தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 26, 2015

கக்கு Soap

 
T.V. விளம்பரம்
உங்கமேல ஊழை நாத்தம் நாறுதா ?
ஆ.. ஆமா லேசா...
நீங்க உபயோகிக்கிற சோப்புல புளிப்பு இருக்கா ?
சோப்புல புளிப்பா ?
ஆமா, இப்ப வர்ற கக்குசோப்புல புளிப்பு இருக்கு இதுல உள்ள பித்தளைச்சத்து, உங்கமேனியை பளப்பளன்னு தங்கம்போல ஜொலிக்க வைக்கிறதோட உங்க மேனியில சந்தனவாசத்தையும் கொடுக்குது இப்பவே முந்துங்க,
 
ஒருசோப்பு வாங்கினா 10 ரூபா
ரெண்டுசோப்பு வாங்கினா 20 ரூபா
மூணுசோப்பு வாங்கினா 30 ரூபா
நாலுசோப்பு வாங்கினா 40 ரூபா
அஞ்சுசோப்பு வாங்கினா 50 ரூபா
மொத்தமாக 6 சோப்பு வாங்கினா ஒரு SCRAPPER இலவசம் இச்சலுகை இம்மாதம் பிப்ரவரி 31 ந்தேதி முதல். 
 
ஆம், இந்தியாவில், இப்பொழுது 100 ரில் ஒருடாக்டர் அரைமனதுடன் சிபாரிசு செய்வது கக்கு சோப்பு மட்டுமே.
 
திரைப்படநடிகர் விவேக் -
அடப்பேதியில ஓயிறுவியலா... இரும்புச்சத்து இருக்குறதாலே பித்தளைச்சத்தும் இருக்குனு சொல்றியலடா, உங்க விளம்பரத்தைத் பார்த்துப்புட்டு எம்பொண்டாட்டி கொழம்பு வைக்கும்போது புளி இல்லாததால, கக்கு சோப்பை கரைச்சுப்போட்டு வைச்சிட்டாலேடா அதனால தானடா நான் இப்ப பேதி வந்து ஆஸ்பெட்டல்ல கெடக்கேன் இப்பவே பாதி  உயிர்போயிருச்சே... இதவிட்டு வெளியே போறதுக்குள்ள மீதி உயிரு போயிரும் போலயே, இதகேக்க ஒருநாதியும் இல்லையா ? எஞ்ஜாதிசனத்துட்ட சொல்லி உங்களை என்ன செய்யுறேன் பாருங்கடா...
 
நண்பர்களே... மேலே உள்ளதை படித்து சிரிப்பு வரவில்லையெனில் கீழே காணொளி கண்டு சிரியுங்கள்.
Video


69 கருத்துகள்:

 1. ஹா... ஹா...

  எதையும் நம்புவார்கள், Feb. 31-யையும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நீங்க நம்பலைபோலயே... அதுனாலேதான் பாய்ண்டை புடிச்சு சொல்லிட்டீங்க.

   நீக்கு
 2. தமிழ் மணத்தில் ஒன்று...
  கக்கு சோப்புல பித்தளைச் சத்தா? சரிதான்...
  விவேக் நகைச்சுவை கலக்கல்.. கலக்கல்ன்னா பேதியில்லை அண்ணா அருமை...
  அந்த காணொளி பலமுறை பார்த்து ரசித்ததுதான் என்றாலும் இங்கும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தமிழ் மணத்தில் ஒன்று வைத்து நீங்களும் கலக்கிட்டீங்க...

   நீக்கு
 3. ஜி..

  நிஜமாகவே நேத்து தான் நெனைச்சுக்கிட்டு இருந்தேன்..

  பற்பசையில உப்பு இருக்கா.. சாம்பல் இருக்கா.. செங்கல் பொடி இருக்கா.. ன்னு கேட்டுக்கிட்டு இருக்கானுங்களே!..

  திடீர்ன்னு ஒரு நாள் - எங்களையே நம்புறீங்களே உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கான்னு.. கேட்டுவானோ.. அப்படின்னு!..

  தில்லாலங்கடி டான்ஸ் ஆடிக்கிட்டே - வெளம்பரம் செய்ற சாமான்களை வாங்கியாந்தா - இப்படித்தான் வீடு வெளங்கிடும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரையை படித்து குபீர் சிரிப்பு வந்து விட்டது நண்பரே... உண்மையிலேயே ஒருநாள் கேட்பாங்களோ....

   நீக்கு
 4. எங்கே சாம்பசிவ சாமிய.. ஆளக் காணோம்!..
  பொட்டியத் தூக்கிக்கிட்டு ஊருக்குப் போய்ட்டாரா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இந்த வசனம் சாம்பசிவத்தை விட விவேக் சொன்னால் பொருத்தமாய் இருக்குமென செய்தேன்.

   நீக்கு
 5. ஜி..

  காணொளி இப்ப தான் பாக்க முடிஞ்சது..

  இது ரொம்ப பழசாச்சே!..
  நமக்கு வெச்சது போக மீதிய அவனுங்களே வெச்சுக்கிறது சிறப்பு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது சரியே... மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 6. வணக்கம்
  கலக்கி விட்டீங்கள்... விளம்பரம் நன்று... நான் நம்பி விட்டேன்.. பின்புதான் பார்த்தேன் இப்படி சம்பவம் என்று .சபாஷ்.....த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபன் வருகைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி.

   நீக்கு
 7. பிப்ரவரிக்கு வரி போட்டுட்டாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரி போட்டவனை மார்சுவரிக்கு அனுப்பிடுவேன் அதனாலே போடமாட்டான் ஐயா.

   நீக்கு
 8. கொஞ்சம் ஏமாற்றமான பதிவு தான் , என்னுடைய டேட்டா கார்டில் வேகமின்மையால் வீடியோவை பார்க்க இயலவில்லை அண்ணா ! ஒருவேளை அதைப்பார்த்திருந்தால் ஏமாற்றம் இருந்திருக்காது என நினைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 9. அந்த விளம்பரம் பார்க்கும் போது எல்லாம் இனி கக்கு சோப்பின் விளம்பரம்தான் நினைவு வரும் 80 என்கருத்து.
  ஏழேழு பிறவிக்கும் இந்த ஏழு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வதும் சரியென்றே என் சிற்றறிவுக்கு 8கிறது கவிஞரே...

   நீக்கு
 10. ஹஹஹஹாஹஹ்ஹ்.....அயோ செம!!! சிரிச்சு சிரிச்சு....ஃபெப் 31? யாருக்குக் காதுல பூ?! ஹஹஹஹ்
  காணொளி ஹஹஹ....
  அது சரி கீழ ஒருத்தர் அப்பப்ப பஞ்ச் சொல்லுவாரே அவரக் காணோம்? லீவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ காதுலபூ நாங்க சுற்றலை டிவியிலே அப்படிச் சொல்றதுதான். இந்த வசனத்துக்கு விவேக்தான் பொருத்தம்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. பூங்கொத்தோடு வந்து சௌந்தர்யம் தந்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 12. தலைப்பில் shop,உள்ளே soap ...எதாவது உள்குத்து அர்த்தம் உண்டா ?
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஜி மாற்றி விட்டேன்.

   நீக்கு
 13. சோற்றில் உப்பு இருக்கிறதா என்று கேட்கலாம்.சோப்பில் உப்பு இருக்கா என்று உண்மையாகவே விளம்பரம் வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை
  நல்ல நகைச் சுவை விளம்பரம்

  பதிலளிநீக்கு
 14. சிரிப்பு எப்படி வராமல் போகும்! சிரிச்சு சிரிச்சு ஓய்ந்துட்டேன்! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 15. வீராதி வீரரை கண்டவுடன் ஹா......ஹா....ஹா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க...

   நீக்கு
 16. செம டயலாக்ஸ் சூப்பர் வீடியோ....
  கலக்குங்க கலக்குங்க கலக்கிக்கிட்டே இருங்க... பிப்ரவரி 31வரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, நண்பரே... பிப்ரவரி 31 க்கு பிறகு கலக்க வேண்டாமா ?

   நீக்கு
 17. சாப்பாட்டை (யாருக்கா waiting) இப்படி ஆறவிடுவாங்களா?
  ஆஹா இப்படி ஒரு விளம்பரமா? காணொளி ரசித்தேன். ஆனா டயலாக் விவேக்கின் வாய்ஸில் கற்பனை செய்தேன். நல்ல நகைச்சுவை.-நன்றி.-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது பின்புறம் உள்ள டிவியில் ஓடிய விளம்பரம்தான் இது. வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 18. தம 12

  நான் முதல்ல போட்ட கமண்டைக் காணோமே...

  ஆஹா...சிரிச்சு...சிரிச்சு முடியலைடா...சாமி..
  இப்படி ஒரு சோப்பு...ம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துரை வரவில்லையே... ஒருவேளை சோப் கம்பெனிக்காரனை தாக்கி எழுதிட்டீங்களோ... அதனாலே கூகுள்காரன் அனுமதிக்கலையோ....

   நீக்கு
 19. S.V.சேகரின் காதுலப் பூ 80 போய் விட்டது
  இப்பொழுது கில்லர்ஜீயின் காதுலப் பூவா?
  8 திக்கும் பரவட்டும் நண்பா!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 20. ஆகா
  அருமை நண்பரே அருமை
  ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் அல்லவா நாம்
  என்றுதான் விழித்தெழப் போகிறார்களோ
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இன்னும் எத்தனை காலமோ.... இது ஒரு நகைச்சுவைக்காக எழுதினாலும் மனம் ஒருபுறம் வருந்துகிறது.

   நீக்கு
 21. சூப்பர் ஜீ, உண்மைதான் இந்த விளம்பரம் சீக்கிரம் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செந்தில்ஜியின் முதல் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் நலம்.

   நீக்கு
 22. தலைப்பே கலக்கல்!பதிவு அதைவிடக் கலக்கல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கும், கலக்கலான கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 23. ஒரு காலத்தில் கோல்கேட் காரன்,

  "உடம்புக்கு பாதாமும் பாலும், பல்லு துலக்க கரித்துண்டும், உப்பும் தானா?"

  என்று கேள்வி கேட்டான். இப்போ அவனே டூத் பேஸ்டில் உப்பிருக்கா என்று கேட்டுவிட்டு, கார்பனால் ஆனா பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள் என்று விளம்பரம் செய்கிறான். இது காலத்தின் கோலம் அல்லவா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலம்தான் அதிலும் காலத்தின் கோலம் 80தே சரி நண்பரே...

   நீக்கு
 24. உங்கள் பதிவை பார்த்தேன் ரசித்தேன் வெகு நேரம் சிரித்தேன். கலக்குங்க சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிரித்தால்தானே இதற்க்கு சிறப்பு.

   நீக்கு
 25. விளம்பரம் மேல் உங்களுக்கு ஏன் இந்தக்கோபம்.? ஆனால் தவறாக விளம்பரம் செய்பவர்கள் மே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பதிவை வேற கோணத்தில் பார்த்து கேள்வி கேட்டதற்காக சொல்கிறேன்.. பொருளின் தரம் பார்த்து வாங்காமல் நமக்கு பிடித்த நடிகர் சொல்லி விட்டார் என்பதற்காக பொருள் வாங்குவதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை ஆண்களின் பனியனை விற்பதற்காக பெண்களின் தொடையை காண்பிப்பது குற்றம் மட்டுமல்ல அது நம்மை முட்டாளாக்குவது போலவும் உள்ளது 80 எமது கருத்து மேலும் அவள் தொடை காண்பித்ததற்காக கப்பம் நாம்தானே கட்ட வேண்டியதாய் இருக்கிறது.

   நீக்கு
 26. ஒரு சந்தேகம் பிப்ரவரி 31 ன்னா... 32டா...???

  பதிலளிநீக்கு
 27. சோப்பு வாங்கலீயோ... “சோப்பு...கக்கு சோப்பு”...............ஹி ஹி.....

  பதிலளிநீக்கு
 28. அது எப்படி உங்களால் எந்த ஒரு தலைப்பிலும் அனாயாசமாக எழுதமுடிகிறது? சிறிய பதிவு என்றாலும் சரி, பெரிய பதிவு என்றாலும் சரி உங்களது முத்திரையே தனிதான். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தலைப்பைக்குறித்து தாங்கள் சொன்னதால் எனக்கு நெடுங்காலமாக திரைப்படத்துறையினர் மீது இருக்கும் கோபம் ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் அதனைப்பற்றிய பதிவு ஒன்றை விரைவில் எழுதுகிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 29. Gee super, kaku soap, Nan add parthhu neraiya vanguveen. ethu free athigama erukku enru.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ 'அந்த' இலவசம்தான் நம்மை 'இந்த' நிலைக்கு ஆக்கி விட்டது.

   நீக்கு
 30. தங்கள் விளம்பரப் பதிவு
  தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
  ஆயினும், மேலும்
  விளம்பரங்கள் வடிவமைக்க
  http://yppubs.blogspot.com/2014/07/blog-post_24.html

  தங்கள் பதிவுகளில்
  தாங்கள்
  சொல்ல வரும் செய்தியை
  வரவேற்கிறேன்!

  பதிலளிநீக்கு
 31. தங்கள் விளம்பரப் பதிவு
  தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
  ஆயினும், மேலும்
  விளம்பரங்கள் வடிவமைக்க
  http://yppubs.blogspot.com/2014/07/blog-post_24.html

  தங்கள் பதிவுகளில்
  தாங்கள்
  சொல்ல வரும் செய்தியை
  வரவேற்கிறேன்!

  பதிலளிநீக்கு
 32. ஆம் சகோ சமீபமா ஒரு விளம்பரம் தங்கம் மேனியில் புகுந்து
  நாம தங்கம் மாதிரி மின்னுவோமா பேசாம அந்தசோப்ப வாங்கி
  நகை செய்யலாமோ?சோப்ப வச்சு குழம்பு வச்ச மாதிரி
  .

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோதரரே!

  இன்றைய விளம்பரங்களின், நிலையை மிகவும் நகைச்சுவையாக பதிந்திருக்கிறீர்கள்.! விவேக்கின், பிண்ணனி குரலுடன்,படித்து மிகவும் ரசித்து சிரித்தேன். .! காணொளியும் கண்டு சிரித்தேன். ஆனால் சிரித்ததும், மனிதாபிமானத்தினால், பாவமாக இருந்தது. ஒரு வெடிக்கு இவ்வளவு அடியாவென்று....கஸ்டந்தான்.! இனியும் நகைச்சுவைகளை வெடியாக்கி
  தொடருங்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 34. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமை ! பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள் சகோதரா .த .ம 16

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கும் , வாக்கிற்க்கும் நன்றி சகோதரி.

   நீக்கு