நல்ல மனசு என்னைக்குமே வெள்ளை தானே ஜீ... வெண்மைக்கு அப்படியொறு பெருமை அவ்வளவு தான்.. ரொம்ப நாளுக்கப்புறம் பதிவு.. கலக்குங்கள் ஜீ..

  பதிலளிநீக்கு
 5. எல்லோருக்கும் சரி மைத்துனர் ...............க்குமா )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈரேழு உலகத்துல இருக்கிறவங்களுக்கும் அதுதான்னு நினைக்கிறேன்.. சரியா கில்லர்ஜி..?

   நீக்கு
 6. இடுகை நல்லாருக்கு ஜி! ஆஹா ஜி! இத இத நம்ம தளிர் சுரேஷ் சொன்னத்தத்தான் சொல்ல நினைச்சு வந்தா......அவரே சொல்லுப்புட்டாரு ஜி! அதே அதே! மனசு வேற இதயம் வேற....மனசு எண்ணங்கள் அதாவது மூளை சம்பந்தப்பட்டது.......அது நேர்மையாக நல்ல எண்ணங்களுடன் இருந்தால் வெள்ளை (நம்ம அரசியல்வாதிகள் வெள்ளை வெளேர்னு வேட்டி சட்டை போட்டுகிட்டு கறுப்பா அலையறாங்களே)...நேர்மையற்ற, அழுக்கான எண்ணங்கள் உடைய மனசு என்றால் கறுப்பு.....இதயம் உறுப்பு ஆல்வேஸ் சிவப்பு....ரத்தத்தினால்.....நின்னு போச்சுன்னா கறுப்பு.....கொஞ்ச நேரத்துல......

  பதிலளிநீக்கு
 7. எப்படியெல்லாம் சிந்திக்கின்றீர்கள் சகோதரரே!..:)

  வெள்ளை மனசு - களங்கமில்லாத எண்ணங்கள்
  என்பது எனது புரிதல்!
  இருட்டில் பார்க்கும்போது இதயம் மட்டுமல்ல
  எல்லாம் கறுப்புத்தான்!..:)

  நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. போறபோக்குல மைத்துனி மைதிலி னு சொல்லிபுட்டீகளே அண்ணா:(((((
  ஒத்துக்குறேன் என் இதயம் சிவப்பு நிறம் தான்:)))

  பதிலளிநீக்கு
 9. இதயத்துக்கு ஒரு கலர் வச்சு அதை ஒரு பதிவா தேவகோட்டையிலிருந்து எழுதியிருக்கீங்க.
  ஊருக்கு போயும் வலை உலகை மறக்காமல் வேலை செய்யும் தங்களை என்ன சொல்லி பாராட்டுவது?

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  நான் செக்க சிவந்தவனான்க்கும் என்று மனதில் ஒரு மாயை உள்ளவர்கள் அமெர்க்காவில் கருப்பர்கள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள் ..


  கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...

  பதிலளிநீக்கு
 11. தேவ கோட்டைக்கு வந்தபிறகும், வலைப் பூவின் வாசம் தொடர்கிறதா
  மகிழ்ச்சி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கிருந்தால் என்ன ஐயா..? எல்லாமே மனசு சம்பந்தப்பட்டது.. எழுதுன்னா உடனே எழுதிட வேண்டியதுதானே...!

   நீக்கு
 12. நல்ல மனசுன்னுதான் சொல்லக்கேள்வி.....

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே.!

  சிறப்பான சிந்திக்க வைக்கும் பகிர்வு.! தங்களுக்கு மட்டும் இவ்விதமான அருமையான சிந்தனைகள் எப்படி வருகிறது? என் வாழ்த்துக்கள்.!

  சொந்த நாட்டில் சொந்த பந்தகளுடன் களித்திருக்கும் இந்த நேரத்திலும். வலையுலக சொந்தங்களையும், மதித்து பதிலிடுவதும், பதிவிடுவதுமாக இருக்கும் தங்கள் நல்ல பண்புக்கு என் பணிவான நன்றிகள்.!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும், வரும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. சுருக்கமான பதிவுதான். அனாலும் மிகவும் சுவையானது.

  பதிலளிநீக்கு
 15. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 16. குவாட்டருக்கு ஒரு ரேட்டு ஃபுல்லுக்கு ஒரு ரேட்டா... யாரங்கே.... ?..

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பாணி டிரேட் மார்க் பதிவு !

  " உள்ளம் வெள்ளை " யின் அர்த்தம் அந்த இதயத்தின் எண்ணங்கள் சார்ந்ததே ! சுத்தமான எண்ணம் கொண்ட இதயம் ! அதாவது சொட்டுநீல, சூப்பர் ரின் வெள்ளை !!! இன்னும் ஆசைப்பட்டா சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் விற்பனையாகும் பயோரியா பல்பொடி வெண்மைன்னு கூட போட்டுக்கலாம் !

  இதுபரவாயில்லைஜீ.... நம்மை நாமே தங்கமனசுக்காரன்னு சொல்லிக்கிறதுல இருக்கு சொந்த காசுல சூனியம்... எவனாச்சும் விக்கிறதுக்காக வெட்டி பாத்துப்புட்டா ?!..........

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..அதானே..! எதுக்கும் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது..!

   நீக்கு
  2. கருப்பு, வெள்ளை, சிவப்பு..
   கலரில் இல்லய்யா மனசு..!
   அது என்றுமே எண்ணங்களின் வெளுப்பு...!

   நீக்கு
 18. மிகப் பெரிய விஷயத்தை
  மிக மிக இயல்பாகச் சொல்லிப்போனது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  காலம் அறிந்து கருத்து பதித்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு