தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 16, 2015

ரதிமா....

 
பிச்சுமணி, எப்படியி...
நல்லாயிருக்கேன் மதன், நீ எப்படிடா இருக்கே ? வீட்ல அம்மா எப்படி சவுக்கியமா இருக்காங்களா ? வேலையெல்லாம் எப்படி ? போயிக்கிட்டு இருக்கு... ஆமா, போன வாரம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போகணும்னு சொன்னே என்ன ஆச்சு ?
பொண்ணு புடி...
பொண்ணு புடிக்கலையா ? ஏன் கருப்பா ? என்ன படிக்கலையா ? வசதியில்லாத வீடா ? அப்பா என்ன செய்யிறாரு ? அண்ணன் தம்பி யாரும் இல்லையாக்கும் ? ஆமா... இப்படியே தட்டிக்கழிச்சா என்ன அர்த்தம் ? உனக்கு எந்த மா3தான் பொண்ணு வேணும்னு நினைக்கிறே ? 
ரதி...
ஆமா... ரதி உல்லாச பறவைகள் படத்துல நடிச்சுருக்காங்க... ஹிந்தியிலே கூட ஏக் துஜே கேலியே படத்துல கமல்கூட நடிச்சுருக்காங்க, படம் நல்ல ஹிட்டாச்சு K. பாலசந்தர் ஸார் டைரக்டர்.
எனக்கு, வேண்டியது ரதிமா..
என்னடா... நீ ரதியம்மாவைப் போயி கேட்கிறே ? அவங்களுக்கு இப்பவே வயசு எப்படியும் ஐம்பதை தாண்டியிருக்கும், ஏங்கிட்டே சொன்னதை வெளியிலே சொல்லிடாதே சிரிப்பாங்கே.... உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிசுன்னு வச்சுக்க.. நேரே எங்கிட்டே வந்து ஏண்டா ? முட்டாப்பயலே உங்கூட சேர்ந்துகிட்டு யேன் மகனும் கெட்டுப் போயிட்டான்னு என்னைப் புடிச்சு ஏறுவாரு நல்லாயிருப்பே இந்த மா3 எண்ணத்தை மாத்திக்க.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
டேய், நான் சொல்றதை கேட்....
நீ ஒண்ணும் சொல்லவேணாம் எனக்கு தெரியாததா ? நமக்குன்னு சமூகத்துல ஒரு மரியாதை இருக்கு அதை காப்பாத்திக்க நம்ம கௌரவத்தை மறந்துட்டு நடிகையை கல்யாணம் செய்துக்கிற ஆசைப்படுறியே உனக்கு வெட்கமா ? இல்லை... டேய் ரோட்ல நம்ம மனைவி நடந்து போகும்போது இன்னாரு மனைவினு சொல்லனும்டா அதுதான்டா நமக்கு பெருமை, இன்னாரு புருஷன்னு சொன்னா ? மானக்கேடு ச்சே... நீ இப்படி இருப்பேனு நான் நினைக்கவே இல்லைடா...
டேய், புரியாம...
டேய் என்னடா... எனக்கு புரியலை ஏன்டா ? மனுசனுக்கு ஆசையிருக்கும் அதுக்கு அளவு வேணாம் ? இப்படியாடா ? கேணத்தனமா ஆசைப்படுறது என்னைவிட நீ படிச்சு இருந்தும் உனக்கு புத்தி இல்லையடா நம்மளை விட மூத்தவளை கல்யாணம் செய்துக்கிற நினைக்கிறயடா.. அதுவும் நடிகையை எங்க வீட்ல அம்மா-அப்பாவெல்லாம் உன்மேலே எவ்வளவு மரியாதை வச்சுயிருக்காங்க தெரியுமா ? ஏண்டா ? தெரியாமத்தான் கேட்கிறேன் சோத்தைதானே திங்கிறே....
(சட்டீரென ஒரு சத்தம் மதன் பிச்சுமணியை ஒருஅறை விட்டிருந்தான் கண்ணத்தை பிடித்துக்கொண்டு கீழே உட்காந்து விட்டான் பிச்சுமணி)
ஏண்டா... லூசுப்பயவில்லே நான் என்னசொல்ல வர்றேனு முதல்ல கேட்டியாடா ? ¾ மணிநேரமும் நீ தானடா பேசுனே என்னப்பேச விட்டியாடா ? நாலே வார்த்தை அதையும் முழுசாக்கூட நான் பேசலை... என்னமோ ரதியாம், உல்லாசப்பறவைகளாம், ஏக் துஜே கேலியேவாம், கமலஹாசனாம், பாலசந்தராம் இவுங்கல்லாம் யாருடா ? இனிமே ரோட்ல பார்க்கும்போது கல்யாணத்தை பத்தி பேசுனே ? பிச்சுப்புடுவேன் பிச்சு.
(பிச்சு மணியை திட்டிவிட்டு... நடையை கட்டினான் மதன்)

60 கருத்துகள்:

  1. 'மண் 'மதன் உண்மையில் என்னதான் சொல்ல வந்தான் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சுமணி சொல்ல விட்டால்தானே... நாமலும் தெரிஞ்சுக்கிற முடியும் ஜி.

      நீக்கு
  2. ரசித்தேன். இது போல நண்பர் ஒருவர் எனக்கும் உண்டு. அவரைப் பற்றி முன்பு எங்கள் ப்ளாக்கில் ஒரு பதிவு கூட இட்டிருந்தேன்!

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  3. சொல்ல வந்தவர்
    என்ன சொல்ல வருகிறார் என்றறியாமல்
    அதாவது, பொறுமையாகக் கேட்க முடியாத
    நம்ம ஆளுங்க
    சொல்ல வந்தவரைச் சொல்லவும் விடாமல்
    அரையும் குறையுமாக் கேட்டிட்டு
    பண்டிதர் போல
    விளக்கம் கொடுப்பதைக் கண்டால்
    என் உள்ளம்
    அடிக்கவேணும் என்று தூண்டாது
    உதைக்கத் தான் சொல்லும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அதனாலேதானே மதன் கொடுத்தான் ‘’சட்டீர்’’ வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. சிலர் இப்படித்தான் அடுத்தவர்களை பேச விடுவதே இல்லை! :)))

    நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  5. ஆகா
    மதன் என்னதான் சொல்ல வந்தான்
    பகவான்ஜி கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கேள்வியே எனதும்... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. வழக்கம்போல் குழப்புவது போல ஒரு செய்தி, நன்று. ஏக் துஜே கே லியே திரைப்படம் நான் ரசித்துப் பார்த்தது. அதைப் பற்றிய விமர்சனமோ என நினைத்துப் பார்த்தால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துரைக்கு நன்றி ஏக் துஜே கேலியே மறக்க முடியுமா ?

      நீக்கு
  7. ஹஹஹஹஹஹஹ் எங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு மத்தவங்களப் பேசவே விடமாட்டாங்க....அவங்களா ஏதாவது இட்டுக் கட்டி கற்பனை செய்து பேச ஆரம்பிச்சுடுவாங்க....அதுலயும் சிலர் அட்வைஸ் தருவாங்க பாருங்க.......செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தார் ஆரம்பத்திலேயே வந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் மலையாளியொருவன் என்னை மதனாக்கி அவன் பிச்சுமணியானதின் உண்மைச் சம்பவம் கலந்த கற்பனையே இந்தப்பதிவு.

      நீக்கு
  8. Listening is an Art என்பார்கள். முழுதும் கேட்காமல் இடையே புகுந்தால் இதுதான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் உடன்’’அடி’’ பலன் கிடைத்து விட்டது நண்பரே..

      நீக்கு
  9. நச்சுன்னு.. ஒரு அறை.. ஒரே அறை!..
    பிச்சுமணி உண்மையிலயே பிச்சுப் போட்ட மணியாயிட்டானா!?..

    அத்தோடு விட்டானே.. மதன்!.. - என்று பிச்ச மணி (!?) சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்..

    இந்த மாதிரி சகடைகள் ஏராளமாகத் திரிகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி //சகடைகள் ஏராளமாகத் திரிகின்றன// ஹாஹ்ஹா ரசித்தேன்.

      நீக்கு
  10. இறுதியில் மதன் என்னதான் சொல்ல வந்தார் ? ரசித்து படித்தேன் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ யாருக்குத் தெரியும் வேண்டுமானால் மதனிடம்10 அடி தள்ளி நின்று கேட்டுச்சொல்கிறேன்.

      நீக்கு
  11. இப்படியும் சில மனிதர்கள் இருப்பது உண்மையே!

    பதிலளிநீக்கு
  12. நல்ல யதார்த்தமான கதை. சிலர் இப்படி இருக்கிறார்கள். இங்கும் ஒருவர். அவர் அறை வாங்குவதை எண்ணி சிரித்தேன் கற்பனையில்...ஹ..ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவன் அடிவாங்குவதை ரசிப்பதெல்லாம் ஒரு பொழப்பு இல்லையா அம்முலு

      நீக்கு
    2. வாங்க சகோ ப்ரியசகி தெரிந்தவர் அடி வாங்குவதுபோல் கற்பனையா ?

      நீக்கு
    3. கவிஞரின் சீரான வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. சொல்றதைக் காது குடுத்துக் கேக்கலைன்னா இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே.

    சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான்.! அவசரப் பட்டு பேசி வாங்கி கட்டிக் கொள்வார்கள்.! கதை நகர்வு அருமை. அது சரி ! பெயருக்கேற்ற மாதிரி ஜோடி பெயர் பொருத்தமாய் இருக்க வேண்டுமென்று மதன்," ரதி மாதிரி ஒரு பெண் வேண்டும்" என கேட்க வந்தாரா..? இல்லை...உண்மையாகவே ரதி மாதிரி ஒரு அழகான,.. சரி,! சரி..! எதற்கும் நீங்களே கேட்டு சொல்லி விடுங்கள். அப்புறம் எனக்கும் பிச்சுமணிக்கு நேர்ந்த கதி வந்து விடப் போகிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. தானே பேசி கொல்பவர்களை என்னவென்று சொல்வது! சிறப்பான கதை!

    பதிலளிநீக்கு
  16. ரசித்து படித்தேன். லேசாக குழப்புவது போலும் தெரிகிறது.
    த ம 14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே எதையும் கேட்டு பிறகே பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தேன் மற்றபடி ஒன்றுமில்லை.

      நீக்கு
    2. ஆஹா......... என்னை மாதிரியே இன்னொருத்தரா, நல்லாயிருக்கே!!

      நீக்கு
    3. நண்பா நீங்களுமா ?

      நீக்கு
  17. பஞ்சு பஞ்சாக அல்லவா காற்றில் பறக்கிறது!
    சினிமா மோகமென்னும் தலையணை பஞ்சு!
    கிழி கிழி என்று கிழித்து விட்டீர்கள்!

    அலர்ஜியால் அவஸ்தை பட்டு விட்டேன்.
    இப்போதுதான் தும்மல் நின்றது!
    அதான் லேட்!

    தலைப்பு "ரதிமா "என்பதற்கு பதிலாக

    கில்லர்ஜி கிழித்தெறியும்
    "காதுல பஞ்சு"

    இது எப்படி இருக்கு நண்பா?

    த ம 15
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தலைப்பு கொடுக்கும் தலைவா விரைவில் சுற்றுகிறேன் காதுல பூ

      நீக்கு
  18. சில பேர்வழிகள் நம் பொறுமையைச் சோதித்து விடுவார்கள்.ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  19. நாம் எப்பவும் இப்படிதான் என்ன சொல்வருகிறார்கள் என கேட்காமலே பதில் சொல்லிக்கொண்டு, அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பதிவுகளை மிஸ் பண்ணுறீங்களே.... வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. என் கை எனக்கு ஒத்துழைப்பு தருவதில்லை,,,,,,,,,,,,, ஹா ஹா ஹா கை வலி சகோ, இரு நாட்கள் நல்லா தொந்தரவு கொடுத்து விட்டது, அதான் , இனி மிஸ்ஸாகாது,,,,,,,,,,,,,,,

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் நன்றி டீச்சர்.

      நீக்கு
  20. வணக்கம் கில்லர் ஜி !

    நான் கருத்திட்டேன் ஆனால் வரவில்லை காரணம் புரியல்ல எதுக்கும் இன்னொருமுறை சொல்லிட்டுப் போகிறேன் ! அதாவது பிச்சுமணி செவிட்டு மணியாகிட்டான் ,,,வாய்க்கொழுப்பு சேலையால் வடியும் என்று நம்ம ஊர்ல சொல்வாங்க இங்கே கன்னத்தால் வடியுது ஆமா இதெல்லாம் எப்படிங்க எழுதத் தோணுது !

    அருமை ரசித்தேன்
    வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் வாக்கு கூடுதல் இன்னும் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தாங்கள் சகோ பிரியசகி அவர்களுக்கு கொடுத்திருந்த மறுமொழி மட்டுமே வந்திருந்தது. மீள் வருகைக்கும் நன்றி
      எனக்கு தங்களைப்போல கவிதை எழுத வராது ஆகவே இவ்வழி கவிஞரே...

      நீக்கு
  21. ரொம்ப அவசரப் பட்டு குறுக்க குறுக்க பேசினா இப்படித் தான் ஆகும் இல்ல. ம்..ம்..ம் இனி ரொம்ப கவனமாகத் தான் இருக்கணும். நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருந்திட்டா பிரச்சினை இல்லை. அட கருத்து எழுதக் கூட பயமா இருக்கே ஹா ஹா ...என்னை மட்டுமல்ல உங்களுக்கும் தான் சொல்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நலம்தானே... மெதுவாகப் பேசுங்க மதன் காதில் விழுந்தால் எனக்கும் பிரட்சினை.

      நீக்கு
  22. பெயரில்லா6/17/2015 11:50 AM

    அருமையான நகைச்சுவை....நல்ல பகிர்வு நண்பா.

    வேப்பங்குளம் பால்ராஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வேப்பங்குளம் பால்ராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
      நண்பரே ‘’பெயரில்லா’’ கருத்துரைகளால் பதிவர்களுக்குள் சில மனசஞ்சலங்கள் வருகிறது தாங்கள் Google Plus கணக்கு தொடங்கி கருத்துரை அளித்தால் மகிழ்ச்சியடைவேன்.
      நட்புடன்
      கில்லர்ஜி

      நீக்கு
  23. பிச்சுமணி கடைசிவரை பேசா விடாது விட்டதால் முடிவு வம்புதான்!ஹீ ரசித்தேன் உல்லாசப்பறவை படம்!ஹீ

    பதிலளிநீக்கு
  24. மதன் போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அருமை... அருமை அண்ணா... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  25. சில மனிதர்கள் இப்படித்தான். என்ன சொல்லுறாங்கன்னு கேட்காம அவுங்க கற்பனையிலேயே...பேசிட்டு இருப்பாங்க....நல்ல சடீர்...ஹஹஹா....

    பதிலளிநீக்கு
  26. வணக்கம்
    ஜி
    சில மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் ....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு