தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 07, 2020

தங்கரதம் வெள்ளோட்டம்


ணக்கம் நண்பர்களே மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? அதாவது இவர் தமிழ்க்கடவுள் முருகன் இவரது கோவிலின் புதிய தங்கரதத்தின் வெள்ளோட்ட விழா நடத்துவதற்கு தமிழகத்தை ஆளும் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார் இது ஆட்சி செய்பவர்களுக்கான பதவியின் அதிகாரம் இது தவறேயில்லை. ஆனால் இந்த தங்கரதம் வெள்ளோட்டமிடும் விழாவுக்கு ஆசி வழங்கியது யார் ?
.
அதாவது முன்னாள் திரைப்படநடிகை செல்வி. ஜெ.ஜெயலலிதா பிறகு தமிழக மக்களால் முதல்வராகவும் ஆக்கப்பட்டு, இவரது திறமையால் சிறை சென்று வந்து பிறகு செத்தும் போனவர் இவர் மண்ணுக்குள் போய் 05 December 2016 ஓராண்டுக்குப் பிறகு இவர் முருகனின் தங்கரதம் வெள்ளோட்டமிட ஆசி வழங்கி இருக்கிறார். இது எப்படி இருக்கிறது ? கேட்கிறவன் கேனயனாக இருந்தால் ரஞ்சிதா நித்திக்கு சித்தி’’னு சொல்றது மாதிரி இருக்கு என்னாங்கடாது முருகன் மேலே உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா ? பின்னே எதற்கு இந்த தங்கரதம் ? ஓட்டு வாங்குறதுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம், எழுதலாமா ? வெட்கமே கிடையாதா ?

மனிதன் கல்லில் செதுக்கி வைத்து கடவுள் என்று வணங்குகிறான், பெற்ற தாய்-தந்தையை கடவுள் என்று வணங்குகிறான், தனது கட்சியின் தலைவனையோ, தலைவியையோ கடவுள் என்று வணங்குகிறான், தனக்கு பிடித்த திரைப்படக் கூத்தாடியை கடவுளாக வணங்குகிறான், கிரிக்கெட் விளையாடுபவனைக்கூட கடவுளாக வணங்குகிறான், விபச்சாரியான நடிகையை கடவுள் என்று கோயிலே கட்டி வணங்குகிறான், நித்தி போன்ற போலிச் சாமியார்களையும் கடவுள் என்று வணங்குகிறான், தனது குடிகாரத் தந்தை இறந்தவுடன் மறுதினமே அவரது புகைப்படத்தை மாலை போட்டு கடவுளாக்கி வணங்குகிறான் என்றால் உண்மையான கடவுள் சினம் கொள்ள மாட்டாரா ? அதனால்தான் அவ்வப்போது பூகம்பமும், சுனாமிகளும் வந்து போகின்றது. எதை நம்புவது என்று தெரியாமல் மனசு வலிக்கிறது மக்கா...

சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றில் உலக அளவில் அரசியல்வாதிகளை குறித்து சர்வே நடத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டனர் அதில் உலகிலேயே இந்தியாவில் தமிழகத்தில்தான் மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் என்று வெளியிட்டு இருக்கின்றார்கள் இவைகளைக் காணும் பொழுது கணக்கு சரிதான் என்றே தோன்றுகிறது. தமிழன் கடல் கடந்து ஆட்சி செய்தவன் என்ற பெருமை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்களே..  

52 கருத்துகள்:

 1. பிஞ்சுவ முந்திக் கொண்டேனோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆஆஆ இங்கயுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்று பார்த்து கீதாவுக்கு நெட் வேர்க் பண்ணுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 2. இயற்கை கடவுள் இப்போது தானே ஜி தன் அருளை அளிக்க ஆரம்பித்து உள்ளது...!

  பதிலளிநீக்கு
 3. எல்லாவற்றிலும் அரசியல் தான் வேறு என்ன சொல்ல?

