தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 02, 2018

சந்தேகச்செடி


ஹாரன் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தாள் பார்வதி தனது கணவன் பரதன் வாசலில் டி.வி.எஸ். 50யில் உட்கார்ந்திருக்க, பின்புறம் கணவனது நண்பனின் மனைவி மஞ்சுளா உட்கார்ந்திருந்தாள் மனைவியிடம் அவசரமாய்
பார்வதி சீக்கிரம் தயாரா.. இரு இப்போ வந்துருவேன்
சொன்ன அடுத்த நொடி பறந்து விட்டான். சிலையாய் நின்றாள் பார்வதி என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் ? நமக்கு முன்னாடியே அடுத்தவன் பொண்டாட்டியை ஏத்திக்கிட்டு வந்து நிற்பாரு.. வரட்டும்.. வரட்டும்....

பார்வதி ஒரு சந்தேகப் பேர்வழி எதற்கெடுத்தாலும் சந்தேகம் இது இவளது பிறவிக்குணம் மாற்றுவது கடினமே.. உண்மையிலேயே பரதன் நல்லவன்தான் தன் வாழ்நாளில் மனைவியைத் தவிர வேறு யாரையும் தவறான கண்ணோட்டத்தில் நினைக்காதவன் திருமணமாகி நான்கு வருடமாகி மூன்று வயதில் கண்ணன் இருக்கின்றான் இவளை அவனால் சரி படுத்த முடியவில்லை இதனால் பல சண்டையும், சச்சரவுகளும் வந்து அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய் விடுவாள் நாளை கண்ணனை பள்ளியில் சேர்த்து இப்படி அடிக்கடி ஊருக்குப் போனால் குழந்தை கண்ணனின் எதிர்காலம் பாதிக்கும் என்று உணர்ந்த பரதன் அவளை அனுசரித்துப் போகத் தொடங்கினான் பல நேரங்களில் பார்வதியின் வார்த்தை முள்ளாய் குத்தும் மனம் நொந்து போவான் இவளுக்கு எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறான் பிரைவேட் கம்பெனியில் சூப்பர்வைஷராக வேலை குடும்பம் நல்லமுறையில் போய்க்கொண்டு இருக்கிறது தனிக்குடித்தனம்தான் பார்வதிக்கு மாமனார் மாமியார் தொந்தரவு கொடுக்காமல் சிறுவதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டனர் உடன் பிறந்த அண்ணன்தான் அவரின் மனைவி வழியில் அண்ணியார் பார்த்து செய்து வைத்த திருமணம் அவசியமில்லாத சந்தேகங்களால்தான் பிரச்சனைகள் வருகிறது மற்றபடி வாழ்க்கையில் பிரச்சனை இல்லை.

டி.வி.எஸ். 50யில் பறந்து கொண்டு போகும் பொழுது எதிரில் நடந்து வந்து கொண்டு இருந்தது பரதனின் சின்ன மாமனாரும், சின்ன மாமியாளும் இவனைப் பார்த்து விட்டார்கள் இவன் அவர்களைப் பார்த்ததும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு போய் விட்டான் மனம் மேலும் குழப்பத்துக்கு போனது காரணம் பார்வதியின் சந்தேகச்செடிக்கு பாக்டம்பாஸ் 20, 30, 40, உரம் போட்டு வளர்த்து விடுபவளே இந்த சின்ன மாமியார்தான் இப்பொழுது மகளைப் பார்க்க வருகின்றார்கள் அதுவும் இந்த நிலையிலா பார்க்க வேண்டும் ? ச்சே அந்த வழியில் போயிருக்கலாமோ.. ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்...

வீட்டுக்குள் நுழைந்த சித்தப்பா சின்னம்மாளை உக்கிர பார்வையோடு வரவேற்றாள் பார்வதி புரிந்து கொண்ட சின்னம்மா என்னடி இது கொடுமை எவளோ ஒருத்தியை உன் புருஷன் வண்டியிலே வச்சுக்கிட்டு பறக்கிறாரு... சித்தப்பா அதட்டினார் இருடீ நீ வந்ததும் வராததுமா புள்ளையைப் போட்டுக் குழப்பாதே... மாப்பிள்ளை வரட்டும் கேட்போம் அவரு அப்படி ஆளில்லை
இவரு ஒருத்தரு நம்மளைப் பார்த்துட்டும் பார்க்காதது மாதிரி போனா... என்ன அர்த்தம் தா...த்..தா... என்ற கண்ணன் மழலை மொழி கேட்டுதான் பேரனின் ஞாபகம் வந்தது அவளுக்கு பேரனைத் தூக்கிக்கொண்ட சித்தப்பா சொன்னார் கொஞ்சம் தண்ணி கொடுத்தா குடிக்க....

