தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 18, 2016

கருப்புச் சட்டையில், சிவப்பு ரத்தம்

கடந்த மாதம் நடந்த சம்பவம்...

எனது இல்லத்திற்கு அருகிலிருக்கும் உணவகத்துக்கு சாப்பிட நடந்து போய்க் கொண்டிருந்தேன் சமிக்ஞை திடலுக்கு அருகில்... திடீரென ‘’டொம்ம்ம்ம்ம்’’ என்ற சப்தம் கேட்டு திரும்பினேன் சமிக்ஞையில் சிவப்பு விளக்கை கடந்த மகிழுந்தும், குறுக்கே பாய்ந்த மகிழுந்தும், மோதிக் கொண்டன... நான்கு புறமும் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, பலத்த மோதலில் ஒரு மகிழுந்து மையத்தில் திசை திரும்பி நிற்க, மற்றொரு மகிழுந்து வேறு திசையில் கடத்தி நின்றிருக்க இயந்திரத்தின் உள்ளிருந்து புகை மண்டலம் ஒரு மகிழுந்தை ஓட்டி வந்தவன் எஜிப்தியன் மட்டும் அவன் மீண்டும் செய்யக்கூடாத தவறை செய்தான் பொதுவாக விபத்து நடந்தால் காவல்துறை வரும்வரை அப்படியே அதே கோணத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் ஆனால் அவன் மகிழுந்தை உருட்டிக்கொண்டே வேறு திசையில் நிறுத்தி விட்டான். இதற்காக அவனுக்கு அபராதம் உண்டு அது வேறு விசயம் மற்றொரு மகிழுந்தில் வந்தது இந்தியக் குடும்பம் மகிழுந்தை ஓட்டி வந்த கணவன் வெளியேறி பின்புறத்தில் உட்கார்ந்திருந்த மனைவியையும், குழந்தையும் வெளியேற்றி கட்டிப்பிடித்து அழ யாருமே போகாத சூழலில் 24 மணி நேரமும் ஆட்கள் போகாமல் வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் அந்த சமிக்ஞை திடலின் மையத்தில் பச்சை விளக்கு கிடைத்தாலும் எந்த வாகனங்களுமே போகாமல் நின்று கொண்டிருக்க... நான் குறுக்கே ஓடினேன் அவர்களை நோக்கி அந்தச் சகோதரி அழும் குழந்தையை ’’என்டே பொன்னு மோனே’’ எனக்கதற மலையாளியென அறிந்தேன் அந்தச் சகோதரியிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தையை பறித்தேன் மயக்கம் வரும் நிலைக்கு போகவிருந்த அந்த சகோதரியை அணைத்தபடியே மரத்தின் நிழலுக்கு கொண்டு வந்து விட்டேன். 

இதில் முதல் கட்டபார்வையாளர்களுக்கு மகிழுந்தை ஓட்டி வந்தவனும், அந்தப் பெண்ணின் கணவனும் நான்தான் என்பது போல் தோன்றிட்டு குழந்தையின் சட்டையிலும், அந்தப் பெண்ணின் முகத்திலும் குருதி. கணவன் பயந்து உட்கார்ந்து விட்டான் காரணம் மரணத்தின் விளிம்புவரை சென்று வந்தவனுக்கு அப்படித்தான் இருக்கும்.
(அந்தச் சூழலிலும் அவர்களது மகிழுந்தின் SRS AIRBAG Supplemental Restraint System ஊதுகூண்டுகள் இரண்டு வெடித்து இருந்ததை கவனித்தேன்) 
குழந்தையின் சொக்காயை கழற்றினேன், ஒருவர் தண்ணீர் குப்பி வாங்கிவர குழந்தையின் மேலிருந்த குருதிதையும், அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த குருதிதையும் துடைத்து கழுவினேன் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க முனைந்தபோது கூடாது என்று ஒருவர் சொல்ல கூட்டத்தில் ஒரு ஆங்கிலேய பெண் நானொரு மருத்துவர் ஏதாவது உதவி வேண்டுமா ? என்றார் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை குருதி வந்தது கணவனுக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து... மனைவியையும், குழந்தையையும் கட்டிப்பிடித்ததில் ஒட்டிக்கொண்டதே வேறொன்றும் இல்லை ஆனால் இரண்டு மகிழுந்துகளும் கண்டம் அது உறுதி. சிறிது நேரத்தில் நோயாளி விரைவூர்தியும், காவல் துறையும் வர... கூட்டம் கூடியது விசாரிக்கும் பொழுது எஜிப்தியர்கள் இரண்டு பேர் மகிழுந்தை ஓட்டி வந்தது தொப்பி போட்டிருந்த பெரிய மீசைக்காரன் ஒருவன் இந்தியக்காரன் என காவல் துறையினரிடம் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டேன் இந்தக் கூட்டத்தில் மீசையும், தொப்பியும் அடையாளம் காண்பது எளிது தொப்பி பலரும் போட்டிருக்கலாம் பெரிய மீசை கண்டிப்பாக நாம் மட்டுமே... இனி நின்றால் சரியாக வராது என நகர்ந்து விட்டேன் வீட்டுக்கு வந்து பார்த்தால் எனது கருப்பு சட்டையில் சிவப்புக்குருதி இருப்பினும் மறுநாள்வரை காவல் துறையில் இருந்து கைப்பேசி வரலாமென காத்திருந்தேன் அழைத்தால் எப்படிச் சொல்லலாம் என ஆலோசித்து வைத்திருந்தேன்.

நான் செய்த தவறு என்ன ?
அந்த இடத்திற்கு காவல் துறையினர்களைத் தவிர மற்றவர்கள் போககூடாது மேலும் தண்ணீரைக் கொண்டு குழந்தையையும் அந்தப் பெண்ணையும், குருதிக் கறையை கழுவி விட்டேன்.

சரி இது அவர்களுக்கு எப்படித் தெரியும் ? 
சமிக்ஞை திடலில் நான்கு புறமும காணொளிக்கருவி (Video Camera) இருக்கிறது விபத்து நடந்தது எப்படி... யார் ? குற்றவாளி எல்லாம் அவர்கள் நேரலையில் (LIVE) பார்த்துக் கொண்டு இருப்பார்கள், எனது அங்க அடையாளங்களை வைத்து எனது I.D எடுத்து அதன் மூலம் எனது கைப்பேசியில் அழைத்து வெகு சுலபமாக மறுநொடியே பிடித்து விடலாம் இருப்பினும் நான் குற்றவாளி அல்ல, ஆனால் விசாரணை தேவைப்பட்டால் மட்டுமே இந்த வகைகள் இப்பொழுது தேவையில்ல என்பது ஊர்ஜிதமாகி விட்டது சந்தோஷம்.

இவ்வளவும் அறிந்திருந்தும் நான் ஏன் அங்கு ஓடினேன் ? என்னை அறியாமல் என்னுள் இருக்கும்.

 மனிதநேயம்.
இது சட்டப்படி குற்றமாகலாம், தர்மப்படி நியாயமாகலாம்.
சட்டத்தின் தண்டணையை மனிதன் கொடுக்கின்றான்.
நியாயத்தின் பலனை நாளை இறைவன் கொடுக்கலாம் ? ? ?
நட்பூக்களே.... நான் நடந்து கொண்டது சரியா...  தவறா ?

குறிப்பு – பழைய காலங்களில் விபத்துக்கள் நடந்தால் வாகனங்கள் தப்பித்து விடும், மனிதர்கள் இறந்து விடுவார்கள், இன்றைய காலங்களில் வாகனங்கள் கண்டமாகி விடுகிறது மனிதர்கள காயங்களோடு பிழைத்துக் கொள்கிறார்கள் இது எப்படி ? இதனைக் குறித்த பதிவை விரைவில் தருகிறேன் – கில்லர்ஜி.

குருதி – Blood
மகிழுந்து – Car
சொக்காய் – Shirt
சமிக்ஞை – Signal
ஊதுகூண்டு – Balloon
நோயாளி விரைவூர்தி – Ambulance
என்டே பொன்னு மோனே – My Gold Son

56 கருத்துகள்:

 1. நீங்கள் செய்தது சரியே! நெடுஞ்சாலையில் செல்லும் போது விபத்து நடந்தாலோ, வாகனம் பழுது பட்டாலோ அவ்வாகனத்தில் இருப்போரை வெளியேற்றி வெகு தூரமாய் நாமும் நகர்ந்து செல்வது தான் முதல் நடவடிக்கை யாக இருக்க வேண்டும்.இம்மாதிரி சம்பவங்களில் சட்டங்கள் மனிதர்களுக்காக தானே அன்றி மனிதர்கள் உயிரை போக்க அல்லவே. உயிரா உணர்வா எனும் போது எங்கே உயிருக்கு தான் முதலிடம் அல்லவா?

  நீங்கள் செயல்பட்ட விதம்சரியே. நானாயிருந்தாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பேன்.ஆனால் பெரும்பாலோனோர் காவல்துறை விசாரிப்புக்களுக்கு பயந்து கண்டும் காணாமல் போய் விடுவார்கள்.

  யாரோ தானே? நமக்கென்ன எனும் செல்லும் போது நாளை நாமும் அதே நிலையில் இருக்கும் படி ஆகும் என சிந்தித்தால் அங்கே மனிதாபிமானம் மட்டுமே வெல்லும்.

  அப்புரம் இப்போதைய தொழில் நுட்பத்தில் நெடுஞ்சாலைப்போக்குவரத்துக்கள் உட்பட சிறு வீதிகளும் ராடார் ஷ்ட்டலைட் உதவியுடன் கண்காணிக்கப்படுவதால் காவல்துறையை யாரும் ஏமாத்த முடியாது. தாமதமானாலும் அவர்கள் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

  விபத்து நேரம் உயிராபத்துக்கள் குறைந்த காரணம்.. ஏயார் பேக்,, சீட் பெல்ட்அணிவது போன்றவைகளோடு வாகனங்களின் தயாரிப்பும், தரமும் தான் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான விளக்கவுரைக்கு நன்றி
   தாங்கள் சொன்ன காரணமும் இதில் உள்ளது.

   நீக்கு
 2. வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது ,அதுதான் உண்மையான உதவி ,நீங்கள் செய்தது அதைப் போன்றதே !
  உங்களின் மனிதாபிமானத்துக்கு ஒரு 'அரச வணக்கம்' (ஹிஹி ,வேறொன்னுமில்லை ராயல் சல்யூட் என்பதை தமிழில் சொல்லிப் பார்த்தேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சல்யூட் வித்தியாசமாகத்தான் இருக்கு...

   நீக்கு

 3. நீங்கள் நடந்து சாப்பிட போன போது காரை ஒட்டி வந்தவர்கள் உங்களது மீசையைக் கண்டு பயந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று போலீஸில் சொல்லி இருக்கிறார்கள் என்று எனக்கு தகவல் வந்து இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரே நீங்கள் தமாஷுக்காக சொன்னாலும் இது கடந்த 20 வருடங்களில் பலமுறை நடந்து இருக்கின்றது சாலையில் நடந்து போகும் பொழுது கார். மோட்டார் சைக்கிள், பாதசாரிகள் பலரும் என்னைப் பார்த்துக் கொண்டே போய் இடித்து இருக்கின்றார்கள்.
   ஆணோ, பெண்ணோ யார் பார்த்தாலும் அவர்கள் பார்வையை எடுக்கும்வரை நான் எடுக்கமாட்டேன் (பார்ப்பதற்கு காரணம் இந்த நாட்டில் எப்படி இவ்வளவு பெரிய மீசைக்காரன் என்பதே)
   இது எனது நண்பர்கள் பலருக்கும் தெரியும் ஒருமுறை நண்பர்களோடு சிக்னலை கடக்கும் பொழுது பைக்குகாரன் ஒருவன் என்னையே பார்த்துக்கொண்டு போய் காரில் இடித்து விட்டான் நான் நகன்று விட்டேன் காரணம் விபத்துக்கு காரணம் நான்தான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் நண்பன் பக்கத்தில் நின்று இருக்கின்றான் பைக்குகாரன் என்னால்தான் இப்படி என்று என்னை திட்டி இருக்கின்றான் நண்பன் வந்த சொன்ன பிறகு தெரிந்து கொண்டேன் தெரியாமல் எத்தனை பேர் திட்டினார்களோ.... என்று நினைத்துக் கொண்டேன் இது பலமுறை கார்க்காரனும் உண்டு இதில் எஜிப்தியர்தளே,,, அதிகம்.

   நீக்கு
 4. உங்களின் மனித நேயம் பாராட்டதக்கது....நீங்கள் வசிக்கும் நாட்டில் சட்டம் எப்படி எண்ரு தெரியவில்லை ஆனால் மேலை நாடுகளில் இப்படி நாம் போய் உதவி செய்யக் கூடாது அதற்கு காரணம் விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்யும் பயிற்சியை நாம் கற்றுக் கொண்டதுஇல்லை உதவப் போய் கடைசியில் அது உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்பதால் அதை இங்கு செய்யமாட்டார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே எல்லா நாட்டிலும் இப்படித்தான் இருக்கின்றது மக்கள் பயப்படுவதற்கு காரணம் நாளை நாமும் கோர்ட்டுக்கு அலைய வேண்டியது வரும் என்பதே இதனால்தான் மனிதநேயம் செத்துக்கொண்டு வருகின்றது.

   நீக்கு
  2. நெடுஞ்சாலைகளில் செல்லும் போது வாகனவிபத்தில் பாதிக்கப்பட்டால் வாகனம் புரண்டால் அடுத்த சில நிமிடங்க்ளில் எரியும் வாய்ப்பும் உண்டு. அப்படியான பொழுதினில் நமக்கு கிடைக்கும் சில நிமிடங்கள் கோல்டன் நிமிடங்கள் என்பார்கள். அருகில் இருப்போர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து அதனுள் இருப்போரை வெளியே இழுத்து வெகு தூரமாய் ஓடிசெல்ல வேண்டும். எங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இப்படி காப்பாற்றப்பட்டு அவர்கள் கண் முன்னே அவர்கள் வந்த வாகன்ம் எரிந்ததும் அதிலிருந்து மீண்ட ஒருவர் ஆறுமாதத்தின் பின் விபத்து நடந்த நேரம் நெஞ்சில் பட்ட அடியை சரியாக கவனிக்காமல் விட்டதனாலும் இறந்து போனார்.

   அதே நேரம் வாகனத்துக்கு பாதிப்பில்லாமல் பயணித்த மனிதர்களுக்கு முதுகெலும்பில் அடிபட்டு இருந்தாலோ மூச்சு பிரச்சனை இருந்தாலோ அவர்களை நகராமல் அப்படியே அம்புலன்ஸ், தீயணைப்பு படை வரும் வரை வைத்திருக்க வேண்டும். அவர்களாக வெளியே வரக்கூடிய சூழலில் இருந்தால் வெளியே வரலாம்.

   ஷோ எப்படியான பாதிப்பு என்பதை கொண்டு தான் உடனடி உதவியா இல்லையா என முடிவெடுக்க வேண்டும்.

   இவை அனைத்தினையும் விட முக்கியம் விபத்தினை கண்ட அடுத்த நொடி காவல்துறைக்கு சரியான தகவலை தருவது. இதில் விசாரனைக்கு உட்பட்டாலும் நேரில் கண்ட சாட்சியாக நாம் இருப்பதனால் விபத்துக்குரிய காப்புறுதிகள் இலகுவாக பெற உதவியாக இருக்கும்,

   நீக்கு
  3. விரிவான விளக்கம் அதே நேரம் ஃபுல் ஆட்டோமேட்டிக் கார் மோதிய வேகத்தில் கதவுகள் அனைத்தும் லாக் ஆகிவிடும் அப்பொழுது கார் எரிந்தால் உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாது விபரமானவர்கள் சிலிண்டரை எடுத்து அடித்து கண்ணாடியை உடைக்கலாம் இப்படி வந்தவர்களும் உண்டு மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
  4. இப்போது வரும் காரில் இந்தமாதிரி பாதிப்பு நேரம் கார்க்கதவுகள் பூட்டப்பட்டால் உடைப்பதற்குரிய சாவி போன்ற சுத்தியலும் உண்டு. உள்ளே இருப்பவர்கள் அதை எடுத்து கண்ணாடியை உடைக்கலாம். இது உள்ளே பாதிக்கப்ட்டு சுய நினைவுடன் இருப்போருக்குரியது. வாகனங்களில் எப்போதும் முதலுதவிப்பெட்டியும், அவசர, ஆபத்தைக்குறித்தும் ஆரஞ்சு வர்ண கோட்டும் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்வோம். வாகனத்தினை விட்டு இறங்கியதும் உடனடியாக அந்த கோட்டை அணிய வேண்டியது முக்கியம். அப்போது தான் எதிரில் வரும் வாகனங்கள் தூரத்திலிருந்தே ஏதோ ஆபத்து என்பதை இனங்கண்டு கொள்ளும்.

   நீக்கு
  5. சுத்தியல் விபரம் நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன் ஆனால் இதுவரை பார்த்ததில்லை நல்ல தகவல் தந்தீர்கள் நன்றி
   முந்தைய பதிவு திடப்பாண்டியன் படியுங்கள் திடமான தைரியம் கிடைக்கலாம்.

   நீக்கு
  6. அதே போல் அவசர காலத்தில் கார்க்கண்ணாடிகளை உடைக்கவெனவே சின்ன சின்ன புள்ளிகளில் வட்டம் இட்டு அடையாளமும் காட்டி இருப்பார்கள். எங்கள் இரு வாகனத்திலும் இவ்வசதியை நான் அவதானித்திருக்கின்றேன். அந்த அடையாளத்தின் நடுவில் சுத்தியல் போன்ற கூரான ஆயுதத்தால் அடித்தால் கண்ணாடி சிதறாமல் துண்டாகுமாம். .தூரப்பயணங்களுக்கு வாகனங்களை பயன் படுத்தும் போதும் குறிப்பிட்ட கிலோ மீற்றர் ஓடிய பின்னும் கராஜ் கொண்டு போய் சின்ன சேவிஸ்,ஆயில், தண்ணீர் ஷாம்பூ போதுமாய் இருக்கின்றதா என பார்த்து விடுவதால் சோதித்துப்பார்க்கும் அனுபவம் இன்னும் நேரவில்லை

   நீக்கு
  7. வருக தங்களுக்கு கடைசிவரை சுத்தியல் எடுக்கும் அந்த அனுபவம் வரவேண்டாம் என்று பிரார்த்திக்கின்றேன்.

   நீக்கு
 5. மனித நேயமே பெரிது. எனினும் இந்த மாதிரிச் சூழ்நிலையில் நான் இப்படிச் செய்வேனா என்றால் துணிய மாட்டேன் என்பதுதான் பதில்! Great.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான கருத்தை சொல்ல நினைத்தமைக்கு நன்றி நண்பரே வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. நீங்கள் செய்தது. சரியே. ஒரு வேளை காவல்துறை உங்களைக் கூப்பிட்டாலும் விபத்துக்குள்ளான வண்டியிலிருந்து உங்களால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்ட அந்த அம்மையார் உண்மையை சொல்லி உங்களுக்கு உதவக்கூடும். தங்களின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையே எனக்கு பிரச்சனை வந்தால் என்னைக் காப்பாற்ற வேண்டியது அவர்கள் மட்டுமே...

   நீக்கு
 7. தாங்கள் செய்தது சரியான செயல்தான் நண்பரே
  மனிதநேயமிக்க செயல்
  வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 8. வணக்கம்
  ஜி
  இப்படியான செயல் செய்வது ஆயிரத்தில் ஒருவா்தான்... வாழ்த்துக்கள் இனி தொடர்வேன் வலைப்பக்கம் த.ம 6
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி தங்களது தமிழ்க் கவிதையை வெளியிடுவதற்கு மூன்று நொடிகளுக்கு முன்பே படித்து கருத்துரை பதிந்தேன்

   நீக்கு
 9. நீங்கள் செய்தது சரியே!
  த ம 7

  பதிலளிநீக்கு
 10. நல்ல பணி செய்தீர்கள் தோழர் ...
  தம +

  பதிலளிநீக்கு
 11. நீங்கள் செய்தது சரி +பாராட்டத் தக்கது . ஆனால் நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் செய்திருப்பேனா ....... 4௦% சந்தேகம் தான் .,ஏனெனில் உதவி செய்து விட்டு தேவை இல்லாத .......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இங்கும் இதை செய்யக்கூடாது என்பதே சட்டம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அங்குதான் கில்லர்ஜி நிற்கிறார்...!

  பதிலளிநீக்கு
 13. பாராட்டத் தக்க செயல் அண்ணா...
  உதவி செய்தால் உபத்திரம் வருமே என்ற பயத்தால் பலர் கடந்து விடுவர்... குழந்தை என்னும் போது நம் மனம் உதவத்தான் துடிக்கும்...

  நல்ல செயலே... வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் குழந்தையே காரணம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. மனம் இருக்கும் வரைக்கும் மனிதநேயம் மலர்ந்து கொண்டேயிருக்கும்..

  தாங்கள் செய்தது (அங்குள்ள சட்டத்தின்படி)சரியா தவறா என்பதில் சந்தேகம் இருப்பினும் -

  தர்மத்தின்படி - மிக சரியே!..

  யாராக இருந்தபோதும் சரி -
  தர்மம் தலைகாக்கும்.. தவறுவதேயில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜி உண்மையை அழகாக விளக்கினீர்கள்.

   நாம் பேசியபடி நேற்று 17.11.2016 நான் புறப்படவில்லை இன்னும் எனது கணக்குகள் தீர்க்கப்படவில்லை காலையில்தான் கவனித்தேன் தங்களது நள்ளிரவு போன் வந்ததை நான் தூங்கி விட்டேன் ஜி தங்களை அபுதாபி விமான நிலையத்தின் உள்ளே சந்திக்கலாம் என்ற நமது திட்டம் கனவாகி விட்டது

   நீக்கு
 15. பெயரில்லா11/18/2016 5:01 PM

  தாங்கள் செய்தது சரி ஆனால் எதையும் தொட்டு அடையாளங்களைக் கலைத்தல் தவறு தான்
  இதுஅவரவர் நிலையில் இருந்தால் தான் புரியும் சகோதரா.
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ இருப்பினும் நான் தொட்டவர்கள் காயம்கூட படாதவர்கள்தானே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. தங்கள் பணி சிறந்தது
  தவறேதும் கிடையாது
  ஆனால், அந்த நாட்டு
  காவற்றுறை பற்றி
  எனக்குத் தெரியாதே!

  பதிவின் கீழே
  அகரமுதலி (அகராதி)
  இட்டதிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. மதுரைத்தமிழன் சகோ சொல்வது போல் காரணம் இருந்தாலும், நீங்கள் செய்தது சரியே.. பாவம் அக்குடும்பம்.
  தமிழ்ச்சொற்கள் அருமை சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அந்தக்குழந்தை கதறியதால் மனம் பதறி விட்டது எனக்கு நாளை நமக்கும் இப்படி நடக்காது என்பது நிச்சயம் இல்லையே....
   ஆம் சகோ தமிழ் வார்த்தைகளில் எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்

   நீக்கு
 18. உயிரை காப்பவர்தான் மனிதர்...அந்த மனிதராகத்தான் நடந்து கொண்டு நான் மனிதன் என்று மனிதர் என்று சொல்லிக்கொண்டு உலாவுகின்ற பிண்டங்களுக்கு உணர்த்தியிருக்கிறிர்கள். நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துப்பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 19. அந்த ஊரின் சட்ட திட்டங்கள் தெரிந்திருந்தாலும் யாருக்கோ ஆபத்து, குறிப்பாக குழந்தைக்கு என்றவுடன் ஓடிச் சென்று உதவி செய்த உங்கள் மானுடம் வென்றிருக்கிறது. அங்கும் இதை ஒப்புக் கொள்வார்கள்.
  படத்தில், தேவகோட்டை, என்றிருக்கிறதே..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி அன்று புகைப்படம் எடுக்கமுடியவில்லை ஆகவே இந்த புகைப்படம் யாருமே கவனிக்காத ஒரு விடயத்தை கவனித்து விட்டீர்களே.... ஹாஹாஹா ஸூப்பர்

   நீக்கு
 20. நீங்கள் நடந்துகொண்ட விதம் பாராட்டப்படவேண்டியது. தங்களது மன உணர்வுகளைப் பதிந்த முறை நீங்கள் பட்ட வேதனையை வெளிப்படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 21. மனித நேயத்தோடு தாங்கள் உதவியது சரியே!

  பதிலளிநீக்கு
 22. எனக்கும் தங்களின் செயல் சரியானதுதான் என்று தோன்றுகிறது, ஆனால் அரபு நாடுகளில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் முற்றிலும் வேறுபட்டவை, தங்களுக்குத் தெரியாததல்ல!! மனிதநேயம் மறைந்து வரும் இன்றைய நாட்களில் இதுபோன்ற நற்செயலைச் செய்ய யாரும் முன்வருவதில்லை. சிலருக்கே தைரியம் வரும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 23. தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட உதவியைச் செய்திருக்கிறீர்கள். எல்லோரும் செய்வார்களா என்பது சந்தேகமே! அனைவருக்கும் உடல் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 24. வெளிநாடுகளின் சட்டம் அப்படித்தான். இருந்தாலும் நீங்கள் செய்ததே சரி! ஏனென்றால் அங்கு பதிந்திருந்த விழுமியத்தில் தெளிவாகத் தெரிந்திருக்கும் வண்டியை ஓட்டி வந்தவர் நீங்கள் அல்ல என்பது. அவர்களும் மனிதர்கள்தானே. உதவிதான் செய்திருக்கிறீர்கள் என்பதால் விட்டிருக்கலாம். ஆனால் நம்மூரில் இது போன்ற சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலேயே யாரும் முன்வருவதில்லை...சட்டம் போலீஸ் இங்கு சரி விடுங்கள் உங்களுக்குத்தான் தெரியுமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு