தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 03, 2019

சென்னை, செம்மொழி செண்பகவள்ளி


செண்பகவள்ளி இவளை நல்ல அழகி என்று சொல்ல முடியாது, அழகி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது பெயருக்கு ஏற்றாப்போல அவள் மேலிருந்து பூவின் மணம் வரும் அதை வாசம் என்றும் சொல்ல முடியாது அல்லது மினி கூவம் என்றும் சொல்லி விடமுடியாது யாராக இருந்தாலும் சரி பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் ‘’வள்’’ என்று இருக்கும் அதிலும் கணவன் கண்ணப்பன் என்றால் கொஞ்சம் இரண்டொரு அறைகளோடு இருக்கும் ஆனால் ஒன்று மாமியார் மாசாணியை மட்டும் அடிக்க மாட்டாள் அதற்கு ஈடாக வார்த்தைகளில் வசை பாடி விடுவாள் அந்தப் பாட்டுகல்ள் பீப் பாடல் மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது அதேநேரம் பீப் பாடல் மாதிரி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது

.இன்னொன்று மாமனார் மாயாண்டி சாப்பிடும் பொழுது சோற்றை தட்டில் போட்டு தனது திருக் கால்களால் எத்தி விடுவாள் அது ச........ர் என்று வருவதை மாயாண்டி சார் பிடித்துக் கொள்வார் மற்றபடி சரியான நேரத்துக்கு சாப்பிட வரவில்லை என்றால் இரண்டு மிதிகளோடு நிறுத்தி விடுவாள் உடன் தனக்கு இன்று உண்ணாவிரதம் என்பதை அறிந்து கொள்வார் ஆனால் கண்டிப்பாக மாமனாரை ஒரு வார்த்தை திட்ட மாட்டாள் திட்டினாலும் பிரயோசனம் இல்லை காரணம் அவர்தான் ஊமையாச்சே இதனால் தேவையில்லாமல் வார்த்தைகளை வெளியில் விட மாட்டாள் ஏனென்றால் தனது IMAGE கெட்டு விடும் என்பது இவளது கணிப்பு இதையெல்லாம் கண்ணப்பனால் செண்பகத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது காரணம் இவன் நல்ல கொள்கைவாதி.

ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்தால் இறைவன் நமக்கு நன்மைகளையே கொடுப்பார் சமூகமும் நம்மை உயர்வாக மதிக்கும் என்று சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு ஏற்கனவே கணவனை இழந்த செண்பவள்ளிக்கு வாழ்க்கை கொடுத்தான் இதனால் எதுவும் சொல்ல முடியாத சூழல் செண்பகவள்ளியின் முன்னாள் கணவன் முத்தழகு சொல் பொறுக்காதவன் ஏதோ அயிரை மீன்குழம்பு வைக்க சொல்லி இருக்கிறான் அந்த தகராறில் செண்பகவள்ளி திட்டி விட்டாள் என்பதற்காக சயனைடை குடித்துப் பார்த்து இருக்கின்றான் அதன் பிறகு அவன் யாரையுமே பார்க்கவும் இல்லையாம் அப்படி செண்பகவள்ளி முத்தழகுவிடம் சொன்னது என்ன ? என்று சமீபத்தில் மண் டி.வி.யில்கூட அயிரை உயிரை வாங்கியதா ? என்று ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்து இருக்கின்றது ஆனாலும் கடைசிவரை யாருக்குமே விடை தெரியவில்லையாம் என்பது புரியாத புதிர்.

மற்றபடி வீட்டில் இவள் மாமியார் மாசாணியை தற்சமயம் நிலுவையில் திட்டிக் கொண்டுதான் இருக்கின்றாள் என்பது அந்த தெருவின் கடைசியில் டீக்கடையில் உட்கார்ந்து பேப்பர் பார்த்து உலக நடப்பை அறிந்து கொண்டு இருப்பவர்களுக்குகூட சில நேரங்களில் விளங்கி விடும் எப்படியென்றால் ? அவளது வீட்டின் ஓரமாக சென்று கொண்டு இருப்பவர் சுமார் 532 மீட்டர் இடைவெளி வரை தங்களது காதுகளை தங்களது இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு கடந்து செல்வார்கள் இதை வைத்து இந்த சேரியின் மக்கள் இதை சரியானபடி கணிக்க கற்றுக் கொண்டார்கள் இதை மனோதத்துவம் என்றும் சொல்லலாம் ஆங்கிலத்தில் ஸைக்காலஜி என்றும் சொல்வதாக கேள்விப்பட்டேன்.

இதிலும் தலையில் ஏதாவது பாரங்களோடு செல்பவர்கள் தலைச்சுமையை அவளது வீட்டின் ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு சென்று விட்டு பிறகு வந்து எடுத்துப் போவார்கள் காரணம் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு போகும் பொழுது தலை பாரத்தை பிடிக்க முடியாதே கஞ்சத்தனம் பிடித்த இறைவன் மனிதர்களுக்கு இரண்டு கைகள் மட்டும்தானே கொடுத்து இருக்கின்றான் சில நேரங்களில் அவளது வீட்டுக்கு அருகிலிருக்கும் ஊரின் பொதுக் கிணற்றில் குடிக்க தண்ணீர் இறைத்துச் செல்லும் பெண்கள் மண் பானையை இறக்கி வைத்து விட்டு செல்லும் பொழுது செண்பகவள்ளியின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த கொண்ட மண் பானைகள் வெடித்து சிதறி விடும் காரணம் பானை தமிழ் மண்ணில் செய்ததல்லவா !
பிறகு வந்து பார்க்கும் பெண்களுக்கு இறைத்த கிணற்று நீரும் போயி பானையும் போய் விட்டதே என்று வேதனையோடு செண்பகவள்ளியிடம் நியாயம் கேட்டால் ? என்னாகும் என்பதை அறிந்த பெண்கள் செண்பகவள்ளியின் வீட்டின் பக்கத்திலிருந்து அர்ச்சகரின் அர்ச்சனையோடு இதையும் கேட்டுக் கொண்டிருக்கும் பத்ரகாளியிடம் தாயே நீயே கேள் இந்த வருடம் உனக்கு பூ மிதிக்கிறேன் என்று நேர்த்திக்கடன் செய்வதும் உண்டு வெள்ளி செவ்வாய்களில் தெரு மக்கள் பூஜைகளும் செய்ய ஆரம்பித்ததை கண்ட வில்லங்கம் விருமாண்டி கோயில் அருகிலேயே தேங்காய், பழம், பூ வியாபாரம் தொடங்கினான் என்னவொன்று விருமாண்டியும் சரி, கடைக்கு வருபவர்களும் சரி வாயால் பேசுவதைவிட சைகையால் பேசி வியாபாரம் பார்க்கும் நேரங்கள்தான் அதிகம் காரணம் அந்த நேரங்களில் மாமியார் மாசாணிக்கு அர்ச்சனைகள் நடந்து கொண்டு இருக்கும் என்று சொன்னால்தான் உங்களுக்கு புரியுமா என்ன ?

இப்படி பூ மிதிக்கும் விழாவில் மக்கள் வெள்ளம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போவதால் பூ மிதிப்பதற்கு அடுத்த ஊரில் போய் கோயில் விழாக் கமிட்டியாளர்கள் விறகுகள் வாங்குவதை கண்ட நமது வில்லங்கம் திருவிழா காலங்களில் மட்டும் விறகு கடையும் தொடங்கினான் நான்கு வருடங்களிலேயே ஊரிலேயே பெரிய செல்வந்தனாகினான் கொழுந்தியாள் கோகிலாவுக்கு தனது செலவில் திருமணமும் நடத்தி சகலை சடையாண்டியை தனது கடையில் உதவியாளனாக வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் குடி வைத்துக்கொண்டான் ஆறு வருடமாக குழந்தை இல்லாத விருமாண்டிக்கு சகலை சடையாண்டி வீட்டுக்குள் கால் வைத்த ராசியோ என்னவோ மறுவருடமே பிறந்த தனது இரட்டை மகள்களுக்கு செண்பகவள்ளியின் பெயரிலிருந்து செண்பகா - வள்ளி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

இதற்கெல்லாம் காரணமான செண்பகவள்ளியை நல்ல விதமாக வாழ வை தற்சமயம் முழுகாமல் இருக்கும் கொழுந்தியாள் கோகிலாவுக்கு நலமுடன் குழந்தை பிறக்கட்டும் உனக்கு இந்த வருடம் பூ மிதிக்கிறேன் என்று நேர்த்திக் கடன் வைத்திருந்த விருமாண்டி அடுத்த மாதம் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பூ மிதிக்கும் பொழுது நமக்கும் அவரது நண்பர் திரு. கில்லர்ஜி மூலமாக வலைப்பூவில் அழைப்பு விடுவார் நாமும் போய் அம்மனை வணங்கி விட்டு விருமாண்டி வீட்டில் கிடாக்கறி விருந்தில் கலந்து கொள்வோமா ? நட்பூக்களே...

சிவாதாமஸ்அலி-
செண்பகவள்ளியின் பேச்சாற்றலால் விருமாண்டிக்கே நல்ல வாழ்க்கை என்றால் கண்ணப்பனுக்கு எவ்வளவு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும் அதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..

சாம்பசிவம்-
ஒரு வேளை வெளியே சொன்னால் வெட்கக்கேடோ... என்னவோ ?

காணொளி

50 கருத்துகள்:

 1. படம் மிக அழகு அது பார்த்து கொண்டே இருந்ததால் பதிவை இன்னும் படிக்கவில்லை....மதுர மனசை கெடுப்பதற்காக புதுக்கோட்டையார் இப்படி படங்களை வெளியிடுகிறாறோ என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தமிழரே குடி முழுகிப்போச்சே தேவகோட்டை ஊர்ப்பெயரையே மாத்திட்டீங்களே...

   இன்னொரு தமிழர் வந்தால் எள்ளி நகையாடுவாரே...

   நீக்கு
  2. படம் அழகா? மதுரைத் தமிழனுக்கு இம்பூட்டு வயசாகிடுச்சா? என் வயதைப்போல் இரு மடங்குக்கும் மேல் இருக்கும்போலிருக்கே..

   ஐஸ்வர்யா பாட்டில்லாம் எனக்கு மூணு தலைமுறைக்கு முந்தினவங்களாச்சே

   நீக்கு
  3. இதைப்படிக்கும்போது நீங்கள் இன்னும் யூகேஜியில் சேரவில்லையோ என்று தோன்றுகிறதே...

   பிறகு எப்படி கருத்துரை...?

   நீக்கு
 2. கிடாக்கறியா உவ்வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

  பதிலளிநீக்கு
 3. வெளியே சொன்னால் வெட்கக்கேடு...

  அப்படியும் இருக்குமோ!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அப்படியும் இருக்கலாம் யாரு கண்டா...

   நீக்கு
 4. கிடாக்கறி? அப்ப நான் பாக் அப்...

  செண்பகவள்ளி அழகாகவே இருக்கிறாள். அவள் முகத்தில் நீங்க சொல்லியிருப்பது போல் எதுவும் தெரியவில்லையே!!

  கில்லர்ஜிக்கு பெண்களை இப்படி எழுதலைனா தூக்கமே வராது போல!!ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பெண்களைப்பற்றி எழுதவில்லையே... செண்பகா - வள்ளி என்ற இரு குழந்தைகளைப்பற்றி எழுதினேன் இது தவறா ?

   நீக்கு
  2. என்னது குழந்தைங்களா?!!!! ஹா ஹா குழந்தைகளுக்கு மாமனார் மாமியரெல்லாம் உண்டோ...அது சரி!

   சிவதாமஸ் அலியையும் சாம்பசிவத்தையும் இப்பத்தான் பார்த்தேன்...அவங்களுக்ககே ஒரே குயப்பமா இருக்கு போல!!

   கீதா

   நீக்கு
  3. சிவாதாமஸ்அலி குழம்பவே இல்லை வெளிநபரான விருமாண்டிக்கே நல்ல பலன் கிடைக்கும்போது...

   கணவன் கண்ணப்பனுக்கு நல்ல வாழ்க்கை அமையாதா ? என்று தனது ஐயத்தை கிளப்பி இருக்கிறார்...

   நீக்கு
 5. முதல் பாராவில் உள்ள வார்த்தைகளும், கடைசியில் உள்ள காணொளிக்கும் பொருத்தம் இருக்கே!
  பத்ரகாளிக்கு நல்ல அர்ச்சனைதான் நடக்குது.

  அடுத்த வீட்டு ரகளை மற்ற்வர்களுக்கு தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது போல் உள்ளதா?
  அதற்கு இத்தனை கூட்டமா? "பதர்காளி இது என்ன வேடிக்கை இந்த மனிதர்களுக்கு"
  பதர்காளி வேடிக்கையா? வேடிக்கை மாதிரியும் இருக்கு , இல்லாதமாதிரியும் இருக்கே1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வார்த்தைகளையும், காணொளியையும் இணைத்து பார்த்ததில் மகிழ்ச்சி.

   //வேடிக்கை மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கே//

   ஹா.. ஹா.. ஸூப்பர்

   நீக்கு
 6. ஹா... ஹா.. ஹா..

  செம ப்ளோ... வரி வரியாய் ரசித்துச் சிரித்தேன். மறக்காமல் காணொளியும் ரசித்து விட்டேன் ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி காணொளி கண்டதில் மகிழ்ச்சி

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  செண்பகவள்ளி இவ்வளவு கொடுமையான வளா? ஆனாலும் தெய்வத்திற்கு, தெய்வ வழிபாட்டுக்கு உதவியாகத்தான் உள்ளாள்.

  நமக்கும் ஏதேனும் நல்லது நடக்குமென நப்பாசையில் விருமாண்டி வீடு வரை வரலாம். ஆனால் விருந்துக்கு மட்டும் எஸ்கேப்.

  வார்த்தைகளை நகைச்சுவையாக்கி பதிவு எழுதுவதில் தங்களை மிஞ்ச வேறு எவருமில்லை. வார்த்தைகளோடு விளையாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். காணொளி பிறகு காண்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ
   பதிவை மிகவும் ரசித்தது கண்டு மகிழ்ச்சி

   காணொளி பிறகு காணுங்கள் நன்றி.

   நீக்கு
 8. அப்படியும் இருக்கலாம்... இப்படியும் இருக்கலாம்... ஹா.... ஹா....

  காணொளியும் அது போல...

  பதிலளிநீக்கு
 9. காணொளி நன்றாக இருந்தது. அதிலும் வடிவேலுவின் வின்னர் காமெடியை அடித்துக்கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே பதிவைக்குறித்து ஒன்றும் சொல்ல வில்லையே...

   நீக்கு
 10. பூ மிதி விழாவில் கலந்துக் கொள்ள நான் ரெடி. நல்ல கடாக் கறி கிடைக்குமே? இந்த வயசுல உங்களுக்கு கடா கறி கேக்குதான்னு வீட்டம்மா கேக்கறது காதுல விழலை :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அழைப்பிதழ் வரட்டும் எல்லோரும் கலந்து கொள்வோம்.

   நம்பிக்கையான இறைச்சி இவ்வகையான நிகழ்வுகளில்தான் நமக்கு கிடைக்கும்.

   சமீபத்தில் திருப்பூர் கடைகளில் நாய்க்கறியை கலந்து விடும் கும்பல்களை கைது செய்தார்கள். அதிலிருந்து கடையில் வாங்குவதற்கு அச்சமாக இருக்கிறது.

   வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 11. உண்மையாகவே ஒண்ணும் புரியலை. செண்பக வள்ளியின் கணவன் கண்ணப்பனா? வில்லங்கம் விருமாண்டியா? இரட்டைக்குழந்தைகள் பிறந்தது யாருக்கு? கண்ணப்பன் மனைவி செண்பக வள்ளிக்கா? விருமாண்டி மனைவிக்கா? அவள் பெயர் என்ன? மொத்தத்தில் குழப்பம்! ஐஸ்வர்யா ராயை இப்படிப் போட்டிருக்க வேண்டாம். பாவம்! நிஜத்தில் அப்படி ஒண்ணும் அழகாய் இருக்க மாட்டாங்க! புகைப்படத்துக்கு ஏற்ற முகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   செண்பகவள்ளியின் கணவன் கண்ணப்பன், அவளது முதல் கணவன் முத்தழகு. சயனைட்டை ருசி பார்த்தவன் பிறகு யாரையுமே பார்க்கவில்லையாம்.

   விருமாண்டி கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் அவரது பெண் குழந்தைகள்தான் செண்பகா - வள்ளி இவனது மனைவியின் பெயர் சொல்லப்படவே இல்லை.

   விருமாண்டியின் சகலை பெயர் சடையாண்டி கொழுந்தியாள் பெயர் கோகிலா.

   இதில் கோகிலா முழுகாமல் இருக்கிறாள் வேறு ஏதும் விளக்கம் வேண்டுமா ?

   இதில் செண்பகவள்ளிக்கும், விருமாண்டிக்கும் பந்தம் ஏதுமில்லை தொழிலில் பலனடைந்த நன்றிக்காக அவளது பெயரை குழந்தைகளுக்கு சூட்டியுள்ளான்.

   நீக்கு
 12. இப்போதுதான் காணொளி பார்த்தேன்.

  ஓ அந்த செண்பகவள்ளியா பதிவுல வரது?!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காணொளியில் பெண் வரவேயில்லையே...

   நீக்கு
 13. அன்பு தேவகோட்டை ஜி,
  மொட்டை அடித்த ஐஸ்வர்யா ராய்க்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா.
  செண்பவள்ளின்னு சேர்த்து எழுதிட்டு இப்ப செண்பகா// வள்ளின்னு சொல்றீங்க.

  முதல்லியே படிச்சுட்டேன்.
  குழம்பிப் போயி இன்னிக்கு இரண்டாவது தடவை படிச்சேன்.
  மாமனாருக்கு சாப்பாட்டுத்தட்டை உதைச்சு அனுப்பினாங்க.
  புருஷன் ஊமை.
  மாமியாருக்கு அர்ச்சனை.
  இவங்க பேரை குழந்தைகளுக்கு வச்சாங்களா.

  சாமி. ஆடி மாசத்துல கோயில்ல//அதாவது சினிமாவில// சில பேருக்கு சாமி வருமே அதைப்
  பார்த்த மாதிரி இருக்கு.
  காணொளி சூப்பர். நல்ல சுவாரஸ்யம் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா

   "செண்பகவள்ளி" இவளது உறவுகள்...
   கணவன் கண்ணப்பன்
   Ex கணவன் முத்தழகு
   மாமனார் மாயாண்டி (ஊமை)
   மாமியார் மாசாணி
   இவர்களோடு விருமாண்டிக்கு பந்தமில்லை.

   "விருமாண்டி" இவனது உறவுகள்...
   சகலை சடையாண்டி
   கொழுந்தியாள் கோகிலா
   இரட்டை மகள்கள் செண்பகா - வள்ளி
   மனைவியின் பெயர் சொல்லப்படவேயில்லை.

   விருமாண்டி வியாபாரத்தில் முன்னேற காரணமாக இருந்ததாக நம்பும் செண்பகவள்ளியின் பெயரை தனது மகள்களுக்கு செண்பகா மற்றும் வள்ளி என்று பெயர் வைத்துள்ளான்.

   மேலும் தகவல்கள் மேலே சகோ கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மறுமொழியில் கொடுத்துள்ளேன்.

   கதையில் வசனங்களே இல்லை வர்ணனைகள் மட்டுமே அம்மா நன்றி.

   நீக்கு
 14. வேண்டுதல், மனைவிக்காகவா கொழுந்தியாவிற்காகவா. சற்றே நெருடுகிறதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. அப்படியும் நினைக்கலாமோ... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 15. ‘சென்னை செம்மொழி’ என்று ஆரம்பிக்கும்போதே செண்பகவள்ளி என்ன சொற்பிரயோகங்களை பயன்படுத்துவார் என்பதை இலைமறைவு காய்மறைவு போல் சொல்லிவிட்டீர்கள். எல்லாம் நன்மைக்கே என்பதுபோல் முடிவில் நல்லது நடந்தது பற்றி மகிழ்ச்சி! விருமாண்டி திரு கில்லர்ஜி யின் நண்பர் என்பதால் நல்லது நடக்காமல் இருக்குமா?

  வழக்கம்போல் காணொளி (லி) யை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கதையை வெகுவாக ரசித்தமை கண்டு மகிழ்ச்சி.

   காணொளியை குறித்து சொன்னமைக்கும் நன்றி.

   நீக்கு
 16. காணொளி ரசித்தேன்.

  உங்கள் பாணி பதிவு. செம்மொழி செண்பகவள்ளி - நெய்வேலியில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு பெண்மணி இருந்தார் - எப்போது வாய் திறந்தாலும் அருவியாகக் கொட்டும் கேட்க முடியா வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   நானும் இப்படிப்பட்ட பெண்மணிகளை நிறைய பார்த்து இருக்கிறேன். காணொளியை ரசித்தமைக்கு நன்றி ஜி.

   நீக்கு
 17. செண்பகவள்ளி மனதில் நிற்கிறார். அந்தப் பாத்திரப் படைப்புக்காகவே, பதிவுக்கு 9/10 மதிப்பெண் தர நினைத்தேன். எனக்குப் பிடிக்காத மொட்டைத் தலை ஐஸ்வர்யாராய் படம் போட்டதால் 4 மதிப்பெண் கழித்துவிடுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனது பதிவை உயர்த்தி பிடித்து விட்டு எவளோ ஒருத்தி திருப்பதிக்கு மொட்டையடித்த காரணத்துக்காக இவ்வளது மதிப்பெண் கழிக்கலாமா ?

   நீக்கு
 18. மீண்டும்
  கறுப்பு - வெள்ளை
  அழகு ராணிப் போட்டியோ?
  நடத்துங்கோ...

  பதிலளிநீக்கு
 19. நல்லா எழுதி விட்டு இப்படி ஐஸ்வர்யாவுக்கு மொட்டை போட்டு .........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   பதிவின்நடை, காணொளி எல்லாமே அவள் அழகானவள் என்றும் சொல்லமுடியாது, அழகானவள் இல்லை என்றும் சொல்லமுடியாது.
   என்ற ரீதியில் இருக்கும்போது... படமும் அப்படிதானே இருக்கும்.

   என்னமோ நான்தான் இவளுக்கு மொட்டையடிச்சு விட்டதுபோல குற்றம் சுமத்துறீங்க....?

   நீக்கு
 20. ஐஸ்வர்யா ரை யை அவர்(ள்) அழகிப் போட்டியில் வென்று வந்தபோது மங்களூரில் நகரமக்கள் சார்பில் கொடுத்த வரவேற்பின்போது நேரில் பார்த்ததுண்டு. மொட்டையில் கூட என்னமாய் மிளிர்கிறார் பாருங்கள்! நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் உங்கள் பதிவைப் படிக்க மறந்துவிட்டது. கோபிக்க மாட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   உங்களது பொய்யை ரசித்நேன்.

   நீக்கு
 21. செண்பகவள்ளி கதையக் கேட்ட நமக்கு லைட்டா கண்ணைக் கட்டுதே, நல்ல வேளை எங்க தெருவில இந்த மாதிரி யாரும் இல்ல...வழக்கம்போல புனைவில் வரும் பெயர்கள் அவர்களின் இயல்பிற்கு மிகப் பொருத்தமாகவுள்ளது..Thoroughly enjoyed :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலம்தானே...?
   பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

   எனது தெருவில் ஒருத்திகூட இல்லை.

   நீக்கு
 22. படத்த பாத்த உடனே ... நீங்க சொன்ன மாதிரிதான் தலீவா... செண்பக வள்ளி இருக்காங்க...அட..இவுங்கதான் செண்பக...வள்ளியின்னு தெரிஞ்சுகிட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு தெளி'ஞ்சா சரிதான் நண்பரே...

   நீக்கு