தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

கோனாபட்டு, கோபக்காரன் கோதண்டம்


மொடிச்சியப்பனும், கலிவரதனும் அபுதாபி விமான நிலையத்துக்கு காரில் போய்க் கொண்டு இருந்தார்கள்.
டேய் கலிவரதா அந்தா... சிக்னல்ல நொங்கு வித்துக்கிட்டு நிக்கிறானே கோதண்டம் பெருங்கோவக்காரன்.
அவனா,,, கோனாபட்டுக்காரன்ல... அப்புடியென்ன... கோவப்பட்டான் ?

ஒரு வாட்டி நானும், இவனும் நந்திவர்மனும் துபாய் ஷேக் ஸையித் ரோட்டுல போய்க்கிட்டு இருந்தோம் நந்திவர்மன் இவன்கிட்டே குவைத்தை எழுதிக் கொடுனு கேட்டான்.
செரி.....
இவேன் அதெல்லாம் முடியாது அது குவைத்ல இருக்கிற கில்லர்ஜியோட நண்பர் துரை செல்வராஜூன்னு ஒருத்தர் இருக்காரு அவரு விட்டு, வேணும்னா சவூதி அரேபியாவை எழுதித் தாரேன் வீணாக் கேட்டு கோவத்தை கெளப்பாதேனு சொன்னான்.
நந்திவர்மன் விடமாட்டானே...

ஆமாடாங்றேன்... நச்சரிச்சுக்கிட்டே வந்தான் திடீர்னு காரை நிப்பாட்டிட்டு வேர்ல்ட் டவர் புர்ஜ் கலீஃபாவை புடுங்கி நந்தியை அடிக்கப் போயிட்டான்.
அய்யய்யோ நீ தடுக்காம என்ன செஞ்சே ?
நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா ? ரெண்டு பயல்களும் நம்ம ஆளுங்களாச்சே படக்குனு டவரு தூரைப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டேன்.
நல்லவேளை இல்லைனா... புடுங்கி நந்தியை அடிச்சுருப்பான்.

கிழிஞ்சு போச்சு நான் ஒக்காந்துக்கிட்டு தூரைப்புடிக்கவும் இவேன் படக்குனு போயிக்கிட்டு இருந்த மெட்ரோ ட்ரைனை எடுத்து நந்திவர்மனை அடிச்சிட்டான்.
அடச்சே... அப்பொறம் ?
அவன் சட்டுனு தடுத்ததுல சுண்டு வெரலு நெகம் பேந்து போச்சு விடுவானா நந்திவர்மன் ?  ஒன்னை வெரலுக்கு அவராதம் கட்ட வெக்கலே எம்பேரை குந்திகர்மன்னு மாத்திக்கிறேண்டானு உகாண்டா கோர்ட்டுல கேசைப் போட்டுட்டான்.
அப்பொறம்... ?
இவெங்கெலோட சேந்ததுனாலே... சாச்சிக்கு என்னையும் புடிச்சு உகாண்டாவுக்கு இழுத்தடிக்கிறாங்கே...
ச்சே காலவெணையா ஒனக்கு ?
யென்ன... செய்யிறது நம்ம சாதிக்காரங்கெளா போயிட்டாங்கே... ?
போனவாரம் நம்ம நெல்லைத்தமிழரை பார்க்க பஹ்ரைன் போனேன் அப்ப நம்ம செங்கோடனை பஹ்ரைன் மாட்டுச்சந்தையிலே பாத்தேன் என்னமோ... கோதண்டங்கூட சண்டைனு சொன்னான்.

அந்தக்கூத்து தெரியுமா ? அதுக்கும் நாந்தான் சாச்சி.
அதுலே, நீ யெங்கே... போனே ?
கோதண்டம் சார்ஜா கடல்ல குளிச்சுக்கிட்டு இருந்துருக்கான் கெரகத்துக்கு அந்தப் பக்கமாப்போன சரக்கு கப்பல்க்காரன் சும்மா போகாம ஹாரன் அடிச்சுக்கிட்டே போயிருக்கான் இவெனும் சொல்லி சொல்லி பாத்துருக்கான் அந்தப்பயவுள்ள கேக்காம ஹாரன் அடிக்கவும் இவென் கோவத்துல கப்பலைப் புடிச்சு தூக்கி வீசிட்டான்.
அப்பொறமென்ன... இவென் குளிச்சிட்டு வீட்டுக்குப்போக வேண்டியதானே ?