கரின் உயர் ரகமான கல்யாணி மருத்துவமனை வளாகத்துக்குள் மஞ்சுளாவுடன் நுழைந்த பரதனை எதிர் கொண்டான் சங்கரன்...
என்னங்க..... என்னாச்சு ? எங்க அப்பாவுக்கு..
ஒண்ணுமில்லை நல்லாயிருக்காரு பயப்படாதே... மனைவியின் முதுகை தடவிக் கொடுத்தவாறு டேய் வார்டு இரண்டு ரூம் நம்பர் 207 க்கு கூட்டிப்போ நான் மருந்து வாங்கிட்டு வாறேன்...
அழாமல் வாங்க ஒண்ணுமில்லை அதான் சங்கரன் சொல்லிட்டான்ல....
வேகமாக உள்ளே வார்டு தேடிப்போய் ரூம் நம்பர் 207 க்கு போனார்கள் உள்ளே பெரியவர் பெரியசாமி படுத்துக் கிடந்தார் பக்கத்தில் மஞ்சுளாவின் அம்மா அலமேலு நின்றிருந்தாள்.
‘’அப்பா’’
வாம்மா ஒண்ணுமில்லை அழாதே... எல்லாம் சரியாப்போச்சு வாங்க தம்பி
இப்ப எப்படியிருக்கு ?
பரவாயில்லை சாயங்காலம் வீட்டுக்குப் போயிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு... பாப்பா வரலையாமா ?
ஸ்கூலுக்கு போயிருக்காப்பா...
சங்கரன் மருந்து பையுடன் காஃபி வாங்கி வந்த ப்ளாஸ்கையும் மாமியாரிடம் கொடுத்தான்.
உனக்கு எப்படிடா தெரியும் ? நீ ஏதோ வேலையா... தேவகோட்டை போறதா.. சொன்னே ?
எனக்கு அத்தை போன் செய்து சொன்னாங்க... கிராமத்துலருந்து கார் புடிச்சு வந்துக்கிட்டு இருக்கோம் நீங்க ஹாஸ்பெட்டல் வந்துருங்கனு திடீர்னு மேனேஜர் நாளைக்குப் போகலாம்னு சொல்லிட்டாரு... ப்ரோக்ராம் கேன்சல் உன்னோட கம்பெனிக்கு பக்கத்துல என்னோட வீடு இருந்ததாலதான் நான் உன்னிடம் சொல்லி இவளை அழைத்து வரச்சொன்னேன் தனியா ஆட்டோவுல வந்தா... அழுதுக்கிட்டே வருவா.. அதான்...
பரதனும், சங்கரனும் பால்கனியில் நின்று பேசிக்கொண்டு நிற்கும் பொழுது மஞ்சுளா காஃபி கப்புகளுடன் வந்து இருவருக்கும் கொடுத்தவள் பரதனிடம்..
உங்க மனைவி வீட்ல தயாரா இருப்பாங்களே...
ப்சு வேண்டாங்க... அவ வரவேண்டாம்..
ஏன் திடீர்னு... ?
அவள் வரமாட்டாள்.
அப்ப எதுக்காக சுத்தி வளைச்சு உங்க வீட்டுக்குப் போனீங்க ? காந்தி ரோடு வழியா வந்திருந்தால் சீக்கிரமே வந்துருக்கலாமே..
வந்திருக்கலாம்... நாம ரெண்டு பேரும் வண்டியில வந்ததை யாராவது பார்த்து எனது மனைவியிடம் சொல்லி இருந்தால் அது அவளுக்கு தவறாகப் போயிடும் அவளிடம் நேரடியாக நானே போகும் பொழுது அவளை சமாதானப்படுத்த எனக்கு தெரிஞ்ச வழி அதனாலதான் வீட்டுக்கு போயிட்டு வந்தேன் என் மனைவியைப் பற்றி இவனுக்கு நல்லாத்தெரியும் அவள் வராததால கோவிக்க மாட்டான் நீங்க தப்பா நினைக்காதீங்க...

என்று சொன்னவன் விரக்தியாய் வானத்தைப் பார்த்தான் இன்று பார்த்து சின்ன மாமியார் வந்ததுதான் மனக்குழப்பம் வீட்டுக்குப் போயி இனி பார்வதியை சமாதானப்படுத்த வேண்டும் பரவாயில்லை சின்ன மாமனார் சிங்காரமும் வந்தது நல்லதே அவர் எதையும் பக்குவமாக புரிந்து கொள்பவர் தன்மீது மரியாதையும் வைத்திருப்பவர். மஞ்சுளா பரதனிடம் சகஜமாக பேசுவாள் இது சங்கரனுக்கும் தெரியும் காரணம் பரதன் சங்கரன் நட்பூ இருபத்து ஆறு வருட காலமானது பரதனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி மீண்டும் அப்பாவின் அருகில் போனாள் மஞ்சுளா.

88 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  நல்ல கதை.எழுத்து நடையும் சிறப்பு.
  "சந்தேக கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வாழ்வு துன்பம் வளர்த்திடும் காடு" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

  ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையின்மைதான் சந்தேகங்களுக்கு காரணம். இது பொதுவாக கணவன் மனைவிக்குள் வரும் தீராத வியாதிதான். இதற்கு மருந்து இன்னமும் ஒருவரும் கண்டு பிடிக்கவேயில்லை.

