ஏங்க, இந்த வருஷம் பொங்கலுக்கு...
பொங்க வைப்போமா ?
அதான் பொங்கல் வைப்போமே...
நான் சொன்னது உனக்கு புரியலை.
என்ன புரியலை... ?
சரி, சொல்ல வந்ததை சொல்லு.
எங்க அம்மா வீட்டுக்கு போவோம்.
ஏன்... புது மாப்பிள்ளைக்கு ஏதும் செய்யப் போறாங்களா ?
புது மாப்பிள்ளையா... யாரு ?
உங்க வீட்டுக்கு எத்தனை மாப்பிள்ளை நான்தானே இருக்கேன் ?
சரிதான் இப்படியொரு நெனைப்பு.. இருக்கா ?
நான் தானேடி மாப்பிள்ளை...
நான் சொன்னது புது மாப்பிள்ளைனு சொன்னதை.
ஏன்.. சொல்லக்கூடாதா ?
நம்ம வீட்லயே இப்ப, மாப்பிள்ளை லெவலுக்கு
ஒருத்தன் இருக்கான்...
இப்ப மட்டும் என்ன அதிசயமா இருக்கு பொங்கலுக்கு போக...?
இல்லே.... அப்பா சொன்னாரு... இந்த வருஷம்
மாப்பிள்ளையையும், பேரனையும் கூட்டிக்கிட்டு வந்துரு பொங்கலை இங்கேயே
கொண்டாடலாம்னு.
சரி போவோம் ரெண்டு பவுன் செயின் போடுவாரா ?
யாருக்கு ?
யாருக்கா ? புது மாப்பிள்ளைக்குத்தான்....
நான் வேணும்னா போன் பண்ணி சொல்லட்டா... முத்தத்துல போட்டுருந்த ஊஞ்சலை கழட்டி போட்டுட்டாங்களாம் அந்தச் செயின்
எப்படியும் ஆறு கிலோ இருக்கும்.
என்னடி... நக்கலா ?
பின்னே என்ன இப்ப போயி நகை கேட்டா சிரிக்க மாட்டாங்க...
ஏண்டி உனக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளுக்கு போட்டதா நினைக்க கூடாதா ?
யேன் கொழுந்தியாள் கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பவுன் நகை
போட்டதா நினைக்ககூடாதா ?
சரிதான் உனக்கு வாய் மட்டும் நல்லா
நீளுதுடி... மத்ததுல ஒண்ணுமில்லை.
என்ன இல்லாம, போச்சு எனக்கு நகை போடலையா ? இல்லை சீதனம் தரலையா என்னகுறை ?
யேன்... அந்த வயக்காட்டைப்பூராம் வித்தாங்களே... அதுல உனக்கு
ஏதாச்சும் கொடுக்கலாமுள்ள...?
எனக்கு அண்ணன், தம்பி இல்லையா... அவுங்களுக்கு எதை கொடுக்கிறது ? எனக்கு ஒண்ணும் அவசியம் இல்லை, எல்லாம் இருக்கு.
ஆனா மூளையில்லையே... மத்தது இருந்து என்ன பிரயோசனம் ?
எனக்கு மூளை இல்லைனு... மூளையுள்ளவங்க யாரும்
இதுவரை சொன்னதில்லை.
சரி, சரி ரொம்ப பேசாம ஒரு பவுன் போடச்சொல்லு
பொங்கலுக்கு போயி அமர்க்களப்படுத்திடுவோம்.
சரி இப்பவே போன் பண்ணி சொல்றேன், நாங்க
வரத்தோது இல்லைனு.
என்னடி நீயே வேண்டாம்னு சொல்றே... ½ பவுனுல மோதிரமாவது போடச் சொல்லுடி போதும்.
வேணும்னா மோதகமும், அதிரசமும்
போடச் சொல்றேன்.
அப்ப நான் வரமாட்டேன்.
ஆணியே புடுங்க வேண்டாம், முதல்ல எந்திரிச்சு
வேலைக்கு போங்க, பொங்கல் கேன்ஷல்.
(தனக்குள் –
சத்தமில்லாமல், போயிட்டு வந்துருக்கலாமோ... பொங்கல் செலவாவது மிச்சமாகி இருக்கும்)
CHIVAS REGAL சிவசம்போ-
உள்ளதும் போச்சடா... நொள்ளைக் கண்ணா ?
அன்பு நெஞ்சங்களுக்கு இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
ஆசை தோசை அப்பள வடைன்னு சொல்லத்தெரியலை.
பதிலளிநீக்குஇவ்வளவு வருஷத்துக்கு அப்புறமும் உங்களுக்கு மாமனார் வீ ட்டிலிருந்து சீதனம் வரணுமாக்கும்?
ரொம்ப போங்கு தான் நீங்க
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
வருக நண்பரே தமாஷுக்காக தாங்கள் சொன்னாலும் எனக்கு இது வருத்தமே நண்பரே... எனது மனைவிக்கு போட்ட நகையோடு எனது நகையவும் எனது மனைவி இறந்தவுடன் விட்டுக்கொடுத்தவன் நான். வாரிசு இல்லாத அந்த சொத்தை பலரும் அனுபவிக்கின்றார்கள் நான் கண்டு கொள்வதில்லை காரணம் நான் எனது குழந்கைகளையும் வேண்டாமென சொல்ல வைத்தவன் நான், நானாக வாழவேண்டுமென்ற கொள்கையாளன் தங்களை வருத்தப்பட வைப்பதற்காக எழுதவில்லை உண்மை தெரியவேண்டுமென்று எழுதினேன் தவறெனில் மன்னிக்க...
நீக்குஉங்களைப் பற்றி எனக்கு தெரியாதாக்கும். நீங்கள் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?
நீக்குநான் சும்மா தமாஷுக்குத்தான் அப்படி எழுதினேன்.
பொங்கலுக்கு அதிரசமா?
பதிலளிநீக்குமாப்பிள்ளை தலை தீபாவளின்னு நினைச்சிட்டாரோ?
பொண்டாட்டி தீவிரவாதியா இருக்கும் போல... என்ன பேச்சு... கடைசியா அவனுக்கு பொங்க வச்சிருச்சே... (வீட்லபொங்கச் செலவை வச்சிருச்சேன்னு சொன்னேன்)
அருமை அண்ணா...
பொங்க வச்சதை சரியாச் சொல்லிட்டீங்களே நண்பரே.... நன்றி.
நீக்குஅடடா...அரைப்பவுன் மோதிரத்துக்காக..மோதகமும், அதிரசமும் போச்சே......இதோடு கிடைக்கும் பொங்கலும் போச்சே......
பதிலளிநீக்குஇருக்கிறதை விட்டுப்புட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நண்பா...
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை உரையாடல்.! பேசாமல் அழைத்தவுடன் போய் விட்டு வந்திருந்தால், ஏதாவது கிடைத்திருக்கும். (இருக்கிற மரியாதையாவது) (அது எங்கே இருந்தது? என்ற ஐயத்தினால்தான் எழுந்ததோ விவாதம்? ) சரி! எப்படியோ
பொங்கல் பயணம் இப்படி அநியாயமாய் ரத்தாகி விட்டதே? மனசுக்கு வருத்தமாக உள்ளது.. எனினும்,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ஆமா சகோ தேவையில்லாமல் வாங்கி கட்டுறது இதுதானோ ? தங்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துகள்.
நீக்குஹாஹா! செமசிரிப்பு! பொங்கலாவது கிடைச்சிருக்கும்! அதுவும் அம்போவா?
பதிலளிநீக்குஆமா நண்பரே பட்டாத்தானே தெரியுது சில பேருக்கு நன்றி.
நீக்குபொங்கலுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது. அதற்கு முன்பே இங்கே தோரணம் கட்டி கரும்பு நட்டு மஞ்சு விரட்டோட வரவேற்பு கலைகட்டுகிறது. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சகோ. (இந்த முறை தான் தாங்கள் அழைக்காமல் பகிர்வைக் காண வந்துள்ளேன். )
பதிலளிநீக்குவாங்க, வாங்க இப்பக்கூட தட்டுல அதிரசத்தை வச்சுதுனால்தானே வந்தீங்க... தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் சகோ.
நீக்குஅங்கிருந்து போகவர ஆகும் செலவில் இங்கிருந்தே செயினோ மோதிரமோ வாங்கி இருக்கலாமே. அட் லீஸ்ட் மோதக அதிரசமாவது செய்ய முடிந்திருக்குமே. ரசித்தேன் பொங்கலுக்குஅட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜீ
பதிலளிநீக்குஆமா ஐயா தாங்கள் சொல்லறதும் சரிதானோ.... தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்,
நீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணா !!!
பதிலளிநீக்குதங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே...
நீக்குஎன்ன நண்பரே! உங்களுக்கு மூளை இல்லையா?!?! அப்படினு அவங்க சொல்லறாங்க?! மறைமுகமா...அதக் கேட்டுகிட்டு இப்படி சும்மா நிக்கலாமா?!! ஹஹஹா
பதிலளிநீக்குஇந்த மாப்பிள்ளை கெத்து, உதார் விடுறத விட்டுட்டு பேசாம பொங்கலுக்குப் போயிருக்கலாம்ல...அட்லீஸ்ட் கரும்பாவது கிடைச்சுருக்கும்ல....மோதகம் அதிரசம் நல்லாவே சுட்டு ஸாரி ஸாரி...சுட்டுக்கு வேற அர்த்தம் வந்துரும்...நல்லாவே செஞ்சுருக்கீங்க...இப்படி எத்தனை புது மாப்பிள்ளை கிளம்பிருக்கீங்கப்பா....
பொங்கலோ பொங்கல்!! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! அங்க அபுதாபில பொங்கப் பானை வைக்க விடுவாங்களா...முற்றம் உள்ளதா?!?! ஹஹஹஹ் - இந்தக் கொழுப்புதானே வேண்டான்றது-இங்க மைன்ட் வாய்ஸ் சொல்லுது கேக்குது.....ரசித்தோம்! நண்பரே!
புதுசாவா கேட்கிறோம் காலம்பூராம் கேட்கிறதுதானே... இங்கே சுற்றும் முற்றும் பார்த்துக்கிட்டு பொங்க வச்சிட வேண்டியதான்.
நீக்குஉங்க பொங்கச் சோறும் வேணாம் ,பூசாரித் தனமும் வேண்டாம்ன்னு ஒரு முடிவாத்தான் இருக்கிறீங்க போலிருக்கு :)
பதிலளிநீக்கு+1
ஆமா பகவான்ஜி எம்புட்டுத்தான் வாங்கி கட்டிக்கிறது....... நன்றி.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குஉரையாடல் பொங்கலிட்டு....இல்லை உரையாலே சண்டையிட்டு ...
நகையாலே புன்நகையைத் தொலைத்துவிட்டு... பகையாலே வந்த வெட்டு...ஊருவரை போகமல்...உவப்பாலே கூடாமல்... போலாமோ பொங்கல்? கூடாது...கூடாது... உடனே புதுச் சட்டைபோட்டுக்கிட்டு... மாப்பிளையை மாட்டு வண்டிபூட்டிக்கிட்டு பொங்கல் வைக்க புறப்படுங்க... இன்பமெங்கும் பொங்கட்டும்.
நன்றி.
வருக மணவையாரே தங்களின் சொல் கேட்டு புறப்பட்டு விட்டேன் தலைப்பாகை கட்டிக்கிட்டு இடைவெளி விட்டு வருகை தந்தமைக்கு நன்றி.
நீக்குஅன்புள்ள ஜி,
நீக்குகணினியில் மானிடர் மாத்தப்போய்...வாங்கிறதுதான் வாங்குகிறோம் டி.வி.மானிடராக வாங்குவோமே என்று வாங்கி...அது எனது சி.பி.யு. (எச்.டி) ஏற்றுக்கொள்ளாமல்...பல கேபிள்கள் மாற்றிப் பார்த்தும் சரிவராமல் கடைசியில் கிராபிக்ஸ் கார்டு போட்டபிறகுதான் வழிக்கு வந்தது.
‘இடைவெளி என்பது இடைவேளை அல்ல‘ இது ஒரு நாடகத்தின் தலைப்பு. யாரோ எழுதியது வானொலியில் கேட்டதாக நினைவு.
நன்றி.
மணவையாரின் மீள்வருகைக்கு நன்றியும், புதிய கணினி வாங்கியமைக்கு வாழ்த்துகளும்.
நீக்குதமாஷ், விறுவிறுப்போடு கூடிய சுவையான கதை. இதே மாதிரி அனைத்து பதிவுகளும் எழுதுங்க கில்லர்!!
பதிலளிநீக்குநிச்சயமாக இனி நகைச்சுவை எழுத முயற்சிக்கிறேன் நண்பரே....
நீக்குநகைச்சுவையோடு பொங்கினேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநகைத்து பொங்கியது மகிழ்ச்சியே நண்பரே....
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
த ம +
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி..
தைப்பொங்கல்... வாழ்த்துக்கள்.. கேட்டு எழுதிய பதில்கள் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன் தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குஅதி ‘ரச‘ மான பதிவுதான் நண்பரே!!
பதிலளிநீக்குநீங்கள் எப்போதும் முதல் நான் கடைசி 80 எனது பின்னூட்டத்தில் இருந்தே தெரிந்திருப்பீர்களே!
த ம 8
ஆம் கவிஞரே தாங்கள் சொல்வதும் உண்மைதான் என்று, எனது சிற்றறிவுக்கும் 8கிறது.
நீக்குமாமனாருக்கு பொங்க வைக்களான்னு நினைத்தால்
பதிலளிநீக்குஅந்தம்மாபெரிய பொங்களு வச்சு (வாயால)அதிரசமுந்
தீஞ்சு போச்சே!!!!!!!!!!!வருத்தங்களை விரட்டுவதற்காகவா?
இந்த நகைச்சுவைகள்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சகோ.
விடாக்கண்டனுக்கு, கொடக்கண்டி என்ன செய்ய ? கவலைகளை மறக்க இதுவும் ஒருவழிதானே... இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ....
நீக்குஅதிக அன்பு உள்ள இடத்தில்தான்
பதிலளிநீக்குஇதுபோல் இரசிக்கத்தக்க ஊடலுக்கும் வாய்ப்புண்டு
மிகவும் இரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் வார்த்தை உண்மையே... வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குtha.ma 9
பதிலளிநீக்குநவரச வாக்கிற்க்கு நன்றி.
நீக்குபொங்கலை முதலில் நினைவூட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்
இலங்கை வேந்தரின் வருகைக்கு நன்றி.
நீக்குஇது போல் நகைச்சுவை பகிர்வுகள் தொடரட்டும் ஜி...
பதிலளிநீக்குஇனிய (அட்வான்ஸ்) பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
சொல்லிட்டீங்கள்ல, இனி சாந்தியை இழுத்து சந்தி சிரிக்க வைப்போம் நன்றி.
நீக்குநகைச்சுவையான பதிவு என்றாலும் ரசிக்க முடியாத படி வேதனையாக இருந்தது .பிள்ளைகளும் வேண்டாம் என்று சொல்லியதும் அவற்றை கண்டு கொள்ளாமல் விட்டதும் பெருந்தன்மையே ஆனாலும் மனதை நெருடும் படியாகவும் ஆயிற்று சகோ எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அள்ளித் தரட்டும். நகைசுவை நன்றாக வருகிறது சகோ ஒவொரு முறையும் வித்தியாசமான பதிவுகளில் அசத்துகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள். !
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் பிள்ளைகள் உறவினர்க்கும் உரித்தாகட்டும்....!
வருக சகோ, உண்மையை எழுதினேன், நகைச்சுவை நல்லாயிருக்கா ? உண்மையென்றால் தொடர்கிறேன்.... இதுபோல் உங்களுக்கும், பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குபொங்கல் போல் நகைச்சுவையும் பொங்குகிறது கில்லர்ஜிசார் . அட்டகாசமான உரையாடல்
பதிலளிநீக்குஆடிக்கும், அமாவாசைக்கும் வருகை தரும் நண்பர் தைப்பொங்களுக்காக மார்கழியில் வந்தது கண்டு மகிழ்ச்சி.
நீக்குபொங்கலுக்குள் - இத்தனை பொங்கலா!?..
பதிலளிநீக்குஅதிசயந்தான்.. அத்தனையும் அதிரசம் தான்!..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பொங்கலுக்கு(ள்) சர்க்கரைதானே, இடவேண்டும் நண்பரே....
நீக்குபொங்கல் நல்வாழ்த்துகள்.
பொங்கல் சுவை தேன்!
பதிலளிநீக்குபுலவர் ஐயா வருகை தந்தது அதைவிடத் தேன்
நீக்குஎனக்கு கிடைக்காட்டியும் பரவாயில்லை... அதிரசம் கருகி இருக்கிறதே....ஏன்.? கோபத்தோடு சுட்டு இருப்பாங்களோ...!!!!!!!!!!
பதிலளிநீக்குஅடுப்புல போட்டுப்புட்டு பயலும், சிருக்கியும் சண்டை போட்டால் ? கருகாமல் என்னாகும் ?
நீக்குசுவாரசியமான கணவன் மனைவி சண்டை.
பதிலளிநீக்குபல வருசங்களுக்கு முன்பு என் மனைவியுடன் இம்மாதிரி சண்டையிட்டது மனத்திரையில் மின்னி மறைந்தது!
நன்றி கில்லர்ஜி.
வருக நண்பரே,,, பலபேருடைய வாழ்வில் இது கண்டிப்பாக நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனது வாழ்வில் இந்த மாதிரி நடந்ததில்லையே... என்ற ஆதங்கத்தின் விளைவே இந்தப்பதிவு.
நீக்குகணவன் மனைவி ஊடலிதுதானோ...
பதிலளிநீக்குரசித்தேன்
தங்களுக்கும் விரைவில் இந்தவகை அனுபவம் கிடைக்க வாழ்த்துகள் நண்பரே....
நீக்குரெண்டு பவுன் அரை பவுன் கால் புவுன் நாம எவ்வளவு தான் இறங்கி வந்தாலும் தாய் வீட்டை விட்டுகொடுக்க மாட்றேங்களே தாய் குலங்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா. தம 14
என்ன செய்யிறது நண்பரே வயிற்றுல உள்ள வலி நமக்குத்தானே,,,, வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குகடைசியில "வடை(யும்)போச்சே" . நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க. நடப்பவை நல்லனவாக நடக்கட்டும்.ஞானிஸ்ரீபூவு இருக்கும்போது உங்களுக்கு கவலையேது.
பதிலளிநீக்குஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும், ஞானி ஸ்ரீபூவுவை மறக்காமலிருப்பதற்க்கும் நன்றி இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குவென்பொங்கல், சர்க்கரை பொங்கலில்..அட்வான்ஸ் பொங்கல் உண்டா...? நான் பார்த்ததேயில்லையே...
பதிலளிநீக்குஇப்பவே கொடுத்தேன்ல இதுதான்...
நீக்குவணக்கம் நண்பரே!
பதிலளிநீக்குஅழைப்புக்கு நன்றி!
மோதகமும் அதிரசமும் வைத்தீர்களே கில்லர்ஜி!
பதிலுக்கு நாங்கள் மூன்று தமிழ் வேண்டும் என்றல்லாவா
உங்களிடம் கேட்க வேண்டும்?
எங்கே அய்யா முத்தமிழ் (மூன்று தமிழ்)
1)ஒரு தமிழ் வாய்ஸ் கணவருடையது
2)மறுதமிழ் வாய்ஸ் மனைவியுடையது
3)மூன்றாவது வாய்ஸ் மாமியாருடையது எங்கே அய்யா?
அட்லீஸ்ட் போனிலாவது கேட்டிருக்கலாம்!
போனில் பேசி இருந்தால் தெரிந்திரூக்கும்
மாப்பிள்ளை கெத்து?
இரண்டு முழு கரும்பை கடித்து சுவைத்தால் ?
இரண்டு பவுன் செயின் கொடுப்பதாக சொன்னது!
மாப்பிள்ளைக்கு தெரியும் அல்லாவா? அவரது பல் செட்
சங்கர் படம் போன்று பிரமாண்டமானது என்று!
நண்பா!
உம்முடைய நகைச் சுவை பதிவின் தாக்கமே
எனது இந்த நகைச் சுவை கருத்து பின்னூட்டம்.
(நண்பரே முதல் டிக்கெட் எடுத்து உமது
திரைப் படம் காண வரும் நான் இன்று பிளாக்கில்
டிக்கெட் எடுத்து பார்க்கும் நிலை!
காரணம் கணினி பழுது! மன்னிக்கவும்!
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா, பொண்டாட்டி கொடுத்த மரியாதையே... ஊரு சிரிக்குது இதுல மாமியார் வேறயா ? ச்சூ போங்க நண்பா...
நீக்குஎப்படி இப்படி எல்லாம் ஒரு கழி கரும்பாவது கிடைத்து ,இருக்கும், ஒழங்கா மனைவி சொல் கேட்டு இருக்கலாம்,
பதிலளிநீக்குஆமாமா, பட்டால்தானே தெரியுது வருகைக்கு நன்றி.
நீக்குபொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசுவையான நகைச்சுவையான பதிவு. தானும் எதிர் பார்க்காமல்....குழந்தைகளையும் வேண்டாம் என்று சொல்ல வைத்தது பெருந்தன்மையான விஷயம் சகோ.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணவில்லையே...?
என் தளத்திலும் இல்லை.
விடுமுறை நலமாய் கழித்து வந்தமைக்கு நன்றி தி கிரேட் தேவகோட்டை நலமா ?
நீக்குசகோவின் வருகைக்கு நன்றி இப்பொழுது இருக்கேறதே...
ஹாஹா வட ..இல்ல..பொங்கல் போச்சே..
பதிலளிநீக்குத.ம.15
என்ன செய்ய ? இனி தீபாவளி வரட்டும் பார்ப்போம் வருகைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா.
பதிலளிநீக்குநன்றி தங்களுக்கும் அப்படியே ஆகட்டும் நண்பரே....
நீக்குபொங்கலுக்கு பொங்கியதால் ...விருந்தினருக்கு பொங்கல் இல்லை போலியிருக்கிறது.
பதிலளிநீக்குவந்துடும் நண்பா நாளைக்கு...
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஎன் பதிவுக்கு உடன் வருகை தந்து கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்….
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
மீள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துகள்
நீக்குதை பிறந்தாச்சு
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரரே.
நீக்குதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
பதிலளிநீக்குகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
கவிதைப்பொங்கல் இனித்ததே
நீக்குதங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் சகோ.
வணக்கம் கில்லர் ஜி.
பதிலளிநீக்குதுளசிதரன் ஐயா.... நீங்கள் என் வலைப்பக்கம் வந்தும் திறக்கவில்லை...என்று எழுதி இருந்தார். ஆனால்.....
நான் தான் வலைக்குக் கதவே போடவில்லையே....)
உங்களின் பதிவு இனித்தது. எல்லா ஆண்களும் இப்படித் தான் மனைவியை ஏய்ப்பார்களா....? நான் என் வீட்டில் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன்.
உங்களின் பல பதில்கள் மனத்துள் வலித்தது.
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ மேலே திரு. ரமணி ஐயா அவர்கள் சொன்னது போல் அன்பு கூடும்பொழுதுதான் இப்படியெல்லாம் நடக்கிறது
நீக்குதங்களது தளம் கடந்த நான்கு தினங்களாக திறக்கிறது ஆனால் மூவிங் இல்லை ஸ்ட்ரக்காகி நின்று எனது கணினியும் ரீ-ஸ்டார்ட் கேட்கிறது காரணம் தெரிவில்லை. அதே நேரம் செல்போணில் பார்க்க முடிகிறது 80தை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
சரி எனது பதில்கள் மனதில் வலித்ததா ? எது, கதையில் வரும் கணவனின் பதிலா ? இல்லை எனது பின்னூட்டங்களா ? சற்று விளக்கவும் நன்றியும் தங்களது குடும்பத்தினருக்கு பொங்கல் நல்வாழ்த்துகளும்.
//நான் தான் வலைக்குக் கதவே போடலையே...//
நீக்குபதில் திறக்காத கதவை கொஞ்சம் தாக்குவது போல.. என் சிற்றறிவுக்கு 8கிறதே....
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கல் சகோ.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ
நீக்குதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தங்களுக்கும் அப்படி. ஆகட்டும் நண்பரே..
நீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இப்போது தம 16 இணைத்து விட்டேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துகள் மீள்வருகை தந்து எம்மை என்றும் 16 ஆக்கியமைக்கு நன்றி.
நீக்குவணக்கம்!
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரம் வலைப் பூவில்
தங்களது பதிவு சிறந்த பதிவாக தேர்வானமைக்கு
குழலின்னிசையின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தகவல் தந்த திரு யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி.
நீக்குThank You for This, Please Continue Posting
பதிலளிநீக்குஅதிரசம் செய்வது எப்படி