தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா ? பேருந்து
நிலையத்திலிருந்து பேருந்து வெளியே வருகிறது, ஒரு மாநகராட்சியே இப்படியிருந்தால் ? நகராட்சி, ஊராட்சி, பேருராட்சி,
ஒன்றியங்களின் நிலை ? கிராமங்களில் இந்த நிலை
கிடையாது காரணம் அவர்களே சுத்தப்படுத்தி மிகுதியை கொளுத்தீ விடுவார்கள், இப்படியே
போனால் சுகாதாரத்துக்கு ஸூவாஹா சொல்லும் நிலைமை வந்து விடும்,
புதுப்புது வியாதிகள் முளைத்து
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதற்கும், விவசாய நிலங்களை அழித்து மருத்துவமனைகள்
கட்டிக்கொண்டு போவதற்கும், தெருவுக்கு பத்து மருந்துக்கடைகள்
திறப்பதற்கும், போலி மருந்து நிறுவனங்கள் பெருகி வருவதற்கும், லட்சக்கணக்கில்
செலவு செய்து குழந்தைகளை மருத்துவதுறைக்கு படிக்கச் சொல்லி வற்புறுத்துவதற்கும காரணம் இங்கிருந்துதான் புறப்படுகிறது....
மூலகாரணம் பணம்
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பணம் கை மாறவேண்டும் அதற்காகத்தான் மனிதன் மனிதனை
முந்திப்போக நினைக்கின்றான் இதன் விளைவு மனிதன் இறைவனிடமும் முந்திப் போய் விடுகிறான்,
போகும்போது பணம் அவனுடன் வருவதில்லை இதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமில்லை
ஒட்டு மொத்த சமூகமும் இப்படித்தான்....
கண்ணை விற்று சித்திரம்
வாங்குவதற்கும், சுகாதாரத்தை தொலைத்து பணம் சேர்ப்பதற்கும் வித்தியாசம் என்ன ? பணம் சேர்ப்பது
சுகாதாரமாய் வாழ்வதற்கு எனக்கூட வாதாடலாம், இதுகூட கையில இருக்கிற வெண்ணையை
தொலைச்சுப் புட்டு நெய்க்கு அலைந்த கதை போல ஆகிவிடும்.
CHIVAS REGAL சிவசம்போ-
அப்படீனா... பஸ்
ஸ்டாண்டுக்கு முன்னால குப்பை கிடந்தால்... தீ வச்சுட்டு போகச் சொல்றீங்களா மாஸ்டர் ?
காணொளி
பால் பாக்கெட்டையே பங்ச்சர் செய்து கலப்படம் செய்து வருபவர்கள்
பதிலளிநீக்குமத்தியில் நெய் எங்கே? வெண்ணெய் எங்கே? நண்பா!
சுகாதாரம் சுகவீனம் அடைந்து
சுருக்கு கயிற்றில் தொங்கும்போது
கருணைமனு போட்டு காப்பாற்ற முயற்சி செய்யும்
பெரிய (மீசைக்கார்) மனசு நண்பரே உமக்கு!
நன்றியுடன்,
புதுவை வேலு
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே....
நீக்குஎங்கூரைப்பத்தி குறை சொல்ற அளவிற்கு வளர்ந்துட்டீங்களா? எங்கூருக்கு வாங்க, உங்களைக் கவனிக்கற முறையில கவனிக்கிறோம்!!1
பதிலளிநீக்குவணக்கம் ஐயா நீங்க மாநகராட்சி அதிகாரினு தெரியாமல் பதிவைப் போட்டுட்டேன் ஐயா
நீக்குஉங்கள் ஊர் பழனி இல்லையா ?
பழனி என்பது என் அப்பா பழனியப்பன் என்பதின் சுருக்கம்.
நீக்குவிளக்கவுரைக்கு நன்றி ஐயா எனது செல்வங்கள் இரண்டும் பேரும் கோயமுத்தூரில் தான் இருக்கிறார்கள் அடுத்த முறை வரும்பொழுது தங்களை சந்திக்கிறேன் ஐயா.
நீக்குஅண்ணே ! தமிழகத்தின் தலைநகரின் பேருந்துநிலையத்தின் பின்புறம் இதெல்லாம் தூசி என்ற நிலையில் இருக்கும் . சேலத்தில் எல்லாம் சொல்லவே தேவையில்லை .நமது நாட்டிற்கென்ற ஒரு சாபம் இந்த சுகாதாரக்கேடு . இதையெல்லாம் ஒரு குடிமகனாக (அது இல்ல) ஒவ்வொருவரும் உணர்ந்து இணைந்து பாடுபட்டால் மட்டுமே ஒழிக்கமுடியும் .
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கங்கள் ,
மெக்னேஷ் ,
தம+
வருக நண்பரே சாபம் என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது பிறநாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பார்த்தாவது இனியெனும் நாம் மாற்று முடிவுக்கு வரவேண்டாமா ?
நீக்குபிறநாட்டுக்கு எதுக்குப்போக வேண்டும் ! 1500 ஆண்டுகளுக்குமுன்னே சுற்றுபுரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பெருவாயின்முள்ளியார் ஆசாரக்கோவையில் பாடியுள்ளார் .
நீக்குசுடரிடைப்போகார் சுவர்மேல் உமியார் என்றுபாடியுள்ளார் . இதுதான் பேருந்துநிலையத்தை கேவலப்படுத்தும் முதல் செயல் என்பேன் . நாம் நம்மிடம் இருப்பவைக்கொண்டே சிறப்பானதொரு எடுத்துக்காட்டாய் இவ்வுலகினருக்கு மாறலாம் . உலகின் மொத்தநாகரீகமும் அழிந்தாலும் கம்பன் காவியமும் திருக்குறளையும் கொண்டு அதனை மீண்டும் புதுப்பிக்கலாம் என்றார் கால்டுவெல் . நாகரீகத்தையும் கலாசாரத்தையும் உலகிற்கு எடுத்தியம்பிய நம்மவர்களின் இன்றைய நிலை என்பது , களப்பிரர்கள் காலம் போன்றதே !ஒரு பேருந்துநிலையத்தைக்கூட சுத்தமாக வைத்திருக்க இயலாத நிலை . எங்கு பார்த்தாலும் பாக்கு்ககறையும் , மூத்திரநாத்தமும் , குப்பையும் கூளமுமென கிடப்பதன் காரணம் நம்மிடையே ஊறிய சோம்பேறித்தனம் மற்றும் சரியான சுகாதர வசதியின்மையே !
வாருங்கள் நண்பரே... மீள்வருகைக்கு நன்றி நான் சொல்ல வரும் விடயமே தவறு மக்களிடத்திலிருந்து தொடங்குகிறது 80தானே தவிற, நம் இந்திய நாட்டை குறைவாக மதிப்பீடு போடுவது அல்ல சுகாதார குறைவின் தொடக்கம் குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கும் அளவுக்கு பெற்றோர்களை மாற்றி விட்டது இதை எல்லோருமே உணருவதில்லை, என் குழந்தைகளின் படிப்பை அவர்களையே தேர்ந்தெடுக்கச்சொல்லி ஊக்குவித்து வருகிறேன் நான் சுற்றி வளைத்து வாக்களித்து ஏமாறும் கோமாளிகளைத்தான் குற்றம் சுமத்துகிறேன். நன்றி.
நீக்கு1980களில் கோவையில் பணியாற்றியுள்ளேன். அப்போது பெரும்பாலும் கோவை முழுவதும் சுற்றியுள்ளேன். தங்களது பகிர்வில் காணப்படும் உணர்வு வெளிப்பாடு நியாயமானதே.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வரவுக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஜி!.. - எல்லா ஊர்களிலும் இதே நிலை தான்!..
பதிலளிநீக்குஇலவச கழிவறையில் தண்ணீர் இருப்பதில்லை..
நவீன கழிப்பிடம் என எழுதி வைத்திருக்கின்றானே என்று -
ஐந்து ரூபாய் கொடுத்து கழிவறைக்குள் சென்றால் -
இரண்டே கால் அடி அகலத்தில் நரகம்!..
கழன்று போன கதவு!.. ஓட்டை வாளி!.. உடைந்த குவளை!..
ஐயோ.. மாடாகப் பிறந்திருந்தால் - பிறந்திருக்கலாமே என்று ஏக்கம் தோன்றும்!..
வருக நண்பரே நம்மூர் பொது கழிப்பிடத்தைப்பற்றி அழகாக வர்ணித்தீர்கள்.
நீக்கு2 ¼ அடி நரகம் ஸூப்பர் நகரம்.
தமிழகம் மட்டுமல்ல நண்பரே.... இந்தியாவின் பல ஊர்களிலும் இதே நிலை தான். அரசாங்கமும் வேலை செய்ய வேண்டும். மக்களும் திருந்த வேண்டும்.... என்று இந்த நன்னாள் வருமோ?
பதிலளிநீக்குவருக நண்பரே அரசாங்கமே மக்கள்தானே நண்பரே... முதலில் நாம் திருந்த வேண்டும்.
நீக்குமக்கள் ஏமாளிகள், ஆட்சிக்கு வருபவர்கள் அந்த ஏமாளித் தனத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்கள். எங்கே உருப்படும் தமிழகம்?!!
பதிலளிநீக்குஇதுல வேடிக்கை என்னவென்றால் இதைக்காண வேண்டியவர்கள் யாருமே இந்தப்பதிவுபக்கமே வரமாட்டார்கள் 80தான் நண்பா....
நீக்குWhere is Tamilmanam Vote buttons?
பதிலளிநீக்குதெரியலையே நண்பா... எல்லா ஸ்டேஷனும் இப்படித்தான் இருக்கு.
நீக்குகுப்பை கிடந்தால் தீ வச்சுட்டு போங்கன்னு..... அப்படியா..?மாஸ்டர் சொன்னாரு....!!!
பதிலளிநீக்குஇதைப்படிச்சுப்புட்டு நீங்கபாட்டுக்கு தீ வச்சுடாதீங்க... நண்பா,
நீக்குஆமா, எப்ப நீங்க அபுதாபியிலிருந்து கோயம்பத்தூர்க்கு போனீங்க?
பதிலளிநீக்குஇதே இந்த மக்களை வெளிநாடுகளுக்கு பார்சல் பண்ணி அனுப்பினீர்கள் என்றால், அங்கு அந்த ஊரை அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்கள்.
எனது உயிர்கள் இரண்டுமே கோயமுத்தூரில்தானே நண்பா இருக்கிறது.
நீக்கு(சகோதரர் வீட்டில் தங்கி படிக்கின்றார்கள் கடந்த 10 வருடமாக)
ஆம் நண்பரே கண்டிப்பாக நன்றாக வைப்பார்கள் காரணம் அந்த நாட்டின் சட்டம்தானே...
நான் மறந்து விட்டேன் நண்பரே.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குசிங்காநல்லூர் மட்டுமல்ல... சிங்காரச் சென்னைகூட அப்படித்தான்!
தங்களின் ஆசை நியாயமானது... உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற நாடு... அதற்கேற்றார் போல சுகாதாரத்தில் போதிய வளர்ச்சியடைவில்லை... மருத்துவர்கள் எண்ணிக்கையும் மக்கள்தொகைக்கேற்ப இல்லாமல் மிகமிக குறைவாக இருக்கிறார்கள்... இருப்பவர்களில் பலர் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் !
சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் சுத்தம் சுகாதாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்... ! நம்ம நாடு வளரும் நாடுதானே! காத்திருப்போம்.
