தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

நீதிபதிகள் பற்றாக்குறையா ?


நமது நாட்டில் நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறதே.... ஸாரி நம்மைக் கடந்து போகிறதே... இது நமக்கு எதைக் காட்டுகிறது ? நீதிபதிகளின் பற்றாக்குறையையா ? இல்லை சண்டைகளும், பிரச்சனைகளும் வளர்ச்சியா ? இந்த அவல நிலைக்கு முடிவு நிச்சயமாக அரசாங்கம் தீர்வு காணாது மக்களான நாமே தீர்வைத் தேடிக்கொள்ள வேண்டும் எப்படி ? ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை கட்டுப்பாடு மீறிப்போய் வசைபாடியில் தொடங்கி அடிதடியில் முடிந்து விட்டது பிரச்சனையை காவல் நிலையம் வரை கொண்டு போய் எதைக் கண்டோம் ? அவர்களும் எஃப்.ஐ.ஆர் எழுதி நீதி மன்றத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டு அடுத்த எப்.ஐ.ஆர் எழுத தயாராகி விடுவார்கள் அவர்களையும் குறை சொல்ல இயலாது காரணம் அது அவர்களது கடமை நாமும் பகைமை உணர்வுடன் வீட்டுக்கும், நீதி மன்றங்களுக்கும் அலைந்து கொண்டு இருப்போம்.

வழக்கறிஞர்கள் மோதிக்கொள்வது போல கதையளக்க, நீதிபதிகளும் அடிக்கடி இடைவேளை விட்டு தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். காலங்கள் உருண்டோடும் வழக்கறிஞர்களின் வாரிசுகளும் வழக்கறிஞர் பட்டம் பெற்று விடுவார்கள். ஏதோவொரு திரைப்படத்தில் சொன்னது போல வாதியும், பிரதியும் இறந்து விடுவான் வழக்கறிஞர் வயலை உழுது கொண்டு இருப்பான் இது எத்தனை தூரம் உண்மையாகி விட்டது ஆனால் இப்பொழுது வழக்கறிஞர் வயலை ப்ளாட் போட்டு விற்று விடுவான். நம் முன்னோர்கள் சொன்னது போல் சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைக்காரன் காலில் விழலாம் ஆம் ஆயிரம் பிரச்சனைகளை வளர்த்து நமது சந்ததிகளுக்கு தாரை வார்த்து விடாமல் வாழ வழி கண்ணியம் தவறாமை ஆம் சண்டையும், சச்சரவுகளும் பேசித்தீர்ப்போம் தவறுகளை மறப்போம், மன்னிப்போம் தவறு செய்வது மனித இயல்பு.

1999-ஆம் ஆண்டு HUMAN RIGHT CUMMISSON REPORTபடி இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? பதினான்கு லட்சங்கள் ஆகவே வாழும் காலம் கொஞ்சமே.... போகும் காலமோ.... ? ? ?   

46 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ் மீதான் !ஸ்ட்ட்ட்.. மீ தான் இணைச்சேன்ன்.. மீ தான் 1ஸ்ட் வோட்டும் போட்டேன்ன்.. அப்போ பரிசு எனக்குத்தேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலேயே அது தேவகோட்டை காவல் நிலையமோ? இல்ல நீங்க செய்து போட்டிருக்கிறீங்களோ கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டை ஐ.ஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க படம் பிரசுரிக்கப்பட்டது

      நீக்கு
    2. என்னை மன்னிச்சிடுங்கோ கில்லர்ஜி _()_.. நீங்க இவ்ளோ பெரிய ஆள் என்பது எனக்கு இண்டைக்குத்தான் தெரியும் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. என்னைப்பற்றி இதுவரை தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது நண்பி Theresa May அவர்களிடம் கில்லர்ஜியைப்பற்றி மேலும் விபரம் அறிந்து கொள்ளவும்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஓ அவ உங்களுக்கு நண்பியோ?:)... நான் முன்பே சொன்னேனே நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர் .. தேவகோட்டையை நியூயோர்க்காக நினைச்சு அங்கிருக்கிறீங்க:)..

      உங்கள் நண்பியிடம் சொல்லிக் ஸ்கொட்லாந்தைக் கொஞ்சம் பிரிச்சுவிடச் சொல்லுங்கோவன்:).. ஸ்கொட்டிஸ் யாருக்கும் இங்கிலாந்துடன் சேர்ந்திருக்கப் பிடிக்கவில்லை எனவும் சொல்லிடுங்கோ:)..

      நீக்கு
    5. பரிசீலிக்கிறேன்... விரைவில்.

      நீக்கு
  3. தாமதமாகும் நீதி அநீதிக்கு சமம் என்பார்கள் ,நேற்றுகூட நீதிபதி ஒருவர் கைதாகியுள்ளார் !சகல சீர்கேடுகளுக்கும் காரணம் ,தூணிலும் துரும்பிலும் ஊடுருவி விட்ட ஊழலும் ,லஞ்சமும்தான்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி வரும் காலங்களில் இன்னும் மோசமாக நடக்கும் ஜி

      நீக்கு
  4. வணக்கம் ஜி !

    சரியா சொன்னீங்க சண்டைக் காரன் காலில் விழுவதே சரி ...............

    தமன்ன +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே உண்மையை சொன்னேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. ஆனால் சில அரசியல் வழக்குகள் மட்டும் உடனுக்குடன் எடுத்துக் கொள்ளபொபடுகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா எல்லாம் அதிகார பலம்தான் ரஜினிகாந்த் மகளுக்கு உடன் விவாகரத்து கிடைத்தது எப்படி ?

      நீக்கு
  6. கில்லர்ஜி... வெறும்ன நீதிபதிகள் பற்றாக்குறை என்று இதனைக் கடந்து சென்றுவிடுதல் இயலாது. நம் நாட்டில் நீதி மிகவும் தாமதப்படுத்தப்படுகிறது, 'உரிமை' என்ற பெயரில். எந்த வழக்கும் 3-5 மாதங்களுக்குள் எல்லா நீதி மன்றங்களிலும் முடித்துவைக்க இயலவில்லை என்றால், நீதிமன்றங்கள் இருந்து என்ன பிரயோசனம்? வழக்கு அடுத்த நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டால், முந்தைய நீதிமன்றம் எடுத்ததில் பாதிக்காலத்துக்குள் தீர்ப்பு சொல்லவேண்டும், மீண்டும் மனு போடக்கூடாது என்றெல்லாம் சட்டம் போடவேண்டும். இல்லாவிடில், காசு உள்ளவனுக்கு மட்டும்தான், தப்பிக்க வாய்ப்பு என்றாகிவிடும்.

    நம் நாட்டில்தான், தேர்தல் வழக்குகள்கூட 5 வருடங்களுக்குமேல் எடுக்கும் அவலம். இதனால்தான் நீதிபதிகள் சொல்லும் நல்ல கருத்துக்களை யாரும் பொருட்படுத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை இதற்கொல்லாம் அடிப்படை காரணம் நாம்தான் வேறென்ன சொல்வது ?

      நீக்கு
  7. வாய்தா வக்கீல்கள் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கேட்டு இருக்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. நீதிபதிகள் பற்றாக்குறை என்பதைவிட, நீதி வழங்கல் தாமதமாகிறது ஜி. 10, 15 வருடங்கள் இழுத்தால் எப்படி நீதி கிடைக்கும்? வழக்குகள் தேங்கித்தான் கிடக்கும். அப்படிக் கிடக்கும் போது நமக்குத் தோன்றுவது நீதிபதிகள் பற்றாக் குறை என்று. ஆனால் நடைமுறையில் அதல்லபிரச்சனை...வழக்குகள் உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும்..வாய்தா மேல் வாய்தா கொடுக்காமல்...வலுவான சட்டம் வர வேண்டும் ஒரு வழக்கு இத்தனை மாதங்களூக்குள் முடிந்தாக வேண்டும் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும்

      ஆனால் இவ்வளவு வருடங்கள் அவர்களை சிறையில் வைத்து அலைக் கழித்தது தவறுதானே ஆகவே அவர்களை விடுதலை செய்வதில் தவறில்லை என்பதும் எனது கருத்து.

