தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

மூஸாலி கோயில் (6)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த சிவமணி கண் விழித்தான் தாகம் எடுக்க முகத்தில் அடித்த தண்ணீரை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான் எதிரே ஒருவன் வேப்பங்கொத்தை வைத்து சிவமணி உடல் முழுவதும் நீவி விட்டு ஒதுங்கி நிற்க தலைவன் கத்தினான்.

மூஸாங்கி க்ளோத்தியா..


எங்கிருந்துதான் வந்தானோ தெரியவில்லை சிவமணியின் முன்புறத்தில் ஆங்கிலத்தில் X போன்ற நிலையில் குதித்து நின்றவன் ஏதோ மந்திரத்தை சொல்ல தலையில் மெதுவாக கொம்பு முளைக்க வாயிலிருந்து ஏதோ திரவத்தை சிவமணிமீது துப்பவும் சிவமணியில் உடல் பொசுங்குவது போல ஆனால் வேதனையில்லை கட்டுகள் தானாக உருகிவிட நகர்ந்து வேண்டாம்... வேண்டாம் என்று கத்திக்கொண்டே உடலை நகர்த்தினான் அவனது அலறல் அந்தக்காட்டையே உலுக்கியது அதை பொருட்படுத்தாமல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து ஆடிய கூட்டம் வரிசையாக வந்து... சிவமணியின் தலைமீது எச்சிலை உமிழ்ந்து விட்டு...

ஜோஸி... முஸூங்கீ...
என்று காதருகே மெதுவாக சொல்லி விட்டு போனார்கள்....

சிவமணி மண்ணில் கிடந்து புரள, புரள அவர்கள் துப்பிய எச்சியால் தலையின் மொத்தமும் உருகி கொண்டு போனது இப்பொழுது சிறிய அளவில் வலி தொடங்கியது...


இப்பொழுது தலைவன் எழுந்து வந்து அந்த உருவத்தின் தலைமீது தனது மந்திரக்கோலை வைத்து மனதுக்குள் மெதுவாக ஏதோ மந்திரம் சொல்லி விட்டு சடக்கென்று திரும்பி நடந்தான்
சீடர்கள் நான்கு பேர் கீழே கிடந்த சிவமணியை கை கால் என ஆளுக்கு ஒன்றாய்ப் பிடித்து இழுத்து அந்தரத்தில் நிறுத்தினார்கள்.
 
மரணத்தின் கடைசி நிமிடம் என்பது புரிந்த சிவமணி உலகிலிருந்த அனைத்து தெய்வங்களையும் அழைத்தான்...
அந்த மண்டையோட்டு உருவம் சிவமணியின் தலைப்பாகத்தை கடிக்க வாயை திறக்கும் பொழுது மிச்சமிருந்த முழுத்தெம்பையும் வைத்து கத்தினான் காடே அதிரும்படி...

‘’தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மா நீயாவது காப்பாற்று’’
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
.
திடீரென வானத்திலிருந்து... கணீரென்று அந்தப்பெண் குரல்
மியாஸூகூ...


அந்த உருவம் மட்டுமல்ல, சிவமணியைப் பிடித்திருந்த நான்கு பேர் மட்டுமல்ல, தலைவன் மட்டுமல்ல, அனைத்து ஆண்பெண் கூட்டமும் அண்ணாந்து வானத்தைப் பார்த்ததும் அனைவருக்கும் உடல் நடுங்கியது பிடியை தளர்த்தியதால் பொத்தென்று கீழே விழுந்த சிவமணிக்கு மீண்டும் உயிர் வந்தது நம் தேவதை வந்து விட்டாள் நமக்கு இனி ஆபத்தில்லை நாம் வீட்டுக்குப் போய் விடலாம் இவனும் வானத்தைப் பார்த்தான்...

அந்தரத்தில்...
தொடரும்....

56 கருத்துகள்:

 1. ஆஆஆஆஆஆஆஆஆ இம்முறையும் மீயே 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)).. என்னை ஆரும் தள்ளிவிட முடியாதேஎ பின்னால:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 2. ஹையோ நேக்கு டமில்ல டி என்பதால.. ஸ்பெல்லிங் மிசுரேக்கு எல்லாம் கண்ணுக்குத் தெரியுதே:)) இம்முறை த்றீராம்:) என்ன ஜொள்ளப்போறாரோ?:))..

  வேப்பங்கொலை:)) எனப்போட்டிட்டீங்க கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது குழை/குளை எனத்தான் வரும். ஹையோ மீக்கு இந்த ழ/ள ல எப்பவும் கொயப்பம் கர்ர்ர்ர்:))..

  நீங்க மர்மக் கதை எழுதுவதால கொலை:) நினைப்பிலேயே இருக்கிறீங்க கர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைகளா? என் கண்ணிலா? நானே பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டல்லவா இந்த தளத்துக்கு வந்து சென்று கொண்டிருக்கிறேன்....

   நீக்கு
  2. //மீக்கு இந்த ழ/ள/ல எப்பவும் கொயப்பம்தான்//... டமில்ல டி வாங்கின அதிராவுக்கு இப்படியெல்லாம் குழப்பம் வரலாமா?!

   நீக்கு
  3. ஆஹா அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுதே...

   நீக்கு
  4. ஸ்ரீராம் கொஞ்ச நாளைக்குக் கண்ணை மூடிக்கொண்டே வந்து போங்கோ இல்லை எனில் மூஸாலி கோயிலுக்குள் அனுப்பிடுவார் கில்லர்ஜி ஹா ஹா ஹா:).

   நீக்கு
  5. ஹா ஹா ஹா அறிவுப்பசிஜி.. ஒரு சின்ன திருத்தம்.. எனக்கு ல வில் எக்குழப்பமும் இல்லை ஹா ஹா ஹா..

   இந்த ள,ழ.. இவை இரண்டும்தான் இன்னமும் சரியாக வருகுதே இல்லை.. பாடமாக்கிக் கொண்டு வருகிறேன் சிலதை ஹையோ ஹையோ...

   அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியும் கில்லர்ஜி:).. என் கண்ணைப் பாருங்கோ ஹா ஹா ஹா பயமாக இருக்குதெல்லோ:))

   நீக்கு
 3. ///
  மூஸாங்கி க்ளோத்தியா.///
  ஹையோ என்னால முடியல்ல இப்பாசை வைரவா:).. கொழுந்தியார் நினைப்பிலேயே கதை எழுதினால்... இப்பூடித்தான் வருமாக்கும் ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே அதிரா எனக்கும் அந்த வார்த்தையைப் பார்த்ததும் கொளுந்தியா என்றுதான் நினைவுக்கு வந்தது...உங்கள் கமென்ட் என்னை கீழே போகாமல் நிறுத்திவிட இங்கேயே சிவமணிக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போகலாம்னு ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. அதிரா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லுறேன்...காதைக் கொண்டாங்கோ இங்கிட்டு....மிஸஸ்கில்லர்ஜி ஜப்பானில் இருக்கிரார் தெரியுமோ?!!!!! எபி வட்டாரத்துக்குத் தெரியாம இந்த ரகசியத்தை உங்களுக்குச் சொல்லியிருக்கேனாக்கும்...பத்திரம்!!!!!!!!!!!!!!! இதை நினைவு வைச்சுக்கோங்க அப்புறம் நாம கும்மி எடுக்கலாம்!!!

   கீதா

   நீக்கு
  3. க்ளோத்தியா என்றால் கொழுந்தியாவா ? அடடே அதிராவுக்கு இந்த மொழியும் தெரியுமா ?

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆ என்னாது ஜப்பானில் மிஸிஸ் ஆஆஆஆ அப்போ உகண்டாவின் கதி?:)) ஹையோ இதை விடக்கூடாது கீதா, அப்புறம் கும்ம வெளிக்கிட்டால் அதுக்குள் ஜீனியர் கில்லர்ஜி வந்திட்டால் என்ன பண்ணுவது அதுக்கு முன் இப்பவே களம் இறங்கிப் போராடுவோம்ம் [ஹா ஹா ஹ்]
   .. இப்பவே இந்தியாவின் நியூயோர்க்கில் இருக்கும் அந்த அம்மன் கோயில் முன்னிருக்கும் ஜேம்ஸ் ஊரணி:)) க்கரையில் ஒரு ஏசி றூம் போட்டு உண்ணாவிரத்தத்தை ஆரம்பிப்போம்ம்:))... ஜப்பான் முன்னேறி விட்டது என அறிஞ்சு கட்சி மாறிட்டாரோ.. இது அநீதி.. இது அலாப்பித்தனம்.. இது அநியாயம்.. இது நம்பிக்கைத் துரோகம்.. ஆஆஆஆஆஆ என்ன இது நான் மட்டும்தான் கோசம் எழுப்புகிறேன் கீதாவைக் காணம்.. ஹையோ அம்மாள் ஆச்சித்தாயே.. மூஸாலி மூஸாம்பிகையே... என்னைக் காப்பாத்துங்கோ ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. அதிரா இதை நம்பிடாதீங்க... அது தாய்லாந்திலிருந்து... வந்த வதந்தி காணொளி.

   நீக்கு
 4. ///திடீரென வானத்திலிருந்து... கணீரென்று அந்தப்பெண் குரல்
  மியாஸூகூ...////
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மியாவை இப்போ எதுக்கு இழுக்குறீங்க:)...
  ஹா ஹா ஹா மர்மக் கதை எனில் பயம்தான் வரோணும்.... இது இப்பூடிச் சிரிச்சு உருண்டு... அதைப்பார்த்து எங்கட வீட்டு மியாஸுப்பிள்ளை டெய்சி எழும்பி ஓடுறா ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன பதிவில் பயமாக இருக்கு என்றீர்களே.... குளிர் விட்டுப்போச்சோ...

   நீக்கு
  2. உங்களுக்கு ஒரு உண்மை ஜொள்ளட்டோ கில்லர்ஜி.. நான் இப்படியான படங்கள் பார்க்கவே மாட்டேன்.. கண்ணை மூடிடுவேன்ன்.. உங்கள் போஸ்ட்டிலும் அப்படித்தான்.. ஜம்ப் ஆகி ஆகி.. எழுத்தை மட்டும் படிக்கிறேன்ன்.. அதுவும் நீங்கள் போடுவது எங்கள் இரவில் எல்லோ ஹையோ ஹையோ .. எனக்குப் பார்த்தது கேட்டதெல்லாம் கனவில வந்து மிரட்டும்.. உண்மையில.. ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஆனாலும் அலர்ட் அலமேலு மாதிரி சமாளிக்கிறீங்களே...

   நீக்கு
 5. இன்னும் ஆபத்து விலகவில்லை போல்.... அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்.....

  பதிலளிநீக்கு
 6. ஆஹா... தேவகோட்டை புகழை தூக்கி நிறுத்த (அல்ரெடி அது உயரத்தில்தான் இருக்கிறது) கில்லர்ஜி எத்தனை எத்தனை முயற்சிகள் எடுக்கிறார்... "ஒரு தேவதை வந்து விட்டாள் எனைத்தேடியே..."என்று சிவமணி பாடிக்கொண்டிருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா சுச்சுவேஷன் ஸாங் ஸூப்பர் ஜி

   நீக்கு
  2. நல்லவேளை நான், பாடுவது கில்லர்ஜியாக்கும்:).. அப்போ கீதாவின் ஜப்பான் கதை உண்மையாக்கும் என ஒரு கணம் ஓசிச்சிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா..

   நீக்கு
 7. செத்துப்போவதை விட கொடுமை... இது மாதிரி நம்மேல் ஊரில் உள்ள எல்லாம் காரி உமிழ்வது... அதுவும் தலையில்!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  மர்ம கதை இன்னமும் கொலை வெறியாகத்தான் உள்ளது. கீழே உள்ளவர்கள் புரியாத மொழிகளில் வெறியை உண்டாக்குவது போதாதென்று மேலே வானத்திலிருந்து வேறு வெறி தோன்றி விட்டதா? ஆகா.. ஆனால் அந்த வான் வெளியிலிருந்து வெளிவருவது பெண் குரல்." பெண் என்றால் பேயே இரங்கும்.." இவள் பெண் பேய் என்பதினால் இறங்கி வந்த பின்தான் தெரியும். சுவாரஸ்யம். (சிவமணிக்கல்ல! நமக்கு மட்டும்.) அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். படங்கள் இந்த தடவையும் ப..ய..ங்..க..ர..ம். ரசித்தேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வானத்திலிருந்து இறங்கிய தேவதை சிவமணியை காப்பாற்றும் என்று நம்புவோம்.

   நீக்கு
 9. கதைக்குள் தேவக்கோட்டைத் தேவதை புகுந்துவிட்டார். தேவக்கோட்டைக் கில்லர்ஜியும் வருவாரோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே அதிரா என்னை மூஸாலி கோயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டியுள்ள நிலையில் நீங்களுமா ?

   நீக்கு
  2. கில்லஜி இப்போ மூஸாலி கோயில் வாசலிலதான் நிற்கிறார்.. அறிவுப்பசிஜி:))

   நீக்கு
  3. அப்படியா... ஆனால் நான் போக மாட்டேன் பயமா இருக்கு.

   நீக்கு
 10. கதைக்குள்ளயும் தேவகோட்டையா...அதுவும் தேவதையா...சரிதான் சிவமணிக்கு ட்ரம்ஸ் சிவமணி நினைவுக்கு வந்து வான் வீதியில் தேவதை வந்தா திருவிழானு தெரிஞ்சுக்கோ ((இது அந்த உருவங்களை செமத்தியா போட்டுத் தள்ளப் போற திருவிழா!!!!!!) என்று அந்த உருவங்களைப் பார்த்து ட்ரம்ஸ் அடித்து ஆடிப் பாடத் தொடங்கிவிடப் போகிறார். அப்படியே சுபம் போட்டுரலாம் ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ட்ரம் சிவமணி வந்துதான் நம்ம சிவமணியை காப்பாற்ற வேண்டும் போலயே...

   நீக்கு
 11. என்ன கில்லர்ஜி என்னவெல்லாமோ வருகிறது!!! என்னென்னவோ செய்கிறார்கள்!!! கடைசியில் கனவு என்று முடிக்கப் போகிறீர்கள் என்று தோன்றுகிறது!!! கனவில் சிவமணி பிழைத்துவிடுவார் தவசியையும் கண்டுபிடித்துவிடுவார் என்று நினைக்கிறேன்..இது சிவமணியின் கனவா, தவசியின் கனவா இல்லை கில்லர்ஜியின் கனவா..சிவமணி பாவம் தேவ கோட்டை தேவதை காப்பாற்றும்படி முடிவதாக இருக்கட்டும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேவகோட்டை தேவதை வந்து காப்பாற்றாமல் விடுமா ?

   நீக்கு
 12. தேவக்கோட்டையிலிருந்து நல்வழி கிடைக்கிறதோ அவருக்கு?

  பதிலளிநீக்கு
 13. சரியான நேரத்தில் தேவக்கோட்டை தேவதை காப்பாற்ற வந்தாலும் சிவமணிக்கு வந்த சோதனை உடனே தீராது என எண்ணுகிறேன். காத்திருக்கிறேன் மேற்கொண்டு நடப்பதை அறிய.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தேவகோட்டை தேவதையின் மகிமையை அடுத்த பதிவில் அறிவீர்கள்.

   நீக்கு
 14. // ஜோஸி முஸுங்கீ //

  அடுத்த பாகுபலி படத்திற்கு, வில்லனுக்கு நீங்கள் தான் வசனகர்த்தா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கலாம் ஜி வாய்ப்பு வாங்கி கொடுங்கள்.

   நீக்கு
 15. மூஸாங்கி க்ளோத்தியானு ஏதோ பெயராக்கும்னு நினைச்சேன்! அது சரி. மியாஸுகூ னு சொல்லிக் கொண்டே உம்மாச்சி வந்ததும் சிவமணிக்கு உடல் தொந்திரவெல்லாம் சரியாப் போனதா? உருகிய உடல் சேர்ந்து கொண்டதா? அதை எல்லாம் நாமே புரிஞ்சுக்கணுமோ? இதெல்லாம் எப்போக் கனவு கண்டீர்கள்? தவசி வந்து சொன்னதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தவசியை காணோம்னு ஊரே தேடிக்கிட்டு இருக்காகளாம்.

   என்னை மாட்டி விட்றாதீங்க...

   நீக்கு
 16. தேவகோட்டை மேல் உங்களுக்கு இருக்கும் பற்று வியக்க வைக்கிறது. பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தாலும் திரும்ப வந்த சொந்த ஊரோடு பொருந்தி விட்டீர்கள்! வாழ்த்துகள்! நல்ல அமைதியான வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 17. வெறுமே மியஸூகி என்று சொன்னால் போதுமா ஓடி வந்து சிவமணியை ஐமீன் கில்லர்ஜியைக் காப்பாற்ற வேண்டாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா கடைசியில் என்னை சிவமணி ஆக்கிட்டீங்களே...

   நீக்கு
  2. அன்பு தேவ கோட்டைஜி,
   அதி பயங்கர உருவங்களைப் பதிந்து படிக்கச் சொல்லுகிறீர்களே.
   வயசான இருதயங்கள் தாங்குமா.
   நல்ல வேளை தேவதை வந்தாள். காக்கட்டும்.

   நீக்கு
  3. வாங்க அம்மா தேவதை வந்ததால் இனி கவலையில்லை.

   நீக்கு
 18. சிவமனியை நினைச்சா பாவமாத்தான் இருக்கு. தொடராகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இனி எல்லாம் நலமாகும் என்று நம்புவோம்.

   நீக்கு
 19. சிவமணியை விட்டு ஆபத்து விலகவில்லையா
  காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காத்திருப்புக்கு நன்றி.

   நீக்கு
 20. தேவதை வந்து தடுத்தாட்கொண்டாள் .
  இப்படித்தான் பல கரு மேகங்கள் சூழ்ந்தாலும் அன்பு என்ற தேவதை வந்து ஆட்க்கொள்வாள்.சிவமணிக்கு இனி பயமில்லை.
  தெளிவு கிடைத்து இருக்கும். இனி துன்பம் இல்லை, சோர்வு இல்லை. தேவதை வழி காட்டுவாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 21. தொடர் அருமை
  தொடருங்கள்
  தொடருகிறேன்.

  பதிலளிநீக்கு