தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 26, 2016

இந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்

                   
            
நாம் கடந்து வந்த பேரிடர் நமக்கு கஷ்டத்தை மட்டுமல்ல, நல்லதொரு பாடத்தையும் தந்து இருக்கின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தி ஆகவேண்டும் ஆம் அரசியல்வாதிகளின் முகத்தை தோலுறித்து காண்பித்து இருக்கின்றது இந்த முகங்களை நாம் கடைசிவரை மறந்து விடக்கூடாது மறக்கும் பொழுது நாம் மீண்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வந்த பேரிடரால் சென்னையில் எத்தனையோ உயிர்கள் போயிருக்கிறது.

ஆனால்  அரசியல்வாதிகள் யாராவது போயிருக்கின்றார்களா ? சிந்திக்க வேண்டிய விடயமிது ஆம் அவர்களுக்கே முதலுதவி வழங்கப்பட்டு இருக்கின்றது ஆகவே அவர்களில் யாருமே இறக்கவில்லை இதுதான் யதார்த்த உண்மை தேர்தல் வருகின்றது பேசியே நம்மை ஓய்த்தவர்களை இனியும் பேசவிடக்கூடாது இவர்களை பேசவிடாமல் தடுப்பது எப்படி ? வெகு சுலபம் கூட்டம் நடத்துவதற்க்கு எந்த அணியில் இருந்து வந்தாலும் சரி யாருமே போககூடாது போகாமல் இருப்பதால் நாம் செத்து விடமாட்டோம் போவதால்தான் அன்றைய வருமானம் இழந்து நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு குறிப்பாக திரைப்பட நடிகர்கள் வந்தாலும் மனம் மாறி போய் விடக்கூடாது அவர்களும் நம்மைப்போன்று சோறு களித்து மலம் கழிக்கும் ஜாதிதான் இவர்கள் தேவலோகத்து தூதர்கள் அல்ல

உங்களுக்கு சிறிய விளக்கம் தருகிறேன் எத்தனை திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த காவல்துறையினரையும், ஏன் ? ராணுவ வீரர்களையும்கூட ஓரம்கட்டி விட்டு சும்மா வேலையின்றி கசாநாயகியை டாவடித்துக் கொண்டு இருந்த கசாநாயகர்கள் மட்டும் மிகவும் சுலபமாக காப்பாற்றி கொண்டு வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள், தீ எரிந்து கொண்டு இருக்கும் வீட்டுக்குள் ரோபோட் மாதிரி பாய்ந்து சென்று கிழவிகளைக்கூட தூக்கி வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள் இது எப்படி ? இப்பொழுது மட்டும் ஏன் ? சன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் குதித்து களம் இறங்கியிருக்க வேண்டாமா ? 

அட மடையா... அது சினிமா, நடைமுறை வாழ்க்கையில் அப்படியெல்லாம் செய்ய முடியாதுடா... என்று என்னை சொல்கின்றீகளா ? இதையேதான் நானும் சொல்கிறேன் சினிமாதானே பிறகு எதற்கு ? திரைப்படங்களில் அவர்களின் விரல் அசைவுக்குகூட அர்த்தமற்ற வகையில் உணராமல் கை தட்டுகின்றீர்கள் ? அவர்களின் பதாகைகளுக்கு கடவுள் நிலைக்கு பாலாபிஷேகம் செய்கின்றீர்கள் ? கேள்வி புரிந்ததா ? அதேநேரம் ராணுவ வீர்ர்களான நமது சகோதரர்கள் மட்டுமல்ல சாதாரண கூலித் தொழிலாளிகளால் கூட உதவி செய்ய முடிந்தது எப்படி ? 

இதுதான் நண்பர்களே நடைமுறை யதார்த்தம் ஆனால் இவர்களுக்கு சம்பளம் கோடிகள் ஆனால் நமக்காக மட்டுமல்ல, இந்த கோடிகள் சுலபமாக சம்பாரிக்கின்றார்களே நடிகர்களுக்காக மட்டுமல்ல, நம்மை காலம் முழுவதும் ஏமாற்றி வாழும் அரசியல்வாதிகள் இவர்களுக்காகவும் எந்த நொடியும் உயிர் துறக்கும் ராணுவ வீர்ர்களுக்கு சம்பளம் எவ்வளவு ? இதற்கு காரணம் யார் ? வெகு சுலபமாக பணம் உண்டாக்கினார்கள் இவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்தால் குறைந்து விடுவார்களா ? ஆகவே இவர்களையும் நாம் ஓரங்கட்டுவோம் எப்படி ? இவர்களின் திரைப்படங்கள் வெளியானதும் தியேட்டருக்கு போககூடாது சினிமா பார்க்காமல் இருப்பதால் செத்து விடமாட்டோம் அதற்கு செலவழிப்பதால் நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு.

மக்களிடையே மதவாதத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்தவர்களின் முகத்தில் கரியை பூசியிருக்கின்றார்கள் மக்கள். மசூதிகளில் ஹிந்து பெண்களும், கோயில்களில் இஸ்லாமிய ஆண்களும் நடமாட்டம் இது வந்ததெப்படி ? பேரிடர் தந்த பெருமை என்றே நாம் கருதுவோம் நம் முன்னோர்கள் எது நடந்தாலும் நன்மைக்கே என்பார்களே... இதனால்தானோ... இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும் நம்முள் இருந்த வேற்றுக்கருந்து அழிந்து விட்டது என்றே கருதுவோம் அவரவர் மதக்கொள்கைகள் அவரவர்களுக்குள் இருக்கட்டும் அதில் யாரும் நுழைய வேண்டாம் மதம் தவிர்த்து நமக்குள் வாழும் மனிதத்தை மட்டும் பகிர்ந்து கொள்வோம்.

குடியரசு தினமான இன்று முதலாவது மதம் மறந்து மனிதம் வளர்க்க சபதம் எடுப்போம் வளரட்டும் மனிதநேயம் ஒளிரட்டும் 
மனிதவாழ்வு
.
இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

இனியெனும் ந்துவும், கிருஸ்தியரும், முஸ்லீமும் தொடர்ந்து 
சகோதரர்களாய் இணைந்திருப்போம் இனி...

ந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்


தேவகோட்டை கில்லர்ஜி  அபுதாபி

காணொளி

52 கருத்துகள்:

 1. மனிதம் எங்கும் எப்போதும் வளர்ப்போம்
  புனிதம்(மனித நேயம்) காக்க புறப்படுவோம்.
  மனதுக்கு நிறைவைத் தந்த பதிவு வாழ்த்துகள் நண்பா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா கொஞ்ச நாட்களாக காணவில்லையே... முதல் கருத்துரை வழங்கியமைக்கு நன்றியோடு குடியரசு தின வாழ்த்துகளும்

   நீக்கு
 2. நல்ல கருத்துகள். நான் அரசியல் மீட்டிங்குகளுக்குப் போவதே இல்லை. தியேட்டரில் சினிமா பார்த்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்று தங்களைப் போலவும், என்னைப் போலவும் எல்லோருமே இருந்தால் இந்தியா மோட்சம் பெறுகிறதோ இல்லையோ அதற்கான வழியாவது கண்களில் தென்படும்.

   நீக்கு
 3. இனிய நாளில் அழகான பதிவு. மனிதம் வளர்ப்போம். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு நண்பர் கில்லர்ஜி அவர்களே. நல்ல திறமையுடன் எழுதும் ஆற்றல் பெற்ற பதிவர்கள் மனிதம் வளர்க்க பாடு பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. சம்பத் கல்யாண் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 5. அரசுப்பணியில் இருப்பதால், அவலங்களைக் கூறவோ எழுதவோ இயலவில்லை! பல விடயங்கள் மதம் மறந்து மனித நேயத்தோடு, அடையாளம் சுட்டிக்காட்டப்படாமல், செயல்பட்டு வாழ்ந்து வருகின்றனர்/ அவர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும்... அங்கீகரிக்கப்பட வேண்டும்... அரசு செய்யாது. மனதால் அவர்களை நாம் வாழ்த்துவோம்... மதம் மறப்போம்...மனித நேயம் வளர்ப்போம் என்ற சூளுரை எடுத்து கடைபிடிப்போம்...
  ஜெய் ஹிந்த்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும் தமிழ் மண வாக்கிற்க்கும் நன்றி ஜெய்ஹிந்த்

   நீக்கு
 6. சிறப்பான பகிர்வு ஜி... இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. "செலக்டிவ் அம்னீசியா" இருக்கும் காரணத்தால் அனைத்தும் மறக்கப்படும் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் நமது தேசிய வியாதி நண்பரே என்ன செய்வது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 8. நல்ல கருத்துள்ள பதிவு சகோ. தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் அவை உரித்தாகுக..

   நீக்கு
 10. நல்லதொரு பதிவு..
  குடியரசு தின நல்வாழ்த்துகள்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜியின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 11. குடியரசு தினம் அன்று சிறப்பான பகிர்வு.

  நிச்சயம் இந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்..... நம்பிக்கை வைப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நம்பிக்கையோடு வாழ்வோம் குடியரசு தின வாழ்த்துகள்.

   நீக்கு
 12. அருமையான பதிவு நண்பரே
  மனிதம் போற்றுவோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. சிறந்த கருத்துப் பகிர்வு

  இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

  மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
  http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது இணைப்புக்கு இதோ வருகிறேன்.

   நீக்கு
 14. என்னது இந்தீயா கிளர்ச்சியுடன் முன்னேறுமா.....அடடா..இன்னும் இந்தியா இன்னும் முன்னேறேவே யில்லீயா.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே நான் என்ன பொய்யா ? சொல்லப்போறேன்

   நீக்கு
 15. மிகச்சிறப்பானதொரு பதிவு! இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்

   நீக்கு
 16. குடியரசு தின வாழ்த்துகள்!
  சமத்துவமும்,சமாதானமும்அனைவர்மனதிலும்பெருகிடட்டும்.மதங்களை எரித்து மனிதம் வாழட்டும்,

  காணொளி அருமை.கருத்துகள் பெருமை!காணொளியை கேட்டும் போது மனம் உருகுவது நிஜம்.

  பீப் பாடலுக்கு மங்கு மாங்கென பதிவெழுதினோர் அப்பாவி கல்லூரி மாணவர்களுக்கு எதிராக ஒரு கேள்வி என்ன அஞ்சலி கூட வெளியிடாதது ஏன்?

  பீப் பாடலுக்கெதிராக கிளர்த்தெழும்பிய நம் வலையுலக தோழமைகள் இப்போது எங்கே போனார்கள்?

  ஒன்றுமே இல்லாததை தூக்கி பெரிதாக்கி போர்க்கொடி பிடித்தோர் தட்டிக்கேட்க வேண்டியதை கண்டு மௌனமாயிருப்பதேன்?

  விதிமீறலாய் கல்லூரி நடத்தப்பட்டதெனில் இது வரை அனுமதி வழங்கிய ஏழை மாணவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கிய பெரிய மனிதர்களின் சின்னத்தனம் குறித்தும் தட்டிக்கேளுங்கள்,

  டெல்லி வரை எதிரொலிக்கும் கல்லூரி மாணவர மரணங்களை தமிழ் நாட்டுஅரசும் மக்களும் கண்டு கொள்ளாததேன்?

  இதையெல்லாம் இந்த நாளிலேனும் சிந்தியுங்கள், அன்றைக்கு பொது நலன் சிந்தித்து வாங்கிய சுதந்திரம் இன்று தன்னலமாய்முடக்கப்பட்டு வெறும் புகழுக்கும், பணத்துக்கும் அடிமையாகி கிடப்பது தான் சுதந்திரமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வருகைக்கு நன்றி யாருமோ குறிப்பிடாத காணொளியைப் பற்றி குறிப்பிட்டது அறிந்து மகிழ்ச்சி
   ஏதோ விடயம் சொல்லுகின்றீர்கள் எனக்கு தெரியவில்லை ஆனால் ஏதோ அசம்பாவிதம் என்று புரிகிறது இதோ அலசுகிறேன் பொதுவாக நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை

   நீக்கு
  2. http://www.vikatan.com/news/tamilnadu/58131-women-medical-students-found-dead.art

   நீக்கு
  3. படித்தேன் மன வேதனையடைந்தேன் தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 17. இந்தியா இன்னும் முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. ஹஹ இன்னும் கூட பொருளாதாரப்பாடத்தில் நான் அன்று படித்த அதே வாக்கியம்தான் இப்போதும். இந்தியா இஸ் எ டெவெலப்பிங்க் கன்ட்ரி!! புக்குல பொய்யா ஹஹஹ. நீங்க சொல்லறத நம்புவோம் நம்புவதைத் தவிர வேறு வழி?!!! நல்ல பதிவுஜி! கருத்துகளும். நோ அரசியல் இங்கும். எந்தக் கூட்டத்திற்கும் சென்றதில்லை. சினிமா பார்ப்பதில்லை என்று சொல்ல மாட்டோம். ஆனால், மோகம் என்பதெல்லாம் கிடையாது. ஒரு பொழுதுபோக்கே. நோ சீரியஸ்னஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அப்படி முன்னேற்றுவது நமது கையில்தான் இருக்கிறது வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. த. ம வாக்கு போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 19. இ.கி.மு. ஏதோ கட்சி பேருன்னா மாதிரி இருக்கு?!

  பதிலளிநீக்கு
 20. நண்பரே, பொதுநலனில் அக்கறை கொண்ட சமூகப் போராளியின் குரலாக உங்கள் பதிவு ஒலிக்கிறது. எனினும், நாம் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தாலும், அந்த அரசியல்வாதிகளை வைத்துத்தான் நாட்டு நலனுக்கான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த அரசியலமைப்புதான். துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பொதுநலனில் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

  (ஆஸ்கார் ஒயில்டு எழுதிய ‘ HAPPY PRINCE ‘ என்ற கதையை நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் அரசியல்வாதிகளைவிட வாக்கின் தன்மையை உணராத மக்களைத்தான் எதிர்க்கிறேன் எவ்வளவு காலம்தான் நாம் அயோக்கியர்களையே தேர்ந்தெடுப்பது நல்லவர்களே இல்லை என்றாகி விட்டது சரி மாற்றுத்தீர்வுதான் என்ன அதை மக்கள் ஆலோசிக்க வேண்டும்.
   தங்களின் தகவலுக்கு நன்றி

   நீக்கு
 21. புரிய வேண்டியவர்களுக்கு உங்க பதிவு போய் சேர்ந்தால் நல்லது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதைப்படிக்க வேண்டியவர்கள் படிக்கும் சந்தர்ப்பம் குறைவுதானே ஜி

   நீக்கு
 22. அன்புள்ள ஜி,

  காலையிலேயே பதிவு பார்த்தேன்... படிக்கவில்லை. உடனே படித்துக் கருத்திட இயலவில்லை. கவியரங்கத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால்...!
  மதத்தை நம்பாதே... மனித நேயமுடன் வாழவும்...
  நடிகர்களை நம்பாமல்... உன்னை நம்பி வாழவும்...
  அரசியல் ஏமாற்றும் எத்தர்களை இனியும் நம்பாதே...
  நல்ல கருத்துள்ள பதிவு... காணொளி நம்தேசியகீதம் ... அருமை!

  த.ம.15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவியரங்க கவிஞரே வருக
   தொடர்ந்து கருத்துரையை தருக
   மணவையாரின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 23. இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு ஈடு இணை இல்லை என்ற போதும், நடிகர்களின் சம்பளம் அதிகம் என்றும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல என்பதும் சரியல்ல என்பது என் கருத்து. அதைப் போலவே அவர்களை கொண்டாடுபவர்கள் செய்கைகள் தவறு என்று சொல்வதும் அவர்களது தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். [கில்லர்ஜி என்ன சம்பளம் வாங்க வேண்டும் என்பதையும், அதை வாங்கி அவர் அநாதை ஆஸ்ரமதுக்குதான் கொடுக்க வேண்டும் என்பதை ஜெயதேவ் தீர்மானித்தால் சரியாகுமா? ]

  ஒரு இயற்க்கை பேரிடர் வரும் போது தான் மக்கள் சாதி மத வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைகிறார்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. ஜெயதேவ் அவர்களுக்கு....
   ராணுவவீர்ர்கள் போற்றப்பட வேண்டும் என்ற தங்களின் கொள்கைக்கு எனது முதல் வணக்கம் நடிகர்களின் சம்பளம் மட்டுமே நிர்ணயிக்க முடியாத ஒரு செயலாக இருக்கின்றது நிச்சயமாக இது நியாயமற்றதே...

   வடிவேலு ஒருகாலத்தில் ஒரு திரைப்படத்துக்கு இவ்வளவு என்ற நிலையைக் கடந்து ஒரு மணி நேர கால்ஷீட்டுக்கு 2 லட்சம் என்ற இடத்தில் இருந்தார் இன்று நிலையை பார்த்தீர்களா ? எத்தனை மணி நேரங்கள் வீணாகிறது இதற்கு காரணம் அவர் தலையில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்று சொல்வது இயல்புதான் இருப்பினும் இதுவும் இறைவன் செயல்தான் ஆம் வடிவேலு இப்படி வீணாப் போனால்தான், கஞ்சா கருப்பு, சந்தானம், புரோட்டா சூரி போன்றவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்பது விதி எல்லா காலங்களிலும் எல்லா நடிகர்களுக்கும் இந்த விதி எழுதப்படுகிறதோ என்னவோ... தெரியவில்லை.

   ஜெயதேவும், கில்லர்ஜியும் சாதாரண மனிதர்கள் இன்னும் சொல்லப்போனால் கூலிக்காரர்களே நாம் பொது வாழ்வுக்கு வந்த பொது சொத்து அல்ல நாளை எனது மகனே நடிகராக வந்தாலும் இதே கருத்தையே நான் முன் வைப்பேன் நண்பரே அதில் மாற்றமில்லை.

   ஆம் நம்மவர்கள் மதப்பிரச்சினை வந்தால் ஓரினம், அதற்குள் ஜாதிப்பிரச்சினை வந்தால் வெவ்வேறு இனம், நாட்டுப்பிரச்சினை வந்தால் இந்தியன் என்ற ஓர் வட்டம் இயற்கை சீண்டினால் மீண்டும் மனிதநேய இனம் இப்படி பல பிரிவுகளால் வேயப்பட்டதே மனித மனம் என்ற இனம் வருகைக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 24. நல்ல கருத்துள்ள பகிர்வு அண்ணா...

  பதிலளிநீக்கு