      நீக்கு
  9. போலீஸ்காரன் சகவாசமும், வக்கீல் சகவாசம் எப்பயுமே ஆகாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பனாக இருந்தாலும் தள்ளி நிற்பதே நன்று

      நீக்கு
  10. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதன் விளைவு இது. வாய்தாக்கள், மறுமுறையீடுகள்... இந்தத் தொல்லை ஒரு தொடர்கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இந்திய அரசியல் சட்டம் எரிக்கப்பட வேண்டியது என்று அரசியலமைப்பு குழுவில் இடம் பெற்ற டாக்டர் அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  11. கோர்ட்-க்கு போ பாத்துக்கலாம்-ன்னு சொல்லி தன் வாழ்நாளையே கழித்துவிடுகின்றனர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் இப்படி தூண்டி விடுபவர்களும் இருக்கிறார்கள் நண்பரே...

      நீக்கு
  12. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் - தாணாக்காரன் (போலீஸ்) நுழைந்து விட்டாலே கூனிக் குறுகிப் போன தெருக்களைக் கொண்டிருந்தது தமிழகம்..

    ஆனால், இன்றைக்கு ஜெயிலுக்குப் போறவன் ரெண்டு விரலைக் காட்டிக் கொண்டு புன்னகையுடன் போகிறான்..

    படித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று - அந்தக் காலப் பெரியவர்கள் வெள்ளந்தியாக நம்பி விட்டார்கள்..

    படித்த பலருக்கும் புத்தி கெட்டது தான் மிச்சம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் கோடிகள் வங்கி பணத்தை எடுத்தவனை சுற்றி நிருபர்கள் பேட்டி காண்கிறார்கள அவனும் வெட்கப்படாமல் சிரித்து பேசுகிறான்.

      நீக்கு
  13. நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக நீதிபதிகளை குறை சொல்வது சரியல்ல. உண்மையில் வழக்கறிஞர்கள் அடிக்கடி வாய்தா கேட்பதால் தான் தீர்ப்பு வழங்குவது தள்ளிப்போகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ளே பேசி தீர்த்துக்கொண்டால், பண விரயமும் கால விரயமும் ஆவதை தடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீதிபதிகள் அடிக்கடி தயிர்வடை சாப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை.

      நீக்கு
  14. ஒத்திப்போட்டு ஒத்திப் போட்டே உயிரை எடுத்துடுவாங்க! :( பெரிய பெரிய மருத்துவமனைகளும் கொஞ்சமும் குறைந்தது இல்லை. வேறே மாதிரி உயிரை எடுப்பாங்க அங்கே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  15. நீதிதான் பற்றாக்குறை த ம 13

    பதிலளிநீக்கு
  16. எங்க ஊரில் பொது வரப்பிலிருந்த ஒரு புளிய மரத்துக்காக பங்காளிகள் இருவர் 17 ஆண்டுகள் வழக்கு நடத்திச் சீரழிந்தார்கள்.

    திருந்தாத ஜென்மங்கள் இப்போதும் உண்டு.

    மிகவும் பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா ஊரிலுமே பரவலாக இருக்கின்றார்கள் கொஞ்சம் யோசித்தால் இது அவசியமற்றது என்பது புலப்படும்.

      நீக்கு
  17. நிலுவையில் உள்ள வழக்ககுளில் ஒன்னு என் வீட்டு வழக்கும் அடங்கும் நண்பரே 22யை கடந்து 23 வருடத்தை நோக்கி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் நண்பரே இதை எழுதும் பொழுது உங்கள் நினைவுகள் வந்தது.

      நீக்கு
  18. நீதிமன்றத்தை நாடாமல், விட்டுக் கொடுத்து பேசிப் பேசியே எப்பிரச்சினைகளுககும் தீர்வு காண்பதுதான சரியான முடியவாக இருக்கும் ஐயா.
    தம+1

    பதிலளிநீக்கு
  19. நம் நாட்டு அவலங்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. கடைசியா சொன்னிங்க பாருங்க அதுதான் சரி சாட்சிக்காரன் காலுல விழுவதற்கு சண்டைக்காரன் கூட சமாதனமா போகாட்டியும் முட்டிக்கிட்டு திரியாம இருக்கலாம். நேரமாவது வாழ்க்கையில் மிச்சமாவும் உருப்படியான வேலைக்கு (நான் புதுசு ஜி உங்க தளத்தில் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவிழி அவர்களின் முதல் வருகையை பூக்கள் விரித்து வரவேற்கிறேன்
      தொடர்க.. நன்றி

      நீக்கு
  21. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு