தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 10, 2015

தர்மம்

 
என்னை, வேதனைப் படுத்தியவர்கள், உடன் மறந்து விடுகிறார்கள், என் மனம் மட்டும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் இரவிலும் தூக்கம் வராமல், மறு நாளும்கூட அதனையே சுற்றிக் கொண்டு இருக்கிறதே..... அப்படியானால் இதற்க்கு காரணம் நான்தானே ! என்னால் மட்டும் மற்றவர்களைப் போல் இருக்க முடிவதில்லையே ஏன் ? எனது சரீரத்தின் எடையைவிட எனது மனதின் கனம் கூடி வருவது என்னாலயே உணர முடிகிறது.

மலைபோலே வரும் சோதனையாவும்
பனிபோல் நீங்கி விடும் நம்மை வாழ விடாதவர்
வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்...
செய்த தர்மம் தலைகாக்கும்,
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

கண்ணதாசன் (1963) எழுதிய இந்த வரிகளை, K.V. மகாதேவன் இசையில் T.M. சௌந்தரராஜன் பாடினாரே அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன் எனமனதை இலவசமாக இலவம் பஞ்சு போல் ஆக்கிவிடும், அப்படியானால் தர்மம் தலைகாக்குமா ? உண்மையாகத்தான் இருக்குமோ ? ஆகவே இனியெனும் தர்மம் செய்வோமென, தீர்மானிக்கும்போது... RADIOவில்...

எல்லாருமே திருடங்கெதான், சொல்லப்போனா....
குருடங்கெதான் நம்ம நாட்டுலே, நடுரோட்டுலே,
வீட்டுலே, காட்டுலே, எல்லோருமே திருடங்கெதான்,
சொல்லப்போனா.... குருடங்கெதான்.

வாலி (1985) எழுதிய இந்த வரிகளை இளையராஜா இசையமைத்து பாடினார்... என்ன இது ? இவரு வேற இப்படி குழப்புகிறார் என்ன செய்யலாம் ? என ஆலோசித்து பாட்டு வேண்டாமென STATIONனை, மாற்றினேன்...

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே...

K.D. சந்தானம் (1961) எழுதிய இந்த வரிகளை T.R. பாப்பா இசையமைத்து சந்திரபாபு பாடினார்... எனக்கு மேலும் குழப்பமாக RADIOவை OFF செய்து விட்டு வெளியே கிளம்பினேன், மனம் மட்டும் வழக்கம்போல இதனைச் சுற்றியே வலம் வந்தது, புறங்கையை கட்டிக் கொண்டே சாலையில் நடந்து போனேன்...

க்ரீரீரீச்ச்ச்ச்.... திடீரென சப்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தால் ? ஒரு 75 வயது மதிக்கத்தக்க பெரியவர் எனது கையை பிடித்து இழுத்ததில் இருவருமே சாலையின் நடைபாதையில் விழுந்து கிடந்தோம்...

ஏண்டா ? சாவு கிராக்கி வீட்ல சொல் லிட்டு வந்தியா ? ஒனக்கு வேற வண்டி கெடைக்கலே ? 

காதுக்குள் நுழையாத வார்த்தையால் திட்டிவிட்டு ஆஞ்சநேயரை (MARUDHI VAN) எடுத்துக்கொண்டு போய் விட்டான், நான் எழுந்து பெரியவரை தூக்கி விட்டேன்,

''ஏப்பா கவனமா வரக்கூடாதா ? நான் இழுக்கலைனா, என்ன ஆகியிருக்கும்''
ரொம்ப நன்றி ஐயா, 

அவரை வணங்கி விட்டு கிளம்பினேன், எனக்கு மீண்டும் ஞாபகம் வந்தது...
செய்த தர்மம் தலைகாக்கும்,
தக்கசமயத்தில் உயிர் காக்கும்.

உண்மையாகத்தான் இருக்கிறது, ஆகவே இனியெனும் தர்மம் செய்வோமென, தீர்மானித்து உடனே அந்த வழியில் தர்மம் கேட்டவருக்கு பாக்கெட்டிலிருந்து, ஐந்து பைசா எடுத்து தர்மம் போட்டு விட்டு, சந்தோஷமாக...

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்
சர்தான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

வாலி (1968) எழுதிய இந்த வரிகளை, V. குமார் இசையில் சீர்காழி S. கோவிந்தராஜனைப் போல் பாடிக்கொண்டு தெளிவாக நடையை கட்டினேன்...

CHIVAS REGAL சிவசம்போ-
சந்திரபாபு 1961ல, பாடுனாரு, T.M.S, 1963ல, பாடுனாரு, சீர்காழி 1968ல, பாடுனாரு, இளையராஜா 1985ல, பாடுனாரு, இவரு, ஐந்து பைசா தர்மம் செய்யிரவருன்னா நிச்சயமா, ROYAL FAMILY யா இருக்கனும், அப்படீனா... 1946க்கு, முன்னாலயோ.... இவரு, வேற 300 வருஷத்துக்கு முன்னாலே பிறந்தேன் அப்படி, இப்படினு எழுதியிருக்காரு, கணக்கு இடிக்குதே.... போற போக்க பார்த்தா, சந்திரபாபு பாட்டை நாமதான் படிக்கனுமோ…?

 
காணொளி

இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணமாய் இருந்த தி கிரேட் தேவகோட்டை சகோதரி திருமதி. ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்கு நன்றி.

59 கருத்துகள்:

 1. தர்மம் தலைகாக்கும் உண்மை தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு
 2. தர்மத்தை இந்த உலகின் அளவுகோல்களால் அளக்கக் கூடாது. ஐந்து பைசா என்றால் சும்மாவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அந்த ஐந்து பைசாவிற்காக ஒரு காலத்தில் மக்கள் கொடுத்திருந்த உழைப்பு சாதாரணமானது இல்லைதான்.

   நீக்கு
 3. ரசித்தேன்.

  நீங்கள் வேடிக்கைக்கு எழுதி இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு பல சமயங்களில் என் சோதனைக் கட்டங்களில் இந்த "மலைபோல் வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்" வரிகள் என்னைச் சாமாதானப்படுத்தி உறுதிப் படுத்தியிருக்கின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கு மட்டுமல்ல பல மனிதர்களின் வாழ்வில் ஒன்றிணைந்த வரிகள்தான்.

   நீக்கு
 4. ஆறு மனமே ஆறு தொடங்கி சந்திரபாபுவின்பாடலை ராஜேந்தர் பாடும் காணொளியின் பதிவு வரை அனைத்தையும் படித்தேன். மனது பாரமாக இருக்கும்போது நூல்கள் படிப்பது, மனதில் பதிந்ததை எழுதுவது, கோயிலுக்குச் செல்வது, நண்பர்களுடன் உரையாடுவது, மனதுக்குப் பிடித்தவர்களுடன் பேசுவது போன்ற உத்திகளை கடைபிடிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூர்ந்து கவனித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி முனைவரே... தங்களது ஆலோசனையில் நான் கடைப்பிடிப்பது எழுதுவது, எனது செல்வங்களுடன் பேசுவது மட்டுமே..

   நீக்கு
 5. மனம் தளராதிருந்தால்
  நம்பிக்கையோடு போராடினால்
  மலைபேர்ல் வரும் சோதனைகள் யாவும் பனி போல் நீங்கிவிடும்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நண்பரே மனம் தளரும் போதுதான் அவனை தோல்விகள் தழுவிக் கொ(ல்)கிறது நல்ல கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 6. நண்பரே!
  ஒருகணம் ஸ்தம்பித்து போய் விட்டேன். நான் வந்தது கில்லர்ஜி பதிவுக்கா? அல்லது திண்டுக்கல் தனபாலன் பதிவுக்கா? என்று, ஆம்!
  அர்த்தமுள்ள சதம் அடிக்கும் பிளேயர் ஆகி விட்டீர் போலும்.
  சிம்மக் குரலோனின் ஆறு மனமே ஆறு பாடலை கட் செய்து விட்டு தர்மத்தை புரட்சி தலைவர் வழியில் சொல்ல துணிந்து விட்டீர்கள்! பார்த்து நண்பரே!
  "தர்மத்திற்கும் ஒரு அளவு கோல் உண்டு" அய்யன் சொல்கிறார் என்று யாராவது புது பதிவு போட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை!சிறப்புத் தோரணம் கட்டி உள்ளீர்!
  த ம 6
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா இனிமேல் வெப் அட்ரஸ் கவனமாக அடியுங்கள் அவரைப்போல் பிறர் வருவதென்பது இயலாத காரியமே..
   நண்பரே.... எமது பதிவுகளில் ஏதாவது விடயத்தை திணிக்க வேண்டும் 80தே கொள்கை புதுமையை கோபப்படாமல் ஆதரவு தாரீர் 6 மனமே 6
   இதைப் படித்தால்தானே....

   நீக்கு
 7. வெகு விரைவுப் பதிவராக மாறியிருக்கிரீர்கள்
  வாழ்த்துகள்
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழரே நான் விரைவுதான் தாங்கள்தான் தாமதம் நன்றி தோழர்.

   நீக்கு
 8. என்ன திடீரென திண்டுக்கல்லாரின் பாணியை பின்பற்றியிருக்கிறீர்கள். நீங்கள் தந்துள்ள பாடல்கள் யாவுமே எனக்குப் பிடித்தவை. காணொளியை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் எழுத தொடங்கும் பொழுது அப்படி நினைக்கவில்லை எல்லோரும் சொல்லுவதால் இப்பொழுது எனக்கும் அப்படித்தான் படுகிறது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. பாடல்கள் உள்ள வரிகள் ரசிக்க மட்டும் அல்ல... அனுபவித்தாலும் இனிமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அந்த அனுபவிப்புதான் இந்த பதிவு.

   நீக்கு
 10. தர்மம் தலை காக்கும் உண்மை தான் சகோ.

  பதிலளிநீக்கு
 11. எனது இன்றைய பதிவு ஸ்ட்ராபெரி ஜாம் . உங்கள் dash boardil ஏனோ வரவில்லை என்று நினைக்கிறேன்.கருத்திட வாருங்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 12. பாடலோடு அசத்த ஆரம்பிச்சிட்டிங்க போல... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. கண்டதை/ கேட்டதை நினைத்துக் கொண்டு சாலையில் போனால் ...மாருதியின் ப்ரேக் பிடிக்காமல் போயிருந்தால் பெரியவர் உங்களை இழுத்து விடாமல் போயிருந்தால் தர்மம் தலைகாக்க பாட நீங்கள் இருந்திருப்பீர்களா. . எதுவும் நடக்க வாய்ப்புண்டு என்று சொல்ல வந்தேன் தர்மம் செய்யுங்கள் தலை காக்கிறதோ இல்லையோ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலை காக்கிறதோ, இல்லையோ, தர்மம் செய்யுங்கள் அருமை ஐயா.

   நீக்கு
 14. வணக்கம்
  தர்மம் தலைகாக்கும் தக்க தருனத்தில் தலைகாக்கும் ஜி... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  த.ம 11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 15. இந்த மாதிரி செய்றதுக்கு யாருக்குங்க மனசு வரும் - இந்த காலத்தில!?..
  நெனைக்க நெனைக்க ஒரே சந்தோஷமால்ல இருக்கு!..

  பதிலளிநீக்கு
 16. உங்கள் பதிவு அருமை. பாடல்கள் இனிமை மட்டுமல்ல நம் மனதைக் கட்டிப்போட்டு சிந்திக்க வைப்பவையே! சபாஷ்!

  ஒரே ஒரு கருத்தில் மட்டும் வேறுபடுகின்றோம். தர்மம் தலை காக்கும் என்பதை நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லி இருந்தாலும். யதார்த்த ரீதியில் எல்லோருமே உபயோகிக்கும் ஒன்றே. பொதுவாக மக்கள் எல்லோருமே நாம் நல்லது செய்தால் நல்லது நடக்கும், புண்ணியம், நாம் செய்யும் நல்லவை நம்மைக் காக்கும் என்று சொல்லித்தான் செய்கின்றோம். இது நாங்கள் பொதுவாகச் சொல்கின்றோம். தனிப்பட்ட முறையில் அல்ல. நாம் செய்யும் நல்லதில் கூட நான் அந்த நல்லது செய்தால் புண்ணியம், தர்மம் என்று ஒரு எதிர்பார்ப்புடந்தான் செய்கின்றோம். அப்படிச் செய்வதால் நம்மகு ஏதேனும் கெட்டது நடக்கும் போது நாம் சொல்லுவது என்னவென்றால், "சே நாம எவ்வளவு நல்லது செஞ்சோம்? எவ்வளவு உதவி செஞ்சோம் ஆனா பாரு நமக்கு நல்லதே நடக்க மாட்டேங்குது.." என்று நம்மைச் சுற்றி உஃப்ள்ளவர்களும் இதைச் சொல்லக் கேட்டிருப்போம். "எவ்வளவு நல்லது சென்சாங்க அவங்கலுக்குப் போய் இப்படி நடக்குதே...சே நல்லதுக்கு காலமே இல்லை" என்று. நாம் நல்லது செய்யும் போதும் இது போன்ற எதிர்பார்ப்புகள் அஹ்டாவது "புண்ணியம், இது நம்மைக் காக்கும் நாம் ஊரார் பிள்ளைக்குச் சோறு போட்டால் நம் பிள்ளை கக்கு எங்கேயாவது ஒருவர் சோறு போட்டு பார்த்துக் கொள்வார்...போன்ற ஒரு பின்னணியுடன் தான் நாம் பல நல்லவை செய்வதும். இந்தப் பின்னணி எதுவும் இல்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்வதைச் செய்து கொண்டே போனால், நமக்கு வாழ்வில் விரக்தி என்பதே வராது....என்பது எங்கள் தாழ்மையான கருத்து. புண்ணியம் கிடைக்கும், தர்மம் தலை காக்கும் என்பது கூட ஒரு வித எதிர்ப்பார்ப்புதான். இதை நாம் பல புராணக் கதைகலிலிருந்து மேற்கோள் காட்டி நம் குழந்தைகளையும் வளர்க்கின்றோம். இந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்த்தால், மனம் எந்தவித குழப்பங்களுக்கும் ஆளாகமால் தெளிவாக இருக்கும் என்பதும் எங்கள் தாழ்மையான கருத்து. (இங்கு இன்னும் ஒரு சிறு வேறுபாடு நல்லதை நினை நல்லது நடக்கும்-பாசிட்டிவ் திங்கிங்க் என்பது வேறு அதில் எதிர்பார்ப்புகள் கிடையாது...நேரானது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அருமையான விளக்கவுரை நண்பர்களே... எல்லோருமே நீங்கள் சொல்வதுபோல் பிரதிபலனை முன் நிறுத்தியே ஓடுகிறோம் 80 உண்மையே...

   அதேபோல நமக்கு ஏதாவது கெட்டது நடந்தால் நாம எவ்வளவு பேருக்கு கெடுதல் செய்தோம் அதனால்தான் நமக்கு இப்படி ஆனது என நினைத்துப்பார்க்கிறோமா ? இல்லையே... நினைத்துப் பார்த்தோமானால் கெடுதலும் செய்யமாட்டோம்.

   நீக்கு
 17. இருப்பது கொஞ்சமாயினும் அதைப் பகிர்பது பெருய தர்மம்
  நன்று

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே.

  தர்மம் என்றும் தலை காக்கும் என்று அழகான பாடல்களுடன், நிகழ்வுகளுடன் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மையான வரிகளை உரைத்தமைக்கு நன்றி. தர்ம சிந்தனையுடன் வாழ்பவர்களை இன்னல்கள் அவ்வப்போதோ, இல்லை அடிக்கடியோ சந்தித்தாலும், அவர்களின் தர்ம நோக்கினால் தக்க சமயத்தில் அவைத்தானே அவர்களை விட்டு அகன்று விடும். மற்றும் தர்மம் நம் தலையை காப்பதுடன் எந்நாளும் உண்மையின் தோழமையுடன் தலை நிமிர்ந்து நின்று தோல்வியை தழுவாது தன் தலையையும் தக்க வைத்துக் கொள்ளும் இயல்புடையது. பகிர்வுக்கு நன்றி சகோ.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகான நீண்ட விளக்கவுரை தந்தீர்கள் மிக்க நன்றி.

   நீக்கு
 19. 1967 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொது ’மக்கள் திலகம்’ எம்ஜிஆர் அவர்கள் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். அப்போது மேடைக்கு மேடை திமுகவினர் முழங்கிய வாசகம் ‘தர்மம் தலை காக்கும்’. அப்போதெல்லாம் ப்ளக்ஸ் பேனர் கிடையாது. விளம்பரத் தட்டிகளும், சுவர் விளம்பரங்களும்தான். அவற்றில், அப்போது எங்கும் எழுதப்பட்ட வாசகம் ‘தர்மம் தலை காக்கும்’.

  கற்பனை என்றாலும் நயம்பட சொன்னீர்கள். திண்டுக்கல் தனபாலன் வழி தனி வழி; இவர் வழி தனிவழி. எனவே போட்டி என்று சொல்ல முடியாது.

  த.ம. 15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பழைய விடயத்தை அழகாக நினைவு கூரந்தமைக்கு நன்றி.
   உண்மையே நண்பர் டி.டி யின் வழியில் பிறர் செல்வது கடினமான விடயம்.
   நண்பரே எமது பதிவுகளுக்கு வருவல் அதிகமான இடைவெளி கொடுக்கின்றீர்களே.... காரணம் அறியேன்.

   நீக்கு
  2. அன்புள்ள நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு, எனது இடது குதிகாலில் பெரிய காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில்தான் இருக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அறிமுகமானவர்கள் எழுதிய தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை படித்து விடுவேன். ஆனால் உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் முன்புபோல் உடனுக்குடன் என்னால் கருத்துரை எழுத முடிவதில்லை. எனது பதிவுகளிலும் மறுமொழிகள் இட முடிவதில்லை. காரணம் கால் வலியோடு அதிக நேரம் கம்ப்யூட்டரில் உட்கார முடியாததுதான். இறைவன் அருளால் மீண்டு (மீண்டும்) வருவேன். நன்றி.

   நீக்கு
  3. தாங்கள் விரைவில் நலம் பெற்று வழக்கம் போல் அனைத்து பதிவர்களையும் தொடர இறைவனை வேண்டுகிறேன் மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 20. உங்களுக்குப் பிடிக்கதாத மதம் அதுதான் தாமதம் என்னைப் பிடித்திருக்கிறது நண்பரே.

  எந்த மதம் பற்றி எழுதினால் என்ன ...........?

  இந்த ம த ம் தான் சொந்த மதமாக இருக்கிறது.

  பாடலுடன் தர்மம் கேட்டது.............மனதைத் தொட்டது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க கவிஞர் அல்லவா படித்தவர்களையே சமாளிக்கும்போது இந்த பாமரனை சமாளிப்பது ஒரு விசயமா என்ன ?
   வாழ்க வளமுடன்.

   நீக்கு
 21. நம்மைப் போன்ற பதிவர்கள் செய்யும் தர்ம காரியம் ...உங்களுக்குத்தான் தெரியுமே ,நிச்சயம் வலையுலகில் நீண்ட காலம் நம்மை வாழ வைக்கும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி கருத்துரையும், வாக்கும்கூட ஒரு தர்மம்தானோ.....

   நீக்கு
 22. நம்ம தலைவரோட சாயல் தெரியுதே ..???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படித்தான் தெரியுது.... நண்பரே...

   நீக்கு
 23. தர்மம் தலைக்காக்கம் என்பதைச் சொல்ல ரோட்டில் விழுந்து எழுந்து தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,
  தாங்கள் சொல்ல வந்த கருத்து அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, டீச்சரே லேட்டாக வரலாமா ? வந்தீங்களே.... நன்றி.

   நீக்கு
 24. தர்மம் என்றால் என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!! இதற்க்கு எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு, உண்மையான அர்த்தம் வேறு................நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே.. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் 80 இயலாத காரியமே தங்களது மாற்றுச் சிந்தனையை விரைவில் தருக... காத்திருக்கின்றேன் நன்றி.

   நீக்கு
 25. நம்மால் முடிந்தவரை நல்லதை முடிந்தளவு மற்றவருக்கு செய்வோம்.அது சிறிது,பெரிதோ, அதனால் பலன் இருக்கோ,இல்லையோ, அவர்கள் அவ்வுதவியை நினைப்பார்களோ,இல்லையோ,இதெல்லாம் முக்கியமில்லை. அந்த நொடி மனிதனாய் வாழ்கிறோமே அது போதும்.
  எல்லாப்பாடல்களும் மிக நல்ல பாடல்கள். காணொளி அருமை. கடைசி பஸ்ஸுல வந்தாச்சு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அழகாக விவரித்தீர்கள் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே 80 போல அருமை.
   கடைசி பஸ்ஸுல வந்தீங்களா ? ஹா ஹா ஆனால் காலையிலேயே டிக்கெட் புக்கிங் (தமிழ் மணம் ஓட்டு) செய்து விட்டுப் போனதை பார்த்தேன் மீள் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 26. கில்லர்ஜியிடம் முதலில் பகவான்ஜி சாயல் தெரிந்தது, இப்போது டிடிஜி சாயல் தெரிகிறதே..?
  வேலைப்பளு காரணமாக இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வரமுடியவில்லை நண்பரே!
  த ம 21

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே... பலவகைகளிலும் பதிவுகளை கொடுக்க வேண்டும் என நினைக்கும் பொழுது சில நேரங்களில் சிலரின் சாயல் விழுந்து விடுகிறது இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன்.
   அதென்ன நண்பரே நேற்றே ஓட்டு போட்டு விட்டு இன்று மீண்டும் 21 எப்படி வரும்... கள்ள ஓட்டு போடுவது குற்றம் நண்பரே....

   நீக்கு
 27. பாடல்களோடு பதிவின் கருத்து அருமை! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிப்போகட்டும் மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கல்!

  பதிலளிநீக்கு
 28. பெயரில்லா6/16/2015 2:05 பிற்பகல்

  பாடலோடு இணைத்த கருத்துகள்
  மிக இணைந்து சுவை தந்தது.

  பதிலளிநீக்கு