"என் விதி, அப்போதே தெரிந்திருந்தாலே...
கர்ப்பத்தில் நானே, கரைந்திருப்பேனே..."
- கவிஞர் வைரமுத்து
இது சாத்தியமா.. சாத்தியமென்றால் எத்தனை
சிசுக்கள் தன்னைத்தானே கருவறையிலேயே கரைத்திருக்கும் ?
Including me & you is this Correct or
no ? Yes, I know this is 100 % Correct.
விதியின் வழியென வீதியில்
போகும் மனிதன், சதியின் குழியில் வீழ்ந்திணும் இதுவும் விதி என்கிறான், மதிகொண்டு
தடுத்திடு என்றால் தடுத்தினும் அதுவே விதி என்கிறான், தவறு மானிடா தவறு தவறினும்
இப்படி நினவாதே உதாரணம்....
இருபெண்கள் ஒருத்தி
நல்ல குணமுடையாள், அழகானவள், ஒழுக்கமானவள், அன்பானவள், அறிவானவளும்கூட ஆனால் ஏழை.
மற்றொருத்தி அகங்காரி, அன்பில்லாதவள், ஒழுக்கமற்றவள், அழகற்றவள் மட்டுமல்ல,
அறிவற்றவளும்கூட ஆனால் பணக்காரி. இந்த இருவரைப்பற்றியும் உனக்கு
நன்கு தெரியும், இருவரில் ஒருவரை வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுப்பது உன் கையில்
நீயோ இல்லாதவனாயினும் அறிவாளி, நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய் ? இரண்டாமாவளை
தேர்ந்தெடுத்தால் நாளைய வாழ்க்கை எப்படியென தெரிந்த அறிவாளியான நீ இறைவன்
அளிக்கும் குணத்தாளை மறந்து விட்டு, மனிதன் அளிக்கும் பணத்தை பெரிதென நினைத்து
பணக்காரியை மணக்கிறாய் பிறகு வாழ்க்கை கசக்கும்போது என் வாழ்க்கையை இறைவன் மாற்றி
எழுதி விட்டான் என்றால் யார் குற்றவாளி ? மாற்றியது இறைவனின்
விதியா ? உனது மதியா ? அப்படியானால் பணக்காரியை
யார் மணப்பது ? எனக்கேட்டு விடாதே இறைவன் அவளுக்கும் ஒருவாழ்வு வைத்திருப்பான்,
அந்த
வாழ்க்கைதான் இது, எனச்சொல்லி விடாதே பணம் பணத்தோடு சேரும்போது
இனம் இனத்தோடுதான் சேரவேண்டும், வாழ்க்கைத் துணையை கட்டுவது மட்டுமல்ல... வாழ்வின்
அணையை கட்டுவதும் உன்செயலே...
இறைவன் கொடுத்த கண்
பார்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த செவி
கேட்பதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த மூக்கு
நுகர்வதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த வாய்
பேசுவதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த கால்
நடப்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த கை
உழைப்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த மூளை
சிந்திப்பதற்கு, எனத்தெரிந்து கொள்.
இது போல்தான் மானிடா
எல்லா விசயங்களுமே... இறைவன் மதியைக் கொடுத்தது சிந்தித்து செயல்படவே.. நாம்
சிந்தித்தால் நாட்டில் ரசிகர் மன்றங்கள் இருக்காது, கட்சி என்ற அமைப்புகள்
இருக்காது, சாதிச் சங்கங்கள் இருக்காது, மதப்பிரிவினைகள் இருக்காது, அரசியல்வாதிகளும்,
சினிமாக்காரர்களும், கோடீஸ்வரர்களாக முடியாது, அவர்களும் உழைப்பாளிகள்தான்.
ஒரு விஞ்ஞானி போல்…
ஒரு நீதிபதி போல்…
ஒரு வழக்கறிஞர் போல்...
ஒரு மருத்துவர் போல்…
ஒரு ராணுவவீரர் போல்…
ஒரு காவல்துறை அதிகாரி
போல்…
ஒரு வங்கி அதிகாரி
போல்...
ஒரு குமாஸ்தா போல்…
ஒரு ஒட்டுனர் போல்…
ஒரு நடத்துனர் போல்…
ஒரு குதிரை வண்டிக்காரர்
போல்...
ஒரு கைவண்டி தொழிலாளி
போல்...
ஒரு புரோட்டா மாஸ்டர்
போல்...
அவர்களும் ஒரு,
உழைப்பாளிகள்தான்.
உழைப்பிற்க்கு பலனுண்டு
உலகிலே... உழைத்தவருக்கு களைப்பு வரலாம் ஆனால் உழைத்த செல்வம் நம்மை களைவதில்லை.
எங்கும் சமத்துவம் மலர.. இனியெனினும் முதலில்
சிந்திப்போம்
பிறகு அதன் வழியே உழைப்போம்.
நாடு பலமுடன் வளம் பெற
அதில், நாமும் நம் குலமும், நலம் பெற.
சாம்பசிவம்-
கருவுல, தொடங்கிய விசயம் உருமாறி பெருங்கொண்ட துருவங்களை
தா(ங்)க்கி நிக்கிதே....
காணொளி
நன்று.. நன்று..
பதிலளிநீக்குகை விடாத உழைப்பும் - நம்மைக் கை விடுவதில்லை..
கடும் உழைப்பால் கிடைத்த செல்வமும் நம்மைக் கை விட்டதில்லை!..
உண்மைதான் நண்பரே... வருகைக்கு நன்றி.
நீக்குபிறப்பு என்பது விதிதான், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.விதியின் வழியென வீதியில் போகும் மனிதன், சதியின் குழியில் வீழ்ந்தினும் இதுவும் விதி என்கிறான், மதிகொண்டு தடுத்திடு என்றால் தடுத்தினும் அதுவே விதி என்கிறான், தவறு மானிடா தவறு தவறினும் இப்படி நினவாதே //
பதிலளிநீக்குஎல்லாவற்றிற்கும் விதி என எஸ்கே ஆகக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்கின்ற வாக்கு உண்டு.
உழைப்பிற்கு பலன் உண்டு உலகினிலே...உண்மை
முதலில் சிந்திப்போம்...அதன் வழி செயலாற்ருவோம் ...நன்று
தம 1
தங்களின் வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குஅருமையான பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குவீடியோ கனக்கச் செய்தது...
என் குரல் சூப்பர்....
வருகைக்கும், எனது குறள் படித்து குரல் கொடுத்தமைக்கும், நன்றி.
நீக்குமெழுகுவர்த்தி படம், தலைப்புக்கேற்ற தேர்வு.
பதிலளிநீக்கு’எல்லோரும் சிந்தித்தால், ரசிகர் மன்றம் இல்லை; கட்சிகள் இல்லை; ஜாதிமதப் பாகுபாடுகள் இல்லை.’ உண்மைதான்
அப்படியொரு காலம் வருமா?
வரும் என்று நம்ப வைக்கிறது உங்களைப் போன்றோரின் எழுத்து.
அப்படியொரு காலம் வந்தால் ? சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான் நண்பரே...
நீக்குஎதார்த்தம் என்னும்
பதிலளிநீக்குஏர் பிடித்தாய்!
ஐம்புலன்களின் ஜாதகத்தை
தோலுரித்தாய்!
விதி என்னும் விளைநிலத்தில்
மதி கொண்டு உழுதிட்டாய்
சமத்துவ மலராய் மலர்ந்து
சத்தியத்தை கை பிடித்தாய்
அதனால்?
அபுதாபி நண்பா!
நாடும் நலம் பெறும்!
சிந்தையும் வளம் பெறும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
புதுவை வேந்தனின் புதுக்கவிதைக்கு நன்றி.
நீக்குநண்பா!
நீக்குநான் வேலு தான்(சாதரணமானவன்) வேந்தன் அல்ல!
வேந்தனுக்குரிய சிறப்பும் எனக்கில்லை .
நண்பர்களின் சேவகன் என்று சொன்னாலே தரும் இன்பம்.
நன்றி!
(எனது குடியரசு தினம் கவிதையைக் காண வாரீர்)
வேலு என்ற பெயர் கொண்டதால் வேந்தனாக இருப்பீர்கள் என்றே கருதினேன் நண்பா, சாதாரணமானவன் என சாந்தமாக வந்து சொல்லியதால் உண்மையிலேயே தாங்கள் புதுமையான வேந்தனே..
நீக்குகவிதை கண்டேன் நல்லதொரு நன் பா இயற்றியமைக்கு வாழ்த்துகள் நண்பா,
ஐயா சாமி ஆளை விடுங்க. எனக்கு இப்படியெல்லாம் யோசிச்சு முடிவு எடுக்கத்தெரியாது.
பதிலளிநீக்குமுடிவு எடுக்கத்தெரியாதா ? வானொலி நிலையத்தில் ஒலி கொடுக்க மட்டும் தெரியுமோ ?
நீக்குகில்லர்ஜி பெயரைப் பார்த்தே நிறைய முறை யோசித்து இருக்கேன்! எதற்காக இந்தப் பெயர் என்று? அதனால் வலைப்பக்கமே வருவதில்லை! இன்று வந்து பார்த்தால் அசத்தலாகவே ஒவ்வொரு பதிவும் உள்ளது! வாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன். ஏன் ? அப்படி நினைத்தீர்கள் காகத்தைபோல குயிலும் கருப்பாக இருக்கிறது என்பதற்காக... அதற்கு பாடத்தெரியாது என்று நினைப்பதா ?
நீக்குஉழைத்தவர்கள் அடுத்த வேளை கஞ்சிக்கு அல்லாடுகிறார்கள்...உழைக்காதவர்கள் எடையை குறைக்க அல்லாடுகிறார்கள். இதில் இறைவனின் பங்கு எதுவுமில்லையே......
பதிலளிநீக்குஇதற்கு காரணம்கூட இறைவனின் விதியல்ல, மனிதனின் மதியே.. நண்பா. நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கத் தெரியாத அறியாமை.
நீக்குநண்பரே நலம்தானே
பதிலளிநீக்குகடந்த பதினைந்து நாட்களாகவே கணினி தொடர் சிக்கல் கொடுத்துக் கொண்டே இருந்ததால், வலை தளங்களுக்கு வருகை தர இயலாத நிலை, இன்றுதான் கணினி சீரானது,
இனி தொடர்ந்து வருவேன் நண்பரே
தம +1
தங்களின் கணினி பழுது நீக்கி மீண்டு வந்து, எனது பதிவுக்கும் மீண்டும் வந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே...
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குசிந்து பைரவியில் வைரமுத்து சுகாசினிக்காக எழுதியது வரியென்று எண்ணுகிறேன். இருட்டைப் பழிக்காமல் ஒருமெழுகுவற்றி ஏற்றிவை என்று நாட்டிற்கு மதியொளி கொடுத்திருக்கிறீர்கள்!
‘அப்பனும் ஆத்தாளும் சேரமா போனா நீயும்தான் பொறக்கமுடியுமா? ‘
இளையராஜா பாடியிருப்பார். வாழ்க்கை துணையைக் கட்டுவதுமட்டுமல்ல... வாழ்வின் அணையைக் கட்டுவதும் உன்செயல் என்று விதியை மதியால் வென்று வெற்றிக்கொடி கட்டு என்று காட்டியது அருமை.
மணவையாரின் விரிவான விளக்கவுரை வழக்கம் போலவே வாக்கு இல்லையென்றாலும் அருமை நன்றி மணவையாரே...
நீக்குசிறப்பான சிந்தனையை தூண்டும் கருத்துக்கள்! அருமை! நன்றி!
பதிலளிநீக்குசிந்தனையை வீட்டில் வளரும் விட்டில் பூச்சிகளுக்கு தூண்டினால் ? சந்தோஷம்தான் நண்பரே...
நீக்குஎன்னைப் போன்ற நாத்திகர்கள் , இறைவன் ? கொடுத்த மூளை சிந்திப்பதற்கு ?என்று எப்படி தெரிந்து கொள்வது ?
பதிலளிநீக்குத ம 5
பகவானுக்கே எப்படி ? நான் விளக்கம் கொடுக்க முடியும் ? வருகைக்கும். வாக்கிற்க்கும், நன்றி.
நீக்குசுயமாய் சிந்திக்க சொல்லும் பதிவு அருமை. விதியை மதியால் வெல்லலாம் உண்மை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தமிழ்மண வாக்கு -7
விதியை மதியால் வெல்லலாம் என்ற எனது கொள்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஒரு ஓட்டுக்கான வாக்குச் சீட்டே உள்ளது. ஸோ ஒரு ஓட்டுதான் போட முடிந்தது...ஓகேயா னண்பரே!
பதிலளிநீக்குநேர்மையானவர்கள் ஒரு ஓட்டுதான் போடணும் நன்றி.
நீக்குசிந்தித்து செயல்படவே என்பது சரி தான்...
பதிலளிநீக்குதேர்ந்தெடுக்கும் பாதையும் முக்கியம்...
ஆம் நண்பரே, பாதையை தேர்ந்தெடுக்கவே இறைவன் கொடுத்தான் மூளையை...
நீக்குமதி எந்த அளவு இருந்தாலும், விதி என்பதை நாம் மாற்றமுடியாது. Predestined என்று கூறுவதை மாற்றும் சக்தி நமக்குக் கிடையாது என்பதே உண்மை. உங்களது பதிவுகளைப் படித்துவிட்டு, மிகவும் யோசித்து மறுமொழி எழுதுமளவு உள்ளது. அந்த அளவிற்கு சித்தாந்தங்கள் அருமையாகக் காணப்படுகின்றன.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன் நான் கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியார் ஜாதி அல்ல, உண்டு என்று சொல்லும் ஸ்ரீமகான் ‘’அப்பழுக்கற்ற’’ காஞ்சி சங்கராச்சாரியார் ஜாதியும் அல்ல, இல்லையென்று எப்ப ? சொன்னேன் ? இருந்தால் தேவலைனுதான் சொல்றேன் என்று ஒரே விடயத்தை குழப்பிச்சொல்லும் கமலஹாசன் ஜாதியும் அல்ல, நமக்கு மேலே ஒரு சக்தி நிச்சயமாக உண்டு என நினைத்து நியாய தர்மப்படி மனசாட்சிக்கு பயந்து நாளை என்னைப்படைத்தவனை சந்தித்தே தீரவேண்டும் என்று நம்பி வாழும் சாமானியன்.
நீக்குவாவ்.......... இன்னைக்கு நமக்கு தோதான ஒரு தலைப்பை எடுத்திருக்கீங்க, அதுக்கு ஒரு நன்றி.
பதிலளிநீக்குஇன்றைக்கு நான் இருக்கும் நிலை இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ நான் செய்த செயல்களின் பலன். இனி நடக்க இருப்பது தற்போது நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதை வைத்தே அமையும். எனவே எதிர்காலம் என்பது 100% தீர்மானிக்கப் பட்டதல்ல, கடைசி நேர மாறுதலுகுட்பட்டதே. அந்த வகையில், உன் எதிர்காலம் உன் கையில், விதியை மதியால் வெல்ல முடியும்!!
எனவே நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம். எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நீதி, நெறிமுறைகளில் இருந்து பிறழாமல் இருப்போம். நல்லதே நடக்கும்.
[அந்த பணக்காரி, ஏழை உதாராணத்தில் பணக்காரியை கல்யாணம் பண்றவன் பாவப் பட்டவன்னு சொல்ல வறீங்களா கில்லர்ஜீ?!! ஹா...........ஹா.........ஹா.........]
வருக நண்பரே... பல கருத்துக்களில் நாமிருவரும் ஒரே ஜாதி 80 நானறிந்த விடயமே,,, தாங்கள் சொன்ன கடைசி தருணத்தில் மதியால் விதியை மாற்றலாம் 80ல் எனக்கு சிறு அவநம்பிக்கையே உள்ளது காரணம் எனது வாழ்வில் நடந்த உண்மை எனது திருமணத்தை நிறுத்த எவ்வளவோ முயன்றேன் முடியவில்லை தாலி கட்டி முடிந்ததும் 1000 யோசனைகள் எனக்குள் மின்னல் போல் ஒளிர்ந்தன இந்த இடத்தில் விதிதான் வென்றது 80தை நான் உணர்ந்தேன்... அதைப்பற்றி ஒரு பதிவிடுகிறேன்... தங்களுக்காக.
நீக்குநண்பா பணக்காரியை மணந்தவன் பாவப்பட்டவன் என்ற கருத்தை நான் வலியுறுத்தவில்லை //அவள் அவனுக்குத்தான் சரியாகும்// 80த்தைதான் சொல்ல வருகிறேன் பலரின் வாழ்வில் பிரட்சினைகளுக்கு மூலகாரணமே பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுதானே...
மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் நாடு என்பதே இருக்காது அண்ணே !!
பதிலளிநீக்கு'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
'வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்'
இந்த பாடல்கள எழுதுன ரெண்டு பேரு மட்டும்தான் நீங்கள் கூறியதுபோல் சிந்தித்தவர்கள் .
தம+
ஆஹா அருமையான சிந்தனை நண்பரே இந்த சின்ன வயதில் பெரும் தத்துவத்தை சொன்ன தங்களைக்கண்டு வியக்கின்றேன் நண்பரே... ஆம் நாடு எதற்க்கு ? உலகமே...ஒரே வீடுதானே...
நீக்குஇறைவனே..மூளை என்ற பொருளால் உருவாக்கபட்டவன்தான்
பதிலளிநீக்குமூளை ஒரு பொருளா ? சதைப்பிண்டமா ?
நீக்குஅருமை, அருமையான பதிவு நண்பரே, வார்த்தைகள் விளையாடுகின்றன மதியை விதியால் வெல்லலாம்.... வென்றாலும் அதுதான் அது அப்படித்தான் நடக்கணும்னு என்று இருக்கு அது விதி என்பாரே... தோற்றாலும் விதி வென்றாலும் விதி, கடவுள் மூளையைக் கசக்கி உபயோகப்படுத்தத்தான் கொடுத்தான் ஆனால் நாம் அதை கிடப்பில் போட்டுத் துருப்பிடிக்க வைத்து என்ன பண்ண யோசிக்கிற திறன் இல்லை அதான் என் விதி என்போம் எல்லாம் சரி... திருமணம் செலக்ட் செய்வது ஓகே.... ஜாதகம் பார்த்தால் தவறு.... பழகிப்பார்த்துக் கல்யாணம் செய்வதும் அவ்வளவு சரியில்ல... எத்தனை பேருடன் பழகிப்பார்ப்பது சரி அதை விடுங்கள், கல்யாணத்தில் அமையும் கணவன் முதலில் நல்லவராகத் தோன்றுவார் மணமான பின் வார்த்தைகளால் கொல்பவராக இருந்தால் அதை என்ன சொல்வீர்கள் ?
பதிலளிநீக்குவிஸ்தாரமான கருத்துரை கண்டு மலைத்து பின்னூட்டமிட எழுதினேன், எழுதினேன் முடிவே வரவில்லை காரணம் அதையே நான்கு பதிவுகளாக போடலாம் போல் ஆகிவிட்டது சோம்பேறிகளின் வாக்குகள் இப்படித்தான் இருக்கும் கடைசிவரை...
நீக்குஏதோ ஒருநாடு பெயர் மறந்து விட்டது ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாக ஒருவருடம் இணைந்து வாழ்வார்கள் மனம் ஒத்துப்போனால் திருமணம் இல்லையெனில் குட்பை அவன் வேறொருவளை தேடிப்போய்விடுவான், இவள் மற்றொருவனை தேடிப்போய் விடுவாள் இதில் யாருக்கும் கௌரவக்குறைச்சல் கிடையாது காரணம் அரசாங்கமே இதற்க்கு சட்டம் வகுத்து கொடுத்துள்ளது நம்மூரு நடிகர்-நடிகைகளுக்கு அந்த நாட்டு குடியுரிமை கொடுத்து அனுப்பி விடலாம்,
கல்யாணத்திற்க்கு முன் நல்லவன் பின் கெட்டவன் எப்படி ? அங்குதான் கணவன்-மனைவியின் லெட்சணம் புரிந்து விடுகிறதே....
வாழ்க கலாச்சாரம்.
எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குகுடியரசு தின வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா...
நீக்குஅன்பின் ஜி,
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே....
நீக்குவிதியை யாராவது வென்றார்களா மதியால். அப்பப்பா பொல்லாத விதி அதை பற்றி கொஞ்சம் விபரம் சொல்லணும் என்று கேட்டிருக்கிறேன் .போய் பாருங்கள் ஜி ...
பதிலளிநீக்குhttp://kaviyakavi.blogspot.com/2013/03/blog-post_3.html
வாழ்த்துக்கள் ...! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் ok வா ஹா ஹா ...
தங்களின் வருகைக்கு நன்றி இதோ வருகிறேன் சகோ.
நீக்குநண்பரே,
பதிலளிநீக்கு" விதியை மதியால் வெல்லலாம் " என்பது மிகப்பெரிய வாழ்வியல் மந்திரம். அதனை மிக அருமையான பதிவாக விளக்கியுள்ளீர்கள். அருமையான பதிவு.
ஆழ யோசித்தோமானால்...
தன்னால் சாதிக்க முடிந்ததையெல்லாம் மதி என்றும் முடியாததை விதி என்றும் தன் எண்ண மயக்கத்தில் வகுத்து வைத்திருக்கிறான் மனிதன்...
ஒரு சின்ன, எளிய உதாரணம்...
பரிட்சை எழுதும் மாணவன்... விழுந்து விழுந்து படித்து எழுதி முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால்...
" எம்பையன் படிச்சது அப்படி ! படிப்பு படிப்புன்னுல்ல கிடந்தான் ! "
என்போம் !
அதே மாணவனுக்கு மதிப்பெண் குறைந்தால் ?
" நல்லாதான் படிச்சான் ! எல்லாம் விதி ! வேறென்ன சொல்ல ?!! "
வெற்றியின் போது யாரும் என் விதி என்று சொல்வது கிடையாது என்பதை கவணியுங்கள் ! நான் மேற்கொண்டு எழுத நினைத்ததை துளசிதரன் அவர்கள் அருமையாக சொல்லிவிட்டார் !
நன்றி
சாமானியன்
சுருக்கமாக தாங்கள் கொடுத்த விளக்கம் அருமை நண்பரே.... வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
பதிவை படித்த போது ஒரு வித சிந்தனை உணர்வு தோன்றியது.. என்ன சொல்வது என்று தெரியாது... மற்றது வீடியோ.. மிக அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றித.ம 13
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும், குடியரசு தின வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குஜி வணக்கம்.
பதிலளிநீக்குஇணையப்பக்கம் வந்து ரொம்ப நாளாயிற்று.
இப்போதுதான் வர முடிந்தது.
ஓட்டுமட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்ன்னு பார்த்தால்,
திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்து தொலைத்தது,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றித்
தாழா துஞற்று பவர்!
விதியையும் ஓட ஓட விரட்டலாமா ம்
தொடர்ந்து முயற்சி மட்டும் இருந்தா!
( என்ன அதுக்கும் விதி இருந்தாதான் முடியுமா? )
சரி சரி இதெல்லாம் காதுல விழனும் 80 என்விதி.
நன்றி
தம கூடுதல் 1
கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் முதற்க்கண் நன்றி
நீக்குகவிஞரே அதே திருவள்ளுவர்தானே /முயற்சி திருவினையாக்கும் //அப்படினு சொல்லியிருக்காரு....
நல்ல பதிவு. மெழுகு வர்த்தி படம் - அசத்தல்....
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி வெங்கட் சார்
நீக்குபடித்தது. பிறப்பு என்பது வினைப்பயன் என்று. அதனால் நர்ம் இந்த பிறவியின் பலனை முழுவதும் அனுபவிக்கனும் என்று. இங்கே எங்கே மதி வர.எல்லாம் அவன் செயல். விதி மதி எல்லாம் அவனால். எப்படி ?
பதிலளிநீக்குசகோ மேலே நண்பர் சாமானியன் அவர்கள் அழகாக விளக்கம் கொடுத்துள்ளார், எல்லாவற்றுக்கும் விதியே காரணம் 80தைத்தான் நானும் மறுக்கிறேன்.
நீக்குபதிவு அருமை. விதி மதி எல்லாம் அவன் செயல்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குமூளை பொருள்தான் நண்பா... ..அது சதை பிணடமல்ல....அது சதைப்பிண்டமாக இருந்தால் ஆறறிவு மனிதனாக இருந்திருக்க முடியாது..நண்பா...
பதிலளிநீக்குமூளை பொருள் என்றால் அது ஏன் ? நண்பா உயிப்புடன் அசைகிறது.
நீக்குபல நாட்கள் விடுப்பிற்குப் பின் மீண்டும் ஆஜர். இந்தப் பதிவு டேஷ் போர்டில் வரவில்லை; என்றோ எழுதிய படிவு நிருபர் நிருபமாவின் கேள்விகளுக்கு உங்கள் பதில் கொண்ட பதிவே வந்திருக்கிறது. நூலைப் பிடித்து வந்தால் இப்பதிவு. மதி விதி பற்றியது. ஒரு சிறு கதை சொல்கிறேன் கேளுங்கள். இரு நண்பர்கள். ஒருவன் விதியை நம்புபவன். மற்றவன் மதியை நம்புபவன். அவர்கள் சாலையில் போகும்போது ஒரு விபத்து நேர்ந்து அதில் ஒருவன் உயிருக்குப் போராடுகிறான். மதியை நம்புபவன் அவனை மருத்துவ மனைக்குக் கூட்டிச்சென்று பிழைக்க வைக்கிறான். விதியை நம்புபவன் வாளாவிருந்தான். நான் மட்டும் தக்கசமயத்தில் மருத்துவ உதவி செய்ய வில்லை என்றால் அவன் மரித்துப் போயிருப்பான் என்று சொன்ன அறிவாளியிடம் விபத்துக்குள்ளாவது அவன் விதி. அவனை நீ மருத்துவ மனைக்குக் கூட்டிப் போக வேண்டி இருந்ததும் முன்பே நிர்ணயிக்கப் பட்ட விதி என்று விதியை நம்புபவன் சொன்னானாம். ...!
பதிலளிநீக்குஐயா அவர்களின் மீள் வருகைக்கு நன்றி டேஷ்போர்டு நேற்று முதல் குழப்பம் உண்டாக்குகிறது எல்லோருடைய பழைய பதிவுகளை காண்பிக்கிறது.
நீக்குஅருமையான சிறுகதை சொன்னீர்கள் ஐயா இதைத்தானானே காலம் முழுவதும் மனிதன் சொல்லிக்கொண்டே வருகிறான் விதியை மதியால் வெல்ல முடியாது வென்றால் அதுவே விதியாகும்,
என்னைப்பொருத்தவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றவன் அறிவாளி 80 மட்டுமல்ல நல்ல மனித நேயமுள்ள 6அறிவு உள்ள மனிதன் என்றே என் சிற்றறிவுக்கு 8கிறது ஐயா, மறுத்து விதண்டவாதம் செய்தவன் 5அறிவு உள்ள மிருகமே.....
வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி.
விதியை மதியால் வெல்லலாம் என்பதே எழுதப்படாத விதி!
பதிலளிநீக்குஆஹா ரத்தினச்சுருக்கமாக முடித்து விட்டீர்கள் ஐயா நன்றி.
நீக்குஆ....மெழுகுவர்த்தி குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது...
பதிலளிநீக்குகாலம் மாறிப்போச்சு நண்பா.....
நீக்குஉமது மதி திறனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி நண்பா....
நீக்குபெண்மையின் சிறப்பும் உழைப்பின் சிறப்பும் சொன்ன பதிவு. அருமை சகோ
பதிலளிநீக்குசகோவின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி
நீக்கு