உயிருள்ள ஜீவராசியான மனிதர்கள், பலபேர் என் மனதை காயப்படுத்தியது உண்டு இப்பொழுதும்கூட, மேல் காணும் இந்த உயிரற்ற பொருள் என்வாழ்வில் பலமுறை எனது கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறது, எனது கஷ்டங்களில் பங்கு எடுத்துள்ளது மற்றவர்களை பொருத்தவரை இதுஒரு கையில் கட்டும், சாதாரண கடிகாரம் என்னைப் பொருத்தவரை நான் மிகமிக நேசிக்கும் உயிரற்ற ஜீவன்.
ஒரு காலகட்டத்தில் இந்த ஜீவன் என்னைவிட, நைனா முஹம்மதுவிடமே அதிககாலம் இருந்தது, காரணம் அவர்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு பணம் கொடுப்பார் இந்த ஜீவனைவிட அதிகமான பணத்தை நான் வட்டியாக கொடுத்து இருக்கிறேன், இவ்வளவு வட்டி கொடுப்பதற்கு விற்று விடலாமே எனநினைக்கலாம் விற்று விட்டால், மீண்டும் வைப்பதற்க்கு வேறு ஜீவனில்லை என்னிடம், வட்டி கொடுப்பவனின் மனநிலையை நான் முழுமையாக அறிந்தவன், அதனால்தான் நம்வாழ்வின் கடைசி காலம்வரை யாரிடமும் வட்டி வாங்ககூடாது என முடிவு செய்தேன், கஷ்டப்பட்டாவது மீட்டு விடுவேன் மீட்டும், மீண்டும்... மீண்டும்... அவரிடமே..... இப்பொழுது நிரந்தரமாக மீட்டு விட்டேன் இந்த ஜீவனுக்காக நான் நிறைய வைத்தியசெலவு செய்துள்ளேன் இப்பொழுது இந்த ஜீவன் என்னை விட்டு பிரிவதில்லை, என்வாழ்வில் நான் நேசிக்கும் உயர்ந்த விசய வரிசையில் இந்த ஜீவனும் உண்டாகும், கடைசிவரை ஒரு பொக்கிஷம் போல், இந்த பொக்கிஷத்திற்கு நான் இதுவரை சக்களத்தியை கொடுத்ததில்லை, கொடுக்கப் போவதுமில்லை, ஒரு நன்றிக்காக உயிரற்ற ஜீவனுக்கே.... நான் இத்தனை தூரம் நன்றிக்கடன் செலுத்தும்போது உயிருள்ள ஜீவராசிகளுக்கு நான் எவ்வளவு செலுத்த கொடுக்கவேண்டும், அதற்காகத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை அந்த மாதிரி ஜீவராசி இதற்க்கு இன்னுமொரு காரணமும் உண்டு இதை எனக்கு பரிசு தந்த அந்த ஜீவராசி இந்த பூவுலகில் இன்று இல்லை.
தம 1
பதிலளிநீக்குமணி....
மணியான பொக்கிஷம் தான்
அன்பால் கொடுத்ததை
ஆசையாய் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
வணக்கம்
பதிலளிநீக்குஜி
அழியாத பொக்கிஷம் ஜி.. தங்களின் மனைவின் அன்பளிப்பு போல தோன்றுது..ஜி
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானும் கூட என் நண்பர் ஒருவர் பரிசளித்த கைக்கெடிகாரத்தை 25 வருடங்களுக்கும் மேலாகக் கட்டியிருந்தேன். இப்போது அது ஓடவில்லை என்றாலும் அவர் நினைவாக பத்திரமாக இருக்கிறது!
பதிலளிநீக்குகாலம் காட்டும் கருவி மட்டுமல்ல
பதிலளிநீக்குகாலம் காலமாய் கொடுத்தவரின்
நினைவலைகளை வழிய வழிய தேக்கி வைத்திருக்கும்
ஒர காலப் பெட்டகம்
நன்றி நண்பரே
தம +1
உயிருள்ள பொக்கிசம்...
பதிலளிநீக்குஉங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அந்நாளைய நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையை அப்பட்டமாகச் சொல்லுகின்றன. உண்மையிலேயே பொக்கிஷம்தான் அய்யா!
பதிலளிநீக்குவசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
- கண்ணதாசன் (படம்: தியாகம்)
இன்று அந்த நிலைமையெல்லாம் மாறி வசதி வாய்ப்புகள் வந்தாலும், பழைய நிலைமையை எண்ணிப் பார்க்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
த.ம. 7
நம்மிடமிருக்கும் உயிரற்ற பொருளெல்லாம் நம் மனசாட்சியின் பிம்பங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பொக்கிஷம் அது போன்றதே
1971-ல் என் நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த கைகடியாரம் இன்னும் என்னிடம் நல்ல நிலையில் இருக்கிறது/ அவ்வப்போது அதைக்கட்டுவேன்
பதிலளிநீக்குஇத்தனை முறை சென்று மீண்டு வந்துள்ளது என்றால், அது பொக்கிஷம்தான் ..!
பதிலளிநீக்குத ம 8
ம்..ம் நெகிழ்ச்சியாகவே உள்ளது கண்கள் கலங்கி விட்டன ஜி அது பத்திரமாக வைக்க வேண்டிய பொக்கிஷமே. நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅழியாத நிணைவு பொக்கிசம்........
பதிலளிநீக்குசொற்றொடர்களில் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து படிக்கும் வாசகரை உங்களை நோக்கி ஈர்த்துவிடும் பாணியை இப்பதிவிலும் காண முடிகிறது. மனம் சற்றே கனத்தது. தாய்நாட்டு மண்ணில் நண்பர்களையும், உறவினர்களையும் பார்க்கும் நேரத்திலும், பதிவையும் விடாமல் இடுவதை நினைத்து வியக்கிறேன்.
பதிலளிநீக்குuier ilathathai uier ualavar koduthathal ipothu athu uirudan irukerathu ungal manathil. vaalthukal.
பதிலளிநீக்குNam urulla porul
பதிலளிநீக்குகைகடிகாரம் அருமையான பொக்கிஷம். உங்கள் பதிவை படிக்கும் போது மனம் கலங்கியது உண்மை.
பதிலளிநீக்குநீங்கள் உங்கள் ‘பொக்கிஷத்தை’ ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தை அறிந்தபோது மனம் நெகிழ்ந்தது. உங்கள் துணைவியார் கொடுத்த பொக்கிஷத்தை மாற்றாமல் வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகாலத்தின் கணக்குப் பிள்ளை !
பதிலளிநீக்குஞாலத்தில் இதை உணர்ந்தார் இல்லை !
காலம் பொன் போன்றது என்பார்கள்..
பதிலளிநீக்குகாலங்காட்டும் கருவியும் பொன்னாகி விட்டது..
வாழ்க நலம்!..
தங்களின் நன்றி உணர்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு! ஜி
பதிலளிநீக்குமனைவி உயிருடன் இருக்கும் போதே சக்களத்திகள் உருவாகும் இன்றைய உலகத்தில் ,நீங்கள் வாட்சுக்கும் கூட வேண்டாம் சொல்வது ...'இல்லா 'ளின் மீது நீங்கள் வைத்திருக்கும் வைத்திருக்கும் அன்பை உணர்த்துகிறது !
பதிலளிநீக்குபொக்கிஷம்...
பதிலளிநீக்குஅண்ணி கொடுத்தது அன்பாய்க் கொடுத்தது பொக்கிஷமே...
பத்திரம் அண்ணா....
இதே போல் தான் எங்களிடம் இருந்த ஒரே தங்க செயின் தான் 1986 லே
பதிலளிநீக்குஎனது மகன் எஞ்சினீரிங் கல்லூரி பிலானியில் படிக்க உதவியது.
இந்தக் காலத்திலோ இது போல இருபது செயின் இருந்தாலும்
எல். கே.ஜி. கூட சேர்க்க இயலாது.
சுப்பு தாத்தா.
நிச்சயம் இது பொக்கிஷம் தான்.
பதிலளிநீக்குபாதுகாக்கப்படவேண்டிய கால பொக்கிஷம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநேரம் காட்டியும் நினைவுப் பரிசும்
நீங்கா இடம் பிடித்திருக்கும்
பொக்கிஷம் - தங்கள்
பகிர்வுக்கு நன்றி!
அன்புப்பரிசு என்றுமே பொக்கிஷம்தான்!
பதிலளிநீக்குமணியான பொக்கிஷம்! உண்மைதான்!
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே!
நல்ல பொக்கிஷம்தான். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே .
பதிலளிநீக்குஉயிரற்ற பொருளானாலும், அதை மதித்து, அதற்கும் மேலாக அதை அன்போடு நமக்காக அதை அளித்தவரின் அன்பையும் மதித்து பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாத்து வரும் தங்கள் செய்கையை பாராட்டுகிறேன். நினைவுகள் நம்மோடு என்றும் நிரந்தரமானவைதான்,.சிலசமயம் அவை காலமெனும் கடினத்தாலும் அழிக்க முடியாததும் உண்மைதான், என்பதை உணர்த்தும் நல்லபதிவு.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.