தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 05, 2019

காது குத்தும்போது...ணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும் அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர் பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில் இருக்கிறது..

 சீரூந்திலிருந்து நான் கண்ட முதல் காட்சி.
 முகப்பில் நிறுத்தினேன்.
பின்புறம் மசூதியை கண்டேன்.

 கோவில் நிர்வாக அலுவலகம்.
ஊரின் அழகு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. காரணம் கோவில் காற்றோற்றமாக அமைந்திருந்த சூழல். ஊரில் உள்ள பல சமூகத்தினரும் ஒற்றுமையாக இணைந்து பிரச்சனைகள் வராமல் நிர்வாகம் செய்வதால் அறநிலையத்துறையின் தலையீடு இல்லாமல் சிறப்பாகவே விழாக்கள் நடைபெறுகின்றது. இக்கோவிலுக்கு உலக அளவில் பக்தர்கள் இருக்கின்றார்கள் என்பதை கோவிலில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. மேலும் நன்கொடைகளும் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குதிரை வீரன் எங்கசாமி.
கோவில் கொடிமரம்.

நன்கொடையாளர்கள்.


நாங்க ரெடி நீங்க ரெடியா ?


கோவிலின் மையத்தில் பல வகையான மரங்கள் இருக்கின்றன இயற்கையான காற்றையும், நிழலையும் வழங்குகின்றது. எத்தனை ஆயிரம் நபர்கள் வந்தாலும், தங்கி, சமைத்து உண்ணுவதற்கு சமையல் கூடாரங்களும், கட்டடங்களும், மற்றும் கழிவறை வசதிகளும் இருக்கின்றது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு எந்த பொருளை வைத்து விட்டு சென்றாலும் யாரும் எதையும் எடுக்கமாட்டார்கள். மறுமாதம் வந்து கேட்டாலும் நமது பொருள் கோவில் நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இங்கு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் ரசீதுகள் கொடுக்கின்றார்கள்.


 தோலை உறிச்சுப்புடுவேன்.
 இளைப்பாறும் பைரவர் (கண்ணழகியின் உறவினர்)
 கோவிலின் வெளிப்புறங்கள்.


 வெள்ளந்தி மனிதர்கள்.
 குத்தினா கத்துவேன்.
கத்தினாலும் குத்துவோம். 
குத்திப்புட்டோம்ல...

இக்கோவிலில் முப்பத்திஆறு அடி உயரத்தில் ஐம்பது லட்ச ரூபாயில் தங்கத்திலான கொடிமரம் செய்து வைத்து இருப்பது சிறப்பு. கோவிலின் மற்றொரு அதிசயம், கருவறையில் கூரை கிடையாது திறந்த வெளியாகவே உள்ளது மழையோ, வெயிலோ வழக்கம் போலவே பூஜைகள் நடைபெறும். காற்றோற்றமாக உலாவி புகைப்படங்கள் எடுத்து வரும்போது வெள்ளந்தி மனிதர்களை கண்டேன். அருகிலேயே ஊரணி அதன் மையத்தில் கிணறு இருக்கிறது. நீர் நிலத்திலேயே வடிகாலாகி கிணற்றின் உள்ளே குடிநீராக மருகி ஊற்றெடுத்து கிராம மக்களின் தாகம் தீர்க்கிறது. கோவிலின் உட்புறங்கள்.


 ஊரணில் நீர் அருந்தும் மரங்கள்.
 தூரெது... வேரெது...


கிணற்றிலிருந்து கோவிலை நோக்கி...

சற்றே தொலைவில், மசூதியும், சர்ச்சும் இருப்பதையும் கண்டேன். கோவிலில் காது குத்தி, பொங்கல் வைத்து பூஜைகள் முடிந்ததும் இரண்டு ஆடுகள் விருந்துக்கும் தயாராகின. எமக்கு ஆட்டுக்கறி பிடிக்காது என்றாலும் சமையல் கூடாரத்தில் அத்தான் இலையில் அள்ளி வைத்து கொடுத்த ரெண்டரைக் கிலோ கறியை மட்டும் வேறு வழியின்றி தின்றேன். மற்றவைகளை சாப்பிடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதற்காக சிலர் சுதியோடும், நான் சுதாரிப்போடும்.


 ஊரணியின் மையத்தில் குடிநீர் கிணறு.
 ஊரணியின் மையத்தில் நின்று எடுத்தேன்.
 எல்லோரையும் சுட்டவரை நான் சுட்டேன்.
 கேமராவால் சுடப்பட்ட ஆட்டு உரல்.
நெருப்பால் சுடப்படும் ஆட்டு ஈரல்.
 சமையல் கூடாரங்கள்.
 சமையல் கலைஞரின் பின்புறமிருந்து...
 நாங்கள் கட்டிங்கோடு
உணவருந்தும் கட்டிடம். 
கோவில் வாசலில் கட்டிய வாழைஇலை மசூதியை தொடுகிறதே...

காணொளி

அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க

தேவகோட்டை கில்லர்ஜி

87 கருத்துகள்:

 1. ஆஹா என்ன அருமையான சூழல்... எவ்ளோ அழகிய கோயில்... அங்கேயேதங்கவேண்டும் போல இருக்குமே...
  கில்லர்ஜியின் பேத்திக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக அங்கு தங்கும் ஆசை பிறந்தது அதிரா வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. கில்லர்ஜி.... வெளிநாட்டில் வெகு நாட்கள் கழித்து, எனக்கு கிராமம், சாதாரண ஊர் இவைகளைப் பார்த்தால் இங்கேயே வீடு வாங்கித் தங்கிவிடுவோமான்னு தோணுது. மனதில் ஒரு கிராமியத்தான் வாழுகிறான்.

   உங்களுக்கும் அப்படியே என்று நினைத்து சந்தோஷம்தான்.

   நீக்கு
  3. ஆம் நண்பரே நானும் தேர்வு செய்து விட்டேன் உத்திரகோசமங்கையிலிருந்து... எட்டு கி.மீ தூரமுள்ள இதம்பாடல் கிராமம்.

   பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு சென்று வந்து பதிவு தருகிறேன்.

   அபுதாபியில் இருந்தாலும் ஹைடெக் சிட்டியை விரும்பியதேயில்லை.

   நீக்கு
 2. கோயில் வளவிலேயே மே மே உரிப்பது கொடுமையாக இருக்கு...
  /////சமையல் கூடாரத்தில் அத்தான் இலையில் அள்ளி வைத்து கொடுத்த ரெண்டரைக் கிலோ கறியை மட்டும் வேறு வழியின்றி தின்றேன். ////
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
 3. வீடியோவில், கில்லர்ஜியின் காரில் சாய்ந்தபடி ஒருவர் கண்ணாடியில் அடிப்பதுபோல தெரியுதே:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை அவர் மண்வெட்டியை குனிந்து எடுக்கிறார்.

   காணொளியில் எனது கைவண்ணம் ஏதும் புரிந்ததா ?

   நீக்கு
 4. வழமையாக எழுத்துப் பிழை விடமாட்டீங்க, இம்முறை அதிகமாக விட்டிருக்கிறீங்க ஏன்....

  சில படங்களில் மட்டுமே உங்கட பெயர் பொறித்திருக்கிறீங்க, ஏனையவற்றில் இல்லையே ஏன்....

  தோட்டோரிருக்கும் காது... உங்கட உகண்டாக் கொழுந்தியாரோ?:)... முகத்தைக் காணவில்லையே ஏன்....:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைகளை ஸ்ரீராம்ஜி போல குறிப்பிடலாம் தயக்கம் வேண்டாம்.

   பெரும்பாலும் எல்லா படங்களிலும் திருநாமம் பொறிப்பதில்லை (எண்ணைச் செலவு மிச்சமாகுமே)

   கொழுந்து, முகத்தை பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை கூச்சசு'பாவம்'

   நீக்கு
 5. /////அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க

  தேவகோட்டை கில்லர்ஜி/////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 2500 கிராம் சாப்பிட்டுப்போட்டுப் பேசுற பேச்சோ இது?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவிகளும் உண்டு, குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் புலவிகளும் உண்டு"

   என்று நண்பர் நெல்லைத்தமிழர் நினைக்ககூடும்.

