தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 30, 2019

வாழ்த்துப்பா


வதனம் வளம் பெறவே
வசந்தம் வழி வரவே
வளமை வரும் பெறவே
வலிமை வலம் வரவே

மங்கா மனம் பெறவே
மனதில் மழை வரவே
மனையாள் மகிழ் பெறவே
மகன்/ள் மனை வரவே

இன்பம் இணை பெறவே
இன்னும் இவை வரவே
இமைகள் இசை பெறவே
இன்றே இதம் வரவே

என்றே வாழ்த்தும் அப்பா

விரைவில் அப்பாவாகப் போகும் எமது மகன் தமிழ்வாணனுக்கு இன்று 26-வது பிறந்தநாள் மனையாளுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகவே வழக்கம் போல் தங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும், திருநெல்வேலி பார்சல்களையும் வேண்டி உங்கள் தேவகோட்டை கில்லர்ஜி

69 கருத்துகள்:

 1. வடை எனக்குதானே நாந்தான் ப்ர்ஸ்ட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இம்முறை காத்து அம்பேரிக்காவில அடிக்குது:)... போஸ்ட் வாழ்த்துப் பற்றியது என்பதாலதான் நான் சண்டைக்கு வரவில்லை இங்கு:)...

   நீக்கு
 2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு

  பதிலளிநீக்கு
 3. விரைவில் தாத்தாவாக போகும் கில்லர்ஜிக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 4. உங்கள் மகனின் பிறந்த நாளுக்கு உங்கள் மருமகள் கேக் கட் பண்ணப் போறாங்களா அல்லது அல்வா கொடுக்கப் போறாங்களா? அதுபற்றி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும் மதுர

  பதிலளிநீக்கு
 5. புது மாப்பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அவர் வாழ்வில் என்றும் மகிழ்வும், இன்பமும் பொங்கி வழியட்டும்.. என்றென்றும் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

  அப்பாவாகப்போகிறாரோ அப்போ டபிள் வாழ்த்துக்கள்.. இதனைக் கொஞ்சம் சீக்ரெட்டாக வைத்திருந்திருக்கலாமோ என எண்ணுகிறேன் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அதிரா.

   தங்களது கருத்தை ஏற்கிறேன் அதேநேரம் எனது மகிழ்ச்சியையும், வேதனைகளையும் உங்களுடன்தான் பகிர்ந்து கொள்கிறேன்.

   காரணம் ரத்த உறவுகள் கொடுத்த வேதனைகள்.

   எனது உழைப்பை சாப்பிட்ட உறவுகளின் கண்ணேறு இருந்தால் ?

   அது வலை உறவுகளின் உண்மையான வாழ்த்துகளில் தவிடுபொடியாகும் என்று ஆத்மார்த்தமாய் நம்புகிறேன்.

   இந்த விளக்கம் உங்களுக்கு மட்டுமில்லை அதிரா அனைத்து வலை உறவுகளுக்கும்...

   நீக்கு
  2. பதிலுக்கு நன்றி கில்லர்ஜி.... நீங்கள் பட்ட... படும் மனக் கஸ்டங்களும் வேதனைகளும், செய்த.. செய்யும் நல்ல காரியங்களும் நிட்சயம் நல்ல பலன்களையே உங்கள் பிள்ளைகளுக்குக் குடுக்கும்... அவர்கள் நல்லாயிருப்பார்கள் என்றென்றும்....

   நீக்கு
  3. தங்களது மீள் கருத்துரை மனதுக்கு நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

   நீக்கு
 6. தங்களது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் நண்பரே.
  அல்வா பார்சலுக்கு பதில் எனக்கு மிகவும் பிடித்த(?) உப்புமாவை பார்சல் அனுப்புகிறேன்.

  வழக்கம் போல் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
   உப்புமாவுக்கு பதிலாக ஆஸி டாலரை அனுப்பலாமே...

   நீக்கு
 7. விரைவில் தந்தையாகப் போகும் உங்கள் மகனுக்கும், விரைவில் தாத்தா ஆகப் போகும் கில்லர்ஜிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள், பிரார்த்தனைகள்! என்றென்றும் மகிழ்ச்சியோடும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோ

   நீக்கு
 8. "புது மாப்பிள்ளைக்கு... நல்ல யோகமடா...
  அந்த மணமகள்தான் வந்த நேரமடா..."

  பாடலின் இந்த வரிகளை மட்டும் டெடிகேட் செய்கிறேன்.

  உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தாத்தாவாகப் போகும் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். அம்மாவாகப்போகும் உங்கள் மருமகளுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 9. தங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  தாத்தாவாகப் போகும் தங்களுக்கும் தனி நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருவரையும் வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 10. ஹை! உங்கள் மகனுக்கு இனிய மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துகள் கில்லர்ஜி. உங்கள் மகன் அப்பாவாகப் போவதுட, உங்கள் மருமகள் அம்மாவாகப் போவது நீங்கள் தாத்தாவாகப் போவது எத்தனை மகிழ்வான விஷயம்!! தாத்தா ஸ்தானம் என்பது மிக மிக அருமையான ஸ்தானம் ஜி. என் தாத்தா,அப்பாவின் அப்பா நினைவுக்கு வருகிறார். நான் என் தாத்தாவின் அன்பில் திளைத்தவள் என்பதால் சொல்லுகிறேன்!

  மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் எல்லாம் நல்லபடியா நடக்கவும் பிரார்த்தனைகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்களுக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 11. மகனின் பிறந்த நாளில்.....

  வாழ்த்துக்கவி பாடி மகிழ்ந்த, மகிழ்வித்த கில்லர்ஜிக்கு என் வாழ்த்து.

  தமிழ்போல் பல்வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட தந்தையாகப்போகும் தமிழ்வாணனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் மகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி ஜி

   நீக்கு
 14. தங்களின் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு...

   நீக்கு
 15. உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துக்கள், ஆசிகள்,
  நல்ல செய்தி சொன்னதற்கு.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ .
  உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி சகோ

   நீக்கு
 16. மகனுக்கு இனிய பிறந்தநாள்.... எல்லா வளங்களும் பெறட்டும். குறிப்பாக குடும்பத் தலைவனாகப் பரிமளிக்கட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு...

   நீக்கு
 17. //திருநெல்வேலி பார்சல்// - கில்லர்ஜி...இதுதானே வேணாம்கறது. நான் தினமும் எனக்கு தேவகோட்டைலேர்ந்தோ பரமக்குடிலேர்ந்தோ திருமண இனிப்புகள் கொரியரில் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நீங்க பிஸி என்று சொல்லும்போது, நீங்கள்தான் எல்லோருக்கும் இனிப்புகளை சைக்கிளில் (கார்னா சீக்கிரம் வந்திருப்பீர்களே) கொண்டுவந்துகொண்டிருக்கிறீர்கள் என்று ஆறுதல் பட்டுக்கொண்டிருந்தால்..... நாங்க அனுப்பணுமாமில்ல... அநியாயமா இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க... ?

   திருநெல்வேலி அல்வா பார்சல் வரும் என்று நினைத்தேன்.

   நீங்க அல்வா கொடுக்குறீங்களே...

   நீக்கு
 18. மகிழ்வே வரவாக
  நிறைவே உறவாக
  மனையே துணையாக
  மகவே இணையாக
  தமிழே தலையாக
  வாழ்வாய் கலையாக!...

  தமிழ்வாணனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது வாழ்த்துப்பா அருமை

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  தங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. துணைவியுடன் கொண்டாடும் தங்கள் மகனின் முதல் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ உளமாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பிறந்த நாள் பரிசாக தங்களுக்கு தாத்தா என்ற பெருமை மிகும் பட்டத்தை தந்துள்ளார். தங்களுக்கும், அவருக்கும், அவர்தம் துணைவியாருக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   கவிதையை ரசித்தும், எங்களை வாழ்த்தியமை கண்டும் மற்றட்ட மகிழ்ச்சி.

   நீக்கு
 20. மருமகனுக்கு வாழ்த்துகள்...

  கில்லர்ஜி அண்ணா இனி யூத் இல்லியோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.
   ஏன்... நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு.

   நீக்கு
 21. தங்கள் மகனுக்கு இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நல்லாரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்களை தாத்தாவாக்கியமைக்கும் வாழ்த்துக்கள். மகனுக்கான கவிதை அருமையாக எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வாழ்த்துகளுக்கும், கவிதையை பாராட்டியமைக்கும் நன்றி.

   நீக்கு
 22. தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ .
  நல்ல சந்தோஷமான விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க .இறை ஆசீர்வாதங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் .வாழ்த்து கவிதை அருமையா இருக்கு
  பதிவு நேத்தே வந்திருக்கு நானா கவனிக்காம இருந்திட்டேன் .பூசார்தான் தகவல் அனுப்பி விட்டார் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   தகவல் தந்த பூசாரிக்கும் நன்றி.

   நீக்கு
 23. மகனுக்கு இனிய பிறந்த நாள் வழ்த்து.
  தாத்தாவுக்கும் இனிய வாழ்த்துகள்.
  wellcome to my site

  பதிலளிநீக்கு
 24. அன்பு தேவகோட்டை தாத்தாவுக்கு, அன்பு தேவகோட்டை அப்பாவுக்கும் அவர்து மனையாருக்கும் இனிய வாழ்த்துகள் குடும்பம் பெருகி மகிழ்ச்சி நிறையட்டும் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாக்கு நிச்சயம் நிறைவேறும்.

   நீக்கு
 25. அப்பா ஆகப்போகின்றவருக்கு அப்பாவின் வாழ்த்து அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை பாராட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றி

   நீக்கு
 26. அன்பின் கில்லர் ஜிக்கு மகனுக்கு என் வாழ்துகளைத் தெரிவிக்கவும் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது வாழ்த்து கிடைப்பது பெரும் பேறு.

   நீக்கு
 27. நாங்களும் வாழ்த்துகிறோம்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 28. தம்பிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தில் புதிய தலைமுறை முகிழ்க்க இருப்பது அறிந்து மிக மிக மகிழ்ச்சி! குழந்தையின் கொள்ளைச் சிரிப்பு உங்கள் மனத்தின் எல்லாக் காயங்களையும் வடு தெரியாமல் ஆற்றும்! மழலை வந்ததும் படம் பகிருங்கள்! பார்த்து மகிழ்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 29. விரைவில் தந்தையாக இருக்கும் தங்கள் மகனுக்கும், பாட்டனாராக பதவி உயர்வு பெற இருக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 30. மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மழலைச் செல்வத்தை எதிர்நோக்கும் தம்பதியருக்கும் வாழ்த்துகள் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 31. விரைவில் அப்பா ஆகும் தமிழ்வாணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!!

  பதிலளிநீக்கு