நன்றி.
மணவையாரின் வருகைக்கு நன்றி காத்திருப்போம் இன்னும் எத்தனை காலம் ? தவறு தொடங்குவதே நம்மிடமிருந்துதான் இதைத்தான் நான் அடிக்கடி வலியுருத்துகிறேன்.
நீக்குஉண்மை தான் அரசும்
பதிலளிநீக்குமக்களும் தான் திருந்த வேண்டும்.
சமூக சேவைப் பதிவு.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கு நன்றி சகோ, அரசை தீர்மானித்ததே மக்கள்தான் ஆகவே மக்கள்தான் முதலில் முன்வரவேண்டும்.
நீக்குஹும்,இப்படியா நாம் வல்லரசு ஆகப் போகிறோம் ?
பதிலளிநீக்குத ம 4 (தமிழ் மணம் திரட்டி இப்போது சரியாகி விட்டது )
ஆம் பகவான்ஜி தாங்கள் சொல்வதுபோல இதில்தான் நாம் வல்லரசு ஆவோமோ....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சமுதாய விழிப்புணர்வுப்பதிவு.. இப்படியான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வருமாக இருந்தால் சுத்தமான இந்தியாவை உருவாக்கலாம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் ஆம் எல்லோருடைய மனதிலும் எழவேண்டும் 80 உண்மையே...
நீக்குஎங்க ஊருக்கு வாங்க ஜி... 100 பதிவுகள் எழுதலாம்............!
பதிலளிநீக்குஆமாம் ஜி எல்லா ஊர்களுமே இப்படித்தானே இருக்கிறது காரணம் எல்லா மக்களும் ஒரே எண்ணங்கள் என்பதாலோ...
நீக்குநீங்கள் சிங்காநல்லூர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். சிங்காரச் சென்னை இதைவிட மோசமாக இருக்கிறது. நகரை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் ஒழிய நகரங்கள் நரகங்கள் ஆகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகை தந்து நீண்ட கருத்துரை இட்ட நண்பருக்கு நன்றி, மக்களும், அரசும் இணையும் தருணம் தேர்தல் மட்டுமே நண்பரே... அந்த பொன்னான தருணத்தைத்தக்கூட //தும்பை விட்டு வாலைப்பிடித்த கதை// போல மக்களான நாம் வாழ்கிறோமே... இதுவே எமது ஆதங்கம்.
நீக்குநண்பரே! சுத்தம் சோறு போடும்னு யாரய்யா சொன்னது......குப்பைதான் எங்கள் ஊரில் நாய்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் சோறு போடுகின்றது. குப்பை பொறுக்கி விற்று வாழும் குழந்தைகளையும், பெண்களையும்,, ஆண்களையும் மட்டும் சொல்லவில்லை......அந்தக் குப்பையிலேயே உருண்டு, அதில் விழும் மீந்து போன உணவிற்கும் எச்சல் இஅலைகளுக்கும் நாய்களுடன் போட்டி போட்டு வயிற்றை நிரப்பும் பாவப்பட்ட மனிதர்களுக்கு இந்தக் குப்பைதான் சோறு.....இதுதான் இந்தியா.....தமிழ் நாடு...ஜி! மனம் எத்தனை கலங்கும் தெரியுமா? - இருவரும்..
பதிலளிநீக்குஇதற்காகவே சென்னையில் எந்தக் கல்யாணத்திற்கு சென்றாலும் தயவு செய்து உணவை இலையில் மீத்தாதீர்கள், வேண்டும் என்பதை மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள், வறுமையில் வாடும் சகோதர சகோதரிகள், குழந்தைகள் நம் எச்சலைத் தின்ன வேண்டாம், அவர்களுக்கு எச்சலில்லா உணவைத் தரலாமே என்று சொல்லி வருவது மட்டுமல்ல, எழுதிய வாசகங்கள் அடங்கிய அட்டையும் ஆங்கான்ங்கே தொங்க விட அங்கு சமையல் செய்பவரின் உதவியுடன் செய்கிறோம்....வலது கை செய்வது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பதால் பெயர் இட விரும்பவில்லை...
மற்ற படி இதுமட்டுமல்ல குப்பை என்பது.....ஆமாம் நம்ம தற்போதைய அரசு நாட்டை சுத்தம் செய்யுதாமே! அப்படியா?
மிக நல்ல பதிவு ஜி!
தில்லை அகத்தாரின் பிரமாண்டமான கருத்துரை படித்து கலங்கியது எனது விழிகள் மட்டுமல்ல, நெஞ்சமும்கூட
நீக்குவித்தியாசமான கோணத்தில் இந்தக்குப்பைகளை ஆராய்ந்த தங்களின் மன ஓட்டங்களுக்கு எனது சல்யூட்
நானும் பலமுறை இந்த நிகழ்வுகளை கண்டதுண்டு நண்பரே.....
இதை வேறு கண்ணோட்டத்தில் எழுத எமக்கு ‘’கரு’’ தந்தைமைக்கு நன்றி.
மக்களின் மனப்போக்கு மாற வேண்டும்
பதிலளிநீக்குதங்களின் கருத்து 100% உண்மை ஐயாவின் வருகைக்கு நன்றி.
நீக்கு” ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதனை உங்கள் பதிவிலுள்ள படம் எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான். யாரும் கவலைப் பட்டதாய் தெரியவில்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும் முதல் குற்றசாட்டே இந்த சுகாதாரக்கேடு தான்.
பதிலளிநீக்குத.ம.9
வருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், நவரத்திரன வாக்கிற்க்கும் நன்றி
நீக்குவெளிநாட்டு வாழ் தமிழர்கள் சொல்வது குற்றச்சாட்டு அல்ல நண்பரே... நாமலும் இப்படி வாழ முடியவில்லையே என்ற ஆதங்கமே....
கில்லர்ஜி அவர்களே!
பதிலளிநீக்குகுப்பைகளைத் தூக்கிக் கோபுரத்தில் வைத்துவிட்டால் நாடே குப்பையாகத்தானே இருக்கும்?
பிறகு, செய்யும் தொழிலின் அடிப்படையில் ஒரு கருத்து,
பதிவில்,
இந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று குறிப்பிட்டு கோவை பற்றிக் கூறியுள்ளீர்களே..............?
தென்னிந்திந்தியாவின் மான்ஸெஸ்டர் தானே அது?
இந்தியாவின் மான்ஸெஸ்டர் மும்பாய் அல்லவா?
( வந்துட்டான்யா தப்பக் கண்டுபிடிக்கிறவன் என்கிறீர்களா........? :))
த ம கூடுதல் 1
ஆஹா... பெரிய தவறு நிகழ்ந்து விட்டதே கவிஞரே.... மன்னிக்கவும் திரு(ந்)த்தி விடுகிறேன்.... வருகைக்கு நன்றி.
நீக்குஎங்க பிரதமரே சுத்தம் ஆரம்பிச்சாலும்..குப்பைக்குள் வாழும் இந்தியா...சுகாதரமற்று இருக்கும் வரைதான் ஆங்கில மருத்துவம் செழிக்கும் சகோ...
பதிலளிநீக்குபிரதமர் செய்யும் செயல்களெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை சுத்தமான இடத்தில் சென்ட் அடித்த மரச்சருகுகளை கொட்டி கூட்டுவது போல் புகைப்படம் எடுப்பதால் மட்டும் நாடு சுத்தமாகி விடாது சகோ.
நீக்குவெங்கட் சொல்வது போல தமிழ் நாட்டில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவும் இப்படித்தான் குப்பைக்கழிவுகளின் நடுவே மிளிர்ந்து கொன்டிருக்கிறது!! நம் நாட்டு அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஒரு முறையாவது நம் நாட்டையும் சுத்தமாக் வைத்துக்கொள்ள வேன்டுமென்று நினைக்க மாட்டார்களா என்று ஆதங்கப்படுவேன். சொத்துக்களை சுரண்டுவதிலேயே குறியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி 'தேவையில்லாத' பிரச்சினைகளை சிந்தித்துப்பார்க்கக்கூட நேரமிருப்பதில்லை. அதனால் நாம் தான் நம் சுறுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நான் சென்ற வாரம் கலிய பெருமாள் என்ற ஒரு பதிவரைக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன். தனிமனிதனாக ஒரு ஆசிரியராய் தன் பள்ளிப் பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக்கொடுத்து, குப்பைகளை நீக்கி பள்ளியின் சுற்றுப்புறத்தை சுத்தமாக்குவதில் வெற்றியடைந்திருந்தார். அது போல இன்றைய இளைஞர்கள் முனைந்தால் சுத்தமான பல நகரங்களை உருவாக்கி விடலாம். சரியான தூண்டுகோல் மட்டும் தான் இன்றைய அவசரத் தேவை!
பதிலளிநீக்குநாம் அரசியல்வாதிகளை காலம் முழுவதும் குறை சொல்வதைவிட நமது குறைகளை சரி செய்தளொழிய நாடு சுத்தமாகும் ஒருமுறை திருடினான் என்று தெரிந்தும் மீண்டும் அந்தத்திருடனுக்கே ஓட்டுப்போட்டால் ? அவன் என்ன செய்வான் ? மக்களின் மூளையை அவன் கணித்து விடுகிறான் இலவசங்களை வேண்டாமெனச் சொல்லும் மக்கள் உண்டா ? நான் சொல்வேன் இதை நம்புவீர்களோ இல்லையோ.... நான் வாங்கும் எண்ணம் உள்ளவனாக இருந்தால் ? இந்தப்பதிவை எழுதும் சிந்தனை எனக்கு வராது.
நீக்குமனசாட்சிக்கு பயந்து அவனவன் குப்பைகளை அவனவனே பெட்டிகளில் போட்டுப்போகக்கூடாதா ? அந்த சிந்தனை வராதவரை நாடு இப்படித்தான் போய்க்கொண்டே..... இருக்கும்.
தங்களின் வருத்தம்தான் எனக்கும் ஆசைப்பாடல் முற்றிலும்
பதிலளிநீக்குஉண்மையேகலப்படம் ஒருகொடுமை (கடுகுமுதல் கத்தரிக்காய்
வரை) ஒருபக்கம் நிலமாசுபாடு மற்றொரு பக்கம் காற்றுமாசுபாடு
காய் கனிகளில் உண்மைத்தண்மை இல்லை அட என்றோ ஒரு நாள்
உணவுவிடுதிக்குச்சாப்பிடச் சென்றால் பரிமாறுபவர்களிடம்
தன்சுத்தம் அது சுத்தமாக இல்லை (அவர்களது நகங்களைமட்டும்
பாருங்கள்)நன்றாகச்சொன்னீர்கள்\\பணம் சேர்ப்பது சுகாதாரமாக
வாழ்வதற்கு எனக்கூடவாதாடலாம்//அல்ல அல்ல உண்மையேஅதுதான்.
தங்களின் வருகைக்கும், விஸ்தாரமான கருக்துரைக்கும் நன்றி சகோ
நீக்குகையில இருக்கிற வெண்ணெய் இருந்தாலும் நெய்க்கு அலைகிற பாரம்பரிய குணத்தை மாற்ற முடியுங்களா....நண்பரே....
பதிலளிநீக்குமனநிலை மாறினால் தான் மாநகரம், என்ன எல்லா இடங்களும் மாறும்.
பதிலளிநீக்குசட்டம் போட்டாலும், சட்டைப்பை அதை கவிழ்க்கும்.
தன் பை நிரம்ப.....எது என்ன ஆனால்...? என்னங்கிற மனவோட்டம் ....மேல் இருந்து கீழ் வரை இருக்கிறப்போ...என்ன செய்வது. மக்களும் மாறி .....அரசாங்கமும் மாறி.....!
தம 12
தெளிவான விளக்கவுரைக்கும் வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குசுகாதாரத்தை நாம் எப்போதோ தொலைத்து விட்டோம் அண்ணா...
பதிலளிநீக்குவீடியோ அருமை.
வருகை தந்து கருத்துரையும், வீடியோவை பாராட்டியமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்கள் ௬ற்று உண்மைதான் ! எல்லா இடங்களும் சுகாதாரத்தை வலியுறுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன வெளியூர் பயணங்கள் மேற்க் கொள்ளும் போது வீடு வந்து எப்போதடா சேரப் போகிறோம் என்ற மனநிலையே உண்டாகிறது. சுகாதாரம் சீர் கேடுகள் வருத்தம் அளிக்கும் விஷயந்தான். தங்களின் வருத்தமும் நியாமானவைதான்.!.
சமுதாய சிந்தனையுடன் ௬டிய நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோவின் தொடர் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி
பதிலளிநீக்குநான் ஒருமுறை என் மனைவியுடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் காபி வாங்கி வந்தேன் , அவளும் அதை பருகிவிட்டு அமர்ந்திருந்த இடத்திலிருந்து அந்த கப்பை தூக்கி எறிந்தாள். அதில் எஞ்சிய காபி அந்த வழியாக சென்ற ஒருவர் மீது சிதறியது, உடனே அந்த நபர் " என்ன பொம்பளமா நீ" என்று கடிந்து கொண்டார் , "அய்யோ சாரிங்க" என்று என்னவள் மன்னிப்பு கேட்டாள். இவையனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த நான் சொனேன் அந்தக் கப்பை குப்பை தொட்டியில் போட்டிருக்கலாமே என்று . அந்த இடம் ஏற்கெனவே குப்பையாகத்தானே இருந்தது என்றாள் அலட்சியமாக , நான் சொன்னேன் அந்த இடத்தில் உன்னைப்போன்ற ஒருவர்தான் இந்த இழிவான செயலைச் செய்திருக்கிறார்கள் என்று சொன்னேன். அன்று முதல் என் குடும்பம் பொது இடங்களில் அசுத்தம் செய்வதில்லை, ஒரு முறை என் மருமகன்களுடன் இவ்வுலகின் முதல் அணைக்கட்டான கல்லணைக்குச் சென்றேன், அவர்கள் இருவரும் ஐஸ்கிரீம் வேண்டும் என்றார்கள் , நானும் வாங்கிக் கொடுத்தேன் திராட்சை ஐஸ், ஐஸ் கிரீம் முடிந்ததும் அந்தக் குச்சியை அழகிய கரிகாலன் பூங்காவின் நடுவே வீசி எறிந்தனர், நான் அவர்களை என்னருகேஅழைத்து ஆங்காங்கே பூங்காவின் நடுவில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளைக்காட்டி இது நாம் பயன்படுத்திய பொருள்களுக்காகத்தான், என்றும் நீ அசுத்தம் செய்தால் நீ தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளை இட்டேன். ஏழெட்டு வயதில் குழந்தைகளுக்கே உரிதான அதே சுறுசுறுப்புடன் அழகிய மான்குட்டிகளைப்போல் துள்ளியும் ஓடியும் அந்தக் குச்சிகளை எடுத்துக் குப்பை தொட்டியில் போட்டனர் இருவரும். இந்த நிகழ்ச்சி அனைத்தையும் அங்கே காதலன் காதலியுமாய் சுற்றமும் நட்புமாய் வந்திருந்தவர்களும் கண்டார்கள். அன்று முதல் என் உறவினர்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்வதில்லை. நான் விடுமுறையில் இருக்கும் போது ஒரே கடைசியில் வீட்டு சாமான்கள் வாங்குவது வழக்கம் எப்போதும் நான் துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். அவர் சாமான்களை பிளாஸ்டிக் பையில் போடுவதும் நான் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது இல்லை என்று அவரிடம் திரும்பக்கொடுப்பதுமாக இரண்டொரு நாள் நடந்தது . ஒருநாள் அந்த கடைக்கு வழக்கமாக சென்றிருந்த போது அவர் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தார். சாமான்களை கட்டுவதில் அவர் மகள் அவருக்குத்துணையாக கடையில் நின்றிருந்தாள். பெண்ணென்றால் அழகு என்றுதான் என்எண்ணம். அழகே உருவாய் அந்த இளம்பெண் கடையில் வேலை செய்து கொண்டிருந்தாள். என்னைப் பொறுத்த வரை அவள் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்க வேண்டும் . அவள்தந்தை அவளிடம் இவருடைய சாமான்களை பிளாஸ்டிக் பைகளில்கட்ட வேண்டாம் என்று சொல்லி விட்டு நீங்கள் ஏன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என்று என்னிடம் பேச்சை தொடர்ந்தார். நான் சொன்னேன் பிளாஸ்டிக் பைகளினால் வரும் தீமையை கற்றோர் நன்கு அறிவர். அதனால்தான் நான் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது இல்லை என்றும் நான் படித்தவன் என்று சொல்லித் தெரிவதை விட ஊரார் என் செயலில் அறிந்து கொள்ளட்டும் என்றேன். அந்தக் கடைக்காரர் தன் மகளிடமும் அவள் அவரிடமும் மௌண மொழியில் பேசிக்கொண்டனர். என் சமூகம் சிந்தித்து கொண்டிருக்கிறது என்று எண்ணி நகர்ந்தேன் எனது பொருள்களுடன். இப்படிக்கு ஞானபீடன். நன்றி மச்சான்.
பதிலளிநீக்குமுதல் முறையாக வருகை தந்து பிரமாண்டமாக கருத்துரை தந்த மாப்பிள்ளைக்கு நன்றி.
நீக்குநாம் வெளிநாடுகளுக்கு போனால் எச்சிலைக்கூட பொது இடங்களில் பார்க்க முடியாது என்போம். இங்கு போலிச் போலிச் என்று வெற்றிலை எச்சில், பஸ்ல் பக்கத்தில் (கீழ்) மட்டும் நின்றுவிட்டால் எச்சில் அபிஸேகம் தான். இதற்கு நாம் யாரைக் குறை சொல்ல சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் சரியாகும் என்பது உண்மைதானே. நமக்கு நாமே சரியாக இருப்போம் என்ற மனநிலை இருந்தால் நாங்கள் சரியாக வாக்களித்து இருக்கமாட்டோமா?. ஏன் பஸ்டாண்ட் போனோமா பஸ் ஏறினோமா என்று இல்லாமல் இது என்ன வேலை?. நாங்க இப்படித்தான்ப்பா விட்டுகேளேன் ப்ளீஸ்,,,,,,,,,,,,,,,,.
பதிலளிநீக்குவிடமுடியாது எப்படி ? விடமுடியும் இப்படியே ஒவ்வொருத்தரும் துப்பிக்கிட்டே இருக்கான் இன்றைக்கு தலையிலே துப்புறவன் நாளைக்கு மூஞ்சியிலேயே துப்புவான் அப்பவும் இப்படித்தான் சொல்வீங்களா ?
நீக்குஅன்பின் அருந்தகையீர்!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் கருத்தினை தருக!
http://blogintamil.blogspot.fr/
நட்புடன்,
புதுவை வேலு
தகவலுக்கு நன்றி நண்பா இதோ வருகிறேன்.
நீக்கு