இந்த மூதேவி கப்பலை பீச்சாங்கையிலே புடிச்சது அந்தப் பக்கமாவே வீசவும் அது அப்படியே அபுதாபிலே வந்து விழுந்துடுச்சு.
யாரு, மேலயும்... வெழலையே... ?
அட யேன்டா நீ வேற.... அது விழுந்ததே செங்கோடன் வீட்லதானே... ?
அடப்பாவமே... செங்கோடன் எதுக்கெடுத்தாலும் கோடரியே எடுப்பானே ?
ஆமாங்கிறேன் வாசல்ல கட்டிக் கெடந்த நாயி மேல வுழுந்து அதுக்கு வாலு துண்டா ஓடிருச்சு விடுவானா... செங்கோடன் ? அபுதாபி கோர்ட்டுலதானா.. கேசைப் போட்டுப்புட்டான்.
இதுலே நீ எதுக்கு சாச்சி ?

அந்த நேரம் பாத்து அவென் வீட்ல நீராத்தண்ணி குடிப்போமேனு போயித் தொலைஞ்சிட்டேன் சாச்சிக்கு இது போதாதா ? எல்லாம் மொடிச்சியப்பனுக்கு தெரியும்னு செங்கோடன் என்னை கோர்த்து விட்டுப்புட்டான் இப்ப நானும் கோர்ட்டும், கேசுமா அலையிறேன்.
ஒனக்கு நேரம் சரியில்லைனு நெனைக்கிறேன் எதுக்கும் நம்ம சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவை பாரேன்...
ஆமாடா போன வாரந்தான் அவருக்கு விசிட் விசா அனுப்பி வரச்சொல்லி பாத்தேன் அவரு சொல்றாரு ஒனக்கு கெரகம் உச்சத்துல ஏழாம் வீட்ல குடியிருக்கான் அதுனாலே நீ சொந்த வீட்டை வித்துப்புட்டு வாடகை வீட்ல குடியிருனு சொல்றாரு...
நீ யென்ன.... நெனைக்கிறே ?

நான் அபுதாபியை மனசு சே. குமாரு ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டே இருக்காரு அவருக்கு லீசுக்கு விட்டுப்புட்டு உசிலம்பட்டிக்கு போயி ஏதாவது பொட்டிக்கடை வச்சுக்கிட்டு இருக்கலாம்னு நெனைக்கிறேன்.
இதுக்கு, அத்தாச்சி யென்ன... சொல்லுது ?
நீங்க உசிலம்பட்டி போயி பொட்டிக்கடை வைங்க, அபுதாபியை லீசுக்கு விட வேண்டாம் நம்ம மேனேஜரை வச்சுக்கிட்டு நானே மெயின்டைன்ஸ் பண்ணிக்கிறேன் பத்தும் பத்தாததுக்கு ஒங்க ப்ரெண்டு கில்லர்ஜி இருக்காருனு.... அவ சொல்றா...
அதுவும் சரிதாண்ணே... கூடமாட ஒத்தாசைக்கு நானும் இங்கே அபுதாபிலதானே இருக்கேன்.
ஆமாடா... வர்ற ஆவணிக்குப் பொறகு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.
நல்லது அப்படியே செய்யி.


ஒனக்கு யாவாரம் எப்புடி.. போகுது ?
மலேசியாவை இந்தோனிஷியாக்காரி ஒருத்தி நல்ல வெலைக்கி கேக்குறாளேனு அவளுட்ட வித்துப்புட்டு வந்து அந்தப் பணத்தைப்பூராம் கொட்டி கொண்டக்கடலை அவிச்சு வித்தேன் பணத்தை எங்கிட்டு கொண்டு போகுதுனு தெரியலை... போயிக்கிட்டே இருக்கு.
ய்யேன் யாவாரம் விக்கிதுல ?
எங்கே....ணே... வாங்கித்திங்கிற அரபிக்காரனெல்லாம் கடனுக்குத்தான் வாங்குறான் மறுநாள் விசாரிச்சா ஊரைக்காலி பண்ணிப்புட்டு அம்பேரிக்கா போயிட்டான்னு சொல்லி நம்மை அம்போனு விடுறாங்கே...

சரிடா ஏர்போட்டு வந்துருச்சு நான் சாங்காலம் சிங்கப்பூருல மீட்டிங்கி முடிச்சுட்டு நாளான்னைக்கு ஸ்விஸ் பேங்குக்கு போயிட்டு வருவேன்.
மீட்டிங்கிக்கு மேனேஜரைக் கூட்டிக்கிட்டு போகாமே தனியாப்போறே.. ?
அவனுக்கு ஏதோ முக்கியமான சொந்த வேலை இருக்காம் அதான் நான் மட்டும் போறேன்.
அப்படியா....... ச்சே நான் அவனும் வந்தா நல்லதுனு நினைச்சேன்...

அவேன் வராட்டினா நீ யேன்டா சலிச்சுக்கிறே ?
இல்லண்ணே... ஒனக்கு தொணையா இருப்பானேனு சொன்னேன்.
டேய்... இது வைரம் பாஞ்சகட்டை எங்கயும் தனியாப் போவேன்டா..
சரி.... நல்லபடியா போயிட்டு வாண்ணே.


மொடிச்சியப்பனை சுமந்த விமானம் சிங்கப்பூரை நோக்கி சீறியது. ஏர்போர்ட்டை விட்டு வெளியேறிய கலிவரதனுக்கு மனதில் தோன்றியது அண்ணனை சிங்கப்பூர் ஃப்ளைட் ஏற்றி விட்டுட்டேன் என்று அத்தாச்சி வீட்டுக்கு ஒரு எட்டு போய் சொல்லிட்டு ட்ரைல் பார்ப்போமே முதல்ல போன் செய்வோம் என்று அலைபேசியை எடுத்து மொடிச்சியப்பனின் மனைவி மொக்கச்சியம்மாளை அழைத்தால் அரபு மொழியில் கீழ்கண்டவாறு சொன்னது சட்டென மொடிச்சியப்பனின் கம்பெனி மேனேஜர் மச்சக்காளை நம்பருக்கு அழைத்தாலும் கீழ்கண்டவாறே ஒரே மாதிரி சொன்னது.

இதன் தமிழாக்கம் நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் சிறிது நேரம் கழித்து அழைக்கவும் நன்றி.

காணொளி

50 கருத்துகள்:

  1. நல்ல கற்பனை கில்லர்ஜி இந்தியா விலைக்கு வந்தா சொல்லுங்க நான் வாங்கிப் போடலாமுனு இருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாரி நான் விற்கிறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன்.

      வருகைக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
    2. கில்லர்ஜி... இன்னும் நான் உங்களுக்கு கிரப்பத்திரம் எழுதித் தரலையே?

      நீக்கு
    3. வருக நண்பரே உங்களுக்கு ஞாபகமறதி அதிகமோ ? உகாண்டாவை லீசுக்கு விட்டோமே... அதற்கு முதல்நாள்தானே கிரையம் ஆனது

      நீக்கு
  2. நல்லவேளை கில்லர்ஜி.. அங்க வந்தபோது கலிவரதன், பஹ்ரைனை அவருக்குத் தரச்சொல்லி கேட்கலை. உங்கள அபுதாபில பார்க்க எப்போவும் ப்ளைட் புடிக்க வேண்டியிருக்குன்னு அப்போதான் பஹ்ரைனையே இழுத்துக்கிட்டு துபாய் பக்கம் போயிட்டுருந்தேன்.

    அது சரி.. உங்க அட்ரஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீங்க துபாய் குறுக்குச் சந்து, அபுதாபியா இல்லை அபுதாபி குறுக்குச் சந்து, துபாயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஹ்ரைனை இழுத்துக்கிட்டு போனீங்களா ?
      கேக்கிறவன் கேனயனாக இருந்தா... மோடி மோசடிக்காரர்னு சொல்லுவீங்க போலயே...

      நீக்கு
  3. விபரீத கற்பனைகள்...    ஏதோ ஒரு படத்தில் வடிவேலுவிடம் பேசும் ஊர்க்காரர்கள் இபப்டிதான் தங்கள் சாதனைகளைச்சொல்வார்கள் என்று ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  4. கீழ்க்கண்டவாறு ஒரேமாதிரி சொன்னது..இதுதான் சேதியா?

    பதிலளிநீக்கு
  5. அதெல்லாஞ் சரிதான்...

    நாம ரெண்டு பேருமாச் சேந்து கடலை கவுத்துப் போட்டு
    கத்தரிக் காய் காய வெச்சோமே... அதயுஞ் ஜொல்லியிருக்கலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இதுபோல பல சம்பவங்கள் இருக்கத்தான் செய்கிறது...

      பதிவு நீள்கிறதே... பொறகு பாக்கலாமே...

      நீக்கு
  6. கற்பனையை ரசித்தேன் ஜி... இருந்தாலும் நம்ம நிதி சீ போல வருமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது கற்பனை அல்ல உண்மை நிகழ்வுகள்.

      நீக்கு
  7. அபுதாபி, குவைத், உகாண்டா, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியான்னு உலக நாடுகளும், பந்தாடப்பட்ட சார்ஜா கப்பல், புர்ஜி கலீபா, மெட்ரோ ட்ரெயின், துண்டான நாய் வாலுன்னு என்னவெல்லாமோ என் மூளைக்குள் சுத்துறதால சுயசிந்தனையை இழந்துட்டேன். சாவகாசமா வந்து கருத்துச் சொல்லுறேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஹா.. ஹா.. தலைக்குள்ளே பொறி பறக்க விட்டுட்டேனோ...?

      நீக்கு
  8. சென்னைல ஒரு தடவை வழி மாறி பிரிஜூல் ஏறி, திரும்பி வர ரொம்பவே திணறிட்டேன். துபாய்ல ரோட்டுல என்ன பண்றது? என்னமோ ஆலமரம் அது இஷ்டத்துக்கு வேர் விட்ட மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவைப்பற்றி சொல்லவே இல்லை.

      நீக்கு
    2. படிச்சேன்.. நீங்களெல்லாம் பெரிய ஆள். சவூதி அரேபியா,பஹ்ரைன்... பெரிய ரியல் எஸ்டேட் புரோக்கர். நான் ஏழை, சீனாவுல வுஹான்ல லேண்ட் ரொம்ப சீப்பா இருக்கான். அங்க ஒரு பிளாட் வாங்களான்னு இருக்கேன்.

      ரா. சிவானந்தம்

      நீக்கு
    3. வருக நண்பரே சீனாவுக்குள் நுழைவதே கஷ்டமாக இருக்கிறதே...

      நீக்கு
  9. தலைப்புக்கும் முதல் படத்துக்கும் ஜம்பந்தம்:) இருக்குதோ?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதுதான் துபாய் புர்ஜ் கலீஃபாவும், அதன் ஓனரும்.

      நீக்கு
  10. எல்லா இடங்களையும் குத்தகைக்கு விட்டீங்க ஆனா தேவகோட்டையை மட்டும் விடல்லியே:))..

    வீடியோவில் சாத்திரம் சொல்பவரோடு உங்களுக்கு என்ன பிரச்சனை?.. பாவம் மனிசன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டை கடவுளின் தேசம் அதை யாரும் விற்க இயலாது.

      காணொளியில் இருப்பவர்தான் ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பன்

      நீக்கு
    2. ஆஹா உலக மஹா கற்பனை.
      ஏதாவது மிச்சம் வச்சிருக்கீங்களா. நானும் ஒண்ணு ரெண்டு வாங்கிப் போடலாம்னு நினைத்தேன். :)

      நீக்கு
    3. வாங்க அம்மா நைஜீரியா ஒத்திக்கு வரத்தயாராக இருக்கிறது பேசலாமா ?

      நீக்கு
  11. நல்லவர்களுடன் கூட்டு சேரவேண்டும் என்று ஜோசியர் சொல்லியும் இப்படி மோசம் போகலாமா?
    கடன் வாங்கியவர்கள் எல்லாம் அமெரிக்கா தான் போய் விடுவார்களா?
    நாட்டு நிலவரத்தை சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவை குறிப்பாக தங்கள் கற்பனையை ரசித்தேன். மெட்ரோ டிரெயின் மூலம் சுண்டு விரல் போனதும், சரக்கு கப்பல் அடித்து நாயின் வாலறுந்து போனதும், கற்பனைகளின் உச்சகட்டம். ஹா.ஹா.ஹா.

    அந்த நாயின் வாலறுந்தற்காக கோர்ட்டு, கேஸ் எனப் போயிருக்க வேண்டாம். அந்த கப்பலில் இருந்த சரக்கு முழுவதும் வாசலில் வந்து கொட்டியிருக்குமே. .! ஒருவேளை அந்த பணத்தில்தான் கேஸே நடக்கிறதோ?

    நீங்கள் உங்கள் நண்பர்கள் அனைவரும் உலக நாடுகளையெல்லாம் அனாயசமாக விற்று வருகிறீர்கள். ஆனால் நான் என் "சொத்தை" விற்கவோ, அடமானம் வைக்கவோ இயலாமல் தவிக்கிறேன். ஒருவேளை அது பல சொத்துக்கள் என்றில்லாமல் வெறும் "பல்" என்பதினால், விலை போக மறுக்கிறதோ? ஹா.ஹா.ஹா. பதிவு கடைசியில் அந்தோ பரிதாபம் .! நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் மறறொன்றை நினைக்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து படித்தது கண்டு மகிழ்ச்சி

      பல் சொத்தை விலை போகாது பல சொத்து விலை போகும் என்ற தங்களது நகைப்பு ஸூப்பர்

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. தங்களின் கற்பனைையை ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  14. நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து ‘கண்ணுக்குள்ளே’ என்ற திரைப்படத்தில் பேருந்தில் தன்னுடன் இருக்கும் நடிகர் முத்துக்காளையிடம் இதுபோல் தான் கதையை அளந்துவிடுவார். நகைச்சுவையை இரசித்தேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து மனதை வருத்துகிறது.

      நானும் சிங்கமுத்துவைப் போல "அளந்து" விடுவதாக சொல்லி விட்டீர்களே...

      இருப்பினும் பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஹாஹா...

    உங்கள் பதிவினை ரசித்தேன். சக பதிவுலக நண்பர்களையும் இங்கே இணைத்திருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. நல்ல கற்பனை. நல்லவேளையா நீங்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி எல்லாம் வாங்கலை, முக்கியமா ஸ்கொட்லாண்டை! உங்களுக்குத் தெரியாம நான் அதை வாங்கிப் போட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே நீங்க ஸ்கோட்லாண்டை வாங்கிட்டீங்களா ? இவ்வளவு காலமாக தெரியலையே...

      திருச்சி வந்தாச்சா ? குஞ்சுலு நலமா ?

      நீக்கு
    2. குஞ்சுலுவும் அவங்க அம்மாவும் சென்னையிலே இருக்காங்க! நாங்க நேற்றே ஸ்ரீரங்கம் வந்துட்டோம். குஞ்சுலு அங்கேயும் விஷமம் பண்ணிட்டு இருக்கு. :) ஸ்கொட்லாண்டை நான் எப்போவோ வாங்கிட்டேன். கூடவே இங்கிலாந்தையும் சேர்த்து.

      நீக்கு
    3. நல்லது நன்றி.
      ஸ்கோட்லாண்ட் விடயம் எமக்கே தெரியாமல் நடந்தது அறிந்து வெட்கி தலை குனிகிறேன்.

      நீக்கு
  17. ஏதோ அரசியல் நையாண்டி என்ற அளவில் புரிகிறது. என்னால் முடிந்தது பெங்களூரை இருகப்  பிடித்துக் கொள்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்வு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  18. அபுதாபியில் காரில் போகும்போது நுங்கு வித்துகிட்டு என்று படிட்டபோதே இது கில்லர்ஜியின் ஸ்பெஷாலிடி என்று தெரிந்து விட்டது நான் எஸ்கேப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஐயாவால் இது ஸ்பெஷாலிட்டி  என்றால் இது சிறப்பான பதிவுதான் நன்றி ஐயா.

      நீக்கு
  19. எங்கள் நாட்டையும் எடுத்துக்கொள்ளுங்கள் :)
    சீனாகாரன் ஏற்கனவே எடுத்து விட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது நாட்டின் விலை ஒத்து வந்தால் வாங்கிப் போடலாம்தான் பார்க்கலாம்.

      நீக்கு