தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 27, 2016

என் நூல் அகம் 6


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது பதிவரும், கல்வி அதிகாரியுமான திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய ‘’துரோகச் சுவடுகள்’’ என்ற நூலும் அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

// எவ்வளவு நம்பினேன் ஏமாற்றி விட்டானே ! என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். நம்பினால்தான் ஏமாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிவதில்லை பகையாளி செய்தால் குயுக்கி, பங்காளி செய்தால் துரோகம், எதிரி செய்தால் உத்தி, நண்பன் செய்தால் துரோகம் // என்ற முதல் பாராவிலேயே நம்மை விழிப்புணர்வுடன் படிக்க வைத்து விடும் அந்த நடையழகு என்னை மிகவும் கவர்ந்தது ஒரு இடத்தில் மனிதர்களின் துரோகம் சங்கிலித் தொடராக வருகின்றது எப்படி ? என்பதை ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை ஒன்றில் மனிதன் பாம்பு, கொக்குகளுடன் பேசுவதுபோல் சொல்வது நம்பும்படி இல்லாவிடினும் சொல்லப்படும் காரணங்கள்

(நமது முன்னோர்கள் கூடத்தான் கதைகள் திரித்தார்கள் எமன் உயிரைப் பறிக்க வருவது மாடுகள் கண்களுக்கு தெரிவதாகவும் உடனே மாடுகள் சத்தமிட்டு மனிதர்களிடம் பேசி தப்பிக்க வைத்து விடுவதாகவும் இதனால் கோபப்பட்ட எமன் நண்பர் தனபாலனிடம் திண்டுக்கல் பூட்டு வாங்கி மாட்டின் வாயை பூட்டி விட்டதாகவும் இதன் காரணமாகத்தான் மாடுகள் பேசும் சக்தியை இழந்தன என்றும்) ஆப்பிரிக்கா மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் உள்ளத்தை வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றது.

நூல் முழுவதுமே துரோகங்களைக் குறித்த 300 வருடங்களுக்கு முன்பான வரலாற்றுச் சான்றுகளை நம் கண் முன் நிழலாட வைக்கின்றார் ஆசிரியர் //விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருகிறார்கள் // என்பது போன்ற பல வார்த்தை சொல்லாடலை நான் ரசித்தேன், ரசித்தேன், ரசித்துக் கொண்டே படித்தேன் நாம் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக பகிந்து கொண்டால் இன்றுவரை நண்பனாக இருப்பவன் நாளை எதிரியாக மாற மாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை உணர வேண்டும் என்ற அற்புதமான வாழ்வியல் உண்மையை அழகாக சொல்லி இருக்கிறார் துரோகச் செயல்களின் சம்பவங்களை உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய அரசியல்வரை அனைத்து மதங்களிலிருந்தும் சான்றுகளாக பல விடயங்களை பட்டியலிட்டு இருக்கின்றார்.

 
// கைக்குள் கத்தி வைத்திருப்பவனைக் கண்டு பிடித்து விடலாம் புன்னகைக்குள் பிச்சுவாளை வைத்திருப்பவனை அடையாளம் காண்பதுதான் கடினம் // 1984 அக்டோபர் 31-ம் தேதி 33 குண்டுகளால் சுடப்பட்டு 23 குண்டுகள் உடலைத் துளைத்து வெளியேறி சல்லடையாக்கப்பட்டு குருதி சிதறி உயிர் நீத்த திருமதி. இந்திரா காந்தி அவர்கள் முதல் நாள் 1984 அக்டோபர் 30-ம் தேதி தனது கடைசி பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை கேட்கும் பொழுது மனம் கனத்து விடும் அன்று வருந்தாத நான் உண்மையிலேயே இன்று வருந்தினேன் அந்த வார்த்தைகள்  // நான் இன்று உயிருடன் இருக்கிறேன், நாளை நான் இல்லாமல் போகலாம், என் கடைசி மூச்சுவரை சேவை புரிவேன், நான் இறந்தால் என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலப்படுத்தி ஒருமித்த பாரதத்தை உருவாக்கும் //  இவைதான் அது இதில் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் உயிர் இழப்பைவிட இன்று அந்த இடத்துக்கு வர ஆசைப்படும் திருமதி. குஷ்புவை நினைத்து சுவற்றில் முட்டி வேதனித்தேன் என்றால் நம்புவீர்களா ? ஒரு வி.....சாரி என்பதை தமிழன் மறந்து விடுகின்றானே.

// இந்தியா அந்நியர்களுக்கு அடிமைப்பட்டது வீரக்குறைவால் அல்ல விசுவாசக் குறைவால் என்பதுதான் உண்மை //
// பதவியில் இருப்பவர்களைவிட அவர்களைச் சுற்றி இருப்பவர்களே அதிகம் அதிகாரம் செய்கிறார்கள் //
// தவறு செய்கிற யாரும் தன் தவறை ஒத்துக்கொள்ளாத சமுதாயத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை //
துரோகிகள் வாழும் சமூகத்தில் சில அரிய மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை பட்டியலிட்டு சொல்பவர்களில் நான் படிக்கும் பொழுது எனது நினைவுகளையும் பின்னோக்கி மீட்டிச் சென்றவை இதோ...
// பத்தாண்டுகள் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் மனைவியின் கழிவுகளைக்கூட முகம் சுழிக்காமல் அள்ளிப்போடுகிற கணவன்மார்கள்//
// பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனுக்குச் சிறிதும் கோபப்படாமல் பல ஆண்டுகளாகப் பணிவிடை செய்யும் பத்தினிகள் //

இவை போன்ற உணர்ச்சிகரமான வரிகள்100க்கு100 உண்மையானதே இந்நூலுக்கு மதிப்புரை நீதியரசர் திரு. மு. கற்பகவிநாயகம் அவர்கள் எழுதியுள்ளார் இந்நூலின் விலை ரூ. 80.00 நூல் கிடைக்குமிடம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசிகள் – 26359906, 26251968, 26258410
அற்புதமான நூலை எனக்கு பரிசு தந்த சகோ திருமதி. ஜெயலட்சுமி (கல்வி அதிகாரி) அவர்களுக்கு கில்லர்ஜியின் நன்றி.
இந்நூல் ஆசிரியர் திரு. வெ. இறையன்பு (I.A.S) அவர்களை பாராட்ட எமக்கு தகுதியில்லை ஆகவே அவர் இன்னும் சமூகப் பயனுள்ள நூல்கள் எழுத வேண்டுமென்ற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன் அன்புடன் - கில்லர்ஜி.

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

52 கருத்துகள்:

 1. இறையன்பு அவர்களின் ‘துரோகச்சுவடுகள்’ நூல் பற்றி அருமையாய் திறனாய்வு செய்து பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்! அவரைப்போன்ற அறிவுஜீவிகளை நமது அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தம் உண்டு. இருப்பினும் பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய மனிதர் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. 300 வருடங்களுக்கு முன்பே... உங்களின் Profile ஞாபகம் வந்தது ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா எனக்கும் 300க்கும் பொருத்தம் நிறைய இருக்கு ஜி

   நீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 4. இந்நூலினை வாசித்துள்ளேன்நண்பரே
  நன்றி
  தம+1

  பதிலளிநீக்கு
 5. அழகாய் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுகின்றீர்கள்!
  பண்பட்ட எழுத்தாளர்கள், பக்குவப்பட்ட எழுத்தாளர்கள், திறன்மிக்க எழுத்தாளர்கள் வரிசையில் முன்னணியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றீர்கள்!
  வியக்கவைக்கின்றது உங்களின் எழுத்தாற்ற்ல்...
  நன்றி நூல் விமர்சனத்திற்கு நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நம்ப முடியாத பெரிய வார்த்தைகளை உபயோகப் படுத்துகின்றீர்கள் கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

   நீக்கு
 6. என் அபிமான எழுத்தாளர் இறையன்பு நூலைப்பற்றிய விமர்சனத்தைப் படித்து ரசித்தேன் !
  பதவியில் இருப்பவரை விட அவர் அருகில் இருப்பவர்கள் அதிக அதிகாரம் செய்கிறார்கள் என்பது உண்மைதானே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி 100க்கு100 உண்மையான வார்த்தையே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. தகவலுக்கு நன்றி! நண்பரே......

  பதிலளிநீக்கு
 8. நல்லதோர் வாசிப்பனுபவம்.... நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள ஜி,

  இறையன்பு அவர்களின் துரோகச் சுவடுகள் நூல் அறிமுகம் நன்றாக இருந்தது. திருமதி. இந்திராகாந்தி இல்லம் நினைவிடமாக ஆக்கப்பட்டு அதில் அன்னை இறந்தபொழுது உடுத்தியிருந்த சேலை... குண்டுகள் துளைக்கப்பட்டது முதல் அனைத்தும் அங்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பார்த்தது மிகவும் வேதனையாக இருந்தது.
  வேலியே பயிரை மேய்ந்த விந்தையான நிகழ்வு...!
  நன்றி.
  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையாரின் விரிவான விடயங்களுக்கு நன்றி

   நீக்கு
 10. நல்ல புத்தகப்பகிர்வு கில்லர்ஜி. இறையன்பு அவர்கள் மேலும் இது போன்ற புத்தகங்கள் பல எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசித்ததுண்டு. நல்ல பகிர்வு ஜி

  பதிலளிநீக்கு
 11. இந்நூலை நான் முன்னரே படித்துவிட்டேன். இருந்தாலும் தங்களுடைய விமர்சனம் மூலமாக மறுபடியும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல விமர்சனம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 12. நூலை வாங்கிப்படிக்க ஆவல் தூண்டும் பதிவு. பகிர்விற்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 13. அருமையான நூல் விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  ஜி

  விமர்சனம் அற்புதம் பதிவேற்றிய படந்தான் விளங்கவில்லை.. ஜி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ரூபன் அவர்களுக்கு இந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் உலாவியதே அந்தப் புகைப்படத்தைதான் வித்தியாசமாக கொடுக்கலாம் என்று 160 திர்ஹாம்ஸ் செலவு செய்து மாற்றினேன் அந்தப்படத்தில் உள்ள நால்வரும் பணத்தை அனுப்பி வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

   நீக்கு
 15. வணக்கம் ஜி !

  விசுவாசியைக் குறிஞ்சிக்கும் துரோகியை நெரிஞ்சிக்கும் ஒப்பிட்ட வார்த்தைக்கு நானும் அடிமை ஆகிறேன் நல்லதொரு நூலை வாசிக்க நல்லவொரு தூண்டுகோல் உங்கள் வார்த்தைகள் மிக அருமை தொடர்ந்து தாருங்கள் கிடைக்கும் நேரங்களில் கண்டிப்பாக வாசிக்கிறேன் நன்றி !

  வாழ்க வளமுடன்
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 16. நல்லதொரு விமரிசனம்.. அன்பின் திரு. இறையன்பு அவர்களின் நூல்கள் சிலவற்றை வாசித்துள்ளேன்.. ஆயினும் இது புதிது.. அறிமுகத்திற்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு

 17. அருமையான விமரிசனம் சகோ.

  பதிலளிநீக்கு
 18. திறனாய்வுத் திறமை திறக்காத பலரின் மனக் கதவுகளையும் திறக்கும் நண்பா!
  முன்புபோல் அடிக்கடி விரைந்து வந்து கருத்து தரமுடியாமைக்கு பொறுத்தருள்க!
  நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. எம் மனதினில் பட்ட கருத்தைத் தான் சொன்னேன் நண்பரே! மிகைப்படுத்தி கூறி விடவில்லையே! பெரிய வார்த்தைகள் அல்ல... முகஸ்துதியும் அல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கு சந்தோஷம் நன்றி நண்பரே

   நீக்கு
 20. இறையன்பு அவர்களின் துரோகச்சுவடுகள் நூல் குறித்த விம்ர்சனம் நூலை படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தினை தூண்டும் படி இருப்பதென்னமோ நிஜம்.

  இப்படி ஆளாளுக்கு நூல் படித்து விமர்சனம் செய்து என் வயிறு எரிய வைக்கின்றீர்களே சார்!இம்பூட்டு தூரமிருக்கும் நான் என்ன செய்வது? எனக்கு நூல் பரிசு தரும் நட்புக்கள் யாருமே இல்லையே!சேலை,சுடிதார் தான் இந்தியாவிலிருந்து பரிசா கிடைக்கும்,ஹாஹா!

  நம்பிக்கை துரோகம் பற்றிய கருத்தும், இந்திரா காந்தியின்
  மரணத்துக்கு முன்னரான பேச்சும் எத்தனை நிஜமானவைகள்,இந்திரா காந்தியுடன் குஷ்பூவை கால் நுனி விரல் அளவு கூட ஒப்பிட முடியாதாக்கும்!

  நூல் குறித்த சுருக்கமாயிருந்தாலும் படிப்பவர்களை ஆர்வமூட்டும் பதிவ்க்காக நன்றி!

  இன்னும் எழுதுங்கள்!

  த.ம வாக்கு,
  தாமத பின்னூட்டத்துக்கு மன்னிப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
   குஷ்புவை நான் அன்னை திருமதி. இந்திரா காந்தி அவர்களுடன் இணைக்கவில்லை அது பாவச்செயலும்கூட இவளும்கூட அந்நிலைக்கு வர நினைக்கும் அறியாமையை சொன்னேன் நன்றி

   நீக்கு
 21. திரு. இறையன்பு அவர்கள் மதுரையில் இருக்கும் போது அவரை தேவகோட்டை பாரதி விழாவில் பேச அழைத்துச் சென்றது நானும் என் நண்பனும்... மதுரையில் பேச ஆரம்பித்த மனிதர் கார் ஒத்தக்கடை தாண்டும்போது வழியில் ஏதோ பிரச்சினை என்பதால் மீண்டும் அழகர் கோவில் பாதையில் திருப்பிவிடப்பட்டு சுற்றி தேவகோட்டை வந்து சேரும்வரை நிறைய விஷயங்கள் பேசினார்... எல்லாமே சமூகப் பார்வை... சிறந்த மனிதர்... பின்னர் விழா முடிந்து திரும்பும் போது என்னால் தனியாக போக முடியாது என்னைக் கூட்டிக் கொண்டு வந்த இருவரும் பத்திரமாக என் இருப்பிடத்தில் போய் சேர்க்க வேண்டும் என்று சொல்ல, அவருடன் காரைக்குடி வந்து கண்ணதாசன் மணிமண்டபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வு குறித்த உரையாடல் முடித்து மழையில் குன்றக்குடி போய் அடிகளாரைப் பார்த்து மதுரை சென்று வந்தோம்...

  என் ஹைக்கூக் கவிதைகள் சிலவற்றை வாசித்து புத்தகம் ஆக்குங்கள் என்றார்.

  எனக்கு அவர் எழுதிய கடிதமும் இருக்கிறது இன்னும் பத்திரமாய்....

  சிறந்த அறிவாளி... நல்ல சிந்தனையாளர்....

  அவரின் நூல் குறித்த தங்களின் பார்வை சிறப்பு அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே அவர் சிறந்த படைப்பாளிதான் நண்பரே...

   நீக்கு
 22. நல்ல எழுத்தாளர்,அவரின் பல நூல்கள் வாசித்திருக்கிறேன். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள், நல்ல மனிதரின் நல்ல நூல், தங்கள் பார்வையில் அருமை சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலம்தானே ? தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 23. தங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என வியப்பாக இருக்கிறது சகோ. தொடர் பதிவுகள்...மற்ற தளங்களுக்கு வருகை, நூல் வாசிப்பு...என சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். தேனீயைப் போல....இறையன்புவின் சில நூல்கள் சில வருடங்களுகு முன்பு வாசித்து இருக்கிறேன். அவரின் பேச்சும் எனக்கு பிடிக்கும். மரியாதை உண்டு. நூல் விமர்சனம்...படிக்க தூண்டியுள்ளது சகோ. நன்றாக நூல்களை விமர்சிக்கிறீர்கள்.நன்றி தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இந்த நாட்டில் வாழும் பேச்சலர்கள் அனைவருக்குமே நேரம் இருக்கின்றது நான் எனது நேரத்தை இதில் மட்டுமே செலுத்துகிறேன்.
   மேலும் பிறர் தளங்களுக்கு சென்றால்தான் நமது தளத்துக்கும் பிறரும் வருவார்கள் என்பதை நான் தளம் ஆரம்பித்து 4 வருடங்களாக தெரியாமல்தான் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தேன் பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள் //முன் கை நீண்டால் முழங்கை நீளும்// என்று விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 24. மிக அருமையாக விமர்சனம் செய்கிறீங்க. விமர்சிக்கும் விதத்தில் புத்தகத்தை வாங்கி படிக்கும் ஆவல் வருகின்றது. எனக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கருத்துக்கள் பிடிக்கும். ஒரு தொலைக்காட்சியில் சிந்தனைப்பேச்சு பார்த்தேன்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நல்லதொரு எழுத்தாளர் திரு. இறையன்பு அவர்கள்.

   நீக்கு