தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 24, 2017

வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி


வணக்கம் ஐயா மக்கள் பிரச்சனைகளை தாங்கி வரும் எங்கள் ஓங்கி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்க வந்திருக்கும் எதற்குமே வளைந்து கொடுக்காத வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் பேட்டியை துவங்கலாமா ?
ஓங்கி பத்திரிக்கை இன்னும் உயரம் தொட்டு ஓங்கி ஒலிக்க எமது வாழ்த்துகளோடு நன்றிகளும் துவங்கலாம்.

வலையுலகில் பிராபலமான மன்னிக்கவும் பிரபலமான பதிவர்கள் வரிசையில் தாங்களும் இருப்பதாக வேலையற்ற வெட்டி வீணர்கள் பேசிக்கொள்கின்றார்கள், இது எந்த அளவுக்கு உண்மை என்று விளக்க முடியுமா ?
நான் யாருக்கும் பிராபலம் தராமல் சித்தன் போக்கு ஸெவனோ க்ளாக்கு என்று கடந்து போகின்றவன் ஆகவே என்னைப்பற்றி அவதூறாக சொல்கின்றவர்களைப்பற்றி எமக்கு கவலை இல்லை.

தமிழ் மணத்தில் இப்பொழுது மைனஸ் ஓட்டு போட்டு வருவது மேஜர் பிரச்சனையாக இருக்கிறதே காரணம் என்ன ?
இதற்கு மூலகாரணம் யார் என்பது எமக்குத் தெரியும் இருப்பினும் அவரை நாம் சட்டப்படி கைது செய்ய இயலாது.

சட்டத்தால்கூட தொடமுடியாதவர் யாரென்று தாங்கள் சொல்லுங்களேன் ?
அவர் மறைந்துவிட்ட திரைப்பட நடிகர் திரு. மேஜர் சுந்தர்ராஜன்.

அதெப்படி இறந்து விட்ட மேஜர் சுந்தர்ராஜன் மைனஸ் ஓட்டு போடமுடியும் ?
சமீபத்தில் தொலைக்காட்சி நாடகத்தில் இறந்து விட்டவர் தன்னைக் கொலை செய்தவரை போலீஸாருக்கு காட்டிக் கொடுத்து கொலையாளியை கைது செய்ய வைக்கும் பொழுது இது மட்டும் முடியாதா ?


தமிழ் மணத்தில் மைனஸ் ஓட்டு விழுவதால்தான் தங்களின் முகம் எந்நேரமும் இஞ்சி தின்றது போலிருப்பதாக சொல்கின்றார்கள் இது உண்மையெனில் இதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?
எனக்கு சொந்தக் கவலைகளே தற்சமயம் முப்பது கிலோவுக்கும் மேல் இருக்கிறது. ஆகவே இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசிய ம......... எனக்கு இல்லை.

கடந்துபோன, பலரும் கருத்துரை இட்டு முடிந்து போன பழைய பதிவுகளுக்கு சென்று மைனஸ் ஓட்டு போடுகின்றார்கள் இதனைப்பற்றி தங்களின் கருத்து ?
இறந்த சடலத்துக்கு நல்லஊசி போடுவதே வெட்டி வேலை இதில் விசஊசி எதற்கு ? அதனைப் போன்ற இழி செயல்தான் இது கரண்டுக்குப் புடிச்சகேடு.

உங்களுக்கு இதனைப் போன்ற விசஊசி மன்னிக்கவும் மைனஸ் ஓட்டுகள் போடப்பட்டு இருக்கின்றதா ?
ஆம் எனது ஆடிட்டர் ஆவுடையப்பன் அவர்களை வைத்து உகாண்டாவில் இருக்கும் கணைக்ட்டிங் பீப்புள் ஸிஸ்டம் மூலம் ஆராய்ந்ததில் சுமார் அறுபதுக்கும் மேல் பழைய பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டுகள் விழுந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அறுபது ஓட்டுகள் என்றால் வெகுகாலம் நடந்திருக்கிறது போலவே ?
இல்லை வெகுதூரமே சுமார் நூற்றி இருபது கிலோ மீட்டர் இருக்கும் ஆனாலும் வெகு குறுகிய காலத்தில் அதாவது ஒரு வாரகாலத்திற்குள் நடந்து இருக்கிறது.

இந்த துரோகச்சுவடுகள் உங்களுக்கு மட்டும்தானா ?
இல்லை பலரும் இதனுள் சிக்கி இருக்கின்றார்கள் அவர்களின் பட்டியலை வெளியிட எமக்கு விருப்பம் இல்லை இதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் தனக்கே ஓட்டுப்போட்டுக் கொள்ளாமல் இந்த வயதிலும் தளராமல் நல்ல அனுபவங்களை பதிவெழுதும் திரு. ஜியெம்பி ஐயா அவர்களின் பதிவுக்கும் மைனஸ் ஓட்டு அளித்திருப்பது

இந்த மைனஸ் ஓட்டுகள் விழுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லையே ?
மிகப்பெரிய பாதிப்பு நிகழ்ந்து விட்டது. கடந்த வைகாசி மாதம் 34-ஆம் தேதி அன்று மட்டும் எனக்கு மைனஸ் ஓட்டு விழாமல் இருந்திருந்தால் எனக்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் பதவி கிடைத்து இருக்கும் இது மயிரிழையில் கை நழுவி விட்டது. நான் அப்பதவியில் இருந்தால் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் பெருமை இல்லையா ?

சரி அப்பதவி கை நழுவிப்போய் விட்டதால் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஐயனார் கோவில் அறங்காவலர் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?
வலைப்பதிவர்கள் கட்டளையை ஏற்று எதற்கும் வளையாத வளையாபதி இதற்காக வளைவான்.

இந்த தமிழ்மண மகுடத்தைப் பற்றிய தங்களது கருத்து ?
என்னைப் பொருத்தவரை மேலே புகைப்படத்தில் இருக்கின்றாரே நைஜீரிய நாட்டு பெண்மணி அவர் தூக்கிச் செல்லும் மண்குடம் போன்றது இந்த தமிழ்மண ம(ண்)குடம் இவை எப்பொழுது தவறி விழுந்து சிதறும் என்று கணிக்க இயலாது.

அந்த நைஜீரிய நாட்டு பெண்மணி தங்களுக்கு வேண்டப்பட்டவரா ?
ஆம் எனது துணை மாமனாரின் சகலை மனைவியின் சகோதரரின் மகனுக்கு கட்டியவரின் மருமகளின் மாமியார்.

மன்னிக்கவும் நான் அதிராம்பட்டணம் அதிரடி அதிரா அளவுக்கு புத்திசாலி இல்லை ஆகவே அந்தப் பெண்மணி உங்களுக்கு என்ன உறவுமுறை ?
எனக்கு கொளுந்தியாள்.

மேலே தங்களது கொளுந்தியாள் புகைப்படம் இட்டதற்கு பிரத்யேக காரணம் உண்டா ?
எனக்கு திருமணம் நிகழ்ந்த காலம் தொட்டு அவள்மீது ஒருகண் உண்டு.

நைஜீரியாவில் இருக்கும் அந்தப் பெண்மணியோடு இப்பொழுதும் தொடர்பு உண்டா ?
இல்லை ஒருமுறை தவறாக நடந்து கொள்ள முயன்றதால் எனக்கும் அவளுக்கும் தற்பொழுது பேச்சு இல்லை.

அப்படியானால் அந்த கசப்பான சம்பவம் காரணமாக அவர் நைஜீரியாவில் இருந்து கொண்டு உங்களுக்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்கலாமே ?
நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பிறகு எதற்கு இறந்து போன நடிகர் திரு. மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் மீது சந்தேகப்படுகின்றீர்கள் ?
அப்படியில்லை எனது சந்தேக வட்டத்துக்குள் அவரும் இருக்கின்றார் என்று சொல்ல வருகிறேன்.


இது வெளியுலகம் அறிந்தால் திரு. மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் குடும்பத்தார் உங்கள்மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தால் ?
மன்னிக்கவும் அவரை சட்டப்படி எனது சந்தேக வட்டத்தை விட்டு விலக்கி வைக்கிறேன் இதை பத்திரிக்கையில் வெளியிட வேண்டாம்.

தாங்கள் இதுவரை யாருக்காவது மைனஸ் ஓட்டு போட்டு இருக்கின்றீர்களா ?
மூன்று வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக ஓட்டுப்போடும் பொழுது எனக்கு நானே அறியாமல் போட்டுக் கொண்டது பிறகு சமீபத்தில் எனது பதிவுகள் மகுடத்தில் ஏறுவதால் நான் தொடர்ந்து பதிவுகள் எழுதுவதற்கு இடையூறாக இருந்தது. ஆகவே மகுடத்தில் இருந்து இறக்கி விடுவதற்காக நானே எனக்கு மைனஸ் ஓட்டு போட்டு இறக்கி விட்டேன் இது உண்மை என்பது சில வில்லங்கத்தார்களுக்கு தெரியும்.

சரி இதற்கு தீர்வுதான் என்ன ?
ஒன்றுமில்லை அதனை மறந்து விட்டு நான் வழக்கம்போல் எனது பாதையில் செல்லப் போகிறேன்.

நல்லது ஐயா இதுவே தங்களை இன்னும் உச்சியில் கொண்டுபோய் முச்சந்தியில் நிறுத்தும் என்று சொல்லி வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
நல்லது தங்களது வாக்கு பலித்தால் திருச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு, பக்திப்பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு அவர்களது செலவிலேயே சிதறு தேங்காய் உடைக்கச் சொல்லி இதோ மின்னஞ்சல் அனுப்புகிறேன். தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

சாம்பசிவம்-
இதென்ன கூத்து வளையாபதி பலனடைய திருச்சிக்காரவுங்க கப்பம் கட்டணுமா ?
சிவாதாமஸ்அலி-
அதனாலென்ன... நாளைக்கு அவங்களுக்கு ரெண்டு தமிழ்மணம் ஓட்டு போட்டால் சரியாப்போச்சு.
Chivas Regal சிவசம்போ-
அவுங்களுக்கு தமிழ்மண ஓட்டுப் பட்டையே கிடையாது நாம சொன்னா குடிகார மட்டைனு சொல்லுவாங்கே...

நட்பூக்களே... பதிவுலகில் தற்பொழுது நிகழ்ந்து வரும் குழப்பங்கள் அனைவரும் அறிந்ததே ஆகவே அதனை மையமாக வைத்து எழுதினேன் இதற்கு தங்களது விரிவான கருத்துரையை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் வளைய..... மன்னிக்கவும் கில்லர்ஜி.

123 கருத்துகள்:

 1. ங்கொய்யாலே நீ ம(ண்)குடம் வாங்க கூடாது இந்தா வாங்கிக்க...

  மைனஸ்-1

  பாளையங்கோட்டை
  கூழையன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் போட்டது சரியான போடு ,இந்த பதிவுக்கே அந்த ' வலையுலக மெண்டல்' வாக்கு போட்டும் மைனஸ் வோட்டு போடவில்லை,என் பதிவுக்கும் மைனஸ் வாக்கு போடவில்லை :)

   பேசா பொருளைப் பேசத் துணிந்த உங்களுக்கு நன்றி ஜி :)

   நீக்கு
 2. மைனஸ் வோட்டு போடுபவர்கள் செத்தவர்களுக்கு சமம் என்று சொல்லாமல் சொல்கிறீர்களோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்போ சொன்னேன் ?

   அப்படி நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நான் நினைப்பதாக மற்றவர்கள் நினைக்கலாமோ... என்ற ஐயப்பாடும் எமக்கு உண்டு.

   நீக்கு
  2. முதலில் என் பதிவுக்கு மட்டும் செய்து கொண்டிருந்த இந்த இழிசெயலை ,இப்போது அனைவரின் பதிவுகளுக்கும் அந்த ஈனப் பிறவியை பிணம் என்று அழைத்தாலும் தவறில்லை என்றே நானும் நினைக்கிறேன் ஜி :)

   உங்களின் முந்தைய பதிவில் சொன்ன மாதிரி ,இதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டு,தள்ளிப் போட பதிவை இன்றைக்கே போட்டுள்ளேன் ஜி :)

   நீக்கு
 3. ஹிஹிஹி, நிஜம்மாவே இந்த ஓட்டு விவகாரம் எனக்குப் புரியலை. நான் தமிழ் மணத்தை விட்டு விலகி ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போல்லாம் இந்த ஓட்டு இருந்ததா என்ன என்று தெரியவில்லை. யாரும் இதைப் பத்திச் சொன்னதாகவும் நினைவில் இல்லை! போகட்டும் விடுங்க! கடைசியில் வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்! என்னை விட்டு உ.பி. கோயிலுக்குப் போய்த் தேங்காய் உடைக்கச் சொல்றேன்னு! ஹாஹாஹா ஹிஹிஹிஹி, உ.பி. கோயிலுக்கு ஏறுவதே எனக்குக் கடினம்! அதனால் உங்க வேண்டுதல் நிறைவேறாதுங்கோ! ஹாஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹூம் உங்கபாடுதான் கவலையில்லை இந்த ஓட்டுப்பட்டையை வச்சுக்கிட்டு நாங்க படுறபாடு இருக்கே அந்த கஷ்டம் தமிழன்னைக்குத்தான் தெரியும்.

   சில நேரத்துல யாராவது ஜேம்ஸ் ஊரணிக்கிட்டே நின்றால் தள்ளி விட்ருவோம்னு சிலருக்கு தோணும்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா அது தேம்ஸ் எனக் கரீக்டாச் சொல்லுங்கோ கில்லர்ஜி:).. ஜேம்ஸ் என சிலரின் பெயரைச் சொல்லி... புயு:) வம்பை விலைக்கு வாங்கிடப் போறீங்க:)...

   என்ன இருந்தாலும்.. மைனஸ் வோட் போடும் மேஜர் சுந்தர்ராஜன் அங்கிளுக்கு என் வாழ்த்துக்கள்...:) பிக்கோஸ்... அவரின் மைனஸ் ஆலதான் இப்போ த்ர்ரியாதோருக்கும் தெரிய வந்திருக்கு புளொக்குகள் பல:)... ஹா ஹா ஹா நன்மை செய்பவரைத் திட்டலாமோ கில்லர்ஜி?:)...

   நீக்கு
  3. ஹலோ உங்கள் அங்கிள் மே.சு. அவர்களை திட்டவில்லை சந்தேகத்தின் வட்டத்துக்குள் இருக்கின்றார் என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.

   நீக்கு
 4. நல்ல பதிவு. ரசிச்சுப் படிச்சேன். மகுடம் சூட்டறதுங்கறீங்களே! அது என்ன? முதல் இடத்தில் வருவதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடைமுறை பதிவில் 48 மணிநேரத்துக்கு அதிக ஓட்டு வாங்கும் பதிவுகள் மகுடத்தில் நிற்கும்.

   நீக்கு
 5. தீர்வுதான் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
  உங்கள் பாதையில் வெற்றி நடை போட்டு செல்லுங்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நானா சொன்னேன் ?
   வளையாபதிதான் சொன்னாரு... வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

   நீக்கு
 6. இம்மெச்சுர் பீப்புளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேஸ்ட். இந்த மைனஸ் ஓட்டினால் நாம் பதிவுகள் எழுதாமல் இருக்கப் போவதில்லை..கவலையும் இல்லை...வில்லங்கத்தாருக்கும் தெரியும் எனவே.இதைப் பற்றி பேசி சிந்திப்பதை விட்டு மூளையையும், நேரத்தையும் வீணாக்குவதை விட்டு நல்ல பதிவுகள் தரலாம் நாம்....என்பது எங்கள் தாழ்மையான கருத்து...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதைத்தானே வம்பர் வளையாபதியும் ஜொள்"ளுறாரு.

   நீக்கு
  2. உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஜி :)

   நீக்கு
  3. வழி மொழிந்தமைக்கு நன்றி ஜி

   நீக்கு
 7. பதிவை ரசித்தோம் என்பது வேறு விஷயம்....ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசிப்பதற்கே இப்பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல!
   பதிவை புரிந்து கொண்டால் மனம் பண்படும்.

   நீக்கு
  2. நையாண்டி நல்லாயிருக்கு. உள்ளூர ஓடும் வருத்தமும் தெரிகிறது.

   நீக்கு
  3. வருக சகோ துளியளவும் வருத்தம் கிடையாது நையாண்டிக்காக சந்தோஷமாக எழுதினேன்.

   நீக்கு
  4. இந்த நிமிடம் வரை மனம் பண் மாதிரிதான் தெரிகிறது ,என் வருத்தம் எல்லாம் ...குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு கதை ஆகிவிடக் கூடாதே என்பதுதான் ஜி :)

   நீக்கு
 8. எங்க வளையாபதி வளைச்சு வெச்சி லாடம் அடிச்சதுக்கப்புறம்
  மகுட பதியாவது.. லகுட பதியாவது!?...

  அது இருக்கட்டும் .. சும்மா இருக்கிற நேரத்தில நைஜீரியாவுக்கு போன் போட வேண்டியது தானே!...

  அங்கால யாருயா.. மறுபடியும் கலவரத்தை மூட்டுறது!?..

  நான் தானுங்க.. கம்பளிச்சாமி!..

  அடே.. கம்பளிச் சாமி!..
  இதெல்லாம் காசுக்குப் புடிச்ச கேடு..
  கரண்டுக்குப் புடிச்ச கேடுடா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா எப்படி ஜி ?
   வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நைசாக குத்துறீங்க... கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் ஜி

   கரண்டுக்குப் பிடிச்சகேடு ஸூப்பர்

   நீக்கு

 9. என்னது அதிராம்பட்டிணம் அதிரடி அதிரா தங்களுக்கு கொளுந்தியாளா...? நல்லதாப் போச்சு.....தமிழ் மணம் மண்குடமா இருந்தாலும்..இப்படியான ரகசிய தகவல்களை கொண்டுவர உதவுகிறதே...வாழ்க !வளர்க!! வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) நானும் முதல் தடவை படிச்சபோது அப்பூடித்தான் தப்பா நினைச்சுட்டேன்... திரும்பப் படிச்சேன்ன்ன்ன் எல்லாமே பிரிஞ்சுபோச்சு:)...

   அதில் அம்மணி எனச் சொல்லியிருப்பது... அந்த தலையில் பானையுடன் போகும் அம்மணியை ஹையோ ஹையோ...:)
   ஒரு பிரச்டனை தீர்வுக்கு வர இன்னொரு பிரச்சனை கிளம்பிடும்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்:)...

   நீக்கு
  2. நண்பரே மேலே இருக்கும் நைஜீரியா பெண்தான் கொளுந்தியாள்.

   நீக்கு
 10. நாடு இருக்கும் இருப்பில், தமிழ்மணத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. பல பதிவர்களுக்கு இது தெரியாது அல்லது புரியாது. தமிழ்மணத்தில் இப்போது நடக்கும் மைனஸ் ஓட்டு மனிதர்கள் அடிக்கும் லூட்டி பற்றி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள், தனக்கே உரிய நடையில் கிண்டலடித்து சொல்லி விட்டார். ஆனாலும், அந்த மைனஸ் ஓட்டு நண்பர் யாரென்று யூகிக்க முடியவில்லை. கில்லர்ஜி அவரை மேஜர் என்பதால் அவர் ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன் ஆக இருப்பாரோ என்று ஒரு சந்தேகம்.

  ’பொற்கைப் பாண்டியன்’ கதையில் வரும் மன்னன், தனது தவற்றினை மறைக்க, எல்லோர் வீட்டு கதவையும் தட்டியது போன்று,, இந்த மைனஸ் ஓட்டு நண்பரும், எல்லோருக்குமே மைனஸ் ஓட்டு போட்டு விட்டது போலத் தெரிகிறது.

  XxxxxxxxxxxX

  எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்மணத்தில் புரிபடாத விஷயம் இந்த மைனஸ் ஓட்டு சமாச்சாரம். ஏனென்றால் ஒரு பதிவினில் ஒருவருக்கு 6 ப்ளஸ் ஓட்டுகளும், 2 மைனஸ் ஓட்டுகளும் விழுவதாக வைத்துக் கொள்வோம்; தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் 6 / 2 என்று காட்ட வேண்டும். ஆனால் 6 / 8 என்று காட்டும். தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரைப் பக்கம் போய், க்ளிக் செய்து பார்த்தால் ஓட்டுபோட்ட 8 பேர் மின்னஞ்சல்களும் வரும். இதில் யார் ப்ளஸ், யார் மைனஸ் என்று ஒன்றுமே தெரியாது.

  கருத்துரைப் பெட்டியில் த.ம.1, 2, 3 என்று சொல்பவர்கள் போல, மைனஸ் ஓட்டு போட்டவர்களும் த.ம.மைனஸ் 1, 2, 3 என்று சொல்லிவிட்டு, ஏன் மைனஸ் ஓட்டு என்ற காரணத்தையும் சொன்னால், வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்கள் எழுத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் இப்போது தமிழ்மணத்தில், மைனஸ் ஓட்டு போடுவது என்பது ஏதோ உள்நோக்கம், பொறாமை, எரிச்சல் ஆகியவற்றின் வடிகால் போன்று தெரிகிறது.

  XxxxxxxxxxxxxX

  எது எப்படி இருப்பினும், இந்த மைனஸ் ஒட்டு விழுவதைப் பற்றி யாரும் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப் போவது இல்லை. காரணம் சொல்லாமல் மைனஸ் ஓட்டு போடும் நண்பர்தான் ரொம்பவே மெனக்கட்டு பல்லைக் கடித்துக் கொண்டு இதனை செய்ய வேண்டி இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஹாஹாஹா அவர் மிலிட்டரி மேனா... ?

   //பொற்கைப் பாண்டியன் கதை//
   ஸூப்பராக சொன்னீர்கள் உண்மையிலேயே மிகச்சரியாக கணித்து எழுதி விட்டீர்கள் வாழ்த்துகள்

   //ப்ளஸ் மைனஸ்//
   உங்களது கேள்வியும் சரிதான் எனக்கும் நியாயமாக தெரிகிறது.

   ப்ளம் மைனஸின் காரணம் சொல்வது அருமையாக சொன்னீர்கள் அது பயனுள்ளது மைனஸ் போடுவதால் அவர் எதிரி அல்லர்.

   ஆம் நண்பரே வேலையற்ற வேலை எனக்கு மட்டுமே 60 மைனஸ் ஓட்டுகள் என்றால் கரண்டுக்குப் புடிச்சகேடுதான்

   நீக்கு
  2. உள்நோக்கம் ,பொறாமை,எரிச்சல் ...சரியாக சொன்னீர்கள் !

   மைனஸ் வாக்கு போடுபவருக்கு அவ்வளவு துணிச்சல் இருந்தால் ஏன் போலி ஐடியில் வரப் போகிறார் ஜி :)

   யாரென்று இன்னுமா ஊகிக்க முடியவில்லை ?நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்கே ,முதல் கில்லர்ஜீயின் கமெண்ட்டுக்கு நான் ஒரு க்ளு கொடுத்துள்ளேன் ,உங்களால் யூகிக்க முடியும் !ஏற்கனவே என் பதிவில் உங்களுக்கே சொல்லியிருக்கிறேன் ,அது யாரென்று தெரிந்ததும் 'புருட்டஸ் நீயுமா 'என்று நம்ப மறுத்து கேட்பீர்கள் என்று :)

   நீக்கு
 11. தமிழ்மணம் /திரைமணம் இரு பக்கங்களிலும் தெரியும் எண்களில்வலதுபக்க திரைமணத்தில் காணும் எண் அதிகமாயிருந்தால் அது மைனஸ் ஓட்டா ?என்னையும் குறி வைக்கிறார்களே வாழட்டும்
  பக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நீங்களும் காரணம் தெரியாமல்தான் இவ்வளவு நாளும் இருந்தீர்களா.... தயங்காது எழுதுங்கள் ஐயா.

   பதிவைப்பற்றி சொல்லவில்லையே....

   நீக்கு
  2. அய்யா உங்களின் வாழ்த்து ,அந்த மென்டலை நீண்ட நாள் வாழ வைக்கும் :)

   நீக்கு
 12. .....

  இந்தாங்க...mr.வளையாத வளையாபதி


  அய்யனார் கோவில் அறங்காவலர் பதவி ....

  ( இதை கொடுக்க நீங்க யார்ன்னு எல்லாம் கேக்க கூடாது...ஏன்னா நானும் ஒரு பதிவர்...(நானே சொல்லிக்கிட்டா தான் உண்டு...))....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே வாங்க நீங்களும் பதிவர்தான்
   வளைந்து ஏற்றுக்கொள்வார் வளையாபதி நன்றியோடு...

   நீக்கு
 13. ஹா ஹா ஹா பழைய பதிவுக்கெல்லாம் மைனஸ் வோட் விழுந்திருக்கோ?... அப்போ நீங்க ரொம்பப் பிரபல்யமானவர் கில்லர்ஜி.. பழைசை எல்லாம் தேடிப் படிச்சு வோட் போடீனமே என சந்தோசப் படுங்கோ:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எனக்கு வருத்தமே கிடையாது இதனால் இந்த நகைச்சுவை பதிவு எழுத முடிந்ததே அதற்கு நன்றி

   நீக்கு
 14. உண்மைதான் நானும் யோசித்தேன்... பாவம் அந்த அப்பாவி ஜி எம் பி ஐயாவுக்கு இன்னும் வோட் போடவே அவருக்கு தெரிரியல்ல.... தனக்கு மைனஸ் வோட் விழுந்திருக்கோ எனக் கண்டுபிடிக்கக்கூடத் தெரியுமோ தெரியல்ல... அவருக்குப் போய் மைனஸ் போட்டால்ல்ல்.... கடவுள் மன்னிக்கவே மாய்ட்டார்ர்ர்ர்ர்.... தெய்வம் நின்றறுக்கும்... இது இந்த தேம்ஸ் இன் குளிர் தண்ணி மேல் ஆஆடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்ன்ன்ன்:)...
  ஸ்ச்ச்ச்ச்ச் எல்லோரும் 4 அடி தள்ளி நிண்டு பாருங்கோ நான் தேம்ஸ்ல ஓங்கி அடிப்பதை:)... கிட்ட வந்தா தள்ளி விட்டிடுவீங்க:) நான் விரதம்:) சும்மாவே நடுங்குது இதில தண்ணி வேறு குளிருது:)...

  உங்க கொழுந்தியா பிரச்சனைக்கு கொஞ்சம் லேட்டா வாறேன் கில்லர்ஜி...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜியெம்பி ஐயாவுக்கு தமிழ்மணம் ஓட்டு பற்றியே தெரியாது அவருக்கு எதற்கு மைனஸ் போடவேண்டும் ?

   நீக்கு
  2. சகோ .தமிழ் இளங்கோ சொன்னது போல், உள்நோக்கம் ,பொறாமை,எரிச்சல் தான் காரணமாய் இருக்க முடியும் ஜி :)

   நீக்கு
 15. ஐயோ.... இந்த மகுடம் படுத்தும் பாடுதான் என்னே...

  எனக்கென்னவோ அதுனால, நண்பர்களிடத்தில் போட்டி இருப்பதாகத்தான் தோன்றுகிறது. அதுல, பதிவைப் படிக்கறவங்களும் மாட்டிக்கிடற மாதிரி எண்ணம். அதுனால, எனக்கு சமயத்துல, த.ம போட்டோமா, மறந்துட்டோமா என்று தோன்றும்.

  படிக்கறவங்க மனத்துல இருந்தா போதாதா கில்லர்ஜி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் கருத்துரைகளையே பெரிதும் விரும்புகிறேன் காரணம் அதுவே நிலைத்து நிற்கும் ஓட்டு மூன்று மாதத்தில் மறைந்து விடும்
   இது அவசியமில்லாததே...
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)... உகண்டா மீசைப் புகழ் கில்லர்ஜி அவர்கள்:), என் கட்சிக்காரரான... மைனஸ் வோட் போடுபவர்:)... இறந்துவிட்டாரென்றும்:).. இறந்த நிலையில்கூட கரீட்டா தம் டவுனைக் :) கிளிக் பண்ணி மைனஸ் வோட் போடுகிறார் எனவும் படு அபாண்டமான முறையில் குற்றம் சாட்டுகிறார்:)...

  அவர் ஒருதடவை ரஜனி அங்கிளாக வந்து எனக்கு பிளஸ் வோட் போட்டார் என்பதை இங்கு மனதில் கொண்டு:) இனியும் அவர் பிளஸ் வோட் போடோணும் என்பதையும் மனதில் கொண்டு....:)
  உயிருள்ளவரை உஷா....:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆக ஸ்ராட் பண்ணுதே...:) என் உயிர் உள்ளவரை ரஜனி அங்கிளை மறக்க மாட்டேன் என்றும்....:)
  என் கட்டிக்காரரான மைனஸ் வோட் போடுபவருக்கு... கில்லர்ஜி சொன்னதைப்போல அவர் உயிரோடில்லை எனினும் , ஆத்மாவுக்கு நீதி வேணும்..:).. என் கட்சிக்காரருக்கு நீதி வேணும்... வேணும்... ஹையோ எங்கே என் செக்:)... அஞ்சூஊஊஊ ஹொட்டா ஒரு மோர் கப் பிளீஸ்ஸ்ஸ்:).. எனக்கு மூச்சு பொசுக்கென நிண்டிடப்போகுதே முருகா:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் முதல்ல பன்னீர் சோடா குடிச்சுட்டு வாங்களேன்.

   நீக்கு
  2. அது என்னைக் கடுப்படிக்க போட்ட வோட் அதிரா ,அதற்கு அப்புறம் வோட்டு போட்டாரா ... அந்த அங்கிள் ,ஜங்கிள் ஆயிட்டாரே :)

   நீக்கு
 17. உங்கள் போஸ்டில் பொருட் பிழை இருக்கிறது கில்லர்ஜி:)...
  அதாவது படத்துக்குக் கீழே... மைனஸ் வோட் போட்ட....:). என்றெல்லோ போட்டிருக்கிறீங்க? அப்பூடியெண்டால் மேஜர் அங்கிள் இனிமேல் மைனஸ் போட மாய்ட்டாரோ?:)... என் டவுட்டைக் கிளியர் பண்ணச்டொல்லி சிவாஸ் றீ சிவசொம்போ அங்கிளிடம் கேட்டு டொல்லுங்கோ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளையாபதி உங்கள் அங்கிளை சந்தேகத்தில் இருந்து நீக்கி விட்டாராம்.

   நீக்கு
  2. 'அப்பாவிகளின் ' டவுட்களை கிளியர் செய்யும் கடமை இருப்பதால் கில்லர்ஜி பாணியில் சொல்கிறேன் ....அந்த குடிகார மட்டை திருந்துமான்னு தெரியாது :)

   நீக்கு
 18. ஓட்டு என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அது பதிவர்கள் வைத்துக் கொள்ளும் ஐ.டி அது உங்களுக்கே வேண்டாம் நண்பரே பிறகு பிறரிடம் மாட்டிக்கொள்வீர்கள்

   எனது பதிவுக்கு வாருங்கள் பிடித்தால் கருத்துரை மட்டும் பதியுங்கள் அதுவும் உங்களுக்கு தோன்றும் உண்மையான கருத்தை வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. ஹாஹாஆ :) கலக்கல் பேட்டி ...நல்ல நட்புக்களும் அவங்க பொன்னான மனசும் போதும்.

  ஆனா அந்த நைஜீரியா பெண்மணி க்ரேட்டோ க்ரெட்டுங்க அத்தினி மண்குடங்களையும் வச்சிக்கிட்டும் உங்களுக்கு ஒட்டு போடறாங்களே அதை பாராட்டியே ஆகணும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன இருந்தாலும் உறவுமுறை விட்டு விடுமா என்ன ?

   நீக்கு
  2. பொன்னான உடல்நிறத்தை விட, நானும் பொன்னான மனங்களைத் தான் விரும்புகிறேன் ,அஞ்சு :)

   நீக்கு
 20. இன்னொன்று , வலைப்பதிவர்கள் அனைவருமே ஒரு குடும்பம்போல இருக்கிறோமப்போ, சகபதிவர் ஒருவருக்கு இப்படி ஏதும் பிரச்சனை மனக்கவலை வந்தால் அதைத் தட்டிக் கேட்க வேண்டியது நம் பொறுப்பில் ஒன்று என்றே நான் நினைப்பதுண்டு, என் தலையில் இடி விழாதவரை நான் ஓடிக்கொண்டிருப்பேன் என நினைப்பது தப்பு... அது சுயநலமும்கூட...
  இதனால்தான் பகவான் ஜீக்கு ஆரம்பிச்ச மைனஸ் வோட்டிலிருந்தே மீ அங்காங்கூ கூவிக்கொண்டிருக்கிறேன்:)..

  ஆனா பாருங்கோ, என் ஆத்துக்காரரைப்போல எனக்கு இன்னொரு பெஸ்ட் பிரண்ட் கடவுள்:).. அவரை நெம்பி நெம்பியே:) கும்பிடுவேன் அதனாலோ என்னமோ... கரீட்டா என் கொம்பியூட்டரில் வைரஸ் அனுப்பி என்னைப் போஸ்ட் போடவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்:)... இல்லை எனில் மீக்கும் விழுந்திருக்குமே:)... பூஸோ கொக்கோ ஹா ஹா ஹா:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையெல்லாம் நினைக்காமல் பதிவுகளை எழுதி தள்ளுங்கள் ஓட்டு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.

   நீக்கு
  2. உண்மைதான் அதிரா ,உங்க கூவலைத் தொடர்ந்து வந்த கில்லர்ஜீயின் இந்த கூவல் ,அந்த 'கூமுட்டை'யை கதிகலங்க வைத்திருக்கும் என்பது உறுதி :)   நீக்கு
 21. அஞ்சூஊஊ விடுங்கோ விடுங்கோ என் கையை விடுங்கோ நான் சிவாஸ் றீ சிவசம்போ அங்கிளைப்போல:)... டொல்ல வந்ததை டொல்லாமல் விட மாட்ட்டேன்ன்ன்...:)...

  கடவுளே எதுக்கு இப்போ கார்ட் பீட் ஓவராகுதூஊஊ நேக்கு?:)... என்னாது அது தைரோயிட் புரொப்ளமா? கர்ர்ர்ர்ர்ர்ர்:)... இல்ல இல்ல மீ கொதிச்சுப் போயிருக்கிறேன் என்னை டொல்ல விடுங்கோ... நான் சீரியசா கொஞ்சம் பேசோணும்:).

  சரி நான் சொல்ல வருவது என்னவெனில், மைனஸ் வோட் போடுவது ஒன்றும் தப்பே இல்லை, பிளஸ் போடுவதைப்போலவேதானே மைனஸ் உம்... ஒரு போஸ்ட் க்கு பிளஸ் வோட் போட ஒருவருக்கு எவ்வளவு உரிமை இருக்கோ... மைனஸ் போடவும் இருக்கிறது...

  இல்லை எனில் தமிழ் மணத்தில் எதுக்கு மைனஸ் போடும் சிஸ்டத்தையும் வச்சிருக்கினம்?.. அதனால ஒரு போஸ்ட் பிடிக்காவிட்டால் மைனஸ் போடுவது தப்பல்ல அது அவரவர் விருப்பம், பெருந்தன்மை மனப்பாங்குடையோர் பேசாமல் ஒதுங்கி நிற்பினம்.

  ஆனா , பிளஸ் வோட் போடுவோர் , கொமெண்ட்டும் போட்டுச் செல்வதைப்போல, மைனஸ் போடுவோரும்... எதுக்காகப் போட்டோம்? பதிவில் என்ன பிடிக்கவில்லை எனச் சொல்லிப் போட்டாலாவது, அதுக்கு நாம் பதில் கொடுக்கலாம், அது ஞாயமாக இருப்பின் வருங்காலத்தில் தவறைத் திருத்த நினைக்கலாம்...

  இது அப்படியான மைனஸ் வோட்டாக இல்லாமல் குங்குமம் மிஞ்சிய கதைபோல.... லெவ்ட்டூஊஊ ரைட்டூஊஊ எனக் கண்ணை மூடிக்கொண்டு பலருக்கும் போடுவதாலயே கககடுப்பாகும் சூழல் வருதூஊஊஊ....

  ங்ங்ங்ப்க்ப்க்.... ஆஆஆ அஞ்டூஊஊ ஒரு ஹொட் மங்கோ லஸி பிளீஸ்ச்ச்ச்ச்.... முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேன்ன்ன்ன் டொல்ல வந்ததை டொல்லிட்டே தேMஸ்ல குதிப்பேன்ன்ன்ன்ன்ன்ன்:)...

  எங்கின விட்டேன் ஜாமீஈஈ... ஆஆஆங் பிடிச்சிட்டேன்ன்ன்ன்....

  கரந்தை ஜெயக்குமார் அவர்கள் என்ன பாவம் செய்தார் அவருக்கு எதுக்கு?
  கார்த்திகைப்பிறைபோல போஸ்ட் போட்டுவிட்டு ஓடி ஓடி எல்லோருக்கும் கொமெண்ட்ஸ் போடும் துளசி அண்ணன் கீதாவுக்கு எதுக்கு? ஜி எம் பி ஐ யாவுக்கு எதுக்கு????

  அதிராக்குப் போட்டால் அதில ஒரு நியாஆஆஆயம் இருக்குது பாருங்கோ:).. ஏனெனில் மீ அங்காங்கு அப்பப்ப மனதில் தோன்றுவதை சொல்லிக்கொண்டே போவதால் கோபம் பொயிங்கிப் போட்டாலும் போடலாம் ..:) ஹா ஹா ஹா ஆனாப் பாருங்கோ மீ ஒரு அப்பாவீஈஈஈஈ:).. இது அந்த ட்றம்ப் அங்கிளுக்கே தெரியும்:)....

  ஹையோ கை, லெக்ஸ் எல்லாம் இப்பூடி உதறுதே:)... சே சே அது இங்கு குளிர் அதிகம் அதனாலதேன்ன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ மியாவ் இப்போ நீங்க கைய புடிச்சிட்டிருக்கேன்னு நினைச்சி பிடிச்சிக்கிட்டுக்கறது என் கையில்ல அது மூணாவது வீட்டு பிரிட்டிஷ் அக்கா வளர்கிற pet snake :) கமெண்ட் போடற போற அவசரத்தில் என் கைய விட்டுட்டு பாம்பை பிடிச்சிட்டு ஓடிட்டீங்க

   நீக்கு
  2. உண்மை ப்ளஸ் ஓட்டு போடும்போது ஏற்கும் மனம் மைனஸ் ஓட்டு போட்டாலும் ஏற்கணும் அதுதான் நல்ல பதிவருக்கு அழகு.

   நீக்கு
  3. உண்மைதான் ஜி ,அந்த மைனஸ் வோட்டை போலி ஐடியில் போடுவது அழகா ?

   நீக்கு
  4. உள்நோக்கமின்றி, உண்மையான பெயரில் போடப்படும் மைனஸ் வாக்கை நானும் கூட வரவேற்கிறேன் ஜி :)

   நீக்கு
 22. ஹா ஹா ஹா அந்த பானை தூக்கிப் போபவ ... நீங்க சொன்ன உறவு முறைப்படி மச்சாள் முறை வந்தாலும் அதை மீ ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை:)

  நியாயப்படி அவவின் பானையின் நீளத்தையும் கில்லர்ஜியின் மீசையின் நீளத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது... அவ கில்லர்ஜிக்கு கொழுந்தியா அல்ல.. தங்கை முறை:)...
  எனவே உங்கள் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வச்சுப்போட்டு:)... அவவுக்கு உங்கள் சொத்தை எல்லாம் எழுதி, நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து ஜனவரியில், அணில் வால் மீசை கொண்ட அண்ணனாக நிண்டு வாழ்த்தி , திருமணம் பண்ணி வைக்கும்படி வேண்டப்படுறீங்க:)...

  ஊசிக்குறிப்பு:)- ஐப்பசியில் கலா அணனிக்கு நாள் வச்சிருப்பதால் நாங்க எல்லோரும் அங்கு போய் விடுவோம் அதனாலதான் தையில் வைக்கச் சொன்னேன்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ நிருபர் உங்களை அறிவாளி என்று சொல்லி இருக்கிறார் நீங்கள் உறவு முறையே தெரியாமல் இருக்கிறீர்கள்.

   அதாவது வளையாபதியின் துணை மாமனாரும் மாமனாரே... அவரின் சகலையும் மாமனாரே... சகலையின் மனைவி அத்தை, அத்தையின் சகோதரர் பெரியப்பா அல்லது சித்தப்பா சித்தப்பாவின் மகன் சகோதரர் அவரை கட்டியவர் சகோதரர் மனைவி, அதாவது மருமகளின் மாமியார் அவர்தான் வளையாபதிக்கு கொளுந்தியாள் போதுமா விளக்கம் ?
   ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா....

   நீக்கு
  2. ஹா ஹா ஹா துணை மாமனார் என்பதனை... துணைவியின் மாமனார் எனக் கணக்கெடுத்திட்டேன்:)...

   நீக்கு
  3. தமிழ்நாட்டில் துணை முதல்வர் மாதிரி மாமனாருக்கு இளையவர் துணை மாமனார்.

   அடுத்து உங்களுக்கு முறையைப்பற்றி பதிவு போட்டால்தான் சரியாகும்..

   நீக்கு
 23. ஆக முப்பது கிலோத்தானோ உங்கள் கவலை?... நான் ஏதோ ஓவர்க் கவலை என நினைச்சுட்டேன்ன்ன்:)..

  சரி சரி விடிஞ்சதுக்கு இங்கினமே நிக்கிறேன்... இன்னும் கோமதி அக்காவின் கதை படிக்கல்லே... அங்கு ஓடிடுறேன்....

  ஆஆஆஆஆவ்வ்வ் மின்னி முழக்கியதில் இன்னும் வோட் போடல்ல... தோஓஓஓஓ போட்டிட்டு ஓடுறேன்ன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இதைவிட அதிக கவலை இருக்குமோ...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எனக்கு வரும் கவலைகளையெல்லாம் தேம்ஸ்ல உடனுக்குடன் கொட்டிடுவேனே:)..

   நீக்கு
  3. இனி ஜேம்ஸ் அங்கிளிடம் சொல்லி கேட் போடச் சொல்றேன்.

   நீக்கு
 24. பெயரில்லா10/24/2017 3:24 PM

  அனைத்தும் அறிந்தேன் சகோதரா...
  tamil manam - 10
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? தங்களுடைய பதிவு எனது மின்னஞ்சலுக்கு முன்பு போல வருவதில்லையே... ஏன் ?

   நீக்கு
 25. ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
  ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
  எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்’


  என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை நினைவு கொள்ளுங்கள். வழக்கம்போல் உங்கள் பாணியில் தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வரிகள் அருமை ஏற்கிறேன் நன்றி
   எனக்கு துளியும் கவலை இல்லை இதை வைத்து நகைச்சுவை செய்யலாம் என்று நினைத்தேன்.

   பதிவு மிகவும் யோசித்து எழுதினேன்.
   இதை ரசித்தீர்களா ? என்பது அறியவில்லை ஆகவே சிறிய வருத்தம் உண்டு

   நீக்கு
  2. பதிவை இரசித்ததால்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் நண்பரே! தொடருங்கள்!

   நீக்கு
  3. மீள் வருகை தந்த நண்பருக்கு நன்றி

   நீக்கு
 26. அதே அதே எங்க தலைவி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் .
  கரந்தை அண்ணா போஸ்ட் பீனிக்ஸ் அதுக்கு போய் மைனஸ் போட எப்படி மனம் வந்தது :(
  அப்புறம் உங்க பதிவுக்கு உங்க நினைவுகூண்டு அதற்கும் போட்டிருந்தாங்க :(
  மனசுக்கு கஷ்டமா இருந்தது .
  ஆரம்பத்தில் இதையெல்லாம் எழுதாம விடலாம்னுதான் நினைச்சேன் ஆனா தல்வீ சொன்னாப்ல ஆதங்கத்தை சொல்லாம ஒதுங்கி செல்வது மாபெரும் தவறு .  தலவீ சொன்ன மாதிரி மைனஸ் போட்டா அதற்கான காரணத்தையும் சொல்லணும் பிடிக்கலைன்னா ஒதுங்கி செல்வது நல்லது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மைனஸ் ஓட்டு யாராக இருந்தாலும் காரணம் சொல்லி போடுவது நல்லது கோபிக்ககூடாது.

   நீக்கு
  2. இனிமேலாவது அந்த மரமண்டைக்கு இது புரிந்தால் சரி தான் ஜி :)

   நீக்கு
 27. இதுநாள் வரை துளசி அண்ணாவும் கீதாவும் ஒரு சிறு கோபம் காட்டி கூட பார்த்ததில்லை எங்குமே.. அவங்களுக்கு எதுக்கு மைனஸ் அப்புறம் சகோ குமார் பேச்சிலர் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி போட்டிருக்கார் அதுக்கு போய் மைனஸ் ..
  நாங்களும் எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டுதான் வரோம் ,எத்தனை மைனஸ் போட்டாலும் அந்த பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு அச்சகோதர சகோதரிகளை இன்னும் ஊக்குவிப்போம் என்று மைனஸ் வோட்டு போடறவங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் கருத்துரை போட்டு ஊக்குவிப்பதை யாரும் நிறுத்தக்கூடாது.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா என் செக்:) பொயிங்கத் தொடங்கிட்டா:)... இனி யாராலும் அவவைக் கொன்றோல் பண்ண முடியாமல் போகப்போகுதே ஜாமீஈஈஈஈ:).

   நீக்கு
  3. அன்றும் இன்றும் என்றும் நான் மைனஸ் வோட் போட்டதில்லை ,பதிவு பிடிக்கவில்லை என்றால் கண்டுகொள்ளாமல் போய்விடுவேன் .... என் கொள்கை விளக்கம் சரிதானே :)

   நீக்கு
 28. அட் போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு தமிழ்மணம் வோட்டு வோட்டு என்று பேசிக்கிட்டே இருக்கீங்க. அதற்கு பதிலாக வேற் ஏதாவது ஒரு பதிவு எழுதி போட்டு இருக்கலாம் தமிழ்மணம் வோட்டு மகுடம் இதற்கு மேல உங்களால் சிந்திக்க முடியாதா என்ன? ஒருத்தன் நெகட்டிவ் வோட்டு போட்டால் போட்டுட்டு போகட்டுமே அதனால் உங்க வீட்டுல் உலை வைக்க ம்டியாமல் பீயிடுச்சா என்ன? இனிமே யாரவது தமிழ்மணம் வோட்டு அது இது என்று எழுதி பதிவு இட்டால் உடனே நானே ஒரு நெகட்டிவ் வோட்டு போட்டுவிடுவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரே மன்னிக்க...
   இப்பதிவு கண்டனப்பதிவோ, கவலையான பதிவோ நிச்சயமாக அல்ல. மோடியை வைத்து நீங்கள் காமெடி செய்வது போல நானும் செய்தேன் அவ்வளவுதான் இந்த காமெடியை மிகவும் யோசித்து எழுதினேன்.

   இப்பதிவின் முதல் மைனஸ் ஓட்டே என்னுடையதுதான் இனி தொடர்ந்து போட்டுக் கொள்வேன் அதேநேரம் பிறருக்கு வழக்கம் போலவே இருப்பேன்.

   இந்த வேலையை செய்தவர் இதை உணரவேண்டும் நம்மை கோமாளி ஆக்கி விட்டார்களே என்று...

   ஆகவேதான் நான் யாரையும் திட்டவில்லை எனக்கு அவசியமும் இல்லை.

   இப்பொழுது இப்பதிவு தங்களுக்கு விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்
   வருகைக்கு நன்றி தமிழரே உங்களுடைய கருத்துரை மட்டும் போதும். ஓட்டைப்பற்றி இனி யாருமே நினைக்கவே மாட்டார்கள்.

   நீக்கு
  2. கில்லர்ஜி இது காமடி பதிவு என்பது எனக்கு நன்றாக புரிகிறது அது புரியாமல் கருத்து சொல்லவில்லை நான் எனது பாணியில் பதில் சொல்லி இருக்கிறேன் அவளவுதான்

   நீக்கு
  3. இதை காமெடியாய் மட்டுமே புரிந்து கொண்டமைக்கு நன்றி தமிழரே...

   நீக்கு
 29. யார் என்பதை சொல்லவும் முடியும்... ஒரு தொழிற்நுட்ப பதிவு மூலம் அதை நிரூபிக்கவும் முடியும்... ஆனால் அது எனக்கும் கேவலம், அசிங்கம், இன்னும் பல...

  No.1) முதலுக்கே மோசமாகி விடக் கூடாதல்லவா...(!)

  No.2) எல்லாமே அந்த பகவானுக்கு தெரியும்...(!!)

  நன்றி ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துரை போலவே இருந்து விடுங்கள் ஜி அனைவருக்கும் நல்லது.

   வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
  2. (No.1) முதலுக்கே என்பது அற்ப முதலிடத்தில் இருப்பவர் என்று கற்பனை வேண்டாம்...

   (No.2) ஜி (என்பதை சொல்லவில்லை...) நஹி... ஹிஹி...

   நீக்கு
  3. யாருக்கும் மைனஸ் வாக்கு போடவேண்டிய அவசியம் எனக்கில்லை ,இப்போது மைனஸ் வாக்கு விழுந்து இருந்து இருப்பதெல்லாம் என்னை நம்பர் ஒண்ணாக்கிய என் வலையுலக நண்பர்களுக்கு !நன்றி மறப்பவன் நான் அல்ல ,ஏற்றி வந்த ஏணியை உதைக்கும் முட்டாள் அல்ல நான் !

   ஆனானப் பட்ட வல்லரசு நாட்டின் ரகசியங்களே களவாடப் படும் காலம் இது !வலைச் சித்தரான உங்களால் சித்து விளையாட்டு நடத்த முடியாதா என்ன :)

   நம்பர் ஒன் ஸ்தானம் வேண்டாம் என்றுதான் ,கடந்த மாதமே ,வலையுலகுக்கு டாட்டா பை பை என்று ஒதுங்க நினைத்தேன் ,நண்பர்களின் அன்பான வேண்டுகோளால், வாரம் ஒரு பதிவாக குறைத்துக் கொண்டு விட்டேன்!இத்தனை நாள் நான் பெற்ற இன்பம் நண்பர்கள் பெறட்டும் என்று ப்ளஸ் வாக்கு மட்டுமே அளித்து வருகிறேன் !

   எனக்கு நன்றாகவே தெரியும் ,அந்த போலி ஐடி குரூப்பில் நீங்களும் இருப்பது :)

   நீக்கு
  4. நல்லது... இப்படியே இருங்கள்... உண்மை அனைவருக்கும் தெரியும்... யாரோ உங்கள் தளத்தில் மைனஸ் ஒட்டு போட்டு விட்டார்கள் என்பதற்காக நீங்கள் செய்த ஆராய்ச்சி, கில்லர்ஜி, சகோதரி ராஜி - இவர்களின் மேல் சந்தேகம் மற்றும் பழைய சென்னை பதிவர்களிடம் பேசி உங்களை நீங்களே தரம் குறைத்துக் கொண்டது உட்பட பலதும் உண்டு...

   மற்றும் :-

   1) கருத்துரை இல்லையென்றாலும் +1போதும் என்கிற மனநிலையை அகற்றி விடுங்கள்... உங்கள் தளத்தில் கருத்துரை பெட்டியில் கீழே இருந்ததை அகற்றி விட்டீர்கள்... நான் சொல்வது மனதில்... அவரவருக்கு நிறைய வேலைகள் இருக்கும்... ஓட்டிற்காக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி சிரமப்படுத்தாதீர்கள்...

   2) தங்களின் பணிக்காலம் முடிவடைய போகிறது என்று கேள்விப்பட்டேன்... இந்த நேரத்தில் மனநிலை பாதிப்பு வருவது சாதாரணம்... அதற்காக இப்படியா...? முகநூலின் ஒரு இணைப்பு தான் உங்களுக்கு அனுப்பி இருந்தேன்... அங்கேயும் சென்று விவரம் புரியாமல் பதில் சொல்லி விட்டு, அவர்களுக்கு எல்லாம் friend request அனுப்பி உள்ளீர்கள்... இன்னும் நிறைய இருக்கு... அதெல்லாம் உங்களுக்கு தெரியப்படுத்தினால் மிகவும் நொந்து போவீர்கள்...!

   3) அனைத்து தளத்திற்கும் சென்று வாசியுங்கள்... பதிவிற்கேற்ப கருத்துரை இடுங்கள்... உங்களது தளத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் நல்ல பதிவுகளை வாசியுங்கள்... யார் யார் நமக்கு மொய் வைப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அங்கே மட்டும் செல்லாதீர்கள்... இந்த +1, த.ம., மகுடம் இதைப்பற்றி எதையுமே கருத்துரையாக சொல்லாதீர்கள்... சகோதரி அதிரா அவர்களின் தளம் உட்பட பலரின் வலைத்தளத்தில் உங்கள் கருத்துரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்... உங்களின் தவறு உங்களுக்கே புரிய வாய்ப்புண்டு...

   // +வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :) // இப்படி இரு நாளைக்கு முன் அனைத்து தளங்களிலும் உங்களின் கருத்துரை இருந்தது...

   இந்த -->http://settaikkaran.blogspot.in/2017/10/04_59.html?m=1 தளத்திலும் இருந்தது....

   அதற்கு அவரின் மறுமொழி :-

   //Blogger Bagawanjee KA//

   //+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)//

   வாங்க ஜோக்காளி சார்! நான் தான் ஓட்டுப்பட்டையையே எடுத்துவிட்டேனே! :-)

   நேரம் கிடைக்கும் போது, உங்கள் தளத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 200 தளங்களுக்கு மேல் என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன்.... செய்து கொண்டும் இருக்கிறேன்... அதில் முக்கியமானது இந்த பாழாய் போன திரட்டி... எனது முதல் தொழிற்நுட்ப பதிவிலேயே சொல்லி உள்ளேன்.. பதிவின் இணைப்பு (http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html) இதில் 6-வது தலைப்பில் உள்ளதை வாசித்துப் பாருங்கள்... பதிவின் தலைப்பு : இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...

   இனி நீங்கள் மாற வேண்டும் பகவான்ஜி... நன்றி...

   நீக்கு
  5. நான் மா(ற்)றப்போகிறேன் ஜி
   இனி தெரியும்...

   நீக்கு
  6. உண்மை தெரிந்த காரணத்தால் தான், நீங்கள் சொல்லும் வலையுலக நண்பர்கள் இன்றும் என்னை ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் !
   உண்மை ஒருநாள் வெளியாகும் ஊரும் உலகமும் தெளிவாகும் !
   என்னால் பாதிக்கப் பட்டேன் என்று யாராவது ஒருவர் கூறட்டும் ,நான் மாறுவதைப் பற்றி யோசிக்கிறேன் !

   உள்நோக்கத்தோடு நண்பர்கள் அனைவரின் பதிவுகளிலும் மைனஸ் வோட் போடுபவர்கள் ,சொந்தப் பெயர்கள் இல்லாதவர்கள் மட்டுமல்ல ,அப்பன் பெயர் தெரியாதவர்களும் கூட !

   123 என்று பட்டியல் போடுவதின் மூலம் ,என்னை பலிகடா ஆக்க நினைப்பது புரிகிறது ,நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் ,நீங்களே முடித்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன் :)

   நீக்கு
 30. ஒரு மொட்ட, ஒரு மீச, நாலு ஸ்கூல் பசங்க.இவங்களுக்கு ஒரு தலைவன்.

  தில் இருந்தா நேர்ல வா!

  எங்க மீசக்காரரு மனச நோவடிக்கனும்னு நெனச்சா, நா சொல்ல விரும்பல!

  உனக்கு என்னா தேவை முதலிடமா? எட்துக்கோ.

  நடுவுல குழப்பம் பன்னி ஜெயிக்கலாம் ன்னு நெனச்சா நடுவுலயே கானாம போயிறுவ. உருப்படியா சமுதாயத்துக்கு ஏதாவது செய்யப்பாரு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பே சிவமாய் இருப்பவர் இப்படி சொல்ல வேண்டாமே...

   நகைச்சுவை பதிவு நன்றா ?
   அதை சொல்லுங்கள் நண்பா.

   நீக்கு
  2. முதலிடம் நீங்கள் எனக்கு தந்த பிச்சை நண்பரே !பல ஆண்டு காலம் முதலிடத்தில் இருக்கும் எனக்கே இது போரடித்து விட்டது ,நானே என் பதிவுகளை குறைத்துக் கொண்டு விட்டேன் இதற்காக !
   யூனியன் என்ற பெயரில் , குழப்பம் செய்பவரைக் கண்டுபிடிக்க முடிந்த உங்களால் ..இந்த குழப்பவாதியையும் கண்டுபிடிக்க முடியும் :)

   நீக்கு
 31. ஏனோ தானோன்னு பதிவு இடுவது மட்டுமே வாழ்கை என்றிருப்பவர் பலர். தன் சொந்த வலிகளையும் பதிவாக வெளிப் படுத்துபவர் சிலர். மற்றவர்
  வலியையும் கொண்டாடி மகிழும் சிறுவர் சிலர். உ(ண்)மை யெல்லாம் காயப் படுத்தி மகிழ எப்படித்தான் மனம் வருதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசாட்சி அற்றவர்கள் காயப் படுத்துவதைக் கணக்கில் எடுக்கவே வேண்டாம் ஜி :)

   நீக்கு
 32. போடுபவர் யாரென்று தெரிந்தாலும் அதைச் சொல்லி நம் நட்பை ஏன் கெடுத்துக்கணும்...
  நாம தமிழ்மண ஓட்டு, மகுடம் மட்டைக்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை... ஓட்டு வந்தா என்ன வராட்டி என்ன...
  நாம் எழுதுறது நம்ம சந்தோசத்துக்காக... பிடிச்சிருந்தா ஒண்ணு பிளஸ்... பிடிக்கலையா ஒண்ணு மைனஸ் போட்டுட்டுப் போகட்டுமே...
  இதனால் வேலயத்துப் போய் மூணு ஐடியில் வந்து ஓட்டுப் போடும் நண்பருக்கு நேரம்தான் செலவாகும்...
  நம்ம எழுத்து இந்த ஓட்டால்தான் வளரவோ தேயவோ போவதில்லை....
  2009-ல் வலையுலகம்... கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிக்கைகளில் கதைகள் வந்தாச்சு....
  வலையில் என் எழுத்து பலருக்குப் பிடித்தாச்சு... அப்படியே தங்கள் எழுத்தும்...
  இனித்தான் ஓட்டால் இதயங்களை வெல்ல வேண்டும் என்றில்லை... ஏற்கனவே பல பிரபல வலையுலக ஜாம்பவான்களின் மனதில் இவன் இப்படியான எழுத்தாளன் என்பதை பதிய வச்சிட்டோம்...
  இனி உகாண்டாவும் வேண்டாம்... சிதம்பரமோ மதுரையோ வேண்டாம்...
  விட்டுட்டு வேலையைப் பாருங்க...
  வீணாப்போன நண்பர் விரைவில் மனநலம் திருந்துவார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவாக கருத்தை பதிந்தமைக்கு நன்றி.

   நீக்கு
  2. உங்களைப் போன்றே அவர் மனம் திருந்துவார் என்றே நம்புகிறேன் ஜி :)

   நீக்கு
 33. மன'தில்' தில் உள்ளதால் உள்ளதை உள்ளவாறு எழுதுகிறேன். தவறாக கருதாதீர்.

  இன்று நாம் காணும் சமூக கொடுமைகளுக் கெதிராய் பெரிதாக (me too) பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை. இந்த நிலையில் முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் பெட்ரோல் விலை போல தினசரி மாறக் கூடியது. என்பதுடன் அது ஒரு மிகப் பெரும் சுமை என்பதை அறியாதவர் தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவர். கடந்த ஒரு வருட காலமாக பெரிதாக வலைப் பக்கம் வர முடிவதில்லை. வாழ்க்கை சூழல் கா ரணம். இன்று நான் மட்டுமல்ல நிறைய பதிவர்கள் ஒதுங்கியிருப்பதன் ரகசியம் இதுதான். இந்த நிலையில் கடின வே லைப் பளுவிலும் பதிவெழுதும் அன்பர்களைப் பாராட்டி எழுத நினைத்தால் நேசமிருந்தாலும் நேரமில்லை. இருப்பதே உழக்களவு வாழ்க்கை இதில் கிழக்கு மேற்க்கா?. எல்லா அழுக்குகளையும் களைந்து தலை முழுகி விட்டு வழக்கம் போல (எழ) எழுத நட்பு களை அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான தீர்வு சொன்னீர்கள் நண்பரே அவரவர் பாதையில் இணைந்தே கடந்து செல்வோம்.

   நீக்கு
 34. மைனஸ் வோட்டு விழுந்தால் என்ன நண்பரே
  எனக்கும் கூட இப்பொழுதுதான் மைனஸ் வோட்டு விழ தொடங்கியிருக்கிறது.
  யாரோ ஒருவரின் மன வருத்தம், மைனஸ் வாக்காய் மாறியிருக்கிறது.
  அதன் பெயரே மைனஸ்தானே,
  கழித்தலைப் பற்றிக் கவலைப்படுவானேன்.
  விட்டுத் தள்ளுவோம்,
  தொடர்ந்து எழுதுவோம்
  மனிதம் போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்னைப் பொருத்தவரை எனது எண்ணங்களை பிறர் அறிந்து கொள்ளவே எழுதுகிறேன்.

   ஓட்டு அவசியமில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 35. மைனஸ் ஓட்டு விழுந்தால் நாம பிரபலம்ன்னு சகோ. மூங்கில்காற்று முரளிதரன் சொன்னதால நானும் விட்டுட்டேன்.

  என்ற பதிவுக்கும் மைனஸ் ஓட்டு பல விழுந்திருக்கு.. அதனால்தானோ என்னமோ தமிழ்மணம் பதிவு பக்கத்துல வரல. பதிவு ஹிட் அடிக்க தேவை இல்ல. ஆனா, பதிவு இப்படி வெளி வருதுன்னும் காட்டலியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரபலம் ஆனால் நல்லதுதான் இப்போ பிராபலம் ஆகிப்போச்சே...

   தமிழ் மணம் ஹிட் வேண்டாம் அந்த ஏரியாவில் காண்பித்தால் போதும் ஸூப்பர் சகோ.

   நீக்கு
 36. ஜீ இந்த தமிழ் மணம் பற்றி எனக்கு ஒன்று புரியாது முதலில் இரண்டாவது இன்ரஸ்ட் இல்லை பிளாக்கை ஆரம்பித்த புதிதில் பிளாக்கர் நண்பர் இருந்தாரே எல்லோருக்கும் சொல்லி கொடுப்பாரே ஒருவர் பதில் .காம் என்பதை கூட வைத்திருந்தார் அவர் சொல்லி குடுத்தமாதிரி தான் நான் ப்ளாக் ஆரம்பித்தேன் அதில் தான் அப்போ தமிழ்மணத்தில் பதிவு செய்து வைக்கணும் என்று சொல்லி செய்துவைத்து இருந்தேன் இவ்வளவுதான் தெரியும் இப்ப அவரையும் காணோம் எதையாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் பார்த்தா ..... இப்பதான் ரீசண்டா ஓட்டு போடுவது என்பதை பற்றியே எனக்கு தெரியும் ....சிரிக்க கூடாது.... ஆனால் அப்படி போடுவதால் என்ன வரும் என்பதுவும் தெரியலை சில பேரோடது எல்லாம் திறக்கும் போது தம்சப் சிம்புளுடன் வருகிறது ஒன்று கட்டைவிரல் மேல தூக்கி ஒன்று கீழே இறக்கி இதில் மேல தூக்கியவை போல் உள்ளதை தானே அழுத்தனும் ஒட்டு என்றால்?... சரியா.... அப்படி அழுத்தும்போது லாகின் செய் என்று வருகிறது செய்த்வுடன் உங்கள் ஒட்டு ஏற்கொள்ளப்பட்டதுனு சொல்லுது .... இப்படித்தானே ஒட்டு போடணும் சரியாக சொல்லிகிறேனா ........2,3 வருஷம் கழித்து வந்தால் ஒன்றும் புரியலை
  இங்கு நீங்கள் எதோ கொத்தி கிளறி களை பிடிங்கி இருக்கிறீர்கள் என்ற வரை புரிகிறது 2 தடவை படித்த பின் புரிந்தது இவ்வளவுதான் இதுக்கு இம்புட்டு பெரிசா பின்னுட்டமா என்று என்னை திட்டுவீங்களோ
  ஒரு டவ்ட் கிரீன் சேண்டுக்கு இதையெல்லாம் எப்படி கண்டு பிடுகிறீங்க(+,-) அங்கே த.ம விளக்கி சொல்லுவாங்களோ...... அதிரா மற்றும் எல்லோரும் பெரிசு பெரிசா பேசி இருக்காங்க இதை பத்தி எனக்கு அழுகாச்சியா வருது ஒன்னும் புரியலையேன்னு இப்ப கூட எங்கேயோ சமீபத்தில் படிச்சாமாதி நியாபகம் இந்த மைனஸ் வோட்டு என்பதை பற்றி இருங்க தேடி பாத்துவிட்டு வருகிறேன் எது எப்படியோ DD சகோ சொன்னா எல்லாம் க்ரக்ட்டுதான் இருக்கும் அவரும் இன்னைக்கு வந்து இருக்கார் பெரிசா போட்டு இருக்கார் நான் படிச்சிட்டு திரும்பவும் வரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக புரிந்ததுவரை சரியே

   எனக்கு தெரிய நான் உங்களுக்கு சொல்வது இதற்குமேல் இதனுள் நுழையாமல் இருப்பதே நல்லது என்றாலும் உங்களுக்கும் பதிவுகள் அதிக ஓட்டுகள் வாங்கி மகுடத்தில் நுழைந்து முன்னணியில் வருவதற்கு ஆசை இருக்கத்தான் செய்யும்.

   எல்லோருமே எங்க தாத்தா புத்தரைப்போல் இருப்பது சாத்தியமில்லைதான் அவரது "கொல்லு" பேரன் நான் இனி சிறிதளவினும் முயல்வேன்.

   பாராளுமன்ற கட்டிடத்தையே வேண்டாம் என்று விட்டுக் கொடுத்த பரம்பரை நாங்கள் இதெல்லாம் ஜுஜூபி.

   நீக்கு
  2. ஹா ஹா வேண்டாம் ஜீ (நம்மிலிகிதா அது புரியலையே ஏன், என்ன, எதுக்குன்னு வரலை நமக்குன்னு ..... நம்பிள் அந்தப்பக்கம் போகமாடம் இப்போ) நான் மேலே குறிப்பிட்டபடிதானே ஒட்டு போடணும் அதுமட்டும் சரியா இல்லையானு சொல்லுங்கோ கொஞ்சம் தலையை சுத்தற மாதிரி தான் இருக்கு நிறைய புரியலை மறுபடியும் ரெஸ்டுக்கு போயிடுவேனோ என்று நினைப்பு வரும்படி ....

   நீக்கு
  3. ஓட்டுதான் வழக்கம் போல்தான் நீங்கள் போடுவீங்களே... அதிலென்ன குழப்பம் ?

   நீக்கு
 37. நான் மைனஸ் பக்கம் போவதில்லை. ஆகையால் உங்களது பதிவு என்னை பாதிக்காது என்றே நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களுக்கு பதிவில் வளையாபதியின் பேட்டியை ரசித்தீர்களா ? என்பதைப்பற்றி சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

   நீக்கு
 38. சொந்தமாக பதிவு எழுதி பிரபல்யம் ஆகா முடியாதவர்கள் பிறர் மீது காழ்புணர்ச்சி கொண்டு இப்படியான ஈனச்செயல்கள் செய்கின்றார்கள் அவர்களுக்கு இது நிரந்தம்மில்லை . இதுவும் கடந்து போகலாம் என்பது போல எண்ணி நீங்கள் தொடர்ந்து பயனியுங்கள் ஜீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனது பயணத்தில் குழப்பம் இல்லை நிச்சயம் பயணம் தொடர்ந்து செல்லும்...

   நன்றி நண்பா...

   நீக்கு
 39. ஓட்டுப் போடப் பழக்குகிறீர் போல
  எங்கள் ஓட்டு உங்களுக்குத் தான்

  பதிலளிநீக்கு
 40. ஆத்தி இது என்ன புதுசா மைனஸ் ஓட்டு.காலக்கொடுமை வளையாபதி...இது தெரியாமல் நான் வேற உலகில் இருக்கேனா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதுமா ?

   வலையலகத்தையும் கொஞ்சம் பாருங்க...

   நீக்கு
 41. இந்த மண்ணாங்கட்டி வோட்டுக்கே இப்படி அலைஞ்சா..அவங்க ஏன் நம்ம ஓட்டுக்கு அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க?
  வலைப்பதிவர்கள் மிகவும் பெருந்தன்மையானவர்கள் என்ற எண்ணத்தில் இடிவிழுகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 42. நல்லதொரு பேட்டி.... வலையுலகம் விட்டு சில நாட்கள் விலகி இருந்ததில் ஒன்றுமே தெரியவில்லை. ஏனோ சில விஷயங்கள் இப்படி வந்து, ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் வ்லையுலகத்தில் மேலும் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது.

  என்னைப் பொறுத்தவரை, ஓட்டு பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை. ஒட்டு என்றாலே பிரச்சனையாக இருக்கும் காலம் இது! கள்ள ஓட்டு, மைனஸ் ஓட்டு என இங்கேயும் தொடங்கிவிட்டதா! கஷ்டம்!

  பதிலளிநீக்கு
 43. வாங்க ஜி இதற்கே இவ்வளவு தில்லுமுள்ளு இருந்தால் அரசியல்வாதிகள் எவ்வளவு செய்வார்கள் ?

  பதிலளிநீக்கு