தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 16, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

செந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் தருவாயில் குருநாதரிடமிருந்து கோடரி வேந்தனுக்கு அழைப்பு காப்பாளர் இயம்பியதை கேட்டு சென்றிட...
குருவே நமச்காரம்.
கோடரி வேந்தா, நலம் விளைக... உமது சினேகிதர் செந்துரட்டியின் விவாகம் நினைவில் உள்ளதா ?

ஆம் குருவே நாளும் பொழுதும் அவையே நினைவில்.
நல்லது நாளை கொடுவரட்டி மலை வரை செல்லும் கூட்டு வண்டியில் உம்மையும் அழைத்து செல்வதாக ஒரு அன்பர் இசைந்துள்ளார் அங்கிருந்து நீர் வழி இயம்பி தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு நடந்து யாத்திரை செல்லவும் இந்த ஓலையை செந்துரட்டியின் தந்தையாரிடம் சமர்ப்பிக்கவும் எமது சரீரம் நலமில்லாத காரணத்தை விவரித்து குறித்துள்ளேன் ஆகவே வர இயலாமைக்கு எமது விசமம் உண்டு என்பதை அறிவித்து செல்வன் செந்துரட்டிக்கு எமது ஆத்மார்த்தமான ஆசிகள் என்பதை அறியப்படுத்துக இதோ இந்த கடுக்கனை எமது பரிசாக அளிக்கவும் சென்று விழாவை சிறப்பித்து நலமுடன் திரும்பிட எமது ஆசிகள் உமக்கு.

உத்தரவு குருவே மிக்க மகிழ்ச்சி.
மறுதினம் அதிகாலையிலேயே நீராடி யாத்திரைக்கு வேண்டி காப்பாளர் தந்த புளியோதரையையும், சிறிது அவலும் செந்துரட்டியின் விவாகத்துக்காக பல தினங்களாக அணு அணுவாய் ரசித்து செய்த வேலையை அழகிய வண்ணம் துணிகளில் பக்குவமாக கட்டி எடுத்துக்கொள்ள, குருவிடம் ஆசி பெற்று காப்பாளரும், மற்ற மாணாக்கர்களும் செந்துரட்டிக்கு வாழ்த்து இயம்பிட கூட்டு வண்டியில் யாத்திரை தொடங்கியது..... வழிநெடுகிலும் செந்துரட்டிக்கும், தமக்குமான நட்பைப் பற்றிய விடயங்களுடன் உரையாடிக் கொண்டு மறுதினம் அதிகாலையில் கொடுவரட்டி மலை வந்தடைய, தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு செல்லும் வழி காண்பித்த வண்டிக்காரருக்கு நன்றியுரைத்து விட்டு தமது சுமையுடன் நடக்கத் தொடங்கிய கோடரி வேந்தன் அவ்வப்பொழுது மரத்தடிகளில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு அந்தி சாயும் பொழுதில் ஊரின் எல்லையில் இருந்த மாடத்தில் சினேகிர்களுடன் அமர்ந்து விவாக வேலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு இருந்த செந்துரட்டிக்கு தூரத்தில் நடந்து வரும் கோடரி வேந்தனைக் கண்டதும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்று...

வருக கோடரி வேந்தரே தங்களது வருகையால் மட்டற்ற மகிழ்ச்சி சினேகிதர்களே இதோ இவர்தான் எமது குருகுல உயிர்த்தோழர் தேவராய கோட்டத்து கோடரி வேந்தன்.
அனைத்து சினேகிதர்களும் கோடரி வேந்தனுக்கு வரவேற்பு கொடுத்து வாழ்த்துகளையும் உரைத்தனர்.
கோடரியாரே அமருங்கள் கூடமுடி சினேகிதருக்கு இளநீர் பறித்து வாருங்கள்.
அதோ காணீர் செந்துரட்டி தங்களது சினேகிதர் என அறிந்த தருணமே செவளை மரத்தில் ஏறி விட்டார், மாமுண்டி நுங்கு பறிக்க புறப்பட்டார்.

செந்து இல்லத்தில் அனைவரும் நலம்தானே ?
அனைவரும் நலமே, இன்று புலர்ச்சியில்கூட எமது அன்னையார் தங்களைப்பற்றி வினவினார்கள் நமது குருநாதர் வரவில்லையா ? காப்பாளர், மற்றும் நமது மாணாக்கர்கள் அனைவரும் நலமா ?
அனைவரும் நலமே நமது குருநாதர் கடந்த௰ தினங்களாக உடல் நலமின்றி அதன் காரணமாக யாத்திரை செய்ய இயவில்லை தங்களுக்கு ஆசிகளும் பரிசுப் பொருளும் வழங்கினார்கள் மாணாக்கர்களும் வாழ்த்துகளை அளித்துரைத்தனர்.
மிக்க மகிழ்ச்சி குருநாதரும் வந்திருந்தால் கூடுதல் மகிழந்திருப்பேன் அவர் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறோம்.
மற்றொரு சினேகிதர் அத்திப்பழங்கள் பறித்து வர, இளநீர் கோடரி வேந்தனுக்கு வழங்கப் பட்டது.


நல்ல மதுரமாக இருக்கின்றதே... செந்து.
ஆம் கோடரி எங்கள் ஊரின் மண்ணின் மணம்.
தங்களது மனம் போன்ற சுவை செந்து.
சினேகிதர்கள் அனைவரும் கெக் கெக் கெக் கே... எனச் சிரித்தனர்.
செந்துரட்டி தங்களது தோழர் சுவையாக உரையாடுகின்றார்.

சினேகிதர்களே எமது தோழரைப்பற்றி இயம்ப இன்றைய ஒரு தினம் போறா வாழ்நாள் முழுவதும் இயம்பிக் கொண்டும், நகைத்துக் கொண்டும் இருக்கலாம் சிறந்த ஓவியரும்கூட இவரின் ஓவியம் பலரது வாழ்வையே திசை திருப்பி விடும் வல்லமை பெற்றது.
அப்படியா ? அதனைக் குறித்து உரைத்திடுங்கள் செந்துரட்டி.
கோடரி வேந்தன் சிரித்துக் கொண்டே...
செந்து இதில் ஏதும் உள் அர்த்தங்கள் உண்டோ ?
கோடரியாரே எம்மீது சினம் இல்லையே ?
எம்மீது யாம் சினம் கொள்ள இயலுமோ ?
தங்களது தோழர் அழகாக உரையாடுகின்றார்.

இதோ இளநீர் மேலும் அருந்துங்கள் யாத்திரையின் களைப்பு தீரட்டும்.
போதும் செந்து அருந்தி விட்டேன்.
கோடரியாரே தாங்கள் ஒரே நேரத்தில் இளநீர் அருந்துபவராயிற்றே இன்று என்னவாயிற்று ?
போதும் செந்து
நல்லது சினேகிதர்களே எமது உயிர்த் தோழருடன் நிறைய விடயங்கள் கலந்துரையாட இருக்கின்றது இல்லத்தில் எமது அன்னையார் கோடரியாருக்காக காத்திருப்பார்கள் ஆகவே நாம் மீண்டும் நாளை சந்திக்கலாம்.

நல்லது தங்களது தோழரின் பாரத்தை தங்களது இல்லம் வரை கொண்டு வந்து தருகிறோம் புறப்படுங்கள் கோடரி வேந்தரே.
இல்லத்துக்கு வந்ததும் செந்துரட்டியின் தாத்தா, அப்பத்தா, தந்தையார், தாயார், மற்றும் சகோதர சகோதரிகளும் கோடரி வேந்தனை வரவேற்க...
நமச்காரம் தாத்தா பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி கோர அனைவரும் நலமுடன் சீரும் சிறப்புடன் வாழ்வாயாக.

செந்துரட்டி உமது சினேகிதரை மேல்மாடத்துக்கு அழைத்துச் சென்று ஓவ்வெடுக்க வை இரவு உணவுக்கு அழைத்து வருக சிறப்பான உணவை தயார் செய்துள்ளோம்.
நல்லது அன்னையே, கோடரியாரே வாருங்கள் நாம் மேலே செல்வோம் 
மீண்டும் கீழிருந்து உணவருந்த அழைப்பு வர உண்டு களித்து மீண்டும் மேலே வந்து உரையாட தொடங்கினர்.

கோடரியாரே எங்களது இல்ல உணவுகளின் சுவைகள் தங்களுக்கு பிடித்து இருந்ததுதானே ?
ஆம் செந்து நல்ல சுவையான உணவுகள்தான் எனது அன்னையாரின் நினைவு வந்தது.
பிறகு உணவை குறைத்து களித்ததின் காரணமென்னவோ ?
உண்மைதான் செந்து தங்களது பிரிவு எம்மை முற்றிலும் மாற்றி விட்டது இப்பொழுது எம்மோடு உரிமையுடன் இயம்புவதற்கு குருகுலத்தில் யாரும் இல்லை மற்ற மாணாக்கர்கள் யாரும் எம்முடன் உரையாடுவதில்லை தனிமை படுத்தப்பட்டோம் எம்மைக் கண்டால் அச்சத்தால் நடுங்குகின்றனர் பிறகு இதற்கான காரணத்தை ஆராய்ந்தோம் பிறகு புலர்ச்சையில் தானாகவே எழுந்து வதனம் அலம்பி பல் துலக்கிய பிறகு நானே பதனீர் எடுத்து அருந்தினோம், மாணாக்கர்களின் உணவுகளில் எமக்கு பங்கு பெறுவதை நிறுத்தினோம் பிறகுதான் மற்ற மாணாக்கர்களின் தன்மை எமக்கு புலப்பட்டது இப்பொழுது அனைத்து குருகுல மாணாக்கர்களும் எம்மிடம் அன்புடன் இருக்கின்றார்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம்.
மிக்க மகிழ்ச்சி கோடரியாரே என்றும் வேண்டும் இந்த அன்பு.

நள்ளிரவு வரை உரையாடல் ஒலி கேட்டு மேலே வந்த தாத்தா செந்து உமது சினேகிதருக்கு யாத்திரையின் களைப்பு இருக்கும் துயில் கொண்டெழுந்து நாளை உரையாடுங்கள் என்றவுடன்தான் துயில் கொள்ளும் எண்ணம் வந்தது. மறுதினம் முழுவதும் கோடரி வேந்தனும் விவாக வேலைகளில் ஈடுபட்டு மறுதினம் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்தின் மையத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருநிறைச்செல்வன் செந்துரட்டி கோமேத நாதன் – திருநிறைச்செல்வி வள்ளி கொண்ட நாயகி விவாகம் ஊரின் சமீன்தார் தலைமையில் உற்றார் உறவினர் கூட சீரும் சிறப்புமாய் நடந்தேறியது உணவு வகைகள் தேவராய கோட்டத்தையும் விஞ்சிய வண்ணம் பதினெட்டு வகை கூட்டுகள் உறவினர் பலரும் மகிழ்ந்து உரையாடி களித்தனர் திருமாங்கல்யப்பூட்டு நிகழ்ந்து முடிந்ததும் குருநாதர் அளித்த கடுக்கனை கொடுத்த பிறகு
எமது நினைவுப் பரிசாக இந்த ஓவியம் தங்களது இல்லத்தில் என்றும் இருத்தல் வேண்டும் இஃது எமது வேண்டுகோள் மேலும் இதை மணமக்கள் இருவரும் தனிமையில் திறந்து காணுக...
பெற்றுக் கொண்ட செந்துரட்டியின் விழிகளில் கலக்கம் மீண்டும் ஓவியமா ? கோடரிவேந்தன் முருங்கை மரத்தில் ஏறி விட்டாரோ ? இது எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ ? இதை கண்ட கோடரி வேந்தன்...

தொடரும்...

மேலுள்ள இணைப்பு தங்களது கணினியில் இப்படி தெரிந்ததா ?

48 கருத்துகள்:

 1. ஆஆஆஆஆஆஆ இம்முறை மீதான் 2ண்ட்டூஊஊஊஊ:)).. எப்பூடி எனக் கேய்க்கிறீங்களோ? எல்லாம் ஒரு ஊகம்தேன்:)).

  பதிலளிநீக்கு
 2. //மற்றொரு சினேகிதர் அத்திப்பழங்கள் பறித்து வர, இளநீர் கோடரி வேந்தனுக்கு வழங்கப் பட்டது.//

  ஆஹா வரவேற்பு அமர்க்களமாக இருக்கே... அது என்ன ஓவியம் எனக் காணும் ஆவலில் மீயும் வெயிட்டிங்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருந்தோம்பல் முக்கியமல்லவா!
   ஆவலுக்கு நன்றி அதிரா

   நீக்கு
 3. மறுபடியும் வேதாளம் வந்து விட்டதா!...

  செந்துரட்டிக்கு உண்மையிலேயே நேரம் சரியில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மீண்டும் ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பனை காணவேண்டுமோ...

   நீக்கு
 4. கலியாணச் சாப்பாடு
  சிறப்பான விருந்து
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. அருமையான பயணம், அருமையான நட்பு உரையாடல், உபசரிப்பு.

  பெரியவர்களிடம் ஆசி பெற்றது அவர்கள் வாயார வாழ்த்தியது எல்லாம் அருமை.

  திருமணமும் சிறப்பான விருந்துடன் நிறைவு பெற்றது.
  பரிசு ஓவியம் நல்லதாக இருக்கும் என்று நம்புவோம்.
  வாழ்த்துக்கள் மணமக்களுக்கு, நட்புக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 6. ஓவியம் என்னவாக இருக்கும்....? ஆவலுடன்...

  பதிவின் முடிவில் உள்ள காரணக் கதை இணைப்பை எடுத்து விடுங்கள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆவலுக்கு நன்றி
   இணைப்பை நீக்கி விட்டேன்.

   நீக்கு
 7. அனுஅனுவாய் என்று உள்ளதே? அணுஅணுவாய் என்றல்லவா இருக்கவேண்டும்? விருந்தின்போது குறுக்கே வந்ததாக நினைக்கவேண்டாம் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களுக்கு... பிழையை சரி செய்து விட்டேன் நன்றி.

   பிழைகள் எனக்கு தெரியாமலும் நடந்து இருக்கலாம், கவனக்குறைவாலும் நடந்து இருக்கலாம் சுட்டிக் காண்பிப்பதால் வருத்தமோ, கோபமோ இல்லை. காரணம் நான் படிக்காதவன்.

   பிழைகள் தெரிந்திருந்தும் சொல்லாமல் ஒதுங்குவது குற்றமான செயலே... அது தமிழுக்கு செய்யும் துரோகமும்கூட...

   மீண்டும் நன்றி

   நீக்கு
  2. //சீறும் சிறப்புமாய்/

   சீரும் சிறப்புமாய்

   நீக்கு
  3. இதோ மாற்றுகிறேன் ஜி

   நீக்கு
 8. கோடரி வேந்தன் மிக நல்லவராக மாறிவிட்டார். சக குருகுல மாணவர்களிடமும் நல்ல பெயர் வாங்கிவிட்டார். இனி அவர் எது செய்தாலும் அது நன்மையாகவே அமையும். செந்துரட்டிக்கு அன்பளிப்பாகத் தந்த ஓவியத்தால் அமோக நன்மை விளையும் என்பது நிச்சயம்.

  கதையில், அடுத்து வருவது எதிர்பாராத திருப்பமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது அலசல் நன்று. தங்களது நம்பிக்கை வீண்போகாமல் இருக்க வேண்டும் என்பதே எமது அவா!

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  திருமணத்துக்கு செல்லும் கோ. வேந்தருக்கு உபசாரங்கள் பலமாக இருக்கிறதே..மறுபடியும் பரிசாக அளித்த ஒரு ஓவியத்தை கண்டதும் எனக்கே கலக்கமாக உள்ளது. பாவம் மணமகன் செந்துவின் நிலைமை எப்படி இருந்திருக்கும் ஊகிக்க முடிகிறது. எல்லாம் சுபமாக நல்லபடியாக நடந்தால் சரி.. அப்படி என்னத்தான் இருக்கிறது அந்த ஓவியத்தில் என அறியும் ஆவலுடன் தொடர்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தாங்கள் கலங்கவேண்டாம் எல்லாம் நலமாக இறையருள் கிட்டும்.

   நீக்கு
 10. //எமது விசமம் உண்டு /

  விசமம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் விசமம் என்றால் வருத்தம்...மலையாளத்திலும் இந்த வார்த்தை கிட்டத்தட்ட இதே அர்த்தத்துடன் வரும். ஆனால் ச ஷ உச்சரிப்பு அங்கு

   கீதா

   நீக்கு
  2. மலையாளம் சொல்ல நினைத்து வேண்டாசமென விட்டு விட்டதை நீங்கள் எதிர்பார்த்தபடியே சொல்லி விட்டீர்கள்.

   நீக்கு
 11. கோடரிவேந்தன் மனம் மாறி இருக்கிறாரோ? சரி... அந்த ஓவியத்தில் எதுவும் விஷமங்கள் இல்லாதிருக்க வேண்டுவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வேண்டுதல் பலித்த்திட அன்னை அம்பகரத்தாள் அருள் புரியட்டும்.

   நீக்கு
 12. நன்றாகச் செல்கிறது. திருமணமும் நன்றாக நடைபெற்றுவிட்டது. கோடரி வேந்தனும் மாறியிருப்பது போல் தோன்றுகிறது. கோடரி வேந்தனின் ஓவியம்தான் இப்போது சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது. என்னாயிருக்கும் என்று அறிய தொடர்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்துரைக்கும், தொடர்வதற்கும் நன்றி.

   நீக்கு
 13. விறுவிறுப்பான நடை மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 14. கோடரியை கொஞ்சம் கொஞ்சமாக நல்லவராகக் காட்டுகிறீர்களே. இதில் ஏதேனும் விசமம் உள்ளதா?

  ஆமாம்... இளநீர் எப்போதும் கிடைக்கும். நுங்கு எப்படிக் கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ஆவணி நுங்கு காலம்தானே...?
   கிராமத்தில் விருந்தினர் வந்தால் எதையும் பறித்து கொடுப்பது வழக்கம்தானே...

   நீக்கு
 15. ஓவியத்தில் கோடரியார் ஏதும் விஷமம் செய்திருக்கமாட்டார் என நம்புவோம். விவாகம் நல்லபடியாக நடந்தமைக்கும் கோடரியாரின் மன மாற்றங்களுக்கும் வாழ்த்துகள். செந்துரட்டியின் இல்வாழ்க்கை சிறப்பாக அமையவும் விரைவில் கோடரியாரும் திருமணம் முடிக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது நம்பிக்கை வீண்போகாது இறையருள் கிட்டட்டும். செந்துரட்டியை வாழ்த்தியமைக்கும், கோடரியாருக்காக பிரார்த்தனை செய்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 16. மீதி பாதியை அதான் முன் பகுதிகளை வாசிக்கணும் :)
  இருபது அதிரசத்தை சாப்பிட்டதில் நிறுத்தினேன் :)

  இங்கே கடுக்கனை எப்போ தருவீங்கன்னு படிச்சிட்டே வந்தேன் :)
  சரி தொடர்கிறேன் :) முந்தின பகுதிகளை வாசிச்சிட்டே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பழைய பதிவுகளை படித்து விட்டு வரவும்.

   நீக்கு
 17. பதிவு விருந்தோம்பல் நுங்கு நட்புகள் அன்பு என குளுமையாக மனதுக்கு இதமாக செல்கிறது சகோ

  பதிலளிநீக்கு
 18. தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  பதிலளிநீக்கு
 19. அகதிகள வாழும் நரகத்தைதான் தாங்கள் அழகாக தஞ்சம் புகுந்த பட்டணம் என்கீறீர்களோ...????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுது எல்லா நகரங்களும், நரகமாகி விட்டதே நண்பரே...

   நீக்கு
 20. திரு திருமதி செந்துரட்டிக்கு மனம் நிறை வாழ்த்துகள். கோடரி வேந்தன் இதுவரை விஷமம் காட்டவில்லை. அவ்வளவுக் கொடுமைக்காரராக இருக்கமாட்டார். ஓவியம் நல்ல படியே இருக்கும் என்று
  நன்ம்புகிறேன். அருமையான வசன நடை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது நம்பிக்கை வீண் போககூடாது என்று நானும் இறைவனை வேண்டுகிறேன்.

   நீக்கு
 21. நிக்சயம் அந்த ஓவியத்தில் கோடரியாரின் குறும்புத்தனம் இருக்காது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது எண்ணம் சரியாகட்டும்.

   நீக்கு