  பரதன் புது விதமாக முயற்சித்தாலும், வீட்டுக்கு போனதும் எத்தனை இடிகளோ.. பாவம் எப்படி சமாளிக்க போகிறாறோ?
  உதவி செய்த நல்ல மனதிற்கு துன்பங்கள் வரக்கூடாது. பார்ப்போம்..

  கல்கிக்கு சிறுகதை போட்டிக்கு, சிறுகதை தயார் செய்து விட்டீர்களா? வெற்றி வாகை சூடிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ் !! நீங்களா முதல் வந்தது :)

   நீக்கு
  2. வருக சகோ உடன் முதல் வருகையாளராய் வருகை தந்து சந்தேகத்துக்கு அழகிய கருத்துரையும், அற்புதமான பாடலையும் நினைவூட்டியமைக்கு நன்றி.

   போட்டியில் நுழையும் முன்பே வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. இன்னிக்கு நான்தான் Firsttttt

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இது அதிராவுக்கு மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லை.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா தாங்ஸ் கமலா சிஸ்டர்:)) என் செக்:) ஐ 2 ம் இடத்துக்குத் தள்ளியமைக்கு:))

   நீக்கு
  3. இது தனது காருக்கு ஒரு டயர் பஞ்சரானாலும் பரவாயில்லை, எதிரியோட காருக்கு இரண்டு டயர் பஞ்சராகணும் என்று நினைக்கும் ரகமா ?

   நீக்கு
  4. கண்ணுக்குப் பதிலாகக் கார் டயர். ரசித்தேன்.

   நீக்கு
  5. வருக நண்பரே கதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

   நீக்கு
  6. கில்லர்ஜி.. கார் ரயர் இல்லை.. கை விரல்:) என ஜொள்ளுங்கோ:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  7. உண்மையிலேயே முதலில் கை விரலைத்தான் எழுத நினைத்தேன்.

   நீக்கு
  8. ஆவ் இப்போதான் கை கொஞ்சமா அசைக்க முடியுது மறுபடியும் விரலா ??
   சரி பரவால்லை இன்னும் ரெண்டு வாரம் கிச்சன் வேலை மிச்சம்

   நீக்கு
 3. கில்லர்ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .அப்படியே சரளமான நதிபோல ஸ்டாப் பண்ணாம போனது இந்த அழகான கதை .
  ஆனால் பாவம் பரதன் .நல்ல மனசுள்ளவங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி நேர்மாறான துணையை கொடுத்துடறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கதையை ஒன்றிப் படித்தமைக்கு நன்றி.

   பலருடைய வாழ்வில் சந்தேகமே சந்தோஷத்தை அழிக்கிறது.

   நீக்கு
 4. FACTAMFOS உரம் :)) போட்டு வளர்த்த சந்தேகச்செடி ..ஹாஹா ரசித்தேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அதனால்தான் செடியின் நிறமே பாறுபடுகிறதோ...

   நீக்கு
  2. செடியின் நிறம் மட்டுமல்ல புகுந்திருக்கும் மனித முகத்தின்/மனதின் நிறமும் மாறிவிடும்

   நீக்கு
 5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நாம இன்று ரொம்ப லேட்டோ:)) பறவாயில்லை அதைப்பற்றி பேச வாணாம்:)) காக்கா போயிடுவோம்.

  ஓ கில்லர்ஜி கதை ரெடியா? எந்த தளத்திலும் போடக்கூடா என்பது ரூல்ஸ் என்பதால இது கல்கிக்கான கதை அல்ல:)).

  இக்கதையிலே சந்தேகத்தைக் காட்டி ஒரேயடியாக பார்வதியில் குற்றம் சொல்ல மாட்டேன். இதில் நிறையச் சொல்ல வருது.

  சந்தேகக்கோடு அது சந்தோசக் கேடு.. கணவன் மனைவிக்குள் சந்தேகம் வரவே கூடாது வந்தாலும் நேரே பேசி தெளிவாகிடோணும்.

  அதே நேரம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போவதுதானே மனமொத்த வாழ்க்கை. பார்வதி அனைத்து விசயங்களிலும் நல்லவ ஆனா இந்த சந்தேகம்தான் பிரச்சனையை உருவாக்குகிறது எனில், மனைவிக்காக அச்செயல்களைத் தவிர்க்கலாம்தானே பரதன். தெரிந்து கொண்டும் நான் நல்லவன் வல்லவன் அடுத்த பெண்களை மனதாலும் நினைக்காதவன் எனச் சொல்லிக்கொண்டு நண்பனின் மனைவியை 2 வீலரில் ஏத்திச் செல்வதை எந்த மனைவியும் ஒத்துக்கொள்ள மாட்டா. அப்படி எனில் ஒரு ஓட்டோ அல்லது காரிலே கூட்டிப் போகலாம்.. போகும் வழியிலே பார்வதியையும் அக்காரில் கூடவே ஏத்திப் போயிருக்கலாம்.., இப்படியான நடைமுறைகள்தான் சந்தேகத்துக்கு இடமளிக்காது மற்றும் பார்வதிக்கும் சந்தேகம் குறைந்து நம்பிக்கையும் அன்பும் அதிகரிக்கும்.

  சில பெண்கள் எதுக்கும் பேசாமல் இருப்பார்கள் நீயும் ஆரோடயாவது போ நானும் ஆருடனாவது போகிறேன் சந்தேகம் வாணாம் ஒற்றுமையாக இருக்கலாம் என. ஆனா பெரும்பாலும் 99 வீதம் பெண்களும் சென்சிட்டிவானவர்கள்...

  இதேபோல நான் நல்லநான் வல்லனான்.. என் கணவர் தவிர வேறு ஆரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் எனச் சொல்லிக்கொண்டு.. தன் நண்பியின் கணவரோடு 2 வீலரில் ஏறிப்போனால் பரதன் விடுவாரோ?:). என்னைப் பொறுத்து நல்லவர்களாக இருக்கட்டும்.. ஆனா திருமணத்துக்கு முன்பு அவர்கள் எப்படியும் அடிச்சுப் பிடிச்சு நண்பனின் மனைவியோடு பழகியிருக்கலாம்.. ஆனா திருமணம் என ஒன்றானபின்.. கொஞ்சம் அடங்கத்தான் வேணும்.

  இதில் அந்த நண்பன் சங்கரனிலும் தப்பிருக்கு.. பரதனின் மனைவி சந்தேகப்படுறா எனத் தெரிந்துகொண்டும்.. குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவதுபோல பரதனை சங்கடத்தில் ஆழ்த்தலாமோ? ..

  நிறையச் சொல்ல வருகிறது பெரிசாகிடும். ஆனா அருமையாக பல கோணத்தில் சிந்திக்கும் வண்ணம் கதை எழுதியிருக்கிறீங்க.. ஏதும் உண்மைச் சம்பவமாக இருக்கும் என மீக்கு இப்போ சந்தேகம் வருதே...ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அதிரா தங்களது மற்றொரு கோண பார்வைக்கு முதலில் நன்றி (கோணப்பார்வை, மாறுகண், கண்ணில் கோளாறு என்று எண்ணக்கூடாது)

   எல்லா சூழலும் அப்படி அமையாது பெரியவர், பெரியசாமி நெஞ்சுவலி வந்து செத்து அவரைத்தூக்கி கொண்டுபோயி சுடுகாட்டில் வைத்து செம்மினாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்த கள்ளத்தனம் நான் மட்டுமல்ல, ஏஞ்சலும் அறிந்து கொண்டோம்.

   அவசர சூழலில் சில இடங்களில் காரோ, ஓட்டோவோ கிடைப்பதில்லை இதையும் மனதில் கொள்ளவும். சில நேரங்களில், சில விடயங்களை விட்டுக் கொடுப்பதே மனிதாபிமானம்.

   பரதன் ஒன்றும் கொழுந்தியாள் கல்யாணத்துக்கு மஞ்சுளாவை வண்டியில் வைத்து அழைத்து வரவில்லையே..

   இருப்பினும் முடிவில் உங்களுக்கு வந்த சந்தேகம், எனக்கு சந்தோஷத்தையே தந்தது நன்றி.

   நீக்கு
  2. அதிரா உங்கள் அக்ருத்துக்களையே தான் நான் டைப்பி வைத்திருந்தேன். முதலில் கமென்ட்ஸ் போட்டுட்டு போட வந்தால் தளம் சுற்றிக் கொண்டே இருந்தது. அப்புறம் இப்ப வந்தா உங்கள் கமென்ட் நான் இத்தனை விரிவாக எழுதலைனாலும் உங்கள் பாயின்ட் எனக்கும் தோன்றியது..

   கீதா

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி நீங்க ஓவராத்தான் பரதனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க.. விடமாட்டேன்ன் நேக்கு நீதி தேவை:)...

   சரி உங்கட வழிக்கே வருகிறேன்... அப்படி ஒரு சீரியசான சிட்டுவேஷன்.. கார்.. லொறி:) ஏதும் கிடைக்கவில்லை எனில்.. எதுக்கு அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு வீட்டுப்பக்கம் வந்தார்ர்?... அப்படியே எங்காவது தொலைவு ரோட்டால் பறந்து கொண்டுபோய் இறக்கிப் போட்டு வீட்டுக்கு ஓடிவந்து நடந்த உண்மைகளனைத்தையும் மனைவியிடம் சொல்லி மன்னிச்சுக்கொள்.. உனக்குப் பிடிக்காத செயலைச் செய்து போட்டன்.. வேறு வழி தெரியவில்லை எனச் சொன்னால்.. நிட்சயம் ஏற்றுக்கொள்வா பார்வதி.

   இது.. வேறு பாதை இருந்தும், ஊருக்குள் நண்பனின் மனைவியோடு வருவாராம்.. அதுவும் வீட்டு வாசல்லுக்கு வந்து மனைவியைக் கூப்பிட்டுச் சொல்லுவாராம்.. எதுக்கு ஊருக்குள் வந்தார்ர்? முன்வீடு பக்கத்து வீட்டுக்கெல்லாம் ஷோக்காட்டவோ? ஃபோனிலே சொல்லியிருக்கலாமே? மனைவி மனதில் ஏற்றுக் கொண்டாலும் சமுதாயம் சும்மா விடுமோ? இதைக் கேள்வி கேட்டே மனைவியைக் கொல்லுமே?..

   ஒரு வேளை பார்வதி ஓவர் சென்சிட்டிவிட்டி ஆனவ எனில்.. மோட்ட பைக்கையும் இருவரையும் பார்த்து ... இனியும் இந்த உயிரு உடம்பில இருக்குமோ..:) என்னை விடுங்கோ எனச் சொல்லிக்கொண்டே குழந்தையோடு ஆத்திலே குளத்திலே குதிச்சிருந்தால்?? தூக்குப் போட்டிருந்தால்? இப்படி எத்தனை கேள்விப்படுகிறோம்ம்... உங்களுக்கு சிம்பிளாக இருக்கு கில்லர்ஜி சந்தேகம் என்பது மட்டும்தான் கண்ணில தெரியுது ஆனா பார்வதி இடத்தில இருந்து ஜிந்திக்கோணும்.. எங்கே அங்கிள் சிவசம்போவைக் கூட்டி வாங்கோ அவர்தான் சரியான பதில் சொல்லுவார்ர்:)) .

   ஒரு கணவன் எனில் முதலில் மனைவிக்கு குழந்தைகளுக்கு நல்லவராக அவர்களின் மனம் நோகாதவராக இருக்கோணும்.. அடுத்துத்தான் அடுத்தவர்களுக்கு. ஊருக்கு நாட்டுக்கெல்லாம் நல்லவர் வீட்டுக்கு மனைவிக்கு நல்லவர் இல்லை எனில் அவர் திருமணம் செய்ததே வேஸ்ட் என்பேன்.

   ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு லச்சி ஊஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:))

   நீக்கு
  4. http://www.ciclotekstore.com/data/productos/z_jumbo.jpg

   இப்போ என்ன நீதி வேணும் மியாவ்வுக்கு .சரி பரதனை டூ வீலர் வேணாம் அந்த கடைகளுக்கு சாமான் சரக்கு ஏற்றுவங்களே 3 வீலர் இது மாதிரி இந்த வண்டிட்யில் கொண்டு போனா ஓக்கேவான்னு பார்த்து சொல்லுங்க .

   நீக்கு
  5. அதானே அவசரத்துக்கு உதவுபவனை இப்படித்தான் மனசை காயப்படுத்துவதா ?

   நீக்கு
  6. பார்வதி கேரக்டர் சென்ஸிடிவ்த்ச்சான் ஆனா தான் குதிக்காது அந்த மஞ்சுளாவைதான் தள்ளி விடும் :)
   நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு அது ரெண்டுக்கும் பரதன் நல்லவர்னு தெரியும் அதனால் அவர் பொறுமையை கடைப்பிடிதார்னு நினைக்கிறேன் .

   //அவர் திருமணம் செய்தது வேஸ்ட் //

   கர்ர்ர்ர் :) வேணும்னா லண்டனில் ஆரம்பிக்கலாமா .சொ .உ :) அந்த அக்காவை கூப்பிடுங்க நீதி வாங்கி தருவார்

   நீக்கு
 6. உரம் போட்டு வளர்க்கப்படும் செடி கெமிக்கல் கூடி விஷம் பரவுது போல.நல்லாருக்கு கில்லர்ஜி. கல்கி கு எழுதுங்க..ஜி..வாழ்த்துகள்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
  2. நான் டைப் பண்ணி வைத்திருந்த கமென்ட் அப்ப போட முடியலை.....உங்க த்ளம் திடீர்னு சுத்தத் தொடங்கிருச்சு....இப்ப பார்த்தா அதிரா சொல்லிட்டாங்க.

   ரெண்டு விஷயம் டைப்பிருந்தேன். மனைவி சந்தேகப்படுகிறாள் என்று தெரிகிறது...அப்போ நண்பரின் மனைவியை அழைத்துச் செல்ல பல வழிகள் உண்டு. அடுத்து தன் மனைவியையும் அப்படியே அழைத்துச் சென்றிருக்கலாம்..வீடுவரை சென்றவன் அப்படியே...

   அடுத்து பரதனின் நண்பருக்கும் தெரிந்திருக்கு பரதனின் மனைவி பற்றி எனும் போது அவரும் தவிர்த்திருக்கலாம்....என்று தோன்றியது ஜி....

   இதிலிருந்தே இன்னும் கதைகள் வசனங்கள் எழுதலாம்....நன்றாகவே இருக்கிறது ஜி

   கீதா

   நீக்கு
  3. கில்லர்ஜி உங்கள் பதிலையும் பார்த்தேன்......உங்கள் பதிலிலும் சில ப்ராக்டிக்கல் பாயின்ட்ஸ் இருக்கு உ ம் சில ஒதுக்குப் புற இடங்களில் கார் ஆட்டோ என்று இருக்காதுதான்....எமர்ஜென்ஸி எனும் போது புரிந்து கொள்ளலாம் தான்

   இது ஆண்களுக்கும் பொருந்தும். இல்லையா?!!!! பல கதைகளிலும் பெண்கள் தான் சந்தேகப்படுபவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆண்களுக்கும் சந்தேகம் உண்டு வரத்தான் செய்கிறது. இருவருக்குமே வருவது அதீத பொசஸிவ்னெஸால்...

   கீதா

   நீக்கு
  4. வருக பரதன் பதட்டத்தில் இந்த விடயத்தை மறந்து இருக்கலாம்.

   மேலும் வீடுவரை சென்றவன் அவனது மனைவியையும் அழைத்து சென்று இருக்கலாம்தான், குழந்தை கண்ணன் வேறு இருக்கிறானே... டி.வி.எஸ்-50 யில் நான்கு பேர் போகமுடியுமா ?

   அப்படிப் போனால் போலீஸ் பிடிக்கப்போய் லத்தியை வீலுக்குள்ளே விட்டால் வண்டி உருண்டு பார்வதியின் மண்டை உடைந்து திருச்சி கலவரம்போல் வரட்டும் என்ற உங்கள் திட்டமும் புரிகிறது.

   நீக்கு
  5. எனைப்பொறுத்து இப்படி அவசரம் ஆபத்து எனச் சொல்லிக்கொண்டு அடுத்த வீட்டுக் கணவரோடு தொத்திக்கொண்டு ஓடும் பெண்களைத்தான் முதலில தேம்ஸ்ல தள்ளோனும்:)... கணவரின் நண்பரோடு காரில் தனியாகப் போகவே கூச்சம் தயக்கம் காட்டும் இக்காலத்தில... 2 வீலரில ஓடிவந்து ஏறிப்போகும் பெண்களை என்ன பண்ண முடியும்.... ஒரு திருமணமாகாத ஆண் அல்லது மனைவி இல்லாத நல்ல ஒருவர் எனில் பறவாயில்லை.. திருமணமாகி மனைவியோடிருக்கும் ஒருவர் எனில், அவர் நல்லவராக இருந்து அழைச்சாலும்.. .. நாமும் கொஞ்சம் சிந்திச்சே செயல்பட வேண்டும்.

   நீக்கு
  6. முதல்ல அந்த 2 வீலரைப் பறிச்சு தேம்ஸ்ல எறிஞ்சுபோட்டு நடந்து போய்வா என விடோணும் பரதனை:)) அப்போ எப்படி ஏத்துவார்ர்?:)?????:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  7. அப்பா பெரியசாமி மண்டையை போடும் நிலையிலிருக்கும்போது அவரது மகள் மஞ்சுளாவை ஜேம்ஸ் ஊரணியில் தள்ளிவிட நினைப்பது முறையா ?

   நீக்கு
  8. மொத்தத்தில மஞ்சுளா ஆஆப்பியாகோணும் என்பதுதான் பரதனின் நினைப்போ? கர்ர்ர்:)).. பார்வதி சூசைட் பண்ணினாலென்ன..., பதறிக்கொண்டு தாய் வீட்டுக்குப் போனால் என்ன இவருக்கு அதனால கவலை இல்லை அப்படித்தானே?.. நண்பனின் மனைவியைக் கவனிக்க நண்பன் இருக்கிறார்.. இவர் தன் மனைவியைச் சந்தோசமாக வைத்திருக்க வேண்டியதுதானே:))

   நீக்கு
  9. பரதன் தப்பித்தவறி ஜேம்ஸ் ஊரணிப்பக்கம் வாக்கிங் போகாமலிருப்பது உங்களுக்கு நல்லது.

   நீக்கு
  10. ஆமாம் கில்லர்ஜி . ஆத்தில தள்ளி விட்ருவாங்க .உடனே save பரதன் னு ஹாஷ் டேக் போட்டு காப்பாற்றியாகணும்

   நீக்கு
 7. சஞ்சீகைகளில் அறிமுக எழுத்தாளர் போட்டிக்கு அனுப்ப வேண்டாம்.
  நீங்க அதுக்கும் மேலே

  பதிலளிநீக்கு
 8. சந்தேகம் என்பது கொடிய வைரஸ் நோய். சந்தேகம் உள்ளே புகுந்துவிட்டால் மனித குணமே பெர்சனாலிட்டியே மாறிவிடும் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
 9. 'சந்தேக விதை மரமாகிவிட்டால் அழிப்பது அத்தனை சுலபமில்லை. செடியாக இருக்கும்போதே அழித்தால்தான் உண்டு' என்பதைத் தலைப்பே உணர்த்திவிடுகிறது.

  தலைப்புக்காகவே கதைக்குச் சிறப்புப் பரிசு வழங்களாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகிய, ஆழமான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
  2. சந்தேகம் எனும் ஒரு சொல்லை மட்டும் வைத்து .. பேசக்கூடாது.. இதில சந்தேகம் இல்லாமல்கூட இருக்கலாம்.. தன் கணவன் பற்றி மனைவிக்கு தெரியாமலா போகும்?.. ஆனா இதில் சந்தேகம் என்பதைத்தாண்டி, தன் கணவனோடு இன்னொரு பெண் ...2 வீலரில் ஏறிப்போவதை பார்க்க சகிக்கவில்லை அவ்வளவுதான். அதுக்குத்தான் மேலே சொன்னேன்.. இப்படியான உயிர்போகும் சிட்டுவேஷன் எனில்... மனைவிக்கு முன்னால்போய் காட்டிக்கொண்டிருக்காமல் பின்னர் வந்து உள்ளதைச் சொல்லி தெளிவுபடுத்தினால் மனைவியும் ஒத்துக் கொள்வார்.

   இது தன் மனைவி சந்தேகக்காரி என நண்பனுக்கு சொல்லி.. நண்பனின் மனைவிக்கும் சொல்லிக் கேவலப்படுத்துவதாக இருக்கு பரதனின் செயல்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

   நீக்கு
  3. இப்படித்தான் நீங்கள் சொன்னது போல ஏற்கனவே மேனேஜர் சொன்னதை தட்டமுடியாமல் அவரது பொண்டாட்பி மேகலாவை அழைத்துப்போய் நின்று வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் ஞாபகம் வந்து இந்த யோசனையில் போயிருக்கலாமே...

   நீக்கு
  4. ஆஆஆங்ங்ங்ங் அப்போ பரதனில்தான் தப்பு இருக்குது:)).. ஊர்ப் பெண்களை ஏத்தி இறக்குவதுதான் இவருக்குத் தொழில்போல:)) மனேஜர் சொன்னா என்ன மந்திரி சொன்னா என்ன.. என் மனைவிக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்ன்.. எனக்கு என் மனைவி மனம் நோகக் கூடாது எனத்தான் எண்ணோனும்.. வேலையால் வெளியேத்தினாலும் பறவாயில்லை.. நான் பண்ண மாட்டேன் என சில விசயங்களில் உறுதியா இருக்கோணும் ஹையோ ஹையோ பரதன் மட்டும் என் கையில மாட்டினாரோஓஓ.. ஹா ஹா ஹா...:))

   நீக்கு
  5. ஒரு கதை நினைவுக்கு வருது.. ஒரு கணவன் மிகக் குடிகாரராம்.. வீட்டுக்கு நண்பர்களை அழைத்து வந்து குடிப்பாராம்.. மனைவி எவ்வளவொ சொல்லியும் அடக்க முடியவில்லையாம்.. முடிவில்..

   மனைவி தன் நண்பிகளை வீட்டுக்குள் கூட்டி வந்து தானும் குடிச்சு கும்மாளம் போடத் தொடங்கினாவாம்.. அன்றோடு அக்கணவர் திருந்தி நல்லவராகிட்டாராம்.. நானும் குடிக்கல்ல இனி நீயும் குடிக்காதே என.. இப்படித்தான் பரதனுக்கும் செய்யோணும்..:)) ஹா ஹா ஹா...

   நீக்கு
  6. ம்ம்.. சங்கரனும் பார்வதியை பைக்கில் ஏற்றிப்போனால் சரியாகி விடும்போல உங்கள் கணக்கு.

   நீக்கு
 10. முதலில் படம் மிக அழகாக இருக்கிறது. அதற்குப் பாராட்டுகள்.

  சந்தேகம், பொச்சிவ்னெஸ்ஸால் வருகிறது. அது சந்தோஷத்துக்குக் கேடுதான்.

  எல்லாவற்றையும் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. ஒரு செயலை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது. அதனால் துணையின் எண்ணவோட்டத்தை அனுசரித்தே எதையும் செய்யணும், நம்மால் அவரை கன்வின்ஸ் செய்ய முடியாவிட்டால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   பரதனின் வாழ்க்கை அனுசரிப்பில்தான் சென்று கொண்டு இருக்கிறது.

   நீக்கு
 11. ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால் சந்தேகமெங்கிருந்து வரும் கதை நன்றக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 12. பார்வதி தயாராக இரு என்று சொன்னவர் , அதுவும் அவர் சந்தேக பேர்வழி எனும் போது இரண்டு வார்த்தை சொல்லி சென்று இருக்கலாம்.

  சந்தேகம் மகிழ்ச்சியை போக்கும் வாழ்வை கெடுக்கும் , கவனமாய் இருக்க வேண்டும் இரண்டு தரப்பிலும் தூண்டி விடுபவர்களிடம்.

  பதிலளிநீக்கு
 13. கதை பெயர் நன்றாக இருக்கிறது சந்தேகச்செடி செடியாக இருக்கும் போது எடுத்து விடலாம், மரமானால் வெட்டுவது கடினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ பலரது வீட்டிலும் சந்தேகம் ஆலமரமாய் விழுது விட்டு படர்கிறது உண்மையே...

   நீக்கு
 14. “.எதிலும் சந்தேகப்படுன்னு” யாரோ ஒருத்தரு சொல்லியிருக்காரு.... அவரு யாருன்னு நிணைவுக்கு வரல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவரு "சத்தியமங்கலம், சந்தேகப்புயல் சத்தியமூர்த்தி"யாக இருப்பாரோ ?

   நீக்கு
 15. கில்லர்ஜி கதை நன்றாக இருக்கிறது.

  கணவனோ மனைவியோ சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாகவே மனைவிகள் தங்கள் கணவர் வேறு பெண்களை வண்டியில் வைத்து அழைத்துப் போவதை விரும்புவதில்லை அது எமெர்ஜென்ஸியாகவே இருந்தாலும்.

  இதில் நான் அறிந்து சில எக்ஸெப்ஷ்னல் பெண்கள் -மனைவிகள் - இருக்கிறார்கள். அதே போன்று எக்ஸெப்ஷனல் ஆண்களும் - கணவன்களும் - இருக்கிறார்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உண்மைதான் யார்தான் இப்படி விட்டுக் கொடுப்பார்கள்.

   பின்ஸீட்டில் அமர்பவர்கள் கண்ணகியாக இருந்தாலும் பரவாயில்லை எல்லோருமே சினிமா நடிகை மாதவி போலவே இருக்கின்றார்களே...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணகியானாலும் 2 வீலரில் ஏத்தினால் அது தப்புத்தான்:)) அதுவும் இடக்கு முடக்கான ரோட்டுக்களில் ஹையோ ஹையோ:))

   நீக்கு
  3. 4 வீலரில் ஏற்றினால் தப்பு இல்லையோ...

   நீக்கு
 16. சந்தேகப்படும் மனைவியிடம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.
  இரண்டு வார்த்தை, அம்மாடி, மஞ்சுளா அப்பா ஆஸ்பத்திரில
  இருக்காரு .இவங்களைக் கொண்டு போய் விட்டு வரேன்.
  தீர்ந்தது.
  சந்தேகச்செடி வளரவே சாத்தியம் இல்லை.

  இது போல மனைவிகளும் கணவர்களும் பார்த்திருக்கிறேன்.
  பொறாமை வந்தால் குடும்பம் செழிப்பது எப்படி.
  அழகாக எழுதி இருக்கிறீர்கள், தேவகோட்டை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா அவசரத்தில் பரதனுக்கு இது தோனாமல் போயிருக்கலாம். வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 17. கதை அருமை நண்பரே
  லாவகமாய் கதையினை நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. நேரமும்,காலமும் சில நேரங்களில் சந்தேகப்படும் படி வைத்து விடுகிறது.அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலூம், அதிக அன்பால் கூட பார்வதிக்கு சந்தேகம் வந்து விடுகிறது என நினைக்கிறேன். கதை அருமை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கோணமும் சரியாகத்தான் இருக்கிறது.

   நீக்கு
 19. "உடல் தொற்றும் நோயைப்போல உள்ளம் தொற்றும் நோய்தான் சந்தேகம்" கதையின் செய்தி மக்களைச் சென்றடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 20. அன்பின் ஜி...

  சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடு!.. என்பார்கள்..

  சந்தேகப் பிறவிகள் எல்லாம் -
  தன் தலையைத் தானே உடைத்துக் கொள்பவர்கள்...

  அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்... மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களைக் காணவில்லையே என்று இருந்தேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 21. வணக்கம் ஜி !

  அற்புதமா இருக்கு மிகுதியைப் படிக்கவே மீண்டும் வருவேன் விரைவாகப் பகிருங்கள் வலைத்தளங்கள் வராமல் விட்டுப் போகத்தான் இருந்தேன் உங்களைப்போல நல்லவங்க /நல்ல பதிவுகளை விடத்தான் மனசில்ல ஜி

  வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 22. சந்தேகச்செடிக்கு பாக்டம்பாஸ் உரம். இதுபோன்ற பல சொல்லாடல்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 23. ரொம்ப நல்லா இருக்கு கதை..கருத்துக்களும்...

  ஒவ்வொரு வருக்கும் ஒரு குணம் ..


  சந்தேகச்செடி யில் என்றுமே

  கவலைகளும்...கஸ்டங்கலுமே

  பூக்கும் காய்க்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 24. கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. முடிவை யூகிக்க முடிந்தாலும், சரளமான நடை ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு