தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 16, 2017

அறியாமைகள்


சமீபத்தில் கணினியில் உலாவும் பொழுது பழைய செய்தியொன்றை படித்தேன் படித்ததும் மனம் வலித்தது ஒரு திரைப்பட நடிகர் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு 40 கோடி ரூபாயை நஷ்டஈடாக கொடுத்து விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார். காரணம் வேறொரு நடிகையுடன் காதல், இவர்களின் காதலைப்பற்றி, நாம் ஆராய வேண்டாம் அது நாய்க்காதல் என்று சொல்வார்களே... அதைப் போன்றது.

சரி இந்த 40 கோடியை சர்வ சாதாரணமாக நஷ்டஈடு கொடுக்க முன் வந்ததற்கு அடிப்படை காரணர்த்தா யார் ? இந்த மாதிரி ஆட்கள் கைவண்டி இழுத்து சம்பாரித்து இருந்தால் இப்படி கொடுக்க முடியுமா ? காதலுக்காக நாற்பது கோடியென்ன ? அதைவிட உயர்வான உயிரைக்கூட கொடுக்கலாம்  ஏன் காதலி மும்தாஜூக்காக ஷாஜஹான் அற்புதமான தாஜ்மஹாலை கொத்தனார் மூலம் கட்டவில்லையா ?

நாட்டில் ஒரு வேளை குடிக்க பால் இல்லாமல் எத்தனை குழந்தைகள் நலிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது பரம்பரை பணக்காரர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் போக சாத்தியம் உண்டு. ஆனால் இவர்களைப் போன்ற ஆட்களுக்கு கண்டிப்பாக தெரியும் ஏனெனில் திரைப்படங்களில் ஏழைப்பங்காளனாக, உழைப்பாளியாக, காதலுக்காக, காதலிக்காக போராடுபவனாக, ராணுவவீரனாக, விவசாயியாக, ஏன் கைவண்டி தொழிலாளியாக கூட உணர்வுப்பூர்வமாய் நடித்து காண்பிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ?


இந்த நிலைக்கு இவர்களை உயர்த்தி விட்டது தவறில்லை இவர்களின் சுயமுகம் தெரிந்த பிறகும் இவர்களை உயர்த்திக் கொண்டு இருக்கும் ரசிகன் என்ற அறியாமைவாதிகள் இருக்கும்வரை இந்த மாதிரியான நாய்க்காதல் மலர்(ல்லா)ந்து கொண்டே இருக்கும்.

41 கருத்துகள்:

  1. சாட்டையடி...

    திருந்தினால் சரி..

    பதிலளிநீக்கு
  2. ஆவ்வ்வ்வ் முதல் வோட் என்னோடது ஆனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 துரை அண்ணன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முதலில் வந்து 4 வோட் போட்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா.. நீங்க எனக்கு மொத்தமா 7 வோட் திருப்பிப் போடோணும் கில்லர்ஜி.. சொல்லிட்டேன்ன்:) இப்பூடித்தான் இனி எல்லோரோடும் சண்டைப்பிடிப்பதாக முடிவெடுத்துள்ளேன்ன்:)..

      நான் வாரம் முழுக்க போடும் வோட்டில ஒன்றுதானே திரும்பிப் போடுறீங்க நீங்க கர்:) ஊர் நியாயம் எல்லாம் பேசும் உங்களுக்கு இது மட்டும் நியாயமாப் படுதோ?:).. நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கோ:)) ஆங்ங்ங் அப்பூடியே இதை ஒருக்கால் பகவான் ஜீ க்கும் எக்ஸு பிளைன்:)) பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. வாங்க இனி எனது குடும்பத்தோடு உங்களுக்கு ஓட்டு போடுகிறேன்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நேக்கு இப்போ ஷை ஷையா வருதூஊஊ:)..

      நீக்கு
    5. நான் வோட்டு போட்டுட்டேன் :) அதை அந்த தேம்ஸ் கரை மேலே உருளும் ஹெவி வெயிட் பூனை கிட்ட சொல்லிடுங்க :)

      நீக்கு
    6. வாங்க அப்படினா நீங்க கருத்து சொல்ல மாட்டீங்களா ?

      நீக்கு
    7. sollitene ..haiyo comment vizhaliyaa??

      நீக்கு
    8. அப்பூடித்தான் விடாதீங்க கில்லர்ஜி...
      இப்படிக்கு
      வோட் போடாதோரைக் கவனிக்கும் சங்கம்:)

      நீக்கு
  3. இருக்கிறவர் அனுபவிச்சிட்டுப் போறார் உங்களுக்கு எதுக்கு புகை வருது?:).. வாழ்வது ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கையில சந்தோசமா இருந்திட்டுப் போகலாமே என நினைச்சதனால் அவருக்கு 40 கோடி என்பது 4 ரூபா போல தெரிஞ்சிருக்கு.. அந்த லூஸும் காசுக்கு ஆசைப்பட்டு ஓக்கே பண்ணிட்டா போல கர்ர்:)..

    இனொன்று சாஜஹானும் ஒன்றும்.. ஒரு காதலி ஒரு மனைவிக்காக தாஜ் மஹால் கட்டினவர் இல்லையாமே.. மும்தாஜ் அவருடைய 7 வது காதலியாமே.. அப்போ அவரை மட்டும் எதுக்கு உயர்த்திப் பேசுறீங்க கர்ர்ர்:))..

    கடசிப் படத்தில முகம் மறைஞ்சிருப்பது கில்லர்ஜி போலத் தெரியுதே:)..

    ஹையோ எனக்கிண்டைக்கு நிஜமா என்னமோ ஆச்சூஊஊஊஉ.. இதுக்கு மேல நிண்டால்ல் என் தலைக்கு ஆபத்து அதனால ஓடிடுறேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பவன் அனுபவிப்பது அவரவர் உரிமையே அதை யாரும் கேட்கமுடியாது.

      கைவண்டி தொழிலாளி காலம் முழுவதும் உழைத்தும் உயர்வில்லை

      இவர்கள் வெகு சுலபமாக கோடிகள் சம்பாரிப்பது அறியாமை மக்களால்தான்.

      எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது.

      கிரிக்கெட்டில் விளையாண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாரித்த சச்சின் டெண்டுல்கரால் மக்களுக்கு லாபம் என்ன ?

      ஆனால் அவனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி.
      காரணம் மக்கள் எதையும் எதிர்த்து கேட்பது இல்லை.

      நீக்கு
    2. உங்கள் குமுறல் நியாயமானதுதான், ஆனா இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லையே. சாப்பிட வழியில்லையாம் ஆனா கஸ்டப்பட்டுச் சம்பாதிச்சு பலதடவை தன் அபிமான நட்சத்திரத்தின் படம் என்பதால் தியேட்டரில் போய்ப் பார்க்கிறார்களாம் என அறிந்தேன்.. இது எவ்வளவு மூடத்தனமானது.. இதிலிருந்து இவர்கள் எப்போ வெளியே வரப்போகிறார்கள்.

      பணம் இருக்கு பொழுதுபோக்குக்காகப் படம் பார்ப்பது என்பது வேறு.. இது???

      நீக்கு
    3. இவனுகளுக்கு துபாய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விசா கொடுத்து எஜிப்தியனை சூப்பர்வைஷராக போட்டு 3 வருடம் வேலைக்கு விட்டால் வாழ்க்கையின் அடிநாதம் விளங்கும்.

      மீள் வருகைக்கு இஸ்தூத்தி.

      நீக்கு
    4. அப்படி விட்டாலும் தான் அடங்க மாட்டேங்கிறாங்களே!..

      நீக்கு
    5. அச்சச்சோ கில்லர்ஜி நீங்க என்ன அரபிக் லயா பேசுறீங்க?:) நான் அவசரப்பட்டு அது தெலுங்காக்கும் என நினைச்சுட்டேன்ன்:))

      நீக்கு
  4. உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் தனி ஒருவரால் இதை தடுக்க இயலாது. எப்போது மக்களுக்கு திரைப்படத்தின் மீதுள்ள கவர்ச்சி குறைகிறதோ அன்றுதான் இது போன்றவை நடக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை படிப்பவன் பெரும்பாலும் யாராவது ஒரு நடிகனிடம் அடிமையாக இருக்கிறான்.

      வேறு யார் நாட்டைக் காப்பாற்றுவது ?

      நீக்கு
  5. பணம் பத்தும் செய்யச் சொல்கிறது. ஆனால் மனம் ஒப்பாமல் வாழ்க்கையைத் தொடரவும் முடியாதே.. போலிக் காதல்கள். காதல்களல்ல, காமங்கள்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இது உண்மைக்காதல்கள் இல்லைதான்.

      நீக்கு
  6. ஏதோ ஒரு படத்தில் அட்வான்ஸ் கட்டி 'ரேப்' பண்றீங்களா?' என்று விவேக் சொல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. காசுதான் கொடுக்குறோமுல....மாதிரி... நீங்க சொன்னது போல் துபாய் கன்ஸ்டரகஷன்ஸ்-தான் சரியான தண்டனை என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. ஆமை நுழைந்தால் விளங்காது என்பார்கள் ,இந்த அறியாமைகள் ,அரிய வகை நட்சத்திர ஆமைகளோ ?அதனால்தான் நட்சத்திரங்களை வாழ வைக்கின்றனவோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. இங்கே ஒரு ரஷ்ய பில்லியனரும் இப்படித்தான் 155 மில்லியன் பவுண்ட் கொடுத்தார் இது அவரது மூணாவது மனைவிக்கு அப்புறம் முதல் மனைவியை மீண்டும் திருமணம் ..
    சினிமான்னு இல்லை எல்லா பணம் படைத்த பிரபலங்களுக்கும் பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்றாதின்னு தெரில :(
    அதை நல்ல விஷயத்துக்கு செலவழிச்சிருந்தா ஏழைங்க மனசு குளிர்ந்து வாழ்த்துவதில் அவங்க வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்..

    பணத்தை இப்படிபட்டவங்களுக்கு அள்ளி கொடுக்கிறார் பாருங்க இந்த கடவுள் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் மனைவியை மீண்டும் திருமணமா ?

      உண்மை இந்த பணத்தை நல்ல விசயங்களுக்கு செலவு செய்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

      சென்னை சிவானந்தா குருகுலத்தில் 300 குழந்தைகள் இருக்கின்றார்கள் இவர்களின் காலை சிற்றுண்டிக்கு ஆகும் செலவு 2500 ரூபாய் மட்டுமே...

      இங்கு பணம் கோடிகள் கை மாறி வங்கிகளில் உறங்குகின்றது.

      தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.

      எனக்கு இந்த கோயில் உண்டியல்களை உடைத்தால் என்ன ? என்றே எண்ணுகிறது என் மனம்.

      நீக்கு
  9. கில்லர்ஜி..இதுல எனக்கு தவறா எதுவும் படலை. ஒரு பெண்ணை மணந்துகொண்டு, அம்ப்போன்னு விட்டுடாம, 40 கோடி அவங்களுக்குக் கொடுத்தானே. இல்லைனா அவங்க எப்படி வாழ்க்கையை ஓட்டுவாங்க? செல்வராகவனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்த சோனியா அகர்வால் கதை தெரியும்தானே.

    நமக்கு 40 கோடியா என்று தோன்றுகிறது. நமக்கு 4000 ரூபாயே ரொம்ப பெரிய அமவுன்ட். அவங்க லெவலே வேற. நாம, 800 ரூ செலவழித்து ரெண்டு இட்லி, 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதற்கே, எதுக்கு வெட்டிச் செலவு என்று நினைக்கிறவர்கள் (ஓசிக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும்)

    ராஜ்ஜியசபா எம்பி பதவி, சச்சின் தெண்டுல்கரின் திறமைக்குக் கொடுத்ததல்ல. அவருக்குப் பின்னால் இருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்காகக் கொடுத்தது (அதனால் தங்கள் கட்சிக்கு ஓட்டு வராதா என்று). முடவனை, ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்துக்குத் தேர்ந்தெடுத்தவரைத்தானே நாம குறை சொல்லணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் நடிகர்களை குறை சொல்லவில்லை இவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான், நம்மைப்போல் தொழிலாளிகள்தான் என்ற சிந்தை தமிழ்நாட்டானுக்கு வந்து விட்டால் எல்லோருக்குமே வாழ்க்கைத்தரம் ஓரளவு சமமாக செல்வதற்கு வழி வகுக்கும்.

      ஆனால் ஏற்றத்தாழ்வு அதிகம் காரணம் ஒட்டு மொத்த மக்களின் பணம் சில நபர்களிடம் தேங்கி விடுகிறது

      சச்சினுக்கு பதவி கொடுத்தது பாசமோ, உழைப்போ இல்லை அவனது அடிமையாய் பல ஆயிரம் நபர்கள் உள்ளது அரசியல்வாதிகளுக்கு தெரியாமலா இருக்கும்.

      உங்களுக்கு சொல்லவேண்டிய சில விடயங்கள் மேலே திருமதி. ஏஞ்சலின் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் பார்க்கவும் நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் ஜி !

    அவன் நடிப்புக்குக் கிடைத்த கூலி பணம் அதை அவன் என்ன செய்தாலும் நமக்குக் கேட்க்கும் உரிமை இல்லை இருந்தும் அந்தப் பணத்தினால் சமூகக் கட்டமைப்புகளை வாழ்வின் விழுமியங்களை குடும்ப உறவுகளை வதைப்பது ஏற்கத்தக்கதல்ல

    கோடி கொடுத்தான் அவளும் ஏற்றாள் இடையில் நமக்கேன்
    இந்த விவாதம் ஜி

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே இவர்களை மட்டுமல்ல எவரையும் கேட்க நமக்கு உரிமை இல்லை சமூகச்சீரழிவுக்கு இவர்கள்தான் அடிக்கடி வித்திடுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் புலப்படும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. விவாகரத்து மலிந்து விட்டது! வேறேன்ன சொல்ல! :( திருமணம் என்பது கேலிக்கூத்தாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் சர்வசாதாரணமாக தாலியை கழட்டி எறியும் காட்சிகள் வருகிறது இதை யாரும் தட்டிக் கேட்பதில்லை தாலியின் புனிதம் கேவலப்படுத்தப்படுகிறது.

      நீக்கு
  12. அறியாமை இல்லை நண்பரே... திமிரு....கொழுப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவனுகளுக்கு துபாய் விசாதான் சரியாகும் நண்பரே...

      நீக்கு
  13. ஒரு சின்னக் கதை ஒரு ஊரில் பணக்காரர்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வசூல் செய்து எல்லோருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்கள் ஆரவாரமாகக் கைதட்டி எல்லோரும் ஒப்புதல் தெரிவித்தார்கள் எல்லோரிடமும் இருந்த பணம் கணக்குக் கேட்கப்பட்டது இல்லாதவர்கள் சரியாகச்சொல்லிக் கொடுத்தார்கள் மிகுதியாக உள்ளவர்களும் பெரும்பான்மைக்குக் கட்டுப் பட்டு தங்களிடமிருந்த பணத்துக்கு கணக்கு கொடுத்தார்கள் மீதி இருந்த நடுத்தர வர்க்கத்தினர் பலரும் கணக்குப் பார்த்தபோது தம்மிடம் இருப்பதும் போய் குறைவாகவே வரும் என்று தெரிந்ததும் இந்த யோசனையிலிருந்து பின் வாங்கினார்கள் கதையின் நீதி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் நீதி நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பு என்று புரிகிறது ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. கில்லர்ஜி! தாஜ்மகாலுமே காதல் சின்னம் என்பதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியவில்லை. எத்தனை உழைப்பாளிகளின் வியர்வை அதில் இருக்கிறது. காதலுக்கு எல்லாம் எதற்குச் சின்னம்...மனதில் வேண்டும்.

    இது போன்ற விவாகரத்துகளைச் சொல்லி ஒரு பயனும் இல்லை ஜி. நம்மால் சமுதாயத்தைச் சீர்த்திருத்த முடியாது. எனவே நம் கொள்கையிலிருந்து மாறாமல் பட்டும் படாமலும் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஷாஜஹான் பெயர் எடுக்க எவ்வளவு பேர் உழைத்து இருக்கின்றார்கள் இதில் கொத்தனார் கையை வெட்டி விட்டதாக தகவல் வேறு....

      நீக்கு