தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 02, 2014

என்உயிர்த்தோழி.

என்வாழ்நாள், வரை என்னுடன் எங்கும் வருபவள், நான் சோர்ந்து போனாலும் என்னுடன் சேர்ந்து வரவிருப்பவள், நான் சந்தோஷமானாலும் என்னுடன், நான் கவலையடைந்தாலும் என்னுடன், நான் ஆடிப்பாடினாலும் என்னுடன், நான் ஓடிப்போனாலும் என்னுடன், நான் தேவகோட்டையிலிருந்து... தேவிபட்டணம் போனேன் அவளும் என்னுடன், காரைக்குடியிலிருந்து... காரைக்கால் வந்தேன் அவளும் என்னுடன், கடலாடியிலிருந்து... கடலூர் போனேன் அவளும் என்னுடன், பாம்பனிலிருந்து... பாம்பே போனேன் அவளும் என்னுடன், ஒருமுறை போரூரிலிருந்து... போர்பந்தர் போனேன் அவளும் என்னுடன், என்றால் பார்த்து கொள்ளுங்களேன் என்னை பிரியமாட்டாள், அவள் என்னைவிட்டு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ், என்ன ஆவணி அவிட்டத்தன்று கூட அவள் என்னை பிரிந்ததில்லை, என்மரணகாலம் வரையிலும் இப்படியே இருப்பாளா ? என்னுள் சந்தேகம் காலமும் கடந்தது, என்மக்கள் திருமணமாகி என்னை விட்டு, AMERICA, GERMANY என போய்விட்டார்கள், எனினும் அவள் என்னைவிட்டு பிரியவில்லை, என்னுள் சந்தோஷம் இவள் மரணகாலம்வரை, கண்டிப்பாக வருவாள், என்னுள் நம்பிக்கை கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என, காலம் முடிவுக்கும் வந்தது ஒருநாள் இறந்தும் விட்டேன், என்னுள் அதிசயம் அட... உண்மைதான் இறந்தவர்கள் சொந்தபந்தங்கள் வந்து அழுவதை உணரமுடியும் ஆனால் பேசமுடியாதுயென சின்னவயதில் (1975) எனது ''அப்பத்தா கள்ளப்பிறாந்து'' சொன்னது ஞாபகம் வந்தது, சரிபோகட்டும் நம்ம விசயத்துக்கு வருவோம், என்னைக்குளிப்பாட்டி பாடையில் ஏற்றினார்கள் தாரைதம்பட்டை முழங்க, தெருவில் தூக்கிப்போனார்கள், என்னுள் கவலை ''மேற்படியாரை'' சந்திக்கப்போறோம் என்னுள் பயம் பெருங்கொண்ட அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், கிரிக்கெட்வீரர்கள், ஆஸ்ரம மடாதிபதிகள், டிவி சேனல்காரர்கள், பத்திரிக்கைகாரர்கள், பதவியிலுள்ள அதிகாரிகள், தொழிலதிபர்கள், இவங்கே யாரும் ஒருபயவரலை, சும்மா சொந்தக்காரங்க பத்துப்பேரு, நண்பருங்க நாலுபேரு மட்டும் வந்தாங்க... சுடு(ம்)காடும் வந்துவிட்டது என்னுள் ஆச்சர்யம் காரணம் அவளும் வந்தாள், அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... என்கூடவே வந்த அவள்தான் என்உயிர்த்தோழியான, என் நிழல்பூச்சி.
 
சாம்பசிவம்-
தோழரே,  நீர் மறைந்து போனாலும் இணையதளத்தில் இணைந்திருப்பீராக ?
CHIVAS REGAL சிவசம்போ-(தனக்குள்)
அப்படீனா இந்தஆளு, செத்துப்போனாலும் WEBSITEல வருவானோ ?
Video
(Please ask Audio Voice)


54 கருத்துகள்:

 1. வணக்கம்
  நினைவுகள் சுமந்த பதிவு எங்கள் நெஞ்சில் நீங்காது நிக்கிறது பகிர்வுக்கு நன்றி

  -நனறி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. super padichutom veetukku vandu comment...inga tamil illa...athan..okeya ji

  பதிலளிநீக்கு
 3. செத்து போனால் எப்படி வருவாரு...?? வெப்சைட்டியிலே இருப்பாரு...வப்ப வேணாலும் பாத்துகிரலாம்....என்ன நண்பா..! நான் சொல்வது சரிதானா...???

  பதிலளிநீக்கு
 4. இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 5. அப்பப்பா நிழல் பூச்சிக்கு நீங்கள் கொடுத்த பில்ட்அப் இருக்கே. தாஞ முடியலை. ஆமாம், இந்த பதிவுக்கும் புகைப்படத்துக்கும் என்ன சம்பந்தம் நண்பரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பு தோழி, உடன் ஆடுவது தாத்தா திரு. கரம்சந்த், போரூர் & போர்பந்தர், இன்று காந்தி ஜெயந்தி, பொருத்தம் போதுமா ?

   நீக்கு
 6. தோழல் சாம்பசிவம் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாக்கு பொன்னாகட்டும் நண்பரே...

   நீக்கு
 7. வித்தியாசமா நினைவு கூர்ந்த விதம் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்மை நினைவு கூர்ந்து வந்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 8. பதிவுகள் நினைவை சுமந்து கொண்டு இருக்கும்...
  நிழல் மட்டுமே கூட வரும் சரிதான்...
  வெப்சைட்டில் வாழ்வான்... சரிதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக புரிந்து கொண்டீர்கள் நம்ம ஊருல... எப்பூடி ?

   நீக்கு
 9. சரி சகோதரரே!

  செத்தபின் நிழல்பூச்சி எப்படி வரும்!..
  வித்தியாசமாகச் சிந்தித்தீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடையோடு பாடை வடிவில் வருமே... எறும்புக்கும் நிழல் உண்டே...

   நீக்கு
 10. அது சரி... அருமை...
  காணொளியும் நன்று...
  வாழ்த்துக்கள் சகோதரா..

  பதிலளிநீக்கு
 11. நீ போகும் பாதை பார்த்து பார்த்து வந்தேனே என்று உங்களின் அவள் பாடியதை ரசித்தேன் !

  பதிலளிநீக்கு
 12. இதுதான் பகவான்ஜி ஒரிஜினல் வரிகளை மாற்றிக்கொடுத்திருந்தேன் கண்டு பிடித்து விட்டீர்களே ஸூப்பர் நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. ஆஹா என்ன ஒரு வித்தியாசமான கற்பனை..வாழ்த்துகள் சகோ..

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி,

  பதிலளிநீக்கு
 15. சொல்பவர் "அவர்" ஆனால் அவரது நிழல் பூச்சி "அவள்" நிஜம் நிழலாகும் போது அவளாகியதோ?!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லும் 'அவர்' தனது நிழலை 'அவள்' போலத்தான நினைத்துக்கொண்டு வாழ்கிறார் அவனில் பாதி 'அவர்' ஆட்டுவித்தால் ? 'இவள்' ஆடுவாள், ஆடினாள் ''சரிதா''னா ?
   (ஈருடல் ஓர் அசைவு)

   நீக்கு
 16. அது எப்படி?!!!!!

  கற்பனை பிரமாதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரணம் அவருக்கு துணையே இவள் (நிழல்) தானே...
   நன்றி நண்பரே...

   நீக்கு
 17. ஜீ !

  உண்மையிலேயே சூப்பர்ஜீ !

  மிக வித்யாசமான கற்பனை... புகழுக்காக சொல்லவில்லை ! கட்டுரை, கவிதை எழுதுவதை விடவும் சிரமம் இது போன்ற சுவாரஸ்யமான, வித்யாசமான முயற்சிகள் !

  அப்புறம் நம்ம ஊரு பக்கமும் வந்திருக்கீங்கன்னு சந்தோசம் ! ( காரைக்கால் ?! )

  அந்த புகைப்படம் ! நண்பரே... கருத்து தெரிந்த நாள் முதலாய் கண்டதையும், பஜ்ஜி மடித்த பேப்பரை கூட பஜ்ஜி நழுவியது தெரியாமல் படிக்கும் புத்தகப்புழுவான எனது கண்களில்கூட படாத (!) அற்புதமான படம் !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே.. உங்களுடைய சொந்தஊர் காரைக்கால் மட்டுமல்ல, வாடகைஊர் ஃப்ரான்ஸ் சும்கூட வந்துருக்கோம் நீங்கதான் பார்த்தா செலவு வந்துரும்னு எங்கிட்டோ போயிட்டீங்க...

   கீழே பதிவின் இணைப்பு.
   http://www.killergee.blogspot.ae/2014/08/fantastic-france.html

   நீக்கு
 18. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே... சிந்திக்க வைத்ததா ? அதுதானே எமது வேலையே....

   நீக்கு
 19. தாங்க முடியல உங்க ரவுசு
  சரி அந்த காந்தியார் படம் மார்பிங் செய்யப்பட்டது உணமையானது அல்ல.. எல்லாம் எதிர்க் கருத்தாளர்களின் கைங்கர்யம்...
  நீக்கிவிடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் சகிப்புத்தன்மையை சகித்ததற்க்கும் நன்றி தங்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேறுபடம் தெர்வு செய்து மாற்றி விடுகிறேன் நண்பரே....

   நீக்கு
 20. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஐயா மதுரையில் சந்திப்போம்.

   நீக்கு
 21. நல்ல கற்பனை அண்ணா! ஆமா எங்க புடிச்சீங்க இந்த போட்டோ !!! சூப்பரு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி ஆனால் ? இந்தபடம் ''அவருக்கு'' பிடிக்கலையே....

   நீக்கு
 22. பதிவைப் படித்ததும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் ஒரு காட்சியில் நிழலுடன் பேசிக்கொண்டுவரும் காட்சி நினைவிற்கு வந்தது. அக்காட்சியில் கடைசியாக சீயர்ஸ்னா மோதணும்டா என்று கூறி பாட்டிலை உடைப்பார். அக்காட்சி ரசிக்கும்படி இருந்தது. அவ்வாறே தங்களின் பதிவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாகேஷ் பாட்டிலை உடைத்ததுபோல் கடைசியில் நானும் என்னை கொன்னுட்டேனோ... வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 23. படத்தைப் பார்த்தால் காந்தி வயசான காலத்திலே குத்தாட்டம் ஆடியிருக்கார் போல.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே ஒரு நண்பர் சொல்லியிக்கிறார் நண்பரே,, இது போலி என்று எமக்கு பதிவுக்கு பொருத்தமானதாக தோன்றியது அதனால் இட்டேன்.

   நீக்கு
 24. பதற்றத்துடன் படிக்கத்தூண்டி, இறுதியில் வியப்பில் ஆழ்த்திய அற்புதமான ‘சஸ்பென்ஸ்’ பதிவு.

  கில்லர்ஜி,

  வளர்க உங்கள் எழுத்தாற்றல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகை அளந்தவரிடமிருந்து பாராட்டு நன்றி நண்பரே...

   நீக்கு
 25. அன்புள்ள அய்யா திரு.கில்லர்ஜு அவர்களுக்கு,
  வணக்கம். உங்களின் உயிர்த்தோழியைக் கண்டு வியப்புற்றேன். நிழல் நிஜமாகிறது...
  ‘ நிழல் முகம் காட்டுவதில்லை...’
  ‘விறகு வெட்டியே...முதலில்
  உன் நிழலை வெட்டு...’
  -உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ்ஸோட படிக்கத் தூண்டிய பகுதி...
  பாராட்டுகள்.

  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கவிதை போன்ற கருத்துரைக்கும் நன்றி நண்பரே,, அழைப்பிற்க்கு நன்றி இதோ இப்பொழுதே வருகிறேன்.

   நீக்கு
 26. என்னவளின் தோற்றத்தை தினமும் பார்கிறேன் நான் !

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் மட்டுமல்ல நண்பரே.. அனைவருமே... . கண்டே தீரவேண்டும் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 27. ஆஹா ஆஹா வர வர உங்கள் கற்பனை வளம் அபாரம் சகோ நிழற் பூச்சியை பற்றி சொன்னது நிஜம் தானே. அது மட்டுமா தங்கள் பதில்களையும் அல்லவா ரசித்தேன். அப்படி டக் டக் என்று வருகிறது பதில்கள் உங்களுக்கு ம்..ம்..ம்.. வாழ்த்துக்கள் சகோ ....! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி சகோதரி எமது கேள்வி-பதில் விரைவில் வரும் புதிய பதிவு ''எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்'' காணுக... பிறகு சொல்லுங்கள்.

   நீக்கு
 28. கில்லர் ஜீ தேவ..கோ்டடையிலிருந்து மதுரைக்கு வருவரா.??.அல்லது..அபுதாயிலிருந்து சைட்டா..மதுரை வந்து இறங்குவாரா்.???..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா நான் என்ன தமிழ்நாட்டு அரசியல்வாதியா ? நேரடியாக விழாவுக்கு வர.. அடுத்த பதிவில் இதற்க்கு பதில் தருகிறேன், காரணம் இருக்கிறது.

   நீக்கு