கீழே காணொளியில் காணும் இவனுடைய
பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை
இவன் எனது சொந்த சகோதரனாக இருந்தாலும் எனது கருத்து இதுதான் இதில் மாற்றுக்கருத்து
இல்லை அதேநேரம் நான் வேறு வகையில் வேதனைப்படுகின்றேன் இவனையும் மனிதனாக மதித்து
இவனுக்கும் ஒரு பெண்ணைக் கொடுக்கின்றார்களே அந்த சகோதரியை நினைத்து வேதனைப்படுகின்றேன்.
இவனுக்கும் பிறந்த, பிறக்கும் குழந்தைகளை நினைத்து
வேதனைப்படுகின்றேன் இவனைப் போன்ற ஜென்மங்களால் நாட்டுக்கு பெருமையா ? என்னமோ
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் போலவே பேசுகின்றானே,,, சமீபத்தில் முகநூலில் ஒரு ஹைக்கூ
கவிதை படித்தேன் ஒரு சகோதரி எழுதியிருந்தார் என் மனதைத் தொட்ட வரிகள்.
//ஆண்களே உம்மால் குடியை
மறக்க
முடியாதெனில் திருமணம்
செய்வதை
நிறுத்திக்கொள்
உங்களை
திருத்துவதற்காக
நாங்கள்
பிறக்கவில்லை//
உண்மைதானே இந்த இழி பிறவிகள் எதற்கு ? நாட்டுக்கு அவசியமில்லாதவன் மட்டுமல்ல நாட்டை
கலங்கப்படுத்துபவனும்கூட ஏதோ நான் காலையிலேயே ராக்கெட்டை சந்திர மண்டலத்துக்கு
அனுப்ப வேண்டியவன் என்பதுபோல பேசுகின்றானே... இவனுக்கும் சேர்த்துதானே
இராணுவவீரர்கள் எல்லையில் வாழ்கின்றார்கள் யாரை நாயகனாக நினைக்க வேண்டுமோ அவர்களை
மறந்து திரைப்பட நிழல் மனிதர்களை கடவுளாக நினைக்கின்றது நன்றி கெட்ட இன்றைய இளைய
சமூகம்.
காணொளி
This video format is not supported.என்ற தகவல் எனக்கு மட்டும்தான் வருகிறதா இல்லை எல்லோருக்குமா?
பதிலளிநீக்குஎனக்கு வேலை செய்கிறது நண்பரே...
நீக்குகாணொளி வேலை செய்கிறது
நீக்குகாலைல இந்தக் காணொளியைக் கேட்க வைத்த கில்லர் ஜிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குநான் அம்பேரிக்காகாரர்களுக்கு மாலை என்று நினைத்து விட்டேன் நண்பரே
நீக்குகூத்தாடிகளுக்கு பணம் எங்கே இருந்து வருகிறது பொதுமக்களிடம் இருந்துதானே.... அதே பொதுமக்கள் நினைத்து இருந்தால் நாட்டை காப்பாற்றுபவனுக்கும் சிறுவீடு கட்டி தந்திருக்க முடியாதா என்ன? யாரவது ராணுவவீரன் செத்தா பொதுமக்களுக்கு சமுக இணைய தளத்தில் தங்கள் தேசப்பற்றை காண்பிக்க ஒரு நிகழ்வு அவ்வளவுதான்
பதிலளிநீக்குஉண்மைதான் கமலுக்கு விஸ்வரூபம் படப்பிரச்சனை வந்தபோது தனது வீட்டு பத்திரத்தை கமலுக்கு அனுப்பிய அறிவாளிகளும் உண்டு தமிழகத்தில்...
நீக்குஅப்படி பத்திரத்தை அனுப்பியது பரமக்குடிக் கார்ர் அல்லவா கில்லர்ஜி
நீக்குஇருக்கலாம் நண்பரே...
நீக்குபார்க்கும்போதே /கேட்கும்போதே வெறுப்பு வரும் இந்தக் காணொளி ரொம்..ப ப்பழச்சாச்சே..
பதிலளிநீக்குவாங்க ஜி இதை நான் கடந்த வருடம் எழுதி வைத்தது.
நீக்குஒரத்தநாடு இளவரசனுக்கு இறுதி மரியாதை மட்டும்தான் மிச்சம். அதுவும் இருக்கும்போது கிடைக்காதது.
பதிலளிநீக்குஆம் இறந்த பிறகு கிடைத்து என்ன லாபம்.
நீக்குஉண்மையிலேயே வீடியோவைப் பார்த்து மனம் வருந்துகிறது. பதறுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை இது தான். மாற்றமுடியாத எல்லைக்கே போய்விட்டது போல!
பதிலளிநீக்குமாற்றம் கொண்டு வந்தது மாக்கள்தானே... அனுபவித்துதான் தீரவேண்டும்.
நீக்குஒரு சகோதரி பொருமி இருந்தால் இன்னொரு பெண்ணோ ஆணுக்கு இளைத்தவள் இங்கில்லை காண் என்று தானும் பாட்டிலைத் திறக்கிறாள். இந்தக் கொடுமைக்கு என்ன செய்வது!
பதிலளிநீக்குமதுரையில் பெண்களுக்கு தனி பார் திறந்து விட்டார்களாம்.
நீக்குஎன்னது தனி பாரா ?? :( காலக்கொடுமை
நீக்குஆம் தமிழகத்திலேயே மதுரையில் முதல் முறையாக என்ற விளம்பரம் வேறு...
நீக்குஎன்னவோ போங்கள்...
பதிலளிநீக்குநாட்டில் நடக்கின்ற ஒவ்வொன்றும் மனதை மிகவும் வருத்துகின்றன...
பங்களாதேஷ் காரன் பக்கத்து வீடு வரைக்கும் வந்து விட்டான்...
கொஞ்சமும் கவலையில்லாமல் பள்ளிக் கூடத்துப் பசங்கள் மதுக்கடை வாசலில்!...
இதுல அவிங்களுக்குப் பொண்ணு கொடுக்கவும் ஆயிரம் பேர்...
பங்களாதேஷ்காரன்- உண்மையை யாரும் பேச மாட்டாங்க, மத்த்தின் பெயரால். தமிழகம் பெங்களூரில் ஏகப்பட்ட பங்களாதேஷிகள். இவர்களை அரவணைக்கும் ஒரு மதப்பிரிவினர், திமுக போன்ற தேச விரோதக் கட்சிகள்
நீக்குவாங்க ஜி நாம் இன்னும் அவலங்களை சந்திக்க வேண்டும்
நீக்குதிராவிட கட்சிகளை மக்கள் ஓரங்கட்டினால்தானே...
நீக்குஇந்த இடுகைக்கு கருத்து எழுதினா தனிமனித சுதந்திரம்னு பாய்வாங்க.
பதிலளிநீக்குகுடிப்பது என்ற கான்சப்டை வெறுக்கிறேன். அதோட சிகரெட் பான்பராக் பீடி இவைகளை பெரிய அளவில் வியாபாரம் விளம்பரம் செய்ய அனுமதித்துவிட்டு, திரை அரங்குகளில் இதைச் செய்தால் கான்சர் வரும் என்று நமக்கு அறிவுரை சொல்லும் போக்கையும் வெறுக்கிறேன்.
இனி, அரசுக்கு பண வருமானம் வரும்னு கஞ்சா, ப்ராத்தல் கடைகளைத் திறப்பதும், அங்கு பணிபுரிபவர்களை அரசு அலுவலர்களாகச் செய்வதும்தான் பாக்கி
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிறார்கள்.
நீக்குபொங்கலுக்கு ரேஷன் கடையில் இலவச குவாட்டர் தரப்போகின்றார்களாம் நண்பரே...
கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇவனைத் திருத்த கல்யாணமா?
நிறைய குடும்பங்களில் குடிகாரனைக் காப்பாற்ற மனைவி கடுமையாக வீட்டு வேலைகளுக்குப் போய் சம்பாதிப்பதைக் கண்டிருக்கிறேன். பாவப்பட்டவர்கள்
ஆம் பல பெண்களின் நிலைப்பாடு கஷ்டம்தான் நண்பரே...
நீக்குகாணொளியில சொல்றத அவர் ஆங்கிள்லருந்து பாருங்க ஜி! அவர் என்ன சொல்றார்? குடிக்கலன்னா கை நடுங்கும். நடுங்குறப்போ ஓட்டு போடமுடியுமா? சின்னத்த மாத்தி குத்திட்டா அதுக்கு யார் பொறுப்புன்னு கேக்கறார். நியாயம்தான?.
பதிலளிநீக்குவாங்க ஐயா இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதோ...
நீக்குஒரு காணொளிதானே திறந்ததே கில்லர்ஜியின் கோபம் நியாயமானாலும் எல்லாநியாயஙகளும்ஃநிறைய இடங்களில் எடுபடுவதில்லையே
பதிலளிநீக்குஆம் ஐயா நல்லவன் இன்று கோமாளியாகி விட்டான்.
நீக்குஉங்கள் கோபத்தில் நியாயம் இருப்பதை நாங்கள் அறிவோம்.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபணத்தாசை பிடித்த பெண்களும் ஒரு காரணம்...
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி.
நீக்குவேதனை ...
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குஅன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஇத்தனை செய்திகளைக் கண்டு மனம் நொந்து போகிறது.
அதுவும் பெண்ணும் குடிக்கிறாள் என்றால்
பதட்டமாகவே இருக்கிறது.
அந்த இராணு வீரனின் குடிசை. என்ன கொடுமை.
நிலை கெட்ட மனிதர்கள். உள்ளேயும்வெளியெயும்.
நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது.
எல்லோருக்கும் அடைக்கலம் கொடுத்து விட்டால் இருப்பவர்கள் பிழைப்பது எப்படி.
வாங்க அம்மா தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅந்த வீரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்கள் ஆதங்கம் புரிகிறது. நிறைய பேர்களை இப்படித்தான் திருத்தவே முடிவதில்லை. பெண்களும் தைரியமாக அவர்களைப்போல் ஆனால் என்ன செய்ய? கொடுமைதான்..! வேறென்ன சொல்ல.. காலத்தின் கோலம் வேதனையை தருகிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ காலத்தின் கோலம்தான்.
நீக்குஎல்லைபாதுகாப்பு படை வீரனின் வீடு மனது வேதனை படுகிறது.
பதிலளிநீக்குமாலை மரியாதைகூட குறைவுதான்.
நீங்கள் பகிர்ந்த செய்திகளை படித்தால் நெஞ்சு பொறுக்குதில்லைதான்.
காணொளி குடிமகனின் தேவையை சொல்கிறது. நாட்டின் தலைவிதி குடிமகன்களை நம்பிதான் இருக்கிறது என்பது கொடுமை.
வருக சகோ குடிக்க வைக்கும் அரசுக்குதான் மக்களுக்கு வார்ரு அளிக்கின்றார்கள்.
நீக்குமுகநூல் கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆம் சகோ நன்றி
நீக்குhttps://www.youtube.com/watch?v=J4w-9DhY7-c
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=pFoLh4y1zyM உங்கள் வருத்தம் தீர இந்த இரண்டு காணொலிக் காட்சிகளை முழுமையாகப் பார்க்கவும்.
வாங்க ஜி பார்க்கிறேன் நன்றி.
நீக்குநெஞ்சு பொறுக்குதில்லையே.... :(
பதிலளிநீக்குவிற்கிறது குடிக்கிறேன் - குடிக்கிறார்கள் விற்கிறோம்! இப்படியே தான் போய்க் கொண்டிருக்கும்! மாற்றம் வரப் போவதில்லை கில்லர்ஜி!
வாங்க ஜி ஆம் இப்படித்தான் போகிறது நாடு.
நீக்குஉண்மைதான், குடிப்பதால் எத்தனை குடும்பங்கள் அழிஞ்சுகொண்டிருக்கின்றன, குறிப்பாக ஏழைக் குடும்பங்கள்.
பதிலளிநீக்குவாங்க அதிரா தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குகாணொளி பார்த்தேன் ..என்னமா லாஜிக் பேசுறார் குடிமகன் .ஒருபக்கம் பாட்டில் மூடியை வாயால் திறக்கும் பெண் ..வேதனை தான் மிஞ்சுகிறது .பொண்ணுங்க கார் பங்களா அது இதுனு கேட்கறதை விட்டு குடிப்பழக்கமில்லா ஆண் வேணும்னு கண்டிப்பா சொன்னா ஒருத்தரும் டாஸ்மாக் பக்கம் போக சான்ஸ் இல்லை ..ஆனா அப்படிலாம் ரூல்ஸ் போட மாட்டாங்க இப்பல்லாம் .சினிமா பொறுத்தவரை நாம் பாக்கலைன்னா சினிமாக்காரனுக்கு ஏது சொத்து ?.அதோட இன்னொன்னு சொல்லணும் எல்லையில் காக்கும் வீரர்கள் நம் நாட்டில் மட்டுமில்லை இங்கேயும் ஆப்கன் இராக் இங்கில்லாம் ஆர்மி போயிட்டு வரவாங்க நிலை கொடுமை :(
பதிலளிநீக்குவருக சகோ என்னைப் பொருத்தவரை உலக அளவில் உண்மையான ஹீரோக்கள் இராணுவவீரர்களே...
நீக்குவருகைக்கு நன்றி
>> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட் .. குடிக்கலனா கை நடுங்கும் ... கை நடுங்குனா ஓட்டு மாறி விழுந்துடும் ... ஒட்டு மாறி விழுந்தா ... ஆட்சியே மாறிப்போகும் ... ஆட்சியே மாறிப்போனா ... இந்தியாவின் தலையெழுத்தே மாறிபோகும் ... அதுமட்டுமல்ல 2020 ல் இந்தியா வல்லரசாகும் என்கிற அப்துல்கலாம் ஐயாவின் கனவு வீணாகபோகும் என்று ஆதங்கப்படுகிறார் .... அவருடைய ஆதங்கத்தில் பொதிந்திருக்கும் ''தேசப்பற்று'' அவருடைய பேச்சில் வெளிப்படுவது உங்களுக்கு புரியவில்லையா கில்லர்ஜி சார்.... கூல் ....
பதிலளிநீக்குஓஹோ இதற்குள் இம்பூட்டு வெசயம் இருக்கா ?
நீக்குஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே...
நீக்குடிஜிட்டல் இந்தியாவில் இது மட்டுமல்ல...இன்னும்...என்னவொல்லாம்இருக்கு நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே சந்திப்போம் வேறு வழி...
நீக்குஅந்த குடிகாரர் இப்படி பேசுவதற்கு அரசு தான் காரணம். மூன்று நாட்கள் அல்ல. இனி முப்பது நாட்களும் TASMAC கடைகளை மூடவேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லாவிடில் இளைஞர்களின் எதிர்காலம் இந்த குடியால் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படும். அரசு ஆவன செய்யுமா?
பதிலளிநீக்குஅரசு ஆவன செய்யுமா ?
நீக்குஅது அரசை தீர்மானிக்கும் மக்களின் கையில் இருக்கிறது நண்பரே...