  யார் எதை நம்பினால் என்ன கில்லர்ஜி? எதை நம்புவது என்று ஏன் வலி? கேள்வி? வெரி ஜிம்பிள்....உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ எதை நம்புகிறீர்களோ அதை நம்புங்கள் அவ்வளவே!
  இதில் எந்தக் குழப்பமும் தேவையே இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இவைகளைப் பார்க்கும் போது கணக்கு சரிதான் என்று தோன்றுகிறது//

  ஹை உங்க கணக்கு என்னானு தெரியுமே!!!!! நீங்களும் தமிழ்நாடு இப்படி ஆகிப்ப் போச்சேன்னு நித்தி மாதிரி வேறு ஒரு தீவைப் பிடிச்சுப் போட்டுருக்கீங்க அப்படித்தானே!! அதான் அந்த லாஸ்ட் லைன்!!! தமிழன் கடல் கடந்து ஆட்சி செய்தவன்...நித்தி இப்ப ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் கடந்து ஆட்சி செய்த ராஜராஜசோழனோடு நித்தியை சேர்த்து சொல்லலாமா ?

   நீக்கு
 5. சகோதரி கீதா அவர்களது கருத்தினை வழி மொழிகிறேன்...

  இருப்பினும்
  ஆறேழு ஆண்டுகளுக்கு முன் திரு ஆரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயிலின் குடமுழுக்கின் போது எப்படியெல்லாம் பிளக்ஸ் வைத்திருந்தார்கள் என்பது நேரில் கண்டிருக்கிறேன்...

  விநாச காலே விபரீத புத்தி...

  கேடு வரும் பின்னே..
  மதி கெட்டு விடும் முன்னே!..

  தெரியாமலா சொல்லி வைத்தார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   உண்மைதான் கொரோனா மக்களுக்கு எச்சரிக்கை விட்டு இருக்கிறது. இனியாவது திருந்த வேண்டும்.

   நீக்கு
  2. /// இனியாவது திருந்த வேண்டும்..///

   இப்படியுமா பேராசை
   தமிழகத்தைப் பார்த்து!?...

   நீக்கு
 6. அம்மாவினுத்தரவின் பேரில் பல கோவில்களுக்கு ராமேஸ்வரம் போன்றபல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்கள் அது குறித்து நான் எழுதி இருந்தேனே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உத்தரவின் பெயரில் கும்பாபிஷேகம் இது நல்லதே... ஆனால் இறந்த ஜடம் முருகனுக்கு ஆசி வழங்குவது நம்பக்கூடியதா ?

   நீக்கு
  2. ஆசி எடப்பாடியாருக்கு என்று நினைத்தேன்

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 7. சுய இலாபத்திற்காக, தனி நபரை துதி பாடும்/வழி படும் வழக்கம் இருக்கும் வரை இதுபோன்றவைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். நாம் தான் இவைகளை புறந்தள்ளவேண்டும். முன்னாள் முதல்வரின் ஆசி பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரும் ‘ஆண்டவர்’ அல்லவா? அதனால் அவரது ஆசியையும் பெற்றிருப்பார்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மக்களை 'ஆண்ட'வர் என்றால் இதுவும் சரிதான்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  தங்கள் ஆதங்கம் புரிகிறது. போகட்டும்..! எப்படியோ.. முருகனருள் பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைத்தால் சரிதான்..! பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   முருகன் மன்னிக்கட்டும் தவறிழைத்தவர்களை...

   நீக்கு
 9. என்ன கில்லர்ஜி...இதுல தப்பு என்ன இருக்கு?

  மறைந்த தாத்தாவின் ஆசியுடன் என்றெல்லாம் பத்திரிகையில் போடுவதில்லையா? ஆட்சியே ஜெ. கொடுத்த சொத்து. அதனால் போட்டிருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   நமது தாத்தாவின் ஆசியை பெறுவது தனிப்பட்டது.

   இங்கு கடவுளது தேருக்கே ஆசி வழங்குவது இறந்த ஜடம்.

   சரிதான் ஜெ... கொடுத்த சொத்து கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தவர் உங்களது பெங்களூருவில்தானே ?

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆ நேக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) எல்லாமே பிரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச் நெல்லைத்தமிழன் அம்மா கட்சி:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 10. செய்வது சொல்வது எல்லாம் அரசியல். நல்ல தமிழாவது எழுதலாம். அதிலும் ஆனை வந்துவிட்டது.
  இயற்கை கற்பிக்கும் பாடத்தை மனதளவாகிலும் ஏற்காதவர்கள் இருந்துதான் என்ன லாபம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. வேதனை தரும் அரசியல் விளையாட்டுகள்....

  பதிலளிநீக்கு
 12. கில்லர்ஜி முதலில் உங்கட பிபி யை செக் பண்ணுங்கோ:)) ஹா ஹா ஹா அடிக்கடி பொயிங்கிறீங்க:)) ஹா ஹா ஹா..

  கேட்பவன் கேனய..... பயமொயியை மாத்திட்டீங்களே:))..

  இதனாலதான் கில்லர்ஜி நான் அரசியலே படிப்பதில்லை, பிடிப்பதில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோவிலுக்கு போனாலும் அங்கும் எதையாவது கண்டு பொங்கி பி.பி. ஊதுறதே வேலையாப்போச்சு.

   நீக்கு
 13. இந்திய அரசியலர், தமிழ் நாட்டு அரசியலர்...
  அரசியல் விளையாட்டுகள்!

  பதிலளிநீக்கு
 14. அல்ப மனிதர்கள்.  வேறென்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
 15. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே கடவுள்! ஆகவே உண்மையான கடவுள் கூட அவர்களைக் கேட்டுக்கொண்டு தான் ஜனங்களுக்கு நல்லாசி வழங்குவார்கள். இப்போ இருக்கும் நிலைமையிலே எதுக்குத் தான் வருந்துவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நீங்கள் சொல்வது போல்தான் நடக்கிறது.

   நீக்கு
 16. கும்பகோணத்தில் 2016 மகாமகத்தின்போது பல கோயில்களின் குடமுழுக்கிற்குச் சென்றபோது இதுபோன்ற பல குடமுழுக்குக் கல்வெட்டுகளைப் பார்த்தேன். சகித்துக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை போலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 17. அம்மாவாகட்டும் அவரின் அடிப்பொடிகளாகட்டும் யாருக்குமே உண்மையான கடவுள் பக்தியோ பயமோ கிடையாது. ஆட்சியில் நீடிக்க, தங்கத் தேர் என்ன, முருகனுக்காகத் தங்கத்தால் ஆன விமானத்தையே வெள்ளோட்டம் விடுவார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இதில் உண்மையான பக்திக்கு வேலையில்லை. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 18. கேட்பவர் கேணையனாக இருந்தால் ரஞ்சிதா நித்திக்கு சித்தியா? ஹா ஹா ஹா! கோபத்தில் நகைச்சுவை உணர்வு நன்றாகவே வேலை செய்கிறது.

  பதிலளிநீக்கு
 19. எல்லாம் அரசியல் நாம் பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. தெய்வம் நின்று வெல்லும்.

  பதிவில் ஆதங்க "ஆவி" பறக்கிறது.

  கோ

  பதிலளிநீக்கு
 21. இங்குதான் A1 குற்றவாளிகூட அம்மா என்ற பெயரில் ஆசியும் வழங்கிய கூத்தும் நடக்கிற.. ரெண்டு இட்லிக்கு ஒரு கோடி பில் போட்ட நாடுங்கோ

  பதிலளிநீக்கு
 22. \\உலகிலேயே இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்\\
  நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.!!!???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு நன்றி.

   நீக்கு