   நீக்கு
 6. வணக்கம் கில்லர்ஜி...

  உங்களுக்குக் காது குத்த முடியுமா ஹா ஹா ஹா ஹா

  படங்கள் செமையா இருக்கு...ஐயானார், மசூதி அழகா இருக்கு....ஒவ்வொன்னா பார்த்துட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும்கூட நான் அசந்தநேரம் குத்திட்டாங்களே...

   நீக்கு
 7. இப்படி பொசுக்குன்னு முடிச்சுபுட்டீங்களே .இன்னும் கொஞ்சம் தொடரும்முன்னு எதிர்பார்த்தேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐம்பது படங்கள் வெளியிட்டு இருக்கிறேன் நண்பரே...

   நீக்கு
 8. ஹை எங்க கண்ணழகியின் உறவினரை ஃபோட்டோ எடுத்து இங்கு காட்டி கண்ணழகியையும் அவள் அம்மாவையும் மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி!! ஹா ஹா

  என்ன சுகமான நித்திரை!!

  அந்தக் குளம் அழகாக இருக்கிறது. கில்லர்ஜி.

  இன்னும் படங்கள் முழுவதும் பார்த்து முடிக்கலை.

  சகோதரியின் காதுகுத்தல் விழா இனிதே நடந்ததற்கு வாழ்த்துகள்!

  ஊர் அருமையான ஊர் போலத் தெரிகிறது. அட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருவிழாக்கள் நடப்பது நல்லவிஷயம் ஜி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையாகவே உங்களது கண்ணழகியினா நினைவு வந்தது.

   இன்றும் சில கிராமங்கள் ஒற்றுமையாக வாழ்வது உண்மைதான்.

   நீக்கு
 9. நாங்கள் கட்டிங்கோடு///

  அப்படினா என்ன கில்லர்ஜி?

  ஊரணி/குளம் அந்தக் கிணறு அழகா இருக்கு நிறைய தண்ணீர் இருக்குமே...இப்போதெல்லாம் தண்ணீர் இருக்கும் கிணறுகள் பார்க்க அரிதாகிடுச்சு..ஊரணியும் அதைச் சுற்றி மரங்கள் அடர்ந்த சோலை பார்க்கவே ரம்மியமாக இருக்கு கில்லர்ஜி...

  கூரை இல்லாத கருவறை அட! சூப்பர். கோயில் உட்புறம் எல்லாம் அழகாக இருக்கிறது. சாப்பாட்டுக் கூடமும் சுத்தமாக இருக்கிறது...

  ரொம்ப எஞ்சாய் செஞ்சுருப்பீங்கனு தெரியுது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நாங்கள் கட்டிங்கோடு//

   அதாவது வாழையிலை பேசுகிறது தன்னை 'கட்' செய்து வைத்து விட்டதாக...

   ய்யேன் அதிரா மாதிரி யோசிக்கின்றீர்கள் ?

   உண்மை உடன் திரும்புவோம் என்று போனவன் இறுதிவரை கூடவே இருந்தேன்.

   நீக்கு
 10. மிக அழகான இயற்கைக் சூழலில் அமைந்துள்ள கோவில் என்று தெரிகிறது. ரைமிங்கோடு நீங்கள் கொடுத்திருக்கும் கேப்ஷன்கள் ரசிக்க வைத்தன. கோவிலின் சுத்தம் கண்களையும் மனதையும் கவர்கிறது.

  பதிலளிநீக்கு
 11. தூரெது வேரெது ... படம் அற்புதம். இன்னும் க்ளோசப்பில் ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூறு படங்கள் எடுத்து ஐம்பது படங்கள் வெளியிட்டேன் ஜி

   நீக்கு
 12. முப்பத்தி ஆறு அடி என்பதற்கு பதிலாக முப்பத்தி ஆறு இடி என்று இருக்கிறது. மாற்றி விடுங்கள் ஜி.

  பதிலளிநீக்கு
 13. சாயல்குடி ஊர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். தொழில்முறையில் புகழ் பெற்ற ஊரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொழில் என்றால் பனை மரங்கள் அதிகம் ஆகவே கள் இறக்குதல் சொல்லலாம்.

   நீக்கு
  2. நுங்கு வெட்டுதல், பதனி இறக்குதல் - இதெல்லாம் கில்லர்ஜிக்கு தொழிலாத் தெரியலையா? என்ன அநியாயம்

   நீக்கு
  3. ஆம் நண்பரே சொல்ல மறந்து விட்டேன் மன்னிக்கவும்.

   நீக்கு
 14. கிராமப் புறம் மிக அழகு. இத்தனை நபர்கள் ஒற்றுமையாகக் கோவிலைப் பராமரிப்பது மிக அருமை.
  காது குத்திக் கொண்ட பாப்பாக்கு என் வாழ்த்துகள்.
  ஊருணியும் , கிணறும் மிக மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா மிக்க நன்றி குழந்தையை வாழ்த்தியமைக்கு...

   நீக்கு
 15. கோயிலும் சுற்றுப்புறங்களும் அழகாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கின்றன. படங்கள் எல்லாம் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். குழந்தைக்கு எங்கள் ஆசிகள்/

  பதிலளிநீக்கு
 16. இங்கே வெட்டவெளியில் அம்மன் இருப்பதைப் போல் திருச்சியில் உறையூரிலும் வெக்காளி அம்மன், வெயில், மழை, குளிர் எல்லாக் காலங்களிலும் மேலே கூரை இல்லாமல் இருந்து அருள் பாலிக்கிறாள். அவளும் சக்தி வாய்ந்த அம்மன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திறந்தவெளி கருவறை நான் முதன்முறையாக காண்கிறேன்.

   நீக்கு
  2. மாயவரம் வனத்துர்க்கை கோவிலில் அம்மன் இருக்கும் கருவரையில் மேல் விதானம் கிடையாது.
   மிக அழகிய சக்தி வாய்ந்த அம்மன் கோவில்.

   நீக்கு
  3. கோவில் பேர் கதிராமங்கலம் வனத்துர்க்கை

   நீக்கு
  4. தங்களது மேலதிக தகவல்களுக்கு நன்றி சகோ.

   நீக்கு
 17. அனைத்து படங்களும் மிக அழகு.
  ஊரணியில் நீர் அருந்தும் மரங்கள் அழகு.
  ஊரணியில் நடுவில் குடிநீர் கிணறு மிக மிக அருமை.
  படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்த கருத்துகளும் மிக ருமை.
  காணொளி மிக அருமை.
  எப்போதும் குலதெயவம் கோவில் மிக ரம்மியமாய் இருக்கும்.

  மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   இந்த கோவில் பல சமூகத்து மனிதர்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது.

   நீக்கு
  2. பார்த்தேன் பலகையில் .
   எங்கள் கோவிலுக்கும் பல சமூகத்து மனிதர்கள் வருவார்கள்.
   பங்குனி உத்திரத்தின் போது.
   ஊருக்கு சொந்தமான கோவிலை ஊர் மக்கள் சுத்தமாக வைத்து இருப்பது நன்கொடைகளை வாரி வழங்கி நன்றி செலுத்தியது எல்லாம் பாராட்ட வேண்டும்.

   நீக்கு
  3. ஆம் மீள் வருகைக்கும் நன்றி

   நீக்கு
 18. இப்படியான இயற்கை சூழலில் வளர்ந்து வாழ்கின்ற மனித சமுதாயம் செயற்கையில் செருக்குற்று சீரழித்துக் கொள்கிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி எனக்கும் இவைகள் அடிக்கடி தோன்றும் எண்ணங்களே...

   நீக்கு
 19. கிராமத்தில் பல சமுதாயத்து மக்களும் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 20. குத்தினால் கத்துவேன், காத்தினாலும் குத்துவோம் //
  ரசித்தேன் அருமை.

  தூரது வேரது அருமை.
  மரத்தை தாங்கும் விழுதுகள்.

  பதிலளிநீக்கு
 21. அருள்மிகு உமைய நாயகி அம்மன் திருக்கோவில் கண்டேன் ...அழகு அற்புதம்

  எங்க அய்யனார் கோவில் சென்று வந்த நிறைவு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 22. அனைத்திற்கும் ரசீது சிறப்பு...

  கோவில் வாசலில் கட்டிய இலை மசூதியை தொடும் படம் அதைவிட சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 23. காணொளியில் பறவை பறப்பதை அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.
  ஊரணி கரையை உயர்த்தும் வேலையா? வெள்ளந்தி மனிதர்களுக்கு. மண்வெட்டி, மற்றும் கொத்தும் கருவிகளுடன் இருக்கிறார்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஊரணி பராமரிப்பு வேலை நடந்தது. எல்லாமே எனது அலைபேசியில் எடுத்தேன்.

   நீக்கு
 24. கோவில், ஊரணி, என அழகான இடம்.படங்களும் அழகாக இருக்கு. எங்க ஊர் சாயல். பாப்பவுக்கு என் வாழ்த்துக்கள். இலை மசூதியை தொடும் இலை நீங்க எடுத்த படமா..ஊரணியின் மையத்தில் கிணறு படம் அழகு. வீடியோவில் கமரா.கலர்வண்ணம்...,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மசூதியை கோவிலில் இருந்து காணவும் இந்த யோசனை தோன்றியது எல்லாமே நானே எடுத்ததே...
   காணொளி தொகுப்பு வேலைகளும் நானே..

   நீக்கு
 25. கோவில் அமிஷேகத்தை முழுமையாக்க் காணக்கூட உங்களுக்குப் பொறுமை இல்லையா? மட்டையாக் கிடக்கறவங்களையும், பிரியாணி எந்த லெவல்ல இருக்குங்கறதையும் காணொளில சேர்த்திருக்கீங்களே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் காணொளி எடுக்க தொடங்கும்போதே... கோவில் காவலர்கள் படம் எடுக்ககூடாது என்று தடுத்து விட்டனர்.

   அபிஷேகம் சுமார் ஒருமணி நேரம் நிகழ்ந்தது எல்லோரும் நின்று கண்டு தரிசித்தோம்.

   அவர்கள் எல்லோரும் உணவருந்தினார்கள்.

   நீக்கு
  2. அப்படியா? கொஞ்ச நேரம் வந்தாலும் அபிஷேகம் மிக அழகா இருந்தது. ஆமாம்... இதுக்கு உங்க வாரிசுகள் வந்திருந்தாங்களா?

   நீக்கு
  3. இல்லை நானும், எனது தங்கையும் மட்டுமே சென்று வந்தோம்.

   அபிஷேகத்தில் இவ்வளவு வகைகள் உள்ளதை இன்றே தெரிந்து கொண்டேன்.

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  பதிவு மிக மிக அருமையாக இருக்கிறது. துல்லியமான படங்களும், அதற்கேற்ற வார்த்தை வர்ணனைகளும் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

  கோவில் மிகவும் சுத்தமாக உள்ளது. ஊரணி நீர்நிலை, கிணற்றின் அமைப்பு என அனைத்தும், மிகவும் தூய்மையாக பெரிதாகவும் உள்ளது. மரங்களின் அழகு கண்ணைக் கவர்ந்தது.

  ஊரணியில் நீர் அருந்தும் மரங்களும், தூரெது, வேரெது என அடையாளமின்றி படர்ந்திருந்த விழுதுகளும் காண்பதற்கு மிக அழகாக இருக்கின்றன.

  எம்மதமும் சம்மதமாக இலை தொட்ட மசூதி படம் மிக அருமை. மிகவும் அழகாக கலையுணர்வோடு அத்தனைப் படங்களையும் எடுத்துள்ளீர்கள். புகைப்படம் எடுத்த தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்

  காது குத்திக் கொண்ட குழந்தைக்கு மனம் நிறைந்த ஆசிர்வாதங்கள்.

  பதிவையும், படங்களையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து கருத்துரை இட்டமை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 27. குல தெய்வம் கோயில் இவ்வளவு பெரிசா இருக்கே ....
  சுற்றுச் சூழலும் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இது எங்கள் குலதெய்வம் அல்ல சகோதரியின் குலதெய்வக்கோவில்.
   விரைவில் எங்கள் குலதெய்வக்கோவில் விழாவை வெளியிடுவேன். வருகைக்கு நன்றி

   நீக்கு
 28. காதில் குத்தியிருந்த தங்கக் காது படம் அருமை....... கடவுளின் அத்தாரிட்டியான மேற்படியாளர்க்கு அந்தக் கோயிலின் வருமானம் தெரியவில்லையோ..????????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெதுவாக பேசுங்கள் நண்பரே விசயம் அங்கே போயிடப்போகுது.

   நீக்கு
 29. கிராமிய சூழல் மனதைக் கவர்ந்தது. எத்தனை அழகான கிராமம். அங்கே சென்று தங்கிவிடத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் கிராமத்தில்தான் அழகிய வாழ்க்கை இருக்கிறது.

   நீக்கு
 30. சீருந்து அல்ல. அது மகிழ்வுந்து. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த இரண்டு வார்த்தைகளுமே உபயோகத்தில்தான் இருக்கிறது. வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 31. கோவிலைப் பற்றியும், ஊரைப்பற்றியும் உங்களது வர்ணனையும், படங்களும் அட்டகாசம்.
  ஒரு காதில் இத்தனை அணிகளா? என்று வியக்க வைத்தது ஒரு படம். காதணி அணிந்து கொண்டு கிளம்பவே அதிக நேரம் ஆகுமே அந்த பெண்ணுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இவளது கணவனின் நிலையை நினைத்துப் பார்த்தமைக்கு நன்றி.ஏ

   நீக்கு
  2. எனக்கு காது குத்தினதே இல்லை என்பதைப் பகிர்கிறேன் திருமலையில் என் இரண்டாம் பேரனுக்கு என்மடியில்வைத்து காது குத்த அவன் மூச்சுத் திணறி அழுததே நினைவுக்கு வருகிறது

   நீக்கு
  3. வாங்க ஐயா தங்களது நினைவுகளை மீட்டி விட்டதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 32. சாயல்குடிபற்றி கட்டபொம்மன் படத்தில் கூறியுள்ளார்கள். உங்கள் பதிவில் கூடுதல் செய்திகள் உள்ளன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆம் எனக்கும் நினைவு வருகிறது.

   கயத்தாறு, எட்டையபுரம் அவ்வழிதான்.

   நீக்கு
 33. நண்பரே சற்று வேலை பளுவின் காரணமாக இந்த வாரம் முழுவதும் வலைப்பக்கத்துக்கு வர இயலவில்லை.

  கத்தினாலும் குத்துவோம்னா - குத்தினாலும் கத்துவோம்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் குத்திப்புட்டோம்ல இனி கத்திட்டு போலே...

   நீக்கு
 34. ஒவ்வொரு படமும் அச்சிறு கிராமத்தின் அழகையும், கோயிலின் எழிலையும் உணர்த்துகின்றன
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிக்க நன்றி தங்களின் கருத்துரைக்கு...

   நீக்கு
 35. வணக்கம் ஜி !

  அழகிய இடங்கள் கிராமம் என்றால் அழகுதானே இல்லையா ? ஆமா குத்தினால் கத்துவேன் கத்தினாலும் குத்துவோம் ! வை திஸ் கொலவெறி ஜி !

  ஆமா இப்போ விடுமுறையிலா வந்திருக்கீங்க ?

  வாழ்க நலம் ஜி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே...
   செலவு செய்வதே காதை துளையிடத்தானே... விடுவார்களா என்ன ?

   நான் விசா ரத்து செய்து வந்து இரண்டு வருடங்களாகிறது கவிஞரே

   நீக்கு
 36. இயற்கைச்சூழலில் அமைந்த அருமையான நிகழ்வினைப் பகிர்ந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. எங்கள் பேரன்களுக்குக் காது குத்திய நினைவு வந்தது. இவை போன்ற நினைவுகள் மறக்கமுடியாதவையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எமது பதிவு முனைவர் அவர்களின் குடும்ப நினைவை மீட்டி விட்டமை அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 37. அழகிய படங்களும் அதற்கு தாங்கள் தந்திருக்கின்ற தலைப்புகளும் அருமை! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு