இன்று நடிகை நளினாவுக்கு திருமணம் சென்னையில் பிரபலமான ஹோட்டல் ரோஸிக் பேலஸ் கோலாகலமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது முதல்வர் முகிலன் முன்னிலை வகிப்பதால் முன்னணி நட்சத்திரங்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு, மட்டுமே அழைப்பு ரசிகர்கள் போலீஸாரால் தெருவின் முனையிலேயே தெருநாயை போல் விரட்டி அடிக்கப்பட்டார்கள்
இருப்பினும் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி ரோட்டை குப்பைக் கூளமாக்கி நகராட்சி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை ''பெருக்க'' வைத்தார்கள். மாப்பிள்ளை ரிச்சர்ட் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர் வயதுதான் கொஞ்சம் வித்தியாசம் நளினாவைவிட 23 வயது கூடிவிட்டது, அதொன்றும் அவளது குற்றமில்லை அவளது தாய்-தந்தையினர் லேட்பிக்கப் மற்றபடி வரதட்சினை பிரச்சனைகள் கிடையாது ஸூட்டிங்காக அமெரிக்கா போகும்போது அவருடன் பழகியதில் அவரது குணம் பிடித்துப் போனதால் பெரியோர்கள் நிச்சயம் செய்து விட்டார்கள் மாப்பிள்ளை சென்னையில் ஒருவாரம் தங்கி விட்டு சொந்த ஜெட் விமானத்திலேயே அமெரிக்கா போவதாகவும் நளினா கைவசமுள்ள ஐந்து படங்களையும் இரண்டே மாதத்தில் முடித்துக் கொடுத்து விட்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்கா போய் செட்டில் ஆகி விடுவதாகவும் ஏற்பாடு.
இருப்பினும் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி ரோட்டை குப்பைக் கூளமாக்கி நகராட்சி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை ''பெருக்க'' வைத்தார்கள். மாப்பிள்ளை ரிச்சர்ட் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர் வயதுதான் கொஞ்சம் வித்தியாசம் நளினாவைவிட 23 வயது கூடிவிட்டது, அதொன்றும் அவளது குற்றமில்லை அவளது தாய்-தந்தையினர் லேட்பிக்கப் மற்றபடி வரதட்சினை பிரச்சனைகள் கிடையாது ஸூட்டிங்காக அமெரிக்கா போகும்போது அவருடன் பழகியதில் அவரது குணம் பிடித்துப் போனதால் பெரியோர்கள் நிச்சயம் செய்து விட்டார்கள் மாப்பிள்ளை சென்னையில் ஒருவாரம் தங்கி விட்டு சொந்த ஜெட் விமானத்திலேயே அமெரிக்கா போவதாகவும் நளினா கைவசமுள்ள ஐந்து படங்களையும் இரண்டே மாதத்தில் முடித்துக் கொடுத்து விட்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்கா போய் செட்டில் ஆகி விடுவதாகவும் ஏற்பாடு.
நளினாவுக்கு சொந்த ஊர் கேரளா கண்ணூர் கலைதாகத்தை தீரக்க வேண்டி சென்னைக்கு ரயிலேறியவர் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவளையும் சில இயக்குனர்களால் பிரபலமான அள்ளி அணைத்துக் கொண்டது வெள்ளிவிழா இயக்குனர் வேலுகந்தர் தனது கண்ணகி படம் மூலம் அறிமுப்படுத்தினார் கருப்பாயி என்ற அவளது இயற்பெயரை அவளின் நளினங்களை கண்ட இயக்குனர் நளினா எனபெயர் மாற்றினார் படம் சூப்பர் ஹிட் திருமணம் செய்யப் போவதால் முன்கூட்டியே பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டி விருந்து கொடுத்து நடிகை நளினா பேசினாள்....
வனுக்கோம் எண்க்கு கள்யாநம் செய்யாபொகுது அதுநலே இணிநானு நடிகுல்லே அமெரிக்கா பொரேன் இத்னைநாலா எண்ணை வலாவைத்த தமில்நட்டு மக்குலுக்கும், ரசிகாரு எள்ளார்க்கும் எண்னாதூ மணாசு நொரயே நண்ரி.
என பலத்த கைதட்டலுக்கு இடையே பேட்டியை கண் கலங்கி முடித்துக் கொண்டாள் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்ததில் நளினாவுக்கு சந்தோஷம். ஒருவாரம் மட்டும் ஹனிமூனுக்காக மாப்பிள்ளையும்-பெண்ணும் கோவா சென்று விட்டு வந்தார்கள் மாப்பிள்ளை தனது ஜெட் விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டார் நளினா விமான நிலையம் சென்று அவருக்கு முத்தம் கொடுத்து இரண்டே மாதத்தில் வந்து விடுவேன் எனஅனுப்பி விட்டு, அப்படியே ஸர்ப்ரைஸ் கொடுப்போமென டிஞ்சர் வச்சானின் இது விதவைக்காலம் ஸூட்டிங்காக விராலிமலை சென்றாள் இதை இயக்குனர் டிஞ்சர் வச்சான் எதிர் பார்க்கவில்லை இருந்தாலும் நளினா வந்ததால் சட்டென அவளது பாக்கி ஸீன் எடுக்கலாமென்றால்.... தாலியறுப்பு ஸீனுக்குத்தான் மலையடிவாரத்தில் குடிசை செட்டிங் போடப்பட்டிருந்தது ஆனால் தாலியறுக்க தாலி இல்லை நிலைமையை இயக்குனர் விளக்க... நளினாவும் பரவாயில்லை இதையே யூஸ் செய்துக்கிறலாமென சொல்லி விட்டாள்.
டிஞ்சர் வச்சானுக்கு சந்தோஷம் காரணம் ஸீன் நேச்சுரலாக இருக்குமென... போன வாரம் கட்டிய புது தாலியை இந்த வாரம் புளி கரைத்த தண்ணீரில் முக்கி அழுக்காக்கி, ஸூட்டிங்காக தாலி அறுத்தார்கள் மேலும் இரண்டு ஒப்பாரி ஸீன்களையும் முடித்து விட்டு மறக்காமல் அறுத்த தாலியை இவளே முடிச்சுப் போட்டு கழுத்தில் மாட்டிக் கொண்டு இரவே புறப்பட்டு சென்னை வந்தாள் மறுநாள் காலை எழுந்து குளிக்கப் போனவள் சரி இன்று குளியல் ஸீன்தானே அங்கு போய் குளிப்போம் என, ஸூட்டிங் புறப்படும்போது.... அமெரிக்காவிலிருந்து, போன் ரிச்சர்ட் சென்ற விமானம் தரையிறங்கும் போது தீ பிடித்து விமானத்திலிருந்த எட்டு பேரும் உடல் கருகி இறந்து விட்டதாக... தகவல்.
அப்படியே ஸோபாவில் உட்கார்ந்தவள் ஸூட்டிங் கேன்சல் செய்து விட்டு அடுத்த ½ மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி மேனேஜர் மேகநாதனுக்கு உத்தர விட்டாள், பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில்.... நளினா பேசினாள்...
எண் உசுறு தமிலு மக்குலுக்கும், ரசிகாரு எள்ளார்க்கும் வனுக்கோம் நாணு நடிகுலேனு தெறிஞ்சி ரசிகாரு எள்ளாரும் எணுகு மெயில் அணுபியச்சு போஸ்டரு ஓட்டியச்சு அமெரிக்கா பொகாவேனாணு சொல்ளிருச்சு வீடுக்கூ முண்னடியெ ரசிகாரு எள்ளாரும் நிக்கிது ஒறு ரசிகாரு தீ பிடிசுறுச்சு அதுனளே நடிபூதான் எணுகு ஒசிறு நாணு தமிலுநட்டே விட்டு பொகாது நாணு இணும் ஆயிராம் படதுல நடிகும் பொகுது ரசிகாரு எள்ளாரும் ஆத்துறவு தறுணும் நண்ரி.
பலத்த கைதட்டலுக்கிடையே பேட்டியை முடித்துக் கொண்டாள் நளினா.
அன்றைய ''மாலை தராசு'' வில் நண்பர் திரு. எஸ்.பி.செந்தில் குமார் அவர்களின் கை வண்ணத்தில் கொட்டை எழுத்துக்களில் நாட்டிய நடிகை நளினா தொடர்ந்து......
நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மற்றும் நீச்சல்க்காரன் திரு. ராஜாராம் அவர்கள்.
கையிலேயே எழுதி விரலெல்லாம் வலிக்குது பெயின் கில்லர்(ஜி) போடணும்.
பதிலளிநீக்குவணக்கம் இப்பதிவில் மூன்று வகையான எழுத்துருக்களை உபயோகப்படுத்தி இருக்கிறேன். மேலும் புதிய அமைப்பின்படியே வலைத்தளத்தை மாற்றி விட்டேன்.
தங்களது கணினி, அலைபேசியில் படிப்பவர்கள் புதிய எழுத்துருக்கள் சரியாக இருக்கிறதா என்று சொல்லவும் - கில்லர்ஜி
சரியாகவே நடிகை நளினா போலவே எழுத்துரு வருகிறது ஜி...
நீக்குவாங்க ஜி அதாவது நளினமாக வந்து இருக்கிறது என்றுதானே சொல்கிறீர்கள் ?
நீக்குஹை கில்லர்ஜி எழுத்துருக்கள் 3 வகை வந்திருக்கிறதே. நல்லாருக்கு...
பதிலளிநீக்குகீதா
தகவல் தந்தமைக்கு நன்றி
நீக்குநானும் எழுத்துருக்கள் இடையிடையே பயன்படுத்தியிருந்தேன். முழு பதிவும் செய்ய நினைத்துள்ளேன். சும்மா ஒரு சேஞ்சிற்குத்தான். எனக்கு ஏதாவது புதுசா செஞ்சுட்டே இருக்கணும் அது உற்சாகமாக வைத்துக் கோள்ளும் என்பதால்.
பதிலளிநீக்குவலை வடிவமும் மாற்ற வேண்டும் என்று நினைத்துள்ளேன் ஆனால் இன்னும் செய்ய வில்லை
உங்கள் வலைவடிவம் நன்றாக இருக்கு
கீதா
வருக இது சற்று கடினமாகத்தான் இருக்கிறது என்ன செய்வது கூழு குடிக்கவும் ஆசைதான். மீசையில் ஒட்டுகிறது என்றால் துடைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
நீக்குஎழுத்துருவா? வலை வடிவமா கில்லர்ஜி?
நீக்குஎழுத்துரு கடினமாக இல்லை. நான் கணினியில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் வேர்டிலும் அடிக்க முடிகிறதே அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ப்ளாகரில் போட்டால் வந்துவிடுமே...
வடிவத்தைச் சொன்னீற்களா? அது நான் இன்னும் செய்ய வில்லை எனவே தெரியவில்லை.
கீதா
எழுத்துருக்கள் அலைபேசியிலும் தெரிகிறது கில்லர்ஜி.
பதிலளிநீக்குகீதா
அலைபேசியில் கண்டு சொன்னமைக்கு நன்றி
நீக்கு// வனுக்கோம் // இது... எழுத்துருவில் ஏதேனும் மாறி விட்டதா என்று நினைத்தேன்...! ஹா... ஹா...
பதிலளிநீக்குவணக்கம் ஜி...
ஹா.. ஹா.. நடிகை பேசும் வார்த்தைகள் முழுவதும் அப்படித்தானே.... ஜி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
படமும் அழகு எழுத்தும் அழகு வாழ்த்துக்கள் ஜி
வருக கவிஞரே படத்தை எதற்கு ரசிக்கின்றீர்கள் ? வருகைக்கு நன்றி
நீக்குஆஆஆஆஆ அதுக்குள் மூவரோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்குசூப்பர் கில்லர்ஜீஈ... கில் பண்ணிட்டீங்க:)... அதாவது கொன்னிட்டீங்க எனச் சொல்ல வந்தேன்... ஹா ஹா ஹா
வாங்க அதிரா பதிவைக்குறித்து சொல்லவில்லையே...? வருகைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி நடிகை கேரளா கண்ணூர்னு சொல்லிப் போட்டு அவங்க பேசுறது கேரளத் தமிழ் போல இல்லையே!! ஹா ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
வாங்க வேற்று மாநிலத்து நடிகைகள் இப்படித்தானே தொடக்கத்தில் பேசுகின்றார்கள். அடுத்த வருடம் நளினா பேசுவதை பாருங்களேன்...
நீக்குஆனாலும் இந்த எழுத்துக்கள் அழகுதான் இருப்பினும் சாதாரணமாக நாம் பாவிக்கும் எழுத்துக்களே போஸ்ட் படிக்க ஈசி.
பதிலளிநீக்குஇடைக்கிடை அழகூட்ட இவ்வெழுத்துக்களைப் பாவிக்கலாம்...
ஆம் அரைகுறையாக படிக்கத் தெரிந்தவர்களுக்கு இவ்வகை எழுத்துகள் சற்று கடினமாகத்தான் இருக்கும்.
நீக்குஹா ஹா ஹா அப்பூடி என்னதான் உங்களுக்கு பகையோ.. நடிகர்களோடு கர்ர்ர்ர்ர்:)
பதிலளிநீக்குடிஞ்சர் வச்சான் ... ஹா ஹா ஹா அவரின் படங்கள் எல்லாம் சூப்பர் தெரியுமோ....
அதுசரி படம் பார்க்கமாட்டேன் நாடகப் பக்கம் திரும்ப மாட்டேன் என்றெல்லாம் ஜொள்ளுவீங்க ஆ நா .... புட்டு புட்டு வைக்கிறீங்க போஸ்ட்டில் கர்ர்ர்ர்ர்ர்:).... முன் ஜென்ம நினைவுகளோ... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்... மீ ரொம்ப நல்ல பொண்ணு:)
டிஞ்சர் வச்சான் என்று இயக்குனர் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது நான் கற்பனையில் வைத்த பெயர்தான். எனக்கு யாரோடும் பகை கிடையாது.
நீக்குநான் திரைப்படம் பார்த்து முப்பது வருடங்களாகி விட்டது.
மேலே சொன்ன இரு கருத்துரைகளையும் எனது கைப்பே(ய்)சி மூலம் சொன்னது ஜி...
பதிலளிநீக்குஇப்போது கணினியில்... சில நுட்பங்கள்...
நீங்கள் பயன்படுத்திய (விரும்பிய) எழுத்துருக்கள் மூன்று... அவை
https://oss.neechalkaran.com/tamilfonts/3ATM/ATM%20121.ttf அடுத்து /9Tamilri/Tamilri_Chenetfont_03.ttf' மூன்றாவதாக /2TVA/TAU-Ezhil%20Italic.ttf
ஆனால் அனைத்திலும் font-size: 20pt; என்றே உள்ளது...
நடிகை நளினா போல இருக்கும் font-size: 20pt; என்பதை சற்றே font-size: 15pt; அல்லது font-size: 16pt; என மாற்றலாம்...
அதே போல் // பெயின் கில்லர்(ஜி) // என்பதின் எழுத்துருவை சற்றே பெரிதாக மாற்றலாம்...
இவை அனைத்தும் செய்த பிறகு, "கைபேசிக்கு ஏற்றதாக இருக்கும்" - என்பதையும் சரி பார்ப்பது எப்படி....? நீங்கள் கணினியில் preview பார்ப்பதில் ((கைப்பேசிலும்)) பல ஐகான்கள் இருக்கும்... அதற்கு ஏற்றவாறு font-size: xxpt; மாற்றுங்கள் ஜி... நன்றி...
வாங்க ஜி ஆம் நான் எழுத்தின் அளவை 20 ஆக குறைத்து விட்டேன் அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் குறைப்பேன் இது மிகவும் பெரிதாக இருக்கிறது ஆனால் எழுத்துருக்கள் பல இருந்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவாக மாற்ற வேண்டியது வரும்.
நீக்குஇது கன்னி முயற்சி அடுத்தடுத்து கலக்குவேன் என்று சொல்ல முடியாது ஆனால் 2021-ல் கலக்குவேன்.
காரணம் நிறைய பதிவுகள் தற்போது டிராப்டில் உள்ளது தங்களது கடந்த பதிவு (யானையின் காதில் தமிழ் பேசியது கிளி ?) இரண்டு தினங்கள் முன்பாக வந்து இருந்தால் எனக்கு பயனாக இருந்திருக்கும்.
பரவாயில்லை தற்போது பயின்று வருகிறேன்
செண்டிமென்டலாக முடிச்சிருக்கீங்க. பதிவில் உங்கள் கோபமும் தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
வாங்க நான் எதற்கு கோபப்படணும் ? நண்பன் ரிச்சர்டு போயிட்டானே'னு நானே கவலையிலே இருக்கேன்.
நீக்குபதிவும் சரி, எழுத்துருக்களும் சரி நன்றாகவே உள்ளன. நான் இன்னமும் புதிய ப்ளாகருக்கு மாறவில்லை. அது என்ன பிரச்னைகள் கொடுக்குமோ, தெரியலை. பதிவு வழக்கம் போல் உங்கள் நடையில் அருமை! ஆனால் நடிகை நளினாஸ்ரீ கடைசிவரையிலும் அம்பேரிக்காவில் தன் கணவன் இறந்தது பற்றிச் சொல்லவே இல்லையே!
பதிலளிநீக்குவருக சகோ பதிவைக்கண்டு கருத்து சொன்னமைக்கு நன்றி.
நீக்குநளினா எதற்காக அமெரிக்க மாப்பிள்ளையைக் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சொல்லணும் ?
அதுவொரு விபத்து ரிச்சர்டை மறந்து விட்டால்தான் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியும் ? பிறகு ஆஸ்கார் விருது வாங்குவது எப்போது ?
கருப்பாயி என்ற அழகான தமிழ் பெயர் வைத்த நடிகைக்கு தமிழ் பேச வரவில்லை என்பது ஆச்சிரியம்.
பதிலளிநீக்குவெள்ளிக்கிழமையில் இப்படி ஒரு தாலி கதையா? சினிமாவிற்கு என்று செய்தது நிஜமாக முடிந்து விட்டதே!
வருக சகோ இன்றைய நடிகைகளுக்கு யாருக்கு தமிழ் தெரியுது ?
நீக்குஎழுத்துருக்கள் நன்றாக இருக்கிறது. கையால் எழுதியது போல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ.
நீக்குநடிகை நளினா பேசும் (நமீதா பேச்சுமாதிரி இருக்கு) தமிழிலில் மலையாள காத்து கூட இல்லை வடநாட்டு காத்து தான் அடிக்குது.
பதிலளிநீக்குபுதிய எழுத்துரு அழகா இருக்கு.
வருக சகோ ஹா.. ஹா.. "வடநாட்டு காத்து" ஸ்டேட் மாற்றி இருக்கணும் போலயே...
நீக்குவருகைக்கு நன்றி.
உங்கள் பாணியில் ஒரு சிறப்புப் பதிவு.
பதிலளிநீக்குமூன்று எழுத்துருக்கள் பயன்பாடு. நன்று. பாராட்டுகள்.
வாங்க ஜி பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குதமிழ்நாட்டு மக்குலுகளா இல்லை மக்குகளா? நடிகைக்கு தமிழர்களைப்பற்றி சரியாகத் தெரிந்திருக்கிறதே
பதிலளிநீக்குஆம் நண்பரே விரைவில் பிஜேபியில் சேரப்போவதாக தகவல் வரும்.
நீக்குஆகா..
நீக்குஇப்படி ஆகக்கூடும் நினைத்தேன்...
நடந்து விட்டது.. பிறகு இது கூட இல்லா விட்டால் எப்படி!...
அதானே வாங்க ஜி நன்றி.
நீக்குஎதுக்குத்தான் இந்த உளுத்துப்போன நடிகைகளைக் கட்சில சேர்க்கிறாங்களோ. அவங்களைப் பார்க்கக் கூட்டம் வருமே தவிர, ஓட்டுப் போடுமளவுக்கு மண்டைல ஒண்ணும் இல்லாமயா மக்கள் இருப்பாங்க?
நீக்குநீங்கள் சொன்னது உண்மை கூட்டம் கூடுவது மட்டுமே...
நீக்குஎழுத்துருக்கள் நல்லா இருக்கு. ஆனால் நடிகையின் தமிழ்ப்பேச்சைப் படிக்கத்தான் கஷ்டப்பட்டுவிட்டேன். ஒருவேளை பேட்டி என்று காணொளி கொடுத்திருந்தால், நடிகையைப் பார்த்துக்கொண்டே பொழுது போக்கியிருப்பார்கள், அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனித்திருக்க வேண்டாம். ஆனால் இடுகையாச்சே. படித்துத்தானே ஆகவேண்டும். ஹா ஹா
பதிலளிநீக்குவருக நண்பரே உங்களுக்கு படிக்க கஷ்டமா ? நடிகை பேசியதை கேட்டு எழுத நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்.
நீக்குஎன்னடா இது... நம்ம ரம்பா (உ அ தா) கதையை உல்டா பண்ணுகிறாரோன்னு சந்தேகம் வந்தது.
பதிலளிநீக்குஎனக்கும் சகலை இந்திரனுக்கும் பகைமூட்டி விடுவதாக உத்தேசமா ?
நீக்குஅவர் நல்லபடியாக உயிரோடுதான் இருக்கிறார்.
புது வடிவம்... புது எழுத்துரு... கலக்குங்க ஜி... உங்கள் வழக்கமான பாணி பதிவும் ரசிக்க வைத்தது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி பதிவை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குபுகைப்படத்தைத் தெரிவு செய்யும் உத்தி சற்றே வித்தியாசம்தான்.
பதிலளிநீக்குபெயின் கில்லர் போட்டீர்களா?
வருக முனைவரே
நீக்குகருப்பாயி என்று பெயர் சொன்ன பிறகு கருப்பாகத்தானே காட்டிட வேண்டும்.
பெயின் கில்லர் ஹி.. ஹி.. இதோ வாங்கப் போறேன்.
இப்படிலாம் நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்..
பதிலளிநீக்குபழைய அமைப்பே போதும் எனக்கு..
வாங்க சகோ அப்படி ஒதுங்கி விடமுடியாதாம் அவர்களே மாற்றி விடுவார்களாம். ஆகவே இப்பொழுதே பழகிக் கொள்ளுங்கள்
நீக்குபாவம் அந்தக் கருப்பாயி..
பதிலளிநீக்குஅவளுக்கு மீண்டும் புது வாழ்வு கிடைப்பதாக..
காட்டாங்குடி கரடியப்பன் மகன் கருத்தமுத்து கடுதாசி எழுதிப் போட்டு காத்திருப்பதாக காட்டுக் குருவி சொன்னது காற்றில் வந்தது..
வாங்க ஜி நளினாவுக்கு ஆயிரம் மாப்பிள்ளைகள் வரிசையில் நிற்கிறார்கள்.
பதிலளிநீக்குநிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்.
நளினாவுக்கு எத்தனையாவது மாதம்
நீக்குஹா.. ஹா.. இது எனக்கு தெரியாது ஐயா
நீக்குஅருமை.... கருப்பாயி போல இல்லாமல் நளினா மாதிரியே இருக்கிறது..... நானும் கருப்பையாக மாற முயச்சி பன்றேன்...
பதிலளிநீக்குநல்லது நண்பரே கருப்பையாவாக மாறியமைக்கு வாழ்த்துகள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. புது எழுத்துருக்கள் மிகவும் அழகாக உள்ளது. நீங்களும். புது பிளாக்கர் பாணியில் பிரவேசித்து விட்டீர்களா? சூப்பர். என் கைப்பேசியிலிருந்து பார்க்கும் போது உங்களது பதிவு அழகாக காட்சியளிக்கிறது. புதிய முறைகளில் வென்று இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நளினா கதை செண்டிமெண்டாக உள்ளது .பாவம்..! கதை என்றாலும் யாருக்கும் இந்த நிலை வர வேண்டாம். வெறும் கதைதானே என சமாதானமும் செய்ய இயலவில்லை. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபுதிய எழுத்துருக்களை ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றி.
இன்றைய நடிகைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.
எழுத்துருக்கள் நன்றாக இருக்கின்றன நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஎழுத்துருக்களை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபாவம் நடிகைகள்!
வருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குநடிகைகளை பாவமாக நினைப்பதைவிட அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைதான் பெரும் பாவமாக இருக்கிறது.
புது புது முயற்சிகள் வள்ர்க நமக்கும் அதற்கும் தூரம் அதிகம்
பதிலளிநீக்குவாங்க ஐயா வருகைக்கு நன்றி.
நீக்குநண்பர்கள் நீச்சல்காரன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோரின் பதிவுகளின் வழிகாட்டலில் புதிய புதிய எழுத்துருக்களை தந்து வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்! பாராட்டுகள்!
பதிலளிநீக்குஅது சரி. கண்ணூரில் கருப்பாயி என்று பெயர் வைப்பார்களா? ( நான் கண்ணூரில் பணிபுரிந்தவன் என்பதால் இந்த ஐயம்!)
வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி. கருப்பாயி என்ற பெயர் தமிழச்சிகளுக்கே உரித்தானது.
நீக்குகேரளத்தில் வைக்க மாட்டார்கள். ஆனால் கண்ணூர்க்காரர்கள் தில்லுமுல்லு பார்ட்டி அந்த ஊரில் வேலை செய்வது பெரிய திறமைதான்.
விராலிமலை அடிவாரத்தில் படம்பிடித்த இயக்குனரின் பெயரை வாசிக்கும்போதெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை. நடிகை பேசியது மலையாளம் கலந்த தமிழாக ஒலிக்கவில்லை.கேரளத்துப்பெண் சென்னையில் வந்து வாய்ப்பு கேட்டு பல கம்பெணிகளுக்கு கொளுத்தும் வெயிலில் ஏறி இறங்கி அலைந்து திரிந்து கேரளத்து நிறம் கறுப்பாகி போனதால் கருப்பாயீ ஆனதா?
பதிலளிநீக்குஅவர்கள் அமேரிக்கா போவது கலை தாயின் விருப்பம் அல்ல என்று புரிகிறது.
வருக நண்பரே பதிவை இரசித்தமைக்கு நன்றி.
நீக்குகலைத்தாயின் விருப்பம் நிறைவேறட்டும்.
நீங்க இதை எழுதிய விதம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. நளினா தமிழ் சிரிக்கவைக்கும்படியா இருக்கு. ஆனா நடிப்புக்குக்கூட சொந்த தாலியை அறுக்குறதுல எனகு உடன்பாடில்லை.
பதிலளிநீக்குவருக அபிநயா நடிகைகளுக்கு தாலி என்பது ஒரு ஆபரணம்கூட இல்லை ஒரு கயறு மட்டுமே...
நீக்குரசித்தமைக்கு நன்றி.
கதை மற்றும் எழுத்துரு மாற்றம் நல்லாயிருக்கு கண்ணூரில் "கருப்பாயி "பேர் என்கிற பேர் வைப்பாங்களா தெரியலை
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி.
நீக்குஎழுத்துருவில் நீங்கள் செய்திருக்கும் புதுமை பாராட்ட தக்கது நண்பரே.
பதிலளிநீக்குஅந்த அமெரிக்க தொழில் அதிபர் என்ன பாவம் செய்தார். இப்படி கொன்னுட்டீங்களே.
வருக நண்பரே என்மீது இப்படி அபாண்டமாக கொலைப்பழி போடாதீர்கள் அந்த ஜெட் விமானத்தின் இயந்திரக்கோளாறு இதற்கும் எனக்கும் பந்தமில்லை.
நீக்கு