தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 16, 2016

திடப்பாண்டியன்


யே... புள்ளே பொன்னழகி ஒங்க அப்பாரு வீட்டுக்கு போனியே.. மச்சானுக்கு என்ன கொடுத்து விட்டாக.... ?
நீங்க கூடத்தான் ஒங்கொக்கா வீட்டுக்கு போனீக... யெனக்கும், எம்புள்ளைக்கும் என்னத்தை கொண்டு வந்தீக ?
யேண்டி யெனக்கும், ஒனக்கும் தோதாடி ? ந்நான் ஒங்க வீட்டுக்கு வந்த மூத்த மாப்புள்ளடி...
ஆங்... பொல்லாத மாப்புளே... மொச்சைக்கொட்டை மாப்புள்ளைக்கு மச்சம் ஒண்ணு கொறைச்சலாம்...
யென்னடி... பழமொழியெல்லாம் ஒரு தினுசா இழுக்கிறே... கில்லர்ஜி சைட்டுக்கு போகாதேனு சொன்னா, கேட்கிறியாடீ.....
ஆங்..... இப்ப அதான் கொனச்சலா போச்சாக்கும் ? புள்ளைக்கு சடங்கு செய்யணுமே அதைப்பத்தி கொஞ்சமாவது யோசனை உண்டா ? குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டைச்சுத்தி வாறீகளே...ந்நாந்தேன் யெங்க அண்ணன் கிட்ட போயி பேசிட்டு வாறேன்....
யாரு ? ஒங்கொண்ணன் கோணவாயன்ட்டே அப்புடி என்னத்தடி பேசிட்டே...
இப்பிடியே பேசிக்கிட்டு திரிஞ்சீக.... ?
என்னத்தே, செஞ்சிருவே.... ?
குடிக்க கஞ்சி ஊத்தமாட்டேன் சொல்லிப்புட்டேன் ஆமா...
நீ ஊத்தாட்டிப்போடீ.... மேலத்தெருவுல ஓந்தங்கச்சி மேகலா வீட்டுக்கு போறேன்...
அவள் எத்தனை நாளைக்கு ஊத்திடுவா ? ரெண்டு நாளைக்கு ஊத்துவா, மூணாம்நாளு மூஞ்சியில வடிச்ச கஞ்சிய ஊத்திடுவாளே...
யேண்டி, அவளுக்கு நீயே சொல்லி வச்சுருப்பே போலயே... ஹூம் நல்ல வீட்டுல பொண்ணு எடுத்தேன்டா சாமி.
மாயவரம் மாப்புள்ளைக்கு வரம் கொடுத்தவரு மாயாண்டியாம் வாய் மட்டும் நல்லாப்பேசுறீக... சம்பாரிக்கத்தான் வக்கு இல்லை.
வர, வர ஒனக்கும் வாய் நல்லாத்தான்டி நீளுது... நீடாமங்களத்துக்காரிக பூராம் இப்பிடித்தானாடி ?
சம்பாரிச்சுக்கொட்டுனா, ந்நாயேன் கேக்குறேன்... ஊருக்காரங்கே சும்மாவா சொன்னாங்கே... சேனாப்பானானு....
ஊருக்காரங்களைவிட நீயே தேளு கொட்டுறது மாதிரிதானடி கேட்குறே ?
ஒங்களைக்கட்டிக்கிட்டு என்ன சொகத்தைக்கண்டேன் ?
யேண்டி ஊருச்சிருக்கிக... எவளாவது ஒன்னை நாக்கு மேலே பல்லுப்போட்டு மலடினு சொல்ல முடியுமாடி ?
அய்யோடா.. பொல்லாத வீரத்தைக் காட்டிப்புட்டீக... ஊரு ஒலகத்துல இல்லாதத... கழுதை கூடத்தான் குட்டிபோடுது....
அப்ப நீ ஒங்கப்பன்ட்டே சொல்லி கழுதையைக்கட்ட வேண்டியதானடி....
எங்க அப்பாரு இப்பவும் அதைத்தான் செஞ்சு இருக்காரு..... ஒதைப்பட்டு சீரழிஞ்சதுதான் மிச்சம்.
அன்னெக்கே எங்க ஆத்தா சொல்லுச்சு... யேந்தம்பி மக மைலாஞ்சியக் கட்டுடானு... நாந்தேன் விட்டுப்புட்டு... இப்படி....
அவளுக்கு வந்த நல்லநேரம் தப்பிச்சுட்டா... மகராசி ய்யேங்கெரகம் ஒங்களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறேன்...
யேண்டி... ஒங்க வீட்டுல இதத்தான் சொல்லிவுட்டாகளா ?
நமக்கு கண்ணாலம் ஆகி பொம்பளைப்புள்ள பெரிய மனுஷி ஆகிட்டாளே இதுவரைக்கும் ஏதாவது சோலிக்கு போய் நாலு காசு சம்பாரிக்க துப்பிருக்கா ?
யேண்டி நமக்கென்ன ? சோத்துக்கு வழியில்லாமலா இருக்கோம் ந்நான் வேலைக்குப்போக... ராஜபோகமா சாப்புட்டுக்கிட்டுதானே இருக்கோம்.
அதெல்லாம் எங்க அப்பாரு வீட்டுலருந்து வருது ஏதோ நீங்க சம்பாரிக்கிற மாதிரி சொல்லுறீக....
அதனால என்னடி நான் உழைச்சாயென்ன ? ய்யேன் மாமனாரு உழைச்சாயென்ன ? எல்லாமே நம்ம பணம்தான் நாளைக்கு அவருக்கு ஒண்ணுனா நாந்தேன் முன்னாடி நிப்பேன்.
ஒங்க கருநாக்குல வசம்பை வச்சுத்தேய்க்க சும்மா இருக்குற எங்க அப்பாரைப்பத்தி பேசுனீங்க.... நடக்குறது வேற சொல்லிப்புட்டேன்.
இப்ப என்னடி தப்பா பேசிட்டேன்....இந்தக் குதி குதிக்கிறே ?
வீட்டுக்குள்ளேயே... இருந்துக்கிட்டு குடைச்சல் கொடுக்காம போங்க புள்ளைக்கு ஸ்கூலு விடுற நேரமாச்சு போயி கூட்டிக்கிட்டு வாங்க...
ச்சே மனுஷனை கொஞ்சமாவது ரெஸ்டு எடுக்க விடுறியாடி....
ஆங்.... ரெஸ்சுட்டு... எடுக்கிறாகளாம் ரெஸ்சுட்டு போதாது 15 வருஷமாத்தான் எடுத்துக்கிட்டு இருக்கீக... போங்க போயி புள்ளையை கூட்டிக்கிட்டு வாங்க...
போகவில்லையெனில் ராத்திரிக்கு சோறு கிடைக்காது என்பதால், எழுந்து டவுசரை மாட்டிக்கொண்டு மகளை அழைக்கப் போனான் சேனாப்பானா என்ற திடப்பாண்டியன்.

சிவாதாமஸ்அலி-
உடம்பை வளர்த்து வச்சதுக்காக.... ஊருக்காரன் சொல்றான்னு கட்டுன பொண்டாட்டியுமா... செனைப்பன்னினு சொல்றது ?

சாம்பசிவம்-
டவுசர் பாண்டியன் திடமாத்தான் இருக்காரு...

34 கருத்துகள்:

 1. திடப் பான்ன்டியன் 'திரவப்' பாண்டியனா இருந்தா பெண்டாட்டி இம்புட்டு பேச்சு பேசுவாளா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவன் திராவகத்தை கையில் வச்சாவது மிரட்டியிருக்கலாமோ...

   நீக்கு
 2. அருமையான பதிவு
  தங்கள் கேள்வி பதில் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 3. திடப்பாண்டியனின் மனதைப் பாராட்டவேண்டும். இல்லாவிட்டால் நிலை திண்டாட்டம்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா... சோறு கிடைச்சாப்போதும் இவனுக்கு கொண்டாட்டம்தான்.

   நீக்கு
 4. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. ரசித்தேன், நண்பரே!
  த ம +1

  பதிலளிநீக்கு
 6. மொச்சைக் கொட்டை மாப்பிள்ளைக்கு மச்சம் ஒன்னு குறைஞ்சா என்னவாகும் கூடுனா என்னவாகும்....?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை மச்சம் கூடுதலாக இருந்தால் திடப்பாண்டியனுக்கு 14 லட்ச ரூபாயில் உடையணியும் வாய்ப்பு கிடைத்திருக்குமோ...

   நீக்கு
 7. வேலை ஏதும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தால் இப்படித்தான் பேச்சு கேட்கவேண்டியிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படி சகடைகள் நாட்டில் நிறைய உண்டுதானே...

   நீக்கு
 8. செனப்பாண்டியன்னா சொன்னா . இல்லை போல் தெரிகிறதே இம்மாதிரி ஊடல் இருக்குமிடம் அன்பும் கூட இருக்குமாம் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 9. சுவாரசியமான உரையாடல். சண்டையும் சச்சரவும் தம்பதியரின் பரம்பரைச் சொத்து :) :) :) கணவன் மனைவி பேசுவதை இவ்வளவு சுவாரசியமா கொடுக்க முடியுமா. வாழ்த்துகள் சகோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி இது போன்ற பதிவுகள் இந்த தளத்தில் நிறைய உள்ளது

   நீக்கு
 10. ரெம்ப திடப்பாட்டாச்சுங்க!
  வீட்டுக்கு வீடு வாசப்படி! ஹேஹே

  பதிலளிநீக்கு
 11. பொண்ணுக்குக் கல்யாணம் வைக்கிறதுக்குள்ளாவது திருந்தட்டும்.

  பதிலளிநீக்கு
 12. திடபாண்டியனுக்குத் திடமான மனதுவரட்டும்...தண்ணியா போயிடாம...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு...

   நீக்கு
 13. சாதாரணமா சண்டை என்று வரும்போது பொண்டாட்டிகளும் புருஷனை நீ வா போ என்று ஒருமையில் பேச ஆரம்பித்து விடுவார்கள். இங்கே நீங்க வாங்க போங்க என்று பன்மையில் பேசுவதால் வேலை இல்லா திடப்பாண்டியன் ஆனாலும் என் புருஷன் என்று மதிப்பு குறையவில்லை. நல்ல மனைவி தான்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா மரியாதை தெரிந்த மனைவிதான்.

   நீக்கு