தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 22, 2017

காதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்


காதல் வயப்படும் ஆணோ, பெண்ணோ முதலில் பார்வைகளால் வசப்படும்போது இது நமக்கு சரியாக வருமா ? என்று இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை வயதின் கோளாறு காரணமாக தாறுமாறாக முடிவெடுக்கின்றார்கள் இதற்கு இன்றைய ஊடகங்கள் முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றது முதலில் ஆணோ, பெண்ணோ காதலிக்க தொடங்கும் முன் தைரியமாக தனது பெற்றோர்களிடம் நான் எனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்தால் எனக்கு திருமணம் செய்து வைப்பீர்களா ? எனக்கேட்டு வைத்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களை மனதில் வாங்கிய பிறகே காதலைப்பற்றிய சிந்தனைக்கு வரவேண்டும்.

இது படிப்பவர்களுக்கு கொஞ்சம் புதுமையாக, ஏன் ? நான் முட்டாள்த்தனமாக எழுதியிருப்பதாக கூட தோன்றலாம் இன்றைய காதல்கள் எத்தனை சதவீதம் கல்யாணம் வரை சென்று வெற்றியடைகிறது 5 சதவீதம் இருக்குமா ? ஆனால் மற்றவை எல்லாம் தோல்வியில் மட்டுமல்ல, பல உயிர் இழப்புகளோடு தோற்றுப்போகிறது இந்தக்காதல்கள் வளர்ந்து வருவதற்க்கு முக்கிய காரணவாதிகள் திரைப்படத்திறையினர் ஆம் அதில் வரும் காதலர்கள் கண்டிப்பாக 99 சதவீதத்தனர் வெற்றி பெறுவார்கள் ஒரு சதவீதக்காதல் மட்டும் தோற்றுப்போவதை சில சமூக சிந்தனையுள்ளவர்கள் அதனை வலியுறுத்திக் காண்பிப்பார்கள் இவர்கள் திரைப்படக்காதலை கண்டே காதல் கொள்ளத் தீர்மானிக்கின்றார்கள் அது ஒரு வியாபாரிகள் கூட்டம் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராது என்பது பலருக்கும் புரிவதில்லை. 

வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு கல்லூரிக்குப்போய் வருவதுபோல் திரைப்படங்களில் காண்பிக்கின்றார்கள், பெற்றோர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதையும் செய்து காண்பிக்கின்றார்கள் இந்த வகையான திரைப்படங்கள் அதிக சதவீதம் என்பதை யாரும் மறுக்க முடியுமா ? திரைப்படங்களில் காதலர்கள் மரத்தை சுற்றி வந்து பாட்டுப்பாடுவார்கள், 5 நிமிடத்தில் உலகத்தையே சுற்றி வருவார்கள், காதலியை மீட்க காதலன் கையில் ஆயுதங்களுடன் வரும் 100 திடகாத்திரமான ரவுடிகளையும் பந்துபோல எத்திவிட்டு அடிப்பான் (அவன் வத்தலாக இருந்தாலும்கூட) நடைமுறை வாழ்வில் என்ன ? நடக்கின்றது பார்க்கத்தானே செய்கின்றோம் சரி தொடங்கிய விடயத்துக்கு வருகிறேன். காதலிக்க பெற்றோரிடம் அனுமதி கேட்க முடியுமா ? அது சங்கோஜத்தை உண்டு பண்ணாதா ? என்று கேட்போரே...

காதலித்து சண்டையும், சச்சரவுகளும், அவமானங்களும், பெற்றோர்களை காவல் நிலையம், நீதிமன்றம் வரை இழுத்தடிக்கும்போது அவர்கள் முகத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள் ? சிரித்துக்கொண்டா ? இல்லையே குற்ற உணர்வால், தலையை குனிந்து கொண்டு, எதிரியைப்போல, பார்ப்பதைவிட, காதலிக்கும்போதே அப்பாவிடம் விளையாட்டாக கேட்பதுபோல சிரித்துக் கொண்டே கேட்டு அதன் பின்புலனை முகத்தைப்பார்த்தே கணித்து விடலாமே... பிறகு அதற்குத் தகுந்தாற்போல முடிவு எடுக்கலாமே... சரி உங்களுக்கு திருமணம் செய்து வைத்து உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கத்தானே நமது பெற்றோர்கள் நம்மை கண்ணை இமை காப்பதுபோல் வளர்த்தார்கள் (இது 99 சதவீதம் பெற்றோர்கள்) 

உனக்கு பெயர் வைக்க வேண்டிய தருணத்தில் பெயர் வைத்து, காது குத்த வேண்டிய தருணத்தில் காதுகுத்தி, பள்ளிக்குப்போக வேண்டிய தருணத்தில் பள்ளியனுப்பி, நீ கேட்ட விதத்திளெல்லாம் உடை வாங்கி கொடுத்து, கல்லூரிகளில் பணத்தைக்(கொ)கட்டி, சொந்தங்களுக்கு அறைகூவலிட உனக்கு சடங்கு என்ற சம்பிரதாயம் வைத்தபோதே... நமது அப்பா நமக்கு, நல்ல வரனைப் பார்த்து உனக்கு திருணம் செய்து வைக்கப்போகிறார் என்பது புரியவில்லையா ? இத்தனை காலம் உனக்காக கஷ்டப்பட்ட பெற்றோர்களை சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழமுடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் சிந்தித்துப்பாருங்கள் ஆண் - பெண் பாலரே...   ஆணோ, பெண்ணோ, காதலிக்கத் தொடங்கும்முன் கவனிக்கப்பட வேண்டியவை என்ன ? என்பதை பார்ப்போம்.

சாதிகள் இல்லையடி பாப்பா இது பாடத்தில் வேண்டுமானால் செல்லம்மா புருஷன் சொல்லிவிட்டு போயிருக்கலாம் நடைமுறை என்ன ? மேடையில் வாய் கிழியப்பேசுவார்கள், ஒரு உண்மைச்சம்பவம் சொல்கிறேன். ஆந்திராவில் மிகப்பெரிய திரைப்பட நடிகர் அவர் திரைப்படங்களில் ஜாதி மதம் கடந்து காதல் மனம் செய்திருக்கிறார், ஜாதி மத வேடதாரிகளை அடித்து துவம்சம் செய்திருக்கிறார், காதலிப்பவர்களை ஜாதி இடையூராக இருப்பதை எதிர்த்து திருமணம் செய்து வைத்திருக்கின்றார் இது திரைப்படத்தில். ஆனால் நடைமுறை வாழ்வில் அவருடைய மகள் காதலில் சிக்கிக்கொண்டார் உயிருக்கு உயிராக காதலிக்கின்றார்கள் இருவருமே. நடந்தது என்ன பார்ப்போமா ?

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடு கில்லர்ஜியின் அகராதியில் கிடையாது இருப்பினும் சமூகம் சொல்கின்றதை இங்கே விவரிக்கின்றேன். ஆம் அந்த பெரிய நடிகர், சமூகத்தில் தாழ்ந்த ஜாதியாம், அவருடைய மகள் காதலித்ததோ, உயர்ந்த ஜாதி ஆண் மகனை இருவருமே உயிருக்குயிர் என்பார்களே அப்படியாம். இருவரும் தந்தைக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவிட, நடிகர்களின் அல்லக்கைகள் என்று இதிகாசத்தில் கூறப்பட்டிருக்கின்றதே அவர்களால் ஆண்மகனின் தாய்-தந்தையர்க்கு என்ன ஆனது ? 

நான் சொல்லவும் வேண்டுமா ? எத்தனை திரைப்படங்கள் பார்த்து இருப்பீர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சல்லடை வைத்து தேடினார்கள் யாரை இருவரையுமே... காரணம் என்ன ? அவன் ஜாதியில்தானே உயர்ந்தவன் பொருளாதாரத்தில் உயராதவன் பொருள் உயர்ந்த தனது மகளை தாரமாக்க ஆசைப்படலாமோ.... இதுதான் இன்றைய நிலை, இப்படிப்பட்ட நடைமுறை உண்மையை கண்டும் காணாமல் இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடக்கும் கற்பனைக்கு எட்டாத விசயங்களை ஆசைப்படுவது தவறில்லையோ....

சரி, காதலிக்க தொடங்கும் முன் நமது காதல் வெற்றி பெற்றேதீர வேண்டுமென கருதுபவர்கள் கீழ்காணும் பட்டியலை காண்க, இதைக் கடைப்பிடித்தால் சிறிய அளவில் நமது காதல் வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

எதிரணி நமது மதமா ?
நமது மதமே, சரி நமது ஜாதியா ?
நமது ஜாதியே, சரி சொந்தமா ?
சொந்தமே பொருளாதாரத்தில், வித்தியாசம் உண்டா ?
இல்லை சரி, கௌரவமான குடும்பமா ?
ஆம் சரி, இரு குடும்பத்தாருக்கும் விருப்பம் உண்டா ?
ஆம் சரி, அவர்கள் வரதட்சினையை விரும்புவார்களா ?
இல்லை சரி, படிப்பில் ஏற்றத்தாழ்வு உண்டா ?
இல்லை சரி, வீட்டில் ஜாதகத்தில் நம்பிக்கை உண்டா ?
இருவீட்டிலும் இல்லை சரி, கிளிசோஸியம் பார்த்தீர்களா ?
இருவரும் பார்த்தோம் சரி வீட்டில் ஜாதகம் பார்த்தார்களா ?

ஆம் பதினொறு பொருத்தமாம், சோலந்தூர் சோஸியர் 
சோனைமுத்துவின் கணிப்பு... 
ஹை அப்புறம் என்ன.... தொடுங்கள் காதல் கணையை வெற்றி உமதே...
.நண்பர்களே, நண்பிகளே மேலே கூறியவை கில்லர்ஜியின் எழுத்தில் பொருந்தியது நடைமுறையில் பொருந்தினால் நலமே

நான் ஏற்கனவே எழுதிய எனது பதிவு
இதில் சொன்னபடி பெற்றோர்கள் குழந்தைக்ளுக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள் அப்படி நினைத்தால் அவர்கள் பெற்றோர்களே... அல்ல...

56 கருத்துகள்:

  1. கல்யாணத்துக்குத்தான் பொருத்தம் பார்ப்பார்கள். காதல் பண்ணவும் பொருத்தம் பார்க்கணுமா? புதுமையான யோசனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் சொல்வது காதல் செய்வதற்கு மட்டுமல்ல... காதலித்தால் முழுமையான வெற்றி பெற... வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. பெற்றோரின் விருப்பத்தைக் கேட்ட பின்பே காதலில் இறங்கோணும் என சொல்லியிருக்கிறீங்க.... உண்மைதான், ஆனா இதைக் கொஞ்சம் நான் மாத்திச் சொல்றேன்,

    பிள்ளைகள் பருவ வயதுக்கு வரும்போதே, அவர்களை அழைத்துப் பெற்றோர் நம் குடும்ப முறைகளையும் நமக்கு எப்படியான திருமணங்கள் ஒத்துப்போகும் என்பதனையும், ஊரில் நடக்கும் நிகழ்வுகளையும், ஒரு நட்புக்கு சொல்வதுபோல அப்பப்ப சொல்லிடோணும்..

    இந்த விசயத்தை பிள்ளைகள் வந்து பெற்றோரிடம் கேட்பார்களா தெரியல்ல.. நாம்தான் சொல்லிக் கொடுக்கோணும்..

    படிப்பு விசயத்தில் எல்லாம், எது நல்லது எது நமக்கு விருப்பம் என வற்புறுத்திச் சொல்லும் பெற்றோம், இதை மட்டும் எதுக்கு தலையை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்றனர்...

    பிள்ளைகள் லஃப் பண்ண முன்பே இவற்றை சொல்லி வச்சிடோணும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நீங்கள் சொல்வது போல ஆணோ... பெண்ணோ... திருமணத்தைக் குறித்து ஜாடைமாடையாக குழந்தைகளுக்கு தெரிவதுபோல திருமணம் குறித்து பேசவேண்டும் இத்ரு வேண்டாம் மாப்பிள்ளை அழகாக இருக்க மாட்டான் இங்கு வேண்டாம் மாமியார் கொடுமைக்காரி நமது பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று சும்மா வேண்டும் சொல்லி பேசிக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் பிள்ளைகளுக்கும் நம்மைப்பற்றி நினைக்கின்றார்கள் என்ற சிந்தை வரும்..

      நீக்கு
    2. இங்கு எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது... ஊரில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன், பின்னாலே 2 அண்ணாக்கள் தொடர்ந்து வந்தார்கள்.. என் காதுக்கு கேட்கட்டும் என பெரிதாக பேசினார்கள்...

      ஒருவர் கேட்டார் மற்றவரிடம்... “ஏன் மச்சான் நீ இன்னும் திருமணம் முடிக்கவில்லை?”..

      மற்றவர் சொன்னார்.. “ நான் என்னடா பண்ண முடியும்? அப்பா அம்மா எல்லோ யோசிக்க வேணும்.. நான் தினமும் விடிய எழுந்ததும்.. அப்பா அம்மா எனக்கு வயசாகிக்கொண்டு போகிறது திருமணம் முடித்து வையுங்கள் எனச் சொல்லவா முடியும்?”.. எனப் பதில் சொன்னார்ர் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. உண்மைதான் சிலர் மகன் சொல்லி திருமணம் செய்து வைக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

      நீக்கு
  3. கொப்பி பண்ண முடியல்ல உங்கள் போஸ்ட்டில் இருக்கும் வரிகளை... இல்ல இந்த பதிவில் எந்த தப்பும் இருப்பதாக எனக்குத் தெரியல்ல.. உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீங்க..

    காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், வேகமும், அன்பும் திருமணம் முடிக்கும் நேரம் இருவருக்கும் வருவதில்லை... அதனாலேயே உடைஞ்சு போகின்றன காதல்கள்.

    என்னைப் பொறுத்து, நீங்க சொன்னதுபோல, இது நம் குடும்பத்தோர் ஏற்பினமா என எண்ணிய பின்பே கால் வைப்பது நல்லது... கண்ணை மூடிக் காதலிச்சிட்டு கைவிட்டுப் போவதை விட, கவனமா பார்த்து காதலிப்பது பெட்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை காதலித்து வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் அன்பு குறைந்தே வருகிறது.

      நீக்கு
  4. ஆனா சில இடங்களில் பெற்றோரும் தவறு செய்கின்றனர்.. அதாவது பெற்றோரை நம்பி பிள்ளை, எதிலும் இறங்காமல், படிப்பே கண்ணென இருந்தால், பிள்ளையின் விருப்பம் கேட்காமல்.. தம் விருப்பத்துக்கேற்ப, தன் தம்பிக்கோ , தம்பி மகளுக்கோ.. கட்டு தாலி என கட்டப்பண்ணி விடுகின்றனர்...

    பிள்ளைகள் பெற்றோரின் விருப்பம்போல நடக்கும்போது, பெற்றோரும் பிள்ளையிடம் விருப்பம் கேட்கோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக குழந்தைகள் விருப்பத்தை கேட்டாக வேண்டும்,

      நீக்கு
  5. ஹா ஹா ஹா கிளி யோசியமா?:) கர்ர்ர்ர்ர்:).

    காதலிப்பதுக்கு,அழகு, படிப்பு, பதவி, அந்தஸ்து,தேவையில்லை.. கடசிவரை உறுதியோடு நிலையாக நின்று போராடி வெற்றியைக் காணும் திறமை , தைரியம், உறுதி இருப்பின் மட்டுமே காதலில் இறங்கோணும்... இல்லையெனில் இறங்கப்பூடாது.

    இந்த இறுதிவரை வெற்றிகாணும் வரை போராடும் தைரியம்.. நமக்கு மட்டும் இருந்தால் பத்தாதே, நம்மைக் காதலிப்பவருக்கும் இருக்கோணும்... அதனாலேயே காதலிக்க கூடாது என நான் எப்பவும் சொல்லுவதுண்டு..... யாரை நம்புவது?:)... இது பற்றி என் பக்கம் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், லிங் கிடைச்சதும் தாறேன்.

    மிக நல்ல பதிவு, ஆனா யாரு நம் பேச்சைக் கேக்கிறா?:)..ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலின் தொடக்கமே பார்வையின் மோகத்திலேயே இருக்கின்றது
      கண்டிப்பாக இணைப்பு அனுப்பவும்

      நீக்கு
  6. காலம் படுத்தும் பாடு!..
    காதல் படுத்தும் பாடு!..

    இதற்கிடையில் நம்மைப் போல
    களம் கண்ட வேங்கைகள் படுத்தும் பாடு!..

    எங்கே தான் ஓடி ஒளியக்கூடும் அந்த ஜோடிகள்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி இந்த காதல் பல பிரச்சனைகளை பெற்றோர்களுக்கு கொடுக்கும்.

      நீக்கு
  7. சரிதான் ஜி. காதல் தவறில்லை....அது உறுதியானதா எனவதையிருவருமே உறுதிப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் எடுத்துத் சொல்லும் தைரியம் வேண்டும். பெற்றோரும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பெற்றோர் விருப்பம் தெரிந்து காதல் செய் என்பது சரியாக இருக்கலாம் ஆனால் காதல் என்பது அப்படி வருவதில்லையே....அப்படி வருவதை வீட்டிற்காகத் தியாகம் செய்யும் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள் ஜி....நல்ல பதிவு.....

    அந்த பெரிய்யய்யய்யய்ய ஆள் சிரஞ்சீவி பவ!!! தானே!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுடன் திருமணம் குறித்து கலந்துரையாடுவது அவசியமான காலமிது
      ஆம் அந்த பெரிய மனுசளை சரியாக சொல்லி விட்டீர்கள்...

      நீக்கு
  8. நண்பரின் பதிவை படித்ததும் நானும் காதலிக்கலாம் என்று தோன்றுகிறது... ஆனால் யாரைக் காதலிப்பது ..விசா கேட்க எனக்கு அப்பாவும் அம்மாவும் இல்லை..யாரிடம் கேட்பது என்றும்... தெரியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலுக்கு ''விசா'' அவசியமில்லை பெண்ணைப்பற்றி ''விசா''ரித்தால் போதும் நண்பரே

      நீக்கு

  9. கில்லர்ஜி நீங்கள் இறுதியில் ப்ளுகலரில் கேட்ட கேள்விகள் காலத்திற்கும் காதலுக்கும் பொருத்தமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு ஜாதி முக்கியமாகி விட்டது நண்பரே ஆனால் தொடக்கத்தில் இதை நினைக்க மறுக்கின்றார்கள்.

      நீக்கு

  10. இன்றைய இந்தியாவில் குழந்தைகள் காதல் என்று சொன்னால் 75% பெற்றோர்கள் உடனே நோ என்று சொல்லக் கூடிய மனநிலையில்தான் உள்ளனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மையே இந்தியாவைப் பொருத்தவரை. காதலை ஏற்க பெற்றோர் இன்னும் தயாராகவில்லை இதன் காரணமாகவே பலரும் ஓடிப்போய் தாலி கட்டிக்கொள்கின்றார்கள்.

      நீக்கு

  11. உங்கள் பதிவில் காதலர்களுக்கு அட்வைஸ் சொல்லி இருக்கீங்க ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்று சொன்னால் அதை எப்படி கையாள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இந்த காதலர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன் காரணம் நாளை இவர்களுக்கு தானாகவே புரிந்து கொள்வார்கள்.

      ஆனால் பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்வது சரியல்ல என்று நினைத்தேன்.

      நீக்கு
  12. கில்லர்ஜி காதல் என்றால் ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படுவது என்ற அந்த கால நிலையில் இருந்து எழுதி இருக்கிறீர்கள் இந்த காலத்தில் இந்தியாவில் எப்படி என்று சரியாக தெரியவில்லை ஆனால் இங்கு ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் அது போலஒரு ஆணும் மற்றொரு ஆணும் காதல் வசப்படும் நிலமை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது


    உதாரணமாக எதிர்காலத்தில் என் பெண் குழந்தைகூட டாடி நான் இந்த பெண்ணைதான் விரும்புகிறேன் என்று வந்து சொன்னால் சரி என்று சொல்லி மணம் முடித்டு வைக்க வேண்டிய நிலமை கூட ஏற்படலாம் அதற்கு ஏற்ப நாம் நம் மனநிலையை மாற்றிக் கொள்ள இப்போதே தாயார் செய்து கொள்ள வேண்டும் இடை படிக்கும் உங்களுக்கு என்னடா இவன் லூசுதனமாக எழுடுகிறான் என்று நினைக்கலாம் ஆனால் இதில் உண்மை இல்லை என்று மறுக்க முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 100 வீதம் உண்மை ட்றுத்.. நம் கடமை நம்மால் முடிந்தவரை தமிழை, சமயத்தை, கலாச்சாரத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்கோணும்.. அதை மீறி பிள்ளைகள் விருப்பப்பட்டிட்டால்ல்.. ஒத்துப்போவதை தவிர வேறு வழி???.

      கொஞ்சக்காலத்துக்கு முன், இங்கத்தைய ஸ்கொட்டிஸ் நண்பர்கள் வீட்டுக்கு டின்னர் க்கு இன்வைட் பண்ணியிருந்தார்கள், .. அங்கு இன்னொரு கப்பிளும் வருகிறார்கள் டின்னர் க்கு எனச் சொன்னார்கள். [என் கணவருக்கு தெரியும் யார் வருவார்கள் என, அதனால என்னிடம் சொல்லிட்டார், அதிரா இதெல்லாம் சாதாரணம், எந்த வித்தியாசமும் இல்லாமல் பேசுங்கோ அவர்களோடு என..]

      நாம் போனபின் அந்த கப்பிள் வந்தார்கள்[என் கணவருக்கு தெரியும்.. இருவரும் ...லேடீஸ், இருவரும் ஜீன்ஸ் உம் ரீ சேட்டும்... பார்த்தவுடன் தெரிந்தது, போலீசாக இருக்கிறாவாம் அவ கணவர் போலவும்... மற்றையவ மனைவி போலவும் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தா.. ஆனா எனக்கு எந்த வித்தியாசமுமோ, விடுப்போ அங்கு தெரியவில்லை.. நோர்மலாகவே இருந்துது.

      நீக்கு
    2. மியாவ் மேடம் உங்க ஊர் ஸ்கொட்டிஷ் டோரி தலைவி ruth கூட தான் தனது நண்பியை மணம் செய்தார் ..அவர் சொன்னது பொய் சொல்லி public ai ஏமாற்றுவதை விட நேர்மையா ஒப்புக்கிட்டார் ..
      என்னை பொருத்தவரை இவை அவங்க தனிப்பட்ட விஷயம் ,ஆனால் இதுதான் உலகின் எதிர்காலம்னு யாரும் சொல்லக்கூடாது ..

      நீக்கு
    3. ஆமாம் truth அண்ட் அதிரா வெளிநாட்டு வாழ்க்கை வெளிநாட்டு இந்திய பெற்றோராய் எதற்கும் தயார் நிலையில் தான் இருக்கணும் இங்கே ..

      நீக்கு
    4. ஆம் தமிழரே இப்பொழுதே ஃப்ரான்ஸ் நாட்டில் ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது
      நாளை இது நமது நாட்டிலும் வரும் காரணம் நாம் பழமை பேசிக்கொண்டு மேலைநாட்டு கலாச்சாரத்தையே கடைப்பிடிக்கின்றோம்.

      நீக்கு
    5. நம்ம நாட்டில் இது நிறைய இருக்கிறது. சென்னை கிங்க்ஸ் அணி முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் அவர்களின் பையன் இன்னொருவனைத்தான் திருமணம் செய்துகொண்டு மும்பையில் வசிக்கிறான். கேரளா பெற்றோர் சம்பிரதாய நம்பூதிரிகளை வைத்து இரண்டு ஆண்களுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். இவை வரும்காலத்தில் அதிகரிக்கும்.

      எனக்கு ஹீத்ரூ விமானநிலையத்தில் இரு ஆண்களை அந்தக் கோலத்தில் பார்க்க (2008ல்) ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

      மற்றபடி உங்கள் சிந்தனைகள் நல்லவைகள்தாம். ஆனால் இப்போதுள்ள தலைமுறைக்குப் பிடிக்காது.

      நீக்கு
    6. தங்களிடமிருந்து அறியாத தகவல் அறிந்தேநன் நன்றி நண்பரே

      நீக்கு
    7. பிரித்தானியாவிலும் இச்சட்டம் அமுலுக்கு வந்து விட்டதே எப்பவோ... ஏன் சென்னையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கே.. சமீபத்தில் குஸ்பூ வின் நிஜங்களில் ஒரு ஜோடி மிக அழகாக, ஒரு குழந்தையோடு வந்திருந்தார்களே....

      ஆனா என்ன ஒரு மாற்றம் எனில்.. தமிழ் நாட்டில், ஒரு ஆண் பெண்ணாக மாறும்போது, முழுவதும் பெண்போலவே மாறி, உடை, அலங்காரம் அனைத்திலும் பெண்ணாகிவிடும்போதுதான் ஒரு மாதிரி மக்கள் நோக்குகிறார்களோ என்னவோ.. ஆனா வெளிநாடுகளில் உருவத்திலோ உடையிலோ எந்த மாற்றத்தையும் எங்கும் இதுவரை நான் கண்டதில்லை...

      இது பற்றி ஒரு சோகமான படம்கூட வந்துதே.. முன்பு பார்த்தோம்... விரும்பினால் பாருங்கள்..
      ”Brokeback Mountain”.

      நீக்கு
  13. சரி காதலிப்பவர்கள் பெற்றோர்களிடம் பெர்மிசன் கேட்க வேண்டும் என்று சொன்னீங்க ஆனால் ஏற்கனவே காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் வெற்றி பெற்ற நான் இன்னொறு பெண்ணை காதலிக்கும் போதும் இப்படிதான் பெர்மிஷன் கேட்க வேண்டுமா என்ன சரியா நீங்கள் சொல்லவில்லையே ( நான் இன்னொரு பெண்ணை காதலிக்கிறேன் என்ற இந்த வரிகள் ஏஞ்சல் அதிரா நிஷா கீதா போன்றவர்களின் கண்ணில் படாமல் பதிவு செய்யுங்கள் இல்லை என்றால் அவர்கள் மாமியிடம் போட்டு கொடுத்துவிடுவார்கள் இவங்க எல்லாம் ரொம்ப பொறாமை பிடிச்சவங்க )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ட்றுத்.. நீங்க இங்கயா இருக்கிறீங்க?:) உங்களை நானும் அஞ்சுவும் சேர்ந்து தேடினோம்:).. எதுக்கா?.. அந்த நீங்கள் காதலில் விழுந்திருக்கும்:) பெண்ணை உங்களுக்கே சேர்த்து வைக்கத்தான்:)..

      நீக்கு
    2. ஹலோ ட்ரூத் எங்களுக்கு எதுக்கு பொறாமை :) நீங்க ஒருத்தர்கிட்ட அடிவாங்கறதை போல் ரெண்டு பேர்கிட்ட வாங்க போறீங்க அதுவே பெரிய சந்தோஷம் எங்களுக்கு ..சீக்கிரம் அந்த பொண்ணு யார்னு சொல்லுங்க :)

      நீக்கு
    3. தமிழரே நான் இந்தக்கோணத்தை மறந்து விட்டேன்

      நீக்கு
  14. காதலில் வெற்றி பெறுவது என்பதை என் தளத்தில் கூடிய சீக்கிரம் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நில்லுங்கோ ஒரு லோட் கல்லுக்குச் சொல்லிட்டேன்:) வந்ததும் சொல்றேன் அதன் பின் போஸ்ட் போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).

      நீக்கு
    2. ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்...

      நீக்கு
  15. பொருத்தம் பார்த்து காதல்... நடைமுறையில் ஒத்து வராதது. பருவ வயதில் ஏற்படும் அபார ஈர்ப்பை வெற்றிகரமாகத் தாண்டப் பழகி விட்டால் அர்த்தமுள்ள காதல்கள் தோன்றலாம். ஆனாலும் பொதுவாக காதல் என்பதே மாயைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியான வார்த்தை காதல் ஒரு மாயை.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சரியாகச் சொல்லியிருக்கிறார்னு தோணுது. காதல் என்பது மாயைதான்.

      நீக்கு
  16. கணக்கு பார்த்து காதல் வந்தது என்பது என்பது இதுதானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி கணக்கு போட்டால்தான் வெற்றி பெற முடியும்.

      நீக்கு
  17. தம்பி கில்லர்ஜி அவர்களே!
    நம்பி உங்கள் பதிவை படித்து
    காதலில் இறங்கி வெல்வோரைப் பாராட்டுகிறேன்.

    எவரும்
    எந்த முயற்சியும் எடுக்காமலே
    உண்மையான காதல்
    உண்மையில் இயல்பாகவே அமையும் - அதற்கு
    சோதிடமோ 10 அல்லது 14 பொருத்தமோ
    பார்க்கத் தேவையில்லை என - அந்த
    சோதிடத்தில் சொல்லி இருக்குத் தம்பி!

    நெருக்கடி வேளை
    உதவியோ ஒத்துழைப்போ
    வழங்கியிருப்பின் - அது
    உள்ளத்தில் இருந்து நினைவூட்ட
    ஆளை ஆள் வெளிப்படுத்தும் நன்றி
    ஈற்றில் காதலாக மாறலாம் - அது
    இயல்பாகவே அமையும் - அதனால்
    அதற்குச்
    சோதிடம் பார்க்கத் தேவையில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  18. காதல் தவறில்லை ஆனா அது சரியான வயதில் சரியானவருடன் ஏற்படணும் ..ஆனா இக்கால காதலர்கள் எதையும் பார்ப்பதில்லை எல்லாத்துக்குமே அவசரம் :( . சினிமா காதலை கண்டு இன்னும் ஏமாறும் பிள்ளைகள் இருக்காங்க :(
    நீங்க சொன்ன அந்த பிரபலத்தின் மகளுக்கு மீண்டும் இரண்டாவது திருமணமும் முடிந்தது எதோ ஒரு வெளிநாட்டில் முதல் கணவருக்கு பிறந்த பிள்ளை ஹாஸ்டலில் ..இந்த SO called அவசர காதலால் ஒரு சின்ன குழந்தை தாய் தந்தை இருவர் அரவணைப்புமில்லாமல் ..வேதனைதான் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவசரக்காதல்தான் இன்றைய சீர்கேட்டுக்கு மூலதனம்

      தங்களால் புதிய விடயம் அறிந்தேன் குழந்தையைப்பற்றி பாவம் என்ன செய்வது ?

      நீக்கு
  19. ஒரு அவசியமான விஷயத்தை
    மிகப் பொறுப்புடன் எழுதிய பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நீண்ட பதிவா எழுதியிருக்கீங்க... அதுவே ஆச்சர்யம்...
    ஏன்னா சின்னச் சின்னதா எழுதுவே உங்க சிறப்பு...
    நல்ல பகிர்வு அண்ணா... அவசியமானதும் கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவு சற்றே நீண்டு விட்டது உண்மையே.... இதையும் பிரேக் போட்டு நிறுத்தினேன்

      நீக்கு
  21. முதலில் இந்த திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான காதலை தடை செய்தாலே போதும். பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே... திரைப்படங்களே...

      நீக்கு
  22. காதலைக் குறித்த பல்வேறு கருத்துக்களையும் படித்தேன். கில்லர்ஜி சொல்லி இருப்பது தான் எனக்கும் தோன்றுகிறது. காதலில் கூட தொலைநோக்குப் பார்வை தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ காதல் வயப்படும் பொழுது தீர்மானம் எடுத்த பிறகே காதலனையோ... காதலியையோ தேர்வு செய்ய வேண்டும்.

      நீக்கு